உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு ஒன்றரை கோடி கட்டணம்! வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெறுவதற்கு 8 லட்சம் ரியால்களை (இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்) கட்டணமாக செலுத்தும் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா மசகு எண்ணெய் விநியோகத்தை தவிர்த்து வேறு பல முறைகளில் வருமானத்தை பெருக்கும் நோக்கில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஒரு தொகை கட்டணம் வசூல் செய…
-
- 1 reply
- 522 views
-
-
முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி அரபு மொழி சேவைக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல் நடத்தியது. 2018-19ல் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இங்கே அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் தங்…
-
- 1 reply
- 635 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பினை கொண்டுள்ள 55 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் தலைவர் மிச்சல் பச்லற் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் பல வெளிநாட்டவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தி சட்ட நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான மூன்று வாரகால நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார். சுமார் ஐம்பது நாடுகளில் செயல்பட்ட 55 ஆயிரம் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகளுடன…
-
- 0 replies
- 556 views
-
-
ஈரானிய ஆயுத முறைமைகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டத்தை கைவிட்டிருந்த நிலையில் அந்நாட்டு ஆயுத முறைமைகள் மீது இணையதளம் மூலமான சைபர் தாக்குதலொன்றை ஆரம்பித்துள்ளதாக அமெரிக் காவிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த சைபர் தாக்குதலானது ஈரானின் ஏவுகணை மற்றும் ஏவுகணையை ஏவும் உபகரணங்கள் என்பவற்றைக் கட்டுப்படுத்தும் கணினி முறைமைகளை செயலிழக்க வைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது…
-
- 2 replies
- 539 views
-
-
எத்தியோப்பியாவின் இராணுவத் தளபதி சுட்டுக்கொலை எத்தியோப்பியாவின் இராணுவத் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அபி அஹமட் தெரிவித்துள்ளார். அத்தோடு அம்ஹாரா மாகாண ஆளுநரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அபிய் அஹமத் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் எத்தியோப்பிய பிரதமர், தலைமையிலான அரசுக்கு எதிராக நேற்று (சனிக்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. இதைனையடுத்து சிலமணி நேரத்தில் எத்தியோப்பியா நாட்டின் இராணுவ தளபதி மேகொன்னேன், அவரது வீட்டில் மெய்காப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அதேபோல அம்ஹாரா மாகாண ஆளுநரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து அம்ஹாரா …
-
- 0 replies
- 483 views
-
-
விமானத்தை சுட்டு வீழ்தியதால் ஈரான் பெரும் தவறை செய்துவிட்டது : ட்ரம்ப் ஆழில்லா அமெரிக்க உழவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்தியது கண்டனதுக்குரியது என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலை உருவாகியுள்ளது. இச்சம்பத்தையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தங்கள் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரான் மிகப்பெரும் தவறு செய்துவிட்டது என சமூகவலைத்தளமான தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/58718
-
- 6 replies
- 1.8k views
-
-
NEWS அருகிவரும் தாடிகளும் மசூதிகளும் | சீனாவில் இஸ்லாம் சீனாவில் சுதந்திரமான மத வழிபாடுகளுக்கு விதிக்கப்படும் தடை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமின் தொழுகை விடயத்தில் அரசின் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பி.பி.சி. ஊடகத்தின் நிருபர் ஜோன் சட்வேர்த் சீனாவின் மேற்குப் பிரதேசமான சின்ஜியான்ங் கிற்குச் சென்று சில தகவல்களைத் திரட்டி வெளியிட்டுள்ளார். சின் ஜியாங் ஒரு அதிகாரப் பகிர்வைக் கொண்ட பிரதேசம். அரச பாதுகாப்பு கெடுபிடிகள் அவரது சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய போதிலும் அவர் அவதானித்த விடயங்கள் அதிர்ச்சி தருவனவாக உள்ளன. பல இடங்களில் மிக நீண்டகாலமாக இருந்த இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டுத் தர…
-
- 1 reply
- 1.6k views
-
-
அவுஸ்திரேலிய அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி தற்கொலைக்கு முயற்சி மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலைசெய்ய முயற்சித்துள்ளார் என மனஸ் தீவில் உள்ள இலங்கை தமிழ் அகதியான சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார் குறிப்பிட்ட நபர் கடும் உளதாக்கங்களிற்கு உட்பட்டிருந்தார் அவர் சிகிச்சை கோரியபோதிலும் அவுஸ்திரேலியா அதனை மறுத்திருந்தது என சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார். இன்று அவர் மருத்து…
-
- 0 replies
- 520 views
-
-
ஐக்கிய இராச்சியம் இந்துசமுத்திரத்தில் ஷாகோஸ் தீவுக்கூட்டம் மீதான அதன் ' காலனித்துவ நிருவாகத்தை மொரீசியஸ் நாட்டுக்கு அனுகூலமான முறையில் 6 மாதகாலத்திற்குள் வாபஸ் பெறவேண்டும் ' என்று கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளால் ( 193 உறுப்புநாடுகளில் 116 நாடுகள் ஆதரவாக ) கடந்த மாதம் நிறைவேற்றியது. டியாகோ கார்சியா தீவில் அமெரிக்க இராணுவத்தளம் அமைந்திருப்பதால் ஷாகோஸ் தீவுக்கூட்டம் நன்கு பிரபல்யமானதாக விளங்குகிறது. பொதுச்சபையின் தீர்மானம் கட்டுப்படுத்துகின்ற ஒன்று அல்ல என்றபோதிலும், அது ஐக்கிய இராச்சியத்துக்கு சினத்தை ஏற்படுத்தக்கூடியதேயாகும். கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள் அமெரிக்காவுடன் கூட்டாக டியாகோ கார்சியாவில் இரா…
-
- 5 replies
- 805 views
-
-
இந்துசமுத்திரத்தை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது ஐஎஸ்- இந்திய புலனாய்வு அமைப்பு சிரியா ஈராக்கில் ஏற்பட்டுள்ள தோல்விகளை தொடர்ந்து எஸ் அமைப்பு தனது கவனத்தை இந்து சமுத்திரத்தை நோக்கி திருப்பியுள்ளது இதன் காரணமாக இந்தியா இலங்கைக்கு ஆபத்துக்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படலாம் என இந்திய புலனாய்வு அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள காவல்துறையினரிற்கு இந்திய புலனாய்வு அமைப்பு அனுப்பியுள்ள மூன்று கடிதங்களில் இந்த ஆபத்து குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. ஈராக் சிரியாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை இழந்த பின்னர் தங்கள் நாடுகளில் இருந்தபடியே வன்முறைகளில் ஈடுபடுமாறு ஐஎஸ் அமைப்பு தனது உறுப்பினர்களிற்கு வேண்டுகோள் விடுத்துவருகின்றது என இந்திய…
-
- 0 replies
- 412 views
-
-
உலகளாவிய ரீதியில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் உலகளாவிய ரீதியில் போரால் இடம்பெயர்ந்தவர்கள் தொகை கடந்த வருடத்தில் 70 மில்லியனாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையத்தால் நேற்று புதன்கிழமை புதிதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் 70.8 மில்லியன் பேர் இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர் எனவும் அதற்கு முந்திய வருடத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் அந்த வருடத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தொகையில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அகதிகள்…
-
- 0 replies
- 370 views
-
-
ஹொங்கொங்கின் நாடு கடத்தல் சட்டமூலம் நிறுத்தம்! ஹொங்கொங்கில் குற்றச்செயல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைக்காக சீனாவிடம் ஒப்படைப்பதற்கு அனுமதியளிக்கும் புதிய சட்டமூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு எதிராக ஹொங்கொங் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களையடுத்தே இந்த சட்டமூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந் நாட்டு ஜனாதிபதி கேரீ லாம், நாடுகடத்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்டப் பேரவை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். அந்தச் சட்ட வரைவு குறித்து சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருனுடன் ஆலோசனை நடத்தி, …
-
- 1 reply
- 737 views
-
-
சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் சில உயர் அதிகாரிகளுக்கு எதிராக பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததாக ஐநா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தனிச்சையான மற்றும் நடுநிலையான அடுத்த விசாரணை நடக்கும் என சிறப்பு விசாரணை அதிகாரி ஆக்னஸ் காலாமார்ர்ட்டின் அறிக்கை தெரிவிக்கிறது. கஷோக்ஜி இஸ்தான்புல்லிலுள்ள சௌதி தூதரகத்தில் சௌதி முகவர்களால் கொல்லப்பட்டார். தாங்கள் இளவரசர் முகமதின் ஆணைப்படி செயல்படவில்லை என சௌதி அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் சௌதி தன் முதல் கட்டமாக அடையாளம் தெரியாத 11 பேரின் மேல் குற்றம்சாட்டி அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்க கோரியது. ஆனால் இந…
-
- 0 replies
- 382 views
-
-
படத்தின் காப்புரிமை Reuters சர்ச்சைக்குரிய ட்ரான்ஸ் மவுண்டைன் பைப்லைன் (குழாய்பதிப்பு) திட்ட விரிவாக்கத்துக்கு கனடா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீதிமன்றம் ஒன்று கடந்த வருடம் தெரிவித்திருந்தது. இது தற்போது கனடாவின் அதிபராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தேர்தல் சமயத்தில் பெரும் சவாலாக இருக்கும். இந்த திட்டத்துக்கு சூழலியளாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். செவ்வாயன்று இந்த திட்டத்துக்கான ம…
-
- 0 replies
- 740 views
-
-
ஈராக்கில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில், அமெரிக்க 'ஸீல்' என்ற புகழ் பூத்த படைப்பிரிவு ஒன்றின் குழுத்தலைவர் போர்குற்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார். 1. காயமடைந்த பதின்ம வயது ஐ.எஸ். போராளியை கொன்றது 2. இரண்டு ஆயுதம் தரிக்காத பொதுமக்களை கொன்றது இவரின் குழுவை சேர்ந்த ஒருவராலேயே இந்த குற்றத்திற்கு ஆதாரம் தரப்பட்டுள்ளது குறிப்பு : இவ்வாறு பல போர்க்குற்ற ஆதாரங்கள் இருந்தும் முள்ளிவாய்க்கால் உட்பட்ட இலங்கை போர்க்குற்றங்கள் எனது நீதி விசாரணையையும் கண்டதில்லை
-
- 1 reply
- 507 views
-
-
கனடா பிரதமர் பற்கேற்ற நிகழ்வில் துப்பாக்கி பிரயோகம் – நால்வர் படுகாயம்! கனேடிய பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். கனடாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய கூடைப்பந்து போட்டியில் ‘டொரொன்றோ ரேப்டர்ஸ்’ அணி வெற்றி பெற்று, சம்பியன் பட்டம் பெற்றது. இந்தநிலையில் டொரொன்றோ ரேப்டர்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி டொரொன்றோவின் நொதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சதுக்கத்துக்கு வெளியே உள்ள வீதிகளில் சுமார் 10 இலட்சம் பேர் கூடி தங்கள் நகரைச் சேர்ந்த அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடினர். இதன்போது இனந்தெரியாத நப…
-
- 0 replies
- 393 views
-
-
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை ஜப்பானில் 6.8 ரிச்டெர் அளிவல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினையடுத்து ஜப்பானின் பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜப்பானின் சகாடா பகுதியிலிருந்து 30 மைல் தூர கடற்பரப்பிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஜப்பானின் யமகடா, நிகாடா மற்றும் இஷிகாவா பகுதிகளிலும் சுனாமி அலை ஜப்பான் நேரப்படி இரவு 10.22 மணியளவில் தாக்கக்கூடும் எனவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கையில…
-
- 0 replies
- 452 views
-
-
படத்தின் காப்புரிமை US DEPARTMENT OF DEFENSE இரானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்ப உள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் செயலாளர் பாட்ரிக் ஷானஹான், இரானிய படைகளின் "விரோத நடத்தைக்கு" பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஓமன் வளைகுடாவில் அண்மையில் நடந்த எண்ணெய் டேங்கர் தாக்குதலுடன் இரானுக்கு தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டுக்கும் புதிய படங்களையும் அமெரிக்க கடற்படை பகிர்ந்…
-
- 0 replies
- 709 views
-
-
நீதிமன்றத்தில் மரணமான எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி எகிப்தில் ஜனநாயக முறையில் முதல் முறையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட முகமது மோர்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். எகிப்தில் ஜனநாயக முறையில் முதல் முறையாக ஜனாதிபதியாகத் தெரிவுச் செய்யப்பட்டவர் 67 வயதான முகமது மோர்சி ஜனாதிபதியாக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த ஜூலை 2013 இல் அந்நாட்டு இராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. ஜனாதிபதி மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக நி…
-
- 0 replies
- 610 views
-
-
டொனால்ட் ட்ரம்பின் பெயரைக் கொண்ட புதிய குடியிருப்பு பிரதேசம் இஸ்ரேலால் திரைநீக்கம் ஜனாதிபதி பெஞ்ஜமின் நெட்டன்யாஹு தனது நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் பிராந்தியத்திலுள்ள புதிய குடியிருப்பு பிரதேசத்திற்கு அமெரிக்க ஜனாதிபதியின் பெயரை சூட்டி அதனை வைபவரீதியாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துள்ளார். அந்தப் பிராந்தியமானது பொதுவாக சர்வதேச ரீதியில் சிரியாவின் பிராந்தியமாக கருப்படுகின்ற நிலையில் அது தொடர்பில் இஸ்ரேலின் இறைமையை அங்கீகரிக்க டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்மானத்துக்கு கௌரவமளிக்கும் வகையிலேயே அதற்கு டொனால்ட் ட்ரம்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஜனாதி…
-
- 0 replies
- 476 views
-
-
நைஜீரியாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – காற்பந்து ரசிகர்கள் 30 பேர் உயிரிழப்பு நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காற்பந்து ரசிகர்கள் 30 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போகோஹராம் தீவிரவாதிகளுக்கும், நைஜீரிய அரச படைகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள ‘கொண்டுகா’ பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை காற்பந்து ரசிகர்கள் சிலர் ஒன்று கூடி போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு கூட்டத்திற்குள் 4 தற்கொலைப்படை தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெண்கள் என்றும் ஒருவர் ஆண் எனவும் கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 382 views
-
-
குற்றத்தை ஏற்க மறுத்தார் நியூசிலாந்து மசூதி கொலையாளி நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பலரை கொலை செய்த நபர் தனது குற்றத்தை ஏற்க மறுத்துள்ளார். இந்நிலையில் தான் இந்த கொலையை செய்யவில்லை என சிறித்துக்கொண்டெ பதில் கூறியதோடு,தான் இந்த விடயத்தை ஏற்க மறுக்கிறேன் எனவும் தெரிவித்தார். குறித்த நபர் கூறிய கருத்தால் அந்நாட்டு நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த வழக்கினை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/58292
-
- 1 reply
- 737 views
-
-
ஓமான்வளைகுடாவில் எண்ணெய்கப்பல்கள் மீது தாக்குதல்கள்- எண்ணெய் விலை உடனடியாக அதிகரித்தது ஓமான் வளைகுடாவில் எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதலொன்று இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற கப்பல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட கப்பல் நீரில்மூழ்கி விட்டது என ஈரானின் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறிப்பிட்ட கப்பல் மூழ்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன பஹ்ரைனை தளமாக க…
-
- 3 replies
- 746 views
-
-
கொள்ளையர்கள் வெறியாட்டம் – 35 பொதுமக்கள் உயிரிழப்பு! நைஜீரியாவில் கொள்ளையர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 35 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நைஜீரியாவின் வடக்கு பகுதியிலுள்ள ஜம்பாரா மாநிலத்துக்குட்பட்ட டுங்கர் கபாவ் மற்றும் கிடான் வாவா ஆகிய கிராமங்களுக்குள் நுழைந்த கொள்ளையர்களினாலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த கொள்ளையர்கள் மக்கள் வைத்திருந்த பணம் மற்றும் உணவுப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அத்துடன், 35 பொதுமக்களை கொலை செய்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, கடந்த வாரத்தில் இதேபோன்று நைஜர் மாநிலத்திலுள்ள …
-
- 0 replies
- 560 views
-
-
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இராஜினாமா; டுவிட்டரில் ட்ரம்ப் அறிவிப்பு அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை ட்ரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஜனாதிபதி ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளரான இவர், ஒரு முறை, “ட்ரம்ப் ஜனாதிபதி ஆகவேண்டும் கடவுளே விரும்புகிறார்” என கூறியதன் மூலம் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றார். இந்நிலையில், சாரா சாண்டர்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்த தகவலை ட்ரம்ப் டுவிட்டரில் தெரிவித்தார். இது பற்றி அவர், “3½ ஆண்டுகளாக சிறப்பான பணி…
-
- 0 replies
- 513 views
-