Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தாய்மொழிப் பள்ளிகள் விவகாரத்தில் உத்தரவாதம் அளிப்பீர்! -கெராக்கான் வலியுறுத்து lingga அக்டோபர் 9, 2019அக்டோபர் 9, 2019220 கோலாலம்பூர், அக்.9- தமிழ், சீனப்பள்ளிகள் நிலைநாட்டப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கெராக்கான் கேட்டுக் கொண்டது. தாய்மொழிப் பள்ளிகள் அகற்றப்படாது என்று பாக்காத்தான் கூட்டணி தேர்தல் கொள்கை அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாக வரலாற்றில் மிகச் சிறந்த துணை கல்வியமைச்சரான தியோ நோ சிங் கூறினார் . ஆனால், இந்தத் தேர்தல் கொள்கை அறிக்கை என்பது சட்டப்பூர்வ சாசனம் அல்ல. மேலும் இவ்வறிக்கை ஒரு பைபிள் அல்ல என்றும் இதைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் துன் …

    • 0 replies
    • 537 views
  2. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை! அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா சிறிய ரக மற்றும் இடைநிலைத்தூர ஏவுகணைகளை சோதனை செய்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் ஐ.நா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கடந்த வாரம் வடகொரியாவினால் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை குறித்து விவாதிக்க இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வடகொரியாவிற்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே ஐ.நாவுக்கான வடகொரியா தூதர் கிம் சாங் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மூன்று ஐரோப்பிய நாடுகளும்…

  3. மூன்று விஞ்ஞானிகளுக்கு பௌதீகவியலுக்கான நோபல் பரிசு 2019 பிரபஞ்சம் பற்றிய “பெரு வெடிப்பு” ஆராய்ச்சிக்காகவும் மற்றும் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதற்காகவும் மூன்று விஞ்ஞானிகளுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான பௌதீகவியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற விழாவில் ஜேம்ஸ் பீபிள்ஸ், மிஷேல் மயோர் மற்றும் டிடியர் கொயலோஸ் ஆகியோர் இந்த ஆண்டுக்கான வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பிரபஞ்சத்தின் பரிணாமம் பற்றிய பணிக்காக பீபிள்ஸ் கௌரவிக்கப்பட்டுள்ளார். அதேவேளை மிஷேல் மயோர் மற்றும் டிடியர் கொயலோஸ் ஆகியோர் சூரியனைப் போன்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்ததற்காக இந்தப் பரிசை வென்றுள்ளனர். வெற்றியாளர்கள் மூவரும் ஒன்பது மில்லியன் குரோனரின் (£738,000) பரிசுத் தொகையைப் ப…

  4. கனடா பாராளுமன்றம் கலைப்பு – ஆளுனர் ஒப்புதல் September 12, 2019 கனடா பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமர் ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு ஆளுனர் ஜெனரல் ஜூலி பயேட் ஒப்புதல் அளித்துள்ளார். கனடாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ம் திகதி நாடுதழுவிய அளவில் பொதுத்தேர்தல் நடைபெறைவுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் டுருடேயு, அந்நாட்டு ஆளுனர் ஜெனரல் ஜூலி பயேட்-ஐ சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரைத்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். #கனடா #பாராளுமன்றம் #கலைப்பு #ஆளுனர் http://globalta…

    • 16 replies
    • 2.2k views
  5. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் (பிரெக்சிற்) ஒப்பந்தம் ஒன்று சாத்தியமானதா என்று இந்த வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை ஒப்பந்தமொன்று மதிக்க முடியுமா எனப் பார்ப்பதை நோக்கி பேச்சுக்கள் தற்போது விரைவாக முன்னேறுவதாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இம்மாதம் 31ஆம் திகதியைத் தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதில் தாமதமொன்றுக்கு இருக்கும் என சிந்திப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளீர்க்கப்படக்கூடாது என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். எவ்வாறெனினும், ஐரோப்பிய…

  6. வடமேற்கு சிரியா பகுதியில் துருக்கி ராணுவம் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தவுள்ள தாக்குதலில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து இஸ்லாமிய அரசு குழுக்களின் கைதிகளை பாதுகாக்கும் பொறுப்பை துருக்கி ஏற்றுகொண்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாங்கள் பயங்கரவாதிகள் என கருதும் குர்து இன கிளர்ச்சியாளர்களை தங்கள் எல்லை பகுதியில் இருந்து நீக்க துருக்கி நினைக்கிறது. அதோடு இரண்டு மில்லியன் சிரியா அகதிகளை எல்லையை ஒட்டிய ஒரு பாதுகாப்பு பகுதியில் தங்க வைக்க துருக்கி நினைக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஆகியோர் இது குறித்து பேசியுள்ளனர். …

    • 7 replies
    • 739 views
  7. ஜேர்மனியில் சிரிய பிரஜையொருவர் சாரதியை இழுத்துவிழுத்திவிட்டு டிரக்கொன்றை எடுத்துச்சென்று பல கார்களின் மீது மோதியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். சிரியாவை சேர்ந்த நபர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதால் இது பயங்கரவாத தாக்குதல் முயற்சியாகயிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட நபர் டிரக்கினை திருடி கார்களின் மீது மோதினார் என தெரிவித்துள்ள காவல்துறையினர் இது பயங்கரவாத தாக்குதலாகயிருக்கலாம் என்ற கோணத்திலும்; விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் லிம்பேர்க் நகரில் முக்கிய புகையிரத நிலையத்திற்கு முன்னாள் நின்றிருந்த கார்களி;ன் மீது மேர்சிடஸ் ரக வாகனத்தை பயன்படுத்தி நபர் ஒருவர் மோதினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். …

  8. ஐநா மனித உரிமை ஆணையருடன் அமைச்சர் வேதமூர்த்தி சந்திப்பு ஐநா மனித உரிமை ஆணையர் திருமதி மிக்கெலி பேச்லெட்டை பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி அண்மையில் தன்னுடைய அலுவலகத்தில் சந்தித்தார். அடிப்படை மனித உரிமையை நிலைநாட்டுவதில் மலேசியா காட்டிவரும் முனைப்-பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மேற்கொண்ட இந்தப் பயணத்தின்போது புத்ராஜெயா பிரதமர் துறை அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தியை சந்தித்தார் ஆணையர் மிக்கெலி பேச்லெட். நம்பிக்கைக் கூட்டணி அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கை பற்றி அமைச்சர் அவரிடம் எடுத்துரைத்தார். அப்போது, மலேசி…

    • 0 replies
    • 359 views
  9. மறு கல்வி மையங்கள் எனும் பெயரில் சீனாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான இஸ்லாமியர்களை கைகளையும், கண்களையும் கட்டி அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் வெளியான நிலையில், அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின்ஸின்ஜியாங் ( Xinjiang) நிங்க்ஸியா (Ningxia), கின்காய் (Qinghai), கன்சு (Gansu) ஆகிய மேற்கத்திய மாகாணங்களில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர். ஹன் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ஸின்ஜியாங்கில், உய்குர் இன இஸ்லாமியர்களால் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதாக அந்த மாகாண நிர்வாகம் கருதுவதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 லட்சம் இஸ்லாமியர்களைப் பிடித்து மறு கல்வி மையம் எனும் பேரில் முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களின் குழந…

    • 2 replies
    • 652 views
  10. தெய்வ நிந்தனை செய்த குற்றச்சாட்டில் ஈரானின் இன்ஸ்ரகிராம் நட்சத்திரம் கைது! ஈரானைச் சேர்ந்த இன்ஸ்ரகிராம் நட்சத்திரமான சாஹர் தாபர் என்பவர் தெய்வ நிந்தனை செய்ததாகவும், வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும் குற்றம்சுமத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தாஸ்னிம் செய்தி முகாமை தெரிவித்துள்ளது. 22 வயதான சாஹரின் இன்ஸ்ரகிராம் பதிவொன்று கடந்த வருடம் வைரலாக பரவியதை அடுத்து சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியானார். சாஹருக்கு 50 பிளாஸ்ரிக் சேர்ஜரி முறையில் அறுவைசிகிச்சைகள் நடந்துள்ளதாக கூறப்பட்டாலும், அவர் இன்ஸ்ரகிராமில் பதிவும் ஔிப்படங்கள் அனைத்தையும் பெரும்பாலும் திருத்தம்செய்தே அவர் பகிர்ந்து வருகின்றார். அவர் கடந்த வருடம் பகிர்ந்த ஒரு…

  11. ஈராக் மக்கள் போராட்டம்: உயிரிழப்பு 93ஆக உயர்வு – 4000 பேர் காயம்! ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுவரும் நிலையில் உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன. இன்றுடன் நான்காவது நாளை எட்டியுள்ள இந்த போராட்டம் நாட்டின் பல மாகாணங்களில் பரவியுள்ளது. இந்நிலையில் மோதல்களில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் என 93 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈராக்கின் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் அலி அல்-பயாட்டி தெரிவித்துள்ளார். ஈராக் அரச துறைகளில் பெருகிவரும் ஊழல் மற்றும் வேலையில்லா பிரச்சினை ஆகியவற்றை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாத்தி…

  12. படத்தின் காப்புரிமைC.UMAPATHI Image captionதேனீர் தயாரிக்கிறார் சுப்ரமணியன். அடுப்பில் கொதிக்கும் பாலில் ஆவி பறக்கிறது. காற்றில் தேனீரின் மனம் கமழ்கிறது. சிறு நகர தேனீர்க் கடைகளுக்கே உரிய முறையில் முந்தைய நாள் தூக்கத்தை முகத்தில் மிச்சம் வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மந்தக்கரையில் இருக்கிறது அந்த தேனீர்க் கடை. மக்கள் கூடுகிற பழைய நகரின் பிரபலமான திடல் அது. தாள லயத்துக்கு ஆடுகிற நடனக் கலைஞரைப் போல தேனீரை ஆற்றிக்கொண்டிருக்கிறார் பெரியவர் சுப்ரமணியன். ராவணன் தேனீர்க் கடைக்கு இதோ புதிதாக ஒரு வாடிக்கையாளர் வருகிறார். "ஐயா உங்களுக்கு குளம்பியா, தேனீரா," கனீரெனக் கேட்கிறார் சுப்ரமணியன். வந்தவர் குழம்பவில்லை…

    • 0 replies
    • 545 views
  13. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசித்தரிப்புக்காக கோப்பு படம் தாய்லாந்தில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆறு யானைகள் உயிரிழந்துள்ளன. ஒன்றோடு ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ததில் அந்த யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்துவிட்டன. தாய்லாந்தின் மத்திய பகுதியில் உள்ள கா யே தேசிய பூங்காவில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்ததையடுத்தே இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். பாறையின் ஓரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இரு யானைகள் தற்போது அதிகாரிகளால் மீட்கப்பட்டுவிட்டன. ஹா நரோக் (நரக வீழ்ச்சி) என்று பெயரிடப்பட்ட நீர் வீழ்ச்சியில் இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. படத்தின் காப்புரிமைKHAO Y…

  14. பிரான்ஸ் தலைநகர் பாரிசின் காவல்துறை தலைமையகத்தில் காவல்துறையினரை கத்தியால் குத்த முயன்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காவல்துறை தலைமையக கட்டிடத்திற்குள் நுழைந்த நபர் அங்கிருந்த காவல்துறையினரை தாக்க தொடங்கினார் என தகவல்கள் வெளியாகின்றன. இதனை தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த தாக்குதலிற்கான காரணம் உட்பட ஏனைய விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. பல காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன https://www.virakesari.lk/article/66153 Paris knife attacker kills 4 people at police headquarters Four police employees were killed in a knife attack at Paris police headquarters on Thursday, accordi…

    • 4 replies
    • 558 views
  15. வெளிநாடுகளை சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. வெளிநாட்டை சேர்ந்த ஆணும் பெண்ணும் தாங்கள் உறவினர்கள் என்பதை நிரூபிக்காமலேயே ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதற்கான அனுமதியையே சவுதி அரேபியா வழங்கவுள்ளது. சுற்றுலாப்பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனேயே சவுதிஅரேபியா கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளது. சவுதிஅரேபிய பெண்கள் ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதற்கும் அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளது. சவுதி அரேபிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக பெண்கள் தனியாக பயணம் செய்யும் சூழல் உருவாகும். மேலும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவு தடை செய்யப்பட்டுள்ள சவுதி அரேபியாவில் வெளிநாடுகளை சேர்ந்…

    • 0 replies
    • 859 views
  16. ஹொங்கொங்கில் பொலிஸார் மீது தீ வைத்த போராட்டக்காரர்கள் (காணொளி இணைப்பு) ஹொங்கொங்கில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை செய்யும் விதமாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மசோதா கைவிடப்பட்டது. ஆனாலும், ஹொங்கொங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், சுதந்திரமாக தேர்தல், போராட்டக்காரர்களை தாக்கிய பொலிஸார் மீது விசாரணை மேற்கொள்ளுதல், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போராட…

  17. லண்டனை முடக்க திட்டமிட்டுள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு! காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசரநிலை குறித்து இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அடுத்த வாரம் முதல் லண்டன் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு தீர்மானித்துள்ளது. சுற்றுச்சூழல் நெருக்கடியைச் சமாளிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தொடங்கும் வரை ஒக்ரோபர் 7 முதல் இரண்டு வாரங்கள் அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் வரை வெஸ்ட்மின்ஸ்டரை முடக்க ஆர்வலர்கள் குழு திட்டமிட்டுள்ளது. அத்துடன் லண்டன் சிற்றி விமான நிலையத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் லண்டனில் ஏனைய பகுதிகளில் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 60 க்கும்…

  18. இந்த வாரம் தன் மீதான பதவி நீக்க விசாரணையில் ஆஜராக சட்ட ரீதியிலான அழைப்பாணையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்போவதாக தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியினர் மீது ஆவேசமடைந்து கடும் வார்த்தைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி கோரியதாக ஜனநாயக கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவிநீக்கம் செய்வது குறித்த விசாரணை தொடர்பாக விசாரித்து வரும் குழுக்கள் இது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளன. இழிவான வார்த்தை ஒன்றை பயன்படுத்தி, ஜனநாயக கட்சி தலைவர்களை நேர்மையற்றவர்கள் என்று விமர்சித்த டிரம்ப், அவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தினார். ஆனால…

    • 3 replies
    • 1.1k views
  19. பசுபிக்கில் அதி நவீன ஏவுகணையை பரிசோதனை செய்தது அமெரிக்கா-வீடியோ இணைப்பு சீனா மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு எழுபது வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வுகளில் சீனா தனது புதிய ஆயுதங்களை காட்சிப்படுத்திக்கொண்டிருந்த அதேவேளை அமெரிக்கா பசுபிக்கில் தனது புதிய அதிநவீன ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. குவாமின் கடற்பரப்பில் அமெரிக்காவின் கடற்படை கலமான யுஎஸ்எஸ் கப்பிரியலீ கிவ்வொர்ட் அமெரிக்காவின் புதிய கடற்படை தாக்குதல் ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. பசுபிக்கில் இடம்பெற்ற சின்;கெக்ஸ் என்ற ஒத்திகையில் கப்பிரியலீ கிவ்வொர்ட் என்ற போர்க்கப்பலில் இருந்து புதிய வகை எவுகணைகளும் ஏனைய ஆயுதங்களும் அமெரிக்கா தற்போது பயன்படுத்தாத கடற்படை கப்பலொன்றை நோக்கி ஏவப்பட்டதாக சிஎன்என் தெரிவித்…

    • 1 reply
    • 702 views
  20. பொருளாதார பிரச்சனை, வேலையின்மையை காரணம் காட்டி ஈராக் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஈராக் பிரதமர் அப்துல் மஹதி தலைமையிலான அரசு பொருளாதார பிரச்சனை, வேலையின்மை, ஊழல் உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காண வலியுறுத்தி நேற்று முன் தினம் தலைநகர் பாக்தாத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அங்குள்ள வரலாற்று சின்னமான சரீர் சதுக்கத்தில் தொடங்கிய போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். அப்போது வன்முறை வெடிக்கவே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலைய…

    • 0 replies
    • 478 views
  21. ஈக்வடாரில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வருவதாக அந்நாட்டு அதிபர் லெனின் மொரேனோ தெரிவித்துள்ளார். ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் வசிக்கும் அந்நாட்டில், அரசியல் நிலையற்ற தன்மை நீண்ட காலமாக நிலவி வருகிறது. 2007-ம் ஆண்டு ரஃபேல் கொர்ரியாவை ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் பொருளாதாரக் கொந்தளிப்பை சுட்டிக்காட்டி நடைபெற்ற போராட்டங்களால் 3 அதிபர்களின் அரசு கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து 2017-ம் ஆண்டு அதிபரான லெனின் மொரேனே, 40 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த தாறுமாறாக வழங்கப்பட்டுவந்த எரிபொருள் மானியத்தை நீக்குவதாக அறிவித்தார். இதையடுத்து, க்விட்டோ குவாயக்வில் உள்ளிட்ட பல நகரங்களில், வாடகைக் கார், பேருந்து மற்றும் லாரிகளின் ஓட்டுநர்கள், தொழிலாளர் அமைப்பினர், ம…

    • 0 replies
    • 473 views
  22. 150 ஜாவலின் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குகின்றது அமெரிக்கா! போர் விமானங்களை தாக்கி அழிக்கக்கூடிய அதி நவீன 150 ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 280 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணைகள் மற்றும் உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய போர் விமானங்களை தாக்கி அழிக்கக்கூடிய 150 ஜாவலின் ஏவுகணைகள் மற்றும் உபகரணங்கள் உக்ரைனுக…

  23. அமெரிக்காவில் சகோதரனை கொலை செய்த முன்னாள் பெண் காவலரை கருப்பின இளைஞர் ஒருவர் மன்னித்து, நீதிமன்றத்தில் ஆரத்தழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ் மாவட்டத்தில் வசித்து வந்த பெண் காவலர் ஆம்பர் கைகெர் என்பவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி, தனது வீட்டின் அருகே 4வது தளத்தில் வசித்து வந்த கருப்பினத்தை சேர்ந்த போதம் ஜீன் என்ற இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தை கருப்பினத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என கூறி அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. ஆனால் இதனை மறுத்த ஆம்பர் கைகெர், சம்பவம் நடந்த அன்றைய தினம் தனது வீட்டுக்குள் ஜீன் கொள்ளையில் ஈடுபட முயன்றதாக தவறாக நினைத்து, தற்காப…

    • 1 reply
    • 635 views
  24. 2 ஆம் உலகப்போர் விமானம் விபத்தில் சிக்கியது : 7 பேர் பலி ! Published by R. Kalaichelvan on 2019-10-03 17:20:47 அமெரிக்காவின் ஹார்ட்போர்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற போயிங் பி -17 என்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 2 ஆம் உலகப்போரில் ஜெர்மனி படையினருக்கு எதிராக குண்டுகளை வீசிய போர் விமானமே இவ்வாறு 13 பயணிகளுடன் பயணித்துள்ளது. குறித்த போர் விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் திடீரென தரையிறங்க முயற்சித்துள்ளது. இந்நிலையில் குறித்த விமானம் தரையில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விமானம் விபத்திற்குள்ளானதில் பிராட்லி சர்வதேச விமானத்தில் உள்ள…

    • 0 replies
    • 405 views
  25. இஸ்லாம் பற்றிய கண்ணோட்டத்தை மாற்ற துருக்கி, பாகிஸ்தான், மலேசியா கூட்டு முயற்சி! இஸ்லாம் மற்றும் அதன் கோட்பாடுகளை பின்பற்றுபவர்களுக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டுள்ள தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதற்கு துருக்கி, பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் கூட்டான புதிய முயற்சியொன்றுக்கு வித்திட்டுள்ளன. அந்த வகையில் இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கும், தவறான கண்ணோட்டத்தை களைவதற்கும் சர்வதேச ரீதியாக செயற்படக் கூடிய புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்றை ஆரம்பிக்கவுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன், மலேசியா பிரதமர் மஹ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.