உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
ஆப்பிரிக்காவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்தாவிடில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ஐநா எச்சரித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் உரையாற்றிய உணவு மற்றும் வேளாண் அதிகாரி கீத் க்ரெஸ்மேன்(Keith Cressman), உள்நாட்டு போரால் ஏற்கனவே உணவு தட்டுப்பாட்டை சந்தித்து வரும் சூடான் நோக்கி வெட்டுக்கிளி படை நகர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். பென்சில்வேனியா, நியூயார்க், நியூஜெர்சியில் உள்ள மொத்த மக்களுக்கு தேவையான ஒரு வேளை பயிர்களை இந்த வெட்டுக்கிளி கூட்டம் ஒரே நாளில் தின்று சேதப்படுத்தக்கூடியவை என்றும் இதனால் ஆப்ரிக்க நாடுகளில் உணவு தட்டுப்பாடு தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஐநா அதிகாரி கீத் தெரிவித்துள்ளார். மழைக்கு பிறகு இந்த வெட்டுக்க…
-
- 0 replies
- 367 views
-
-
“பாலத்தீனம் மீதான ஒடுக்குமுறை நீடித்தால் மலேசியா அமைதி காக்காது” : மகாதீர் சீற்றம். பாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையைக் கண்டு மலேசியா இனியும் அமைதி காக்காது என பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். அவ்வாறு அமைதி காத்தால் இஸ்ரேலியர்களால் கொல்லப்படும் பாலத்தீனர்களின் ரத்தமானது நம் கைகளிலும் படிந்துவிடும் என அவர் கூறியுள்ளார். உலகெங்கிலும் பாலத்தீனத்துக்கு ஆதரவாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசியபோதே மகாதீர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “நாங்கள் (மலேசியா) கடமை உணர்வுடன் உள்ளோம். தங்களை நீதி மற்றும் சுதந்திரத்தின் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலம் மிக்க நாடுகள், அட்ட…
-
- 0 replies
- 341 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: சீனா தகவல் உலகையே அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சீனத் தேசிய சுகாதார அணையம் தெரிவித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரு நாட்களாகக் குறைந்துள்ளதனை, சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரி குவோ யன் ஹொங் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஹூபெய் மாநிலத்தில் வூஹான் நகரைத் தவிர பிற நகரங்களுக்கும் சீனாவின் 16 மாநிலங்களுக்கும் இடையே ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியிலான உதவி முறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹூபெய் மாநில நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை ஆற்றல் வலுப்படுத்தப்படும்’ என கூற…
-
- 1 reply
- 619 views
-
-
கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1016 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இலங்கை, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. அதேவேளை, 40 ஆயிரத்து 640 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. …
-
- 0 replies
- 386 views
-
-
உலகையே அச்சுறுத்தியுள்ள நாவல் கொரோனா வைரஸ் நிமோனியா தொடர்பில் ஒரு சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளுக்கமைய வுஹான், ஹூபே மாகாணம் மற்றும் நாடு முழுவதும் நாவல் கொரோனா வைரஸ் நிமோனியா காரணமாக பாதிக்கப்பட நோயாளர்களில் குணமடைந்தவர்களின் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இன்றைய தரவு பகுப்பாய்வின்படி, நாடு முழுவதும் உள்ள நாவல் கொரோனா வைரஸ் நிமோனியா நோயாளர்களில் குணமடைந்தவர்களின் விகிதம் 8.2 சதவீதமாக உள்ளதாகவும் இதுவே ஜனவரி 27 அன்று 1.3 சதவீதமாக இருந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹூபே மாகாணத்தில் குணமடைந்தவர்களின் விகிதம் ஜனவரி 27 அன்று 1.7 சதவீதத்திலி…
-
- 0 replies
- 985 views
-
-
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்து வந்த புளொக்கர் ஒருவர் பிரான்ஸ் ஹோட்டலொன்றில் கழுத்துவெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம்ரான் அலைவ் என்ற நபரே நெஞ்சில் பல காயங்களுடனும் கழுத்துவெட்டப்பட்ட நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் காவல்துறையினர் இது அரசியல் கொலையென தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டுள்ள நபர் பல வருடங்களாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தனது மிகவும் பிரபலமான புளொக் மற்றும் யூடியுப்பில் கடுமையாக விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு புனைபெயர்களில் இவர் புட்டினிற்கு எதிரான விமர்சனங்களை முன்னெடுத்துவந்தார். கொலை செய்யப்பட்ட நபருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நபர் ஒருவர் கா…
-
- 0 replies
- 344 views
-
-
சீனாவில் கொரோனாவின் உச்சம்: ரோபோக்களைப் பயன்படுத்தும் அதிரடித் திட்டம் சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, உணவுகளைக் கொண்டுசெல்வதற்கு மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 800இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 நாடுகளுக்கும் இது பரவியுள்ளது. எனவே, வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருப்பதால் இனிவரும் காலத்தில் அதிகமானோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சீனாவில் பல மருத்துவமனைகள் ரோபோக்களை பணிக்கு அமர்த்தியுள்ளன. மருத்துவ தாதியர்கள் நோயாளிகளுக்கு மருந்து, மாத்…
-
- 0 replies
- 430 views
-
-
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – 908 பேர் உயிரிழப்பு உலகை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 908ஆக அதிகரித்துள்ளது. இதில் சீனாவில் மட்டும் 900 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் 2003ல் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் ஹுபே மாகாணத்தில் மட்டும் 871 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 40,000க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஹுபே மாகாணத்தில் மட்டும் 29,631 பேரும் குறிப்பாக வூஹான் நகரில் 16,902 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை கண…
-
- 0 replies
- 267 views
-
-
கருத்தடை மருந்துகளின் பற்றாக்குறை குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை கருத்தடை மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் கருக்கலைப்பு அபாயங்கள் ஏற்படுத்துகின்றன என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விடயம் குறித்து மருத்துவ நிபுணர்கள் அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கருத்தடை மருந்துகளின் விநியோகப் பற்றாக்குறை நாடு முழுவதும் கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது. அன்றாடம் உள்ளெடுக்கும் மாத்திரைகள் மற்றும் நீண்டகால கருத்தடை ஊசி மருந்து ஆகியவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கருத்தடை மருந்துகளின் பற்றாக்குறை எதனால் ஏற்பட்டது என்பது தற்போதுவரையிலும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் ஒரு முக்கிய மூலப்பொருள் இப்போது மீண்…
-
- 0 replies
- 390 views
-
-
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 811ஆக அதிகரிப்பு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் சீனாவில் 80இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சீனா முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அத்தோடு 25இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளமையால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் வைத்தியசாலைகள் அனைத்தும் நோயாளிக…
-
- 0 replies
- 333 views
-
-
தாய்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழப்பு – பலர் காயம்! தாய்லாந்தின் நகோன் ரற்சசிமா (Nakhon Ratchasima) என்ற நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தின் இராணுவச் சிப்பாய் ஒருவராலேயே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த இராணுவச் சிப்பாய் முதலில் தன்னுடன் வந்த இராணுவச் சிப்பாய் ஒருவரையும் மேலும் இருவரையும் சுட்டுக் கொலைசெய்த பின்னர் வணிக வளாகம் ஒன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். ரேர்மினல் 21 ஷொப்பிங் சென்றர் (Terminal 21 shopping centre) என்ற வணிக வளாகத்துக்கு காரில் வந…
-
- 1 reply
- 562 views
-
-
மலேசிய தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லையா? அங்கு தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் என்ன சிக்கல்? மலேசியாவில் சீனர்கள் ஒரு விதமாகவும், தமிழர்கள் ஒருவிதமாகவும் நடத்தப்படுகிறார்களா?
-
- 0 replies
- 371 views
-
-
சிரியாவின் ஏவுணை தாக்குதல் ; நூலிழையில் தப்பிய பயணிகள் விமானம்.! சிரியாவில் பயணிகள் விமானம் ஒன்று அந்நாட்டு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் கிட்டத்தட்ட தாக்கப்படும் நிலைக்கு சென்றதாகவும், பிறகு விமானத்தை வலுக்கட்டாயமாக திசைதிருப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. டமாஸ்கஸில் அந்த விமானம் தரையிறங்கும் சமயத்தில், இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் சிரியாவின் விமான தடுப்பு அமைப்பு இந்த தாக்குதலை தொடுத்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த ஏர்பஸ் 320 விமானம் பின்னர் வடமேற்கு சிரியாவில் உள்ள ஹமீமிம் என்ற ரஷ்ய விமான தளத்திற்கு திருப்பி விடப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அ…
-
- 1 reply
- 586 views
-
-
24 மணித்தியாலத்தில் 81 பேர் பலி : உலகை உலுக்கும் கொரோனாவினால் பலியானோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரிப்பு உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலகளாவிய ரீதியில் சுமார் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுஹானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சீனா உட்பட உலக நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. சுமார் 25 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தற்போது கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு ந…
-
- 0 replies
- 383 views
-
-
தாய்மார்களை போலவே தந்தையருக்கும் 7 மாதகாலம் ஊதியத்துடன் கூடிய பேறு கால விடுமுறை வழங்க பின்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது. தந்தையர்களும் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை ஊக்குவிக்கும் வகையிலும், பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தும் வகையிலும் இந்த திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அந்நாட்டில் 2 மாதம் 14 நாட்கள் வரை தந்தையருக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பேறு கால விடுப்பை 7 மாதங்களாக நீட்டிக்கும் புதிய முறை செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி தாய் - தந்தை ஆகிய இருவருக்கும் ஒருங்கிணைந்த பேறு கால விடுமுறை 14 மாதங்களாக உயர்த்தப்பட உள்ளது. https://www.polimernews.com/dnews/99627/தாய்மார்களை-போலவ…
-
- 6 replies
- 1.1k views
-
-
காசிம் அல்-ரிமி கொலை .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 314 Views யேமன் அல்-கொய்தா தலைவர் காசிம் அல்-ரிமி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். யேமனில் அமெரிக்காவினால் கடந்த வாரம் நடாத்தப்பட்ட தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2015 ஆம் ஆண்டு முதல் யேமன் அல்-கொய்தா குழுவிற்கு காசிம் அல்-ரிமி தலைமை தாங்…
-
- 0 replies
- 376 views
-
-
கொரோனா வைரஸ் குறித்து முதன்முதலில் எச்சரித்த சீன மருத்துவர் உயிரிழப்பு சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து முதல் முதலாக எச்சரிக்கைவிடுத்த சீன மருத்துவர் லீ வென்லியாங் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது http://tamil.adaderana.lk/news.php?nid=125478
-
- 0 replies
- 355 views
-
-
குடியுரிமை குறித்த மேன்முறையீட்டின் முதற்கட்டத்தை ஷமிமா பேகம் இழக்கிறார் by : S.K.Guna ஐஎஸ் மணப்பெண் ஷமிமா பேகம், தனது குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு எதிரான மேன்முறையீட்டின் முதற்கட்டத்தை இழந்துள்ளார். 20 வயதான ஷமிமா பேகம் இஸ்லாமிய அரசில் சேர்வதற்காக 2015 ஆம் ஆண்டு தனது 15 வயதில் லண்டனை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவர் பெப்ரவரி 2019 இல் சிரிய அகதிகள் முகாமில் கண்டுபிடிக்கப்பட்டார். முன்னாள் உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் கடந்த ஆண்டு பெப்ரவரி இறுதியில் ஷமிமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமையை ரத்துச் செய்தார். திருமதி ஷமிமா பேகம், தேசமின்றி விடப்படாததால் அவருடைய குடியுரிமையைப் பறிக்க முடியும் என்று நீதிமன்றம் த…
-
- 0 replies
- 586 views
-
-
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரிப்பு! சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயில் உருவான உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம்(வியாழக்கிழமை) மாத்திரம் 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் புதிதாக 3,141 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றினால் இதுவரை 31,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த 73 பேர்களில் 69 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்ட 30,000 பேரில் சுமார் 4,800…
-
- 0 replies
- 340 views
-
-
அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை இரத்து செய்வதாக அறிவித்தது சீனா! அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை இரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது. சுமார் 5 இலட்சத்து முப்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட வரிகளே இவ்வாறு இரத்து செய்யப்படவுள்ளன. நீண்ட காலமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவிய நிலையில் அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகளை சீனா விதித்து வந்தது. இந்த நிலையில் வர்த்தகப்போர் முடிவுக்கு வந்து கடந்த மாதம் அது தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் முதல் கட்டமாக கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்ட ஆயிரத்து 700 இற்கும் அதிகமான அ…
-
- 0 replies
- 249 views
-
-
ஐக்கிய அமெரிக்காவின் இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான, கட்சிகளின் பிரதிநிதிகளிடையேயான முதலாவது வாக்கெடுப்பு நேற்று முன்தினம் ஐயோவாவில் இடம்பெற்றிருந்த நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் செனட்டரான பேர்ணி சான்டர்ஸை விட ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் தென் பென்ட் நகர முன்னாள் மேயரான பீற் புடிச்சிச் நேற்று குறுகிய முன்னிலையை கொண்டிருப்பதுடன், 71 சதவீதமான நகரங்களின் வாக்களிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் நான்காமிடத்தில் காணப்படுகின்றார். இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்யும் ஐந்து மாத நடைமுறையை ஆரம்பிக்கும் முகமாக ஐயோவாவில் 1,600 பொது இடங்களில் குற…
-
- 2 replies
- 723 views
-
-
பாகிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டு அவர்களின் மத சுதந்திரம் பறிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ (Mike Pompeo) குற்றம் சாட்டி உள்ளார். 27 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச மத சுதந்திர கூட்டணி அமைப்பை (International Religious Freedom Alliance)வாஷிங்டனில் துவக்கி வைத்து பேசுகையில் அவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார். பாகிஸ்தானைப் போன்று நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், பர்மாவில் முஸ்லீம்களும், ஈராக்கில் யசீதிகளும் தீவிரவாதிகளாலும், வன்முறையாளர்களாலும் தாக்கப்படுவதாக அவர் கூறினார். பாகிஸ்தானில் இந்து வழிபாட்டுத் தலங்கள் அடித்து நொறுக்கப்படுவதுடன், இந்துப் பெண்கள் கட்டாய மத மாற்றத்திற்கு பின் திருமணம் செய்யப்படுவதாக அடிக…
-
- 0 replies
- 928 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றால் பிறந்து 30 மணி நேரமே ஆன குழந்தைக்கு பாதிப்பு Getty Images சித்தரிக்கும் படம் சீனாவில் பிறந்து 30 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உண்டாகியுள்ளவர்களில் மிகவும் இளம் வயது இந்தக் குழந்தைக்குத்தான். கொரோனா வைரஸ் பரவலின் மூலமாக இருக்கும் வுஹான் நகரில் பிப்ரவரி 2ஆம் தேதி இந்தக் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு முன்னர் இந்தக் குழந்தையின் தாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா எவ்வாறு பரவியது என்பது இதுவரை தெரியவில்லை. புதன்கிழமை இந்தக் குழந்தை 3.25 கிலோ எடை இருந்ததாகவும், …
-
- 0 replies
- 459 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவி தப்பியது மற்றும் பிற செய்திகள் Getty Images டொனால்டு டிரம்ப் கருத்தியல் ரீதியாக அமெரிக்காவையே இரண்டாக பிரிய வைத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. அமெரிக்காவின் 45ஆவது அதிபரான டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில் நடந்த, டிரம்புக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருத்தல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளில் முறையே 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் தோல்வி அடைந்தது. இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர்…
-
- 1 reply
- 904 views
-
-
டிசம்பர் மாதம் தொடக்கத்தில் கொரனாவை கண்டறிந்த மருத்துவரை இது குறித்து பேச கூடாது என சீன அரசு மிரட்டியுள்ளது. தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சீனாவின் வூகான் நகரை சேர்ந்த மருத்துவர் லி வென்லியாங் (Li Wenliang) வூகான் மத்திய மருத்துவமனையில் இதய மருத்துவராக பணியாற்றி வருகிறார். டிசம்பர் மாதம் தொடக்கத்தில் அந்த மருத்துவமனையில் காய்ச்சலால் 10 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை சோதித்த லி வென்லியாங் அது சார்ஸ் குடும்ப வகையை சேர்ந்த வைரஸ் என்பதை கண்டறிந்து அதிர்ந்துள்ளார். இதனை தனது மருத்துவர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குழுவிலும் பகிர்ந்துள்ளார். லி வென்லியாங் ரிப்போர்ட்டினை பா…
-
- 1 reply
- 981 views
-