உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
சூரியனை உரிமை கொண்டாடும் பெண்மணி ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் சூரியனில் மனைகளை விற்றுத்தர மறுப்பு தெரிவித்த "ஈ-பே' இணைய விற்பனை தளம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா டுரன்(54) என்ற பெண்மணி, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சூரியனின் ஒரு பகுதி தமக்கு சொந்தமானது என உரிமை கோரி, ஸ்பெயின் நோட்டரி அலுவலகத்தில் அதனை பதிவும் செய்து கொண்டார். பின்னர் நகரின் பிரதான இடம் ஒன்றில், அலுவலகம் ஒன்றையும் திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், குறிப்பாக சோலார் பேனல் மூலம் சூரிய சக்தியைப் பயன்படுத்துவோர் தமக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மிரட்டலையும் விடுத்துள்ளார். மேலும் பிரபல ஓன்லைன் வணிக நிறுவனமான இ-பே நிறுவனம் மூலம், இணையதளம்…
-
- 19 replies
- 2.1k views
-
-
அமெரிக்கா-ரஷ்யா இடையே பனிப்போர் மூளுமா? புடின் அறிவிப்பால் பரபரப்பு (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 17 யூன் 2015, 07:20.46 மு.ப GMT ] அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்ற விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்ய எல்லையின் அருகில் உள்ள நேட்டோ நாடுகளில் டேங்கர்கள் மற்றும் பாரிய அளவில் ஆயுதங்களை குவிக்கவேண்டும் என்று ரஷ்யாவுடன் ஏற்பட்ட பனிப்போர் காலத்தில் இருந்தே அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரேன் விவகாரத்துக்கு பிறகு ரஷ்யாவை ஒட்டியுள்ள ஐரோப்பாவின் கிழக்கு பகுதிகளில் தங்களது ஆயுதங்களை சேமித்து வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு ரஷ்யா கடு…
-
- 2 replies
- 387 views
-
-
மேகி நூடுல்ஸ்-ல் அதிகப்படியான நச்சுத்தன்மை கலந்திருப்பது இத்தனை வருடம் கழித்தே நமக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆனால், கடந்த ஐந்து மாதங்களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான 217 நிறுவனங்களின் பல்வேறு நொறுக்குத் தீனிகளைத் தடை செய்திருக்கிறது, அமெரிக்காவின் ‘ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்.டி.ஏ)’. நொறுக்குத் தீனி மற்றும் இனிப்புக்குப் பெயர் போன ‘ஹால்டிராம்ஸ்’ தயாரிப்புப் பொருட்களை அமெரிக்காவில் உள்ள இந்தியக் கடைகளில் மட்டுமல்ல, அமெரிக்காவில் விற்கவே தடை விதித்திருக்கிறது எஃப்.டி.ஏ. தவிர, அது தடை விதித்த நிறுவனங்களின் பட்டியலில், சென்னையின் மிகப் பிரபலமான ஒரு ஸ்வீட் ஸ்டாலும் அடக்கம். தடைக்கு எஃப்.டி.ஏ சொன்ன காரணம் இதுதான்: இந்த ஸ்நாக்ஸ்களில் அதிகப…
-
- 1 reply
- 476 views
-
-
டெல்லி: காலிஸ்தான் தனிநாடு கோரி சீக்கியர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் விடுதலை இயக்கத்தின் இலட்சியம். இந்த கோரிக்கையை முன்வைத்து 1980களில் உக்கிரமான ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆயுதப் போராட்டத்தின் உச்சமாக 1984ஆம் ஆண்டு தனிநாடு கோரும் போராளிகள் தங்கியிருந்த அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து வேட்டையாடியது. இதில் தனிநாடு கோரும் இயக்கத்தின் தலைவர் பிந்தரன்வாலே உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். பஞ்சாப் பொற்கோவிலுக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த …
-
- 6 replies
- 492 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்க நவீன வரலாற்றில் முதல் முறையாக அந்த நாட்டு கரென்சியான டாலரில் பெண் ஒருவரின் படத்தை இடம்பெறச் செய்யப்போகிறார்களாம். இதற்கான அறிவிப்பை அந்த நாட்டு கருவூலகத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அமெரிக்க டாலர் உலக அளவில் புகழ் பெற்றது. நம்மூர் பணத்தில் காந்தி தாத்தா படம் இடம்பெற்றுள்ளதை போல அமெரிக்க நாட்டு டாலரில் பல்வேறு தலைவர்கள் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனாலும், பெண் தலைவர்கள், பெண்களில் புகழ் பெற்றோர் படங்கள் இடம் பெறவில்லை.இந்நிலையில், முதல்முறையாக பெண் படத்தை பிரசுரிக்க அந்த நாட்டு கருவூலகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து 2020ம் ஆண்டில், நூறாண்டுகள் ஆக உள்ளது. எனவே, அப்போது பெண் படத்துடன் புதிய டாலர் நோட்டை வெளியிட அமெரிக்க க…
-
- 0 replies
- 445 views
-
-
கனடா- ரிமின்ஸ், ஒன்ராறியோ.. கனடியன் ரயர் கடை ஒன்றிற்குள் மனிதன் ஒருவர் குறைந்தது ஒரு உயர் சக்கி வாய்ந்த துப்பாக்கியுடன் காணப்பட்டதால் பொலிசார் அப்பகுதியை முற்றுகையிட்டுள்ளனர். புதன்கிழமை அதிகாலை 4மணியளவில் கடையின் அபாய அறிவிப்பு அலறதொடங்கியதாகவும் ஊழியர்கள் உள்ளே சென்ற போது அங்கு ஆகாதவர் ஒருவர் காணப்பட்டதாகவும் ரிம்மிஸ் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மைக் மக்ஜின் தெரிவித்தார். சுடுகலன்களை இலக்கு வைத்து குறிப்பிட்ட நபர் கடையை உடைத்து நுழைந்ததாகவும் அங்கு சுடுகலன்கள் இருந்ததாகவும் அவை அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள Home Depot, Esso gas station, பல கடைகள், வீதிகள் யாவும் மூடப்பட்டன.ஒன்ராறியோ மாகாண பொலிசார் அப்பகுதியில் ஒரு சுற்றுவளைவை ஏற்படுத்தி த…
-
- 0 replies
- 224 views
-
-
ஒரு பெண் நான்கு குழந்தைகளின் உயிருடன் விளையாடலாமா? குழந்தை பெற்ற பெண்ணுக்கு கண்டனம் [ வியாழக்கிழமை, 18 யூன் 2015, 08:23.51 மு.ப GMT ] ஜேர்மனியில் 65 வயதில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த அன்கிரட் ரானிக்( 65) என்பவர் கடந்த மாதம் செயற்கை கருத்தரிப்பு மூலம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்றெடுத்தார். ஏற்கனவே 13 குழந்தைகளை பெற்ற இந்த பெண், உக்ரைன் சென்று கருத்தரிப்பு செய்து கொண்டார். இவருக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே 'சிசேரியன்' மூலம் மூன்று ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைகளின் எடை 1.4 - 2.1 பவுண்டு வரை இருந்தது. கடந்த ஒரு மாதமாக ஒரு ஆண் கு…
-
- 0 replies
- 288 views
-
-
என் அம்மா காலை பிடிச்சுவிடணும்! பேரறிவாளனின் பெருவிருப்பம்! - இரண்டு, மூன்று மாதங்களில் விடுதலையாகி அனைவரையும் சந்திப்பேன் நான் கைதுசெய்யப்பட்ட நாளில் இருந்து, ஒரு நாள்கூட அவர் நிம்மதியாக உண்டதும் இல்லை, உறங்கியதும் இல்லை. உடலில் எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் ஓடித் திரியும் என் அம்மாவின் கால்களை, நான் விடுதலையாகி வெளியில் வந்ததும் பிடித்துவிட வேண்டும். உணர்வுகள் அலைமோதப் பேசுகிறார் பேரறிவாளன். மிகச் சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல ஒரு ஜூன் மாதம் 11-ம் தேதிதான் கைதுசெய்யப்பட்டேன். சிறை வாழ்க்கையில் இப்போது 25-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறேன். தூக்குத் தண்டனைக் கைதியாக இருந்த நான், இப்போது ஆயுள் தண்டனைக் கைதி. இந்தக் கால் நூற்றாண்டு கால சிறைவாசத்தில் உடல்நிலை மா…
-
- 0 replies
- 372 views
-
-
தமிழ்க் கனடிய பிரஜைகள் நாடு கடத்தப்படுவார்களா? குழப்பங்களும் உண்மை நிலையும்! - நிஜத்தின் தேடல் [ புதன்கிழமை, 17 யூன் 2015, 08:04.14 PM GMT ] கனடியத் தமிழர்களின் பிரஜாவுரிமை தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி மக்களிடையே பரவலாக மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியிருந்ததோடு மட்டுமல்லாமல், குழப்பகரமாக திரிபுபடுத்தப்பட்டிருந்த அந்தச் செய்தி கனடிய அமைச்சரையே கருத்துத் தெரிவிக்குமளிவிற்கும் இட்டுச் சென்றது. இது தொடர்பான கனடிய குடிவரவு அமைச்சரின் கருத்து என்ன? உண்மையிலே தமிழர்களிற்கு இது பாதிப்பா? யாரையெல்லாம் இந்தச் சட்டம் பாதிக்கும் என்ற பல விடயங்களை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
-
- 1 reply
- 408 views
-
-
கனடாவின் சிறந்த பிரதம மந்திரி யாராக இருப்பார் என்ற புதிய கருத்து கணிப்பு ஒன்று என்டிபி தலைவர் தோமஸ் மல்கெயர் பிரதம மந்திரி Stephen Harper உடன் பிணைப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்களிற்கு பின்னால் ட்றூடோ வருகின்றார். அங்குஸ் றெயிட்டினால் நடாத்தப்பட்ட கருத்து கணிப்பு இதனை தெரிவித்துள்ளது. பதவிக்கு ஹாப்பர் சிறந்தவர் என்பதற்கு 26% நம்பிக்கையும் மல்கெயருக்கு 24% , லிபரல் தலைவர் ஜஸ்ரின் ட்றூடோவிற்கு 18% காணப்படுகின்றது. ட்றூடோவின் ஆதரவு சிறிது சரிவடைந்து காணப்படுவதாகவும் என்டிபி கட்சி மற்றும் மல்கெயரின் ஆதரவு அதிகரித்து காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. பொதுவான ஆதரவில் என்டிபி 36% முதலாவது இடத்திலும் கொன்சவேட்டிவ் 33% லிபரல் 23% காணப்படுவதாகவும் கணிப்பு தெரிவிக்கின…
-
- 0 replies
- 279 views
-
-
-
- 0 replies
- 428 views
-
-
மலேசியாவின் எண்ணெய்க் கப்பலொன்று 22 பணியாளர்களுடன் நடுக்கடலில் காணாமற்போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒர்கிம் ஹாமனி (Orkim Harmony) என்ற அந்தக் கப்பல், 75 இலட்சம் லிட்டர் பெட்ரோலுடன் மலேசியாவின் மலாக்கா நகரிலிருந்து, குவான்டன் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. இதன்போது, மலேசியாவின் ஜோஹார் மாகாணத்தையொட்டிய கடல் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அந்தக் கப்பலுடனான தொடர்பு கடந்த வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மலேசிய கடல் பாதுகாப்புத்துறை செயல் இயக்குநர் இப்ராஹிம் முகமது கூறியதாவது: காணாமற்போன எண்ணெய்க் கப்பலில், 1.5 கோடி ரிங்கிட் மதிப்புடைய பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தது. மாயமானபோது அந்தக் கப்பலில் 22 பணியாளர்கள் இருந்தனர். அவ…
-
- 6 replies
- 534 views
-
-
திபிலிசியில் வௌ்ளம்: 14 பேர் பலி, தப்பிச்சென்ற சிங்கம் ஒருவரைக் கொன்றுள்ளது ஜோர்ஜியாவின் தலைநகரான திபிலிசியில் உள்ள வெர் ஆற்றில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் வரையில் காணாமற்போயுள்ளனர். இந்நிலையில், திபிலிசியில் உள்ள மிருகக்காட்சிசாலையொன்றிலிருந்த மிருகங்கள் பலவும் வௌ்ளம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், அங்கிருந்த சில மிருகங்கள் தப்பித்து நகர் பகுதிக்குள் நுழைந்துள்ளன. அவ்வாறு தப்பித்த சிங்கம் ஒன்று ஒருவரைக் கொன்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 600 விலங்குகளில் பாதிக்கும் மேலான பறவைகளும் மீன்களும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சிங்கம், புலி மற்றும் நீர்யானை போன்ற …
-
- 0 replies
- 464 views
-
-
ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த பெண்கள்: எங்களிடம் வந்துவிடுங்கள் என கண்ணீர் விடும் கணவர்கள் (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 17 யூன் 2015, 09:06.38 மு.ப GMT ] ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக சந்தேகிக்கப்படும் 3 பெண்களின், கணவர்கள் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளனர். பிரித்தானியாவின் பிராட்போர்ட பகுதியை சேர்ந்த சகோதரிகளான சுக்ரா தாவுத், ஷொஹ்ரா தாவுத், மற்றும் காதிஜா தாவுத் தங்களது குழந்தைகளுடன் கடந்த மாதம் மெதினாவுக்கு புனித யாத்திரை சென்றனர். இந்நிலையில் அவர்கள் வரும் வியாழன் பிரித்தானியா திரும்பவேண்டும். ஆனால் அவர்கள் கடந்த 9ஆம் திகதி விமானம் மூலம் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களது தம்பி சிரியாவில் உள…
-
- 0 replies
- 322 views
-
-
ஆள்கடத்தல்காரர்களுக்கு ஆஸி. பணம் வழங்கிய ஆதாரங்களை வெளியிட்டது இந்தோனேசியா புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்கு வெளியே அழைத்துச் செல்வதற்காக இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் பெரும் தொகை பணம் வழங்கியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அண்மையில் இந்தோனேசியாவை சென்றடைந்திருந்தது. சட்டவிரோத ஆள்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் படகைச் செலுத்தியோருக்கு ஆயிரக் கணக்கான அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகள் சட்டவிரோத ஆள்கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கியமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவ…
-
- 1 reply
- 434 views
-
-
துபாயில் தமிழிலிலும் டிரைவிங் லைசென்ஸ் தேர்வு எழுதலாம்! துபாய்: துபாயில் ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வில் தமிழ் உட்பட நான்கு இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்புவோர், முதலில் 30 நிமிடம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வு கணினி மூலமாக நடத்தப்படும். இந்த தேர்வை, துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து கழகம் (RTA - Road Transport Authority)) நடத்தி வருகிறது. இதனை, ஆங்கிலம், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே எழுத முடியும். இதனால், இந்தியாவை சேர்ந்த பலர், லைசென்ஸ் பெற வேண்டுமானால், பல முறை முயற்சி செய்ய வேண்டி இருந்தது. இந்த நிலையில், புதிதாக 7 மொழிகளை சேர்க்க RTA முடிவு செய்துள்ளது.. இதன்படி, வரும் செப்டம…
-
- 7 replies
- 845 views
-
-
இந்தோனேசியாவில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது. இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சுமத்ரா தீவில் உள்ளது சீனாபக் என்ற எரிமலை. தற்போது இந்த எரிமலை வெடித்து, அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளதால் அங்கிருந்த சுமார் 5 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 28 இடங்களில் இருந்து கரும்புகை மற்றும் சாம்பல்கள் வெளியாகி கொண்டிருப்பதால், மேலும் மக்கள் வெளியேறி வருகின்றனர். எரிமலை வெடிப்பில் இருந்து தீ குழம்புகள், கரும்புகை, சாம்பலுடன் பாறைகளும் வெளியேறி வருகிறது. கடந்த 400 ஆண்டுகளாக எந்தவித அச்சுறுத்தலும் இன்றி இருந்த சீனாபக் எரிமலை கடந்த 2010–ம் ஆண்டு முதல் அந்த எரிமலை வெடிக்க ஆயத்தமானது. அதை தொடர்ந்து, அந்த பகுதியில் …
-
- 0 replies
- 245 views
-
-
அமெரிக்காவின் முதல் பெண்மணி என்று அழைக்கப்படும் ஒபாமாவின் மனைவி மிஷல்(51), தனது இரு மகள்களுடன் லண்டன் வந்துள்ளார். 2 நாள் பயணமாக அவர் இங்கிலாந்து வந்துள்ள அவர் இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெறும் தேனீர் விருந்தில் தனது மகள்களுடன் கலந்து கொண்டார். முன்னதாக மிஷலை வரவேற்ற இளவரசர் ஹேரி அவரை பிரதமர் டேவிட் கேமரூன், மற்றும் அவரது மனைவி சமந்தாவை சந்திப்பதற்காக டவுனிங் தெருவில் உள்ள கேமரூனின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். வீட்டில் ஒபாமா குடும்பத்தினர் பிரதமரை சந்தித்தனர். அவர்களுக்கு தேனீர் விருந்தளித்து டேவிட் கேமரூன் கவுரவித்தார். நேற்று அவர்கள் டவர்ஹேம்லட்ஸில் உள்ள முல்பெர்ரி பள்ளிக்குச் சென்று பள்ளிக் குழந்தைகளைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போத…
-
- 1 reply
- 709 views
-
-
விண்வெளியில் ‘‘காமெட் 67 பி’’ என்ற பிரமாண்டமான வால் நடசத்திரம் உள்ளது. இந்த வால் நட்சத்திரத்தை ஆராய ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆய்வுக் கழகம் முடிவு செய்தது. கடந்த ஆண்டு ரோசிட்டா என்ற விண்கலத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகள் அந்த வால் நட்சத்திரம் நோக்கி ஏவினார்கள். அந்த விண்கலத்தில் பீலே என்ற விண்வெளி வீரர் சென்றார். முழுவதும் சூரிய சக்தியால் இயங்கும் ரோசிட்டா விண்கலம் வெற்றிகரமாக வால் நட்சத்திரத்தை சென்றடைந்தது. இதன் மூலம் காமெட் 67 பி வால்நட்சத்திரத்தில் தரை இறங்கிய முதல் வீரர் என்ற பெருமையை பீலே பெற்றார். ஆனால் வால் நட்சத்திரத்தில் அவர் தரை இறங்கிய சில நிமிடங்களில் அவரது தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சூரியனில் இருந்து நீண்ட தொலைவுக்கு சென்று விட்டதால் எரிபொருள்…
-
- 5 replies
- 501 views
-
-
மலேசியாவின் அதி உயர் மலை உச்சியில் நிர்வாணமாக காட்சியளித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கனடிய உடன்பிறப்புகள் இருவர் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டனர். சஸ்கற்சுவானை சேர்ந்த லின்ட்சி பற்றெசன் மற்றும் டானியல் பற்றெசன் ஆகிய இவர்கள் இருவரும் பொது இடத்தில் ஆபாசமான முறையில் காட்சியளித்தார்கள் என்ற குற்றத்திற்காக இவர்களிற்கு மூன்று நாட்கள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. இவர்களது நடவடிக்கை மலையை அவமதித்த காரணத்தினால் தான் அங்கு யூன் மாதம் 5ந்திகதி பூகம்பம் ஏற்பட்டு 18பேர்கள் கொல்லப்பட்டனர் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். மே மாதம் 30ந்திகதி ஒரு புனிதமான மலைத்தளமான கினபாலு மலையை அவமதித்தார்கள் என இவர்களுடன் சேர்ந்த 4 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். …
-
- 1 reply
- 347 views
-
-
ரொறொன்ரோ- ரொறொன்ரோ பெரும்பாகத்தை சேர்ந்த ஒரு சுகாதார பாதுகாப்பு ஊழியர்கள் குழு 12.5மில்லியன் டொலர்கள் லாட்டரி பரிசு தொகையை தங்களிற்குள் பகிர்ந்து கொள்கின்றனர். கடந்த வார லொட்டோ மக்ஸ் சீட்டிழுப்பில் இப்பரிசுத்தொகையை இவர்கள் வென்றுள்ளனர். யூன் 5ந்திகதியின் 50-மில்லியன் டொலர்கள் ஜாக்பொட்டிற்கான பரிசுத்தொகையை வென்ற நான்கு வெற்றியாளர்களில் இந்த குழுவினரும் ஒருவராவர். இந்த குழு முறையை தாங்கள் ஒரு வருடத்திற்கு முன் ஆரம்பித்ததாக Mount Sinai Hospital அறுவைச்சிகிச்கை பிரிவை சேர்ந்த மருத்துவ தாதி லிலியா ரொகேட் தெரிவித்தார். 10பேர்களை கொண்ட இக்குழுவில் பெரும்பாலானவர்கள் Mount Sinai Hospital அறுவைசிகிச்சை அறையில் பணியாற்றுபவர்கள் எனவும் இவர்களில் ஒருவர் தனது மகள் எனவும் லிலியா த…
-
- 1 reply
- 274 views
-
-
அகதிகளின் சுகாதார காப்புறுதி வெட்டுக்களை எதிர்த்தும் இதனை நிறுத்தும் படி மத்திய அரசை கோரியும் கனடிய வைத்தியர்கள் பேரணிகளை நடாத்தினர். “மிகப்பெரிய நாள் நடவடிக்கை” என்ற பெயரில் குறைந்தது 20 கனடிய நகரங்களில் இந்த பேரணி நடாத்தப்படுகின்றன. வைத்தியர்கள், சுகாதார பராமரிப்பு நிபுணர்கள் போன்றவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. கடந்த வருடம் கூட்டமைப்பு நீதிமன்றம் அகதிகள் சுகாதார காப்புறுதி வெட்டு அரசியலமைப்பிற்கு விரோதமானதென வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒட்டாவா மேன்முறையீடு செய்தது. அகதிகள் பராமரிப்பு கனடிய வைத்தியர்கள் குழு அரசின் இந்த மேன்முறையீட்டை கைவிடும் படி ஒட்டாவாவை கேட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டிற்காக கொன்சவேட்டிவ் அரசாங்கம் 1மில்லியன் டொலர்கள…
-
- 0 replies
- 320 views
-
-
ஸ்வீடனில் நடந்த சர்வதேச சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யாவுக்கு பதக்கம்! ஸ்வீடன் நாட்டில் நடந்த சர்வதேச சைக்கிள் ஓட்டும் போட்டியில் நடிகர் ஆர்யா பதக்கம் வென்றார். நடிகர் ஆர்யா கால்பந்து, சைக்கிள் ஓட்டும் போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்வர். ஸ்வீடன் நாட்டில் உள்ள மோட்டாலா நகரில் நடைபெறும் 'வாடேர்ன் ருன்டன்' சைக்கிள் பந்தயம் வெகு பிரபலமானது. 50வது ஆண்டாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்க பிசியான நடிப்புக்கிடையே கடந்த 8 மாதங்களாக நடிகர் ஆர்யா பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் ஜுன் 12ஆம் தேதி 300 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட அந்த சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட ஆர்யா 15 மணி நேரத்தில் பந்தய தொலைவை கடந்து பரிசு வென்றார். அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்…
-
- 4 replies
- 780 views
-
-
வெடித்தது சர்ச்சை : லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ்! ஐ.பி.எல். ஊழலில் சிக்கி தற்போது லண்டனில் வசித்து வரும் லலித் மோடியின் மனைவிக்கு சிகிச்சை பெற இங்கிலாந்தில் இருந்து வெளியேற அனுமதிக்குமாறு சுஷ்மா ஸ்வராஜ் பரிந்துரை செய்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவில் ஐ.பி.எல். என்ற கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தி பின்னர் ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடி இங்கிலாந்துக்கு தப்பி ஓடி அங்கேயே வசித்து வருகிறார். இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மற்றொரு ஐரோப்பிய நாடானா போர்ச்சுகலில் சிகிச்சை அளிக்க லலித் மோடி விரும்பினார். இதற்கு இங்கிலாந்தில் இருந்து வெளியேற உதவுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை லலித் மோடி அணுகியுள…
-
- 0 replies
- 394 views
-
-
பாரீஸ்: மிகப்பெரிய விமான ரகமான போயிங், செங்குத்தாக மேலெழும்பி சாதனை படைத்துள்ளது. போயிங் டிரீம்லைனர் ரக விமானங்கள் அளவில் பெரியவை. 350 பேர் வரை இதில் பயணிக்கலாம். பெரிய விமானம் என்பதால், இதை மேலே எழுப்புவதற்கு நீண்ட தூர "ரன்வே' தேவை. பறக்கும்போதும், நீண்ட தூரம் சென்று தான் திரும்ப முடியும்.ஆனால் சமீபத்தில் போயிங் நிறுவனம், விமானத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. விமானத்தின் எடையும் குறைக்கப்பட்டது. இதையடுத்து இவ்விமானத்தின் செயல்விளக்கம் பாரீசில் செய்து காட்டப்பட்டது. வியட்னாம் ஏர்லைன்சுக்கு சொந்தமான இந்த விமானத்தை இயக்கிய பைலட்டுகள், விமானத்தை கிட்டத்தட்ட செங்குத்தாக மேலேழுப்பி குறைந்த நேரத்தில் அதிக உயரத்தை தொட்டனர். அதே போல, நீண்ட தூரத்திற்கு சுற்றி வளைக்காமல், உடன…
-
- 1 reply
- 396 views
-