உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
ஹலால் உணவகங்களில் எழுதப்பட்டுள்ள அரபு மொழி வாசகங்களை நீக்குமாறு உத்தரவு! சீன தலைநகர் பீஜிங்கில், ஹலால் உணவகங்களில் எழுதப்பட்டுள்ள அரபு மொழி வாசகங்கள் மற்றும் இஸ்லாமிய அடையாளங்களை நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. பீஜிங்கில் மாத்திரம் 1,000 இற்கும் அதிகமான ஹலால் உணவகங்கள் உள்ளன. சீனாவில், இரண்டு கோடி இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். இஸ்லாமியர்களால் நடத்தப்படும் ஹலால் உணவகங்களில் அரபு மொழி வார்த்தைகளும், இஸ்லாமிய சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. சீனாவில் அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டாலும், கம்யூனிஸ்ட் கொள்கைகளையே அரசு ஆதரித்து வருகிறது. இந்நிலையில், …
-
- 1 reply
- 430 views
-
-
ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு – 2பேர் காயம் August 2, 2019 ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந் ஆசியான் மகாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள நிலையில், தாய்லாந்தில் இரு இடங்களில் சிறிய ரக குண்டுகள் வெடித்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 பெண்கள் காயம் அடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசியான் மாநாடு நடக்கும் நேரத்தில் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என காவல்துறையினர் தெரிவித்த…
-
- 0 replies
- 730 views
-
-
மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியானது! மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ‘குளோபல் கொன்சல்ரன்சி கியூஎஸ் குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்’ என்ற அமைப்பினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகரத்திலுள்ள பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை மற்றும் செயற்பாடு, வேலைவாய்ப்பு, விரும்பக் கூடியது, மலிவானது மற்றும் தரமான வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 14 நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள குறித்த பட்டியலில் உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரமாக லண்டன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்…
-
- 0 replies
- 350 views
-
-
முஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் – ஐ.எஸ் பயங்கரவாதிகள் எச்சரிக்கை! முஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் என ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நியூயோர்க் மற்றும் லண்டனின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்துவது போன்றும், இஸ்லாமியர் அல்லாதர்களை கொல்வோம் எனவும் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள ஒளிப்படங்களிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளைக் கண்காணிக்கும் ஆராய்ச்சி நிறுவனமான மெம்ரி ஜேடிடிஎம் மற்றும் சில சர்வதேச ஊடகங்கள் சிலவற்றில் இந்த ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. ‘நீங்கள் நாங்கள் தோற்றுவிட்டதாக நினைத்திருக்கலாம், இஸ்லாமிய ஆதரவாளர்கள் சரணடைந்து விட்டதாக நினைத்திருக்கலாம், ஆனால் கூடிய விரைவில் லண்டன் மற்றும் பல இடங்களில் தாக்குதல…
-
- 0 replies
- 388 views
-
-
அமெரிக்கா மற்றும் சீனா என்பனவற்றில் ஒன்றை தெரிவு செய்யும்படி, தெற்காசிய நாடுகள் எதனையும் அமெரிக்கா கோரவில்லை என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை வெளிப்படுத்தினார். அமெரிக்காவுடன் பாரிய முரண்பாட்டை கொண்டுள்ள வட கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர். சர்ச்சைக்குரிய கடல் பிராந்தியத்தில் சீனா இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருவதற்கு எதிராக அமெரிக்கா செயல்படுவது குறித்து ஏனைய தெற்காசிய நாடுகளின் கவனத்திற்கு அமெரிக்க ராஜாங்க செயலர் கொண்டு வந்துள்ளார். சர்ச்சைக்குரிய கட…
-
- 0 replies
- 436 views
-
-
அல்-கய்தாவின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரகசியமான முறையில் தகவல் திரட்டப்பட்ட இதுகுறித்த அறிக்கைகளில், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. செப்டெம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தபோது ஹம்சா சிறுவனாக இருந்தார். அந்தத் தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டபோது ஒசாமாவின் அருகில் அவர் இருந்ததாக அந்த அல்-கய்தா கூறுகிறது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் ஹம்சாவின் இருப்பிடம் குறித்த தகவல் அளிப்போருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படுமென்று அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. அதாவது, சுமார் 30 வயதானவராக கருதப்படும் ஹம்சா பின்…
-
- 0 replies
- 576 views
-
-
இங்கிலாந்து மகாராணியை கடற்கொள்ளைக்காரராக சித்தரித்து ஈரானில் கேலிச்சித்திரம்! இங்கிலாந்து மகாராணியை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் கேலி சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள கலாசார மையத்தில் இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் கேலி சித்திரங்கள் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தடையை மீறி சிரியாவுக்கு மசகு எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானுக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஜிப்ரால்டர் நீரிணைக்கு அருகே இங்கிலாந்து கடற்படை கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் நீரிணைப் பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கட…
-
- 0 replies
- 572 views
-
-
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரியுள்ளார். ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், கணவரை விட்டு சென்று நீதிமன்றத்தை நாடும் மூன்றாவது பெண்ணாவார். இளவரசி ஹயா அவரது உயிருக்கு பயந்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்த மாதம் தகவல் வெளியானது. செவ்வாய்க்கிழமை லண்டனில் இந்த வழக்க…
-
- 0 replies
- 489 views
-
-
ஜேர்மனியில் ரயிலின் முன்பாக தள்ளிவிடப்பட்ட சிறுவன் உயிரிழப்பு – தாய் படுகாயம்! ஜேர்மனி – பிரான்பேர்ட் ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது அதிவேக ரயிலின் முன்பாக பிறிதொருவரினால் தள்ளிவிடப்பட்ட எட்டு வயதுச் சிறுவன் உயிரிழந்ததுடன், அவனது தாயார் படுகாயமடைந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது எரித்ரியா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் வேண்டுமென்றே இவர்களை தள்ளிவிட்டதாகவும், தப்பிக்க முனைந்தபோது விரட்டிச்சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். 40 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் மூன்றாவதாக ஒருவரை தள்ளிவிட முயற்சித்தபோது அது பயனளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, பொல…
-
- 0 replies
- 556 views
-
-
சவுதிஅரேபியாவில் வெளிநாட்டினர் பணிபுரிய திடீர் தடை சவுதி அரேபியாவில் வெளிநாட்டில் பலர் வேலை பார்த்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்களில் அதிக அளவில் வெளிநாட்டினர் சமையல் பரிமாறுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். மேலும் மானேஜர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் சவுதி அரேபியர்களிடம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க சவுதி அரேபிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கடந்த ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் 13 சதவீதமாக இருந்தது. இதையடுத்து சவுதி அரேபியாவில் நட்சத்திர ஓட்டல்கள் மற்…
-
- 0 replies
- 605 views
-
-
அமெரிக்க புலனாய்வுத்துறைத் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் ! அமெரிக்க புலனாய்வுத்துறை அமைப்பின் பணிப்பாளரான டேன் கோட்ஸ் தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க புலனாய்வுத்துறை அமைப்பின் பணிப்பாளராக டேன் கோட்ஸ் பதவி வகித்து வந்தார். இவர் அதிபர் ட்ரம்பை நேரில் சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. கடிதத்தில் எனது பதவிகாலத்தில் அமெரிக்க உளவுத்துறை அமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்து இருக்கிறது.எனவே எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது என நம்புகிறேன்” என அவரது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்,…
-
- 1 reply
- 960 views
-
-
இந்தியாவில் மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அதுபோல் பல மாநிலங்களில் எந்த மாநிலக் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், அந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் ஒரே குற்றச்சாட்டு ஊழல் என்பதுதான். அப்படிப்பட்ட ஊழல், இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கக்கூடிய ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசுசாரா அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஒரு நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை, அந்த நாட்டில் லஞ்சம், ஊழல் மற்றும் நடைபெறும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகின…
-
- 2 replies
- 998 views
-
-
பாகிஸ்தான், இந்தியருக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் அதிமுக்கிய பதவிகள் லண்டன், ( நியூஸ் இன் ஏசியா ) உண்மையான ஒரு பல்லின நாடாகுவதை நோக்கிய பிரிட்டனின் பயணத்திற்கு சான்றாாக இரு தெற்காசிய நாட்டவர்களுக்கு ( இந்தியா, பாகிஸ்தான் ) புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் அதிமுக்கியமான பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீதி பட்டேல் உள்துறை அமைச்சராகவும் பாகிஸ்தானிய வம்சாவளியினரான சாஜித் ஜாவித் நிதியமைச்சராவும் பதவியேற்றிருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறவேண்டும் என்று உறுதியாக வலியுறுத்தி வந்திருக்கும் பட்டேல், தெரேசா மேயின் பிரெக்சிட் தந்திரோபாயத்தை மிகவுமம் கடுமையாக எதிர்…
-
- 2 replies
- 754 views
-
-
ராவல்பிண்டியில் குடியிருப்பு பகுதியில் வீழுந்த ராணுவ விமானம் – 15 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தான் – ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதியொன்றில் சிறிய ரக ராணுவ விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழ்ந்துள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தில் பயணித்த ஐந்து பேரும், பொதுமக்கள் 10 பேரும் உயிரிழந்ததாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியதாகவும், விமானம் கீழே விழுந்ததும் தீப்பற்றி எரிந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியுள்ளது. பாகிஸ்தான் தலை…
-
- 0 replies
- 643 views
-
-
பிரித்தானிய அமைச்சரை விமர்சித்தவருக்கு சிறைதண்டனை! பிரித்தானிய உள்துறை அமைச்சர் ப்ரீதி படேலை இனவெறி ரீதியில் விமர்சித்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ப்ரீதி படேலின் முகநூல் பக்கத்துக்கு, அவரை இனவெறியுடன் விமர்சித்து கடந்த 2018-ஆம் ஆண்டு சில குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை செய்த பொலிஸார் ஜெரார்ட் ட்ரெய்னர் (55) என்ற சந்தேக நபரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு மீதான விசாரணை, மான்செஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து, நீதிபதி சைமன் பிரையன் தீர்ப்பளித்தார். குறித்த தீர்ப்பில், ஜெரார்ட் ட்ரெய்னருக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.…
-
- 1 reply
- 859 views
-
-
ஏவுகணை சோதனை நடத்தப்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை! தேவை ஏற்பட்டால் ஏவுகணை சோதனை நடத்தப்படும் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இவ்வாறு சோதனை நடத்துவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என அமெரிக்காவுக்கு ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், “ஈரானின் ஏவுகணை என்பது முற்றிலும் தற்காப்புக்கானது. வேறு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. எனவே தேவை ஏற்படுமாயின் ஈரான் நிச்சயமாக ஏவுகணையை சோதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏவுகணை சோதனையின் நோக்கம் ஈரானின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு பதிலளிப்பதே ஆகும். அத்தோடு ஈரான் தன்னை தற்காத்துக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யும். அதற்கு உலகி…
-
- 1 reply
- 547 views
-
-
கனடா ரெரன்றோ வரசித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவில் தங்க நகை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் தமிழ் பெண்மணியொருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பெண்ணொருவரின் தாலியை இவர் அபகரித்ததாகவும், அவரது பைக்குள் தாலி மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த இந்த பெண்மணி, அடிக்கடி கனடா வந்து செல்பவர் என்றும், சோதடரான இவருக்கு கனடாவில் ஏராளம் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.pagetamil.com/67266/?fbclid=IwAR3175TPY7oi31mYY9GT_Swt4gpZjREx5mYs6kKfNIk7RJ3ixmPqPHNIONE
-
- 5 replies
- 894 views
-
-
கலிபோர்னியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி அமெரிக்காவின், வடக்கு கலிபோர்னியாவில் வருடாந்தம் இடம்பெறும் உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு இலட்சம் பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் திடீரென புகுந்த மர்ம நபர், அனைத்து பகுதிகளையும் நோக்கி தனது துப்பாக்கியால் சரமாரியகச் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான மூவர் சம்பவ இடத்திலேய உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபரும் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்துள்ளார். மேலும் இதில் காயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https…
-
- 0 replies
- 553 views
-
-
ரஷ்யாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது ரஷ்யாவில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை நகர சபை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,400 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 1,400 பேரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாவர்கள். எதிர்வரும், செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 45 இடங்களைக் கொண்ட மாஸ்கோ நகர சபைக்கான தேர்தலில் பங்கேற்க முடியாத வகையில், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்…
-
- 0 replies
- 392 views
-
-
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பொய் சொன்னாரா பிரிட்டிஷ் பெண்? 36 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சைப்ரஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, அங்கு சுற்றுலா வந்திருந்த 12 இஸ்ரேலிய நாட்டு இளைஞர்களால் தாம் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக புகார் தெரிவித்த பிரிட்டன் பெண், போலியான புகார் தெரி…
-
- 2 replies
- 532 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் தேன்நிலவுக்கு சென்ற இடத்தில் எரிமலைக்குள் விழுந்த புதுமாப்பிள்ளை 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGOFUNDME தேன்நிலவுக்கு சென்ற இடத்தில் எரிமலை ஒன்றுக்குள் விழுந்த, அமெரிக்காவைச் சேர்ந்த புதுமாப்பிள்ளையை அவரது மனைவி மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மவுண்ட் லியாமுய்கா எனும…
-
- 1 reply
- 460 views
- 1 follower
-
-
அனுமதி கிடைத்தது ; எல்லை சுவர் எழுப்ப தயராகும் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் வருவதை தடுக்கும் வகையில் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் திட்டத்திற்கு இராணுவ நிதியை பயன்படுத்திக் கொள்ள அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மெக்சிகோவையொட்டிய எல்லை வழியாக ஏராளமானோர் அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைவதைத் தடுப்பதற்கு எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவதற்கு நிதியை ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ட்ரம்ப் கோரிக்கை வைத்தார். இதற்கு ஜனநாயக கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் டிரம்ப், அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதன் மூலம் இராணுவ …
-
- 0 replies
- 891 views
-
-
யூதர்களினால் பொதுத் தேர்தல் திகதியில் மாற்றம்? கனேடிய பொதுத் தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கனேடிய பொதுத் தேர்தல் இடம்பெறுவதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், அந்தக் காலப்பகுதியில் யூதர்களுடைய விடுமுறை வருவதனால், தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து கனேடிய தேர்தல் தலைமை அதிகாரி பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது. கனேடிய மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடாத்தப்பட வேண்டும். ஆனால், ஒக்டோபர் 21ஆம் திகதி யூதர்களுடைய முக்கிய விடுமுறை நாளும் வருகிறது. குறித்த நாளில் யூதர்கள் வேலைசெய்வதோ, வ…
-
- 0 replies
- 441 views
-
-
ஆப்ரிக்க அமெரிக்க வழக்கறிஞர் குறித்து டிரம்ப் பதிவிட்ட ட்வீட் ஒன்று ஒருவர் இன ரீதியிலாக தாக்குவது என அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் பிரதிநிதியான எலிஜா க்யூமிங்க்ஸ் மற்றும் அவரின் மேரிலாண்ட் மாவட்டம் குறித்து டிரம்ப் டிவிட்டரில் மோசமாக பதிவிட்டுள்ளார். கருப்பின மக்களை அதிகமாக கொண்ட க்யூமிங்க்ஸின் பால்டிமோர் மாவட்டத்தை எலிகள் கொண்ட அழுக்கான ஒரு பகுதி என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் குடியேறிகளை நடத்தும் விதம் குறித்து விமர்சித்திருந்திருந்த க்யூமிங்க்ஸ் பிறரை `கொடுமைப்படுத்துபவர்` என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார். தடுப்பு மையங்களில் குடியேறிக…
-
- 0 replies
- 502 views
-
-
லிபிய அகதிகளின் படகு கவிழ்ந்ததில்150 பேர் பரிதாபமாக பலி ! லிபியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக சென்ற அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 150 பேர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த கடாபியின் ஆட்சி முற்றாக ஒழித்த பின்னர் அங்கு அதிகார போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதுடன் அங்கு குழுமோதல்களும் இடம்பெற்று வருவதுடன் இதில் சிக்கி பல்லாயிரக்காணக்கான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இவ்வாறு ஏற்படும் மோதல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள அந்நாட்டு மக்கள் வேறு இடங்களை நோக்கி கடல் மார்க்கமாக செல்ல முயற்சிக்கையில் இவ்வாறான உயிரிழப்புகள் பெருமளவில் ஏற்படுகின்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். …
-
- 2 replies
- 679 views
-