உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
துருக்கி தலைநகரான இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே இன்று தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். துருக்கியில் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி, இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் இடதுசாரிகள் அவ்வப்போது வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் உள்ள சபிஹா கோக்கென் சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் விமானங்களை சுத்தம் செய்யும் பெண் பணியாளர் பலியானதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=147647&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 441 views
-
-
ரஷ்ய விமானத் தாக்குதல்களில் 200 பொது மக்கள் பலி [ Wednesday,23 December 2015, 05:47:20 ] சிரியாவின் ரஷ்ய விமானங்கள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் இதுவரை 200 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வரை 25 ற்கும் மேற்பட்ட விமானத் தாக்குதல்களை ரஷ்யா சிரியாவில் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்க ரஷ்யா தவறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் க…
-
- 1 reply
- 507 views
-
-
அமெரிக்காவுக்கு செல்லும் பிரிட்டிஷ் முஸ்லிம்கள் தடுக்கப்படுகிறார்களா? பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா கிரேஸி அமெரிக்க அரசின் நடத்தை குறித்து கவலை வெளியிட்டுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்லும் விமானத்தில் ஏறும் சமயத்தில் அவர்கள் தமது பயணத்தை தொடர்வதற்குத் திடீரென தடை விதிக்கப்பட்டது ஏன் என்று அமெரிக்காவிடம் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் விளக்கம் கோர வேண்டும் என்று பிரிட்டனின் நாடளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீசி கோரியுள்ளார். இந்த குறிப்பிட்ட குடும்பம் அவரது தொகுதியைச்சேர்ந்தவர்கள் என்பதால் அவர் இந்த பிரச்சனையை எழுப்பியுள்ளார். வால்தாம்ஸ்டோ தொகுதியில் …
-
- 0 replies
- 615 views
-
-
- சிரியாவில் ரஷ்யா நடத்திவரும் விமானத் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது அம்னெஷ்டி இண்டர்நேஷனல். ஆனால் ஆயுதகுழுக்களையே இலக்கு வைப்பதாக ரஷ்யா கூறுகிறது - ஒரு மாதத்துக்கு முன்னதாக பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாரிஸ் நகரம் இன்னமும் கிறிஸ்மஸ் கால உற்சாகத்துக்கு திரும்பாத்து குறித்த ஒரு குறிப்பு. - முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட இசையை பாதுகாக்க எக்ஸ்ரே படங்களை பயன்படுத்தியது குறித்த தகவல்.
-
- 0 replies
- 572 views
-
-
ஏழை, பணக்காரர்களை பிரிக்கும் சுவர்: பெரு நாட்டில் உள்ள ”அவமானத்தின் சுவர்” (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2015, 12:04.11 மு.ப GMT ] ஏழை மற்றும் பணக்காரர்களை பிரிக்கும் விதமாக பெரு நாட்டில் கட்டப்பட்டுள்ள சுவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இதன் தலைநகர் லைமாவில் உள்ள சான் ஜுவான் டி மிராஃபொலோரீஸ் (san juan de miraflores) மற்றும் சுர்க்கோ(surko) பகுதிகளை பிரிக்கும் விதமாக 10 அடி உயர சுவர் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. பெருவின் பெர்லின் சுவர் என்று அழைக்கப்படும் இந்த சுவர் பணக்காரர்களையும் ஏழைகளையும் பிரிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவத…
-
- 0 replies
- 481 views
-
-
மதத்தை கடந்த மனித நேயம்... சிலிர்க்க வைக்கும் வீடியோ! கென்யாவில் பேருந்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளிடம் இருந்து கிறிஸ்தவர்களை காப்பாற்றிய இஸ்லாமியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வரும் அல் ஷபாப்( Al Shabaab) என்ற அமைப்பு சோமாலியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அப்பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்தவர்களை குறிவைத்து கொலை செய்து வருகிறது. இந்நிலையில் கென்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மண்டேரா அருகில், பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் பேருந்தை மறித்துள்ளனர். உடனடியாக பேருந்தில் இருந்த இஸ்லாமியர்கள் த…
-
- 0 replies
- 772 views
-
-
ஐஎஸ் தீவிரவாதிகளின் தாயகமாக இந்தோனேஷியா? ஐஎஸ் தீவிரவாதிகளின் தாயகமாக இந்தோனேஷியாவை மாற்ற முயற்சிகள் நடப்பதாக ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பல்வேறு அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் மற்றொரு தாயகமாக இந்தோனேஷியாவை மாற்ற ஐஎஸ் முயற்சிப்பதாக ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியா- இந்தோனேஷியா அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே ஆஸ்திரேலிய அட்டர்னி ஜெனரல் ஜியார்ஜ் பிராண்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஐஎஸ் அமைப்பு தனது கைக்கூலிகளை இந்தோனேஷியாவில் உருவாக்கி அதன் மூலமாக தாக்க…
-
- 0 replies
- 465 views
-
-
பயங்கரவாத தாக்குதல் செய்திகளை வெளியிட சீன ஊடகங்களுக்கு தடை [ Wednesday,23 December 2015, 05:45:31 ] சீனாவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள், காணொளிகள் என்பவற்றை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. தனிநாடு கேட்டு போராடி வரும் உய்குர் இனத்தவர் அங்கங்கே தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்த சட்டமூலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சிகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு…
-
- 0 replies
- 622 views
-
-
சிறார் குற்றவாளிகள் வயது வரம்பைக் குறைக்கும் சட்டத்திருத்தம் நிறைவேறியது இந்திய நாடாளுமன்ற வளாகம் இந்தியாவில் கொலை, மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற மோசமான குற்றங்களில் ஈடுபடும் சிறார்களை தண்டிக்கும்போது 18 வயதுவரை அவர்களை சிறார் குற்றவியல் தண்டனைச்சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று தற்போதைய இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதைத் திருத்தி 16 ஆண்டுகளைக் கடந்தவர் அனைவருமே வயதுக்கு வந்தவர்களாக கருதப்பட்டு மற்றவர்களைப் போல பொதுவான குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வகை செய்யும் சிறார் குற்றவியல் தண்டனைச் சட்டத்திருத்த மசோதா இந்திய நாடாளுமன்ற மேலவையில் செவாய்க்கிழமை நிறைவேறியது. இந்திய அளவில் நன்கு அறியப்பட்ட, டில்லி மருத்துவ…
-
- 0 replies
- 450 views
-
-
தலிபான்களிடம் வீழ்ந்துகொண்டிருக்கும் ஹெல்மண்ட் தெற்கு ஆப்கானிஸ்தானில் கடுமையான சண்டை நடக்கிறது. அங்கு கேந்திர முக்கியத்துவம் மிக்கசங்கின் மாவட்டத்தில், தலிபான்களிடம் இருந்து பாதுகாப்பு படைகள் பெரும் தாக்குதலை எதிர்கொள்கின்றன. யாருடைய கை அங்கு ஓங்கியுள்ளது என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தலிபான்கள் மீண்டும் பெரும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில், ஹெல்மண்ட் மாகாணத்தை தக்க வைத்துக்கொள்ள ஆப்கான் படைகள் தடுமாறுகின்றன. http://www.bbc.com/tamil/global/2015/12/151222_helmandvt
-
- 3 replies
- 391 views
-
-
-
- 0 replies
- 321 views
-
-
திருடர்களை ரத்தத்தோடு தெருவில் ஓடவிட்ட பெண்மணி [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 08:34.43 மு.ப GMT ] ஜேர்மனியில் பெண்மணி ஒருவர் தன்னிடம் கொள்ளையடிக்க வந்த திருடர்களை துணிகரமாக விரட்டியடித்துள்ளார். ஜேர்மனியை சேர்ந்த 34 வயது பெண்மணி ஒருவர்,காலை 3.45 மணியளவில் Ludigerplatz நகரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த இரண்டு ஆண்கள், அவரிடம் இருந்த பணத்தினை தருமாறு அவரை மிரட்டியுள்ளனர், இதற்கு அப்பெண் மறுக்கவே ஒரு நபர் அப்பெண்ணின் முகத்தில் ஒரு குத்துவிடுகிறார். இதனால் நிலைகுலைந்த கீழே விழுந்த பெண்மணி, துணிச்சலுடன் எழுந்து அந்த நபரின் மூக்கில் பதிலுக்கு ஒரு குத்…
-
- 0 replies
- 621 views
-
-
ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்: காரணம் என்ன? [ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2015, 12:21.25 மு.ப GMT ] இந்தோனேசிய நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்துகிடந்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகர் அருகில் சித்ரா என்ற ஏரியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. இந்நிலையில் திடீரென ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மிதக்க தொடங்கின. சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும் ஆக்ஸிஜன் இல்லாததன் காரணமாகவுமே மீன்கள் செத்து மிதப்பதாக தகவல் பரவி வருகின்றன. இ…
-
- 0 replies
- 537 views
-
-
நடைபாதையிலிருந்தவர்கள் மீது வேண்டுமென்றே காரை மோதிய பெண்; அழகுராணி போட்டி நடைபெற்ற ஹோட்டலுக்கு வெளியே சம்பவம்: ஒருவர் பலி,37 பேர் காயம் 2015-12-22 12:04:40 அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபாதையிலிருந்த மக்கள் மீது பெண்ணொருவர் காரை மோதியதால் ஒருவர் பலியானதுடன் சுமார் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நேரப்படி, ஞாயிறு இரவு மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ஹோட்டலுக்கு வெளியே இச்சம்வபவம் இடம்பெற்றுள்ளது. லாஸ் வேகாஸ் பொலிஸ் அதிகாரியான பிரெட் ஸிம்மர்மன் கருத்துத் தெரிவிக்கையில். இச்சம்பவம் ஒரு பயங்கரவாத நடவடிக்கை எனக் கருதப்படவில்லை எனக…
-
- 0 replies
- 441 views
-
-
பிரேசில்: பழங்கால ரயில் நிலையம் தீயில் எரிந்து நாசம் பிரேசில் தீ விபத்தில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ரயில் நிலையம் சேதமடைந்துள்ளது. பிரேசிலின் சா பாலோ நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ரயில் நிலையத்தின் சில பகுதிகள் எரிந்து நாசமாயின. அந்த ரயில் நிலையத்தில் போர்ச்சுக்கீசிய மொழியின் வரலாற்றை ஆவணப்படுத்தியிருந்த மிகப் பிரபலமான ஒரு அருங்காட்சியகமும் செயல்பட்டுவந்தது. இந்த விபத்தில் அந்த அருங்காட்சியகமும் பெருமளவில் சேதமடைந்தது. ஸ்டேஷன் ஆஃப் லைட் எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த ரயில் நிலையத்தை பிரிட்டிஷ்காரர்கள் கட்டினர். இந்தத் தீ விபத்தில் இதன் கூரை முழுவதுமாக எரிந்து போனது. புகழ்பெற்ற பிரிட்டிஷ் ரயில் நிலைய வ…
-
- 0 replies
- 558 views
-
-
நாற்பது ஆண்டுகளுக்கு பின் நடந்த அழகிப்போட்டி: 20 வயது மாணவி மிஸ். ஈராக் ஆனார்! கடந்த 1972-ம் ஆண்டுக்கு பிறகு ஈராக் நாட்டில் அழகிப் போட்டி நடைபெற்றது. 20 வயது மாணவி மிஸ். ஈராக் அழகியாக தேர்வு செய்யப்பட்டார். பாக்தாத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்த போட்டியில் 150 பேர் பங்கு கொண்டனர். இதில் கிர்குக் பகுதியை சேர்ந்த ஷ்யேமா அப்துல்ரகுமான் என்ற பொருளாதார மாணவி, மிஸ். ஈராக்காக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு பிறகு ஈராக் நாட்டில் அழகிப் போட்டி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இறுதி சுற்றுப் போட்டிகள் பஸ்ரா நகரத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் சில அமைப்புகள் மிரட்டல் விடுத்ததையடுத்து போட்டி நடுவர் உள்பட 15 பேர் போட்டியில…
-
- 0 replies
- 571 views
-
-
ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள பகுதியில் துருவ ஒளிக் காட்சி அரோரா ஆஸ்த்ரேலிஸ் என்று அழைக்கப்படும் துருவ ஒளிக் காட்சியை ஆஸ்திரேலிய கிழக்குக் கடற்கரையில் இருந்தபடி புகைப்படக் கலைஞர்கள் படம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள பகுதியில் துருவ ஒளிக் காட்சி பிரபஞ்சத்திலிருந்து வெளியாகும் கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் படும்போது இம்மாதிரியான காட்சிகள் கிடைக்கின்றன. வடதுருவத்தில் ஏற்படும் இதே போன்ற காட்சிகள், அரோரா போரியலிஸ் என்று அழைக்கப்படுகின்றன. இம்மாதிரிக் காட்சிகளைத் தான் பல வருடங்களாகத் தேடிவருவதாக இந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான டேவிட் மாக்ரோ தெரிவித்தார். இவர் நியூ சவுத் வேல்ஸ் சென்ட்ரல் கோஸ்ட்டில் வசிக்கிறார…
-
- 1 reply
- 580 views
-
-
ஐரோப்பா வந்த குடியேறிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது கடல் வழியாகவும், தரை மூலமாகவும் ஐரோப்பாவுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு ( ஐ.ஓ.எம்) கூறியுள்ளது. ஐரோப்பா வந்த குடியேறிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது இது கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். இதில் பெருமளவிலானோர் கடல் மார்க்கமாகவே வந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு கடல் வழியாக வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகளாவர். 3695 பேர் கடலில் மூழ்கியுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் ஐ.ஓ.எம் கூ…
-
- 0 replies
- 566 views
-
-
ஆப்கானின் முக்கிய நகரை தலிபான்கள் கைப்பற்றினர்' ஆப்கானிஸ்தானில் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள முக்கிய மாவட்டமான சாஞினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டதாக தலிபான்கள் கூறியுள்ளனர். 'ஆப்கானின் முக்கிய நகரை தலிபான்கள் கைப்பற்றினர்' அந்த நகரில் உள்ள போலிஸ் தலைமையகம் இன்னமும் ஆயுதபாணிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், உள்ளே இருக்கும் அதிகாரிகளுக்கு காபுலில் உள்ள அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த இரவு தலிபான்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால், காபுலின் மத்திய பகுதியை நோக்கி மூன்று ராக்கட்டுகள் ஏவப்பட்டன. முன்னதாக காபுலுக்கு வெளியே பக்ரம் விமான தளத்தை தாம் தாக்குவதாக த…
-
- 0 replies
- 626 views
-
-
எல்லைப் பாதுகாப்பு படை விமானம் விழுந்து நொறுங்கியது: 10 பேர் பலி (வீடியோ) புதுடெல்லி: எல்லைப் பாதுகாப்புப் படையின் விமானம் ஒன்று, டெல்லியில் விழுந்து நொறுங்கிய விபத்தில், அதில் இருந்த 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். புதுடெல்லியில் இருந்து இந்திய எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் 3 பேர் மற்றும் 7 பொறியாளர்கள் சூப்பர் கிங் விமானத்தில் ராஞ்சி புறப்பட்டுச் சென்றனர். துவாரகாவில் இருந்து ராஞ்சி சென்ற அந்த சூப்பர் கிங் விமானம், பக்டொலா பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விழுந்த வேகத்தில் அந்தப் பகுதியில் உள்ள சுவர் மீது மோதி தீப்பிடித…
-
- 0 replies
- 492 views
-
-
சோவியத்தை திரும்ப அமைக்க முயற்சி செய்யவில்லை: ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் ரஷ்ய அதிபர் புதின் படம்: ராய்ட்டர்ஸ். சோவியத் ரஷ்யாவை மீண்டும் கட்டமைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. ஆனால், பிரச்சினை என்னவெனில் அதை யாரும் நம்பத் தயாராக இல்லை என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தொலைக்காட்சியில் ‘வேர்ல்டு ஆர்டர்’ என்ற ஆவண ஒளிபரப்பில் இதுதொடர்பாக புதின் பேசியதாவது: உக்ரைன் உள்ளிட்ட பல பகுதிகள் முந்தைய சோவியத் ரஷ்யாவுக்கு உட்பட்டவை. மேற்கத்திய நாடுகள் உக்ரைனின் நலனுக்காக செயல்படவில்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். சோவியத் ரஷ்யா மீண்டும் உருவாகி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். …
-
- 0 replies
- 562 views
-
-
சீனா நிலச்சரிவு : 90 க்கும் அதிகமானோரைக் காணவில்லை தெற்கு சீனாவில் நேற்று நிலச்சரிவில் டசின் கணக்கான கட்டிடங்கள் புதைந்துபோன இடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மீட்பு பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். சீனா நிலச்சரிவு : 90 க்கும் அதிகமானோரைக் காணவில்லை ஷென்சென் நகரில் உள்ள தொழில்பேட்டையில், மண்ணும் சகதியும் சரிந்து மூழ்கடித்ததை அடுத்து இன்னமும் 91 பேரை காணவில்லை. பல இடங்களில் ஆட்கள் உயிருடன் இருப்பதற்கான சமிக்ஞைகளை தாம் கேட்டதாக அகழும் இயந்திரங்கள் மற்றும் மோப்ப நாய்கள் சகிதம் தேடுதலில் ஈடுபடும் பணியாளர்கள் கூறுகின்றனர். உயரமான இடத்தில் கட்டிட கழிவுப் பொருட்களை புதைத்து வைத்திருக்க, அது சரிந்து, கீழே இருந்த கட்டிடங்களை மூழ்கடித்துள்ளத…
-
- 2 replies
- 587 views
-
-
ஜிகாதிகளை திருமணம் செய்யும் வலையமைப்பு துனீஷியாவில் தகர்ப்பு வெளிநாடுகளில் இருக்கும் ஜிகாதி போராளிகளை திருமணம் செய்துகொள்ள பெண்களை சேர்த்துக் கொண்டிருந்த வலையமைப்பு ஒன்றை, தாங்கள் முறியடித்துள்ளதாக துனீஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் மீதான எதிர்த்தாக்குதலை துனீஷியப் படையினர் முன்னெடுத்து வருகின்றனர் நாட்டின் வடபிராந்தியமான பிஸ்ரெட்டில் இந்த பயங்கரவாத வலையமைப்பைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அங்கு பெரிய அளவில் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற பிறகு, சந்தேகத்துக்குரிய நபர்கள் மீதான தமது எதிர் நடவடிக்கையை துனீஷியா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. துன…
-
- 0 replies
- 889 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - உலக கால்பந்தின் மிகவும் சக்தி மிக்க நபர்களான செப் பிளட்டர் மற்றும் மிஷேல் பிளட்டினி ஆகியோருக்கு எட்டு ஆண்டுகள் தடை. - சீனாவில் முப்பதுக்கும் அதிகமான கட்டிடங்கள் புதையுண்ட நிலச்சரிவில், உயிர் தப்பியவர்களை மீட்க சுமார் ஆயிரம் பணியாளர்கள் முயற்சி. - அத்துடன், ஆப்பிரிக்காவின் அறுசுவை உணவுகளை லண்டனில் அறிமுகப்படுத்த விளையும் சமையல் கலைஞர் பற்றிய தகவல்கள்.
-
- 0 replies
- 578 views
-
-
அமெரிக்காவிலேயே எடுபடாமல் போன இஸ்லாமிய துவேஷம்! அவர் ஹிட்லரா... முசோலினியா? -முடிவெடுக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. 'இரண்டும் இல்லை; அவர் ஒரு காமெடியன் மட்டுமே' என்கிறார்கள் சிலர். 'அதுவும் இல்லை, அவர் ஒரு உராங்குட்டான்' என்கிறார்கள் வேறு சிலர். டொனால்ட் டிரம்பின் ஆளுமை, அரசியல் பார்வை, சமூகக் கருத்துகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்த ஒப்பீடு, அடிப்படையிலேயே பிழையானது என்பது தெரிகிறது. உராங்குட்டான் ஓர் அரிய குரங்கினம். அதற்கு வெறுக்கத் தெரியாது. டொனால்ட் டிரம்ப் அரிதானவர் அல்லர். மேலும், அவருக்குப் பேசத் தெரிந்த ஒரே மொழி, வெறுப்பு மட்டுமே. ஒரே ஓர் உதாரணம், அவருடைய இந்தச் சமீபத்திய அறிவிப்பு - ‘முஸ்லிம்களுக்கு இனி அமெரிக்காவ…
-
- 0 replies
- 763 views
-