உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
1350 கிலோ மீட்டர் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ஈரான் 1350 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்துச் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. டெஹ்ரான்: அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்கா நே…
-
- 0 replies
- 351 views
-
-
வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவருக்கு பயணத் தடையும், வங்கிக் கணக்கு முடக்கம்… January 30, 2019 தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோ ((Juan Guaidó) விற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளதுடன் அவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜூவான் குவைடோ தம்மைத் தாமே அறிவித்ததன் பின்னர் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை நிலையினையடுத்து, அந்நாட்டு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இதேவேளை அமெரிக்கா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள், வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற சபாநாயகருமான ஜூவான் குவைடோவை அங்க…
-
- 1 reply
- 522 views
-
-
வடகொரியாவுடனான சந்திப்பிற்கு நேரம்-இடம் நிர்ணயிக்கப்பட்டது: அமெரிக்கா அறிவிப்பு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னுடனான சந்திப்பிற்கான நேரம்- இடம் என்பன நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உற்பத்தி துறைக்கான செயலாக்க ஆணையில் ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று (வியாழக்கிழமை) கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். வடகொரிய தலைவருடனான இரண்டாவது உச்சிமாநாட்டிற்கான இடம், நேரம் திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாம் வடகொரியாவுடன் பாரிய முன்னேற்றகர…
-
- 0 replies
- 652 views
-
-
உடன்படிக்கையில் இருந்து விலகவுள்ளதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு! 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொண்ட குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணை குறித்த உடன்படிக்கையில் இருந்து சனிக்கிழமையுடன் தற்காலிகமாக விலகவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தனது உடன்படிக்கை மீறப்படுவதை மொஸ்கோ நிறுத்தவில்லை என்றால், உத்தியோகபூர்வமாக ஆறு மாதங்களுக்குள் முறையாக விலகும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ தெரிவித்தார். இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைக் பொம்பியோ இதனைத் தெரிவித்துள்ளார். ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கை மீறுவதை மறுக்கிற ரஷ்யா, ஒப்பந்தத்தில் இணங்கிக் கொண்டால், அது ஐரோப்பாவில் குறுகிய மற்றும் நடுத…
-
- 0 replies
- 743 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images துருவ சுழற்சி என்று கூறப்படும் கொடும் பனிப் பொழிவும், அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் மைனஸ் 17 டிகிரி செல்ஷியஸ் தட்ப நிலையும் நிலவும் நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். லோவாவில் 18 வயது மாணவர் ஒருவர் கல்லூரிக் கட்டடத்துக்கு வெளியே இறந்து கிடந்தார். அந்த எட்டுபேரில் இவரும் ஒருவர். கடுங்குளிர், மற்றும் பனிச்சூழல் வியாழக்கிழமையும் நிலவும். 250 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த துருவச் சுழல் என்னும் கடுங்குளிர் பருவநிலையை அனுபவிக…
-
- 4 replies
- 1.2k views
-
-
மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அகமது ஷா மலேசியாவில் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா புதிய மன்னராக பதவி ஏற்றார். மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளதுடன் அங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மன்னர் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோர் ஆட்சியை நிர்வகித்து வருகின்றனர். இந்த நிலையில், மலேசியா மன்னராக கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் 5 ஆம் சுல்தான் முகமது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6 ஆம் திகதி பதவி விலகினார். இவர் முன்னாள் ரஷ்ய அழகியை காதலித்து திருமணம் செய்துகொண்டதால் தனது பதவியை இராஜினாமா செய்தார்…
-
- 0 replies
- 391 views
-
-
அமெரிக்காவில் படித்தவர்களுக்கு எச்-1 பி விசாவில் முன்னுரிமை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு ‘எச்-1 பி’ விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள் தங்கி இருந்து பணிபுரிவதற்கு வழங்கப்படுகிற விசா ‘எச்-1 பி’ விசா. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்ற 20 ஆயிரம் பேருக்கு அதிகமாக குறித்த விசா வழங்கப்படும். ‘எச்-1 பி’ விசாக்களில் 70 சதவீதத்துக்கும் மேலாக இந்தியர்களே பெறுகிறார்கள். அதாவது ‘எச்-1 பி’ விசா மூலம் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் இந்தியர்களால் நடத்தப்படு…
-
- 0 replies
- 451 views
-
-
அமெரிக்காவிலுள்ள இந்துக் கோவில்கள் விஷமிகளால் சேதம் அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் உள்ள சுவாமி நாராயணனர் கோவில் விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. கெண்டக்கி மாகாணத்தின்லோஸ்வில்லே நகரத்தில் சுவாமிநாராயண் என்ற இந்துக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்குள்ள சாமி படங்கள் மீது கருப்பு வர்ணப்பூச்சி வீசியும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், கோவிலில் இருந்த இருக்கை ஒன்றில் கத்தி ஒன்றை குத்தியபடி விட்டுச்சென்றுள்ளனர். லோஸ்வில்லே நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 357 views
-
-
பாப்பரசர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு பயணம்! இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு பாப்பரசர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு பயணமாகவுள்ளார். எதிர்வரும் 3 ஆம் திகதி பயணமாகவுள்ள அவர் ,எதிர்வரும் 5 ஆம் திகதி வரை அந்நாட்டில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பயணத்துடன் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு செல்லும் முதல் பாப்பரசர் என்ற பெருமையும் அவர் பெற்றுக்கொள்ளவுள்ளார். இஸ்லாத்துடன் நல்லுறவைப் பேணும் முகமாக பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் இந்த விஜயம் அமையவுள்ளது. மேலும் இது சமயங்களுக்கிடையிலான கலந்துரையாடலைத் தமது முக்கியக் கொள்கையாக அவர் கடைப்பிடிப்பதை அது உறுதிசெய்கிறது. முஸ்லிம்களின் புனித நூலான குரானை பாப்பரசர் பிரான்சிஸ் விமர்சனம…
-
- 0 replies
- 427 views
-
-
அமெரிக்காவில் வரலாறு காணாத கடுங்குளிர் – அவசரநிலை அறிவிப்பு January 31, 2019 துருவ சுழல் என அறியப்படும் வரலாற்றில் காணாத கடுங்குளிரை எதிர்நோக்கியுள்ள அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க ஆரம்பித்துள்ளதாகவும் இதன் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுங்குளிர் காரணமாக அமெரிக்காவில் 2000 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலைகள் வர்த்தக நிலையங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிக்காவின் பகுதிகளை சிகாகோவில் விட குளிர் அதிகமாக காணப்படும் எனத் தெரிவிக்கப்படும் நிலையில் மக்களை வெளியே செல்ல வேண்டாமென சிகாகோ மேயர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் மேற்…
-
- 3 replies
- 850 views
-
-
எந்த நாட்டிலும் ஊழல் இல்லாமல் இல்லை' - தன்னார்வ நிறுவனத்தின் அதிரவைக்கும் ஆய்வு ..! watchdog Transparency International என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழலை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் பட்டியலில் சோமாலியா, தெற்கு சூடான், சிரியா ஆகிய நாடுகள் முதல் முன்று இடங்களைப் பிடித்துள்ளன. வறட்சி, போர், முதலான விஷயங்களால் சிக்கி தவித்து வரும் இந்த நாடுகளில் லஞ்சம், ஊழல் அதிக அளவில் தலைவிரித்தாடுகிறது. இந்தப் பட்டியலில் இந்தியா 78-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு…
-
- 0 replies
- 935 views
-
-
பாங்கொக் நகரில் விஷ புகை வெளியேற்றம் : மக்கள் அச்சத்தில் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் நகரில் வரலாறு காணத அளவுக்கு விஷ புகை வெளியேறுவதால் மக்களின் அன்றாட வாழ்கை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த விஷ புகை வெளியேற்றத்தால் 400 மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பாடசாலை பிள்ளைகளுக்கு நோய் வராமல் பாதுகாப்பதற்காக குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விஷ புகை பரவியுள்ளதால் போக்குவரத்து நெரிசல், ஒழுங்கற்ற கட்டுமானம், பயிர்ச் செய்கை பாதிப்பு மற்றும் வளி மாசு அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.virakesari.lk/article/49056
-
- 0 replies
- 339 views
-
-
2019 ஆம் ஆண்டு தாக்குதல்கள் காரணமாக தெற்கு ஆசியா பெரும் சவால்களை எதிர்நோக்கும் January 31, 2019 பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான டான் கோட்ஸ் உளவுத்துறைக்கான செனட் தேர்வுக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். உலகளாவிய அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் உரையாற்றிய அவர் ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் யூலை மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளதாலும், தலிபான்களின் பெரும் தாக்குதல் காரணமாகவும் 2019 ஆம் ஆண்டு தெற்கு ஆசியா பெரும் சவால்களை எதிர்நோக்கும் எனவும் தெரிவித்த…
-
- 0 replies
- 340 views
-
-
தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டம் : ஈராக்கியர்கள் மூவர் ஜேர்மனில் கைது! பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஈராக்கியர்கள் ஜேர்மன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷாஹீன் எஃப்., ஹெர்ஷ் எஃப். மற்றும் ராஃப் எஸ் ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஜேர்மனிய மாநில செயலாளர் ப்ரோகே கோஹெலர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் வடக்கு மாநிலமான ஷிலெஸ்விக்-ஹோல்ஸ்டைனில் கைதுசெய்யப்பட்டனர் என அவர் கூறினார். இவர்களில் ஷாஹின் எஃப் என்பவர் எப்படி ஒரு குண்டு தயாரிப்பது என்பது பற்றிய வழிமுறைகளைப் பதிவிறக்கம் செய்ததுடன், வெட…
-
- 0 replies
- 828 views
-
-
ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்! சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) சீனா மீண்டும் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. டி.எப். 26 என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகக் தாக்கியது. 3 ஆயிரம் கிலோ மீற்றர் முதல் 5 ஆயிரத்து 700 கிலோ மீற்றர் தூரம் பறந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கும் வல்லமையை சீனா பெற்றுள்ளது. தரையிலிருந்து கனரக வாகனங்கள் மூலமும், விமானத்தில் எடுத்துச் சென்றும் டி.எப்.2…
-
- 0 replies
- 357 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images வட கொரியா தன்னிடமுள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் கைவிடுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என அமெரிக்க உளவு அமைப்பின் தகவலொன்று கூறுகிறது. இரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடவில்லை. ஆனால் சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து வரும் இணையத் தாக்குதல் வளர்ந்து கொண்டே போவது கவலை அளிப்பதாக உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீடு அறிக்கை கூறுகிறது. படத்தின் காப்புரிமை Getty Images இரண்டு நாடுகளும் 2020 அமெரிக்கத் தேர்தலில் தாக்கம் செலுத்த முயல்வதாக அந்த அறிக்கை விவரிக்கிறது. …
-
- 0 replies
- 563 views
-
-
டார்லிங் ஆற்றில் கோடிக்கணக்கில் இறந்து மிதந்த மீன்கள் அவுஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதனால், அந்த ஆறு வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள், 'வெப்பநிலை மாற்றம் மற்றும் ஓக்ஸிஜன் அளவு குறைந்து ஆல்கா நச்சாக மாறியதால், மீன்கள் சுவாசிக்க இயலாமல் இறந்துள்ளன. கடுமையான வெப்பநிலை காரணமாக அண்மையில் குதிரைகள் இறந்தன. திடீரென வெப்பநிலை குறைந்ததாலும், பருவகால மழை காலதாமதமாக பெய்ததாலும் ஆஸ்திரேலிய மக்கள் பல சுற்றுச்சூழல் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந் நிலையில் நதியில் ஒக்ஸிஜன் தட்டுபாட்டின் காரணமாக மீன்கள் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளில் இ…
-
- 1 reply
- 555 views
-
-
பிலிப்பைன்சில் தொடரும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்! தெற்கு பிலிப்பைன்சில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்போங்கா நகரில் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிவாசலுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்களே தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். மத வழிபாட்டு தலங்களுக்குள் அரகேற்றப்படும் இவ்வாறான தாக்குதல்கள் கோழைத்தனமானவை என பிராந்திய தலைவர் இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை. இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிலிப…
-
- 0 replies
- 266 views
-
-
Image caption மரண தண்டனை ரத்தாகி விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீபி தெய்வ நிந்தனை வழக்கில் கிறிஸ்தவ பெண் ஒருவரின் மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சச்சரவொன்றில் ஆசியா பீபி எனும் பெண் முகமது நபியை அவமனாப்படுத்திய வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. …
-
- 0 replies
- 403 views
-
-
சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் கைது! மருந்தகங்களில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போதைப்பொருள் கனடாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத விற்பனைகளை தடுக்க பொலிஸார் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் ஹமில்டனிலுள்ள மருந்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சட்டவிரோத கஞ்சா போதைப்பொருள் மற்றும் அதனால் கிடைக்கப்பெற்ற வருமானம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடு…
-
- 0 replies
- 582 views
-
-
பிரித்தானியாவில் சமூக வலைத்தளங்களுக்கு தடை எச்சரிக்கை! தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்கள் நீக்கப்படாவிடின் பிரித்தானியாவில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் மற் ஹன்கொக் தெரிவித்துள்ளார். ஒளிப்படப் பகிர்வுத் தளமான இன்ஸ்டாகிராமே தனது மகளின் தற்கொலைக்கு காரணமாக அமைந்ததாக தந்தையொருவர் குற்றச்சாட்டினை முன்வைத்தார். குறித்த குற்றச்சாட்டைத் தொடர்ந்தே சுகாதார அமைச்சரின் இக்கருத்து வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், ”இந்த அற்புதமான தொழில்நுட்பம் நல்ல விடயங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படுவதை உறுதிபடுத்த வேண்டும். மாறாக இளைஞர்களையும், யுவதிகளையும…
-
- 0 replies
- 441 views
-
-
வெனிசுவேலா நாட்டில் தற்காலிக அதிபராக அறிவித்துக்கொண்ட எதிர்க் கட்சித் தலைவர் குவான் குவைடோவுக்கோ, அமெரிக்க தூதர்களுக்கோ ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்கா பதிலடி தரும் என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். அத்தகைய அச்சுறுத்தல் சட்டத்தின் ஆட்சி மீதான மோசமான தாக்குதலாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவும், வேறு 20 நாடுகளும் குவைடோ-வை இடைக்கால அதிபராக அங்கீகரித்துள்ள நிலையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். …
-
- 1 reply
- 389 views
-
-
சீனாவுக்கான கனடா தூதரை நீக்கிய ஜஸ்டின் ட்ரூடோ படத்தின் காப்புரிமை Getty Images சீனாவுக்கான கனடா தூதர் ஜான் மெக்கலனை பதவியிலிருந்து நீக்கி உள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. ஹுவாவெய் நிறுவன தலைமை அதிகாரியை அமெரிக்கா கேட்டுகொண்டதன் பேரில் கனடா கைது செய்தது. இது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறி இருந்தார் மெக்கலன். இதனை தொடர்ந்துதான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஜஸ்டின் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் பதவியிலிருந்து விலகும்படி மெக்கலனை கேட்டுகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஏன் என்று சொல்லவில்லை …
-
- 0 replies
- 460 views
-
-
இத்தாலியில் ஹெலிகொப்டரும் பயிற்சி விமானமும் மோதி விபத்து – 7 பேர் பலி – இருவரைக் காணவில்லை January 28, 2019 இத்தாலியில் ஹெலிகொப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே உள்ள அஸ்டா பள்ளத்தாக்க்கில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மலையில் ஏறுவதற்காக 4 பேருடன் சென்ற ஹெலிகொப்டரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக பயிற்சி விமானமுமே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளன. விமான பயிற்சியாளர் மட்டும் உயிர் தப்பியுள்ள நிலையில் அவரைக் கைது செய்தி காவல்துறையினனர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர…
-
- 0 replies
- 384 views
-
-
2038ஆம் ஆண்டிற்குள் நிலக்கரிப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் ஜேர்மனி! ஜேர்மனி, மின்சார உற்பத்திக்காக நிலக்கரியைப் பயன்படுத்துவதை 2038ஆம் ஆண்டுக்குள் நிறுத்திக் கொள்ளும் என அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும் நிலக்கரியின் பயன்பாட்டைக் கட்டங்கட்டமாக முடிவுக்குக் கொண்டுவரும் 80 பில்லியன் யூரோ திட்டத்தை ஆணைக்குழு வெளியிட்டது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கடப்பாட்டை வலுப்படுத்த ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட ஜேர்மனி கடுமையான நெருக்குதலை எதிர்நோக்கி வந்தது. பல மாதக் காரசார விவாதத்துக்குப் பின்னர் நிலக்கரிப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு குறித்து ஆணைக்குழு இணக்கப்பாட…
-
- 0 replies
- 309 views
-