உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
சீன ஊடகங்கள் மீது புதிய விதிமுறைகளை அமுல்படுத்துகின்றது அமெரிக்கா! சீன ஊடகங்கள் மீது அமெரிக்கா புதிய விதிமுறைகளை அமுல்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இயங்கும் 5 சீன ஊடகங்களுக்கே இந்தப் புதிய விதிமுறைகள் அமுலாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த 5 சீன ஊடகங்களும் சீன அரசினால் நடத்திச் செல்லப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய குறித்த சீன ஊடக அமைப்புகள், தமது சொத்துக்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/சீன-ஊடகங்கள்-மீது-புதிய-வ/
-
- 0 replies
- 291 views
-
-
அமெரிக்க அதிபரே இனி என் கடவுள்.... https://nypost.com/2020/02/19/indian-man-prays-to-life-size-statue-of-donald-trump-his-god/
-
- 2 replies
- 829 views
-
-
பிரெக்சிட்டிற்குப் பிந்தைய குடியேற்ற விதிகளில் பிரிட்டன் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி திறன் குறைவான தொழிலாளர்களுக்கு இனிமேல் பிரிட்டன் விசா வழங்கப்பட மாட்டாது. குறைந்த சம்பளத்தில் ஐரோப்பிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதை விட்டுவிட்டு, இருக்கும் தொழிலாளர்களின் திறனை வளர்ப்பதுடன் கூடுதல் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துமாறு தொழில் நிறுவனங்களை பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களும், இதர நாட்டவர்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார். திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் ஆண்டொன்றுக்கு 30 ஆயிரம் பவுண்டுகளில் இருந்து 25,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக…
-
- 0 replies
- 839 views
-
-
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரிலிருந்து கொரோனா என்ற கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவியதால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பாதிக்கப்பட்ட நபர் தும்மினாலோ, இருமினாலோ வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இவர்கள் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதன் காரணமாக 29 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது. சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமாக உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய சார்ஸ் வைரஸை விட …
-
- 0 replies
- 647 views
-
-
அமெரிக்க அதிபராக தேர்வானால் ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்றுவிடுவேன் என்று அந்நிறுவன அதிபர் மைக்கேல் ப்ளும்பெர்க் (Michael Bloomberg) அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் மைக்கேல் ப்ளும்பெர்க்கும் களத்தில் உள்ளார். நியூயார்க் நகர முன்னாள் மேயரான அவர், அதிபராக தேர்வு செய்யப்பட்டால், ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்றுவிடுவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.ப்ளும்பெர்க் உலக அளவில் செய்திகளையும், பைனான்சியல் தகவலையும் அளிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2019ம் ஆண்டில் மட்டும் சுமார் 71 ஆயிரத்து 593 கோடி ரூபாய் ( $10 billion in revenue) வருவாய…
-
- 0 replies
- 376 views
-
-
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவு: 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 50இற்க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த் 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என மொத்தம் 3,711 பேருடன் கடந்த 3ஆம் திகதி ஹொங்கொங்கிலிருந்து ஜப்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பல், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருந்து கடந்த மாதம் ஹொங்கொங்கில் இறங்கிய பயணிக்கு கொரோனா வைரஸ் தொற்ற…
-
- 0 replies
- 269 views
-
-
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுகொண்ட கொரோனா வைரஸ்! சீனாவில், வேகமாகப் பரவி வரும், கோவிட் 19 எனப்படும் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,004 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 74,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் ஹூபய் மாகாணம் வூஹான் நகரில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ‘கொரோனா’ பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தாக்கம் தொடர்ந்து நாட்டின் 34 மாகாணங்களில், 31 மாகாணங்களில் வேகமாகப் பரவியது. இதைத்தவிர, ஜப்பான், ஹொங்கொங் என, 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பு முதல் முதலில் தெரிய வந்து, நேற்றுடன் 50 நாட்களாகிறது. இதுவரை, சீனாவ…
-
- 0 replies
- 232 views
-
-
சீனாவின் உகான் நகர மருத்துவமனை இயக்குநர் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளார். உகானிலுள்ள உசாங் மருத்துவமனை இயக்குநரும், நியூரோ சர்ஜனுமான லியு ஜிமிங் வைரஸ் தாக்கி இன்று காலை உயிரிழந்தார். இதை சீன அரசு ஊடகமும் உறுதி செய்துள்ளது. உகானில் வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க அரசால் அறிவிக்கப்பட்ட 7 மருத்துவமனைகளில் உசாங் மருத்துவமனையும் ஒன்று. அந்த மருத்துவமனையின் இயக்குநரே கொரானா வைரஸுக்கு உயிரிழந்திருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. https://www.polimernews.com/dnews/100943/உகான்-மருத்துவமனைஇயக்குநர்-கொரோனாவைரஸுக்கு-பலி
-
- 1 reply
- 400 views
-
-
கனடாவில் இயற்கை எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மக்களுடன் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார். ஏற்றுமதி வசதிக்காக பிரிட்டிஷ் கொலம்பியாவின் கடற்கரையோரம் 670 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் எரிவாயு குழாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார பூர்வக்குடி மக்கள் 2 வாரங்களாக ரயில் முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பல இடங்களில் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பூர்வக்குடி மக்களை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு வலிறுத்தினார். https://www.polimernews.com/dnews/100929/இயற்கை-எரிவாயு-குழாய்அ…
-
- 2 replies
- 696 views
-
-
ஜப்பானில் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சோதனை அடிப்படையில் ஹெச்ஐவி நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விவரித்த ஜப்பான் அரசின் மூத்த செய்தி தொடர்பாளர் யோஷிகிடே சுகா, ஹெச்ஐவி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதற்கான சோதனைகளை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள 454 பேர் உட்பட ஜப்பானில் இதுவரை 520 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தாய்லாந்து மருத்துவர்கள் ஹெச்ஐவிக்கான மருந்துகளை கலந்து கொரானா பாதிப்புக்கு சிகிச்சை அளித்ததில் வெற்றி கண்டதாக தெரிவித…
-
- 0 replies
- 284 views
-
-
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்டது அமெரிக்கா! ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டுக்கு மக்களை மீட்டு, சொந்த நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளது அமெரிக்கா. இதற்கமைய குறிப்பிட்ட சுமார் 300 அமெரிக்கர்களை, சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அழைத்துச் சென்றுள்ளது. கப்பலில் இருக்கும் அமெரிக்கர்கள் சுமார் 400 பேரை மீட்க அமெரிக்கா 2 விமானங்களை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தது. எனினும் கப்பலில் இருக்கும் அமெரிக்கர்கள் சிலர், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலம் முழுமையாக முடிவடைந்த பின்னரே கப்பலில் இருந்து இறங்குவோம் என கூறி விட்டனர். அதேபோல், கொரோனா பாதிப்பு இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட அமெரிக…
-
- 0 replies
- 276 views
-
-
கொரோனாவின் கோரத் தாண்டவம் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரிப்பு சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு, இதுவரை, 72 ஆயிரத்து, 436 பேருக்கு இதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில், கடந்தாண்டு டிசம்பர் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் காரணமாக நாட்டின், 34 மாகாணங்களில் 31 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 18 முக்கிய நகரங்கள் உள்ள ஹூபய் மாகாணத்தில் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு முதலில் தென்பட்ட வூஹான் நகரிலேயே உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவுள்ளது. நேற்று ஒரே நாளில், 98 பேர் உயிரிழந்தனர். அத…
-
- 0 replies
- 505 views
-
-
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 70பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 70பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சர் கட்சுனோபு கடோ தெரிவித்துள்ளார். இதன்படி கப்பலில் உள்ள மொத்தம் 355 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கப்பலில் முதலில் ஒருவருக்கு மட்டுமே இருந்த இந்த வைரஸ் தொற்று, தற்போது நூற்றுக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், இந்த செயற்பாட்டுக்கு உலக நாடுகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இந்த கப்பலை ஜப்பானின் 8 துறைமுகங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. எங்கள் எல்லைக்குள் இந்த கப்பலை…
-
- 0 replies
- 179 views
-
-
சிரியாவின் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் அதிரடி இட்லிப் பகுதியில் சிரிய அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமைர்க்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் ஜனாதிபதி ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார் என்றும் இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களாக ரஷ்யாவின் உதவியுடன் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் போர் விமானங்களைக் கொண்டு கடுமையான தாக்குதல் நேற்று நடத்தப்பட்டதுடன், கிள…
-
- 0 replies
- 260 views
-
-
ஜேர்மனியில் மசூதிகள் புகலிடக்கோரிக்கையாளர்கள் அரசியல்வாதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த வலதுசாரி குழுவொன்றை சேர்ந்தவர்களை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆபத்தான நோக்கங்களை கொண்ட12 பேரை கைதுசெய்துள்ளதாகவும்,இக்குழுவை சேர்ந்த ஒருவர் தலைமறைவாகியுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிர வலதுசாரி அமைப்பொன்றை உருவாக்கிய சந்தேகத்தின் பேரில் நால்வரும் அவர்களிற்கு நிதிஉதவிகள் உட்பட ஏனைய உதவிகளை வழங்கிய சந்தேகத்தின் பேரில் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட்ஸ்அப் மூலமாக தகவல்களை பரிமாறி இவர்கள் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் பின்லாந்தில் உள்ள அமைப்பொன்றுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளன…
-
- 0 replies
- 390 views
-
-
ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 9பேர் சுட்டுக் கொலை! ஆப்கானிஸ்தான் தலைநகரில் வீடற்ற போதைப்பொருள் பாவனையாளர்கள் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காபூலில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாக்க இன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இருப்பினும் இதற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். “குரோஃப் மலையின் ஓரத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக” என்று காபூல் பொலிசாரின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் 2.5 மில்லியன் போதைப்பொருள் பாவனையாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, குறிப்பாக ஆப்கானிஸ்தானில் வளர்க்கப்படும் ஓபி…
-
- 0 replies
- 326 views
-
-
ஜெய்ஷ்-இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரைக் காணவில்லை- பாகிஸ்தான் அறிவிப்பு ஜெய்ஷ்-இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரையும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை என சர்வதேச தீவிரவாத நிதித் தடுப்பு கண்காணிப்பு அமைப்பிடம் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச தீவிரவாத நிதித் தடுப்பு அமைப்பின் சார்பில் கடந்த ஒக்டோபரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் கடந்த வருடம் மத்திய துணை இராணுவப் படை (Central Reserve Police Force) வீரர்கள் மீது புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40இற்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.…
-
- 0 replies
- 329 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரிப்பு உலகை அச்சுறுத்தி வரும் கொவைட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 105 போ் உயிரிழந்தனா். இதனையடுத்து, கொவைட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,765ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸ் கூடுதலாக 2,048 பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 70,548க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. எனினும் சீனாவில் ‘கொவைட…
-
- 0 replies
- 333 views
-
-
கொரோனா வைரஸ் – ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் (கோவிட் -19) காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம்(புதன்கிழமை) மாத்திரம் 242 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸினால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புக்கள் தினமும் அதிகரித்து வருவது சீன அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது. சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயிலேயே 242 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், நேற்றைய 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 840 பேர் புதிதாக நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவே…
-
- 12 replies
- 1.6k views
-
-
'டயமண்ட் பிரின்சஸ்' கப்பலில் பாதிக்கப்பட்டோர் தொகை 356 உயர்வு, தமது பிரஜைகளை அழைத்துவர அமெரிக்கா, கனடா தீர்மானம்! யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 'டயமண்ட் பிரின்சஸ்' கப்பலில் மேலும் 70 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையானது 356 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இதனால் ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 408 ஆக பதிவாகியுள்ளது. கப்பலில் உள்ளவர்களிடம் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் 21 ஆம் திகதி வரை பரிசோதனை முடிவுகள் வெளியானதும், கப்பலில் …
-
- 0 replies
- 451 views
-
-
ஜெர்மனியில் கலைநிகழ்வில் நடந்த துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்! ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பேர்லின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைத் தேட பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பேர்லின் பொலிஸார் டுவிற்றர் பக்கத்தில் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர். ஜேர்மனிய தலைநகரின் க்ரூஸ்பேர்க் (Kreuzberg) மாவட்டத்தில் உள்ள ரெம்பொட்ரோம் மண்டபத்தில் (Tempodrom hall) துருக்கிய கலை நிகழ்ச்சியின்போது மக்கள் அதிகளவாக கூடியிருந்த சமயத்தில் நேற்று இரவு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. …
-
- 0 replies
- 392 views
-
-
பிரித்தானியா செல்லும் தொழிலாளர்கள் மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்வது அத்தியாவசியம்! பிரெக்ஸிற் பிந்தைய விதிகள் நடைமுறைக்கு வருவதனால் தொழிலாளர்கள், வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவதற்கு மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பது அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசியம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா உத்தியோகப்பூர்வமாக வெளியேறினாலும் சிறிய மாற்றங்கள் கொண்டுவருவதற்கான காலம் டிசம்பர் 31 வரை நடைமுறையில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மக்கள் உறுப்பு நாடுகளுக்கு இடையில் சுதந்திரமாக செல்ல முடிகின்றமையினால் நாட்டிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் பெருமளவான பிரித்தான…
-
- 0 replies
- 436 views
-
-
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 1600-ஐ எட்டியது! உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எணிக்கை 1600 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் உருவாகியது என கூறப்படும் சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை மட்டும் 139 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஹூபேயில் கோவிட் -19 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தாக்கத்தினால் புதிதாக 1,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 11 ஆயிரம் பேர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதிக…
-
- 0 replies
- 303 views
-
-
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட் தாக்குதல் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தளபதி காசீம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கிலுள்ள 2 அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்ததாக ஈரான் அறிவித்தபோதிலும் அமெரிக்கா அதை மறுத்துவிட்டது. இந்நிலையில், பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏராளமான ரொக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை யார் நடத்தினர் என்பது குறித்தோ, அத்தா…
-
- 0 replies
- 255 views
-
-
கொரோனா வைரசால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் குடித்த நோய்க்கு கோவிட் 19 என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயேசஸ் கூறும்போது, புதிய நோய்க்கு கோவிட்-19' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், அதேவேளையில் உச்சரிக்கக் கூடியதாகவும், நோய்க்கு தொடர்புடையதாகவும் இந்தப் பெயர் உள்ளதாகவும் கூறினார். சி ஓ வி ஐ டீ என்ற இந்தப் பெயரில் சி ஓ என்பது கொரோனா என்ற வார்த்தையையும், வி ஐ என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், டீ என்பது டிசீஸ் எனப்படும் நோய் என்ற வார்த்தையை…
-
- 2 replies
- 594 views
-