Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ட்ரம்பின் கட்டண அச்சுறுத்தல்; அமெரிக்காவுக்கான பயணத்தை தவிர்க்கும் கனேடியர்கள்! அமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களால் தேசபக்தியின் எழுச்சிக்கு மத்தியில் அதிகமான கனேடியர்கள் தங்கள் அமெரிக்க பயணங்களை இரத்து செய்துவிட்டு வேறு நாடுகளுக்கு விடுமுறைக்கு செல்வதாக கனடாவின் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனேடிய இறக்குமதிகள் மீது 25 சதவீத சுங்க வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். அதே போல் கனடாவை 51 ஆவது மாநிலமாக உள்வாங்குவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவது குறித்தும் யோசனை வெளியிட்டுள்ளார். திங்களன்று (10), கனடா மற்றும் பிற இடங்களில் இருந்து அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிகள் மீது 25 சதவீத வரிகளை விதிக்கும…

  2. 14 ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கப்பூருக்குக் கிடைத்த அங்கீகாரம்! இலஞ்ச ஊழல் குறைந்த உலக நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் லஞ்ச ஊழல் விவகாரங்களைக் கண்காணிக்கும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ள கடந்த ஆண்டுக்கான லஞ்ச ஊழல் கண்ணோட்டக் குறியீட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் லஞ்ச ஊழல் குறைந்த நாடாக இருந்த நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முன்னேறியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் உலக அளவில் 180 நாடுகளில் மூன்றாம் இடத்துக்கு சிங்கப்பூர் வந்திருப்பது, 2020…

  3. அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு! January 7, 2025 5:49 pm கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும் என அமெரிக்கா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், கனடா அமெரிக்காவுடன் இணைந்து விட வேண்டும். 51ஆவது மாநிலமாக ஆக வேண்டும் என்று கூறி வருகிறார். அவர் கூறுவதை எவரும் முக்கயத்துவம் வாய்ந்த விடயமாக எடுத்துக் கொள்வதில்லை. எனினும், டிரம்ப் தான் கூறுவதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். உட்கட்சியில் அவருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. 9 ஆண்ட…

  4. அரிசோனா மாநிலத்தில் தனியார் விமானம் விபத்து ஒருவர் உயிரிழப்பு. இரு சிறிய தனியார் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழ்ந்து இருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். விபத்தில் சிக்கிய ஒரு விமானம் பிரபல் பாடகர் Mötley Crüe பாடகர் Vince Neil க்கு சொந்தமானது. இறந்த காயமடைந்தவர்களின் விபரங்கள் இன்னமும் வெளியிடவில்லை. மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்துங்கள். https://www.yahoo.com/news/arizona-plane-crash-ntsb-investigating-121701206.html

  5. OpenAIஐ வாங்க எலோன் மஸ்க் $97 பில்லியன் சலுகை! எலோன் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு, ChatGPTயின் தயாரிப்பாளரான OpenAIஐக் கைப்பற்றும் முயற்சியில் 97.4 பில்லியன் டொலர் சலுகையை வழங்கியது. பில்லியனரின் சட்டத்தரணி மார்க் டோபரோஃப், தொழில்நுட்ப நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களுக்கான ஏலத்தை திங்களன்று (10) அதன் குழுவிடம் சமர்ப்பித்ததை உறுதிப்படுத்தினார். உலகின் மிகப் பெரிய செல்வந்தரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலது கையுமான மஸ்க் மற்றும் OpenAI தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் ஆகியோருக்கு இடையிலான செயற்கை நுண்ணறிவு குறித்த போட்டியை இந்த நடவடிக்கை அதிகரித்தது. எனினும், ஆல்ட்மேன் இந்த வாய்ப்பை நிராகரித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். …

  6. குவாத்தமாலாவில் 115 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 55 பேர் உயிரிழப்பு! குவாத்தமாலா (Guatemala) தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. திங்கட்கிழமை (10) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்தில் 53 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு இருவர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் பஸ் சாலையில் இருந்து விலகி பாலத்தின் கீழே உள்ள செங்குத்தான 115 அடி (35 மீட்டர்) பள்ளத்…

  7. இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி: ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி! இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக வரி விதிப்புகள் மூலம் அவர் புதிய வர்த்தகப் போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்துள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளின் எதிரொலியாக உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்னதாக மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்…

  8. 03 FEB, 2025 | 04:49 PM யுஎஸ்எயிட் சீர்செய்ய முடியாத நிலைiயைஅடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அமெரிக்க கோடீஸ்வரர் எலொன் மஸ்க் அதனை மூடுவதற்கான நடவடிக்கைகளில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் நேரலை விவாதமொன்றை நடத்தியுள்ள மஸ்க் யுஎஸ்எயிட் குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் நீண்டநேரம் ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நாங்கள் அதனை மூடவேண்டும் என்பதை டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார். யுஎஸ்எயிட் என்பது ஒரு புழு உள்ள அப்பிள் இல்லை பல புழுக்கள் காணப்படும் பொருள் என தெரிவித்துள்ள எலொன்மஸ்க் நீங்கள் அதனை முற்றாக இல்லாமல் செய்யவேண்டும், அது சீர் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட…

  9. விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும்வரை யுத்தநிறுத்தம் இல்லை - நெட்டன்யாகு திடீர் அறிவிப்பு 19 Jan, 2025 | 11:50 AM ஹமாஸ் அமைப்பு தான் விடுதலை செய்யவுள்ள பணயக்கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் வரை காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வராது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்துள்ளார். காசாவில் இன்று காலை யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரவிருந்த நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து ஹமாஸ் தன்னிடமுள்ள சில பணயக்கைதிகளை விடுதலை செய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இந்த நிலையிலேயே ஹமாஸ் அமைப்பு தான் விடுதலை செய்யவுள்ள…

  10. அமுலுக்கு வரும் அமெரிக்கா மீதான சீனாவின் புதிய வரி! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் அதிகரித்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் பல நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், சில அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்துள்ள இறக்குமதி வரி திங்கட்கிழமை (10) முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து சீனப் பொருட்களுக்கும் 10% புதிய அமெரிக்க வரிகள் அமலுக்கு வந்த சில நிமிடங்களுக்குப் பின்னர், பீஜிங் பெப்ரவரி 4 அன்று வரி திட்டத்தை அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமை (09) ட்ரம்ப், அமெரிக்காவிற்கு அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி மீது 25% வரி விதிக்கப்படும் என்று கூறினார். விரைவான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய …

  11. விற்பனையில் சரிவை சந்தித்து வரும் டெஸ்லா! உலகின் மிகப் பெரும் செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்களால், ஐரோப்பாவின் மூன்று முக்கிய சந்தைகளில் டெஸ்லா கார்களின் ஜனவரி மாத விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக , பிரான்சில் 63 சதவீதமும், ஜேர்மனியில் 59.50 சதவீதமும், பிரித்தானியாவில் 12 சதவீதமும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளின் அரசியல் விவகாரங்களில் எலான் மஸ்க் தலையிடுவதாலும், அந்நாட்டு அரச தலைவர்கள் மற்றும் கொள்கைகளை விமர்சனம் செய்வதாலும் அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள், டெஸ்லா கார்களை வாங்க மறுப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அண்மையில் ஜேர்மனியின் சான்சில…

  12. லெபனானின் சுரங்கப் பாதை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! லெபனானில் உள்ள சுரங்கப் பாதை ஒன்றின் மீது நள்ளிரவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை இணைக்கும் இந்த சுரங்கத்தினூடாக ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களைக் கடத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது. நேற்றிரவு இஸ்ரேலின் விமானப் படையின் போர் விமானங்கள் லெபனானின் பெகா பகுதியில் அமைந்த சுரங்கப் பாதை மீதே வான்வழித் தாக்குதலை நடத்தியது. கடந்த நாட்களிலும் இந்த சுரங்கப் பாதை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சுரங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படாமல் தடுக்கும் வழிகளை மேற்கொள்வோம் என இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே…

  13. ரஷ்ய ஜனாதிபதியை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் உயிரிழப்பு! உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷ்ய பாடகர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின் என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் கடந்த புதன்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஜன்னலிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் உக்ரேன் இராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த படத்தில் பூர்வகுடி ஆணும் பெண்ணும் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள் , இது 1865ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம். கட்டுரை தகவல் எழுதியவர், பீட்டர் ஹார்ம்சன் பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நூக் பேராலயத்துக்கு மேலே உள்ள ஒரு மலையில், புராட்டஸ்டன்ட் (கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு பிரிவு) மறைப்பணியாளரான ஹான்ஸ் எகெடேவின் 2 மீட்டர் உயர சிலை உள்ளது. 1700களின் முற்பகுதியில், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக கிரீன்லாந்திற்கு வந்த அவர், கிரீன்லாந்து தீவை வடக்கு ஐரோப்பாவுடன் மீண்டும் இணைக்க உதவினார். அவரது பணியால், கிரீன்லாந்தை டென்மா…

  15. மெக்சிகோவில் பேருந்து-லொறி மோதிவிபத்து: 41 பேர் உயிரிழப்பு! மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு நேற்றைய தினம் 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தொன்று எதிரேவந்த லொறி மீது மோதி தீப்பற்றி எரிந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ் விபத்தில் 41 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அப்பகுதியைச் சேர்ந்த மேயர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உத…

  16. சீனாவில் பாரிய நிலச்சரிவு: 30 பேர் மாயம். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளனர். சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்போது மண்ணுக்குள் புதைந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவினால் மாயமாகியுள்ள 30க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து,தனது அனுதாபத்தை…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் நிருபர், பிபிசி உலக சேவை 8 பிப்ரவரி 2025, 15:37 GMT சீன ஏஐ சாட்பாட் டீப்சீக்கின் எழுச்சி உலகளவில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால், சீனாவின் வளர்ச்சியை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த வெற்றி ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால், 'மேட் இன் சீனா 2025' என்ற லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த பத்து ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் தயாரிப்புகளில் தனது நிபுணத்துவத்தை சீனா மெதுவாக வளர்த்து வருகிறது. ஆய்வாளர்களைப் பொறுத்தவரை, டீப்சீக்கின் வெற்றி என்பது பிரமாண்டமான ஒரு திட்டம் வெற்றியடைந்தது என்பதற்கா…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES மெக்சிகோ மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்ததை அடுத்து, செவ்வாய்கிழமை முதல் கனடா மீது 25% வரி விதிப்பதாக இருந்த திட்டத்தை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கா அதிக வர்த்தகம் செய்யும் இரு நாடுகள் – மெக்சிகோ மற்றும் கனடா. டிரம்ப் இறக்குமதி வரி விதிப்பை அறிவிப்பை அறிவித்த பிறகு, எதிர்வினையாற்றுவது குறித்து இரு நாடுகளும் பேசி வந்தனர். எல்லையில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க பிரத்தியேகமாக ஒரு அதிகாரிய…

  19. சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எதிராக ட்ரம்ப் பொருளாதார தடை! டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிராக ஆக்கிரமிப்பு பொருளாதார தடைகளை அங்கீகரிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். செவ்வாயன்று (04) அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை‍ உத்தரவினை முன்னதாக பிறப்பித்ததன் மூலம் ஹேக் நீதிமன்றம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஊழியர்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள், அமெரிக்க குடிமக்கள் மற்றும் சில நட்பு நாடுகளின் குடிமக்கள் மீது விசாரணை அல்லது வழக்குத் தொடரும் முயற்சிகளில் ஈடுபட்டதாக உறுதிசெய்தா…

  20. இஸ்ரேலின் 3 கைதிகளுக்காக 183 பலஸ்தீன கைதிகள் விடுதலை! இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பகுதியாக, 183 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, மூன்று இஸ்ரேலிய கைதிகள் காசாவில் விடுவிக்கப்பட உள்ளனர். மனிதாபிமான உதவிகள் மற்றும் பிற முக்கிய பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்வதைத் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கைதிகள் 5 ஆவது தடவையாக விடுவிக்கப்படவுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் 12,000க்கும் மேற்பட்ட சடலங்களில் சில இஸ்ரேலிய கைதிகளின் எச்சங்கள் இருப்பதால், அவற்றை ஒப்படைக்க முடியாமல் போகலாம் என்று ஹமாஸ் கூறியுள்ளது. மேலும் இஸ்ரேல் பளு அதிகமான உபகரணங்கள் என்கிளேவ் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கிறது …

  21. அலாஸ்கா விமான விபத்தில் 10 பேர் பலி. அலாஸ்காவில் சிறியரக விமானம் வீழ்ந்ததில் அதிலிருந்த 10 பேரும் பலியாகியுள்ளனர்.மூவரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிதைந்த விமானங்களுக்குள் மற்றையவர்களின் உடலங்களும் இருக்கலாம் என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு யாழுடன் இணைந்திருங்கள். https://www.cnn.com/2025/02/07/us/alaska-cessna-bering-air-hnk/index.html

  22. காசாவில் இன அழிப்புக்கு எதிராக ட்ரம்புக்கு ஐ.நா.தலைவர் எச்சரிக்கை! காசாவில் இனச் சுத்திகரிப்புகளை மேற்கொள்ளும் திட்டங்களை தவிர்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) புதன்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்தார். பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியேற்றவும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி செவ்வாயன்று (04) வெள்ளை மாளிகையில் முன்மொழிந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. தீர்வுக்கான தேடலில், நாம் பிரச்சினையை மோசமாக்கக் கூடாது. சர்வதேச சட்டத்தின் அடிப்பகுதிக்கு உண்மையாக இருப்பது இன்றியமையாதது. இனச் சுத்திகரிப்பு எந்த வகையிலும் தவிர்க்கப்பட வே…

  23. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புதிய வர்த்தகப் போர் அச்சத்துக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு பதிலடியாக பீஜிங் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்ததை அடுத்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஸ்பாட் தங்கம் 02.53 GMT மணியளவில் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.2 சதவீதம் உயர்ந்து 2,848.69 அமெரிக்க டொலர்களாக இருந்தது. முந்தைய நாள் அமர்வில் 2,853.97 அமெரிக்க டொலர்களை எட்டிய பின்னர் தங்கத்தின் விலையானது புதனன்று உச்சத்தை அடைந்தது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.2 சதவீதம் அதிகரித்து 2,879.70 டொலர்களாக இருந்தது. உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயா…

  24. ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஹமாஸ் அமைப்பினர்! இஸ்ரேல் நாட்டிற்குள் கடந்த 2023-ம் ஆண்டு நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். பின்னர் அமெரிக்கா, கட்டார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்காரணமாக 2023 நவம்பர் மாதம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. …

      • Sad
      • Haha
    • 2 replies
    • 446 views
  25. ஸ்வீடன் கல்வி மையத்தில் துப்பாக்கி சூடு: 10 பேர் வரை பலி ஸ்வீடன் நாட்டின் ஓரேப்ரோ நகரில் உள்ள ஒரு வயது வந்தோர் கல்வி மையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. ஸ்டாக்ஹோம் நகருக்கு மேற்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்தில் பத்து பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. TV4 Nyheterna மற்றும் TT உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், சம்பவத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். காயமடைந்தவர்களின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும், அறிக்கைகள் ஒரு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.