உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26615 topics in this forum
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம். ஒரு குழந்தை மரணமானதாகவும் 15 பேர்வரை படுகாயமடைந்ததாகவும் 68 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு டாக்ரர் என சந்தேகிக்கப்படுகிறது. https://www.cnn.com/world/live-news/magdeburg-germany-christmas-market-deaths-12-20-24/index.html
-
-
- 18 replies
- 1.3k views
- 2 followers
-
-
உக்ரைனில் உள்ள ஆறு இராஜதந்திர நிலையங்கள் சேதம்! உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா இன்று காலை நடத்திய தாக்குதல் காரணமாக ஆறு இராஜதந்திர நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது அல்பேனியா, அர்ஜென்டினா, வட மெசிடோனியா, பலஸ்தீன், போர்த்துக்கல் மற்றும் மொன்டெனெக்ரின் ஆகிய நாடுகளின் இராஜதந்திர நிலையங்களே இவ்வாறு பாதிப்படைந்துள்ளன உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதல்களில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் இந்தத் தாக்குதலில் மேலும் எழுவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இதன் காரணமாக கட்டடங்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளதுடன், பல வாகனங்கள் தீக்கிர…
-
- 0 replies
- 321 views
-
-
எம்.எச்.370 விமானத்தின் மர்மம் நீங்குமா ? 10 ஆண்டுகளின் பின் மீண்டும் விமானத்தை தேடும் பணி விமான வரலாற்றில் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றான 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பயணிகள் விமானத்தைத் தேடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மலேஷிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேசியன் விமான சேவைக்கு சொந்தமான எம்.எச்.370 என்ற விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் பயணித்த வேளை மர்மமான முறையில் காணாமல் போனது. பயணத்தை ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்ததுடன், விமானம் வழமையான பாதையில் இருந்து விலகி சென்றமை பதிவாகி இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக காணாமல் போன வி…
-
- 0 replies
- 212 views
-
-
பட மூலாதாரம்,HAYAT TAHRIR AL-SHAM படக்குறிப்பு, சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அகமது அல்-ஷாராவிடம் பிபிசி பேசியது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரேமி போவென் பதவி, சர்வதேச ஆசிரியர், பிபிசி நியூஸ் சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கத்திய நாடுகளுக்கோ, தங்கள் நாட்டால் அச்சுறுத்தல் இல்லை என்றும், சிரியாவின் தற்போதைய தலைவர் அகமது அல்-ஷாரா கூறியுள்ளார். சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸில் பிபிசிக்கு அளித்தப் பேட்டியில், சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். ஏனெனில், அவை முந…
-
-
- 8 replies
- 723 views
- 1 follower
-
-
20 DEC, 2024 | 10:08 AM உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரேன் மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரேனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் வழங்கி, பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அதேபோல் ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடுகளான சீனா உள்ளிட்டவை ஆதரவாக செயல்படுகின்றன. தற்போது உக்ரேனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரேனும், ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த சூழலில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ…
-
- 3 replies
- 364 views
- 1 follower
-
-
பிரித்தானியத் தொழில் அமைச்சர் பங்களாதேஷில் ஊழல் மோசடி! பிரித்தானியத் தொழில் அமைச்சர் துலிப் சித்திக் (Tulip Siddiq) பங்களாதேஷில் ஊழல் மோசடிகளை மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். பங்களாதேஷில் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் ஊடாக அவரது குடும்பத்தினர் 3.9 பில்லியன் பவுண்ட்கள் வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய திறைசேரியின் பொருளாதார செயலாளராக நாட்டின் நிதிச் சந்தைகளில் ஊழலைக் கையாள்வதற்கான பொறுப்பை வகித்தபோது அவர், 2013ஆம் ஆண்டு ரஷ்யாவுடனான ஒப்பந்தம் ஊடாக பங்களாதேஷின் அணுமின் நிலையமொன்றுக்கான செலவினை அதிகரிக்கப்படுத்தியதாக துலிப் சித்திக் மீது குற்றம் சாட்டப்படுகிறது. பங்களாதேஷின் பிரதமர் பதவியில…
-
- 2 replies
- 367 views
-
-
ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி December 19, 2024 1:32 pm உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்களம் கண்டுள்ள சமார் 100க்கும் மேற்பட்ட வடகொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியோங்-க்யூன் இன்று தெரிவித்துள்ளார். “டிசம்பரில், வட கொரிய துருப்புக்கள் போரில் ஈடுபட்டதாகவும், இதன் போது குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்,” என்று தென் கொரியாவின் உளவு நிறுவனம் அளித்த விளக்கத்திற்குப் பின்னர் லீ தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான தனது போர் முயற்சிகளுக்கு உதவ ரஷ்யா சுமார் 10,000 வட கொரிய வீரர்களை நியமித்ததாக மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் உக்ரைன் படைகளின் …
-
- 1 reply
- 333 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஹுசம் அசல் பதவி, பிபிசி அரபு சேவை, அமான் நகரிலிருந்து சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், ஜோர்டானியரான பஷீர் அல்-படாய்னே, 38 ஆண்டுகளாக சிரியாவில் காணாமல் போன தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி சரிந்த பிறகு, ஜோர்டானின் இர்பிட்டை சேர்ந்த 83 வயதான பஷீர் அல்-படாய்னே, தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். கடந்த 1986ஆம் ஆண்டு, ஒசாமா தனது பள்ளியின் கடைசி ஆண்டைத் தொடங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் ஒரு வாரம் சிரியாவுக்கு சென்றிருந்தார். …
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, சமீபத்திய தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதியது. அதிபர் பஷார் அசாத் ஆட்சி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த பல லட்சம் அகதிகள் மீண்டும் சிரியாவுக்கு திரும்பி வருவதுடன், அதைக் கொண்டாடியும் வருகின்றனர். மேலும், சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் திகதி வரை இடைக்கால அரசு செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட…
-
- 1 reply
- 459 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,RICK SCHULTING கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாமர்செட் என்ற இடத்தில் நடந்த வன்முறையில் குறைந்தது 37 பேர் வெட்டிக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும், அவர்களை மனிதர்களே உண்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனில் வெண்கலக் காலத்தின் ஆரம்பம் மிகவும் அமைதியானதாக இருந்த நிலையில், இதுதான் அந்தக் காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர்களின் எலும்புகள் 1970களில் குகைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தாக்குதல…
-
- 0 replies
- 466 views
- 1 follower
-
-
‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’ வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் முன்னாள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட குறைந்தது 100,000 பேரின் உடல்கள் டமாஸ்கஸ் தலைநகரின் புறவெளியில் அமைந்துள்ள புதைகுழி ஒன்றில் குவியலாக கிடப்பதாக சிரியா அவசரகால பணிக்குழுத் தலைவர் மவாஸ் முஸ்தஃபா தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் நேற்று டிசம்பர் 16ஆம் திகதி தொலைபேசிவழி பேசிய அவர், தாம் கடந்த பல ஆண்டுகளில் கண்டுபிடித்துள்ள இத்தகைய ஐந்து மனிதக் குவியல் புதைகுழிகளில் சிரியா தலைநகருக்கு 40 கிலோமீட்டர் வடக்கே உள்ள அல் குட்டேஃபா பகுதியும் ஒன்று என்றார். “இந்த ஐந்து இடங்களைத் தவிர வேறு பல மனிதக் குவியல் புதைகுழிகளும் நிச்சயம் இருக்கும். அவற்றில் சிரியா …
-
-
- 6 replies
- 507 views
-
-
இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா! 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மெஸ்கோவின் சுகாதார அமைச்சின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது பணிப்பாளரான Andrey Kaprin அண்மையில் ரஷ்ய வானொலியில் இந்த தகவலை வெளியிட்டதாக அந் நாடு அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் TASS செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது புற்றுநோயைத் தடுப்பதற்காக பொது மக்களுக்கு வழங்கப்படுவதற்குப் பதிலாக, புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும். மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்படும் புற்றுநோய் தடுப்பூசிகளைப் போ…
-
- 0 replies
- 365 views
-
-
டெஹ்ரான்: ஈரானை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதி ஆன்லைன் கான்சர்ட் நிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அந்த நாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்று ஈரான். இஸ்லாமிய நாடாக அறியப்படும் இந்த நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பெண்கள் பொதுவெளியில் நடமாடும்போது ஹிஜாப் அணிய வேண்டும். மேலும் இதனை மீறுவோருக்கு சிறை தண்டனை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஈரான் நாட்டை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதிக்கு ரசிகர்கள் உள்ளனர். கடந்த 11ம் தேதி பரஸ்து அஹமதி ஆன்லைனில் இசை நிகழ்ச்சியை…
-
- 1 reply
- 324 views
-
-
சர்ச்சைக்குரிய புதிய ஆடைக் கட்டுப்பாடு சட்டத்தை இடைநிறுத்திய ஈரான்! எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நடைமுறைக்கு வரவிருந்த மிகவும் சர்ச்சைக்குரிய “ஹிஜாப் மற்றும் கற்பு சட்டம்” அமலாக்கத்தை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) இடைநிறுத்தியுள்ளது. சட்டத்திற்கு எதிராக உள்நாட்டு, சர்வதேச கண்டனங்கள் மற்றும் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த திடீர் இடைநிறுத்தம் வந்துள்ளது. சட்டம் தெளிவற்ற நிலையில் உள்ளதாக கூறியுள்ள ஈரானிய ஜனாதிபதி சூத் பெசெஸ்கியன் (Masoud Pezeshkian), அதை நடைமுறைப்படுத்துவதற்கு சீர்திருத்தம் அவசியம் என்றும் விவரித்தார். இதன் விளைவாக குறித்த சட்டமூலம் மறுபரிசீலனைக்கு உட்படவுள்ளது. பொது வெளியில் தலைமுடி, முன்கைகள் அல்லது க…
-
- 0 replies
- 252 views
-
-
ரஷ்ய கதிரியக்க பாதுகாப்புப் படைத் தலைவர் ஒருவர் கொலை December 17, 2024 11:54 ரஷ்யாவின் மாஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகினர். ரஷ்யாவின் கதிரியக்க வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ கிரிலோஃப் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=197417
-
- 2 replies
- 370 views
- 1 follower
-
-
பஷர் அல்-அசாத்தின் ஆட்சியில் 25 கோடி அமெரிக்க டொலர்கள் ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்! பதவியிலிருந்து விலக்கப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக் காலத்தில், சுமார் 25 கோடி அமெரிக்க டொலர்கள் ரஷ்யாவிற்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக 'பைனான்சியல் ரைம்ஸ்' விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு பகுதியில் இந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. 100 டொலர் நாணயங்கள், மற்றும் 500 யூரோ நோட்டுக்களைக் கொண்ட தொகுதியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் விபரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்த பணத்தொகை, மொஸ்க்கோவில் உள்ள வங்கியில் வைப்பிடப்பட…
-
-
- 7 replies
- 416 views
-
-
மயோட்டியில் சூறாவளி: நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்! December 16, 2024 சனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிடோ சூறாவளி மணிக்கு 225 கிலோ மீற்றர் வேகத்தில் கடந்து சென்றதுடன், மயோட்டியை முழுவதுமாக தரைமட்டமாக்கியது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டில் மடகாஸ்கருக்கு வடக்கே பிரெஞ்சு இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தைத் தாக்கிய மிகத் தீவிரமான புயலாக மயோட்டி மீது சூறாவளி வீசியதாக பிரான்ஸ் வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது. பிரெஞ்சு உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்லியோ குறைந்தது 11 பேர் சூறாவளி தாக்கம் காரணம…
-
- 0 replies
- 195 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்டுரை தகவல் எழுதியவர், எமிலி ஆட்கின்சன், ஜாக் பர்கெஸ் பதவி, பிபிசி செய்திகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் குன்றுகளில் குடியேற்றங்களை விரிவுப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது இஸ்ரேல் அரசு. இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவால் சிரியாவில் அசத்தின் ஆட்சி வீழ்ந்த பிறகு, இஸ்ரேலுடனான சிரியாவின் எல்லையில் ஒரு 'புதிய அமைப்பு ' உருவாகியுள்ளதால் இந்த நடவடிக்கை முக்கியமான ஒன்று என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டார். 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற 6 நாட்கள் போருக்கு பிறகு கோலன் குன்றுகளை கைப்பற்றியது இஸ்ரேல். இஸ்ரேல் கோல…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SOUTHERN TRANSPORT PROSECUTOR'S OFFICE படக்குறிப்பு, ரஷ்ய அதிகாரிகளால் வெளியிடப்பட்ட காணொளி ஒரு எண்ணெய் கப்பல் பாதியாக பிளவுபட்டதைக் காட்டுகிறது கட்டுரை தகவல் எழுதியவர்,டாம் பென்னட் பதவி,லண்டனில் இருந்து கருங்கடலில் 29 பணியாளர்களுடன் சென்ற இரண்டு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் இருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் தெற்கு போக்குவரத்து வழக்குரைஞர் அலுவலகத்தால் டெலிகிராமில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், பலத்த புயலுக்கு மத்தியில் கப்பல்களில் ஒன்று பாதியாக உடைந்து மூழ்கியுள்ளது, கடலில் எண்ணெய் கசிவின் சுவடுகள் தென்படுகின…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கவிழ்த்த கிளா்ச்சியாளா்களுடன் பிரித்தானிய அரசு இராஜதந்திர தொடர்பை கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். சிரிய நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் பவுண்டுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(HTS) தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அதனுடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க முடியும் எனவும் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச உதவிகள் மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசாங்கம் சிரியாவை ஆட்சி செய்வதை பிரித்தானியா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ச…
-
- 0 replies
- 262 views
-
-
Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்ட…
-
- 0 replies
- 377 views
-
-
சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா December 15, 2024 12:45 pm ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு முக்கிய தளங்களை விட்டு வெளியேறவில்லை என்று நான்கு சிரிய அதிகாரிகள் ரொயிட்டர்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவுடன் நெருங்கிய கூட்டணியை உருவாக்கிய அசாத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு, ரஷ்யாவின் தளங்களான லடாகியாவில் உள்ள ஹ்மெய்மிம் விமானத் தளம் மற்றும் டார்டஸ் கடற்படை தளத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை செயற்கைக…
-
-
- 6 replies
- 648 views
-
-
15 DEC, 2024 | 10:50 AM பசார் அல் அசாத்த பதவிகவிழ்ப்பதற்கான முயற்சிகள் சிரியாவின் வேறு எந்த பகுதியையும் விட டெரா என்ற சிரிய நகரத்திலேயே ஆரம்பமானது. இந்த நகரம் ஜோர்தான் சிரிய எல்லையில் காணப்படுகின்றது. இந்த நகரத்தில் 2011 மே 21ம் திகதி சித்திரவதை செய்து சிதைக்கப்பட்ட 13 வயது ஹம்சா அல் ஹட்டிப்பின் உடலை அசாத்தின் அதிகாரிகள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைத்தனர். அசாத் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டதற்காக இவர் கைதுசெய்யப்பட்டார். அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதால் சீற்றமடைந்த பதின்மவயதினர் சுவர்களில் அசாத்திற்கு எதிரான வாசகங்களை எழுததொடங்கினார்கள். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தன,அதனை …
-
- 1 reply
- 249 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் ஆப்பிரிக்காவை விட்டு வெற்றிகரமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடியேறுவதற்கு முன்பு பல முறை அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் முடிவுகள் தெரிவித்துள்ளன. புதிய மரபணு ஆராய்ச்சி, நவீன மனிதர்கள் உயிர் வாழ நியாண்டர்தால் மனிதர்கள் முக்கியமான பங்கு வகித்தனர் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய பிறகு ஆரம்பகால ஐரோப்பிய மக்களே உலகில் ஆதிக்கம் செலுத்தும் மனித இனமாக நீண்ட காலத்திற்கு கருதப்பட்டது. ஆனால் நியாண்டர்தாலுட…
-
- 0 replies
- 397 views
- 1 follower
-
-
தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை நிறைவேற்றம் December 14, 2024 02:01 pm தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று காலை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இரவு திடீரென இராணுவச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் அடிப்படையில் தென் கொரிய எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக ஒரு குற்றப்பிரேரணையை கொண்டு வந்தன. எனினும், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மக்கள் சக்தி கட்சியினர் வாக்கெடுப்பை புறக்கணித்து, பாராளுமன்றத்தை விட்டு வௌிநடப்பு செய்ததன் காரணமாக…
-
- 1 reply
- 247 views
- 1 follower
-