Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் புகைப்பழக்கத்தினை கைவிட்டுள்ளதாக தகவல்! ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் புகைபிடிப்பதை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றின் போதே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஜூன் மாதத்தின் இறுதிவரைக்குமான காலகட்டத்தில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆய்வில் 1.1 மில்லியன் பிரித்தானியர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக கைவிட்டுள்ளதோடு, மேலும் 440,000 பேர் புகை பிடிப்பதை விட முயற்சி செய்துகொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இளைஞர்களைப் பொருத்தவரை, வீட்டை விட்டு தொலை…

  2. ஆப்கானில் உள்ள 5 இராணுவத் தளங்களை மூடியது அமெரிக்கா நான்கு மாதங்களுக்கு முன்னர் தலிபானியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பகுதியாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐந்து இராணுவ தளங்களை அமெரிக்கா மூடியதாக பென்டகன் அதிகாரி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஹெல்மண்ட், உருஸ்கான், பக்திகா மற்றும் லக்மன் ஆகிய மாகாணங்களில் உள்ள இராணுவத் தளங்களையே அமெரிக்கா இவ்வாறு மூடியுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலீபான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெற்று வரும் மிக நீண்ட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு இரு தரப்புகளுக்குமிடையே ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்பட்டது. கட்டாரின் தலைநகர் டோஹாவில் பல மாத பேச்சுவா…

  3. கொரோனா வைரஸ் கட்டுக்குள் : பெரும் மகிழ்ச்சியில் பெல்ஜியம் மக்கள் பெல்ஜியம் மார்ச் மாதத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் முதன்முறையாக 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கபட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கிய பெல்ஜியத்தில் மார்ச் 10 ஆம் திகதிக்கு பின் முதல் முறையாக நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும் நேற்றைய தினம் 05 இறப்புகள் பதிவாகியுள்ளதுடன், 94 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஏப்ரலில் தினசரி இறப்பு எண்ணிக்கை 343 ஆக இருந்து வந்துள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்…

  4. அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு சீனாவிற்குள் நுழைய தடை! பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய சீன அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு, அமெரிக்க அரசு சில தடையுத்தரவுகளை அறிவித்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவின் உத்தரவின் படி, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் சாமுவல் பிரவுன்பேக், நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் ஸ்மித், செனட்டர் மார்கோ ரூபியோ மற்றும் டெட் க்ரூஸ் ஆகியோருக்கு நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக…

  5. அமெரிக்காவில் 17 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு அனுமதி 17 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி வழங்கியுள்ளது. நான்கு கூட்டாட்சி கைதிகளுக்கான மரண தண்டனைகளை திங்கட்கிழமை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தன. எனினும் நீதித்துறைக்கு எதிராக தீர்க்கப்படாத சட்ட சவால்கள் தொடர்ந்தும் இருப்பதாக தெரிவித்து அமெரிக்காவின் இண்டியானா மாநில தெற்கு மாவட்ட நீதமன்றம் திங்களன்று தீர்ப்பளித்த பின்னர் பல மரணதண்டனை நிறைவேற்றங்கள் தாமதமாகின. அதாவது அமெரிக்காவின் ஒக்லஹோமாவை மாநிலத்தைச் சேர்ந்த 47 வயதுடைய டேனியல் லீ என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 3 பேரை கொடூரமாக கொலை செய்தார். இந்த வழக்கி…

  6. வெடிகுண்டு அச்சுறுத்தல்: ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட ரியானைர் விமானம்! by : Anojkiyan கிராகோவிலிருந்து டப்ளினுக்கு வந்த ரியானைர் விமானமொன்று, ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறும் குறிப்பொன்று, கழிப்பறையில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விமானம் நேற்றிரவு (திங்கட்கிழமை) 18:40 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கிய பின்னர் ஆயுதமேந்திய பொலிஸார் விமானத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் பயணிகள், விமான நிலையத்தின் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர். ஓடுபாதையின் அடுத்த காத்திருப்பு நிலையத்தில் தீயணைப…

    • 0 replies
    • 368 views
  7. தென் சீனக் கடலில் சீனாவின் அனைத்து கடல்சார் கோரிக்கைகளையும் அமெரிக்கா நிராகரித்தது தென் சீனக் கடலில் சீனாவின் அனைத்து கடல்சார் கோரிக்கைகளையும் அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது. பதிவு: ஜூலை 14, 2020 11:47 AM வாஷிங்டன் அமெரிக்காவின் சீன தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தென் சீனக் கடலில் சீனாவின் சர்ச்சைக்குரிய கூற்றுக்களை நிராகரிக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையை உறுதியாக எதிர்ப்பதாக சீனா கூறி உள்ளது.மேலும் சீனா தனது அண்டை நாடுகளை கொடுமைப்படுத்துவதாக கூறும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை "முற்றிலும் நியாயமற்றது" என்றும் சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா நேரடியாக மோதல்களில் ஈடு…

  8. கொவிட்-19 தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றிபெற்றது ரஷ்யா! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு மருந்தினை மனிதர்கள் மீது செலுத்தி, சோதனை நடத்தி அதில் வெற்றிபெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன. இந்தநிலையில் சோதனை நடவடிக்கையில் ஜேர்மனி, அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக குறித்த நாடுகள் பல பில்லியன் டொலர் கணக்கான தொகையினையும் செலவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்த முயற்சியில் ரஷ்யா வெற்றி கண்டுள்ளதாக சொசோனோவ் பல்கலைக்கழகம…

    • 2 replies
    • 455 views
  9. ஹொங்கொங்கிலுள்ள 10,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு! ஹொங்கொங்கிலிருந்து தங்கள் நாட்டுக்கு வந்துள்ள 10,000 பேருக்கு, நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு செய்துள்ளது. ஹொங்கொங்கில் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில். சர்ச்சைக்குரிய புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியுள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருக்கும் 10,000 ஹொங்கொங் மக்களுக்கான விசா கெடுவை நீடிப்பதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு அவுஸ்ரேலிய குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் ஸ்கொட் மாரிசன் தெரிவித்துள்ளார். இதன்படி கல்வி மற்றும் பணி நிமித்தமாக அவுஸ்ரேலி…

  10. ஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: காரணம் வெளியானது! மோசமான இராணுவ தகவல் பரிமாற்றத்தினாலேயே, ஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 176 பேரது உயிர்களை காவு வாங்கிய இந்த விமான விபத்து குறித்து விசாரித்து வரும் ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு, இராணுவ தொலைத்தொடர்பில் ஏற்பட்ட தவறே இந்த விபத்துக்கு காரணம் என்பதை ஒப்பு கொண்டுள்ளது. இந்த விமானத்தின் ‘கருப்புப் பெட்டி’ தரவுகளை வெளியிடுவதை தாமதப்படுத்தி வரும் ஈரான், ஜூலை 20ஆம் திகதி அதனை ஆய்வுக்காக பிரான்ஸ் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி, ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள விமான நிலையத…

    • 1 reply
    • 580 views
  11. நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா காலமானார் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவருமான நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா இன்று திங்கட்கிழமை காலமானார். நெல்சன் மண்டேலா மற்றும் வின்னி மடிகிஸெலா ஆகியோரின் புதல்வியாகிய இவர் டென்மார்க்கிற்கான தென்னாபிரிக்காவின் தூதராக பணியாற்றி வந்தார். 59 வயதான ஸின்ட்ஸி , ஜோகன்னஸ்பேர்க்கில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தென்னாபிரிக்க அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. h…

  12. அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக கடற்படையில் முதல் கறுப்பின பெண் விமானி அமெரிக்க கடற்படை விமான பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வரலாற்றில் முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் இந்தமாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்“ என்று அழைக்கப்படும் விமான அதிகாரி அடையாளத்தை பெறுவார் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. வேர்ஜீனியா மாகாணம் பர்க் நகரைச் சேர்ந்த மேட்லைன் ஸ்வெகிள் கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகாடமியில் பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து 3 ஆண்டு கால தீவிர பயிற்சிக்குப் பிறகு தற்போது அவர் போர் விமானத்தின் வி…

  13. கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் -உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பதிவு: ஜூலை 14, 2020 06:51 AM ஜெனீவா சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன.இருப்பினும் இன்னமும் பல நாடுகள் தவறான திசையில் வேகமாக ச…

  14. கொரோனாவில் இருந்து விரைவில் விடுதலை...! உலகின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி ரஷ்யா வெற்றி மாஸ்கோ நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது. மறுபுறம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்…

  15. இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா (Hagia Sophia) அருங்காட்சியகத்தை மீண்டும் மசூதியாக மாற்றுவதற்கு துருக்கி எடுத்த முடிவால் கவலையடைவதாக புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஹாகியா சோபியா அருங்காட்சியகம் விடயத்தில் துருக்கியின் முடிவு கவலைக்குரியது. இஸ்தான்புல்லின் சாண்டா சோபியாவைப் பற்றி நினைத்து கவலையடைகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஹாகியா சோபியா அருங்காட்சியகம் சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ ஆலயமாக கட்டப்பட்டது. எனினும் 1453ஆம் ஆண்டில் ஓட்டோமான் (Ottoman) வெற்றியின் பின்னர் ஒரு மசூதி…

    • 14 replies
    • 2k views
  16. தென்னாபிரிக்காவில் தேவாலயமொன்றில் இடம்பெற்ற மோதல்: 5 பேர் உயிரிழப்பு! தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க்கிற்கு அருகிலுள்ள பழங்கால தேவாலயத்தில் இடம்பெற்ற மோதலையடுத்து 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தேவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை அங்கிருந்தவர்களை ஆயுதம் தாங்கிய குழுவினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தேவாலயத்தின் தலைமை தொடர்பாக தொடர்ந்துவந்த பிரச்சினையின் ஒரு கட்டமாக ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் தாக்குதல் நடத்த முனைந்த ஆண்கள் குழுவொன்றின் 40 பேரை கைதுசெய்துள்ளதாகவும் மேலும் 6 பேர் காயமடை…

  17. கொரோனா பாதிப்பு குறித்து சீனாவிற்கு முன்பே தெரியும் - பெண் விஞ்ஞானி பகீர் தகவல் கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பதிவு: ஜூலை 12, 2020 10:03 AM வாஷிங்டன், சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே தடுமாறி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் கணிசமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அமெரிக்கா, பிரேசில்…

  18. முதல்முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தும்மினால்,அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு நோய் தாக்காது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் இருந்து மாஸ்க் அணிய மறுத்து வந்தார். அவருடன் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையிலும் மறுத்துவிட்டார். அவரது மனைவி மாஸ்க் அணியும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது டிரம்ப் மாஸ் அணிவதில்லை. இ…

  19. சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி: லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பதிவு: ஜூலை 11, 2020 16:30 PM புதுடெல்லி, சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலை மீறி பாராளுமன்ற தேர்தல் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. முககவசம், கையுறைகள் அணிந்தபடி மக்கள் பாதுகாப்பாக வாக்களித்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் ச…

  20. அமெரிக்கா சினைப்பர் யுத்தத்தில் தோல்வியடைகின்றதா? July 11, 2020 அமெரிக்கா சினைப்பர் யுத்தத்தில் தோல்வியடைகின்றதா என ஏசியன் டைம்ஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது சோவியத்தின் சினைப்பர் வீரர்கள் ஸ்டாலின் கிராட் யுத்தத்தில் ஜேர்மனியின் இராணுவத்தினருக்கு பேரிழப்பு ஏற்படுத்தினார்கள்,என தெரிவித்துள்ள ஏசியன் டைம்ஸ் வாசிலி கிரிகோரிவிச் சாய்த்சேவ்32 ஜேர்மனிய படையினரை சுட்டுக்கொன்றதையும் நினைவுபடுத்தியுள்ளது. பல தசாப்தங்களுக்கு பின்னர் ரஸ்ய படையினர் 2020 இல் மீண்டும் அந்த கௌரவத்தை பெற்றுள்ளனர்,இது பென்டகனிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது எனஏசியன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பலவருடங்களாக மத்திய கிழக்கிலும் மத்திய ஆபிரிக்காவ…

  21. சீனாவில் கடும் மழை: வெள்ளத்தில் சிக்கி 140 பேர் பலி July 11, 2020 சீனாவின் தென் பகுதியில், கடந்த சில நாட்களாகக் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக யாங்சி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி 140 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள அன்ஹுய்( Anhui ) மற்றும் ஜியங்ஷி( Jiangxi) மாகாணத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. http://thinakkural.lk/article/53612

  22. டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்தார் டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்து உள்ளார். பதிவு: ஜூலை 11, 2020 09:06 AM வாஷிங்டன் 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து நடந்த விசாரணையில் பொய்யான தகவல்களை கூறிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி டிரம்பின் நீண்ட கால ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் என்பவருக்கு 3 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை வெள்ளிக்கிழமை மாற்றினார். இது குறி…

  23. அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் புளோய்ட் என்பவர் பொலிஸாரால் கொல்லப்பட்ட இறுதி நிமிடத்தில் அவர் பேசிய வார்த்தைகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 25ஆம் திகதி அமெரிக்காவின் மின்னெபொலிஸ் நகரைச் சேர்ந்த ஜோர்ஜ் புளோய்ட் என்ற கறுப்பினத்தவர் டெரிக்சாவின் என்ற வெள்ளை இனத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார். தனது முட்டியால் புளோய்டின் கழுத்தை பொலிஸ் அதிகாரி நெரித்துக்கு கொண்டிருக்க, தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று புளோய்ட் கூறிய இறுதி வார்த்தைகள் உலகத்தின் மனச்சாட்சியை இனவெறிக்கு எதிராக தட்டியெழுப்பியது. அதைத்தொடர்ந்து, Black lives matter என்ற கோசத்தை முன்வைத்து இனவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் ந…

  24. ஹாங்காங்கில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக அறிவிப்பு ஹாங்காங், சீனாவை தொடர்ந்து அதன் அண்டை நாடான ஹாங்காங்கிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது. இதனையடுத்து சீனாவுடனான எல்லையை மூடிய ஹாங்காங் அரசு, ஊரடங்கு விதிமுறைகளையும் கடுமையாக அமல்படுத்தியது. மேலும் வைரஸ் பரவலால் அரசுக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. இந்த துரித நடவடிக்கை காரணமாக ஹாங்காங்கில் வைரஸ் பாதிப்பு விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. அத்துடன் ஹாங்காங்கில் பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு வைரஸ் தொற்று மீண…

  25. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை: கிம்மின் சகோதரி திட்டவட்டம் அமெரிக்காவுடன் தற்போது வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இல்லை என்று கிம்மின் சகோதாரியான கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 17:28 PM சியோல் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அணுசக்தி சோதனை பேச்சு வார்த்தை தொடர்பாக வடகொரியாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்திருக்கிறார் வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரியான கிம் யோ ஜாங். இதுகுறித்து கிம் யோ ஜாங் கூறியதாவது:- அமெரிக்காவுடன் மீண்டும்பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தேவை இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அது ஒரு தர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.