உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
நான் பரிந்துரைத்ததாலேயே ஹைட்ராக்சி குளோரோகுயின் நிராகரிக்கப்பட்டது: ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை! ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தின் பயன்பாட்டை தாம் பரிந்துரைத்தால்தான் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்துவதில் இருந்து இது நிராகரிக்கப்பட்டது என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், ‘எதையாவது பயன்படுத்த வேண்டும் என்று நான் கூறினால், அது வேண்டாம் என்று சொல்லவே அவர்கள் விரும்புகிறார்கள்’ எனவும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு உலகநாடுகள் தீவிரமாக முயற்சி செய்துவரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் சிறந்த மருந்து என ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால், இந்த மருந்தை பயன்படுத்…
-
- 0 replies
- 433 views
-
-
ஆஸ்திரேலியா: கரோனா பரவலின் மையமாக சிட்னி அறிவிப்பு கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தரப்பில், “சிட்னி நகரில் புதன்கிழமை மட்டும் 19 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிட்னியில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்னி நகர் கரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது ஆஸ்திரேலியாவில் இதுவரை 15,304 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 167 பேர் பலியாகி…
-
- 1 reply
- 677 views
-
-
சமூக ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சட்டவரைபை நிறைவேற்றியது துருக்கி துருக்கிய நாடாளுமன்றம் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் சட்ட வரைபொன்றை நிறைவேற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்களிடையே கருத்துச் சுதந்திரம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டம் இன்று (புதன்கிழமை) அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இந்த சட்டத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் ட்விற்றர் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் துருக்கியில் உள்ளூர் பிரதிநிதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இந்த சட்ட வரைபை ஆளும் AKP மற்றும் அதன் தேசிய பங்காளியான MHP ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை…
-
- 0 replies
- 413 views
-
-
போலி அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலை நிலத்தடி பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்குதல் நடத்திய ஈரான் தெஹ்ரான் வளைகுடா கடலில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.நபிகள் நாயகம் 14 என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சிகள் ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. அமெரிக்கா வழக்கமாக வளைகுடாவில் பயணிக்கும் விமானம் தாங்கிக் கப்பலை போலவே போலி கப்பலை வடிவமைத்து அதன் இருபுறமும் போலி போர் விமானங்களை வைத்து ஈரான் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது. போலி கப்பலை சுற்றி பல்வேறு கோணங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவி பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, அவற்றில் சில கப்பலில் இருந்த போலி விமானங்களை குறிவைத்…
-
- 1 reply
- 607 views
-
-
கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது - உலக விஞ்ஞானிகள் லண்டன் கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு, அவர்களின் கண்டுபிடிப்புகள் சார்ஸ் கோவ்-2 க்கு வழிவகுக்கும் வைரஸ் பல ஆண்டுகளாக வவ்வால்களில் கவனிக்கப்படாமல் பரவி வருகிறது என்பதைக் காட்டுவதாக கூறுகின்றன. இந்த ஆய்வில் பல குறிப்பிடத்தக்க தாக்கங்கள் உள்ளன என டுவிட்டரில் விருது பெற்ற அறிவியல் எழுத்தாளர் லாரி காரெட் கூறியுள்ளார். சார்ச், கோவ்-2 எங்கிருந்து தோன்றிய என்பதை கண்டறிய உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு 3 வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொன்றும் ஆசியாவில் பரவலாகக் காணப்படும் குதிரைவாலி வவ்வால்களிலிருந்து வைரஸ் பரவ வழிவக…
-
- 0 replies
- 498 views
-
-
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை இன்று பதவியேற்பு.. தமிழர்களுக்கு வாய்ப்பு.. சிங்கப்பூர்: பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை சிங்கப்பூரில் இன்று பதவியேற்கிறது. இதில் நிறைய தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் சர்ச்சைகள் இன்றி நடந்து முடிந்தது. இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சியின் ஆட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மொத்தம் 26.5 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தல் மூலம் 93 எம்பிக்களைத் தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார், இந்த அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி புதிதாக…
-
- 0 replies
- 735 views
-
-
மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை பல மில்லியன் டொலர் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு எதிராக முதற்கட்டத்தில் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. குறித்த குற்றச்சாட்டுகளுக்கான அனைத்து ஆதாரங்களும் முழுமையாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாகவும் அவையனைத்தும் சந்கேத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி இதன்போது அறிவித்துள்ளார். எனினும் நம்பிக்கை துரோகம், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பணச்சலவை ஆகிய குற்றங்கங்களில் அவ…
-
- 0 replies
- 470 views
-
-
சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் ஆஸ்திரேலிய கும்பல்; கோடிகணக்கில் பணம் பறிப்பு ஆஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் பிறகு, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதிவு: ஜூலை 28, 2020 11:27 AM சிட்னி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் சீன மாணவர்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆஸ்திரேலிய கும்பல் ஒன்று அவர்களை குறி வைத்து கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சீனாவின் போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அ…
-
- 2 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல் அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது. 2016 தேர்தலுக்கு முன்னர் இரு…
-
- 28 replies
- 3k views
-
-
டெக்சாஸில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு டெக்சாஸ் நகரத்தில் நேற்று நடைபெற்ற நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் தலைநகரில் சுமார் 100 பேர் கலந்துகொண்ட போராட்டத்தில் தாக்குதல் இடம்பெற்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சூட்டின் போது ஒருவர் கொல்லப்பட்டதாக ஒஸ்டின் பொலிஸ் மற்றும் அவசர மருத்துவ சேவை நிலையம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அத்தோடு வேறு எந்த மரணங்களும் இடம்பெறவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர் ஒரு துப்பாக்கியை ஏந்தி அவரது காரில் இருந்த…
-
- 0 replies
- 265 views
-
-
வடகொரியாவில் கால் பதித்த கொரோனா: முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டதாக தகவல் பையோங்யாங், சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என உலகம் முழுவதும் பரவியது. உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவுக்கு 1 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வந்தநிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அதிபர் க…
-
- 0 replies
- 1k views
-
-
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை: டிரம்ப் நிர்வாகம் அதிரடி வாஷிங்டன், அமெரிக்க நாடானது வேலைவாய்ப்பு மட்டுமின்றி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விகளை பயில சிறந்த இடமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா வெளிநாட்டு மாணவர்களுக்காக எப்1, எம்1 போன்ற கல்வி விசாக்கள் வழங்கி வருகிறது. சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் இந்த விசாக்களை பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக தென் கொரியா, சவுதி அரேபியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிக அளவிலான மாணவர்கள் ஆண்டு தோறும் அமெரிக்கா செல்கின்றனர். தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதால் அங்…
-
- 0 replies
- 642 views
-
-
சிலிக்கனினால் உருவாக்கப்பட்ட புதிய முகக்கவசம் : விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு அமெரிக்க பல்கலைக்கழக ஒன்றின் விஞ்ஞான தொழில்நுட்ப்பிரிவு புதிய வகையிலான முகக்கவசம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது என்95 (N95) முகக்கவசத்துக்கு நிகரானது எனவும் சிலிக்கனினால் உருவாக்கப்பட்ட இந்த முகக்கவசம் மீளவும் பாவிகக்கக் கூடியதாக இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிலிக்கன் இறப்பரிலான முகக்கவசம் தொற்றுநீக்கக்கூடியதுமாகும். இதனை அணிவதற்கு மிகவும் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான விலை 15 டொலர்களாக இருக்குமென குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முகக்கவசத்தை வைத்தியசாலைக்கு அறிமுகம் செய்யும் வகையில் அமெரிக்காவில் உணவு மற்றும்…
-
- 4 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவுக்கு சீனா பதிலடி: செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட உத்தரவு! by : Anojkiyan தென்மேற்கு நகரமான செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா திருடுவதால் 72 மணித்தியாலத்திற்குள் ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகம் மூடப்பட வேண்டுமென அமெரிக்கா உத்தரவிட்ட ஒருநாளுக்கு பிறகு இந்த உத்தரவை சீனா பிறப்பித்துள்ளது. வர்த்தகப் போர், கொரோனா தொற்று, ஹொங்கொங் தொடர்பான சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவற்றியது உள்ளிட்ட பிரச்சனைகளில், அமெரிக்கா சீனா இடையேயான தொடர்ந்து பதற்றம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனிடையே சீனாவின் இந்…
-
- 0 replies
- 644 views
-
-
ஜப்பான் கடற்கரையில் ஒதுங்கும் மனித எலும்புக்கூடுகளுடன் கூடிய வடகொரிய பேய் படகுகள் டோக்கியோ நூற்றுக்கணக்கான வடகொரிய படகுகள் மனித எலும்புக்கூடுகளுடன் தங்கள் ச்நிலையில் சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஜப்பான். கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 600 ஆதரவற்ற படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, கடந்த ஆண்டில் மட்டும் 150 படகுகள் ஜப்பான் கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன. கடந்த 2019 டிசம்பரில் ஜப்பானின் சாடோ தீவுக்கு அருகே மரத்தினாலான படகு ஒன்று கரை ஒதுங்கியது.அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரின் தலைகளும் எலும்புக்கூடாக உருமாறி வரும் ஐவரின் சடலங்களும் ஜப்பான் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்ப…
-
- 0 replies
- 724 views
-
-
ரஷியா புதிய விண்வெளி ஆயுதத்தை ஏவி சோதனை...? அமெரிக்கா- இங்கிலாந்து கண்டனம் இந்த மாத தொடக்கத்தில் விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை ரஷியா சோதனை செய்ததாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ராணுவங்கள் குற்றம் சாட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ரஷியா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதுபோன்ற ஆயுதத்தை ரஷியாசோதனை செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது இதுவே முதல் முறை. ஜூலை 15 ம் தேதி ரஷியா "விண்வெளி அடிப்படையிலான செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத சோதனையை நடத்தியது" என்பதற்கு அமெரிக்க விண்வெளி அமைப்பு "ஆதாரங்களைக் கொண்டுள்ளது" என்று வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம…
-
- 0 replies
- 443 views
-
-
சுப்ரமணியம் தவப்புதல்வன் (36) இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர் இலங்கை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சொந்த இடமாகக் கொண்டவர். அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அகதி தஞ்சம் கோரிய இவர், 4 வருடங்கள் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்து வந்துள்ளார். இவரது அகதி தஞ்சக் கோரிக்கை குடிவரவுத் திணைக்களத்தினாலும் மீளாய்வு மையத்தினாலும் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தார். இவரது மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தவேளையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் சிட்னி Blacktown பகுதியில் புகைய…
-
- 2 replies
- 643 views
-
-
இங்கிலாந்தில் 67 ஆண்டு காலம் வகித்து வந்த ராணுவ பொறுப்பை மருமகளிடம் ஒப்படைத்தார் இளவரசர் பிலிப் இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99), எடின்பரோ கோமகன் என்று அழைக்கப்பட்டு வந்தார். அந்த அடிப்படையில் அவர் 67 ஆண்டு காலமாக இங்கிலாந்து ராணுவத்தின் மிகப்பெரிய காலாட்படையான ரைபிள் படையின் தலைமை கர்னல் என்ற ராணுவ பொறுப்பை வகித்தார். கடந்த 2017-ம் ஆண்டு வயோதிகத்தின் காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விண்ட்சர் கோட்டையில் நடந்த ராணுவ விழாவில் அவர் ராணுவ பொறுப்பில் இருந்தும் முறைப்படி விலகினார். அந்த பொறுப்பை அவர் தனது மருமகளும், இளவரசர் சார்லஸ்சின் மனைவியுமான கமிலாவி…
-
- 0 replies
- 569 views
-
-
பொலிவிய நாட்டின் வீதிகளில் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுப்பு! தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெரிய நகரங்களின் வீதிகள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 400க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக, தேசிய பொலிஸ்துறை இயக்குனர் இவான் ரோஜாஸ் தெரிவித்துள்ளார். கோச்சபம்பா பெருநகரப் பகுதியில் மொத்தம் 191 சடலங்களும், நிர்வாகத் தலைநகர் லா பாஸில் 141 சடலங்களும், மிகப்பெரிய நகரமான சாண்டா குரூஸில் 68 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 85 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் இறந்ததாக நம்பப்படுகிறது. மீதமுள்ளவர்கள் பிற காரணங்களால் இறந்தத…
-
- 0 replies
- 433 views
-
-
சல்மான் ரவி பிபிசி இந்தி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றம் நிலவும் இந்தச் சூழ்நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய அமெரிக்க கடற்படைகள் கூட்டுப் பயிற்சிகள் மேற்கொண்டது சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுப்பதற்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படையின் 'கிழக்கு பிரிவு' ஏற்கனவே அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த பயிற்சி உண்மையில் 'பாஸேஜ் பயிற்சியின்' ஒரு பகுதியாகும், இதைக் கடற்படை அவ்வப்போது மற்ற நாடுகளின் கடற்படைகளுடன் செ…
-
- 1 reply
- 566 views
-
-
கொரோனா கோர தாண்டவம் தெருக்கள் முழுவதும் இறந்தவர்களின் உடல்கள் சாண்டாகுரூஸ் கொரோனா தாண்டவமாடி வரும் பொலிவியாவில், கடந்த 5 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட உடல்கள் வீடுகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இதுவரை 62 ஆயிரத்து 357 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.2,273 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அங்கு குறைவான அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில், கடந்த 5 நாட்களில் தெருக்கள், வீடுகளில் இருந்து மட்டும் 400க்கும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 528 views
-
-
பிரேசில் அதிபரை விடாத கொரோனா: 3-வது முறை நடத்தப்பட்ட பரிசோதனையிலும் தொற்று உறுதி பிரேசிலா, கொரோனா ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என கூறியவர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ. இவருக்கு கடந்த 10 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு கடந்த 15 ஆம் தேதி போல்சோனரோ 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு விரைவில் மீண்டும் பரிசோதனை செய்வேன் என போல்சனேரோ கூறியிருந்தார். …
-
- 0 replies
- 562 views
-
-
ஜி 7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடியை அமெரிக்கா அழைக்கிறது- மைக் பாம்பியோ லடாக் எல்லை பகுதியில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதில் அமெரிக்கா மிகுந்த வருத்தம் அடைகிறதுஜி 7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடியை அமெரிக்கா அழைக்கிறது என்று பாம்பியோ கூறுகிறார் பதிவு: ஜூலை 23, 2020 07:50 AM புதுடெல்லி, அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் இந்தியா ஐடியா மாநாடு காணொலி முறையில் நடந்தது. அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்த இரண்டு நாள் மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். மாநாட்டில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் ப…
-
- 0 replies
- 401 views
-
-
சீன தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா அதிரடி உத்தரவு! by : Litharsan அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலம், ஹூஸ்ரனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் மூடுமாறு அமெரிக்கா சீனாவுக்கு உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவு மூர்க்கத்தனமான மற்றும் நியாயமற்றது என சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது. அத்துடன், தவறான பாதையில் செல்லவேண்டும் என வலியுறுத்தினா…
-
- 9 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நெருக்கடி மேம்பாடு அடைவதற்கு முன்பு மோசமடையும்- டிரம்ப் எச்சரிக்கை வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசும் போது கூறியதாவது:- நாட்டின் சில பகுதிகள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. தெற்கின் பல பகுதிகளில் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் 141,000 க்கும் அதிகமானோர் பலி கொண்டுள்ள மிகவும் கொடுரூர தொற்றுநோயான வைரஸ் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியுங்கள். நான் எல்லோரிடமும் கேட்கிறேன் நீங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாதபோது, முகக்கவசம் அணியுங்கள். நீங்கள் முகக்கவசத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை ஒரு விளைவை ஏ…
-
- 0 replies
- 352 views
-