Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. படத்தின் காப்புரிமை US DEPARTMENT OF DEFENSE இரானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்ப உள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் செயலாளர் பாட்ரிக் ஷானஹான், இரானிய படைகளின் "விரோத நடத்தைக்கு" பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஓமன் வளைகுடாவில் அண்மையில் நடந்த எண்ணெய் டேங்கர் தாக்குதலுடன் இரானுக்கு தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டுக்கும் புதிய படங்களையும் அமெரிக்க கடற்படை பகிர்ந்…

  2. நீதிமன்றத்தில் மரணமான எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி எகிப்தில் ஜனநாயக முறையில் முதல் முறையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட முகமது மோர்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். எகிப்தில் ஜனநாயக முறையில் முதல் முறையாக ஜனாதிபதியாகத் தெரிவுச் செய்யப்பட்டவர் 67 வயதான முகமது மோர்சி ஜனாதிபதியாக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த ஜூலை 2013 இல் அந்நாட்டு இராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. ஜனாதிபதி மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக நி…

  3. டொனால்ட் ட்ரம்பின் பெயரைக் கொண்ட புதிய குடியிருப்பு பிரதேசம் இஸ்ரேலால் திரைநீக்கம் ஜனா­தி­பதி பெஞ்­ஜமின் நெட்­டன்­யாஹு தனது நாட்டால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கோலன் ஹைட்ஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள புதிய குடி­யி­ருப்பு பிர­தே­சத்­திற்கு அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் பெயரை சூட்டி அதனை வைப­வ­ரீ­தி­யாக நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை திறந்­து­வைத்­துள்ளார். அந்தப் பிராந்­தி­ய­மா­னது பொது­வாக சர்­வ­தேச ரீதியில் சிரி­யாவின் பிராந்­தி­ய­மாக கருப்­ப­டு­கின்ற நிலையில் அது தொடர்பில் இஸ்­ரேலின் இறை­மையை அங்­கீ­க­ரிக்க டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்­மா­னத்­துக்கு கௌர­வ­ம­ளிக்கும் வகை­யி­லேயே அதற்கு டொனால்ட் ட்ரம்பின் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ள­தாக இஸ்­ரே­லிய ஜனா­தி…

  4. நைஜீரியாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – காற்பந்து ரசிகர்கள் 30 பேர் உயிரிழப்பு நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காற்பந்து ரசிகர்கள் 30 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போகோஹராம் தீவிரவாதிகளுக்கும், நைஜீரிய அரச படைகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள ‘கொண்டுகா’ பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை காற்பந்து ரசிகர்கள் சிலர் ஒன்று கூடி போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு கூட்டத்திற்குள் 4 தற்கொலைப்படை தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெண்கள் என்றும் ஒருவர் ஆண் எனவும் கூறப்படுகிறது. …

  5. கொள்ளையர்கள் வெறியாட்டம் – 35 பொதுமக்கள் உயிரிழப்பு! நைஜீரியாவில் கொள்ளையர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 35 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நைஜீரியாவின் வடக்கு பகுதியிலுள்ள ஜம்பாரா மாநிலத்துக்குட்பட்ட டுங்கர் கபாவ் மற்றும் கிடான் வாவா ஆகிய கிராமங்களுக்குள் நுழைந்த கொள்ளையர்களினாலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த கொள்ளையர்கள் மக்கள் வைத்திருந்த பணம் மற்றும் உணவுப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அத்துடன், 35 பொதுமக்களை கொலை செய்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, கடந்த வாரத்தில் இதேபோன்று நைஜர் மாநிலத்திலுள்ள …

  6. ஹொங்கொங்கின் நாடு கடத்தல் சட்டமூலம் நிறுத்தம்! ஹொங்­கொங்கில் குற்­ற­ச்­செ­யல்கள் தொடர்பில் கைது­செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்­களை விசா­ர­ணைக்­காக சீனா­விடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிக்கும் புதிய சட்­ட­மூ­லம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு எதிராக ஹொங்கொங் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களையடுத்தே இந்த சட்டமூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந் நாட்டு ஜனாதிபதி கேரீ லாம், நாடுகடத்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்டப் பேரவை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். அந்தச் சட்ட வரைவு குறித்து சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருனுடன் ஆலோசனை நடத்தி, …

    • 1 reply
    • 742 views
  7. குற்றத்தை ஏற்க மறுத்தார் நியூசிலாந்து மசூதி கொலையாளி நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பலரை கொலை செய்த நபர் தனது குற்றத்தை ஏற்க மறுத்துள்ளார். இந்நிலையில் தான் இந்த கொலையை செய்யவில்லை என சிறித்துக்கொண்டெ பதில் கூறியதோடு,தான் இந்த விடயத்தை ஏற்க மறுக்கிறேன் எனவும் தெரிவித்தார். குறித்த நபர் கூறிய கருத்தால் அந்நாட்டு நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த வழக்கினை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/58292

    • 1 reply
    • 743 views
  8. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இராஜினாமா; டுவிட்டரில் ட்ரம்ப் அறிவிப்பு அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை ட்ரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஜனாதிபதி ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளரான இவர், ஒரு முறை, “ட்ரம்ப் ஜனாதிபதி ஆகவேண்டும் கடவுளே விரும்புகிறார்” என கூறியதன் மூலம் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றார். இந்நிலையில், சாரா சாண்டர்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்த தகவலை ட்ரம்ப் டுவிட்டரில் தெரிவித்தார். இது பற்றி அவர், “3½ ஆண்டுகளாக சிறப்பான பணி…

  9. அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்தது ஈரான்! In உலகம் June 14, 2019 7:39 am GMT 0 Comments 1222 by : Benitlas அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஓமான் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் அரசே பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்திருந்தார். ஓமான் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த நோர்வேக்கு சொந்தமான ஃபுரொன்ட் அல்ரயர் கப்பலில் அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என நோர்வே கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிங்கப்பூருக்கு சொந்தமான கொகுகா சரக்கு கப்பல் …

  10. மியன்மாரிலிருந்து மலேசியாவுக்கு ரோஹிங்கியா முஸ்லிம்களை கடத்திய படகு விபத்து – 65 பேர் மீட்பு June 14, 2019 மியன்மாரிலிருந்து 65 ரோஹிங்கியா முஸ்லிம்களை மலேசியாவுக்கு கடத்த எடுக்கப்பட்ட முயற்சி, தாய்லாந்தின் தென் கடல்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதன் போது குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 65 ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டு சதுன் மாகாண முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை கடத்துவதில் ஈடுபட்ட சங்கோம் பப்ஹான் என்னும் தாய்லாந்து நாட்டு படகோட்டி ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களை மலேசியாவுக்கு அழைத்து செல்ல மியன்மாரை சேர்ந்த ஒருவரால் படகோட்…

  11. ஓமான்வளைகுடாவில் எண்ணெய்கப்பல்கள் மீது தாக்குதல்கள்- எண்ணெய் விலை உடனடியாக அதிகரித்தது ஓமான் வளைகுடாவில் எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதலொன்று இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற கப்பல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட கப்பல் நீரில்மூழ்கி விட்டது என ஈரானின் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறிப்பிட்ட கப்பல் மூழ்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன பஹ்ரைனை தளமாக க…

    • 3 replies
    • 749 views
  12. ஜூலியன் அசாஞ்சினை நாடுகடத்த சாஜித் ஜாவிட் அனுமதி விக்கி லீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சினை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் திட்டத்துக்கு உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்க நீதித்துறையினால் தேடப்படும் நபராக உள்ள ஜூலியன் அசாஞ் மீது அமெரிக்காவில் 18 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அண்மையில் லண்டலினுள்ள ஈக்குவடோர் தூதரத்தில் கைது செய்யப்பட்ட அசாஞ் லண்டனில் சிறைவைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சுவீடன் அரசினால் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான குற்றச்சாட்டு அவர்மீது தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை தமது நாட்டுக்கு நாடுகடத்துமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டது. அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்க அசாஞ்சினை நாடுகடத்தும் திட்டத்துக்கு உள்த…

  13. சூடான் நெருக்கடி ; நைல் நதியில் கலக்கும் இரத்தம் Published by T Yuwaraj on 2019-06-13 18:30:23 சூடான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான ஒம்டுர்மானில் நீல நைல் நதியும் வெள்ளை நைல் நதியும் சங்கமிக்கும் இடத்திலிருந்து சற்று தாழ்வாக பலகையாலான கட்டிடம் ஒன்று இருக்கிறது. அதில் பிரபலமான உணவு விடுதியொன்று இயங்குகிறது. அந்த கட்டிடத்தின் தூசிபடிந்த வாகனத்தரிப்பிடம் ஆபிரிக்காவின் மிகப்பெரிய ஆற்றை மிகவும் தெளிவாகப் பார்க்கக்கூடிய வாய்ப்பான அமைவிடமாக அமைந்திருக்கிறது. இப்போது சில நாட்களாக நதியைப் பார்ப்பவர்கள் முகத்தை மறுபக்கம் திருப்பிவிடுகிறார்கள். நதி நீரில் இரத்தம் கலந்தோடுகிறது. தலைநகர் கார்ட்டூமில் சில தினங்களுக்கு முன்னர் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக…

  14. மொஸ்கோவில் நூற்றுக் கணக்கானோர் கைது மொஸ்கோவில் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட பேரணி ஒன்றின் போது நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொஸ்கோவில் ஊழல் எதிர்ப்பு ஊடகவியலாளரான ஐவன் கொலுனோவை பொலிசார் கைது செய்து தடுத்து வைத்தமைக்கு எதிராக குறித்த பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பேரணியின் போது கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஊடகவியலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மத்தியில் ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், மக்கள் எதிர்ப்பையடுத்து, கொலுநோவ் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்டி…

  15. பிரதமர் பதவியில் இருந்து விலகியதும் பின்வரிசை உறுப்பினராக அமர்வேன் : தெரேசா மே பிரதமர் தெரேசா மே, தான் பதவியில் இருந்து விலகியதும் பின்வரிசை உறுப்பினராக பாராளுமன்றில் அமர்வேன் என இன்று தெரிவித்துள்ளார். ஜூலை மாத இறுதியில் பதவியில் இருந்து விலகியபின் நம்பர் 10 டௌனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் இருந்தும் வெளியேறிவிடுவேன் என்று குறிப்பிட்டார். 2016 ஆம் ஆண்டு டேவிட் கமரன் பிரதமர் பதவியில் இருந்து விலகியதுடன் சிலநாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் விட்டு விலகினார். ரொனி பிளேயர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய அதே நாளிலேயே இடைத்தேர்தலையும் அறிவித்தார். 1975 இல் கொன்சர்வேற்றிவ் தலைவர் பதவியை விட்டு விலகிய ரெட் ஹீத் பின்னர் 26 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் …

  16. அமெரிக்கா வர்த்தகம் தொடர்பான பதற்றநிலையை அதிகரிப்பதில் ஈடுபட்டால் கடுமையான பதிலடி அமெ­ரிக்­கா­வா­னது வர்த்­தகம் தொடர்பான பதற்­ற­நி­லையை அதிக­ரிப்­பதில் உறு­தி­யாக இருக்­கு­மாயின் கடு­மை­யான பதிலடியை சீனா கொடுக்கும் என சீன வெளிநாட்டு அமைச்சு நேற்று எச்­ச­ரித்­துள்­ளது. இம் மாதம் இடம்­பெ­ற­வுள்ள ஜி–20 உச்­சி­மா­நாட்டில் உடன்படிக்கை எதுவும் எட்­டப்­ப­டா­த­வி­டத்து சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீது மேல­திக சுங்க வரிகளை விதிக்க அமெ­ரிக்கா தயா­ரா­க­வுள்­ள­தாக அமெ­ரிக்க ஜனாதி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ள நிலை­யி­லேயே சீன வெளிநாட்டு அமை­ச்சின் மேற்­படி எச்­ச­ரிக்கை வெளியா­கி­யுள்­ளது. ஒஸாகா நகரில் இடம்­பெறும் அந்த உ…

  17. ஈரானில் இஸ்லாமிய பெண்கள்.. தாம் ஹிஜாப் என்றும் தலையங்கியை அணிய விரும்பவில்லை என்று தெரிவித்து அதைக் கழற்றி வீசி ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சித்திவதைக்கு ஆளாகின்றனர். சிலர் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை.. ஈரானிய நாட்டு தலைவர்.. நாட்டின் பாதியளவு பெண்கள் ஹிஜாப் அணிய விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ஆனால்.. இஸ்லாமிய நாடற்ற சொறீலங்காவில் வாழும் முஸ்லீம்களோ... தமது பெண்களுக்கு அரபுக் கல்வியும்.. கடும் இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதத்தையும் திணித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் சிலர். அதனை தீவர மதப்பற்றாகவும் சித்தரிக்க முனைகின்றனர். உண்…

  18. வடகொரியாவில் ராணுவ புரட்சியை நடத்த முயன்ற ராணுவத் தளபதி மீன்களுக்கு இரையாக்கப்பட்டாரா? June 11, 2019 வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு அவர் பிரானா மீன்களுக்கு இரையாக்கப்பட்டுள்ளதாக மேற்கத்தேய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன. சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்ற வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தனக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதனை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் இதுவரை அரசில் உயர் பதவி வகிக்கும் 16 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் ராணுவ புரட்சி நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில், வடகொரிய ராணுவ தளபதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறைய…

  19. பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அதிரடியாக கைது பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியும் மறைந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி பல மில்லியன் டொலர் பணமோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிப் அலி சர்தாரி மற்றும் அரசியல்வாதியான அவருடைய சகோதரியிடம் போலி கணக்குகள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று (திங்கட்கிழமை), இருவரும் கடுமையான பாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்டிருந்தனர். குறித்த பிணையினை நீட்டிக்கும்படி சர்தாரி மற்றும் அவரது சகோதரி தாக்கல் செய்த மனுவை இஸ்லாமாபாத் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதனை அடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் ஆசிப் அலி…

  20. லண்டனில், பாரிய தீ விபத்து! லண்டனிலுள்ள கட்டடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனின் Barking பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில், உள்ளூர் நேரப்படி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 3.31 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த 100 தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மாலை 6 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/லண்டனில்-பாரிய-தீ-விபத்த/

  21. ஹொங்கொங்கில் பாரிய ஆர்ப்பாட்டம் சீனாவிடம் ஹொங்கொங் கைதிகளை ஒப்படைப்பது தொடர்பாக கொண்டு வரப்படும் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங்கொங் மக்கள் பெருந்திரளாக வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஹொங்கொங் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹொங்கொங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலை…

  22. பேருந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்கள் கைது! லண்டனில் பேருந்து ஒன்றில் பயணம் செய்த ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் பேருந்து ஒன்றில், உருகுவேயைச் சேர்ந்த Melania Geymonat (28), தனது அமெரிக்க காதலியான Chris உடன் பயணம் செய்து கொண்டிருந்தார். குறித்த இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என அறிந்து கொண்ட பேருந்தில் பயணம் செய்த சில இளைஞர்கள், அவர்கள் இருவரையும் முத்தமிட்டுக்கொள்ளுமாறு கூறி, தாங்கள் அதைப் பார்த்து ரசிக்க விரும்புவதாக கோரியுள்ளனர். எனினும் குறித்த இரண்டு ஓரினச்சேர்க்கையாளர்களும் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் அவர்கள் மீது …

  23. ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தை நாடும் லண்டன் போக்குவரத்து துறை! லண்டன் போக்குவரத்து துறைக்கு சில நாடுகளின் தூதரகங்கள் செலுத்த வேண்டிய ஒருதொகைப் பணம் செலுத்தப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டனில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்காக 2003ஆம் ஆண்டு முதல் நெரிசல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்த நெரிசல் கட்டணமானது 1961ல் தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டில் உருவாக்கப்பட்டதாகும். இந்த திட்டத்தால் கனரக வாகனங்கள் மாற்று வழியில் பயணம் செய்யவேண்டும். இதனால் நெரிசல் குறைவடையும். போக்குவரத்து நெரிசல் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் குறைவான புகையை வெளிப்படுத்தும் சிறிய வகை வாகனங்கள் இலவசமாக பயணிக்க முடியும். அதிக புகைய…

  24. டுபாயில் கோர விபத்து : 17 பேர் பலி டுபாயில் நேற்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்து ஒன்றில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரமழான் கொண்டாட்டத்திற்காக ஓமன் நாட்டின் தலைநகரம் மஸ்கட்டிற்கு சென்று விட்டு, டுபாய் நோக்கி 31 பயணிகள் பஸ் ஒன்றில் நேற்று மாலை 6 மணியளவில் திரும்பிக்கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. டுபாய் ராசிதியா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது திடீரென மோதி குறித்த பஸ் விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.