உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
வடகொரியா தனது விசேட தூதுவரை கொலைசெய்யவில்லை- சிஎன்என் அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதி கிம் சொல் கொலை செய்யப்படவில்லை சிறைவைக்கப்பட்டுள்ளார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க வடகொரிய ஜனாதிபதிகளிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து வடகொரியா அந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கிய தனது விசேட பிரதிநிதியை சுட்டுக்கொலை செய்துள்ளது என கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன. அவருடன் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளனர், விமானநிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. எனினும் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் தோல்வியில் முடிவடைந்த பேச்…
-
- 0 replies
- 953 views
-
-
மலையேறச் சென்று காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்பு இந்தியாவின் இமய மலைத்தொடரில் ஏறச் சென்ற போது காணாமல் போய் இருந்த எட்டு மலையேறிகளில் ஐவரின் சடலங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த 8 பேரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குறித்த தகவலை உறுதிசெய்துள்ளனர். குறித்த காணாமல் போன குழுவினரில் 4 பிரித்தானியர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் 1 அவுஸ்திரேலியர் அடங்கிய இந்த குழுவினர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நந்தாதேவி சிகரத்தில் ஏற முயற்சித்தநிலையில் காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பல்வேறு பனிச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படும் நிலையில் அவர்…
-
- 0 replies
- 512 views
-
-
லண்டன் மேயரை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர்! மூன்று நாள் இங்கிலாந்து விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் லண்டன் வந்தடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் லண்டன் மேயர் சாதிக் கானை ‘எதற்கும் மதிப்பற்றவர்’ எனவும் ‘முட்டாள்’ எனவும் விமர்சித்துள்ளார். சாதிக் கான் லண்டன் மேயராக மிகவும் மோசமான முறையில் பணியாற்றுள்ளார். இங்கிலாந்தின் மிக முக்கிய கூட்டாளியான அமெரிக்காவின் ஜனாதிபதியான எனது விஜயம் தொடர்பாக அவர் மிகவும் முட்டாள்தனமாக விமர்சித்துள்ளார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் பதிவு செய்துள்ளார். டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகள் தவறானவை எனவும் இங்கிலாந்து அவரை மரியாதையான முறையில் வரவேற்க தேவையில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதியின் இங்க…
-
- 0 replies
- 603 views
-
-
பாலஸ்தீனம் : தம்மை ஆளும் திறன் அவர்களுக்கு உள்ளதா? அமெரிக்க அதிபரின் மருமகனும் மத்திய கிழக்கிற்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆலோசகரும் பிறப்பால் யூதருமான கூச்னர் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு முக்கிய கேள்வி முன்வைக்கப்பட்ட்து. அதற்கு கூறிய பதிலில், பாலஸ்தீனத்துக்கு தன்னை தானே ஆளும் உரிமை உள்ளது ஆனால், அவர்களுக்கு அந்த திறமை இருக்கின்றதா? என்ற ஐயப்பாட்டை முன்வைத்தார். மேலும் கூறுகையில், பாலஸ்தீனத்தில் சமத்துவமான நீதித்துறை, பத்திரிகை சுதந்திரம், தனி மனித சுதந்திரம், மத சகிப்புத்தன்மை இல்லாமை போன்ற காரணங்களை முன்வைத்தார். https://www.aljazeera.com/news/2019/06/kushner-palestinians-capable-governing-190603051426199.html
-
- 2 replies
- 970 views
- 1 follower
-
-
மகாராணியைச் சந்தித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் விஜயத்தின் முதல்நாளான இன்று(திங்கட் கிழமை) பிரித்தானிய மகாராணியைச் சந்தித்துள்ளார்கள். இன்று காலை லண்டன் வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இடம்பெற்ற மதிய விருந்துபசாரம் மற்றும் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர். மதிய விருந்துக்கு பின்னர் ட்ரம்ப் தம்பதியர் வெஸ்ட்மின்ஸ்டர் சதுக்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வர். அதைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது பாரியார் கமீலா ஆகியோரால் அவர்களுக்கு தேநீர் விருந்து வழ…
-
- 0 replies
- 709 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகளின் புதிய யுத்தி குறித்த தகவல் வெளியானது! ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பியர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 முதல் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர்கள் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியை இழந்த ஐ.எஸ் அமைப்பினர், தமது அமைப்பில் சேர்ந்துள்ள வெளிநாட்டவரை சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பி வைப்பதை புது தந்திரமாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. இதன் ஊடாக ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அவர்கள் திட்டமிட்டு வருவதாகவ…
-
- 1 reply
- 668 views
-
-
அமெரிக்காவை தாக்கும் தொலைவில் நாங்கள் இருக்கிறோம் – ஈரான் எச்சரிக்கை! வளைகுடாவில் ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவிலேயே அமெரிக்க இராணுவம் உள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏதாவது ஏற்பட்டால் பெற்றோல் ஒரு பீப்பாயின் விலை 100 டொலர்களுக்கும் மேல் உயர்த்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது. இவ்வாறு ஈரான் அயதுல்லா காமேனி அரசாங்கத்தின் இராணுவ உயரதிகாரியான ரஹீம் சஃபாவி தெரிவித்ததாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. உயர் ராணுவ அதிகாரியான யாஹ்யா ரஹீம் சஃபாவி இது குறித்து பேசுகையில், ”ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க இராணுவ வாகனங்கள் உள்ளன. எங்கள் படையின் முழுமையான பலம் என்னவென்று அ…
-
- 1 reply
- 955 views
-
-
அமெரிக்க விசாவுக்கு புதிய விதிமுறை அமெரிக்காவுக்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு அந் நாட்டு அரசாங்கம் புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்டி அமெரிக்காவுக்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களோடு, கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை அளிக்க வேண்டும் என்று அந்த புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டபோது, இதன் காரணமாக ஓராண்டிற்கு 14.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அரசு ரீதியான மற்றும் உத்தியோகபூர்வ விசா விண்ணப்பங்களுக்கு இந்த புதிய விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 11 பேர் உயிரிழப்பு அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்; 6 பேர் காயமடைந்தனர். http://tamil.adaderana.lk/news.php?nid=114580
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதிநிதிக்கு நடந்த கொடுமை- வெளியாகியது அதிர்ச்சி தகவல் அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளிற்கு முக்கிய காரணமான அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதிநிதியை வடகொரியா சுட்டுக்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் பின்னர் இவர் கொல்லப்பட்டுள்ளார். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமைக்கு இவரே காரணம் என குற்றம்சாட்டினை முன்வைத்து வடகொரியா அரசாங்கம் இவரை கொலை செய்துள்ளது. தோல்வியில் முடிவடைந்த டிரம்ப் -கிம் சந்திப்பினை ஏற்பாடு செய்த அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதிநிதி கிம்சொல்லும் வெளிவிவகாரஅமைச்சின் …
-
- 0 replies
- 689 views
-
-
. https://www.aljazeera.com/news/2019/05/myanmar-arrest-warrant-issued-anti-muslim-monk-wirathu-190529051810338.html பௌத்த பின்லேடன் என அழைக்கப்படும் மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்தமதகுரு அசின் விராதிற்கு எதிராக மியன்மார் பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர். மியன்மாரின் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகி தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே மியன்மார் பொலிஸார் விராதிற்கு எதிராக பிடிவிறாந்தை பிறப்பித்துள்ளனர். அசின் விராதிற்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தியுள்ள பொலிஸார் அவர் அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பை தூண்ட முயன்றார் எனவும் தெரிவித்துள்ளனர். அசின் விராதுவை தேடும் நடவடிக்கைகளை நேற்றையதினம் ஆரம்பித்துள்ள பொலிஸார் மண…
-
- 0 replies
- 723 views
-
-
நூலகங்களாக மாற்றம் செய்யப்படும், பொதுத்தொலைபேசிக் கூண்டுகள்! பிரித்தானியாவில் பாவனையிலிருந்த பொதுத்தொலைபேசிக் கூண்டுகள் தற்போது நூலகங்கள் மற்றும் உணவகங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. செல்லிடத் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், வீதியோரங்களிலுள்ள பொதுத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே பிரித்தானியாவில் பாவனையிலிருந்த பொதுத்தொலைபேசிக் கூண்டுகள் தற்போது நூலகங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரித்தானியாவின் சிவப்பு நிற பொதுத் தொலைபேசிக் கூண்டுகள் பிரசித்திபெற்றவை. ஆரம்பத்தில் சுமார் 31,000 பொதுத்தொலைபேசிக் கூண்டுகள் பிரித்தானியாவில் இருந்ததாக கூறப்படுகின்றது. எனினும், தற்போது சுமார…
-
- 0 replies
- 708 views
-
-
‘மதுரைக்கு வழி வாயில’ என்பது பழமொழி. அதாவது, மதுரைக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்றால், ‘வாயால்’ கேட்டுத்தான் போகணும் என்பதே இதன் அர்த்தம். ஆனால், இப்போது நாம் யாரிடமும் வழி கேட்பதில்லை. கூகுள் மேப்பைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் கூகுள் மேப் நேவிகேஷன் சிஸ்டம் சரியான முறையில் வழிகாட்டினாலும், சில நேரங்களில் முட்டுச்சந்துக்கு அழைத்துச்சென்று நிறுத்திவிடும். பலருக்கும் இதுபோன்ற அனுபவம் ஒருமுறையாவது ஏற்பட்டிருக்கும். இதுபோன்றே, சேட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டத்தைக் கண்மூடித்தனமாக நம்பியதால், இங்கிலாந்திலிருந்து இத்தாலி நாட்டில் உள்ள ரோமுக்குச் செல்ல வேண்டியவர், ஜெர்மன் நாட்டில் உள்ள குக்கிராமத்துக்குச் சென்று சேர்ந்த சம்பவம் நடந்திருக்கிறது. image co…
-
- 0 replies
- 899 views
-
-
கேமரூன் நாட்டின் படுகொலைகள் இலங்கையில் இறுதிப்போர் காலத்தில், நிர்வாணமாக, தமிழர்களை, புலிகளாக சித்தரித்து, கண்களை கட்டி ராணுவம் சுட்டு கொலை செய்த காட்சிகளை பார்த்தோம். அதேபோல கேமரூன் நாட்டில், ஒரு நிகழ்வு. ஒரு பெண், ஜிகாதி என கைதாகிறார். அவரை அடித்து இழுத்து செல்கிறது ராணுவம். அந்த பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு ஓடி செல்கிறார் அவரது சிறிய மகள். கொலைக்களத்துக்கு வந்ததும், அந்த பெண்ணின் கண்கள் கறுப்புத்துணியால் கட்டப் படுகின்றன. சிறுமியின் கண்களும் அவ்வாறே கட்டப்படுகின்றன. அதுமட்டுமல்ல. அந்த பெண்ணின் முதுகில், அவரது கைக்குழந்தை ஒன்று துணியால் கட்டிய நிலையில் இருக்கிறது. பின்னர் ராணுவத்தினை சேர்ந்த ஒருவர், துப்பாக்கியினை தூக்கி மேலே வெடிவைத்து, பி…
-
- 0 replies
- 828 views
-
-
பிரெக்ஸிற்றுக்கு பின்னரும் பிரித்தானியாவில் வாழ 750000 ஐரோப்பியர்கள் விண்ணப்பித்துள்ளனர்: ஜாவிட் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறிய பின்னரும் பிரித்தானியாவில் வாழ்வதற்காக 750,000 க்கும் மேற்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த மக்கள் விண்ணப்பித்துள்ளதாக உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த மக்கள் எமது நண்பர்கள் எனவும் அவர்கள் இந்த நாட்டுக்காக நிறைய பங்களிப்பு செய்கிறார்கள் எனவும் சாஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார். மேலும் பிரெக்ஸிற்றின் விளைவு எதுவாக இருந்தாலும் பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியர்கள் பிரெக்ஸிற்றின் பின்னரும் இங்கேயே வாழ்வதற்கே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரெக்ஸி…
-
- 1 reply
- 610 views
-
-
சிரியாவில் குண்டு வீச்சு:20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பு மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில், ஒன்பது குழந்தைகள் உள்பட, 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வீச்சுல், அங்குள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளது. . சிரியாவில் பஷார் அல் அசாத் அரசுக்கு எதிராக, ஹயாத் தாஹிர் அல்ஷாம் என்ற பிரிவினைவாத அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதத்தில் இருந்து இந்த அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளில் அரசுப் படைகளும் அதற்கு உதவும் ரஷ்ய படைகளும் தாக்குதலை நடத்தி வருகின்றன. விமானம் மூலம் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவ…
-
- 0 replies
- 506 views
-
-
மீண்டும் பதவியேற்றார் ஸ்கொட் மோரிசன் அவுஸ்திரேலியப் பிரதமராக ஸ்கொட் மோரிசன் மீண்டும் இன்று பிரதமராக பதவியேற்றார். அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஜெனரல் சர் பீட்டர் காஸ்குரோவ் முன்னிலையில், ஸ்கொட் மோரிசன் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அத்துடன் உதவிப் பிரதமராக மைக்கேல் மெக்கார்மேக் (Michael McCormack) க்கும் அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர். அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து லிபரல் கட்சி உறுப்பினர்கள், ஸ்கொட் மோரிசனை மீண்டும் பிரதமராக தெரிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/570…
-
- 0 replies
- 355 views
-
-
வாழ்வதற்கே இலஞ்சம் கொடுக்கும் மக்கள் வடகொரிய பொதுமக்கள் நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதற்கு அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் பொதுமக்களை பல்வேறு வழிகளில் அச்சுறுத்தி லஞ்சம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் சுயதொழில்களில் ஈடுபடுகின்ற மக்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த அறிக்கை வெறுமனே அரசியல் நோக்கில் போலியாக தயாரிக்கப்பட்டது என வடகொரியா அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/57049
-
- 0 replies
- 505 views
-
-
நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்ட தாய்வான் போர் விமானங்கள் தாய்வானிய போர் விமானங்கள் பயிற்சி நடவடிக்கையின் அங்கமாக நேற்று செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலையொன்றில் தரையிறக்கப்பட்டன. மேற்படி நெடுஞ்சாலையானது வழமையாக போக்குவரத்து நெரிசல் மிக்கதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் இராணுவ ஆற்றல்களை வெளிப்படுத்தும் முகமாக இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கையின் அங்கமாக தாய்வானிய விமானத் தளங்கள் மீது சீனாவால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் போர் விமானங்களை நெடுஞ்சாலையில் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்…
-
- 0 replies
- 579 views
-
-
“ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது அரசியல் தற்கொலையாக அமையும் ” பிரித்தானிய பழைமைவாதக் கட்சி ஐரோப் பிய ஒன்றியத்திலிருந்து எதுவித உடன்படிக்கையுமின்றி வெளியேறுவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முயற்சிக்குமானால் அது அந்தக் கட்சிக்கு அரசியல் தற்கொலையொன்றாகவே அமையும் என அந்தக் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரும் வெளிநாட்டு செயலாளருமான ஜெரேமி ஹன்ட் எச்சரித்துள்ளார். தெரேஸா மே பிரதமர் பதவியை விட்டு விலகியதையடுத்து அவரது பதவி நிலைக்கு போட்டியிடும் 10 வேட்பாளர்களில் ஜெரேமி ஹன்ட்டும் ஒருவராவார். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதைத் தவிர்ப்பதைவிடவும் எதுவித உடன்படிக்க…
-
- 0 replies
- 769 views
-
-
சிறைகளில் கைதிகள் மோதல்- 40 பேர் பலி பிரேஷிலில் 4 சிறைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 40 கைதிகள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகர் மனாயஸ்சில் உள்ள 4 சிறைகளில் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சிறைகள் அனைத்தும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. அதில் ஒரு சிறையில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற சிறைகளில் 25 பேர் உயிழந்துள்னர். ஆக மொத்தம் 40 கைதிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு துப்பாக்கிகள் அல்லது கத்திகளை பயன்படுத்தவில்லை. சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது என அதிகாரிகள் தெரிவித்தனர். உலகிலேயே அதி…
-
- 0 replies
- 770 views
-
-
ஆப்கானில் கடந்த வருடம் 192 பாடசாலைகள் மீது தாக்குதல் - யுனிசெவ் ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் பாடசாலைகள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது என தெரிவித்துள்ள யுனிசெவ் இதன் காரணமாக ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மாணவர்களிற்கு உரிய கல்வியை உறுதிப்படுத்தமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2017 இல் பாடசாலைகள் மீது 68 தாக்குதல்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள யுனிசெவ் 2018 இல் 192 பாடசாலைகள் தாக்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கல்வி தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளது என தெரிவித்துள்ள யுனிசெவ் பாடசாலைகள் மீதான இந்த அர்த்தமற்ற தாக்குதல்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கொல்லப்படுதல், காயமடைதல் கடத்தப்படுதல் மற்றும் கல்வி…
-
- 0 replies
- 403 views
-
-
கொங்கோவில் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி ; 200 க்கும் மேற்பட்டோர் மாயம்! கொங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் உள்ள மிகப்பெரிய ஏரியில் சென்ற படகொன்றே இவ்வாறு கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 183 பேர் மாத்திரம் பயணிக்க கூடியதான படகில் 300 க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளதுடன், அளவுக்கு அதிகமாக சரக்குகளையும் ஏற்றிச் சென்றமையினால் பராம் தாங்க முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் படகில் பயணித்த பெண்கள்…
-
- 0 replies
- 327 views
-
-
கூலிப்படையை அனுப்பி கொலை செய்வதற்கு சமனானதே கருக்கலைப்பு – பாப்பரசர் ஃபிரான்சிஸ் ஒரு பெண்ணின் கருவில் உள்ள சிசுவை அழிப்பது கூலிப்படையை அனுப்பி கொலை செய்வதற்கு சமனானது என்று பாப்பரசர் பிரான்சிஸ் கவலை வௌியிட்டுள்ளார். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்பை தடை செய்யும் சட்டம் அண்மையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பெண்ணுரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், வொஷிங்டன் நகரில் வத்திக்கான சார்பில் கருக்கலைப்புக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. இதில் பாப்பரசர் ஃபிரான்சிஸ் பங்கேற்றிருந்தார் அங்கு உரையாற்றிய அவர், “கருக்கலைப்பு வ…
-
- 0 replies
- 482 views
-
-
மார்ச் 29 இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டிய கடமையை செய்யாததால்.. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்துள்.. பிரிட்டன் தள்ளப்பட்டது. இந்தத் தேர்தலை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் தனது கூட்டமைப்பு நாடுகளுக்குப் பணப்பட்டுவாடா செய்கிறது. உண்மையில்.. இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் அப்படி என்னத்தைத்தான் வெட்டிக் கிழிக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரிட்டனின்.. பிரதான கட்சிகளான.. பழமைவாதக் கட்சியும் (கென்சவேட்டிவ்) மற்றும் தொழிற்கட்சியும் (லேபர்) 2016 மக்களின் தெரிவான பிரக்சிட் டை அமுல்படுத்தாமல் சடுகுடு ஆடி வந்த நிலையில்.. மீண்டும்.. பிரிட்டன்.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான புதிய கால எல்லை 31 ஒக்டோ…
-
- 7 replies
- 1.8k views
-