உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
ஹஜ் யாத்திரை இரத்து செய்யப் படாது – சவூதி அரேபியா அறிவிப்பு இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை இரத்து செய்யப்படாது என சவூதி அரேபியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் ஹஜ் கடமையை நிறைவேற்ற மிக குறைவான நபா்களே அனுமதிக்கப்படுவா் என்றும் அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியா இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினரின் வருடாந்திர ‘ஹஜ்’ புனித யாத்திரை, எதிர்வரும் ஜூலை இறுதியில் தொடங்கவுள்ளது. இந்த காலகட்டத்தில், மெக்காவில் தொழுகை நடத்துவதற்காக உலகம் முழுவதும் இருந்து சுமாா் 20 இலட்சம் போ் சவூதி அரேபியாவுக்கு படையெடுப்பர். இந்நிலையில், தற்போது கொரோனா நோய்த்தொற்று பிரச்…
-
- 0 replies
- 267 views
-
-
3 ஆயிரம் பலூன்களை பறக்கவிட்டு தென்கொரியா மீது உளவியல் போர் தொடுக்கும் வடகொரியா தென்கொரியாவுக்கு எதிராக உளவியல் போர் தொடுக்கும் விதமாக 1.2 கோடிக்கும் அதிகமான துண்டுப் பிரசுரங்கள் அடங்கிய 3000க்கும் மேற்பட்ட ராட்சத பலூன்களை பறக்கவிடும் நூதன போர் முறையை மீண்டும் வடகொரியா கையிலெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில், வடகொரியாவிலிருந்து தென்கொரியாவுக்குத் தப்பிச் சென்றவர்கள், வட கொரியாவுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பலூன்களைப் பறக்கவிட்டனர். இந்தச் செயலுக்குப் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக வடகொரியா தனது எதிர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதற்கமைய, கொரிய நாடுகளுக்கு இடைப்பட்ட ஒப்பந்தத்தத்தை மீறி, பிரசாரங்களில் தேசத்துரோகிகள் ஈடுபடுகிறார்கள். …
-
- 0 replies
- 405 views
-
-
கொரோனா வரலாற்றில் முதல் முறையாக உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு தொற்று கொரோனா வரலாற்றில் முதல் முறையாக உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. பதிவு: ஜூன் 23, 2020 04:30 AM ஜெனிவா, கொரோனா வரலாற்றில் முதல் முறையாக உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. 2020-ம் ஆண்டில் மக்கள் அதிகம் உச்சரித்ததும், அவர்களை அதிகம் அச்சுறுத்தியதும் ஒரு பெயர்; கொரோனா. சீனாவின் உகானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய இந்த ஆட்கொல்லி வைரஸ் மனுக்குலத்துக்கு சவால் விட்டு, நின்று விளையாடுகிறது. இந்த மரண களத்தில்…
-
- 0 replies
- 371 views
-
-
அமெரிக்க கோழி இறைச்சிக்குத் தடை விதித்த சீனா பெய்ஜிங்கில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கோழி இறைச்சிக்கு சீனா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் இயங்கும் டைசன் உணவு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பலருக்கு சமீபத்தில் கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த நிறுவனத்திலிருந்து ஏற்றுமதியாகும் இறைச்சிக்கு சீனா தடை விதித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சீன ஊடகங்கள் தரப்பில், “பெய்ஜிங்கில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்காவின் டைசன் நிறுவனத்திடமிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதை தற்காலிகமாகத் தடை செய்கிறோம். மேலும் பெய்ஜிங்கில் செயல்பட்ட பெப்சி …
-
- 0 replies
- 836 views
-
-
பிரிட்டனில் மூவா் குத்திப் படுகொலை! பிரிட்டனின் தென்புற நகரான ரெடிங்கில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில், மூவர் கொல்லப்பட்டதுடன், ஆறு போ் காயமடைந்தனா். இவா்களில் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனர். ரெடிங்கின் நகர மையத்தில் உள்ள ஃபோர்பரி கார்டனில் நேற்று (20) இடம்பெற்ற இந்தக் கத்திக்குத்துத் தாக்குதல் ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதப்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்திற்கான பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக ரெடிங் நகர துப்பறியும் தலைமை கண்காணிப்பாளர் இயன் ஹண்டர் கூறினார். இந்தக் கத்திக் குத்துத் தாக்குதல் தொடா்பில் 25 வயதான ஒருவா் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தத் தா…
-
- 2 replies
- 730 views
-
-
இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் விவாதம் காத்மாண்டு: இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்கு சொந்த பகுதி என்று கூறி வந்த நேபாளம், அந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அந்த பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்து வருகிறார். நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வரைபடத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வரைபடத்துக்கான அனுமதி மற்றும் அது தொடர்பான சட்டத்திருத்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு…
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்ளுக்கு கொரோனா ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனமான டோனிஸில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் 6,500 ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்துமாறு உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஜேர்மனியில் அதிபர் அங்கலா மேர்க்கெல் நீண்ட காலமாக முடக்க நிலையை தொடர்வதற்கு விரும்பிய போதும் பிராந்திய முதல்வர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்தினார். ஐரோப்பாவில் கொரோனா தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்ட ஜேர்மனியில் இவ்வாறான இறைச்சி விற்பன…
-
- 0 replies
- 336 views
-
-
ட்றம்ப் நிர்வாகத்தின் அதியுச்ச பதவியை வகித்த கறுப்பினப்பெண் பதவி விலகினார் அமெரிக்க நிர்வாகத்தின் ராஜாங்கச் செயலகத்தில் உதவிச் செயலாளராகப் பதவி வகித்த மேரி எலிசபெத் ரெய்லர், தனது பதவிலிருந்து விலகுவெதென அறிவித்துள்ளார். ட்றம்ப் நிர்வாகத்தில் ஒரு கறுப்பினத்தவருக்கு வழங்கப்பட்ட அதியுச்ச பதவி இதுவாகும். ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலையைத் தொடர்ந்து உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டுவரும் கறுப்பின மக்களுக்கான நீதி கோரும் போராட்டங்களின்போது ஜனாதிபதி ட்றம்ப் நடந்துகொண்ட விதம் குறித்து அதிருப்தி அடைந்தமையினாலேயே தான் பதவி விலகுவதாக ரெய்லர் அறிவித்துள்ளார். “கறுப்பின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாக ஜனாதிபதி விடுத்த அறிக்கைகளும், கருத்துக்களும், எனது அடிப்படை …
-
- 0 replies
- 461 views
-
-
கொவிட்-19 தடுப்பூசிக்கான முதல் மருத்துவ பரிசோதனையை ஆரம்பித்தது ஜேர்மனி! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான தடுப்பூசிக்கான முதல் மருத்துவ பரிசோதனையை ஜேர்மன் உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான க்யூர்வாக் (CureVac) ஆரம்பித்துள்ளது. டூபிங்கன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இந்த சோதனையில், 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 100 இற்க்கும் மேற்பட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். முதல் சோதனை முடிவுகள் இரண்டு மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜேர்மன் செய்தி வலைத்தளமான ஃபோகஸ் தெரிவித்துள்ளது. தடுப்பூசிக்கு மனித சகிப்புத்தன்மையையும், அதற்கு மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் விஞ்ஞானிகள் கண்டறிய முயற்சிக்கின்றனர் என்று சோதனைக்கு பொறுப்பான பேராசிரிய…
-
- 0 replies
- 424 views
-
-
11 கிளைகளை அதிரடியாக மூடிய அப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அங்கு இதுவரையில் 22 இலட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு கொவிட்- 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பிள் நிறுவனமும் அமெரிக்காவில் செயல்பட்டுவந்த 271 கிளைகளையும் மூடியது. பின்னர் வைரசின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல்கட்டமாக 100 கிளைகளை மட்டும் மீண்டும் திறந்தது. ஆனால் தற்போது, அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அரிசோனா, புளோரிடா போன்ற மாகாணங்களில் கொரோனா தொற்றுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா தீவ…
-
- 0 replies
- 662 views
-
-
கல்வான் பள்ளத்தாக்கு முழுவதுக்கும் உரிமை கொண்டாடும் சீனா லடாக்கின் ஒட்டுமொத்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கும் உரிமை கோருகிறது சீனா. சீன நிபுணர் ஒருவர் இதற்காக குவிங் பேரரசு காலத்தின் ஆதாரங்களைக் காட்டி வரலாற்று உரிமை கோரியுள்ளார். கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் மேற்கு பகுதி முழுதையும் தனக்கானது என்கிறது சீனா. அதாவது கல்வான் மற்றும் ஷ்யோக் நதிகள் சங்கமிக்கும் இடம் வரை கோருவதாகத் தெரிகிறது. பெரும்பாலான சீன வரைபடங்கள் கல்வான் நதியின் அனைத்துப் பகுதியும் சீனாவுக்கு உரியது போன்றே காட்டுகிறது. ஆனால் முந்தைய வரைபடங்களில் நதியின் மேற்குக் கரையோரம் அதாவது ஷ்யோக் நதியைச் சந்திக்கும் இடம் சீனாவின் பகுதியுடன் சேர்த்துக் காட்டப்படவில்லை. இந்நிலையில் ச…
-
- 0 replies
- 503 views
-
-
ஒக்ஸ்போர்டில் பட்டம் பெற்றார் மலாலா பெண்களின் கல்விக்கான செயற்பாட்டாளரான பாகிஸ்தானிய பெண் மலாலா யூசுப்ஸாய், பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். 22 வயதுடைய மலாலா, அரசியல், தத்துவம் மற்றும் பொருளியல் துறைகளில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். பெண்களின் கல்விக்காக குரல்கொடுத்த மலாலா யூசுப்ஸாய், 2012ம் ஆண்டு பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் லண்டனில் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு அவர் குணமடைந்தார். 2014ம் ஆண்டு அவருக்கு சமாதானப் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/ஒக்ஸ்போர்டில்-பட்டம்-பெற/
-
- 0 replies
- 368 views
-
-
ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா போட்டியின்றி தேர்வு இந்தியா,மெக்சிகோ, அயர்லாந்து, நார்வே ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன, ஒரு இருக்கை இன்னும் உள்ளது. பதிவு: ஜூன் 18, 2020 07:11 AM ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகளுக்கு மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டன, 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன ஒவ்வொரு ஆண்டும் பொதுச்சபை, 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை (மொத்தம் 10 பே…
-
- 2 replies
- 433 views
-
-
அமெரிக்காவில் இளம் குடியேறிகளை நாடு கடத்தும் திட்டத்திற்கு: அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை! by : Anojkiyan அமெரிக்காவில் இளம் குடியேறிகளை நாடு கடத்துவதில் இருந்து பாதுகாக்கும் குடியேற்ற கொள்கை திட்டத்திற்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒபாமா நிறைவேற்றிய இத்திட்டத்தை ஏன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்கான சரியான விளக்கத்தை வெள்ளை மாளிகை வழங்கவில்லை என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே சட்டத்திற்கு உட்பட்ட திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அரசாங்கம் தன்னிச்சையாக, செயற்பட முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். சிறுவயதி…
-
- 0 replies
- 358 views
-
-
உலகளவில் கொரோனாவினால் உணவுப் பஞ்சம்! உலகில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத உணவுப் பஞ்சம் எதிர்வரும் காலங்களில் வரப் போகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தவிர்ப்பதற்கு உலக நாடுகள் உடனடியாக செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து ஏற்படவுள்ள இந்த உணவுப் பஞ்சத்தைத் தவிர்க்க முதல் நடவடிக்கையாக வறிய மக்களிடையே சிறந்த சமூக பாதுகாப்பு செயற்பாடுகள் அவசியமாகும். இல்லாவிட்டால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை போஷாக்கு கிடைக்காமல் போய் விடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் கூறினார். வறுமை நீடித்தால் மில்லியன் கணக்கிலான சிறுவர்கள் பாதிக்கப்பட…
-
- 1 reply
- 519 views
-
-
அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறையின் மீது சைபர் தாக்குதல்! June 19, 2020 அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார். குறித்த சைபர் தாக்குதலானது மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் அரசு மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் மேலும் அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியாரின் இணையத்தள பக்கங்களுக்குள் நுழைந்துள்ள ஹக்கர்கள் முக்கியமான உட்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களை…
-
- 0 replies
- 358 views
-
-
தென்கொரியா எல்லைக்குள் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வடகொரியா தீர்மானம்! by : Anojkiyan தென் கொரியா எல்லைக்குள் இராணுவத்தினரை அனுப்பி, மீண்டும் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரிய எல்லையில், கேசாங் நகரில் இருந்த தகவல் உதவி மைய கட்டடம் தகர்க்கப்பட்டுள்ள நிலையில், நிலம், நீர் வழி எல்லைகளில், வட கொரியா இராணுவத்தை அனுப்பி வைத்துள்ளது. இந்தநிலையில் இதை மேலும் அதிகரிக்கும் வகையில், எல்லை தாண்டி கேசாங் நகருக்குள், இராணுவத்தை அனுப்ப உள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. மேலும், வட – தென் கொரிய மக்கள் சந்திக்கும், டைமன்ட் மலைவாச விடுதியிலும், இராணுவத்தினர் நிறுத்தப்பட…
-
- 0 replies
- 419 views
-
-
சீனாவைத் தண்டிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப் – சீனா கண்டனம் by : Dhackshala சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு சீனாவைத் தண்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து இந்த சட்டத்திற்கு சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. மத்திய ஆசியாவைச் சேர்ந்த உய்குர் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம் மக்கள் சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் பெருமளவில் வசிக்கிறார்கள். உய்குர் மக்களை அவர்களின் சொந்த கலாசாரத்திலிருந்து வெளியேற்றி, சீன கலாசாரத்துக்கு மாற்றும் முயற்சியில் இரகசிய முகாம்கள், சிறைகள் …
-
- 0 replies
- 591 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற சீன ஜனாதிபதியிடம் ட்ரம்ப் உதவி கோரினாரா? by : Anojkiyan எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி கோரியதாக, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. The Room Where It Happened என்ற தலைப்பில் ஜோன் போல்டன் எழுதியுள்ள குறித்த புத்தகம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வெஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 345 views
-
-
கொரோனா வைரஸை அழிக்கும் தொழில் நுட்பம்கொண்ட முககவசம் தயாரிப்பு கொரோனா வைரஸை அழிக்கும் தொழில் நுட்பம்கொண்ட முககவசத்தை தாங்கள் கண்டறிந்துள்ளதாக சுவிட்சர்லாந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. பதிவு: ஜூன் 18, 2020 15:02 PM ஜெனீவா சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று, துணிகளை கிருமிநீக்கம் செய்ய பயன்படுத்தப்படும் தங்கள் தொழில்நுட்பம் கொரோனா வைரஸையும் கொல்வதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சஞ்சீவ் சுவாமி என்பவருக்கு சொந்தமான அந்த நிறுவனம், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாஸ்குகளை செய்யும் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜக் நகரில் அமைந்துள்ள லிவிங்கார்டு டெக்னாலஜி என்ற அந்த நிறுவனம்தான் இந்…
-
- 1 reply
- 353 views
-
-
வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் தண்ணீர் திறந்து விடும்போது கொரோனா பரவும்- ஆய்வில் தகவல் தண்ணீர் திறந்து விடும்போது வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் காற்று வழியாகவும் கொரோனா பரவுவதாக சீன ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதிவு: ஜூன் 18, 2020 14:06 PM பீஜிங் சீனாவின் யாங்சோயு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கொரோனா வைரசானது மனிதனின் செரிமானப் பாதையிலும் தேங்கி உயிர்வாழக் கூடியது எனவே அது இயற்கை உபாதைகளின் வழியாகவும் மனிதர்கள் மூலம் பரவும் அபாயத்தைக் கொண்டுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவியல் இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:- வெஸ்ட்ரன் டாய்லெட்டுகளில் தண்ணீரை திறந்து விடும் போது அதிலிருந்து வெளியேறும் காற்…
-
- 1 reply
- 566 views
-
-
சீனாவின் அடுத்த இலக்கு சைபர் தாக்குதல் டிக்- டாக் உள்பட மொபைல் ஆப்களுக்கு தடை? சீனாவின் அடுத்த இலக்கு சைபர் தாக்குதல் 50 சீன மொபைல் ஆப்களை தடை செய்ய அறிவுருத்தப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 18, 2020 13:30 PM புதுடெல்லி சீனா அடுத்த கட்டமாக இந்தியாவை சேர்ந்த அரசு இணையதளங்கள், ஏடிஎம்முடன் தொடர்புடைய வங்கி அமைப்பு ஆகியவற்றை குறிவைத்து செவ்வாய், புதன்கிழமையன்று சீனாவிலிருந்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத் தலைநகர் செங்குடு பகுதியில் இருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்குடுவில் சீன ராணுவ மக்கள் விடுதலைப்படையில…
-
- 0 replies
- 417 views
-
-
பிரேசிலில் ஒரேநாளில் 37,278 பேருக்கு கொரோனா தொற்று பிரேசில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 37,278 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே நாளொன்றுக்கு பதிவான அதிக எண்ணிக்கையாகும். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருந்த நிலையில் குறித்த தினமே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி அலுவலகத் தலைவரான வோல்டர் பிராகா நெட்டோ “ஒரு நெருக்கடி உள்ளது, நாங்கள் துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கிறோம்” என கூறினார். பிரேசிலில் இதுவரை 9 இலட்சத்து 28 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 45 ஆயிரத்து 45…
-
- 0 replies
- 632 views
-
-
அமெரிக்காவில் வெள்ளையின பெண்ணின் இனத்துவேஷம் - துரத்தி துரத்தி கறுப்பின பெண்ணின் முகத்தில் கத்திக்குத்து அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் அநியாயமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில், கறுப்பினப்பெண் ஒருவர் வெள்ளையினப் பெண்ணொருவரால் கோரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. தாதியரான Yasmine Jackson என்பவரை, Angela Bonell(22) என்ற வெள்ளையினப் பெண் முகத்தில் ஏழு முறை கத்தியால் குத்தியுள்ளார். லாஸ் வேகாசிலுள்ள தனது வீட்டின் அருகிலேயே தன்னைத் துரத்திய வெள்ளையினப்பெண் ஒருவர், தொடர்ந்து தன்னை இன ரீதியாக விமர்சித்ததாகவும், துரத்தி துரத்தி தன்னை கத்தியால் குத்தியதா…
-
- 2 replies
- 539 views
-
-
லண்டன் ஆர்ப்பாட்டத்தில் உலக அளவில் கவனத்தை ஈர்த்த கறுப்பின இளைஞன் லண்டனில் கறுப்பின மக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த தீவிர வலதுசாரி ஆதரவாளரான வெள்ளையரை கறுப்பின இளைஞர் ஒருவர் பாதுகாப்பாக தூக்கி செல்லும் காட்சி பதிவான புகைப்படம் தற்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களின் உண்மையான காரணம் எதுவென இந்த ஒற்றைப் புகைப்படம் உணர்த்துவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். திடகாத்திரமான ஒரு கறுப்பின இளைஞன், முகக்கவசம் அணிந்து கொண்டு, காயத்துடன் ரத்தம் சொட்டும் ஒரு வெள்ளையரை தனது தோளில் சுமந்தபடி, பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறும் காட்சியே புகைப்படமாக வெளியானது. கறுப்பின ஆதரவு ஆர்ப்பாட்டமானது தற்போது லண்டனில் இனவெறியை தூண்டிய தலைவர்கள…
-
- 1 reply
- 756 views
-