உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
நேபாளத்தில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் – நால்வர் உயிரிழப்பு! நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த குண்டுத்தாக்குதல்களில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தலைநகர் காத்மண்டுவில் அடுத்தடுத்து மூன்று குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதல் 2 தாக்குதல்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. மூன்றாவது சம்பவம் சில மணி நேர இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவங்கள் குறித்த விசாரணை தொடரும் வேளையில், சட்டவிரோதக் கம்யூனிஸ்ட் குழு அதற்குக் காரணமாயிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, குண்டுத்தாக்குதல்களை அடுத்து நேபாளத்தின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்ப…
-
- 0 replies
- 441 views
-
-
உலகின் அதிவேக ரயில் சோதனை வெற்றி! உலகின் அதிவேக ரயில் சேவையை தனது தலையாய குறிக்கோளாக வைத்துள்ள ஜப்பான், மணிக்கு 360 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த சோதனை ஓட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜப்பான் பரிசோதித்துள்ளது. அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மைபாரா மற்றும் கியோட்டோ நகரங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட இந்த ரயில் சோதனை மூலம் மணிக்கு 360 கிலோமீட்டர் வேகம் என்ற இலக்கை அடைய முடிந்ததாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ரயில், வரும் ஜூலை மாதத்தில் இருந்து டோக்கியோ முதல் ஒசாகா வரையான வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு துறைகளிலும் மாற்றங…
-
- 0 replies
- 729 views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலின் இறுதி நாள் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளில் 7 இடங்களில் ஏற்கனவே வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மிகுதி 21 இடங்களுக்கான தேர்தல் 4 ஆவது மற்றும் இறுதி நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த தேர்தலில் 400 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே நெதர்லாந்து, பிரித்தானியா, அயர்லாந்து, செக் குடியரசு, லாட்வியா, மால்டா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இடங்களில் தேர்தல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மிகுதி இடங்களுக்கான வாக்குப்பதிவு அனைத்தும் முடிவடைந்து இறுதி முடிவுகள் இன்று (ஞாய…
-
- 0 replies
- 600 views
-
-
இளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல? இளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி பரிஸில் அமைந்துள்ள பாண்ட் டி லா அல்மா சுரங்கத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளவரசி டயானா (36), அவரது காதலர் டோட்டி ஃபேயட் (42) மற்றும் அவர்களது சாரதி ஹென்றி பால் (41) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து இடம்பெற்ற பகுதியில் மர்மமான கார் ஒன்று காணப்பட்டதாகவும், பின்னர் அது மாயமானதாகவும் பரிஸ் நகர பொலிஸார் அப்போது குறிப்பிட்டிருந்தனர். இந்தநிலையில் இளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல என விபத்தை நேரில் பார்த்த ராபின் மற்றும் ஜாக் ஃபயர்ஸ்டோன் தம்பதியினர் க…
-
- 17 replies
- 2.8k views
-
-
ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது May 25, 2019 ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இடம்பெற்ற இந்த கைதுச் சம்பவத்தில் யோகா பயிற்றுநரும் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயிற்சியாளர் வகுப்புகள் நடத்த அனுமதி பெறவில்லை எனவும், இன்ஸ்ரகிராமில் தம் யோகா வகுப்புகள் குறித்து விளம்பரம் செய்ததாகவும் உள்ளூர் நீதித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் முறையற்று நடந்துகொண்டதாகவும், முறையற்ற ஆடைகளை அணிந்திருந்ததாகவும் குறித்த …
-
- 1 reply
- 933 views
-
-
பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே பிரிட்டன் பிரதமர் திரேசா மே தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019 மார்ச் இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் திரேசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் பிரிட்டன் பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆளும் பழமைவாத கட்சி உறுப்பினர்களே திரேசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில் முன்னர் சில அமைச்ச…
-
- 1 reply
- 700 views
-
-
ஐரோப்பிய வாக்காளர்களுக்கு பிரித்தானியாவில் வாக்களிக்க அனுமதி மறுப்பு! பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியர்கள் இன்று இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு பிரித்தானிய வாக்குப்பதிவு நிலையங்களில் அனுமதிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஐரோப்பிய வாக்காளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வாக்குப்பதிவு நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு இன்னும் ஐந்து மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில் அனுமதி மறுக்கப்பட்ட வாக்காளர்கள் தமது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். http://athavannews.com/ஐரோப்பிய-வாக்காளர்களுக்/
-
- 4 replies
- 1.3k views
-
-
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினருக்க…
-
- 19 replies
- 1.5k views
-
-
தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவானார் தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவாகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரிர் ரமபோசா இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிபராக தெரிவுசெய்யப்பட்டார். இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயேங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தனர். இதனிடையே, அதிபர் பதவிக்கு சிரில் ரமபோசாவைத் தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன்…
-
- 0 replies
- 415 views
-
-
படத்தின் காப்புரிமை AFP பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் - காரணம் தெரியாமல் திணறும் அரசு பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. முதல் முதலாக பிப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு குழந்தை தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஏராளமான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். குழப்பமடைந்த மருத்துவர் இம்ரான் ஆர்பானி குழந்தைகளின் ரத்தத்தை பரிசோதித்து பார்த்ததில் அனைவருக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்தது. ஏ…
-
- 2 replies
- 898 views
-
-
ஹுவாவேயின் நிறுவனர் ரென் சங்ஃபே, அமெரிக்கா தங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிடுகிறது என்று தெரிவித்துள்ளார். சீன அரசு ஊடகத்திடம் பேசிய அவர், சமீபத்தில் அமெரிக்கா விதித்த தடையால் ஏற்பட்ட விளைவுகளை குறித்து பேசிய அவர், எதிர்காலத்தில் தங்களின் 5ஜி தொழில்நுட்பத்துடன் யாரும் ஈடுகொடுக்க முடியாது என்று தெரிவித்தார். கடந்த வாரம் அனுமதியில்லாமல் தங்கள் நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்த்தது அமெரிக்கா. அந்த நிறுவனத்தை தடை செய்யு…
-
- 0 replies
- 757 views
-
-
இரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்துகின்றது சிரியா- அமெரிக்கா கடும் எச்சரிக்கை சிரிய அரசாங்கம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றது என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது உறுதியானால் அமெரிக்காவும் அதன் சகாக்களும் உடனடி நடவடிக்கைகளை எடுக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளது. சிரியாவின் வடமேற்கு பகுதியில் அரச படையினர் குளோரின் தாக்குதலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளனர். அசாத் அரசாங்கம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றது என்பதற்கான துரதிஸ்டவசமான அறிகுறிகள் தென்படுகின்றன என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மோர்கன் ஓர்கட்டஸ் தெரிவித்துள்ளார். மே 19 ம் திகதி இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற…
-
- 3 replies
- 905 views
-
-
அமெரிக்கா போர் அச்சுறுத்தலை விடுக்காது ஈரானை மரியாதையுடன் நடத்த வேண்டும் - ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் அமெரிக்காவானது ஈரானை போர் அச்சுறுத்தல் விடுப்பதை விடுத்து மரியாதையுடன் நடத்த வேண்டும் என ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரீப் அழைப்பு விடுத்துள்ளார். ஈரான் போரில் ஈடுபட விரும்புமானால் அது அதற்கு உத்தியோகபூர்வமான முடிவாகவே அமையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணையத்தளத்தில் அச்சுறுத்தல் விடுத்து ஒரு நாள் கழித்து ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் மேற்படி அழைப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. "அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றை நோக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் சென்றுவ…
-
- 0 replies
- 378 views
-
-
இங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்தின் சிறுவர்களுக்கான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவான சிறுவர்கள் உளநலம் பாதிக்கப்பட்டநிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சமூகத்திலும் பாடசாலைச் சூழலிலும் சிறுவர்களுக்கான ஆதரவு சரியாக வழங்கப்படாமையே, இந்தநிலைமைக்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் உளநலம் பாதிக்கப்பட்ட 250 சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவு…
-
- 2 replies
- 840 views
-
-
100,000 அவுஸ்ரேலிய டொலர் மதிப்புள்ள தங்க கட்டிகள் கண்டுபிடிப்பு! அவுஸ்ரேலியாவில் 100,000 அவுஸ்ரேலிய டொலர் மதிப்புள்ள தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கல்கூர்லி பகுதியிலுள்ள தங்கச் சுரங்கத்திற்கு அருகில் இந்த தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்காக எதையோ தேடிச் செல்லும் போது இவை கண்டுபிடிக்கப்பட்டதாக, தங்க கட்டிகளை கண்டுபிடித்தவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் அகழப்படும் முக்கால்வாசித் தங்கம் கல்கூர்லியிலும், அதனைச் சுற்றியப் பகுதிகளிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/100000-அவுஸ்ரேலிய-டொலர்-மதிப்ப/
-
- 0 replies
- 356 views
-
-
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் : 25 பேர் கொன்று குவிப்பு அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தினர். 3 ஆயிரம் அப்பாவி மக்கள் இந்த தாக்குதலில் பலியானது உலக வரலாற்றில் கரும்புள்ளியாக பதிவாகி உள்ளது. இந்த தாக்குதல்களை நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சி நடத்தி வந்த தலீபான்களை அப்புறப்படுத்தியது. மக்களாட்சியை கொண்டுவந்தது. ஆனாலும் 18 ஆண்டுகளாக போராடியும் தலீபான் பயங்கரவாதிகளை முற்றில…
-
- 0 replies
- 317 views
-
-
மெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் : சவுதி அரேபியா குற்றச்சாட்டு ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹவுத்தி போராளிகளுக்கு ஈரான் அரசு தொடர்ந்து ஆதரவு அளிப்பது…
-
- 0 replies
- 647 views
-
-
பாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி உக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை அடுத்து நாடாளுமன்றில் பெரும்பானமையை பெற்றுக்கொள்வதற்காக உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி, பொதுத்தேர்தல் நடத்தவும் அறிவித்தல் விடுத்துள்ளார். அரசியல் அனுபவமில்லாத வொளடிமீர் சிலேன்ஸ்கி கடந்த மாதம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் பாராளுமன்றத்தில் அவருடைய புதிய கட்சியின் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவமும் இல்லை என்பதனால் பொதுத்தேர்தல் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் இடம்பெற்ற ஐந்து ஆண்டுகால மோதலில் 13 ஆயிரம் பேர் கிழக்கு உக்ரேனில் உயிரிழந்துள்…
-
- 1 reply
- 674 views
-
-
"ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்" ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அதோடு முடிந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதியாக டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ஈரானுடானான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலும் பல்வேறு பொருளாதார தடைகளை ட்ரம்ப் விதித்து வருகிறார். இதனால் ஈரான் - அமெரிக்கா இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவம் மீ…
-
- 0 replies
- 643 views
-
-
வியட்நாமில் உருவாக்கப்பட்டு வரும் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை! தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை வியட்நாமில் உருவாக்கப்பட்டு வருகின்றது. சுமார் 72 மீட்டர் உயரத்தில் ‘புத்தா அமிதாபா’ என்ற புத்தர் சிலையே இவ்வாறு உருவாக்கப்பட்டு வருகின்றது. 2015 இல் ஆரம்பமாகியிருந்த குறித்த சிலையின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலையில் மொத்தமாக 13 மாடிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதில் 12 மாடிகளுக்குச் சுற்றுப்பயணிகள் செல்ல முடியும் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, வெண்கலத்தால் செய்யப்பட்ட மிக உயரமான புத்தர் சிலையும் வியட்நாமிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிப்பு! ஈராக்கில் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், முற்றிலுமாக அழிக்கப்படாத ஐ.எஸ். பயங்கரவாதிகள் சில இடங்களில் பதுங்கி இருந்து தாக்குதல்களையும் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் வெடிப்பொருட்களை பதுக…
-
- 0 replies
- 533 views
-
-
மென்பொருளின் கோளாறே விபத்துக்களுக்கு காரணம் – ஒப்புக்கொண்டது போயிங்! போயிங் 737 MAX ரக விமானங்களுக்கான பாவனை மென்பொருளின் வடிவமைப்பில் கோளாறு இருந்ததை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விமானிகளுக்குப் பயிற்சி அளிக்க குறித்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த பாவனை மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், பாவனை மென்பொருள் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கும் கூடுதல் விவரங்களை போயிங் நிறுவனம் வழங்கியுள்ளது. இதேவேளை, தொடர்ச்சியாக இடம்பெற்ற விமான விபத்துக்களைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் போயிங் 737 MAX ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மென்பொருளில…
-
- 5 replies
- 813 views
-
-
அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள சட்ட அங்கீகாராம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்காசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தைவானிலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வந்தது. இதுதொடர்பாக, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் வகையில் 24-5-2019 அன்றைய தினத்துக்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என இரண்டாண்டு கெடு விதித்து கடந்த 2017-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தைவான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்கள் மீது கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்று இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்…
-
- 33 replies
- 4.2k views
- 2 followers
-
-
அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி May 19, 2019 அவுஸ்திரேலியாவில் நேற்றையதினம் நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். இதனால் லிபரல்கட்சிக்கு பொதுத் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் எனக் கருதப்பட்ட போதிலும் பிரதமர் ஸ்கொட் மாரிசன் தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. #scottmorrison #australia #election #அவுஸ்தி…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஆரம்பப் பாடசாலைகளில் ஹிஜாப் அணியத் தடை: ஒஸ்ரியாவில் சட்டமூலம் நிறைவேற்றம் ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் சட்டமூலம் ஒஸ்ரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் வலதுசாரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவிற்கு நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால், யூதர்கள் அணியும் யார்முல்கே மற்றும் சீக்கியர்கள் அணியும் பட்கா ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆளும் வலதுசாரி மக்கள் கட்சி மற்றும் வலதுசாரி சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் ஆதரவுடனேயே இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavanne…
-
- 1 reply
- 1.2k views
-