உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26870 topics in this forum
-
பிரான்ஸ் நாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்நாட்டில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஓய்வூதிய திட்டத்தால், ஏராளமான ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே வேலை பறிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு எதிராக நடந்த போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது பட்டாசுகளை வீச, போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி, பெப்பர் ஸ்பிரே அடித்ததுடன், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். https://www.polimernews.com/dnews/91610/பிரான்சில்-புதிய-ஓய்வூதியதிட்டத்துக்கு-எதிரானபோ…
-
- 1 reply
- 450 views
-
-
பாரீஸ் :இந்தாண்டில் உலகெங்கும் 49 பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கடந்த 16 ஆண்டுகளில் இது மிகவும் குறைவு. ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரீஸில் இருந்து செயல்படும் எல்லைகள் இல்லாத நிருபர்கள் என்ற அமைப்பு 2019ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டில் உலகெங்கும் 49 பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் ஏமன், சிரியா, ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு போர்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது கொல்லப்பட்டனர். கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 80 பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளனர். https://www.dinamalar.com/new…
-
- 0 replies
- 614 views
-
-
பிரித்தானிய தேர்தலில் அமோக வெற்றியீட்டி, மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன் தமிழ் மக்களிற்கு வீடியோ வழியாக நன்றி தெரிவித்துள்ளார். பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வேடிவ் கட்சி நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியது. வெற்றியீட்டியதும், தமிழ் மக்களிற்கு நன்றி தெரிவிக்கும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்தார். பிரித்தானிய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் தமிழ் சமூகம் ஆற்றும் அளப்பரிய பணியை பாராட்டிய ஜோன்சன், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியுள்ளார். http://www.pagetamil.c…
-
- 29 replies
- 3k views
-
-
தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரஃப்பிற்கு பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், தற்போது இவர் உடல்நலக் குறைவால் டுபாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/71227
-
- 1 reply
- 476 views
-
-
ராணுவ தளத்துக்குள் நுழைய முயன்ற 2 சீன தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், வெர்ஜினியாவின் நோர்போல்க் (near Norfolk, Virginia) அருகே உள்ள ராணுவ தளத்துக்குள் செப்டம்பர் மாதம் சீன தூதரக அதிகாரிகள் 2 பேர் தங்களது மனைவியருடன் நுழைய முயன்றதாகவும், இதையடுத்து 2 பேரும் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 2 பேரும் ராணுவ தள பாதுகாப்பை உளவு பார்க்கும் பொருட்டு வந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dne…
-
- 0 replies
- 419 views
-
-
மெக்ஸிகோவில் கண்டெடுக்கப்பட்ட 50 சடலங்களையும் அடையாளங் காணும் பணிகள் தீவிரம்! வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் ஓரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 50 சடலங்களையும் அடையாளங் காணும் பணிகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தற்போதுவரை, இதுவரை 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் 12 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முன்னர் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் என கூறப்டுகின்றது. தடயவியல் நிபுணர்கள் மீதமுள்ள நபர்களின் பாலினத்தை அல்லது மரணத்திற்கான காரணத்தை இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும், அதற்கான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். …
-
- 0 replies
- 435 views
-
-
ஈரானில் கடந்த மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான மூன்று நாட்கள் அடக்குமுறையின்போது குறைந்தது 304 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, 15 வயதான, 17 வயதான இரண்டு சிறுவர்கள் உள்ளடங்கலாக 208 பேர் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மன்னிப்புச் சபை மதிப்பிட்டிருந்தது. இந்நிலையில், குறித்த எண்ணிக்கைகளை அப்பட்டமான பொய்கள் என ஈரான் நிராகரித்துள்ளது. தேசியளவிலான ஆர்ப்பாட்டங்கள் கடந்த மாதம் 15ஆம் திகதி பரவியதையடுத்து மோசமான அடக்குமுறையை ஈரான் அதிகாரிகள் மேற்கொண்டதாக அறிக்கையொன்றில் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஈரானின் மோசமான அடக்குமுறை குறித்து பேசுவதைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான ஆர்ப்பா…
-
- 0 replies
- 389 views
-
-
மேற்கு ஆப்பிரிக்கா நோக்கி 20 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் கடத்தப்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் நைஜீரிய கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த எம்.டி. டியூக் ((MT Duke)) என்ற சரக்குக் கப்பல் ஒன்றை கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அதில் இருந்தவர்களில் 20 மாலுமிகள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் கடத்தப்பட்டதை நைஜீரிய அரசு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது கவலையைத் தெரிவித்துள்ளதார். கடத்தப்பட்ட மாலுமிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஹாங்காங்கில் இருந்து சென்ற கப்ப…
-
- 0 replies
- 319 views
-
-
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நினைப்பவர்கள், இனி கட்டாயம் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை ஏற முயன்றவர்களில், இந்தாண்டில் மட்டும் 9 பேர் மலை ஏறும்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இத்தகைய உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் இனி, கட்டாய காப்பீடு திட்டம், மருத்துவரால் அளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை ஆகியவற்றை சமர்பித்தால் மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்படும் எனவும், அடுத்த மலையேறும் சீசன் முதல் இத்திட்டம் நடமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/93103/எவரெஸ்ட்-சிகரத்தில்-ஏறமருத்துவ-சான்றிதழ்-அவசியம்--நேபாள-அரசு
-
- 0 replies
- 234 views
-
-
மெக்ஸிக்கோவின் மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் (Guanajuato) கடந்த ஒரு வார காலப் பகுதியில் 12 பொலிஸ் அதிகாரிகள் பாதாள உலக குழுவினரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான மரியா சோனியா அரேலானோ என்ற 47 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரி, அவரது கணவர் மற்றும் மகனுடன் இராபுவாடோ என்ற நகரில் அவரது வீட்டில் வைத்து ஆயுதமேந்தியவர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டார். அவரது 27 வயதுடைய மகன் மற்றும் கணவர் விடுவிக்கப்பட்ட நிலைலயில் அவர் உயிரிழந்த நிலையில் வீதியோரத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/71170
-
- 1 reply
- 573 views
-
-
இரண்டு மணித்தியாலங்களில் 123 பதிவுகள் – தன்னிலை விளக்கமளிக்கும் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு மணித்தியாலங்களில் தனது டுவிட்டர் பக்கத்தில் 123 பதிவுகளை பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பினை பதவியை விட்டு நீக்குவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் 123 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல எனவும், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் ட்ரம்ப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டுவிட்டரை தமது டைப் ரைட்டர் என அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி தனக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதில் வழங்கியுள்ளார். அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தான் மேற்கொண்ட நடவடிக்கைகள…
-
- 0 replies
- 256 views
-
-
படத்தின் காப்புரிமை KATE MONTANA, INATURALIST CREATIVE COMMONS Image caption ஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் உயிரினம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியை ஒட்டியுள்ள கடற்கரையில் ஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தென்பட்டன. இந்த உயிரினங்கள் 'யுரிசெஸ் காப்போ' என்றழைக்கப்படும் பருமனான புழுக்கள் ஆகும். இந்த வகை புழுக்கள் மண்ணுக்குள் புதைந்து கொள்ளும். சமீபத்தில் வந்த புயலின் காரணமாக சான்ஃப்ரான்சிஸ்கோவின் வடக்கு பகுதியிலுள்ள ட்ரேக்ஸ் கடற்கரையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த உயிரினங்கள் காணப்பட்டன. …
-
- 1 reply
- 664 views
-
-
சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரை மோசடியில் குற்றவாளியாக நேற்று இனங்கண்டுள்ள அந்நாட்டு நீதிமன்றமொன்று அவரை இரண்டாண்டுகளுக்கு சீர்திருத்தல் மய்யமொன்றுக்கு அனுப்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீருக்கு 75 வயதென்பதால், அதைக் கருத்திற் கொண்டே சிறைச்சாலையை விடுத்து அவர் சீர்திருத்த மய்யத்துக்கு அனுப்பப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரின் 30 ஆண்டுகள் ஆட்சிக்கெதிரான மாதக்கணக்கான வீதி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இராணுவத்தால் அவர் பதவி அகற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீர் பதவியிலிருந்து அகற்றப்படும்போது கண்டுபிடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள், சூடானிய பவ…
-
- 0 replies
- 391 views
-
-
இத்தாலியின் பிருந்திசி (Brindisi) நகரில் 2ம் உலகப் போரின்போது பிரிட்டனால் வீசப்பட்ட வெடி குண்டை செயலிழக்கம் செய்யும் பணி நடைபெறுவதையொட்டி, அந்நகரில் வசிக்கும் 54 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். பிருந்திசி நகரில் 1941ம் ஆண்டு வீசப்பட்ட குண்டு, அண்மையில் அங்குள்ள திரையரங்க சீரமைப்பு பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரோபோட் மூலம் அதை செயலிழக்கம் செய்யும் பணியில் இத்தாலி ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கையாக குண்டு கிடக்கும் பகுதியிலிருந்து 1617 மீட்டர் சுற்றளவு பகுதியில் வசிக்கும் 54 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். அதேபோல் உள்ளூர் விமான நிலையம், ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/92954/2ம்-உ…
-
- 0 replies
- 337 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவியை விட்டு நீக்குவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இரண்டு மணி நேரத்தில் 123 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட டிரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல என்றும், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும் டிரம்ப் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டிவிட்டரை தமது டைப் ரைட்டர் என அறிவித்த அமெரிக்க அதிபர் தமக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதில் அளித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். தமக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களின் நம்பகத்தன்மையை விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் இனி பதவி நீக்கம் …
-
- 0 replies
- 574 views
-
-
பப்புவா நியூ கினியாவின் ஓர் அங்கமாக இருந்து வரும் போகைன்வில், தனி சுதந்திர நாடாக பிரியவுள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்த பிராந்தியமான போகைன்வில்லில், இன ரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதாகவும் கூறி, தனி நாடு கோரிக்கை எழுந்தது. இதற்காக 1988ஆம் ஆண்டு முதல் 1997 வரை நடந்த உள்நாட்டு போரில் சுமார் 20ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 2005ஆம் ஆண்டு போகைன்வில் தன்னாட்சி அதிகாரத்தை பெற்ற நிலையில், தனி நாடு அமைப்பது தொடர்பாக அண்மையில் மக்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தனி நாடு கோரும் முடிவுக்கு ஆதரவாக ஏராளமானோர் வாக்களித்தனர். இதனால் போகைன்வில் புதிய தனி நாடாக அமையவுள்ளது. போகைன்வில்லின் மக்கள் தொகை, சுமார் மூன்று லட்சம் பேர…
-
- 10 replies
- 1.8k views
-
-
துருக்கிக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க அனுமதி! துருக்கிக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் கொள்கைகளுக்கான குழு இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிரியாவில் துருக்கியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை கொள்வனவு செய்தமை ஆகியவற்றுக்காக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விடயத்தை முழுமையான செனட் உறுப்பினர்கள் அடங்கிய சபையில் வாக்கெடுப்புக்கு விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அமெரிக்காவிற்கும், துருக்கிக்கும் இடையிலான உறவில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/துருக்கிக்கு-எதிராக-பொரு/
-
- 1 reply
- 525 views
-
-
ஐரோப்பிய நாடான, பிரிட்டனில், நேற்று நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால், கடும் தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஜெரமி கார்பின் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக, போரிஸ் ஜான்சன் உருவாக்கிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு, பார்லி.,யில் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை. அதனால், ஏற்கனவே அறிவித்தபடி, அக்., 31ல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடியவில்லை.இதன் காரணமாக, பார்லி.,யை கலைத்து விட்டு, முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக, போரிஸ் ஜான்…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவின் பொதுத்தேர்தல் இன்றைய தினம் நடை பெறுகின்றது. இம்முறை அந்த நாட்டின் பொதுத் தேர்தலில் இலங்கையை பகடைக் காயாக வைத்தே இரண்டு பிரதான கட்சிகள் தேர்தல் காலத்தில் குதித்துள்ளன. அதனடிப்படையில் பிரித்தானிய தொழிலாளர் கட்சியானது தாம் இம்முறை ஆட்சியை கைப்பற்றினால் இலங்கையை இரண்டாக பிளவுபடுத்துவதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தனர். இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொடுப்பது என்றால் அது இலங்கை நாட்டை இரண்டாக பிரிப்பதன் மூலமே பெற்றுக்கொடுக்க முடியும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சி கூறியிருந்தது. இந்நிலையில் பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியானது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய இலங்கையை கட்டிக் காப்பதற்காக தாம் நடவடிக்கை எ…
-
- 15 replies
- 1.2k views
-
-
நியூஸிலாந்தின் வைட் தீவிலிருந்து ஆறு சடலங்கள் மீட்பு! நியூசிலாந்தில் சுற்றுலா தளமான வைட் தீவில் அமைந்துள்ள எரிமலை, வெடிப்பில் சிக்குண்ட 6 பேரின் சடலங்களை மீட்புப் படையினர் இன்றைய தினம் மீட்டெடுத்துள்ளனர். இவ்வாறு மீட்க்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண்பதற்காக அங்கிருந்து கப்பல் மூலம் வெலிங்டனுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் காணாமல்போனோர் இருவரையும் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எரிமாலையானது மீண்டும் வெடிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ள படையினர், மீட்பு பணிகளை முமமுரமாக ஆரம்பித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த எரிமலை வெடிப்பின்போது …
-
- 0 replies
- 619 views
-
-
ரஷ்யாவுக்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் அதில் தலையிடக் கூடாது என ரஷ்யாவுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து உரையாடிய போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “செர்ஜி லவ்ரோவுடன், உக்ரைன் விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார். இதன்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்கு ரஷ்யா எந்தவொரு முயற்சிகளையும் …
-
- 0 replies
- 738 views
-
-
நைஜரில் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல் – 71 இராணுவத்தினர் உயிரிழப்பு! ஆப்பிரிக்கா கண்டத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நைஜரில் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் இராணுவ வீரர்கள் 71 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜரின், உவால்லம் பகுதியில் முகாமிட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று (புதன்கிழமை) மாலை கடும் தாக்குதல் நடத்தியதிலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் குறித்து அறிவித்த நைஜரின் இராணுவ செய்தித் தொடர்பாளர் பவுக்கர் ஹசன், 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார். குறித்த பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் அவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியி…
-
- 0 replies
- 311 views
-
-
தாய்க்கு ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொடுப்பதற்காக பெண்போல வேடமிட்ட மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு பிரேசிலின் போர்டோ வெல்ஹோ பகுதியை சேர்ந்த 60 வயதான மரியா என்கிற பெண், மூன்று முறை முயற்சித்தும் ஓட்டுநர் சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவர் சோகமானதை பார்த்த அவருடைய மகன் ஹீட்டர் ஷியாவே (43), நான்காவது முறை எப்படியும் தாய்க்கு ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக அவர் தன்னுடைய தாய் போல உடை, அலங்காரங்கள் செய்து ஓட்டுநர் சோதனையை மேற்கொண்டுள்ளார். ஏறக்குறைய அங்கிருந்த அதிகாரிகளை அவர் ஏமாற்றிவிட்டார் என்று கூட கூறலாம். இருப்பினும், கார் ஓட்டும் போது வழக்கத்திற்கு மாறாக அவருடைய கை நீளமாகவும், குரல் வலிமை வாய்ந்ததாகவும் இருந…
-
- 1 reply
- 664 views
-
-
இராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை நோக்கம் இருக்கவில்லை – சர்வதேச நீதிமன்றில் ஆங் சாங் சூகி வாதம் மியான்மாரில் சிறுபான்மையின மக்களை இனப் படுகொலை செய்யும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டதில்லை என சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார். மியன்மார் அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஆஜராகி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா போராளிகளின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் மட்டுமே மியான்மார் இராணுவம் ஈடுபட்டது. இந்நிலையில் ரக்கினே மாநிலத்தில் உள்ள நிலைவரம் தொடர்பாக முழுமையற்றது…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரிட்டனின் அதிகாரமிக்க அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்ற வேளை வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாயுடன் சென்று வாக்களித்துள்ளார். ப்ரெண்ட்ஸ் அப் அனிமல்ஸ் வேல்ஸ் என்ற தொண்டு நிறுவனத்திலிருந்து ஜாக் ரஸ்ஸல் குறுக்கு இனம் நாயை போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது நண்பர் கேரி சைமண்ட்ஸ் தத்தெடுத்துள்ளனர். இந்த நாயுடன் சென்றே போரிஸ் ஜோன்சன் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70919
-
- 1 reply
- 482 views
-