Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பின் முதல் வெளிநாட்டுப் பயண அட்டவணை தயார்: - எந்த நாடுகள் தெரியுமா? [Friday 2017-05-05 15:00] அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயண அட்டவணை தயாராகியுள்ளது. அதன்படி இஸ்ரேல், வாடிகன், சவுதி அரேபியாவுக்கு அவர் செல்லவிருக்கிறார்.இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே அவர் இந்தப் பட்டியலில் உள்ள இடங்களுக்குச் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் ட்ரம்பின் வெளிநாட்டுப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.முன்னதாக நேற்று ஜனாதிபதி ட்ரம்ப் பாலஸ்…

    • 0 replies
    • 321 views
  2. உலகில் அதிசக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ள ரஷ்யா! [Friday 2017-05-05 15:00] உலகின் மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ள ரஷ்யா அதை அடுத்த ஆண்டு வெளியிடவுள்ளது.ரஷ்யா ஏற்கனவே Satan என்னும் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்து வெளியிட்டு உலக நாடுகளை மிரள செய்தது.இந்நிலையில், Satan 2 என குறிக்கும் வகையில் RS-28 Sarmat என்னும் உலகின் கனமான மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணையை தயாரித்து வருகிறது. Sarmat ஏவுகணை இதுவரையில்லாத அளவில் 11,000 மைல்கள் போகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த ஏவுகணை பிரான்ஸின் ஒரு பகுதியையே அழிக்கும் அளவுக்கு திறன் கொண்டதாகும்.தொழில்நுட்பத்தை பொருத்தவரைய…

    • 0 replies
    • 298 views
  3. சீனா தயாரித்த முதல் பயணியர் விமானத்தின் வெள்ளோட்டம் சீனாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது பெரிய பயணியர் விமானம், அதனுடைய முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளது. போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு மாபெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய விமானச் சந்தையில் நுழைவதற்கு சீனாவின் அதிகரித்துள்ள அபிலாஷையின் முக்கிய அடையாளமாக சி919 விமானம் பார்க்கப்படுகிறது சர்வதேச விமான சந்தையில் கால்பதிக்க எண்ணியுள்ள சீனாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. போயிங் மற்றும் ஏர்…

  4. பாகிஸ்தான் மீது தாக்குதலை மேற்கொள்ள தயாராகி வரும் இந்திய ராணுவத்தினர்: - எல்லையோர மக்களுக்கு எச்சரிக்கை [Friday 2017-05-05 15:00] பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை மேற்கொள்ள இந்திய ராணுவத்தினர் தயாராகி வரும் நிலையில், எந்நேரத்திலும் ராணுவத்தினர் இத்தாக்குதலை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காஷ்மீரில் இந்தியா–பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லைகளை குறிவைத்து தானியங்கி ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளால் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் கடந்த மே 1 ஆம்…

  5. மினரல் வாட்டர் கேனை கொண்டு சிறுநீர் கழிப்பிடம் உருவாக்கிய தமிழர்கள்: - குவியும் பாராட்டுக்கள் [Friday 2017-05-05 15:00] தமிழ்நாட்டில் காலி வாட்டர் கேனை வைத்து சிறுநீர் கழிக்கும் யூரின் பேஷனை அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கி சாதனை செய்துள்ளனர்.தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 97 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இங்குள்ள சிறுநீர் கழிப்பறை மாணவர்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமாக இருந்துள்ளது. சிறுநீர் வெளியேறும் வசதி அந்த கழிப்பறையில் இல்லாததால் அதன் துர்நாற்றம் பள்ளி வகுப்பறை வரை வீசி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.இதற்கு தீர்வு காண மு…

    • 0 replies
    • 432 views
  6. பிரித்தானியாவுடனான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு ஜேர்மனிய அதிபர் அழைப்பு : பிரித்தானியாவுடன் சிறந்த நல்லுறவுகளை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் நியாயமானதும் ஆக்கபூர்வமானதுமான பேச்சுவார்த்தைக்கு ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுகையில் ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் சிறந்த நல்லுறவுகள் பேணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஹம்பேர்க்கில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேர்க்கல் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தற்போது உள்ள…

  7. கிம் ஜோங்-உன்-ஐக் கொல்ல சி.ஐ.ஏ சதி -வடகொரியா குற்றச்சாட்டு அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் தென் கொரியாவின் உளவாளிகள் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைக் கொல்ல சதி செய்ததாக வட கொரியா குற்றம் சாட்டியிருக்கிறது. படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்கா மற்றும் தென் கொரிய ஏஜெண்டுகள் வட கொரியத் தலைவரான கிம் ஜோங்-உன்னை கொல்லத் திட்டமிட்டுள்ளதாக வட கொரிய தேசிய ஊடகங்கள் கூறியுள்ளன. வடகொரிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், சி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய புலனாய்வு முகமையின் ஆதரவு பெற்ற "பயங்கரவாதக் குழு", உயிரியல் இரசாயனப் பொருள் கொண்டு தாக்குதல் நடத்துவதற்காக வட கொரியாவுக்குள் நுழைந்திருப்பதாகத் தெ…

  8. இன்றைய தொலைக்காட்சி செய்தியறிக்கையில்.. • இன்றோடு முடியும் பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிப் பிரச்சாரம்; அடுத்த அதிபர் முன்னாள் வங்கி அதிகாரியா? அதிதீவிர வலதுசாரியா? • விண்ணில் பறந்தது சீனாவின் முதல் உள்ளூர் தயாரிப்பு வர்த்தக விமானம்; ஆனால் சர்வதேச சந்தையில் இவை எடுபடுமா? • கேமெரா பொறுத்தப்பட்ட செயற்கைக்கை; பார்க்கும் பொருட்களை எடுக்கவல்ல கையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

  9. பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிப் பிரச்சார நாள் ========================================= பிரான்ஸின் அரசியலை தலைகீழாக புரட்டிப் போடும் உக்கிரமான தேர்தல் பிரச்சாரம் இது. ஞாயிறன்று வாக்கெடுப்புக்கு முன்னதாக அந்த நாட்டு வாக்காளர்களிடம் தமது கோரிக்கையை முன்வைக்க அதிபர் வேட்பாளர்களுக்கு இது இறுதி வாய்ப்பு. முன்னணியில் திகழ்வதாக கருதப்படும் மையவாத சுயேச்சை வேட்பாளர் இமானுவல் மெக்ஹோனுக்கு மேலும் ஒரு உற்சாகமாக, அறுபத்தியிரண்டு வீத வாக்குகளை பெற்று போட்டியாளர் தேசியவாத மரின் லு பென்னை அவர் தோற்கடிப்பார் என்று கருத்துக்கணிப்புகள் கூருகின்றன. பிபிசியின் காணொளி. BBC

  10. மனித இனம் உயிருடன் வாழவேண்டுமென்றால் பூமியை துறந்து, வேறு கிரகங்களை நோக்கி 100 வருடங்களுக்குள் செல்லவேண்டுமென பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டிபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார். மேலு உலகில் ஏற்படும் மாற்றங்களை குறித்து ஆய்வு செய்து வரும் ஹாக்கிங், கரும் துளை ஆய்வின் மூலம் காலத்தை வெல்லும் சூட்சுமத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தற்போது உலக இருப்பு தொடர்பான ஆவணப்படமொன்றை உருவாக்கியுள்ளார். குறித்த காணொளியினுடாக இன்னும் 100 வருடங்களில் பூமி மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை கொண்டிருக்காது என தெளிவுபடுத்தியுள்ளார். அத்தோடு குறித்த ஆவணப்படத்தினுடாக, உலக சனத்தொகை பெருக்கம், தொற்றுநோய் பரவல்கள், வளங்கள் இழக்கப்படுகின்றமை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுவரும் அழ…

    • 2 replies
    • 482 views
  11. தனது உயிரைப் பறித்த போரின் இறுதி தருணத்தை பதிவு செய்த ராணுவ புகைப்படக்காரர் ஆப்கன் போரில் மரணமடைந்த ஹில்டா கிளேடன் எடுத்த கடைசி புகைப்படம் | படம்: ஏபி அமெரிக்க ராணுவ பெண் புகைப்பட கலைஞர் ஒருவர் தனது இறுதி தருணத்தின் போது எடுத்த புகைப்படம் நான்கு வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ புகைப்படக் கலைஞர் ஹில்டா கிளேடன் (22), கடந்த 2013 ஆம் ஆண்டு ஆப்கனின் லக்மான் மாகாணத்தில் ஏற்பட்ட பீரங்கிக்குண்டு வெடிவிபத்தில் மரணமடைந்தார். கிளேடனுடன் ஆப்கனை சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களும் பலியாகினர். பீரங்கி குண்டுவெடிப்பில் கிளேடன் விபத்துக்குள்ளான போது அவரது கேமராவில் அவர் எடு…

  12. வடகொரியாவுடன் சுமூகமான உறவைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு வடகொரியாவுடன் சுமூகமான உறவுகளைப் பேண விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. அண்டை நாடான வடகொரியாவுடன் நட்புறவை பேண விரும்புவதாகவும் சீனாவின் நிலைப்பாடு தெளிவானதும் தொடர்ச்சியானதுமாகும் எனவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang தெரிவித்துள்ளார். கொரிய பகுதியில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய சீனா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமெனவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்கா வலியுறுத்தி வரு…

    • 0 replies
    • 242 views
  13. சோமாலியாவில் அரச படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அமைச்சர் பலி சோமாலியாவில் அரச படையினர் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 31 வயதான Abas Abdullahi Sheikh என்ற அமைச்சரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் அரசாங்கப் படையினர் தவறுதலாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் மொகடிஸூவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவயது புகலிடக் கோரிக்கையாளரான Abas Abdullahi Sheikh கடந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அல் கய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சோமாலியாவில் குழப்ப…

    • 0 replies
    • 332 views
  14. மே 24-இல் போப் பிரான்சிஸ் - டொனால்டு டிரம்ப் சந்திப்பு மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. ரோம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிஸ்-ஐ மே மாதம் 24-ந்தேதி சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ சந…

  15. ரஸ்யா இணைய தாக்குதல்களை நடத்துவதாக ஜெர்மனி குற்றச்சாட்டு ரஸ்யா இணையத் தாக்குதல்களை நடத்துவதாக ஜெர்மனி; அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஜெர்மனியின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவு முகவர் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. சைபர் தாக்குதல்களை நடத்தி ஜெர்மனியின் முக்கிய தகவல்களை ரஸ்யா சேகரித்துள்ளதாகவும் இந்த தாகவல்கள் சில வேளைகளில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது பயன்படுத்தப்படலாம் எனவும் ஜெர்மனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ரஸ்யா இவ்வாறு சைபர் தாக்குதல்களை நடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் ஜெர்மனியின் அரசியல் நிறுவனங்கள் மீது எவ்வித சைபர் தா…

  16. இன்றைய (04/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அரச பணிகளிலிருந்து ஓய்வு பெறும் அரசியின் கணவர்; எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறுகிறார். * மதநிந்தனை செய்ததாக கூறப்படுபவரை கொலைகார கும்பலிடமிருந்து காப்பாற்றிய பாகிஸ்தான் மதகுரு; அன்பை போதிப்பதே மதம் என்று வலியுறுத்தல். * சீனாவில் அதிகரிக்கும் சைக்கிள்களின் செல்வாக்கு; சுற்றுச்சூழலை பாதுகாக்குமென செயற்பாட்டாளர்கள் வரவேற்பு.

  17. அரச கடமைகளில் இருந்து விலகுகிறார் இளவரசர் பிலிப் Published by Kumaran on 2017-05-04 16:40:52 எலிசபெத் மகாராணியின் கணவரும், பிரித்தானிய இளவரசருமான பிலிப், அரச கடமைகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும், பொது நிகழ்வுகளில் இனிக் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் என பக்கிங்ஹாம் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. 70 வருடங்கள் இளவரசராக இருந்து வரும் பிலிப், பிரித்தானிய வரலாற்றில் அதிக காலம் அரச கடமைகளை ஆற்றிய இளவரசர் என்ற பெருமையையும் பெற்றவர். தற்போது 95 வயதாகும் பிலிப் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் (அவரது 95வது பிறந்த நாளுடன்) பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள மாட்டார். எனினும் அறக்கட்டளை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்கவுள்ளார். …

  18. ஏயர்டெல் மக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பில் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமுலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏயர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரி…

    • 0 replies
    • 244 views
  19. இன்றைய (03/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்காது; ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைக்குழுவின் தலைமை பேச்சாளர் அறிவிப்பு. * வீட்டுப்பாடத்தை குறைத்து விளையாட்டை ஊக்குவிக்கும் சிங்கப்பூரின் புதிய கல்விக்கொள்கை; மனப்பாடத்தைவிட, வாழ்வின் சவால்களை சந்திக்க கூடுதல் பயிற்சி. * மாதவிலக்கும் மாறாத நம்பிக்கைகளும்; நேபாள அரசு சட்டம் போட்டும் தீட்டு குறித்த மக்கள் மனநிலை மாறாமல் இருப்பதேன்?

  20. பெரிதும் அறியப்படாத இந்திய - வட கொரிய வர்த்தக உறவுகள் சில நாட்களுக்கு முன்பு வரை வட கொரியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடு இந்தியா என்று பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். படத்தின் காப்புரிமைCHANDAN KHANNA/AFP/GETTY IMAGES) உணவு மற்றும் மருந்து உதவிகள் தவிர வட கொரியாவோடு இருக்கும் பிற எல்லா வர்த்தகங்களையும் நிறுத்திவிடுவதாக இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஏப்ரல் மாதம் கடைசி வாரம் தகவல் வெளியிட்டது. வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் அவை விதித்துள்ள தடைகளை கடைபிடிக்கும் வகையில் இந்த வர்த்தக நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இந்தியா கூறியிருக்கிறது. ஆனால், சமீப காலம் வரை, இந்…

  21. கிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்? சரியான சூழ்நிலைகளில் வடகொரிய தலைவர் கிம்-ஜோங் உன்னை சந்தித்தால், தான்அதனை கவுரவமாக கருதுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்? இது குறித்து திங்கள்கிழமையன்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கையில், ''கிம்-ஜோங் உன்னை சந்திக்கும் சூழல் பொருத்தமாக இருந்தால், நிச்சயமாக நான் அவரைச் சந்திப்பேன். அதனை நான் கவுரவமாகவும் கருதுவேன்'' என்று டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார். இதற்கு ம…

  22. பிபிசி தொலைக்காட்சி செய்திகள் 02/05/2017 பிரெஞ்ச் அதிபர் தேர்தலில் போட்டியிடும் மரீன் லூபென் தனது எதிரணி வேட்பாளர் பேச்சின் பல பகுதிகளை களவாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த செய்தி; வெனிசுவேலா போராட்டங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் நாட்டுக்கு புதிய தேசிய அவை ஒன்றை உருவாக்கபோவதாக அதிபர் அறிவித்திருப்பது குறித்த தகவல்கள்; உகாண்டாவில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் சிறுமிகளை அவர்களின் குடும்பமே தனித்தீவுக்கு அனுப்பி உயிரிழக்கச் செய்யும் கொடுமையிலிருந்து தப்பி உயிர்வாழும் கடைசி பெண்ணின் கதை ஆகியவை இடம்பெறுகின்றன.

  23. பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் மீது கருத்து திருட்டு குற்றச்சாட்டு தனது முன்னாள் போட்டியாளர் ஒருவரின் உரையை திருடியதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின் தீவிர வலதுசாரி வேட்பாளர் மரைன் லு பென் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. போட்டி வேட்பாளர் பிரான்ஸ்ஸுவா ஃபியோவின் உரையை ஒத்ததாக அவரது பெருமளவு உரை இருந்துள்ளது. பிரான்ஸ்ஸுவா பியோ ஏற்கனவே முதற்சுற்று வாக்கெடுப்பில் தோல்வியடைந்துவிட்டார். இவை குறித்த பிபிசியின் காணொளி.

  24. 'உலகிலேயே வயதான' 146 வயது இந்தோனேசிய முதியவர் மரணம் உலகிலேயே இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் அதிக வயதானவராக கருதப்பட்ட 146 வயது சோடிமெட்ஜோ மத்திய ஜாவாவில் உள்ள தனது கிராமத்தில் மரணமடைந்தார். படத்தின் காப்புரிமைEPA சோடிமெட்ஜோ என்ற பெயர் கொண்ட, ம்பா கோட்டோ (தாத்தா கோட்டோ) 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என்று ஆவணங்கள் சான்றளிக்கின்றன. ஆனால், இந்தோனேசியாவில் 1900ஆம் ஆண்டில்தான் பிறப்புப் பதிவு நடைமுறை தொடங்கப்பட்டதால், அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் இருக்கலாம். இருந்தபோதிலும், சோடிமெட்ஜோ அளித்த ஆவணங்களின் அடிப்படையில் அவரது வயது 146 என்பது உண்மை என்று அதிகாரிகள் பிப…

  25. வானில் ஏற்பட்ட காற்றுக் கொந்தளிப்பில் விமானப் பயணிகள் 27 பேர் காயம் வானில் ஏற்பட்ட திடீர் காற்றுக் கொந்தளிப்பினால் விமானப் பயணிகள் காயமடைந்துள்ளனர். ரஸ்யாவின் மொஸ்கோவிலிருந்து தாய்லாந்தின் பாங்கொக் நகர் நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் சிலருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த எவருக்கும் உயிராபத்து கிடையாது என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காற்று கொந்தளிப்பினால் விமானம் ஆடத்தொடங்கியதாக பயணி ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். பாங்கொக்கில் தரையிறக்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக இந்த விபத்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.