Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சீனாவின் உற்பத்தி பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிப்பு அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரியை அதிகரித்துள்ளதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து உள்ளது. உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை திருடி வருவதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் அவர்,இதற்கு பதிலடியாக அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/55723

  2. கிழக்கு லண்டனில் பள்ளிவாசலுக்கருகே துப்பாக்கிச்சூடு கிழக்கு லண்டனில் பள்ளிவாசலொன்றுக்கு வெளியே துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. புனித றமழான் மாதத்தில் மாலை நேர பிரார்த்தனைகள் இடம்பெற்றுவந்த சந்தர்ப்பத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. லிஃபோர்ட் மாவட்டத்திலுள்ள செவன் கிங் மஸ்ஜிட் பள்ளிவாசலுக்குள் துப்பாக்கியுடன் ஒருவர் உள்நுழைய முயற்சிப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச்சூட்டில் எவ்வித பாதிப்புகள் இடம்பெறவில்லை என உறுதிபடுத்தியுள்ளனர். இதேவேளை, வெளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் எவரும் காயமடையவில்லை என்றும் பள்ளிவாசல் கட்டடத்திற்க…

  3. பாகிஸ்தான் லாகூர் வரலாற்றுப் பழமை வாய்ந்த மசூதிக்கு அருகில் நடந்த வெடிப்புச் சம்பவம் ஒன்றில்.. குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள்.. புனித நோன்பு மாதத்தை அனுஷ்டிக்கும் இவ்வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தான் உட்பட.. உலகின் பல இஸ்லாமிய நாடுகளில்.. இஸ்லாமிய மதத்துக்குள் இருக்கும் பிரிவுகள் தமக்கிடையே மோதிக் கொள்வதும்.. மசூதிகளை தற்கொலை தாக்குதல்கள்.. மற்றும் தாக்குதல் வடிவங்களைக் கொண்டு தாக்கி அப்பாவி மக்களை கொல்வது வாடிக்கையாகும். பாகிஸ்தான் அதிகாரிகள்.. இது மசூதிக்கு அருகில்... பொலிஸ் வாகனத்தை குறிவைத்து நடந்த தாக்குதல் என்கிறார்கள். Sufism is a form of Islamic mysticism that exists across the Isl…

  4. அல் – கொய்தா தீவிரவாத அமைப்பு மீண்டும் வலுப்பெற்று வருவதாக எச்சரிக்கை! அல் – கொய்தா தீவிரவாத அமைப்பு மீண்டும் வலுப்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு பிரிவினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அபோடபாத் நகரத்தில் அமெரிக்க படைகளால் அல் – கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஜிகாதி அமைப்புகளிலேயே மிகவும் பயங்கரமான அமைப்பாக அல் – கொய்தா கருதப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த அமைப்பில் இணைந்து மேற்குலகிற்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்து வந்தனர். இந்த தீவிரவாத அமைப்புக்கு வளமான பொருளாதார பின்புலமும் இருந்தது. எனினும் அந்த அமைப…

  5. விமான நிலையத்திற்கு அருகே வெடிப்புச் சம்பவம் – 58 பேர் உயிரிழப்பு 37 பேர் காயம் ! ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைகர் தலைநகர் நியாமியின் விமான நிலையத்தினருகே இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் ஒன்று தீப்பற்றி எரிந்தமை காரணமாகவே நேற்று(திங்கட்கிழமை) மாலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமான நிலையத்திற்கு அருகே கவிழ்ந்த குறித்த கொள்கலனிலிருந்து எரிபொருளை சேகரிப்பதற்காக சென்றவர்களே இதன்போது அதிகளவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது காயமடைந்த 37 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் காயமடைந்தவர்களை …

    • 3 replies
    • 784 views
  6. டென்மார்க் செல்வந்தரின் பிள்ளைகளுக்கு, அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி. இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின்போது உயிரிழந்த டென்மார்க் செல்வந்தரின் பிள்ளைகளின் இறுதிக் கிரியைகள் அரச மரியாதையுடன் நடைபெற்றது. டென்மார்க் அரச குடும்பத்தினர், டென்மார்க் பிரதமர் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துக் கொண்டனர். டென்மார்க் செல்வந்தர் ஆண்டர்ஸ் ஹோல்ச் போல்சனின் (வயது – 46) நான்கு பிள்ளைகளில் மூன்று பிள்ளைகள் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தனர். போல்சன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் இந்த தற்கொலை தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தனர். அவர்களின…

    • 1 reply
    • 804 views
  7. ரஷ்யா விமானத்தில் திடீர் தீ – குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாப உயிரிழப்பு! ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற விமான தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து மேர்மான்ஸ்க் நோக்கி பயணித்த எரோபுளொற் ஜேட் (Aeroflot Flight SU1492) விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக திரும்ப தரையிறக்கப்பட்டது. இதன்போது விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய வேளை திடீரென புகை மூட்டத்துடன் தீ வேகமாக பரவியது. இதையடுத்து அவசரமாக விமான ஓடுதளத்தில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால வழியினூடான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். எனினும் குறித்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 78 …

  8. ரோய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்களை விடுவித்தது மியன்மாமர் மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இரு ரோய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் 10 ரோஹிங்கயா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்ட வா லோன், க்யா சியோ என்ற மேற்படி இரு ஊடகவியலாளர்களும் கடந்த 2017 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதாக கூறி அவர்களுக்கு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து மியன்மார் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்தும் இருந்தது. இந் நிலையில் இவர்கள் இருவரும் 500 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த நி…

  9. இளவரசர் ஹரி - மேகன் மார்க்லேவுக்கு ஆண் குழந்தை இங்கிலாந்து இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே தம்பதியருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹரி (வயது 35). இவர் தனது காதலி மேகனை (38) கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி மணந்தார். இந்நிலையில், தன் மனைவி மேகன் திங்களன்று காலை அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக இங்கிலாந்து இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். தனக்கு மகன் பிறந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு இளவரசர் ஹரி கூறும்போது, மேகன் ஆண் குழந்தையை பெற்றெடுத்தது எனக்கு அளவிடமுடியாத பெருமையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை 7 பவுன்ஸ், 3 அவுன்ஸ் எடையுடன் உள்ளது. என் குழந்தையைப் பற்றி நினைக்கும் போது, நில…

  10. நியூசிலாந்து பிரதமர் தனது காதலரை நிச்சயதார்த்தம் செய்தார் ! நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டேர்னுக்கும் அவரது நீண்ட நாள் காதலரும் தொலைக்காட்சி அறிவிப்பாளருமான கிளார்க் கேபோர்டுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வைப்பவமொன்றில் இருவரும் வைர மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்கள். உயிர்த்த ஞாயிறு விடுமுறையின் போது இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பிரதமர் ஜசிந்தாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.குழந்தைக்கு நெவி தி அரோஹா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே பதவியில…

  11. படத்தின் காப்புரிமை U.S. Navy/Getty Images Image caption அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பல் யு.எஸ்.எஸ். ஆப்ரஹாம் லிங்கன். கோப்பு படம். விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள் மற்றும் குண்டு வீசும் போர் விமானங்களை இரானுக்குக்கு அனுப்புகிறது அமெரிக்கா. பல தொந்தரவு தரும், பதற்றத்தை அதிகரிக்கும் குறிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா செயல்படுவதாக அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை அடுத்தே போர்க் கப்பல் …

  12. ஜுல்ஃபிகர் அலி பிபிசி உண்மை பரிசோதிக்கும் குழு பாகிஸ்தான் அபோடபாத் நகரத்தில் அமெரிக்க படைகளால் அல் கயீதா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஜிகாதி அமைப்புகளிலேயே மிகவும் பயங்கரமான அமைப்பாக அல் கயீதா கருதப்பட்டது. ஆயிரகணக்கான பேர் இந்த அமைப்பில் இணைந்து மேற்குலகிற்கு எதிர…

  13. மீண்டும் ஏவுகணை பரிசோதனை ஆரம்பித்த வடகொரியா வடகொரியாவானது மீண்டும் ஏவுகணை பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடலோர நகரமான வோன்சான் அருகே அமைந்துள்ள ஹோடோ தீபகற்ப பகுதியிலிருந்து குறைந்த இலக்கில் சென்று தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற பல ஏவுகணைகளை வடகொரியா சோதித்து பார்த்தது. இது குறித்து தெரிவித்த தென் கொரியாவின் வெளியுறவு மந்திரி காங் கியூங் வா, “பொருளாதார தடைகளில் இருந்து வட கொரியா நிவாரணம் பெற வேண்டுமானால், அந்த நாடு அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு நேரில் காணத்தக்க, உறுதியான, வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த நிலையில், வடகொரியா நேற்று ஏவுகணை சோதனைகளை தொடங்கி இருப்பத…

  14. 136 பயணிகளுடன் ஆற்றில் விழுந்த விமானம் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் ஆற்றில் நிலை தடுமாறி விழுந்துள்ளது. கியூபாவில் இருந்து 136 பயணிகள், 7 ஊழியர்களுடன் புறப்பட்டது போயிங் 737 விமானம். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில் என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கும் போது ஓடுபாதையின் இறுதியில் இருந்த செயிண்ட் ஜான் ஆற்றில் நிலை தடுமாறி விழுந்துள்ளது. அமெரிக்க நேரப்படி நேற்றிரவு 9:40 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து ஜாக்சன்வில் மேயர் தனது ட்விட்டர் பக்கத்தில், விமானம் தண்ணீரில் மூழ்கவில்லை. பயணிகள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள்.இந்த விபத்தில் 21 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வைத்தியவாலையில் சி…

  15. மதகுருவை, நாடு கடத்தியது சுவிஸ்! இஸ்லாமிய மத போதகரை சுவிஸ் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. வன்முறையினை தூண்டும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இஸ்லாமிய மத போதகர் நாடு கடத்தப்பட்டுள்ளார். உரிய ஆவணங்கள் ஏதுமின்றி குடியுரிமை அதிகாரிகளிடம் ஒத்துழைக்க மறுத்த நிலையில், குறித்த நபரை நாடுகடத்தும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் எத்தியோப்பிய நாட்டவர் என கருதப்பட்ட நிலையில், அவர் சோமாலிய நாட்டவர் என பின்னர் தெரியவந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்னர் சுவிட்சர்லாந்தின் Winterthur பகுதியில் அமைந்துள்ள An’Nur பள்ளிவாசலில், கலவரத்தை தூண்டும் வகையில் பிரிவினைவாத கருத்துகளை இவர் முன்வைத்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்த…

  16. ரமதான் நோன்பை முன்னிட்டு இந்து அறக்கட்டளை வாரியம், சிங்கப்பூரிலுள்ள சில பள்ளிவாசல்களுக்கு 2 டன் அரிசியை நன்கொடையாக வழங்கவிருக்கிறது. சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்துடன் இணைந்து நன்கொடை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் ஆண்டாக அந்த நன்கொடையை இந்து அறக்கட்டளை வாரியம் வழங்குகிறது. அப்துல் கஃபூர் (Abdul Gafoor) பள்ளிவாசல், அன்-நஹ்டா (An-Nah’dah) பள்ளிவாசல், பா-அல்வி (Ba’alwi) பள்ளிவாசல், ஜாமியா சூலியா (Jamia Chulia) பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு அரிசி நன்கொடையாக வழங்கப்படும். ரமதான் போன்ற அர்த்தமுள்ள, புனிதமான காலத்தில் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் முயற்சியை அந்த நன்கொடை நடவடிக்கை காட்டுவதாகக் கூறப்பட்ட…

    • 0 replies
    • 294 views
  17. அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு May 3, 2019 அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் மீறி இவ்வாறு ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. 2016ஆம் ஆண்டு 14,900 என்னும் அளவில் அமெரிக்க ராணுவத்தில் காணப்பட்ட பாலியல் குற்றங்கள் , 2018ஆம் ஆண்டு 20,500 என்ற அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பணிக்காக எடுக்கப்படும் 17 முதல் 24 வயதுடைய பெண்கள் அதிகளவில் ஆபத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு காணப்படும் மூன்றில் ஒரு குற்றத்திற்கு…

  18. பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பதவிநீக்கப்பட்டுள்ளார்… May 2, 2019 பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் கவின் வில்லியம்ஸன் பதவநீக்கப்பட்டுள்ளார். புதிய 5ஜி வலையமைப்பை உருவாக்குவதற்காக, ஹூவாவியின் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை அனுமதிப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ள நிலையில் இது தொடர்பான உயர்மட்ட தகவல்களை கசியவிட்டதாக தெரிவிதது பிரதமர் தெரேசா மே நேற்றையதினம் அவரை பதவி நீக்கியுள்ளார். இதனையடுத்து புதிய பாதுகாப்பு செயலாளராக பென்னி மோர்டன்ட் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள கவின் வில்லியம்ஸன் முறையான விசாரணைகளின் மூலம் தனது நிலைப்பாட்டை நிரூபிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் கவின் வி…

  19. பாதுகாப்பு படைப்பிரிவின் பிரதி தலைவியை மணந்தார் தாய்லாந்து மன்னர்! தாய்லாந்து மன்னர் மகா வஜிரலொன்கோர்ன், தனது தனிப்பட்ட பாதுகாப்பு படைப்பிரிவின் பிரதி தலைவியாக செயற்பட்டு வந்த சுதிடாவை திருமணம் செய்து அந்நாட்டின் ராணியாக அறிவித்துள்ளார். தாய்லாந்து மன்னர் குடும்பம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து மன்னர் முடிசூட்டு விழாவுக்கான பணிகள் அந்நாட்டில் கடந்த ஒருமாத காலமாக இடம்பெற்று வருகின்றன. நாளை மறுதினம் முடிசூட்டு விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்த செய்தியை மன்னர் குடும்பம் அறிவித்துள்ளது. 66 வயதான தாய்லாந்து மன்னர் இதற்கு முன்னர் மூன்று முறை திருமணம் செய்…

  20. அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு அசாஞ் எதிர்ப்பு! அமெரிக்க அரசாங்கத்தின் இராஜாங்க இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு விக்கிலீக்ஸ் இணைநிறுவனர் ஜூலியன் அசாஞ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கடந்த மாதம் ஈக்குவடோர் தூதரகத்தில் கைதுசெய்யப்பட்ட அசாஞ்சுக்கு குறித்த குற்றத்துக்காக நேற்றையதினம் 50 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவது தொடர்பான வழக்கு வெஸ்ட்மின்ஸ்ரர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அசாஞ் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வழக்கு மே மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பலவிருதுகளை வென்…

  21. ஜூலியன் அசாஞ்சுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈக்குவடோர் தூதரகத்தினுள் நுழைவதற்காக பிணை நிபந்தனைகளை முறியடித்த குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்-இன் வழக்கு இன்று லண்டன் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி பிணை நிபந்தனைகளை முறியடித்த குற்றத்துக்காக ஜூலியன் அசாஞ் லண்டனில் அமைந்துள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் வைத்து மெற்றோபொலிற்ரன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். ஏழு வருடங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டுக்காக சுவீடனுக்கு நாடு கடத்தப்படவிருந்த அசாஞ் அரசியல் தஞ்சம் கோரி ஈக்குவடோர் தூதரகத்தினுள் நுழைந்தார். இந்நிலையில் அசாஞ்சின் அரசி…

    • 1 reply
    • 944 views
  22. முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிட அமெரிக்கா நடவடிக்கை உலகின் மிகவும் செல்வாக்குடைய இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றான முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பணியாற்றி வருகிறது. இதனை வெள்ளை மாளிகை நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இச்செயற்பாட்டினால் மத்திய கிழக்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட எகிப்தின் பழைமையான இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக பொருளாதார மற்றும் பயண தடைகள் விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபட்டாஹ் அல்-சிசி கடந்த ஏப்ரல் மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிரு…

  23. படத்தின் காப்புரிமை Getty Images Image caption மௌலானா மசூத் அஸார். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா - மசூத் - அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் இதனை தமது டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். பெரிய நாடுகள், சிறிய நாடுகள் அனைத்தும் இதில் இணைந்…

  24. நாட்டைவிட்டு வெளியேறும் முடிவிலிருந்து மதுரோ பின்வாங்கல் May 1, 2019 வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ நாட்டைவிட்டு வெளியேறுவதாக எதிர்கட்சிகளிடம் ஒப்பு கொண்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்ததாகவும் எனினும் அவர் பின்னர் பின்வாங்கிவிட்டார் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெனிசுவேலாவில் காணப்படும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ பல மாதங்களாக மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்தநிலையில் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ மதுரோவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ராணுவ உதவிகளை நாடிய போதும் ராணுவம் மறுத்துவிட்டது.மதுரோ நாட்டைவிட்டு வெளியேறி கியூபா செல்ல முடிவு செய்திருந்தார் …

  25. ஜப்பானில் 200 ஆண்டுகளில் பதவி விலகும் முதலாவது பேரரசர் ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி அவர் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) பதவி விலகுவார் என தெரிவிக்கப்படுகிறது. 85 வயதான பேரரசர் தனது வயது மற்றும் உடல்நலக் குறைவு என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது வயது மூப்பின் காரணமாக தினசரி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் உடல்நிலை நலிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் கடந்த இருநூறு ஆண்டுகளில் பதவி விலகும் முதலாவது பேரரசர் இவர் ஆவார். அதற்கமைய அவரது புல்வர் முடிக்குரிய இளவரசர் நறுஹிட்டோ அரியணையை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானில் அரசருக்கு எந்த அரசியல் அதிகாரமும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.