உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
83 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழப்பு பற்றிய விவரம் ஏதும் வெளியாகவில்லை. அந்த பயணிகள் விமானத்தில் 83 பேர் பயணம் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.adaderana.lk/news.php?nid=125043
-
- 1 reply
- 711 views
-
-
பிரெக்ஸிற்றுக்கு பின்னர் விஞ்ஞானிகளுக்கு விரைவான வீசா வழங்கப்படும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் கீழ் சிறந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கணிதவியலாளர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்குத் தேவையான வீசா நடைமுறை துரிதப்படுத்தப்படவுள்ளது. உலகளாவிய திறமை விசா என அழைக்கப்படும் இந்தத் திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட இங்கிலாந்து அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. உலகின் மிக திறமையான மனிதர்களுக்கு பிரித்தானியாவின் கதவுகள் திறந்திருக்கும் என்பதை இந்த வீசாத் திட்டத்தின் ஊடாக வலியுறுத்த விரும்புவதாக பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர்,…
-
- 0 replies
- 439 views
-
-
கனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிப்பு! கனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய மருத்துவச் சங்க இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் தொற்றுநோய்கள், விபத்துகள், தற்கொலைகள் உள்ளிட்டவை இருமடங்காக அதிகரித்துள்ளமைக்கும் உணவு பற்றாக்குறையே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கனேடிய மக்களில் அதிகமானவர்கள் ஆரோக்கியமான உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்ளாத காரணத்தால் உளவியல் ரீதியான துயரத்துக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com…
-
- 3 replies
- 1.4k views
-
-
சமலின் கீழ் வருகிறது குடிவரவு மற்றும் குடியகழ்வு துறை குடிவரவு மற்றும் குடியகழ்வுத்துறை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்டிருந்தார். குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் முன்னர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தது, இனிமேல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கீழ் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சமலின்-கீழ்-வருகிறது-குட/
-
- 0 replies
- 387 views
-
-
கிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக கதர்னி செகலாரோப்லூ தேர்வு! கிரேக்க நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக, கதர்னி செகலாரோப்லூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிரேக்க நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள இவரை அந்நாட்டு பிரதமர் க்ரியாகோஷ் மிட்சோடகிசின் ஜனாதபதி பதவிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கதர்னியை கிரீஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் உட்பட 261 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதர்னிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் கிரேக்க குடியரசின் முதல் பெண் ஜனாதிபதியாக, 63 வயதான கதர்னி செகலாரோப்லூ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்வரும் …
-
- 0 replies
- 483 views
-
-
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் : வெளிநாடுகளுக்கும் பரவலாம் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் (Coronavirus) தற்போது அங்கு பல நகரங்களிலும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த வைரஸ் பரவும் வேகம் அசாதாரணமான வகையில் அதிகரித்து செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸினால் 200 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பீஜிங், ஷங்காய் மக்களும் அதில் அடங்குகின்றனர். வைரஸ் தாக்கத்தினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான், தாய்லாந்து, மற்றும் தென் கொரியா நாடுகளிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்கத்திற்கு இலக்கானோருக்கு நியூமோனியா காய்ச்சலுக்கான அறிகுறி ஏற்படும் எ…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
சிரியாவில் எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற முனைந்த ரஷ்யா- தடுத்து நிறுத்தியது அமெரிக்கா சிரியாவில் உள்ள எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற நினைத்த ரஷ்யப் படைகளை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரிய – துருக்கி எல்லையில் உள்ள மிலன் நகரில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களை அணுக முயன்றபோதே அவர்களை அமெரிக்கப் படை தடுத்து நிறுத்தியதாக பெயர் குறிப்பிடாத உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் தமது முயற்சியைக் கைவிட்டு இராணுவ நிலைகளுக்குச் சென்றதாகவும் இரு படைகளுக்கும் இடையே எந்தச் சண்டையும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரியாவிலிருந்து பெரும்பாலான படைகள் வெளியேறி இருந்தாலும் ஐ.எஸ்…
-
- 0 replies
- 485 views
-
-
டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை செனட் சபையில் ஆரம்பம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை செனட் சபையில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் உறுப்பினர்களுக்கிடையிலான விவாதம் இடம்பெற்று வருகின்றது. தலைமை நீதிபதி ஜோன் ரொபேர்ட்ஸ் முன்னிலையில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் வாதத்தை முன்வைத்து வருகின்றனர். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள ஜோ பிடெனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணையை நடத்தி மு…
-
- 0 replies
- 368 views
-
-
அமேசான் நிறுவனரின் போன் ஒட்டுக் கேட்பு.... சவுதி இளவரசர் மறுப்பு ! .det_ban_img img{width:100%;height:auto!important; max-height:400px;} உலகில் மிகப் பெரும் பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் செல்போனை ஹேக் செய்து ஒட்டுக் கேட்கப்பட்டதாக இளவரசர் முகமது பின் சல்மான் உளவு பார்த்ததாக பரவலாக செய்தி வெளியானது. இந்நிலையில் இதை சவூதி அரசு மறுத்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் சவூதி இளவசர் முகமது பின் சல்மான் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் ஆகியோர் நட்பின் அடிப்படையில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். …
-
- 0 replies
- 941 views
-
-
பொருளாதார வளர்ச்சியைப் போலவே நல்வாழ்வும் முக்கியமானது: ஸ்ரேர்ஜன் by : shiyani ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் போலவே அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரமும் முக்கியமாக இருக்க வேண்டும் என ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போலவே மக்களின் நல்வாழ்வையும் மூலாதாரமாகக் கேச பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலமாக வெற்றிகரமான தேசமாக இருப்பதன் அர்த்தத்தை ஸ்கொட்லாந்து மறுவரையறை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவீடான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்து மதிப்பிடுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஸ்ரேர்ஜன் மற்ற …
-
- 0 replies
- 379 views
-
-
பாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம் கனடாவில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் நேரத்தில் தாம் தொடர்ந்தும் பாப்பராசி எனப்படும் ஒளிப்படம் எடுப்பவர்களால் துன்புறுத்தப்படுவது குறித்து இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளனர். வன்கூவர் தீவில் உள்ள ஒரு பொது பூங்கா வழியாக மேகன் உலா வருவதைக் காட்டும் படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட பின்னர் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். மகன் ஆர்ச்சியுடனும் மற்றும் தனது இரண்டு நாய்களுடன் மேகன் நடந்து செல்லும்போது அந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தம்பதியினரின் சட்டவல்லுனர்கள் இந்த விடயம் குறித்துக் கூறுகையில்; இப்படங்கள் அவர்களது அனுமதியின்றி எடுக்கப்பட்டதாகக் கூறி…
-
- 1 reply
- 522 views
-
-
அணு ஆயுத பரிசோதனை முயற்சிகளை எந்த உடன்படிக்கையும் கட்டுப்படுத்தவில்லை – வட கொரியா! அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைப் பரிசோதனை முயற்சிகளை, எந்த உடன்படிக்கையும் கட்டுப்படுத்தவில்லை என வட கொரியா அறிவித்துள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) வட கொரியா இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அணு ஆயுதம் தொடர்பாக கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவிருந்ததாக கூறப்படும் பேச்சுவார்த்தை நடைபெறாமை தொடர்பாகவும் வடகொரியா அமெரிக்கா மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மிருகத் தனமானதும் மனிதாபிமானம் அற்றது எனவும் வட கொரியா தெரிவித்துள்ளது. http://athavannews.com/அணு-ஆயுத-பரிசோதனை-முயற்ச/
-
- 0 replies
- 332 views
-
-
இன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனை இன்டர்போலின் முன்னாள் தலைவர் Meng Hongwei இற்கு 13 ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன நீதிமன்றத்தினால் இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக நீண்டகாலம் சேவையாற்றிய அவர் பதவிக்காலத்தின் போது 2,90,000 அமெரிக்க டொலரை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரத்தில் குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். Meng Hongwei 2016ஆம் ஆண்டு இன்டர்போலின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். பிரான்ஸில் இருந்து சீனாவிற்கு சென்ற அவர் காணாமற்போனதைத் தொடர்ந்து ப…
-
- 0 replies
- 324 views
-
-
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்: ஈரான் மீது அமெரிக்கா சந்தேகம்! ஈராக் தலைநகர் பக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில், மூன்று ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை என்ற போதிலும், தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மூன்று கத்யுஷா ஏவுகணைகள் விழுந்ததை ஈராக் பொலிஸார் உறுதிப் படுத்தியுள்ளனர…
-
- 0 replies
- 400 views
-
-
லிபியா போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்த ஜேர்மனி பேச்சுவார்த்தை ஒரு முக்கிய படியாகும் – எர்டோகன்! லிபியா போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்த, ஜேர்மனியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை ஒரு “முக்கியமான படியாக” இருக்கும் என துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “பேர்லின் உச்சிமாநாட்டை ஒரு முக்கியமான படியாகவும், அரசியல் தீர்வாகவும் நாங்கள் பார்க்கிறோம்” என கூறினார். ஆனால் ஜனவரி 12 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் சமாதானத்திற்கான முயற்சிகளில் உள்ள முன்னேற்றத்தை குழப்பவாதிகளின் இலட்சியங்களுக்கு தியாகம் செய்யக்கூடாது” என்றும் தெரிவ…
-
- 0 replies
- 453 views
-
-
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் ஏமனில் 60 பேர் உயிரிழப்பு ! ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஏமனின் தெற் பகுதியில் உள்ள இராணுவ முகாம்களை தகர்ப்பதற்காக கிளரச்சியாளகர்கள் ட்ரோன்கள் (drones) மற்றும் பிளாஸ்டிக் ஏவுகணைகள் (ballistic missiles) பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாகர்களின் தாக்குதலில் பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளதோடு , சொத்துக்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அத்தோடு நேற்றைய தினம் ஏமனில் இராணு முகாம் மீது நட…
-
- 1 reply
- 425 views
-
-
ஈரான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு, அப் பிரதேசத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையும் ஒரு காரணம் – ட்றூடோ கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ சுட்டு வீழ்த்தப்பட்ட யூக்கிரேனிய விமானத்தில் பயணம்செய்து உயிரிழந்த அனைவருக்குமான ஞாபகார்த்த நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசும்போது கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனவரி 8 இல் நடைபெற்ற இச் சம்பவத்தின்போது, 57 கனடியர்கள் உட்பட 176 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். ஏவுகணைகள் ஏவப்படும் காணொளி “யூக்கிரேனிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவம் ஒரு பக்க விளைவாக (coll…
-
- 1 reply
- 1.1k views
-
-
உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை, ஏவுகணை தாக்குதல் நடத்தி தவறுதலாக சுட்டு வீழ்த்தியதை இரான் ஒப்புக்கொண்டுள்ள போதிலும் அந்த நாட்டின் அதி உயர் தலைவர், இரானின் பாதுகாப்பு படைகளை ஆதரித்து பேசியுள்ளார். உக்ரேனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு, இரானின் புரட்சிகர பாதுகாப்பு படை பொறுப்பேற்றுள்ளதாக கூறிய அவர் அந்தப் படை இரானின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளதாக கூறியுள்ளார். 2012க்கு பிறகு, எட்டு வருடங்களில் முதன்முறையாக இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்தினார். வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நட்த்திய அந்நாட்டின் தலைமை மதகுருவும் அதி உயர் தலைவருமான காமேனி, தொழுகைக்கு பிறகான உரையில் அமெர…
-
- 2 replies
- 1.2k views
-
-
ரஸ்யாவிற்கு புதிய பிரதமரை தெரிவு செய்தார் புட்டின் ரஸ்யாவின் புதிய பிரதமராக அரசியல் பின்னணியற்ற மிகைல் மிசுஸ்டின் என்பவரை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவு செய்துள்ள அதேவேளை ரஸ்யாவின் ஆளும் கட்சி புட்டினின் தெரிவிற்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளது. ரஸ்யாவின் வரிச்சேவை பிரிவின் தலைவராக பணியாற்றி வரிச்சேகரிப்பில் பாரிய முன்னேற்றத்தினை வெளிப்படுத்தியவர் மிகைல் மிசுஸ்டின் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை புட்டினின் நியமனம் குறித்து ஆராயவுள்ளதாக ரஸ்ய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. கிரெம்ளினிற்கு ஆதரவான நாடாளுமன்றத்தின் கீழ் சபை இந்த நியமனத்திற்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது. ரஸ்யா அரசாங்கம் நேற்று தீடீர் என இராஜினாமா செய்ததன் பின…
-
- 0 replies
- 602 views
-
-
2020ஆம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டது பிரபல பத்திரிகை கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற அம்சங்களை முன்வைத்து, தலைசிறந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2020ஆம் ஆண்டிற்கான அதன் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள் வருமாறு, இயற்கையான சூழலில் வாழக்கூடிய நாடுகள் பட்டியலில், சுவீடன் முதலிடத்திலும் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்திலம் பின்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. மிகவும் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும் ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளதோடு சீனா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதேவேளை, கல்வியில் சிறந்த நாடுகளாக, அமெரி…
-
- 0 replies
- 763 views
-
-
184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் உலகில் மிகக்கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட நாடு சவுதி அரேபியா. அங்கு பயங்கரவாதத்தில் ஈடுபடுவது, அரசுக்கு எதிராக செயல்படுவது போன்றவை கடும் குற்றச் செயல்களாக கருதப்படுகின்றன. இதில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ரிப்ரீவ்’ தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு அளித்துள்ள புள்ளி விவரப்பட்டியலில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 88 பேர் உள்நாட்டினர் என்றும், 90 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் எந்த நாட…
-
- 0 replies
- 635 views
-
-
ரஷ்ய பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியுள்ளது! ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பரிந்துரைத்த சில மணி நேரங்களில் ரஷ்ய பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அந்நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்த சந்தர்ப்பம் அளிப்பதே இதற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியை அருகில் வைத்துக்கொண்டு பிரதமர் அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். பிரதமரின் இந்த தீர்மானத்திற்கு ரஷ்ய ஜனாதிபதியும் நன்றி தெரிவித்துள்ளார். விளாடிமிர் புட்டின் பரிந்துரைத்துள்ள அரசியலமைப்பு சீர்திர…
-
- 0 replies
- 539 views
-
-
பொங்கல் இந்து பண்டிகை; இஸ்லாமிய மாணவர்கள் கொண்டாட கூடாது' - மலேசிய அரசின் சுற்றறிக்கையால் சர்ச்சை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAQABIZ VIA GETTY IMAGES Image captionகோப்புப்படம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தி மலேசிய கல்வித்துறை சார்பி…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
தங்களிடம் அதிகமான அதிகாரம் இருக்கும்போது அமேரிக்கா ஆணவத்தோடும் அறியாமையோடும் செயல்படுவதாக இரானின் வெளியுறவு துறை அமைச்சர் ஜவாத் ஜரீஃப் குற்றம் சாட்டியுள்ளார். "இராக்கிய இறையாண்மையை மீறி, எங்கள் தலைமை தளபதியை அவர்கள் படுகொலை செய்தபோது, இராக்கில் உள்ள வீதிகளில் மக்கள் நடனமாடுவார்கள் என அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ ட்வீட் செய்தார். இது அவரின் அறியாமை மற்றும் ஆணவத்தை காட்டுகிறது. நீங்கள் அறியாமை மற்றும் ஆணவத்துடன் செயல்படும்போது, அது அழிவாக மாறுகிறது,’’ என ரைசினா டைலாக் 2020 நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியத் தலைநகர் புது டெல்லி வந்துள்ள ஜவாத் ஜரீஃப் கூறியுள்ளார். இரானின் அண்டை நாடான இராக்குக்கு காசெம் சுலேமானீ அரசுமுறை பயணம் மேற்கொண்டியோருந்தபோது, இராக் தல…
-
- 0 replies
- 591 views
-
-
“இன்ஷா அல்லாஹ் ” என்கிற அரபு வார்த்தையை ஜெர்மனியின் மிகவும் அதிகாரப்பூர்வ அகராதியான டுடென் அங்கீகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அரபு வார்த்தையான ‘இன்ஷல்லா’ இப்போது ஜெர்மன் வார்த்தையாக கருதப்படுகிறது. இந்த வெளிப்பாடு ஜெர்மன் மொழியின் மிகவும் பிரபலமான அகராதியான டுடன் ஊடாக வெளிவந்துள்ளது.வந்துள்ளது. புதிய நுழைவு அகராதியில் “இன்ஸா அல்லாஹ் ” என்று உச்சரிக்கப்படுகிறது. இது தற்போது அதன் டிஜிட்டல் பதிப்பில் தோன்றுகிறது, மேலும் இது அச்சிலும் வெளியிடப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இன்ஷால்லா’ என்பது ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படுவது போல, ‘அல்லாஹ்வின் விருப்பம்’ அல்லது ‘அல்லாஹ் நாடினால் ’ போன்ற எதிர்கால நிகழ்வைப் ப…
-
- 0 replies
- 608 views
-