உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது அசர்பைஜானின் பாகுவில் இருந்து 72 பயணிகளுடன் ட்ரோஸ்னி நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அடர்ந்த மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்ட இந்த விமானம் கஜகஸ்தானின் அக்டாவ் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது. அப்போது விமானம் திடீரென கீழே விழுந்தது. இதில் விமானம் வெடித்து சிதறி தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான நிலையம் அருகே பலமுறை வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப…
-
-
- 28 replies
- 1.8k views
- 1 follower
-
-
‘SUZUKI மோட்டர்ஸ்’ நிறுவனத்தின் ஒசாமு சுசுகி காலமானார்! சுசுகி மோட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இந்திய கார் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொழிலதிபருமான ஒசாமு சுசுகி, தனது 94ஆவது வயதில் காலமானார். லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் 25ஆம் திகதி உயிரிழந்ததாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் கெய்ரோவில் பிறந்த ஒசாமு, உலகப் புகழ் பெற்ற சுசுகி மோட்டார்ஸ் குழுமத்தின் நிறுவனர் குடும்பத்துடன் திருமணம் செய்த பின், அந்த தொழிலில் முன்னணி நபராக செயலாற்ற தொடங்கினார். 1958ஆம் ஆண்டு சுசுகி குழும தொழிலில் சேர்ந்த அவர், 1978இல் நிறுவனத்தின் தலைவரானார். 1982ஆம் ஆண்டு அவர் இந்திய ஓட்டோமொபைல் சந்தைய…
-
- 0 replies
- 256 views
-
-
நோர்வே பஸ் விபத்தில் மூவர் உயிரிழப்பு, பலர் காயம்! மோசமான வானிலை காரணமாக வடக்கு நோர்வேயில் வியாழன் (26) அன்று பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் இந்த விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், நார்விக்கிலிருந்து சோல்வேர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வடக்கு நோர்வேயின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லோபோடென் தீவுக்கூட்டத்தில், ராஃப்ட்சுண்டெட் அருகே உள்ள ஹாட்சல் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். …
-
- 0 replies
- 268 views
-
-
புட்டினின் கோர முகம் - அவசர அவசரமாக யுத்தத்திற்குத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!! ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக ஒரு யுத்தத்தை எதிர்கொள்வதற்கு தமது பிரஜைகளைத் தயார்படுத்த ஆரம்பித்துள்ளன. யுத்தத்தை எதிர்கொள்வதற்காக இந்த நாடுகள் மேற்கொண்டுவருகின்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை அங்குள்ள ஊடகங்கள் பெரிய அளவில் பரபரப்பாக்காமல் மிக மிகக் கவனமாகக் கையாண்டுவருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ஏற்பாடுகள் நடக்கின்றன.. அறிவுறுத்தல் செய்திகளும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன, ஆனால் எந்தவிதப் பரபரப்போ, ஆரவாரமோ இல்லாமல். அச்சத்தை ஏற்படுத்துகின்ற இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: https://ibctamil.com/article/war-preparatios-in-europ…
-
-
- 4 replies
- 651 views
- 1 follower
-
-
டிரம்பின் அச்சுறுத்தல் - கிறீன்ன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்துகின்றது டென்மார்க் 26 Dec, 2024 | 10:55 AM கிறீன்லாந்தினை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது குறித்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளதை தொடர்ந்து டென்மார்க் கிறீன்லாந்திற்கான பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கிறீன்லாந்தின் பாதுகாப்பிற்கான நிதிஒதுக்கீட்டில் அதிகரிப்பை செய்யவுள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது. டென்மார்க் பிரதமர் ட்ரோல்ஸ் லண்ட் பால்சன் இதனை அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை வெளியிடவேண்டிய தருணத்தை விதியின் முரண்நகைச்சுவை என அவர் வர்ணித்துள்ளார். கிறீன்ல…
-
-
- 11 replies
- 814 views
- 1 follower
-
-
அமெரிக்க விலங்குகள் சரணாலயத்தில் பறவைக் காய்ச்சலினால் 20 புலிகள் பலி 26 Dec, 2024 | 12:45 PM அமெரிக்காவில் வொஷிங்டன் மாநிலத்திலுள்ள விலங்குகள் சரணாலயத்தில் கடந்த பல வாரங்களில் ஒரு வங்காளப் புலி மற்றும் நான்கு கூகர் புலிகள் உட்பட 20 புலிகள் பறவைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. "இந்த விலங்குகள் இறந்த சோகம் எங்களை ஆழமாக பாதித்துள்ளது, இந்த நம்பமுடியாத இழப்பால் நாங்கள் அனைவரும் கவலை அடைகிறோம்" என வொஷிங்டனின் வைல்ட் ஃபெலிட் அட்வகேசி சென்டர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றால் சரணாலயம் தனிமைப்படுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 367 views
-
-
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சுமார் 1200 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். எல்லோருக்கும் பிரான்ஸ் அல்லது பாரிஸ் என்றதும் கம்பீரமாக நிற்கும் ஈபிள் கோபுரம் தான் சட்டென கண்முன் வந்து செல்லும். உலக அளவில் அனைவரும் அறிந்த அடையாள சின்னமாக இருக்கும் ஈபிள் கோபுரத்தை நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடு என சுமார் 25,000 மக்கள் பார்வையிடுவது வழக்கம். இந்த சூழலில் தான் அதில் தீ விபத்து ஏற்பட்டது. ஈபிள் கோபுரத்தில் உள்ள லிப்ட் ஷாஃப்டின் கேபிளில் ஏற்பட்ட அதீத வெப்பம் தான் தீ விபத்துக்கு காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தீப்ப…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
கிறிஸ்மஸ் மரம் எரிப்பு; சிரியாவில் வெடித்தது போராட்டம்! சிரியாவில் கிறிஸ்மஸ் மரத்தை எரித்ததற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளதுடன், சிறுபான்மையினரை பாதுகாக்க புதிய இஸ்லாமிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் நகரமான சுகைலாபியாவின் (Suqaylabiyah) பிரதான சதுக்கத்தில் கிறிஸ்துமஸ் மரம் தீப்பிடித்து எரிவதை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி காட்டுகிறது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு போராளிகள் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்திய எழுச்சிக்கு தலைமை தாங்கிய முக்கிய இஸ்லாமியப் பிரிவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கூறியுள்ளது. …
-
- 1 reply
- 330 views
-
-
25 DEC, 2024 | 11:30 AM அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டிரம்ப் பதவியேற்ற அன்றைய தினமே அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் டிரம்பின் ஜனாதிபதி மாற்றகுழுவினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட சுகாதார சட்ட நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளனர். பதவியேற்ற அன்றே அல்லது அடுத்த சில நாட்களில் டிரம்ப் அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என நம்பகதன்மை மிக்கவர்கள் தெரிவித்துள்ளனர் என வோசிங்டனின் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக பேராசிரிய…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
கிறிஸ்மஸ் தினத்தில் ரஸ்யா உக்கிரம் - உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பு மீது தாக்குதல் 25 Dec, 2024 | 12:58 PM உக்ரைன் மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் ரஸ்யாவின் உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்யா உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து பாரிய வலுசக்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கார்கிவ் நகரத்தின் மீது கடும் தாக்குதல் இடம்பெறுவதாக அதன் மேயர் தெரிவித்துள்ளார். டிரோன் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் மெட்ரோ புகையிரத நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். தலை…
-
- 0 replies
- 276 views
-
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம். ஒரு குழந்தை மரணமானதாகவும் 15 பேர்வரை படுகாயமடைந்ததாகவும் 68 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு டாக்ரர் என சந்தேகிக்கப்படுகிறது. https://www.cnn.com/world/live-news/magdeburg-germany-christmas-market-deaths-12-20-24/index.html
-
-
- 18 replies
- 1.4k views
- 2 followers
-
-
24 DEC, 2024 | 05:00 PM அமெரிக்க செயற்கை நுண்ணறிவு துறைக்கான கொள்கை ஆலோசகராக சென்னையை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு தனது ஆதரவாளர்களை டிரம்ப் நியமித்து வருகிறார். இந்நிலையில் இந்திய - அமெரிக்க தொழிலதிபரும் எழுத்தாளருமான ஸ்ரீராம் கிருஷ்ணன் டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து அமெரிக்காவுக்கான செயற்கை நுண்ணறிவு கொள்கையை வடிவமைப்பார் என டிரம்ப் அறிவித்துள்ளார். தனது நியமனத்திற்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன் நாட்டிற்கு சேவை செய்யவும் AIயில்தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையை உறுதிப்படுத்தவும் பெரு…
-
-
- 3 replies
- 439 views
- 1 follower
-
-
தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா! கோபத்தில் சீனா. தாய்வானுக்கும் சீனாவுக்கும் போர்ப்பதற்றம் நிலவி வரும் நிலையில், தாய்வானுக்கு 57.1 கோடி டொலர்கள் பெறுமதிவாய்ந்த இராணுவ உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் ஒப்புதல் அளித்தார். அமெரிக்காவின் குறித்த நடவடிக்கை சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அரசு நெருப்புடன் விளையாடுவதாக சீனா எச்சரித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தாய்வானுக்கு ஆயுதம் அளிப்பதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும். தாய்வான் நீரிணையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கெடுக்கும் அபாயகரமான நகர்வுகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது. …
-
- 4 replies
- 354 views
-
-
பட மூலாதாரம்,NATALIA BOTERO-ACOSTA படக்குறிப்பு, கொலம்பியாவில் பசிபிக் கடற்கரை அருகே எடுக்கப்பட்ட படம். கட்டுரை தகவல் எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ் பதவி, பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் இதுவரை பதிவான இடம்பெயர்வுகளிலேயே, மிக நீண்ட தொலைவு மற்றும் மிகவும் அசாதாரணமான இடம்பெயர்வை ஹம்பேக் (Humpback) திமிங்கலம் ஒன்று மேற்கொண்டதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது, காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்திருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த திமிங்கலம் 2017-ம் ஆண்டில் கொலம்பியாவில் பசிபிக் பெருங்கடலில் காணப்பட்டது. அதன்பின், சில ஆண்டுகள் கழித்து 13,000 கி.மீ-க்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஸான்ஸிபார் அருகே காணப்பட்டது. …
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சொந்த கட்சிக்குள் இருந்தும் ட்ரூடோ பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச அரங்கில் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது உள்நாட்டு அரசியலிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துவிட்டது. இந்த புத்தாண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார். மையவாத இடதுசாரி கட்சியான என்.டி.பி அதன் பொதுவான அரசியல் செயல் திட்டங்களை கொண்டிருந்ததால் ட்ரூடோவின் அரசாங்கத்…
-
-
- 17 replies
- 847 views
- 1 follower
-
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்! அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையொன்றை அமைக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் எலான் மஸ்குக்கு சொந்தமான தி போரிங் கம்பெனி சார்பாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதைகளை அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுரங்க பாதையானது 3,000 மைல்கள் அதாவது 4800 கிலோமீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதில் அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என்பதே எலான் மஸ்கின் கன…
-
-
- 48 replies
- 2.4k views
- 3 followers
-
-
ஷரியா நீதிமன்றங்களின் மேற்கு தலைநகராக மாறும் ஐக்கிய இராஜ்ஜியம்! ஷரியா நீதிமன்றங்களின் மேற்கத்திய தலைநகராக தற்சமயம் ஐக்கிய இராஜ்ஜியம் மாறியுள்ளது. திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான குடும்ப விடயங்களில் தீர்ப்பளிக்கும் 85 ஷரியா நீதிமன்றங்கள் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இப்போது உள்ளன. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து முஸ்லிம்கள் இந்த இஸ்லாமிய சபைகளுக்கு மேல்முறையீடு செய்ய வருவதால், ஷரியா நீதிமன்றங்களின் “மேற்கு தலைநகராக” ஐக்கிய இராஜ்ஜியம் உருவாகி வருவதாக தெரிவிக்கின்றன. கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் இஸ்லாமிய ஷரியா நீதிமன்றம், 1982 இல் உருவாக்கப்பட்டது மற்றும் கிழக்கு லண்டனில் உள்ள லெய்டனை தளமாகக் கொண்டது. மேலும் இது நிக்காஹ் (திருமணம்…
-
- 2 replies
- 590 views
-
-
நைஜீரியால் கூட்ட நெரிசலில் சிக்கி 67 பேர் உயிரிழப்பு! நைஜீரியால் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்பட்ட உணவுகளை பெறுவதற்காக சென்ற 67 பேர் கூட்ட நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் கடந்த வாரம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த உணப்பொருட்களை பெற ஏராளமான மக்கள் அப் பகுதிகளுக்கு படையெடுத்ததால் அங்கு கடுமை…
-
- 0 replies
- 264 views
-
-
அக்டோபரில் இருந்து காசாவுக்கு 12 லாரிகளில் மட்டுமே உணவு, தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “வடக்கு காசாவுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட 34 லாரிகளில் கடந்த இரண்டரை மாதத்தில் வெறும் 12 லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் வேண்டுமென்றே காட்டிய கெடுபிடிகளால் உணவு, தண்ணீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கெடுபிடிகளால் காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் ஆக்ஸ்ஃபாம் சுட்டிக் காட்டுகிறது. மேலும், “மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் ராணுவம் இரக்கமின்றி நடந்து கொள்கிறத…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, ஒலெக்சாண்டர் மாட்ஸீவ்ஸ்கி ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்ட பிறகு யுக்ரேனின் ஒரு முக்கிய நபராக மாறியுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், விடாலி ஷேவ்சேன்கோ பதவி, பிபிசி மானிட்டரிங் ரஷ்ய ஆசிரியர் யுக்ரேனை சேர்ந்த ஒலெக்சாண்டர் மாட்ஸீவ்ஸ்கி துப்பாக்கிச்சூட்டில் தேர்ந்த நபர். முழுமையான ரஷ்ய போர் தொடங்கிய முதல் ஆண்டில் ரஷ்யர்களால் கைப்பற்றப்பட்டார். பின்னர், ஒரு காட்டில் அவர் தனது கடைசி சிகரெட்டை புகைப்பதைக் காட்டும் காணொளி வெளிப்பட்டது. தனது சொந்த கல்லறையை தோண்டக் கட்டாயப்படுத்தப்பட்டு, அதன் பக்கத்தில் அவர் இருப்பது போன்ற காட்சி தெரிந்தது. "யுக்ரேனுக்கு மகிமை உண்டாகட்டும்!" என்று அவர்…
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் மியோடோனிக் பதவி, பசை இல்லை என்றால் நவீன உலகமே இல்லை. போன்கள் முதல் விமானங்கள் வரை, கட்டடங்கள் முதல் செருப்புகள் வரை, நம்முடைய உலகமே பசையால் பிணைக்கப்பட்டிருக்கிறது. சிக்கி முக்கிக் கல் மூலம் நெருப்பை உருவாக்கியதைப் போன்றே, பசைகளை உருவாக்கியதும் நம்முடைய முன்னோர்களின் மகத்தான சாதனைகளில் ஒன்று. அதை நாம் பல காலமாக பயன்படுத்தி வருகிறோம். தேசிய கணித தினம்: மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை துரத்தும் 'கணித' பயம், காரணம் என்ன? 100 வயதை கடந்தவர்கள் இத்தனை லட்சம் பேர் இருப்பார்களா? உடல்நல ரகசியம் என்ன? பீட்ரூட் ஜூஸ…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,HAYAT TAHRIR AL-SHAM படக்குறிப்பு, சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அகமது அல்-ஷாராவிடம் பிபிசி பேசியது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரேமி போவென் பதவி, சர்வதேச ஆசிரியர், பிபிசி நியூஸ் சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கத்திய நாடுகளுக்கோ, தங்கள் நாட்டால் அச்சுறுத்தல் இல்லை என்றும், சிரியாவின் தற்போதைய தலைவர் அகமது அல்-ஷாரா கூறியுள்ளார். சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸில் பிபிசிக்கு அளித்தப் பேட்டியில், சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். ஏனெனில், அவை முந…
-
-
- 8 replies
- 746 views
- 1 follower
-
-
23 DEC, 2024 | 10:48 AM பிரேசிலின் தென்பகுதியில் தனியாருக்கு சொந்தமான விமானமொன்று விழுந்து நொருங்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்து பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலின் கிரமாடோ என்ற நகரத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் விமானத்தை செலுத்திய பிரேசிலின் கோடீஸ்வரர் லூயிஸ் கிளாடியோ கலியாசி அவரது மனைவி மூன்று பிள்ளைகள் உட்பட பத்து பேர் உயிரிழந்துள்ளனர். சிறிய விமானம் கட்டிடத்தின் புகைபோக்கி மீது மோதியது வீடு கடையொன்றின் மீது விழுந்து நொருங்கியது என தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் விழுந்து நொருங்கியதால் வீடு கடைகளில் இருந்த 17 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த கோடீஸ்வ…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்ட F/A-18F போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. எனினும், அமெரிக்க இராணுவ…
-
- 1 reply
- 269 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES/AFP கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்தர் கஹூம்பி பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் மீது அண்மையில் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அதனைத் தொடர்ந்து கென்ய அரசு அதானி குழுமத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் கென்ய மாணவர் ஒருவர் கென்ய அரசுக்கு அதானி குழுமம் வழங்கிய ஒப்பந்த முன்மொழிவு தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இது அங்கே பெரும் பேசுபொருளாக மாறியது. கென்யாவைச் சேர்ந்த, தொழில்துறை தொடர்பாக படிக்கும் மாணவர் நெல்சன் அமென்யா தான் அந்த ஆவ…
-
-
- 3 replies
- 582 views
- 1 follower
-