உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
இந்தி(ய)ராணி கதை இந்தியாவின் சகல டிவி, ரேடியோ, தின, வார, மாத சஞ்சிகைகள் எல்லாம் கல்லா கட்டும் இன்றைய ஒரே நட்சத்திரம் இந்திராணி. இந்த ராணியின் தகிடு தத்தங்கள், கொலையினால் (சொந்த மகளையே ) இந்திய தாய்க்குலமே அரண்டு போய் நிற்கின்றது. தாய், பெத்த மகளைக் கொலை செய்வது புதிது இல்லை தான் அதுவும் இந்தியாவில். ஆனால், இங்கே அதற்கான காரணம், அய்யய்யோ ரகம். பணம், பதவி அந்தஸ்து காரணமாக செய்த ஜில்மார்ட் வேலைகளினால் நடந்த கொலை. இந்த ராணி இளவயதில் ஒருவருடன் வாழ்ந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார். ஒரு ஆண் (மிகைல்) , ஒரு பெண் (ஷீனா) அந்த கணவரை பிரிந்து இரண்டாவது கலியாணம். அங்கேயும் ஒரு பெண் குழந்தை (விதி). எல்லாம் வளர்ந்து பெரியவர்கள் ஆகி விட்டார்கள். அழகிய ராணியும் வேல…
-
-
- 20 replies
- 5.4k views
-
-
வாஷிங்டன் போஸ்டின் செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக துருக்கி அதிகாரிகள் கூறியுள்ளதால் அச்சம் எழுந்துள்ளது. சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால், கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்துக்கு சென்றதையடுத்து காணாமல் போனார். முதல் கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளதாக துருக்கி அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், இதனை மறுத்துள்ள சௌதி அரேபியா, அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளது. ஜமால் கொல்லப்பட்டிருப்பது உண்மை என்றால், அது 'மிகவும் கொடூரமான மற்றும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியாத' செயலாக இருக்கும் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கூறியுள்ள…
-
- 0 replies
- 282 views
-
-
அமெரிக்காவின் செயலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி Report us Steephen 10 hours ago ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை அமுல்படுத்தப்படும் தினம் நெருங்கி வரும் வேளையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாரியளவில் அதிகரித்து வருவதாக வர்த்தக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச எரிபொருள் சந்தையின் பிரதான தரகு நிறுவனமான பிரேண்ட் நிறுவனத்தின் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை கடந்த புதன் கிழமை பாரியளவில் அதிகரித்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 86.74 அமெரிக்க டொலராக உயர்வடைந்தது. இந்த விலை இன்று 86.9 டொலராக அதிகரித்துள்ளது. கடந்த சி…
-
- 1 reply
- 675 views
-
-
சௌதி அரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதுள்ள சௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வங்கியின் தலைவராக சௌதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் நியமிக்கப்பட்டுள்ளார். பழமைவாதத்தை காலங்காலமாக கடைபிடித்துவரும் சௌதி அரேபியா, கடந்த ஓராண்டாக பெண்களுக்கான உரிமைகளை சமூகத்தின் பல நிலைகளில் வழங்கி வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் சௌதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் வாகனம் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தங்களது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் குழுமத்திற்கு தலைமை வகித்து வரும் ஒலயன், சௌதி அரேபிய…
-
- 0 replies
- 354 views
-
-
நாட்டை விட்டு வெளியேறுங்கள் - பாகிஸ்தான் உத்தரவு சர்வதேச தொண்டு நிறுவனங்களை தங்கள் செயல்பாடுகளை முடித்துக் கொண்டு 60 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. பாகிஸ்தானின் இப்புதிய உத்தரவால் பாதிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமான ´ஆக்சன் எய்ட்´ (Action Aid), ´´பாகிஸ்தானின் பொதுச் சமூகம் மீதான சமீபத்திய தாக்குதல்கள் குறித்து கவலைகளை இம்முடிவு அதிகரிக்கிறது´´ எனக் கூறியுள்ளது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ´ஆக்சன் எய்ட்´ நிறுவனத்துக்கு உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தை பீபீசி பார்த்தது. அதில் அந்நிறுவனம் பாகிஸ்தானின் தொண்டு நிறுவன வேலையை தொடர, பதிவு செய்வதற்கா…
-
- 0 replies
- 568 views
-
-
கூகுள் நிறுவன தலைமை பொறுப்பில் அடுத்த தமிழர்.. யார் இந்த பிரபாகர் ராகவன்? October 5, 2018 புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக சென்னையைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை என்பவரை கடந்த 2015-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் நியமனம் செய்தது. இந்நிலையில், 7 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக மதிப்பை கொண்ட கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்த பிரபாகர், சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்த பின் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை…
-
- 0 replies
- 871 views
-
-
ரொறன்ரோ மேயர் தேர்தல்: ஒரே நாள் பிரசார நடவடிக்கையில் முன்னணி வேட்பாளர்கள்! ரொறன்ரோ மேயர் வேட்பாளருக்கான தேர்தல் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். அந்தவகையில் கிழக்கு யோர்க்கிலுள்ள ஜவானி பேக்கர்ஸ் உணவகமொன்றில் ரொறொன்ரோவின் மேயர் ஜோன் ரோறி காலை 9 மணிக்கு தனது பிரசார நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார். அதேவேளை, முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் பழைய நகர மண்டபத்தில் 9:30 மணியளவில் பிரசார நடவடிக்கையை மேற்கொ…
-
- 0 replies
- 483 views
-
-
பிரிட்டனில் சமீபத்தில் பார் மற்றும் உணவு விடுதிகளில் ஊழியர்களுக்கு டிப்ஸ் வழங்குவதை தடை செய்வதற்கான சட்டங்கள் குறித்த விவாதங்களின் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன. பிரிட்டன் போன்று வேறு எந்த நாடும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாது. 17ஆம் நூற்றாண்டில் 'டிப்ஸ்' வழங்கும் கலாசாரத்தை உருவாக்கியது பிரிட்டன் மக்கள்தான் என நம்பப்படுகிறது. உண்மையில் அடித்தட்டு வர்க்க மக்களுக்கு சிறிய சன்மானமாக வழங்குவதில் இருந்து இது தொடங்கப்பட்டது. எனினும், பல்வேறு நாடுகளில், பல்வேறு முறைகளில் டிப்ஸ் வழங்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. ஆனால், சில நாடுகளில் ஒருவருக்கு டிப்ஸ் வழங்குவது என்பது அவர்களை அவமதிக்கும் செயலாக கருதப்படுகிறது. அமெரிக்கா அமெரிக்காவில் நகைச்சுவையாக இப்ப…
-
- 0 replies
- 353 views
-
-
2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வன்புணர்வை ஒரு போர்க் கருவியாக பயன்படுத்துவதற்கு எதிரான செயற்பாட்டாளர் நடியா முராத் மற்றும் டெனிஸ் முக்வேகய் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் பாலியல் வன்புணர்வுக் குற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானவர்கள் என்று நோபல் பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் தெரிவித்தார். யாசிதி சமூகத்தைச் சேர்ந்தவரான நடியா முராத் ஐ.எஸ். குழுவினரால் கொடுமைப்படுத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளானவர். டெனிஸ் முக்வேகய் காங்கோ நாட்டைச் சேர்ந்த பெண் நலவியல் மருத்துவர். இவர் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார். மதிப்புக்குரிய நோபல் அமைதிப் பரிசுக்கு இந்த ஆண்டு தனிநபர்கள் மற்றும் அமைப…
-
- 0 replies
- 307 views
-
-
படத்தின் காப்புரிமைAFP ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதாக ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சிறிய சிப்புகளை, சர்வர் சர்க்யூட் போர்டுகளில் பொருத்தி தரவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ப்ளூம்பர்க் கூறுவது முற்றிலும் தவறானது என்று அதனை ஆப்பிள், அமேசான் மற்றும் சூப்பர் மைக்ரோ நிறுவனங்கள் மறுத்துள்ளன. இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் ஜோர்டன் ராபர்ட்சன் மற்றும் மைக்கெல் ரிலே ஆகியோர் ஓர் ஆண்டு முழுவதும் விசாரணை நடத்தி இது தொடர்பான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். பல ஆய்வு நிறுவனங்கள் மற்றும் 20 பெரிய நிறுவனங்களுக்கு சீனா இந்த தரவுகள…
-
- 0 replies
- 338 views
-
-
அமெரிக்க இராணுவம் இல்லையென்றால்... 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது: டிரம்ப் எச்சரிக்கை. அமெரிக்க இராணுவம் இல்லையென்றால், 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது என சவுதி அரேபியா மன்னரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மிஸ்ஸிசிப்பி மாநிலம் சவுத்எவன் நகரில் நடந்த கட்சி கூட்டத்தில் உறியற்ரிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். மேலும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானை மிகவும் பிடிக்கும், ஆனால் அமெரிக்கா தான் அவரை பாதுகாக்கின்றது என தெரிவித்தார். அமெரிக்கா இல்லாமல், அவரால் இரு வாரம் கூட பதவியில் இருக்க முடியாது என்று சவூதி மன்னர் சல்மானை அவர் எச்சரித்தார். சவுதி அரேபியாவுடன் டிரம்ப் நட்பு பாராட்டி வந்த நிலையில், அவர் இவ்வாறு பேச,…
-
- 0 replies
- 461 views
-
-
இளைய தலைமுறையினரின் மூளை வளர்ச்சிக்கு எமனாகும் கஞ்சா: கனேடிய ஆய்வு கஞ்சா புகைப்பது, மதுஅருந்துவதைவிட இளைய தலைமுறையினரின் மூளை வளர்ச்சிக்கு பெரும்தீங்கு விளைவிக்கக் கூடியதென மொன்றியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிந்தனை திறன், ஞாபகசக்தி மற்றும் நடத்தைமீது இளவயது மதுபாவனை செலுத்தும் தாக்கத்தைவிடவும் கஞ்சா அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. மதுஅருந்துதல் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள் பாவனை காரணமாக இளைஞர்களின் கவனம்செலுத்தும் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் கற்றல் செயல்திறன் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது. ஆனாலும் கஞ்சாபுகைத்தல், மதுஅருந்துவதைவிட அதிக அளவில் தாக்கத்த…
-
- 1 reply
- 516 views
-
-
சீனாவின் மூலோபாய முதலீடுகள் பேரழிவுகளை ஏற்படுத்தும் – ஜப்பானுக்கான அமெரிக்க தூதுவர் சீனா மூலோபாய முதலீடுகள் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்றும், அதற்கு சிறிலங்கா போன்ற நாடுகள் உதாரணமாக இருப்பதாகவும், தெரிவித்துள்ளார், ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதுவர் வில்லியம் எவ் ஹகேற்றி. சீனாவின் ஒரு பாதை ஒரு அணைத் திட்டம் தொடர்பாக, ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு, கருத்து வெளியிட்டுள்ள அவர், “சீனாவின் மூலோபாய முதலீடுகள் சந்தை நோக்கத்தைக் கொண்டதல்ல. இது நிலையற்ற கடன்மட்டத்தைக் கொண்டு வரும். இதன் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்த முடியும். மலேசியா, சிறிலங்கா, பாகிஸ்தான் போன்ற உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 440 views
-
-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது அமெரிக்க இளைஞர்களுக்கு 'கடினமான' மற்றும் 'மோசமான' காலம் என்று கூறி உள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிரான விசாரணை நடந்து வரும் சூழலில் டிரம்ப் இவ்வாறாக கூறி உள்ளார். தாம் நியமித்த உச்சநீதிமன்ற நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிராக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எஃப்.பி.ஐ விரிவான விசாரணையை மேற்கொள்ளலாம். ஆனால், 'பழிவாங்கல்' வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கூறி இருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிபதி பிரெட் கவனோவுக்கு அளிக்கும் ஆதரவுதான் விசாரணையை தாமதப்படுத்துவதாக எஃப்.பி.ஐ கூறி உள்ளது. ஆனால், அமெரிக்க அதிபர்…
-
- 0 replies
- 383 views
-
-
தென் சீனக் கடலில் பயணித்த அமெரிக்க போர்க் கப்பல் தமது பயணப் பாதையை மாற்றிச் செல்லும்படி செய்தது சீனப் போர்க்கப்பல். தம்முடைய கப்பலுக்கு மிக அருகிலும், தொழில்முறையற்ற தன்மையோடும் சீனக் கப்பல் பயணித்து வந்ததாகவும் அதனால் அமெரிக்கக் கப்பல் பாதையை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது அமெரிக்க கடற்படை. இந்த சம்பவம் நடந்தபோது சீனா உரிமை கொண்டாடிவரும் சர்ச்சைக்குரிய ஸ்ப்ராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள கேவன் மற்றும் ஜான்சன் பாறைத் தொடர்களைக் கடந்து யு.எஸ்.எஸ். டிகாடர் போர்க்கப்பல் சென்றுகொண்டிருந்தது. அப்போது சீனாவின் லுயாங் போர்க்கப்பல் டிகாடரை நெருங்கி வந்ததது. அப்போது டிகாடருக்கும் லுயாங் கப்பலுக்கும் வெறும் 41 மீட்டர் தொலைவே இருந்தது என்றார் அமெரிக்க கடற்படை கமா…
-
- 0 replies
- 348 views
-
-
மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு – செரீனா வில்லியமஸ் மேலாடையின்றி பாடினார்… October 1, 2018 1 Min Read மார்புக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மேலாடையின்றி பாட்டு பாடும் காணொளி தற்போது இணையத்தில் வெளிவந்திருக்கிறது. ஒக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடல் ஒன்றை பாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.”ஐ றச் மை செல்ப்’” (I Touch Myself ) பாடலை பாடி பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறி…
-
- 12 replies
- 1.2k views
-
-
கொரிய தீபகற்பத்தின் பதற்றம் தணிகிறது: கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன! கொரிய தீபகற்பத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு, வட மற்றும் தென்கொரிய எல்லையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன. இருநாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய தமது எல்லையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை தென்கொரிய படையினர் அகற்றி வருகின்றனர். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கவும், கொரிய நாடுகளுக்கிடையில் நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Joint Security Area எனப்படும் இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்ற, வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் த…
-
- 0 replies
- 324 views
-
-
"லேசர்" தொழில் நுட்பத்தில், புதிய சாதனை.. 3 பேருக்கு நோபல் பரிசு. 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேர் இணைந்து இந்த பரிசைப் பெறுகின்றனர். இந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் நேற்றில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் அறிவிப்பு வெளியாகி வருகிறது. நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.கனடா, பிரான்ஸ், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின், பிரான்சின் ஜெரார்ட் மெளரு, கனடாவின் டோனோ ஸ்டிக்லேன்ட் ஆகியோருக்கு…
-
- 1 reply
- 624 views
-
-
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் குவியல் குவியலாக பிணங்கள் கரையில் குவிந்துள்ளன. சுமார் 1200-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதாக இந்தோனேசீய அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், பல இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருகிறது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுலவேசி தீவில் உள்ள பல ஹோட்டல்களில் பூட்டப்பட்ட அறைகளில் மக்கள் உயிருடன் இருப்பார்களா என்ற அச்சம் நிலவுகிறது என இந்தோனீசியாவில் வசிக்கும் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த விசாகன் மைலாச்சலம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். வணிகரீதியாக சென்னைக்கும் இந்தோனீசியாவுக்கும் அடிக்கடி பயணம் செய்யும் விசாகன் சுனாமி ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக சென்னைக்கு வந்திருந…
-
- 0 replies
- 450 views
-
-
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்! நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து மீளாத இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன. சுமார் 750,000 மக்கள் வசிக்கும் சும்பா தீவின் 40 கிலோமீற்றர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 5.9 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. இந்தோனோசியாவின் சுலவெசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினையடுத்து, 170 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. அது…
-
- 1 reply
- 584 views
-
-
புற்றுநோய் சிகிச்சையில் நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சையை கண்டுபிடித்த இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு October 1, 2018 1 Min Read புற்றுநோய் சிகிச்சையில் நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சையை கண்டுபிடித்தமைக்காக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அல்லிசன்(James P. Allison) மற்றும் ஜப்பானின் டசூகு ஹோஞ்சோ (Tasuku Honjo) ஆகியோருக்கு 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை மேலும் அதிகப்படுத்தி, தூண்டி, புற்றுநோய்க்கட்டி செல்களை தீவிரமாகத் தாக்கும் சிகிச்சையில் புதிய பாதைத் திறப்பை இவர்கள் இருவரும் மேற்கொண்டுள்ளனர். நம் உடல் நோய் எதிர்ப்புச் சக்தி அமைப்பில்…
-
- 0 replies
- 562 views
-
-
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரின் வீட்டில் ஆரஞ்சுப் பழம் நீல ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரின் வீட்டில் ஆரஞ்சுப் பழம் நீல நிறத்தில் மாறியது ஏன் என்பதற்கான காரணம் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு தெரியவந்துள்ளது. பிரிஸ்பேனைச் சேர்ந்த நெட்டி மாஃபீட் எனும் பெண் தனது இரண்டு வயது மகன் ஒரு பகுதி மட்டுமே உண்ட ஆரஞ்சுப் பழம் அறுத்த சற்று நேரத்திலேயே நீல நிறமாக மாறியதால், ஆபத்தான உடல் நலக் கோளாறு ஏதும் உண்டாகலாம் என்று எண்ணி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு நிறம் மாறியதன் காரணங்கள் தெரிய வந்ததாக குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைமை வேதியியலாளர் ஸ்டீவர்ட் கார்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ஆரஞ்சுப் பழங்களில் இயற்கையாகவே இருக்கும் ஆன்தோசியானின் (anthocya…
-
- 2 replies
- 894 views
-
-
நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி! (2 ஆம் இணைப்பு) இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருந்த நிலையில் சுனாமி தாக்கியுள்ளது. சுமார் 2 மீட்டர் உயரத்தில் (6.6) சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது சுமூகமான நிலை காணப்படுவதால் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!( 1 ஆம் இணைப்பு) இந்தோனேஷியாவின் சுலாவேசி பிராந்தியத்தில் 7.5 ரிச…
-
- 6 replies
- 1.5k views
-
-
ரோஹிஞ்சா: ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது. மியான்மரில் ரோஹிஞ்சா சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியத…
-
- 3 replies
- 1.2k views
-
-
நெதர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டம் – எழுவர் கைது நெதர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டனர் என்னும் சந்தேகத்தின் பேரில் ஏழு பேரைக் கைது செய்துள்ளதாக கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை கொண்டு பெரியளவிலான தாக்குதல் முயறிச்யை மேற்கொள்ள இவர் திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஏகே47 ரக துப்பாக்கிகள், எறிகுண்டுகள் மற்றும் வெடி பொருட்களை வாங்குவதற்கு முயற்சி செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 633 views
-