உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
பிரித்தானியாவில் 45 நாட்களுக்கும் மேலாக அமுலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிரதமர் ஜான்சன் தளர்த்த இருப்பதாக வெளியான தகவலை அடுத்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய சூழலில் கொரோனா இறப்பு வீதம் குறைந்து வருவதால், பிரதமர் ஜான்சன் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுத்துள்ளார். ஆனால், அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் போன்று பிரதமர் ஜான்சனும் முன்னெடுக்க வேண்டாம் என பிரித்தானியர்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு கோரும் உல்லாசப்பிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் ஊரடங்கில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளை பெருமளவு தளர்த்தினால் இந்த ஆண்டு…
-
- 2 replies
- 480 views
-
-
இந்தியாவில் ஒரே நாளில் 4213 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 67 ஆயிரத்தை கடந்தது by : Dhackshala இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2206 பேர் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 4213 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2206 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, …
-
- 0 replies
- 428 views
-
-
விமானப் பயணத்தில் முகக்கவசம் கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க விமானப் பயணிகள் முகக்கவசங்களை அணிவதை அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் பரிந்துரைத்துள்ளது. கோப்புப்படம்: எஸ்டி 11 May 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 May 2020 10:29 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), சில்க்ஏர், ஸ்கூட் சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் பயணத்தின்போது இனி கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும். பயணிகள் தங்களது சொந்த முகக் கவசங்களைக் கொண்டு வர வேண்டும். விமானத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் பயணிகள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும். விமானத்திற்குள் கழிவறைக்காக வரிசையில் நிற்கும்போதும் இந்த இ…
-
- 0 replies
- 510 views
-
-
எல்லையில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு இந்திய சீன எல்லையான சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் இன்று இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பதிவு: மே 10, 2020 15:05 PM சிக்கிம், பாகிஸ்தானைப் போல் மற்றொரு அண்டை நாடான சீனாவும் ஏதாவது ஒரு வகையில் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்துக்கு சீனா அநியாயமாக உரிமை கொண்டாடி வருகிறது. சீன ராணுவம் அவ்வபோது இந்திய நிலைகளுக்கு ஊடுருவதும், இந்திய ராணுவம் எதிர்ப்பு தெரிவிக்கவும் திரும்பி செல்லும் சம்பவங்கள…
-
- 1 reply
- 629 views
-
-
ஆங்கில கால்வாய் ஊடாக கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! சாதகமான வானிலையை பயன்படுத்தி அண்மைய நாட்களில், மக்கள் கடத்தல் கும்பல்கள் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதால் 82 புலம்பெயர்ந்தோருடன் ஐந்து படகுகள் ஆங்கில கால்வாயில் எல்லைப் படையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதாவது, இரண்டு நாட்களில் 13 சிறிய படகுகளில் மொத்தம் 227 பேர் கலீஸிலிருந்து இங்கிலாந்தின் தெற்கு கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், 44 புலம்பெயர்ந்தோர் கடக்கப்படுவதைத் பிரான்ஸ் எல்லைப் படை அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதுதவிர சமீபத்திய படகில் சுமார் 17 பேர் இருந்ததாக கருதப்படுகிறது. இதுகுறித்து immigration compliance அமைச்சர் கிறிஸ் பில்ப் கூறுகையில், ‘மக்கள் கடத்தல் வர்த…
-
- 0 replies
- 453 views
-
-
சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்! வல்லரசு நாடுகள் இணைந்து ஏற்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா வெளியேறிய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஈரான் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெசுக்கு, ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஷாரீப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, ஐ.நா.வின் விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் ஆகும். அதன் விளைவுகளுக்கு ஐ.நா. சபை அமெரிக்காவை உடனடியாக பொறுப்பேற்க வைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பி…
-
- 0 replies
- 353 views
-
-
உலகில் முதல் முறையாக, சீனாவில், மூளைச்சாவு அடைந்தவரின் நுரையீரல் தானமாக பெறப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தப்பட்டது. கொரோனாவின் தாயகமாக கருதப்படும் வூகான் நகரை சேர்ந்த, ஸ்வை ஜிகியாங் என்ற 65 வயது நபர், நுரையீரலில் ஏற்பட்ட இழைநார் வளர்ச்சியால், 2 நுரையீரல்களும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, மூச்சு விட சிரமப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 60 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து, வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் மூலம், 8 மணி நேரம் நடைபெற்ற நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை தொடர்ந்து, புதிதாக பொருத்தப்பட்ட நுரையீரல்கள் சீராக செயல்படத் தொடங்கியதால், அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளார். https://www.polimer…
-
- 0 replies
- 375 views
-
-
கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைகளில், வட கொரியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக, தென் கொரிய அதிபர், மூன் ஜே இன் கூறியுள்ளார். கிழக்காசிய நாடான தென் கொரியாவில், கடந்த ஒரு மாதமாக, கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்திருந்தது.வைரஸ் பாதிப்புஇந்நிலையில், நேற்று முன்தினம் புதிதாக, 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எட்டு பேர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் நேற்றைய தகவலின்படி, 10 ஆயிரத்து, 874 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், 9,610 பேர் குணமடைந்துள்ளனர்; 256 பேர் இறந்துள்ளனர். இது குறித்து, தென் கொரிய அதிபர், மூன் ஜே இன் கூறியதாவது:நாட்டின் கேசலோட் பகுதியில், கொரோனா வைரஸ் பரவுதல் குறைந்ததால், சமூக தொலைதுார விதிகள் தள…
-
- 0 replies
- 429 views
-
-
கொரோனா தேவையை சமாளிக்க 40 ஆயிரம் டாக்டர்கள், நர்சுகளுக்கு கிரீன் கார்டு கொரோனாவால் எழுந்துள்ள தேவையை சமாளிக்க ஏற்றவகையில், 40 ஆயிரம் டாக்டர்கள், நர்சுகளுக்கு கிரீன் கார்டு வழங்க அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோப்பு படம் வாஷிங்டன்: கொரோனாவால் எழுந்துள்ள தேவையை சமாளிக்க ஏற்றவகையில், 40 ஆயிரம் டாக்டர்கள், நர்சுகளுக்கு கிரீன் கார்டு வழங்க அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பலன் அடைவார்கள். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு ஏறத்தாழ 13 லட்சத்து 23 ஆயிரம் பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. 7…
-
- 4 replies
- 603 views
-
-
குழப்பம் நிறைந்த பேரழிவிற்கு டரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையே முக்கிய காரணம்: ஒபாமா சாடல்! அமெரிக்காவில் தற்போது நிலவும் குழப்பம் நிறைந்த பேரழிவிற்கு ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையே முக்கிய காரணம் என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. தற்போது வரை அங்கு 13 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், வைரஸ் பரவலை தடுப்பது என்பது அமெரிக்காவுக்கு மிகவும் கடினமான ஒரு விடயமாகவே உள்ளது. தினசரி பாதிப்பில் எவ்வித மாற்றமும் இல்லாம…
-
- 0 replies
- 326 views
-
-
அமெரிக்காவில் ஊரடங்கை பயன்படுத்தி அநியாய விலைக்கு பொருட்களை விற்ற இந்தியர் அமெரிக்காவில் ஊரடங்கை பயன்படுத்தி அநியாய விலைக்கு பொருட்களை விற்ற இந்தியர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. பதிவு: மே 10, 2020 09:59 AM வாஷிங்டன், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு போடப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்தநிலையில் அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் பிளசன்டன் என்ற இடத்தில் அப்னா பஜார் என்ற பெயரில் இந்தியரான ராஜ்விந்தர் சிங் என்பவர் பிரபலமான மளிகைக்கடையை நடத்தி வந்தார் இவர் ஊரடங்கை பயன்படுத்தி பொருட் களை அநியாய விலைக்கு, அதுவும் 200 சதவீதம் அளவுக்கு விலைகளை உயர்த்தி விற்பனை…
-
- 1 reply
- 812 views
-
-
கனடாவில் கடந்த மாதத்தில் இரண்டு மில்லியன் பேர் வேலையை இழந்துள்ளனர்! கனடாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு மில்லியன் பேர் வேலையை இழந்துள்ளதாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள முடக்கநிலையே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின் படி, மார்ச் மாதத்தில் இழந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை இழப்புகளுக்கும் மேலாக, ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை 1,993,800 என உயர்வடைந்துள்ளது. இதனால் வேலையின்மை வீதம் 13.0 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. இது மார்ச் மாதத்தில் 7.8 சதவீதமாக இருந்தது. நிதிச் சந்தை தரவு நிறுவனமான ரெஃபினிடிவின் கூற்றுப்படி, சரா…
-
- 2 replies
- 627 views
-
-
பயணக் கட்டுப்பாடுகளை ஜூன் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கிறது ஐரோப்பிய ஆணைக்குழு! ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான எல்லைகள் ஊடாக பயணிப்பதற்கான கட்டுப்பாடுகள், குறைந்தபட்சம் ஜூன் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கப்படுமென என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையேயான எல்லைகள் விரைவில் ஏதோவொரு வகையில் மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் அசாதாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஆணையம், கூட்டணியின் நிர்வாகக் கிளை, பயணத்தைத் தடையை இன்னும் 30 நாட்களுக்கு நீடித்துள்ளது. ஆனால், இவ்வாறான தடைகள் மூலம், வர்த்தகம் மற்றும் சுற்றுலா பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஷெங்கன் …
-
- 0 replies
- 389 views
-
-
கொரோனா வைரஸ் பரவ உகான் சந்தையும் ஒரு காரணம் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் ஜெனீவா உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலாக சீனாவின் உகான் நகரிலிருந்துதான் வெளிப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று, சீன நாட்டின் உகான் நகர கடல்வாழ் உயிரின சந்தையில் இருந்த வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டது. ஆனால் அந்த வைரஸ், இயற்கையாக உருவானது அல்ல, அது உகான் நகரில் உள்ள வைரலாஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் பரவி இருக்கிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறத்ய் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீனா எந்த முயற்சியு…
-
- 0 replies
- 436 views
-
-
கொவிட்-19 எதிரொலி: அமெரிக்காவில் வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை உச்சம் தொட்டது! கொரோனா வைரஸ் தொற்றால் பேரிழப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில், மார்ச் மாதம் நடுவில் இருந்து வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 3.33 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது, அமெரிக்காவில் வேலை செய்வோரின் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. அங்கு இதுவரை 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 419 views
-
-
கொவிட்-19 நெருக்கடி: ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலியர்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்கள்- அதிர்ச்சி தகவல் கொரோனா வைரஸ் நெருக்கடியினால் ஏற்படும் நிதி மற்றும் உளவியல் அழுத்தத்தால் ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலியர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் நோயிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட தொற்றுநோய் மற்றும் பொருளாதார பணி நிறுத்தங்களின் தாக்கத்தின் விளைவாக, வரும் ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 750 முதல் 1,500 வரை தற்கொலைகள் கூடுதலாக நிகழும் என சிட்னி பல்கலைக்கழகத்தின் Brain and Mind Centre கணித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு…
-
- 2 replies
- 466 views
-
-
ஜேர்மனியில் இலையுதிர்காலத்திற்கு முன் இரண்டாவது கொரோனா வைரஸ் அலை: மக்களுக்கு எச்சரிக்கை ஜேர்மனியில் மக்களின் நடத்தையைப் பொறுத்து இலையுதிர்காலத்திற்கு முன், இரண்டாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் என மூத்த ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அண்மைய தினங்களாக ஜேர்மனியில் வைரஸ் தொற்று வீதம் குறைந்ததால், நடைமுறையில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் தற்போது வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால், இரண்டாவது மிகப்பெரிய பாதிப்பு உருவாகும் அபாயம் இருப்பதாக, ஜேர்மனியில் உள்ள பொது சுகாதார நிறுவனமான ரொபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் லோதர் வைலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வைரஸ் தொற்று குறைந்து வரு…
-
- 1 reply
- 384 views
-
-
வெனிசுவேலா | அமெரிக்க ஊடுருவல் முறியடிப்பு , தொடரும் ரொம் அண்ட் ஜெரி ஓட்டம் ஞாயிறு அதிகாலை (மே 03) மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் படையெடுப்பு ஒன்றை வெனிசுவேலா வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. அமெரிக்காவிற்கும் இப் படையெடுப்பிற்கும் சம்பந்தமில்லை என ஜனாதிபதி ட்றம்ப் கூறியிருந்தாலும், இப் படையெடுப்பில் கலந்துகொண்டவர்களில் சிலர் முன்னாள் அமெரிக்க இராணுவத்தினர் என்பது நிருஇக்கப்பட்டுவிட்டது. ஞாயிறு அதிகாலை கொலம்பியாவின் கரையிலிருந்து சில விசைப்படகுகள் புறப்பட்டன. அவற்றில் பெருமளவு ஆயுதங்கள், வெடி மருந்துகள், சட்டலைட் போன்கள் என்று ஒரு படையெடுப்புக்கான பொருட்கள் இருந்தன. சீருடைகளில் அமெரிக்க கொடி பொறிக்கப்பட்டிருந்தது. வெனிசுவேலா கடல் எல்லையைத் தாண்டியதும் வ…
-
- 0 replies
- 546 views
-
-
இஸ்ரேலில் உதயமாகும் தேசிய ஒற்றுமை அரசு! ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சி இணைந்தது! by : Anojkiyan இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஓராண்டுக்குள் மூன்றாவது முறையாக நடைபெற்ற தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பெஞ்சமின் காண்ட் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைப்பதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய ஒற்றுமை அரசிற்கான அதிகார பரவல் சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 71 வாக்குகளும் எதிராக 37 வாக்குகளும் பதிவாகின. கூட்டணி…
-
- 1 reply
- 644 views
-
-
சீனாவை அமெரிக்கா சந்தேகிப்பது தனது தோல்வியை திசை திருப்பும் நடவடிக்கை: ஜேர்மனி சந்தேகம் by : Anojkiyan சீன ஆய்வுக்கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அமெரிக்கா சந்தேகப்படுவதானது, கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தனது தோல்வியை திசை திருப்பும் நடவடிக்கை என ஜேர்மனி சந்தேகம் வெளியிட்டுள்ளது. வுஹான் நகரின் ஆய்வு கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகத்துக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அண்மையில் தெரிவித்திருந்தார். இதேவேளை சீனாவின் தலையீட்டுடன் கொரோனா வைரஸ் பரவியிருந்தால்…
-
- 3 replies
- 596 views
-
-
கொரோனா பாதித்தவர்களுக்கு விதவிதமான பல புதிய அறிகுறிகள்- டாக்டர்கள் குழப்பம் உலக அளவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா பாதித்தவர்களுக்கு பல புதிய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது வறட்டு இருமல், காய்ச்சல், உடல்சோர்வு ஆகியவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகள். இவற்றுடன் உடல் வலி, சளி, தொண்டை வறட்சி போன்றவையும் கொரோனாவின் அறிகுறிகளாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு அறிதாக வயிற்றுப்போக்கும் ஏற்படுவதும் பின்னர் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா பெரும்பாலும் அறிகுறியே இல்லாமல் பரவுவதாக கூறப்படும் நிலையில், வாசனை இழப…
-
- 0 replies
- 455 views
-
-
வெள்ளைமாளிகை ஊழியருக்கு கொரோனா !: டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை ? - குழப்பத்தில் வெள்ளை மாளிகை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடும்ப (வேலட்) அந்தரங்க உதவியாளரும் வெள்ளை மாளிகை ஊழியருமான கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க ஜனாதிபதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாமென அச்சம் எழுந்துள்ளதையடுத்து அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலட் என்றவர் அமெரிக்கா இராணுவப்பிரிவில் பணியாற்றி வருபவர் மட்டுமின்றி, வெள்ளை மாளிகைக்காக உருவாக்கப்பட்டதுடன் அமெரிக்க ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரத்தியேகமானவர்கள் என்பதுடன் டிரம்ப் உள்நாட்டு பயணம் செய்தாலும் வெளிநாட்டு பயணம் செய்தாலு…
-
- 0 replies
- 565 views
-
-
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கும் சிறுபான்மையினர் தொடர்பான ஆய்வறிக்கை! பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் மரணிக்கும் ஆபத்து, கறுப்பின மக்கள் மற்றும் சிறுபான்மை இன சமூகங்களில் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுகாதார சேவை தரவுகளின் கல்வி ஆய்வின்படி, இந்த அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியாகியுள்ளது. லண்டன் பல்கலைகழக கல்லூரி (யு.சி.எல்) நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் பாரம்பரிய மக்களின் இறப்பதற்கான சராசரி ஆபத்து 3.29 மடங்கு அதிகமாகும். ஆபிரிக்க கறுப்பின பின்னணியில் இது 3.24 மடங்கு அதிகமாகவும், பங்களாதேஷுக்கு 2.41 மடங்கு அதிகமாகவும் உள்ளது. கறுப்பின கரீபியன் சமூகங்கள் 2.21 மடங்கு அதிக ஆபத்தில் உள்ளன. இந்திய சமுத…
-
- 0 replies
- 275 views
-
-
500களை கடந்து நிற்கும் UKயின் மரணங்களும் -200களில் குறைந்து நிற்கும் ஐரோப்பிய மரணங்களும்… கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் +539 ஏற்பட்டுள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் இருந்து குறைவை நோக்கி கீழிறங்கிய பிரிட்டனின் மரணங்கள், மீண்டும் 500 களைக் கடந்த எண்ணிக்கையை தக்கவைத்துள்ளமை புள்ளிவிபரங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டனின் மொத்த மரணங்களும், அமெரிக்காவின் 76,290 என்ற எண்ணிக்கைக்கு அடுத்த நிலையில், 30,615 ஆக உயர்ந்துள்ளன. புதிதாக அடையாளம் காணப்பட்ட +5,614 தொற்றாளர்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206,715 உயர்ந்துள்ளது. இதேவேளை, பிரான்ஸ…
-
- 0 replies
- 292 views
-
-
சார்ஜாவில் 48 மாடி கட்டிடத்தில் தீ விபத்து..!
-
- 3 replies
- 660 views
-