உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
மனிதர்களை ஆவியாக்கும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ‘காசா’வில் இஸ்ரேல் பயன்படுத்துவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட குறித்த ஆயுதங்களை இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை கண்டிராத புதியவகை ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆயுதங்கள் மக்களை ஆவியாகச் செய்வதாக காசா சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் முனிர் அல்-புர்ஷ் தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்ரேலியப் படைகள் இதுவரை அறியப்படாத ஆயுதங்களை பயன்படுத்துகின்றன, இதன் விளைவாக மனித உடல்கள…
-
- 1 reply
- 428 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அது சற்று நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டோசினா பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. முன்னதாக நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் அதிர்ந்தன. இது த…
-
-
- 3 replies
- 566 views
- 1 follower
-
-
வியட்நாமை உலுக்கிய வங்கி மோசடி; பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை வியட்நாம் வங்கியில் 12 பில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரைச் சேர்ந்தவர் ட்ரோங் மை லான்(68). அந்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடிய இவர், மார்க்கெட்டில் வேலைபார்த்து வந்தார். பிறகு தாயாருடன் சேர்ந்து அழகுசாதன பொருட்களை விற்கத் துவங்கினார். பொருளாதார சீர்திருத்தம் காரணமாக 1986 ல் அவர் தனது தொழிலை விரிவாக்கம் செய்தார். 1990ல் ஹோட்டல் மற்றும் உணவகம் துவக்கினார். பிறகு ‘Van Thinh Phat Group’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்கி அதில் கொடி கட்டிப் பறந்தார். 2022ம் ஆண்டு அக்., …
-
- 0 replies
- 250 views
-
-
பிரான்ஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி December 5, 2024 07:29 am பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது. மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொட…
-
- 1 reply
- 212 views
-
-
மலேசியா, தாய்லாந்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட கடந்த 5 நாட்களில் அதிக அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. தொடர் கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மலேசியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக…
-
- 0 replies
- 502 views
- 1 follower
-
-
‘பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடம் இந்தியா’’ என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் சமீபத்தில் அளித்த ரேடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது: சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்ற பல கடினமான விஷயங்களில் முன்னேற்றம் காணும் நாட்டுக்கு உதாரணமாக இந்தியாவை கூறலாம். இந்திய அரசு போதிய அளவில் வருவாய் ஈட்டி நிலைத்தன்மையுடன் உள்ளது. அதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் சிறந்த நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடமாக இந்தியா உள்ளது. அதன் வெற்றியை இந்தியாவில் நிருபிக்கும்போது, அந்த நடைமுறையை நாம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். வெளிநாடுகளில் இருக்கும் மைக்ர…
-
- 2 replies
- 419 views
- 1 follower
-
-
04 DEC, 2024 | 01:50 PM இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது என இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மோசே யலூன் குற்றம்சாட்டியுள்ளார். ரெசெட் பெட் வானொலி நிலையத்திற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம் தனது படையினரிற்கு உயிராபத்தை ஏற்படுத்துகின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குகளை அவர்கள் எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். வடகாசாவில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கொமாண்டோக்கள் சார்பில் நான் பேசுகின்றேன், அங்கு யுத்த குற்றங்கள் இழைக்கப்படுகின்றன என இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை …
-
- 1 reply
- 240 views
- 1 follower
-
-
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா! கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடைவிதித்துள்ளது. செமிகண்டக்டர்கள் தொடர்பான பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது. தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, சீனாவுடனான வர்த்தகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது. இந்நிலையிலேயே , சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பொருள்களின் பட்டியலில் கணினிகளுக்கான சிப்புகளைத் தயாரிக்கும…
-
- 1 reply
- 731 views
-
-
வுஹான் ஆய்வகத்திலிருந்து கொவிட் கசிவு; அமெரிக்க விசாரணையில் தகவல்! கொவிட் தொற்றுநோய் உலகைப் பேரழிவிற்கு உட்படுத்திய பல ஆண்டுகளுக்குப் பின்னர், வைரஸ் சீனவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் தலைமையிலான ஹவுஸ் செலக்ட் துணைக்குழுவானது 1.1 மில்லியன் அமெரிக்கர்களைக் கொன்ற தொற்று நோய் குறித்த இரண்டு ஆண்டு கால விசாரணையை நிறைவு செய்த பின்னர் மேற்கண்ட அறிவிப்பினை திங்களன்று (2) வெளியிட்டது. AFP செய்தி நிறுவனத்தின்படி, குழுவானது 25 கூட்டங்கள், 30 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை மதிப்பாய்வு செய்த பின்னர் அதன் முடிவை எட்டியது. 520 பக்க அறிக்க…
-
-
- 1 reply
- 269 views
-
-
என் நினைவு சரியாக இருந்தால் மைத்திரி ஆட்சிகாலத்தில் யாழ்ப்பாணத்தையே தன் வாள்வெட்டினால் மிரட்டியவர் ,அனைத்து உள்ளூர்/இணைய ஊடகங்களிலும் பெயர் அடிபட்ட பிரசன்னா பின்னர் காணாமல் போனார். அவர் இந்தியா சென்று அங்கிருந்து பிரான்ஸ்போய் தனது முழுநேர தொழிலான வாள்வெட்டை தொடர்ந்து பின்பு அங்கிருந்து கனடா போய் சிக்கிக்கொண்டார். பிரான்ஸ் பொலிசிடம் ஒப்படைக்கப்படவுள்ள பிரசன்னா கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு உட்பட பல சட்டவிரோத செயல்களுக்காக பல வருடங்கள் சிறையில் கழித்தபின்னர் தற்போது 32 வயதான பிரசன்னா 60 வயதை நெருங்கும் காலத்தில் இலங்கை நோக்கி திருப்பபடுவார் என்று நம்பலாம். அங்கு யாழ்ப்பாணத்தில் புரியப்பட்ட குற்றங்கள் தேடப்பட்டதற்கான தலைமறைவானதற்கான தண்டனை தொடரு…
-
- 2 replies
- 686 views
-
-
தென்கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் திடீர் பிரகடனம்: காரணம் என்ன ? சியோல்: வட கொரிய கம்யூ. படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் இன்று (டிச.,04) அவசரகால ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வட கொரியா - தென் கொரியா இடையே முன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகளுக்கு இடை யேயான உறவு பாதிக்கப்பட்டு பகை நாடுகளாக உள்ளன. வட கொரியா மீது தென் கொரியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டேன் என வடகொரியா அதிபர் கிம் ஜான் உங் எச்சரித்திருந்தார். https://www.dinamalar.com/news/world-tamil-news/sudden-declaration-of-martial-law-in-south-korea-what-is-the-reason-/3795824 …
-
- 6 replies
- 552 views
- 1 follower
-
-
பணயக் கைதிகளை விடுவிக்க ட்ரம்ப் காலக்கெடு! 2025 ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப், காசா போராளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 5 அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பிறகு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முட்டுக்கட்டையான முயற்சிகள் குறித்து திங்களன்று (02) வெளியான ட்ரம்பின் அறிக்கை மிகவும் வலுவாக இருந்தது. மேலும் அவர் தனது இரண்டாவது பதவிக்காலம் தொடங்கும் முன் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கு அழுத்தம் கொடுக்கிறார் என்ற செய்திகளுக்கு மத்தியில் வந்துள்ளது. இஸ்ரேல் மீதான 2023 ஆம் ஆண்டு கொடிய தாக்குதலின் போது, ஹமாஸ் தலைம…
-
- 0 replies
- 561 views
-
-
இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை PrashahiniDecember 3, 2024 இஸ்ரேல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அந் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் அதையும் மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் பள்ளிவாசல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் இதாமன் பென் க்விர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பள்ளிவாசல்களில் இருந்து கேட்கும் ஒலி இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. பெரும்பாலான மேற்கத்தேய…
-
-
- 1 reply
- 581 views
-
-
ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவை எல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. நான் அமெரிக்காவின் அதிபராக பெருமையுடன் பதவியேற்கும் நாளான 2025 ஜனவரி 25, க்கு முன்பாக காசாவில் இரு…
-
-
- 2 replies
- 366 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) அழைப்பின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என அந்நாட்டின் கிரெம்ளின் மாளிகை(Kremlin - ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம்) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ரஷ்ய தூதரகத்தின் தகவலின்படி, புடினின் இந்தியா வருகைக்கான திகதிகள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவு செய்யப்படும் என கிரெம்ளின் மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் வருடத்திற்கு ஒரு முறை இது போன்ற கூட்டங்களை நடத்த இரு நாட்டு தலைவர்களும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிரெம்ளின் மாளிகை மோடியின் அழைப்பை ரஷ்யா பெற்றுள்ளதாகவும், , நாங்கள் அதை நிச்சயமாக சாதகமாக பரி…
-
- 1 reply
- 549 views
-
-
அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு சனிக்கிழமை கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை கண்டுபிடிக்க முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது, 100 சதவிகித வரியை (இறக்குமதி வரி) விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். பிரிக்ஸ் சர்வதேச அமைப்பில், உலகின் இரண்டு பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான சீனா மற்றும் இந்தியா அடங்கியுள்ளன. டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, சீனப் பொருட்களுக்கு 60% வரை அதிக வரி விதிப்பது. டிரம்பின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, உலகின் இரண்டு பெரிய பொருளாதார ந…
-
- 1 reply
- 276 views
-
-
மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு! இரண்டு குற்றவியல் வழக்குகளில் தண்டனையை எதிர்நோக்கியிருந்த அவரது மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரபூர்வ மன்னிப்பை வழங்கியுள்ளார். ஜனாதிபதி தனது மகனை மன்னிக்கும் எண்ணம் இல்லை என்று கடந்த மாதம் வெள்ளை மாளிகை பைடன் உறுதியளித்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை (01) மாலை அவர் மன்னிப்பு வழங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள பைடன், இன்று, நான் என் மகன் ஹண்டருக்கு மன்னிப்புக் கையெழுத்திட்டேன், இது ஒரு முழு மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு. இது கருணை நிறைவேற்று மானியத்தின் நகலின் படி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். ஹண்டர் பைடன், செப்டம்பர் மாத தொடக்கத்தில் வரிக் குற்றச்சாட்டை ஒப்…
-
-
- 21 replies
- 1.1k views
-
-
கனடாவை அடுத்து இந்தியா, ரஷ்யாவுக்கு கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப் எதிர்வரும் ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் நிலையில் உலக நாடுகள் இரண்டாவது முறையாக மிகப்பெரிய வரி விதிப்புப் போரை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மெக்சிகோ ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதுடன், சுமூகமான தீர்வு எட்ட வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரிடையாக புளோரிடாவுக்கு சென்று டொனால்டு ட்ரம்பை சந்தித்துள்ளார். இந்த நிலையில், இந்தியா, ரஷ்யா உட்பட்ட BRICS நாடுகளுக…
-
- 1 reply
- 742 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டத்திற்குப் புறம்பான சுரங்கத் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கி அனுமதி எழுதியவர், நோம்சா மசெகோவ் பதவி, பிபிசி செய்திகள் தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சிறிய "நகரத்தில்" சுமார் 600 பேருடன் ஒருவராக இந்தூமிசோ என்ற நபர் அங்கே வசித்துப் பணிபுரிந்து வருகிறார். இந்த நகரம் முழுவதும் சந்தைகளும், பாலியல் தொழில் நடைபெறும் பகுதிகளும் இருக்கும். மேலும் இங்கு தென்னாப்பிரிக்காவில் பயன்பாட்டில் இல்லாத ஒரு தங்கச் சுரங்கத்தின் உள்ளே இந்த நகரம் இருக்கிறது. தங்கச் சுரங்கத்தில் உள்ள…
-
-
- 1 reply
- 447 views
- 1 follower
-
-
30 NOV, 2024 | 08:39 PM நைஜீரியாவில் இடம்பெற்ற படகுவிபத்தில் 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வடநைஜீரியாவில் இடம்பெற்ற படகுவிபத்தில் சிக்கிய 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொகி மாநிலத்திலிருந்து நைஜரை நோக்கி 200க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படகே விபத்திற்குள்ளாகியது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 27 பேரின் உடல்களை மீட்டுள்ளோம் சுழியோடிகள் ஏனையவர்களின் உடல்களை மீட்க முயல்கின்றனர் என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும் விபத்து இடம்பெற்று 12 மணித்தியாலத்தின் பின்னரும் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ரஷ்யா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புட்டின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை நேட்ட…
-
- 0 replies
- 268 views
-
-
பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE எழுதியவர், ஃபே நர்ஸ் பதவி, பிபிசி செய்திகள் தான் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று தெரிந்து கொண்ட நாள் முதல் தனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்த தமுனா மூசெரிட்சே, ஒரு நாள் தொலைபேசியை எடுத்து தனது தாய் என்று நம்பிய பெண்ணை அழைத்தார். அப்போது அவர் பெருமூச்சுவிட்டார். தன்னைப் பெற்ற தாயாக இருக்கலாம் என்று நினைத்த பெண்ணை கடைசியில் கண்டறிந்த அவருக்கு எல்லாம் நல்லவிதமாக முடியாது என்பது தெரிந்தே இருந்தது. ஆனால், தொலைபேசியின் மறுமுனையில் இருந்த பெண் இவ்வளவு கடுகடுப்போடு, ஆத்திரத்துடன் பேசுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை. "தான் ஒரு குழந்தையை பெறவே இல்லை என்றார், கதறினா…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
லெபனானுடனான போர் ஒப்பந்தத்திற்கு இடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏறக்குறைய 14 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது லெபனானுக்கு நிம்மதியை அளித்தது. இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் இரு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. காசா போருக்கு இணையாக நடைபெற்று வரும் இப்போரை முடிவுக்கு கொண்டுவர இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இரண்டு மாத போர்நிறுத்த காலத்தில், ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய தனது போராளிகளை தெற்கு லெபனானில் …
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
29 NOV, 2024 | 01:54 PM அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அனுபவசாலி, புத்திசாலி; தீர்வுகளை கண்டறியக்கூடியவர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். உக்ரைன் யுத்தம் தொடர்பில் மேற்குலகிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான பதட்டநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கஜகஸ்தானில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள புட்டின் புதிதாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு மேலதிக நெருக்கடிகளை உருவாக்கியமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை சாடியுள்ளார். ஒரேசினிக் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயு அணு ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைனை தாக…
-
-
- 6 replies
- 448 views
- 1 follower
-
-
29 NOV, 2024 | 08:30 PM சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான அலப்போவை நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். சிரியாவின் வடமேற்கில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் கடும் தாக்குதலை மேற்கொண்டு அலப்போ நகரிற்குள் நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹயாட் டஹ்கிரிர் அல் ஷாம் என்ற அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் இட்லிப்பிலிருந்து இந்த வாரம் தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் அலப்போ நகருக்குள் நுழைந்துள்ளனர் என துருக்கியின் செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நகரின் புறநகர் பகுதிகளில் ஏவுகணைகள் விழுந்து வெடிக்…
-
-
- 10 replies
- 616 views
- 1 follower
-