உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27021 topics in this forum
-
பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளில் கெமராக்கள்: பிரதமர் ஜஸ்டின் யோசனை இனவெறி மற்றும் மிருகத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ யோசனையொன்றை முன்வைத்துள்ளார். பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளில் கெமராக்களை பொருத்த, மாகாண முதல்வர்களை வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுடனான தொடர்புகளை கெமராக்கள் ஆவணப்படுத்துகின்றன. கனடாவில் பொலிஸார் இனமயமாக்கப்பட்ட மக்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள் என்ற புகார்களைத் தீர்ப்பதற்கான ஒப்பீட்டளவில் எளிய வழி அவை’ என கூறினார். நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அமெரிக்காவில் மட்டுமல்ல கனடா, ந…
-
- 0 replies
- 285 views
-
-
கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே கடந்த மாதம், மாணவர்கள் பட்டம் பெற முடியாவிட்டாலும், நோய் பரவுவதை எதிர்த்துப் போராட பாடசாலையிலிருந்து வெளியேற வேண்டியது அவசியம் என்று கூறினார். இதனிடையே, ஒரு தடுப்பூசி கிடைக்கும் வரை நேருக்கு நேர் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு நாங்கள் இணங்குவோம் என கல்விச் செயலாளர் லியோனோர் பிரையன்ஸ் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஒகஸ்ட் ம…
-
- 0 replies
- 221 views
-
-
உலக நன்மைக்கு தடுப்பூசி தருவோம் - சீன தகவல்! உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு, பரிசோதனை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர் பீஜிங்கில் நேற்று கூறுகையில், “வெற்றிகரமான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு உட்படுத்தும்” என்று குறிப்பிட்டார். இதற்கிடையே பீஜிங்கில் சீன அறிவியல், தொழில்நுட்ப மந்திரி வாங் ஜிகாங் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “தடுப்பூசி மேம்பாடு, மருத்துவ பரிசோதனைகள், பயன்பாடு ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மேலும், பாதுகாப்பு, செயல்திறன், கிடைக்கும் நிலை ஆகியவற்றை கரு…
-
- 0 replies
- 397 views
-
-
கொரோனா தொற்று இல்லாத நாடானது நியூஸிலாந்து! நியூஸிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கடைசி நபரும் திங்கட்கிழமை பூரண குணமடைந்ததால், அந்த தொற்றை ஒழித்துவிட்ட நாடாக நியூஸிலாந்து உருவாகியுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 50 இலட்சம் பேர் வசிக்கும் நியூஸிலாந்தில், கடந்த பெப்ரவரி இறுதியில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதன் பிறகு நாடு முழுவதும் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில், சுமார் 1500 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த 17 நாள்களில் 40,000 பேருக்கு கொரோனா பரிசோதன…
-
- 0 replies
- 377 views
-
-
சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்க ஐரோப்பிய எம்பிக்கள்.! என்ன சொல்கிறது சீனா.? கொரோனா வைரஸ் வந்ததில் இருந்தே, சீனா அதிக அளவில் லைம் லைட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது. சீனாவால் தான், உலகமே, லாக் டவுன் போன்ற பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வந்தது என ட்ரம்ப் தொடங்கி பல அரசியல்வாதிகளும் சீனாவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சீனா இதற்கு எல்லாம் மசிவதாகத் தெரியவில்லை. எல்லா குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்களையும், இடது கையால் ஒதுக்கிவிட்டு, அடுத்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச அமைப்பு ஆனால் சர்வதேச நாடுகளோ, சீனாவை தன் போக்கில் விடுவதற்கும் தயாராக இல்லை. சீனாவின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், சீனாவில் நடக்கும…
-
- 0 replies
- 360 views
-
-
அறிகுறியற்ற மக்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவுவது "மிகவும் அரிதானது" - உலக சுகாதார அமைப்பு ஜெனீவா உலக சுகாதார அமைப்பின் உயர் அவசர நிபுணர் டாக்டர் மைக் ரியான் கூறியதாவது:- சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளக்கூடும் .இரண்டாவது அலையை தடுக்க இன்று நாம் என்ன செய்கிறோம் என்பதில் இப்போது கவனம் செலுத்த வேண்டும்." குவாதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் தொற்றுநோய்கள் இன்னும் அதிகரித்து வருகின்றன. அவை சிக்கலான தொற்றுநோய்களாக உள்ளன. பிரேசில் இப்போது தொற்றுநோய்களின் மையபகுதிகளில் ஒன்றாகும், உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் உள்ளன அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது. கடந்த வார…
-
- 0 replies
- 326 views
-
-
ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிப்பு அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மினியாபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினியாபொலிஸ் நகரில் செயற்பட்டு வரும் குறித்த காவல்துறையை முற்றிலும் கலைத்துவிட்டு புதிதாகக் கட்டமைக்க முடிவு செய்துள்ளோம் என மினியாபொலிஸ் நகரின் சபை தலைவர் லிசா பெண்டர் அறிவித்துள்ளார். தங்கள் சமூகம் மற்றும் மக்களுடன் இணைந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையை உருவாக்க தாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகர் மினியாபொலிஸில், மே 25ம் திகதி, 46 வயத…
-
- 0 replies
- 278 views
-
-
அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி நாடு திரும்பினார்! அமெரிக்காவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி மஜித் தாஹேரி, நாடு திரும்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மஜித் தாஹேரி, தரையிறங்கியதாக ஈரானின் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பிய ஈரானிய விஞ்ஞானி மஜித் தாஹேரியை, துணை வெளியுறவு அமைச்சர் ஹொசைன் ஜாபேரி அன்சாரி விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். ஈரான் நாட்டின் விஞ்ஞானி சிரஸ் அஸ்காரி என்பவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் இரகசியங்களை வியாபாரம் செய்ய முயற்சித்ததாக தண்டிக்கப்பட்டிருந்தார். அவரை அமெரிக்கா விடுதலை செய்த இரண்டு நாட்களுக…
-
- 0 replies
- 225 views
-
-
கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி அமெரிக்காவை அதிர வைத்திருக்கிறது ஜார்ஜ் பிளாயிட் கொலை. அமெரிக்காவில், ஆயிரக்கணக்காக கருப்பின மக்கள் இனவெறி தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளனர். ஆனால், ஜார்ஜ் பிளாயிடின் இறப்பும் அது நிகழ்ந்த விதமும் உலக மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளனர். 'கலவரக்காரர்களை போலீஸால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ராணுவத்தை களமிறக்குவேன் ' என்று அமெரிக்க ஜனாதிபது டிரம்ப் எச்சரித்த பிறகும் , கலவரம் கட்டுக்குள் அடங்கவில்லை. கருப்பினத்தவர் மரணம் குறித்து டிரம்பின் கவலையில்லாத பதில் போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அமெரிக்கா மட்டுமின்றி ஜார்ஜ் …
-
- 19 replies
- 2k views
- 1 follower
-
-
சீனாவை தனிமைப்படுத்த 8 நாடுகள் கூட்டணி அமெரிக்க திட்டத்தை கேலி செய்யும் சீனா வாஷிங்டன் கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே சீனாவின் மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன.வைரஸ் குறித்த தகவலை சொல்லாமல் மறைத்தது. பொருளாதார சரிவுக்கு காரணமாக இருந்தது. பொருளாதார சரிவை காரணம் காட்டி வெளிநாட்டில் இருந்த நிறுவனங்களை வாங்கியது போன்ற பல்வேறு காரணங்களால் சீனா மீது பல நாடுகளில் கோபத்தில் உள்ளன. குறிப்பாக இதில், சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. சீனாவை முடக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், சீனாவிற்கு எதிராக 8 நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளிய…
-
- 0 replies
- 526 views
-
-
சுத்தமான நாடானது நியூஸிலாந்து: கடைசி கரோனா நோயாளியும் குணமடைந்தார் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்: கோப்புப்படம் வெலிங்டன் தென்மேற்கு பசிபிக் கடற் பகுதியில் இருக்கும் தீவான நியூஸிலாந்து நாட்டில் கடைசி கரோனா நோயாளியும் குணமடைந்ததார். இதனால் கரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது, எதிர்காலத்தில் கரோனா வராது என நம்புவதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஓஸ்னியாவில் இருக்கும் குட்டி நாடான நியூஸிலாந்தையும் கரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. கடந்த மார்ச் மாதத்திலிருந்து அங்கு 1,500 பேர் பாதிக்கப்பட்டனர், 22 பேர் உயிரிழந்தனர். ஆனால், தீவு நாடாக இருப்பதால் அங்கு வரும் தங்கள் நாட்டு மக்களைத் தவிர சுற்றுலா…
-
- 0 replies
- 352 views
-
-
அமெரிக்கப் போராட்டத்தை எப்படிப் புரிந்துகொள்வது? ராஜசங்கீதன் தற்போது அமெரிக்காவில் எழுந்திருக்கும் போராட்டங்கள் அரசியலை அவதானிக்கும் எவருக்கும் ஒரு முக்கியமான ஆவணம். இந்தப் போராட்டங்கள் எப்படித் தொடங்கி, எப்படிக் கொண்டுசெல்லப்பட்டு, எப்படி முடிகின்றன என்பதை நாம் அனைவரும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். நவதாராளமயக் காலத்தில் போராட்டங்கள் எப்படி சித்தாந்தமற்றவையாக மாற்றப்பட்டிருக்கின்றன என்பதையும், சிவில் சமூக அமைப்புகள் அவற்றைக் கைக்கொண்டு எப்படி ஒரு முக்கியமான அரசியல் கேவலை நீர்த்துப்போக வைக்கின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ள அவசியப்படும் தருணங்கள் இவை. ஜார்ஜ் ஃப்ளாய்டு மீது அரச நிறுவனமான காவல் துறையின் ஒரு பிரதிநிதி காட்டிய மேலாதிக்க ஒடுக்க…
-
- 0 replies
- 652 views
-
-
ஜார்ஜ் பிளாய்ட் கொலை- இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இனவெறிக்கு எதிராகவும் கனடாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். முழங்காலிட்டு ஜார்ஜ் பிளாய்டுக்கு அஞ்சலி செலுத்திய கனடா பிரதமர் ட்ரூடோ ஒட்டாவா: அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார். கருப்பினர் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. போ…
-
- 3 replies
- 1k views
-
-
இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜோர்ஜ் பிலோய்டின் மரணத்தால் அமெரிக்காவில் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் லண்டன், மான்செஸ்டர், கார்டிஃப், லீசெஸ்டர் மற்றும் ஷெஃபீல்ட் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. லண்டனில், ஆர்ப்பாட்டக்காரர்கள் “நீதி இல்லை, அமைதி இல்லை” மற்றும் “கறுப்பின மக்களின் விடுதலை” என கோஷமிட்டு நேற்று (சனிக்கிழமை) போராட்டம் நடத்தினர். குறித்த ஆர்ப்பாட்டங்களில் பெரும்பாலானவை அமைதியானதாக இருந்தாலும் டவுனிங் தெரு பகுதியில் இடம்பெற்ற போராட்டம் சிறுது வன்முறையா…
-
- 1 reply
- 481 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை! போலி ஆவணங்களை வைத்திருந்தமை தொடர்பில் இலங்கையர்கள் இருவருக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இலங்கையர்களான புஸ்பராஜ் கபில் (21) மற்றும் ராமசந்திரன் கிஷோ பிரசாத் (32) ஆகிய இருவருக்கே தலா 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி சிங்கப்பூர் கடவுச் சீட்டு மற்றும் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டை என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில், சிங்கப்பூர், டுவாஸ் சோதனைச் சாவடியில் வைத்து கடந்த பெப்ரவரி 29ம் தகிதி சந்தேக நபரொவருர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் மற்றைய சந்கைநபர் கைது செய்யப்பட்…
-
- 0 replies
- 644 views
-
-
ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரான்ஸில் தடை! அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு, பிரான்ஸில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) தலைநகர் பரிஸில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற இருந்தன. பரிஸில் இரு அமைப்புக்கள் அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பரிஸ் பொலிஸ் தலைமைச் செயலகம் இதற்கு தடை விதித்துள்ளது. பத்து பேருக்கு மேல் கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ள நில…
-
- 0 replies
- 335 views
-
-
சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸைப் பரப்பக்கூடிய நுண்ணிய உமிழ்நீரை தடுக்கும் ஒரு தடையாக முகக்கவசம் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சில நாடுகள் ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைத்துள்ளன அல்லது கட்டாயப்படுத்துகின்றன. ஆரோக்கியமான மக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் முன்பு தெரிவித்திருந்தது. எவ்வாறா…
-
- 0 replies
- 203 views
-
-
நிறவெறிக்கு எதிராக இனம் கடந்த போராட்டம்: அமெரிக்காவில் குடும்பம் குடும்பமாக குவிந்த மக்கள் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் அமெரிக்காவில் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு எதிராக தொடங்கிய போராட்டம் 12வது நாளாகத் தொடர்கிறது. இந்நிலையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் பத்தாயிரக்கணக்கான மக்கள் இனம், நிறம் கடந்து ஒன்றுகூடி இனவெறிக்கு எதிராகவும், போலீஸ் வன்முறைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேப்பிடோல், லிங்கன் நினைவகம், லஃபாயெட்டி பூங்கா ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். இந்த இடங்களில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகைக்கு செல்லும் பாதைகளை போலீசார் மறித்துவைத்தனர். பல்வேறு இனங்கள், நிறங்களைச் சேர்ந்…
-
- 0 replies
- 377 views
-
-
Black Lives Matter ஊர்வலங்களுக்கு சிட்னி, அவுஸ்திரேலியாவில் தடை கொறோணாவைரஸ் தொற்று காரணம் சிட்னி, அவுஸ்திரேலியா: இந்த வார இறுதியில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த Black Lives Matter ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு, கொறோணாவைரஸ் தொற்றைக் காரணம் காட்டி, சிட்னி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் திணைக்களம் இத் தடையைக் கோரியிருந்தது. ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலையையும், பல அவுஸ்திரேலிய சுதேசிகள் பொலிசாரின் கரங்களில் மரணமடைவதையும் கண்டிப்பதுடன், அமெரிக்காவில் நடைபெற…
-
- 0 replies
- 431 views
-
-
ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது" இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு பெய்ஜிங் இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.இதனால் சீனாவிற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் அமெரிக்கா தீவிரமாக செய்து வருகிறது. உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்த தேவையான விஷயங்களை அமெரிக்கா செய்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக ஜி7 மாநாட்டை பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவும், ரஷ்யாவும் ஜி 7 நாடுகளில் இணைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரிக்கை வைத்து உ…
-
- 3 replies
- 741 views
-
-
அமெரிக்காவில் முதியவரை தள்ளி மண்டையை உடைத்த விவகாரம் : 57 போலீசார் கூண்டோடு ராஜினாமா அமெரிக்காவில் முதியவர் ஒருவரை தள்ளிவிட்டு மண்டை உடைய காரணமான இரு போலீசார் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சக போலீசார் 57 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். பதிவு: ஜூன் 06, 2020 15:00 PM வாஷிங்டன் வாகனங்களும், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்ற 6 காவலர்கள் கொல்லப்பட்டனர்.போராட்டங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அதனையும் மீறி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கட்டுக்கடங்காமல் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த நிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
கொரோனா வைரஸ்: 100 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம் கொரோனா வைரஸ் தொற்று உண்டாகாமல் தடுக்க வாய்ப்புள்ள தடுப்பு மருந்து ஒன்றின் உற்பத்தியை தொடங்க உள்ளதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கான பரிசோதனைகள் இன்னமும் நடந்து வருகின்றன. ஆனால், ஒருவேளை தங்களது தடுப்பூசி கோவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்த கூடியது என்று தெரியவந்தால் உடனடியாக ஏற்படும் தேவையை எதிர்கொள்ளும் பொருட்டே தற்போது அந்த தடுப்பூசிக்கான உற்பத்தியை தொடங்க வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் பாஸ்கல் சொரியட் கூறுகிறார். "நாங்கள் உடனடியாக இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பணி…
-
- 0 replies
- 602 views
-
-
இந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப் இந்தியாவிலும், சீனாவிலும் கரோனா தொற்றுக்கள் அதிகமாகவே இருக்கும், இந்நாடுகளில் அதிகமாகப் பரிசோதனைகள் செய்தால் அதிக கரோனா தொற்றுக்களைக் காணலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் இதுவரை 2 கோடி பேருக்கு டெஸ்ட்கள் செய்துள்ளது என்கிறார் அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவில் கரோனா தொற்று எண்ணிக்கை 19,65,708 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 1,11,390 ஆக உள்ளது. மொத்தம் 19,65,708 கேஸ்களில் 11,15,6,38, பேர்கள் இன்னும் கரோனா தொற்றுடன் உள்ளனர், 7,38,646 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். Powered by Ad.Plus கரோனா தொற்றில் 6வது இடத்துக்கு முன்ன…
-
- 0 replies
- 284 views
-
-
ஒரு அங்குல நிலப்பரப்பையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" -சீன ஊடகம் எச்சரிக்கை இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. லடாக்கில் எல்லை பகுதியில் சீன வீரர்கள் அவ்வப்போது அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைய முயற்சிப்பதும், அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்துவதும் நடந்து வருகிறது. லடாக் மீது சீனா பல வருடங்களாக கண் வைத்து இருந்தது. தற்போது இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி லடாக் மற்றும் சிக்கிமில் சீனா அத்துமீற நினைக்கிறது. அங்கிருக்கும் கரி குன்ஷா விமான நிலையம் அருகே சீனா விமான தளம் அமைத்துள்ளது. லடாக் அருகே தாக்குதல் நடத்தும் வகையில் சீனா இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி சீனாவின் உளநாட…
-
- 0 replies
- 456 views
-
-
அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பென்டகனை எதிர்த்து பேசி இருந்ததை தற்போது அந்நாட்டு ராணுவம் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறது. இதனால் அதிபருக்கும் இராணுவத்திற்கும் இடையிலான மோதல் முற்றி இருக்கிறது. அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது மொத்தமாக அந்த நாட்டை உலுக்கி உள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிலைகுலைந்து போய் உள்ளார். அவருக்கு எதிராக மிக கடுமையான போராட்டங்கள் அந்த நாட்டில் கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது. போராட்டங்களை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் அங்கு தேசிய பாதுகாப்பு படையை களமிறக்கி உள்ளார். அதோடு அங்கு ராணுவத்தை களமிறக்க…
-
- 0 replies
- 418 views
-