உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்தின் சோதனை அமெரிக்காவில் இன்று தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், வாஷிங்டனில் உள்ள சுகாதாரத்துறை அராய்ச்சி நிறுவனம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்திற்கான சோதனை இன்று தொடங்க உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான 45 தன்னார்வலர்களை கொண்டு இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், மருந்து ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதை ஆராய்ந்து அதன்மூலம் அடுத்த கட்ட சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/103849/கொரோனா-வைரசிற்கான-தடுப்புமருந்தின்-சோதனை-இன்று…
-
- 21 replies
- 2.3k views
-
-
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 120 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 120 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்: இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த தகவல் ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்பே கணித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பஞ்சாங்கத்தில் டிசம்பர் மாதம் (மார்கழி) மேற்கு திக்கில் இருந்து புதிய வை…
-
- 0 replies
- 493 views
-
-
ஹாங்காங்: கொரோனா வைரசுக்கு எதிரான, 'ஆன்டி வைரல் கோட்டிங்' ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக ஹாங்காங் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைகழக ஆராய்ச்சி குழுவை சேர்ந்த பேராசிரியர் குவான் கூறியதாவது: இந்த பூச்சுக்கு மேப்-1 ( MAP-1) என அழைக்கப்படுகிறது. 10 ஆண்டுகால ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் லிப்ட் பட்டன்கள் மற்றும் ஹேண்ட்ரெயில்கள் போன்றவற்றில் பயன்படுத்தலாம். இது மற்ற பிளீச் மற்றும் ஆல்கஹால் போன்ற பொதுவான கிருமி நாசினிகிளை போல் இல்லாமல் மேப்-1 வெப்ப உணர்திறன் கொண்டவை. நச்சுத்தன்மையற்ற , தோல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. கொரோனா வைரசுக்கு எதிராக 90 நாட்கள் வரையி…
-
- 0 replies
- 513 views
-
-
நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 2½ நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர். கோப்புபடம் வாஷிங்டன்: அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நியூயார்க் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கி வருகிறது. நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய…
-
- 0 replies
- 398 views
-
-
கொரோனா வைரசுக்குச் சூட்டிய ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை கைவிடுகிறது அமெரிக்கா! கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றாக மாறிவிட்டதாலும் அதைக் கட்டுப்படுத்த சீனாவின் உதவி வேண்டும் என்பதாலும் ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை விட்டுவிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, தனக்குத் தேவையான முகக் கவசங்கள் உள்ளிட்ட 50 சதவிகித தனிநபர் பாதுகாப்பு உபகரணங்ளுக்கு சீனாவை நம்பியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோவும் அடிக்கடி பயன்படுத்தும் ‘வுஹான்’ வைரஸ் என்ற சொல் அமெரிக்காவின் அகராதியில் இருந்து மறைகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு இடையில் மிகுந்த ஒத்துழைப்பு தேவை என்பதால் சீனாவை குறிவைத்து பேசப்பட்ட குறித்த அ…
-
- 0 replies
- 295 views
-
-
-
- 8 replies
- 1.2k views
-
-
கொரோனா வைரஸால் ஹொங்கொங்கில் முதல் உயிரிழப்பு பதிவானது சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சீனாவுக்கும் ஹொங்கொங்குக்கும் இடையிலான எல்லையை ஹொங்கொங் அரசாங்கம் தற்காலிகமாக மூடியுள்ளது. சீனாவின் வுஹான் நகரிலிருந்து ஹொங்கொங் சென்ற 39 வயதான ஒருவரே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸில் சீனாவின் வுஹான் நகரிலிருந்து சென்ற 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்த நிலையில் சீனாவுக்கு வெளியே இடம்பெற்ற இரண்டாவது உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர …
-
- 0 replies
- 291 views
-
-
கொரோனா வைரஸினால் ஆட்டம் காணும் உலக நாடுகள் – இதுவரை 28 இலட்சம் பேருக்கு வைரஸ் தொற்று! கொரோனா வைரஸ் தாக்கம் உருவான சீனாவின் வுஹான் நகரையும் தாண்டி தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளை குறித்த வைரஸ் ஆட்டம் காணவைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் மரணங்கள் 1 இலட்சத்து 97 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரங்களில் 1 இலட்சத்து 5 ஆயிரத்து 616 புதிய நோயாளர்கள் உலகம் முழுவதும் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 28 இலட்சத்து 28 ஆயிரத்து 617 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், 6 ஆயிரத்து 174 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 1 இ…
-
- 1 reply
- 353 views
-
-
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர்! இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 19 சதவீதம் பேர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த கணக்கு மொத்த மக்கள் தொகையை கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து தேசிய சுகாதார இயக்குநர், ஹபீப் நக்வி கூறுகையில், இதுபோன்று கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் அதிகம்பேர் உயிரிழந்தது கவலையை அளித்துள்ளது. இது மிகவும், கடினமான சூ…
-
- 0 replies
- 272 views
-
-
கொரோனா வைரஸினால், பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்! கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் நாஞ்சாங்கில் உள்ள நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இணைப்பு வைத்தியசாலையிலிருந்து குறித்த நபர் வெளியேறியுள்ளார். 37 வயதான ஒருவரே இவ்வாறு சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பிட்ட நோயாளி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதற்கான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நோய் குணமடைந்து வெளியேறியுள்ளார். சீனாவில் பரவியதன் மூலம் உலகத்தையே அச்சம் கொள்ள செய்திருக்கும் கொர…
-
- 0 replies
- 308 views
-
-
கொரோனா வைரஸின் தாக்கம் : ஆசியாவிற்கு வெளியே முதல் மரணம் பதிவு! கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 80 வயதுடைய சீன சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஆசியாவிற்கு வெளியே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைககள் பலனின்றி ஏற்ட்ட முதலாவது மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை சீனாவில் தற்போத வரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 66,492 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 1,524 ஆகவும் உய உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75703
-
- 0 replies
- 488 views
-
-
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் விசாரணைக்கு சீனா ஆதரவு கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரமான விசாரணைக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று, கடந்த ஆண்டு சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தோற்றம் பெற்றது. தற்போது இந்த வைரஸ் 215இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று குறித்து தகவல்களை பரவ விடாமல் சீனா ஆரம்பத்தில் தடுத்து விட்டது என அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தது. எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்திருந்தது. இந்த விவகாரம் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் தீர்…
-
- 0 replies
- 276 views
-
-
கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய வைத்தியர்கள்! கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை பிரித்தானிய வைத்தியர்கள் வெளியிட்டுள்ளனர். வைரஸிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாத நோயாளிகள் மணம் மற்றும் சுவை உணர்ச்சிகளை இழந்தவர்களாக காணப்படுவார்கள் என பிரித்தானியாவின் காது தொண்டை மூக்கு தொடர்பான நோய்கள் குறித்த கற்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது. வைரஸ் கண்கள் மூக்கு மற்றும் தொண்டை ஊடாகவே நுழைகின்றன என்பதை ஏனைய நாடுகளின் ஆதாரங்கள் உறுதி செய்துள்ளன என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. நாங்கள் புதிய அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளோம், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாசனை மற்றும் சுவை உணர்வை இழந்தவர்களாக காணப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளன…
-
- 1 reply
- 699 views
-
-
கொரோனா வைரஸுக்கு புதிய பெயர் – உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பு! கொரோனா வைரஸுக்கு covid-19 என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி 18 மாதங்களில் தயாரிக்கப்படும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரத்து 110 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 42 ஆயிரத்து 638 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் ஹுபெய் மாகாணம் வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களில் சீனா முழுவதும் வைரஸ் வேகமாகப் பரவி …
-
- 0 replies
- 340 views
-
-
கொரோனா வைரஸை அழிக்கும் தொழில் நுட்பம்கொண்ட முககவசம் தயாரிப்பு கொரோனா வைரஸை அழிக்கும் தொழில் நுட்பம்கொண்ட முககவசத்தை தாங்கள் கண்டறிந்துள்ளதாக சுவிட்சர்லாந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. பதிவு: ஜூன் 18, 2020 15:02 PM ஜெனீவா சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று, துணிகளை கிருமிநீக்கம் செய்ய பயன்படுத்தப்படும் தங்கள் தொழில்நுட்பம் கொரோனா வைரஸையும் கொல்வதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சஞ்சீவ் சுவாமி என்பவருக்கு சொந்தமான அந்த நிறுவனம், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாஸ்குகளை செய்யும் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜக் நகரில் அமைந்துள்ள லிவிங்கார்டு டெக்னாலஜி என்ற அந்த நிறுவனம்தான் இந்…
-
- 1 reply
- 353 views
-
-
கொரோனா வைரஸை உலகம் எப்படி வென்று கொண்டிருக்கிறது? இந்த ஐந்து செய்திகள் நிச்சயம் உங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை தரும்
-
- 0 replies
- 381 views
-
-
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஆய்வாளர்கள் அறிவிப்பு! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேத்தில் பரவிவருகின்ற நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஹாலந்தில் உள்ள 10 ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். முதற்கட்டமாக குறித்த தடுப்பு மருந்தை எலியிடம் செலுத்தி ஆய்வு செய்தனர். அதில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர். சர்வதேச அளவில் அது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் வெற்றி கிடைத்தால் இந்த மருந்தை அதிகளவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆய்வு குழுவினர் கொரோனா வைரஸின் முதல் 6 பிரிவுக்…
-
- 0 replies
- 526 views
-
-
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கு வெற்றி: 65,541பேர் குணமடைந்துள்ளதாக தகவல்! சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று தற்போது, அங்கு சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவுக்கு வெளியே அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ், மிக வேகமாக பரவிவருகின்றது. இந்தநிலையில், சீனாவில் புதிய நோயாளிகள் வருகை மற்றும் இறப்பு வீதமும் கணிசமாக குறைந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து 824 பேருக்…
-
- 1 reply
- 505 views
-
-
“ஒரு வியட்நாம் பிரஜையாக நாங்கள் அனுப்பிய செய்தி உலகம் முழுவதும் சரியாக சென்று சேருவது மகிழ்ச்சி” என்று பெருமிதப்படுகிறார் இன்னொரு ட்விட்டர் பயனர். “ஒரு வியட்நாம் பிரஜையாக நாங்கள் அனுப்பிய செய்தி உலகம் முழுவதும் சரியாக சென்று சேருவது மகிழ்ச்சி” என்று பெருமிதப்படுகிறார் இன்னொரு ட்விட்டர் பயனர். கொரோனா வைரஸ் வருவதற்கு முன்னரே நம்மை எப்படி தற்காத்துக் கொள்வது என்பதுதான் தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. அதை மக்களுக்கு எளிமையாக சொல்ல வியட்நாமைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஒருவர் வித்தியாசமான நடன வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஒருவர் கொரோனாவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, எப்படி கை கழுவ வேண்டும் என்று நடனத்தின் வாயிலாகவே சொல்லித் தரப்படுகிறது.…
-
- 1 reply
- 438 views
-
-
கொரோனா வைரஸைத் தொடர்ந்து சீனாவின் மற்றொரு மாகாணத்தில் அதிகரித்துள்ள பறவைக் காய்ச்சல்! சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் மனிதர்களைக் காவுகொண்டு உலகை மிரட்டிவருகின்றது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான வுஹானிலிருந்து 350 மைல் தொலைவில் அமைந்துள்ள தெற்கு மாகாணமான ஹுனானின், ஷாயாங் நகரில் பறவைக் காய்ச்சல் அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பண்ணைகளில் H5N1 பறவைக் காய்ச்சல் தாக்கம் அதிகரித்திருப்பதாக சீன வேளாண்மை மற்றும் கிராம விவகார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறு ஒரு பண்ணையில் 7,850 கோழிகளில் இந்தப் பறவைக் காய்ச்சல் இனங்கானப்பட்டுள்ளதுடன் அவற்றில் 4,500 கோழிகள் பறவைக் காய்ச்சல் காரணமாக இறந்துள்ளதாக தெரிவிக்க…
-
- 0 replies
- 352 views
-
-
கொரோனா வைரஸ் - 3 நாடுகளில் ஒரே நாளில் 494 பேர் பலி ஐரோப்பிய ஒன்றியத்தின் 3 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு மரணம் நிகழ்வது இதுவே முதல்முறை. இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனிலும் ஒரே நாளில் 14 பேர் பலியான…
-
- 0 replies
- 356 views
-
-
உலக மக்களை தாக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் பிரித்தானியாவில் மட்டும் ஒரே நாளில் 33 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 104 என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு புதிதாக 676 பேர் இலக்காகியுள்ள நிலையில், இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 2,626 என அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் இந்த வார இறுதிக்குள் மூடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதே முடிவை பிரித்தானியாவும் மெற்கொள்ளுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையிலேயே வே…
-
- 0 replies
- 553 views
-
-
கொரோனா வைரஸ் – 213 பேர் பலி – சர்வதேச ரீதியில் அவசரநிலை பிரகடனம்… January 31, 2020 புதிய கொரோனா வைரஸ் சீனாவுக்கு வௌியே உலக நாடுகளில் பரவியுள்ளதால் சர்வதேச சுகாதார அமைப்பினால் சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை தவிர வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சர்வதேச சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். குறைந்தளவு ஊட்டச்சத்தை கொண்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவுவது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 18 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும் அதனால் 98 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த ஸ்தாபனம் தெரிவித்…
-
- 0 replies
- 535 views
-
-
கொரோனா வைரஸ் – 92 ஆயிரத்து 862 பேர் பாதிப்பு 3,200 பேர் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் இதுவரை மூவாயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 92 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சீனாவில் நேற்று வரையில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2 ஆயிரத்து 981 ஆக உயர்வடைந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் சீனாவில் உயிரிழந்த 38 பேரில் 37 பேர் கொரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் மாத்திரம் சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் கொரோனா தொற்றுக்குள்ளான 119 பேர் …
-
- 0 replies
- 323 views
-
-
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரிப்பு! சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயில் உருவான உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம்(வியாழக்கிழமை) மாத்திரம் 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் புதிதாக 3,141 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றினால் இதுவரை 31,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த 73 பேர்களில் 69 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்ட 30,000 பேரில் சுமார் 4,800…
-
- 0 replies
- 332 views
-