Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தல் ; கன்சர்வேடிவ் கூட்டணி முன்னிலையில் அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்புகள் நிறைவடைந்து வாக்கு எண்ணுதல் ஆரம்பிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகிய வண்ணமுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் அடிப்படையில் கன்சர்வேடிவ் கூட்டணி 3 ஆசனங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. குறித்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியாக திகழும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. http://www.virakesari.lk/article/8436

  2. மியன்மாரில் கத்திகள், கம்புகள் மற்றும் பிற ஆயுதங்களை கொண்ட கலவரக் கும்பல் ஒன்றால் நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள மசூதி ஒன்று தீ வைத்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்பு தன்மையற்ற நிலை கவலை அளிப்பதாக உள்ளது காச்சின் மாநிலத்திலுள்ள ஹபாகான்ட் என்ற இடத்தில் நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதல், கடந்த வாரம் மியான்மரின் மத்தியப் பகுதியில் மசூதி ஒன்றிற்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்புதன்மையற்ற நிலைமைகளை பற்றி அந்நாட்டில் பயணம் மேற்கொண்டு வரும் ஐநா மனித உரிமைகள் புலனாய்வாளர் யாங்ஹீ லீ கவலை வெளியிட்டுள்ளார். இத்தகைய சம்பவங்களில் முழுமையான புலனாய…

    • 0 replies
    • 272 views
  3. வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு கஃபேயில், இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் பலியான 20 பேருமே வெளிநாட்டினர் என்று வங்கதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு டாக்காவில் உள்ள ஹோலே ஆர்டிசன் பேக்கரி கஃபேயில் ஆயுதம் தாங்கிய நபர்கள் முற்றுகையிட்ட 12 மணி நேரத்துக்கு பிறகு, பாதுகாப்பு படையினர் அந்த கஃபேயில் நுழைந்தனர். தாக்குதல் நடத்திய ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு அரசாங்க பேச்சாளர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து பிரதமர் ஷேக் ஹசீனா தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''இது ஒ…

  4. ஷூ வாங்கித் தருவதாக கூறி 6 வயது சிறுமியை அழைத்துச் சென்ற அவளது தந்தை நதியில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், பத்லாப்பூர் பகுதியில் உல்லாஸ் நதி மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தில் காலை நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் நதியின் ஆகாயத்தாமரையில் ஒரு சிறுமி சிக்கி உயிருக்குப் போராடி கதறிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் நதியில் இறங்கி சிறுமியை மீட்டனர். மிகவும் சோர்வாக இருந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் …

    • 0 replies
    • 266 views
  5. ஆஸ்திரேலியாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரை தீர்மானிக்கும் அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடக்கவுள்ளது. வாக்குரிமை பெற்றுள்ள 1.5 கோடி பேர் வாக்களிக்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆஸ்திரேலிய அரசியலில் ஏற்பட்ட தள்ளாட்டம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 4 பிரத மர்கள் பதவி வகித்து விட்டனர். ஆளும் சுதந்திர தேசிய கூட்ட ணியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கடந்த ஆண்டு டோனி அப்பாட் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்றுக் கொண்டார். அரசியல் குழப்பங்கள் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு சபை களையும் கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்தும்படி பிரதமர் மால்கம் டர்ன்…

  6. குடியேற்றவாசிகளிடமிருந்து பெறுமதியானவற்றை பறிமுதல் செய்யும் சட்டம் முதல் தடவையாக அமுல் டென்மார்க் அர­சாங்­க­மா­னது அந்­நாட்­டுக்கு வரும் குடி­யேற்­ற­வா­சி­களின் வரவைக் கட்­டுப்­ப­டுத்தும் வகையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சர்ச்­சைக்­கு­ரிய சட்­ட­மொன்றை முதல் தட­வை­யாக அமுல்­ப­டுத்­தி­யுள்­ளது. மேற்­படி சட்­ட­மா­னது அந்­நாட்டுப் பொலிஸார் குடி­யேற்­ற­வா­சி­க­ளி­ட­மி­ருந்து பெறு­ம­தி­யா­ன­வற்றை பறி­முதல் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கி­றது. இது தொடர்பில் அந்­நாட்டு தேசிய பொலிஸ் சேவையின் பேச்­சாளர் பெர் பிக் தெரி­விக்­கையில், கொபென்ஹேகன் விமான நிலை­யத்தில் போலி­யான கட­வுச்­சீட்டைப் பயன்­ப­டுத்தி பய­ணத்தை மேற்­கொண்டு வந்­தி­றங்­கிய இரு ஆண்கள் மற்றும் …

  7. பங்களாதேஷ் தாக்குதல்: இரண்டு இலங்கையர்களும் மீட்கப்பட்டனர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கபே ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில், பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் எந்தவித பாதிப்புமின்றி மீட்கப்பட்டுள்ளதாக, டாக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/176022/பங-கள-த-ஷ-த-க-க-தல-இரண-ட-இலங-க-யர-கள-ம-ம-ட-கப-பட-டனர-#sthash.uB4xtQVQ.dpuf

  8. இந்திய வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), இஸ்ரேல் வான்வெளி நிறுவன ஒத்துழைப்புடன் ‘பராக்-8’ ஏவுகணையை உருவாக்கி உள்ளது. கடற்படையில் பயன்படுத்தப்படவுள்ள இந்த ஏவுகணை, ஏற்கனவே இஸ்ரேல் போர்க்கப்பலில் இருந்து 2 முறை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக இந்திய போர்க்கப்பலில் இருந்தும் கடந்த ஆண்டு ‘பராக்-8’ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், தரையில் இருந்து வானில் பாய்ந்து தாக்கக்கூடிய நவீனரக ஏவுகணையை இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பத்துடன் ஐதராபாத்தில் உள்ள இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையில் வான்வெளி அச்சுறுத்தலை கண்காணித்து எச்சரிக்க…

  9. பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் மைக்கேல் கோவின் தேர்தல் கொள்கை வெளியீடு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டுமென்று பரப்புரை செய்த தலைவர்களில் ஒருவரான மைக்கேல் கோவ், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்தத் தலைவராகவும், பிரதமராகவும் வருவதற்கு போட்டியிடப் போகும் நிலையில், தனது தேர்தலுக்கான தனது கொள்கைத் திட்டத்தை வெளியிட்டுள்ளார். இதுவே சரியான செயல்பாடு என்பதால் போட்டியிடப் போவதாக கூறியுள்ள மைக்கேல் கோவ், இதே காரணத்திற்காக தான் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகின்ற கட்டுப்பாடற்ற குடியேற்றத்தை முடிவுக்கு கொண்டுவர அவர் உறுதியளித்துள்ளார். பெரி…

  10. டாகாவில் தீவிரவாத தாக்குதல்; காவல்துறை அதிகாரி பலி; பலர் சிறைபிடிப்பு துப்பாக்கி சூடு நடந்த கஃபேவில் தற்போது பலர் பணயக்கைதிகளாக சிறைபிடிப்பு வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் பணயக்கைதிகளாக சிறைபிக்கப்பட்டுள்ளனர். டாகாவிலுள்ள ஒரு பிரபல கஃபேவைத் தாக்கிய தீவிரவாதிகள் பலரை பணயக்கைதிகளாக சிறைபிடித்துவைத்திருப்பதாக வங்கதேச சிறப்பு காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். சிவிலியன்களை சிறைபிடித்திருக்கும் ஆட்களிடம் தொடர்பை ஏற்படுத்த தாங்கள் முயன்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். குறைந்தது இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பத…

  11. இன்றைய நிகழ்ச்சியில் * இயல்புநிலைக்கு திரும்பியது துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம்; ஆனால் ஐஎஸ் அமைப்பிடமிருந்து மகனை மீட்க துருக்கிக்கு சென்ற தந்தையோ சடலமாக துனிஷியா திரும்பினார். * உலகை உலுக்கிய சோம் போரின் நூற்றாண்டு நினைவுநாள் ஐரோப்பா நெடுக அனுஷ்டிக்கப்பட்டது; அதில் பிரிட்டனின் தோல்விக்கான காரணத்தை ஆராய்கிறது பிபிசி. * லண்டனில் சொத்துவாங்க கடன் தருவதை இடைநிறுத்தியது சிங்கப்பூர் வங்கி; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரியும் பிரிட்டன் பொருளாதாரம் மோசமாவதன் இன்னொரு அடையாளமா?

  12. கோடீஸ்வரி ஆன மலாலா... பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி மலாலா. இவர் பெண் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். பலத்த காயத்துடன் மலாலா லண்டன் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிர் பிழைத்தார். அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு மலாலா பெண் கல்வி குறித்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அவருக்கு 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது அனுபவங்கள் குறித்து “ஐயாம் மலாலா” என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகத்தை விற்பனை செய்யவும், பதிப்புரிமையை பாதுகாக்கவும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் மதிப்பு…

  13. பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம்.இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கியின் மூலம் ரூ.6,750 கோடி நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில், மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயலும், உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்மும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஜிம் யாங் கிம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த வளர்ச்சி அடைய இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ""உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்முடன், உலக வங்கியுடனான இ…

  14. 200 ஆண்டுகளில் 4 கோடி பேர் போர்களில் கொல்லப்பட்டுள்ளனர் --------------------------------------------------------------------------------------------------------------- உலகை உலுக்கிய போர்களில் ஒன்றாக அறியப்படும் சோம் போரின் நூறாவது நினைவு நாள் இன்று ஐரோப்பாவில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த போரில் மொத்தம் பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது படுகாயமடைந்தனர். கடந்த இருநூறு ஆண்டுகளில் உலகில் நடந்த போர்களில் மொத்தம் நான்கு கோடி பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வரைபடம் 1817 முதல் 2007 ஆம் ஆண்டுவரை உலக அளவில் நாடுகளுக்கு இடையில் நடந்த போர்கள் அல்லது நாடுகளுக்குள்ளேயே நடந்த உள்நாட்டுப்போர்களில் கொல்லப்பட்டவர்களின் தேசிய அடையாளங்களை காட்டுகிறது. இதில் இர…

  15. கனடா மிசிசாகா வெடிப்பு சம்பவத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் இன்றும் தமது சொந்த வீடுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தீயணைப்பு படை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவின் மிசிசாகாவில் வீடொன்றில் கடந்த செவ்வாய்கிழமை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் ஒன்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் காயமடைநதனர். அத்துடன் குறித்த சம்பவத்தினால் சுமார் 25 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 6 வீடுகள் மோசமான சேதத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறிருக்க வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சுமார் 33 வீடுகளுக்கான மின், எரிவாயு மற்றும் நீர் விநியோகங்கள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆ…

  16. சோம் போர் 100 ஆண்டுகள்: ஐரோப்பா முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் முதலாவது உலகப் போரின் மிக மோசமான மோதலாகக் கருதப்படும் சோம் போரின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில், ஐரோப்பா முழுவதும் நினைவஞ்சலி நிகழ்ச்சிககள் நடைபெறுகின்றன. அஞ்சலி நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் வடக்கு பிரான்ஸில் உள்ள தீப்யல் நினைவு மண்டபத்தில், ஐரோப்பிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் படைவீரர்கள், வியாழக்கிழமை இரவு அஞ்சலி செலுத்தினார்கள். ஜெர்மனிக்கு எதிரான தாக்குதல் துவங்கிய நேரத்தைக் குறிக்கும் வகையில், பிரிட்டன் நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த உள்ளது. லண்டனில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் ராணி எலிசபெத், பிரதமர் டேவிட் கேமரன் உள்ளிட்ட பல்வேறு…

  17. பிரிட்டன் வெளியேறிய பிறகே புதிய வர்த்தகப் பேச்சுவார்த்தை' பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முழுமையாக விலகிய பிறகே, புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் துவக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் சிசிலியா மம்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார். முதலில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது, அடுத்து, புதிய உறவு ஆகிய இரு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை, உலக வர்த்தக அமைப்பு விதிகளின்படிதான் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மம்ஸ்ட்ரோம் தெரிவித்தார். சமீபத்தில் கனடாவுடன் மேற்…

  18. பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியின் முன்னணியில் தெரஸா மே பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், அடுத்த பிரதமராகவும் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு, பெரும்பான்மை அமைச்சரவை சகாக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார் உள்துறை அமைச்சர் தெரஸா மே. மைக்கேல் கோவ் மற்றும் தெரஸா மே அவருக்கு எழுபதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. போட்டியாளர்களில், அவருக்கான வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. அவரது பிரதான போட்டியாளராகக் கருதப்படுபவர், மைக்கேல் கோவ். தானும் தலைமைப் பதவிக்குப் போட்டியிடப்போவதாக வியாழக்கிழமை அவர் அறிவித்தார். இதனால், தலைமைப் பதவிக்கான போட்டியில் களமிறங்க…

  19. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவி ஸ்லோவாக்கியாவிற்கு: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பதவி ஸ்லோவாக்கியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவி நிர்ணயிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தடவை ஸ்லோவாக்கியாவிற்கு தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாத கால அடிப்படையில் ஸ்லோவாக்கியாவிற்கு தலைமைப் பதவி வழங்கப்பப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், ஸ்லோவாக்கியா ஐரோப்பிய ஒன்றியத் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. புகலிடக் கோரிக்கையாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம…

  20. துப்பாக்கிச் சூடு ; அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்பட்டது (வீடியோ இணைப்பு) இனந் தெரியாத நபரால் திடீரென மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் வோஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் இராணுவ விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வோஷிங்டன் நகரத்தில் இருந்து 32 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் இன்று துப்பாக்கி சூடும் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இனந் தெரியாத நபரொருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். குறித்த தகவலை ஆண்ட்ரூஸ் விமான தள டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி சூடு காரணமாக விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு…

  21. இஸ்தான்புல் விமானநிலைய தாக்குதல் ; 13 பேர் கைது இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பாக 13 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 41 பேர் பலியாகியதோடு, 230 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது. இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறித்த தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் டெக்சியில் வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததனையடுத்து…

  22. பிறிக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் பிரான்ஸின் எல்லைக் கட்டுப்பாட்டில் மாற்றம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக பிரித்தானியாவில் 'பிறிக்ஸிட்' வாக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு பிற்பாடு பிரான்ஸின் காலெயிஸ் துறைமுகத்தில் பாதுகாப்பு வேலிக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிரான்ஸ் கொடி பிரித்தானியாவின் ஐக்கிய கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நட்சத்திர சின்னங்கள் என்பவற்றைக் காண்பிக்கும் 4 பாரிய கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு அடையாளப் பலகைகள் அகற்றப்பட்டு புற்றரையில் கைவிடப்பட்டுள்ளது. 12 அடி நீளமும் 9 அடி அகலமும் கொண்ட அந்தப் பலகைகள் பிரான்ஸிலிருந்து வெளியேறும் மோட்டார் வாகன சாரதிகளுக்கு அவர்களது கடவுச்சீட்டுகள் பரிசோதிக்கப்படும் வெவ்வேறு பாத…

  23. அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்? ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் நிலவும் போட்டி நீதி அமைச்சர் மைக்கேல் கோவ் மற்றும் உள்துறை அமைச்சர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்புக்குப் பிறகு, பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் ஏற்பட்டுள்ள ஒரு ஆச்சரியமான திருப்பத்தில், நீதி அமைச்சர் மைக்கேல் கோவ், கன்செர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவி மற்றும் பிரதமர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். கோவ் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுடன் சேர்ந்து நடத்தியவர். மேலும் அவர் ஜான்சனின் வேட்புமனுவிற்கு ஆதரவு தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பி பி சியின் அர…

  24. பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை: போரிஸ் ஜான்சன் பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான மனுத்தாக்கல் இன்னும் சில மணி நேரங்களில் முடிவடையவுள்ள நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கும், பிரதமர் பதவிக்கும் தான் நிற்க போவதில்லை என்று லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். சக உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நாடாளுமன்றத்தின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். `அந்த நபர் நான் இல்லை என முடிவு செய்துள்ளேன்' என அவர் தெரிவித்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைமைக்கு முழு ஆதரவை வழங்கப் போவதாகக் கூறிய அவர், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் எந்த நிலைக்கு ஆத…

    • 3 replies
    • 422 views
  25. இலவச வை பை வசதி வழங்குவதாக வாக்குறுதி -ஹிலரி கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் இலவச வை பை வசதியை வழங்குவதாக வாக்குறுதியை அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஹிலரி கிளிண்டன் அவரின் உத்தியோகபூா்வ டுவிட்டர் பக்கத்தில், இரண்டு வார்த்தைகள் - இலவச வை பை. புகையிரத நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் என்று பதிவேற்றியுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் 2020க்குள் அனைத்து வீடுகளுக்கும் பிரோட்பேண்ட் வசதி செய்து தரப்படும் என்று ஹிலரி வாக்குறுதி அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8351

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.