உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27047 topics in this forum
-
லண்டனில் சூதாட்ட பிரியர் ஒருவரை இளம்பெண் ஒருவர் பணத்திற்காக தனது அழகால் மயக்கி கொலை செய்ததை பொலிசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த மெஹ்மத் ஹசன் என்ற 56 வயது நபர், கடந்த மார்ச் மாதம் தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிய பொலிசாருக்கு இந்த கொலை தொடர்பாக எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது. பின்னர் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. சூதாட்ட பிரியரான மெஹ்மத் ஹசன் கடந்த பெப்ரவரியில் லியோனி கிரான்ஞர் (25) என்ற இளம்பெண்ணை சந்தித்ததோடு, இருவரும் ஒரு மாதமாக நெருங்கிப் பழகியுள்ளனர். சூதாட்டத்தில் ஹசன் சம்பாதித்த பெருந்தொகையை அபகரிக்க திட்டமிட்ட லியோனி, கடந்த …
-
- 0 replies
- 211 views
-
-
மகாராஷ்டிரா அரசின் சார்பில் அரபி கடலில் அமைக்கப்பட உள்ள வீரசிவாஜியின் மிகப் பெரிய நினைவிடத்திற்கு ரூ.1900 கோடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் படேலுக்கு உலகிலேயே மிகப் பெரிய இரும்பு சிலை அமைக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் முதல்வர் பட்நவிஸ் தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றதும், மும்பையில் உள்ள அரபி கடலில் வீரசிவாஜிக்கு சிலையுடன் கூடிய மிகப் பெரிய நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மும்பையில் உள்ள நாரிமன் முனையில் இருந்து சுமார் 2.6 கிமீ தொலைவில் அரபி கடலில் 16 ஏக்கர் பரப்பளவில் பாறை தீவாக இது அமைக்கப்பட …
-
- 1 reply
- 329 views
-
-
அருணாச்சல் பிரதேசத்திலுள்ள இந்திய சீன எல்லையில் இந்திய ராணுவம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப்பிரதேசத்திற்கு சென்றதற்கான தனது எதிர்ப்பை சீனா அதிகாரப்பூர்வமான புகாராக பதிவு செய்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேசம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறிவருகிறது. சீனாவுக்கான இந்தியத்தூதர், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேரில் வருமாறு உத்தரவிடப்பட்டு, சீனாவின் கண்டனம் அவரிடம் நேரில் தெரிவிக்கப்பட்டதாக, சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடியின் அருணாச்சலப் பிரதேச வருகையானது சீனாவின் எல்லையை மதிக்காத போக்கு என்றும், பாதிக்கும் செயல் என்றும் இந்திய தூதரிடம் சீனா தெரிவித்துள்ளதாகவும் சீன ஊடகச…
-
- 2 replies
- 241 views
-
-
குறிப்பிட்ட சில வட அமெரிக்காவில் உள்ள பல்கடை அங்காடிகளை தாக்க இலக்கு வைத்துள்ளதாக ஒரு பயங்கரவாத குழு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவற்றில் மேற்கு எட்மன்டன் மோலும் அடங்குகின்றது. Al-Qaeda வுடன் இணைப்பு கொண்ட இந்த குழு சனிக்கிழமை வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கனடா, யுகே, யுஎஸ் ஆகிய இடங்களில் உள்ள பேரங்காடிகளை தாக்க போவதாக தெரிவித்துள்ளது. 2013 செப்பரம்பரில் கென்யா, நைரோபியில் உள்ள ஆடம்பர பேரங்காடி ஒன்றை தாக்கிய பயங்கர வாத குழுவை சேர்ந்தவர்கள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்தாக்குதலின் போது 60-மக்கள் வரை கொல்லப்பட்டனர். சோமாலி பயங்கரவாத அமைப்பான al-Shabaab சனிக்கிழமை இரவு YouTube –ல் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றில் மேற்கு எட்மன்டன் பேரங்காடி முக்க…
-
- 0 replies
- 278 views
-
-
உலகின் முன்னணிச் செல்வந்தர்களுக்குள் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் ஒருவர் எனப் பலர் கருதி இருந்தனர். அவர் முன்னணிச் செல்வந்தர் அல்லர். அவர் முதல்தரச் செல்வந்தர் என அவரது முன்னாள் நெருங்கிய நண்பர் Bill Browder அம்பலப்படுத்தியுள்ளார். Forbeசஞ்சிகையின் கணிப்பின் படி உலகின் முன்னணி செல்வந்தர்களின் பட்டியல்: 1. Bill Gates Net Worth: $76 Billions Source of wealth: Microsoft 2. Carlos Slim Helu & family Net Worth: $72 Billions Source of wealth: telecom 3. Amancio Ortega Net Worth: $64 Billions Source of wealth: retail 4. Warren Buffett Net Worth: $58.2 Billions So…
-
- 0 replies
- 553 views
-
-
ஐ.எஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிவந்த யாஸிதி பெண்களின் மனதில் பயம் இன்றும் ஓயாத அலைகளாய் அடித்துக் கொண்டிருக்கிறது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் கடந்தாண்டு ஈராக்கின் சிஞ்சார்(Sinchar) மலைப்பகுதியில் வாழும் யாஸிதி என்னும் சிறுபான்மையின மக்களை பெரிதும் கொடுமைப்படுத்தியது. கடந்தாண்டில் மட்டும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட யாஸிதி பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகள், அவர்களை தங்களது முகாம்களில் வைத்து பலமுறை கற்பழித்துள்ளனர். இதனை தொடர்ந்து தங்கள் பிடியிலிருந்த ஆண்கள் மற்றும் சிறுவர்களை தலைத் துண்டித்து கொன்றதுடன், சிறுமிகளையும் பெண்களையும் விபச்சார சந்தையில் விலைபேசி விற்று பாலியல்…
-
- 3 replies
- 525 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து உதைப்பது போன்று வெளியாகியுள்ள ஆவணப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜேர்மனியின் ஜிடிஎம் தொலைக்காட்சி, அடையாளம் தெரியாத மேற்கத்திய உளவுத்துறை நிறுவனம் ஒன்றின் ரகசிய தகவல்களை கொண்டு, புதிய ஆவணப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளது. அதில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதற்குமுன் தனது விவாகரத்து செய்யப்பட்ட மனைவி லுயிட்மிலாவிடம் வன்முறைத்தனமாக நடந்து கொண்டதையும், அவரது வாழ்க்கை வரலாறும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டு உள்ளது. மேலும் புடினின் வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த படத்தில், தேசிய பாதுகாப்பு அமைப்பான கேபிஜி-யின் அதிகாரியாக இருந்து படிப்படியாக தற்போது ஜனாதிபதி பதவிக்கு வருவது வ…
-
- 2 replies
- 477 views
-
-
உலகிலேயே உயரமான கட்டிடங்களில் ஒன்றான துபாய் டார்ச் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. துபாய் நகரத்தில் உள்ள ‘The Marina Torch’ என்ற குடியிருப்பு கட்டிடம் சுமார் 79 அடுக்கு மாடிகளை கொண்ட 336.1 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடமாகும். இன்று அதிகாலை நள்ளிரவு 2 மணியளவில் இந்த கட்டிடத்தின் 50-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் கொளுந்துவிட்டு எரிந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு பரவ தொடங்கியது, இதனையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர், அங்கிருந்த மக்களை பாதுகாப்பாக தங்க வைத்ததுடன் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான கட்டிடத்தின் 27-வது மாட…
-
- 0 replies
- 277 views
-
-
கனடா- ரொறொன்ரோவில் வியாழக்கிழமை அதிகாலை 4-மணியளவில் 3-வயதுடைய எலையா என்ற சிறுவன் தொடர்மாடிக்கட்டிடம் ஒன்றில் இருந்து காணாமல் போய் உள்ளான். இச்சம்பவம் நெடுஞ்சாலை 401 மற்றும் பாத்றஸ்ட் வீதியில் நடந்துள்ளது. சிறுவனை இரவு 9.30-மணியளவில் படுக்கையில் விட்டதாகவும் காலை 7.30-மணியளவில் எழுந்து பார்க்கும் போது சிறுவனை காணவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்ததாக பொலிசாரின் கூற்று பிரகாரம் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் கண்காணிப்பு கமரா பதிவை பார்வை இட்டபோது அதிகாலை 4.05-மணியளவில் சிறுவன் கட்டிடத்தைவிட்டு வெளியேறியதும் 4.20-ற்கு வண்டிபாதையில் காணப்பட்டதும் பதிவாகியுள்ளது காணப்பட்டது. சிறுவன் தனது பேத்தியாருடன் தொடர்மாடிக் கட்டிடத்தில் இருந்தான் எனவும் “நல்ல குணமுள்ள பையன்” எனவும் …
-
- 22 replies
- 1.1k views
-
-
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால விசா வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியா வந்து செல்ல அதிக பட்சம் 15 ஆண்டுகள் வரை விசா அளிக்கப்பட்டு வந்தது. இந்த விசாவில் வருபவர்கள் அடிக்கடி காவல் நிலையத்துக்கு சென்று தாங்கள் இந்தியாவில் தொடர்ந்து தங்கி இருக்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும். இதனால் பல கஷ்டங்கள் ஏற்படுவதாக வெளிநாட்டு இந்தியர்கள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆயுள் கால விசா வழங்க இந்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 6ம் தேதி அவசர சட்டமும் இயற்றப்பட்டது. அவசர சட்டங்கள் 6 மாதம் வரை மட்டுமே செல்லுபடி…
-
- 0 replies
- 464 views
-
-
பாலவனமான மத்திய கிழக்கின் சில பகுதிகள் பனிக்காடாகின - காணொளி 20 பிப்ரவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:47 ஜிஎம்டி மத்திய கிழக்கின் சில பகுதிகள் கடும் பனியால் மூடப்பட்டுள்ளன. ஜோர்தானிய தலைநகரான அம்மான் வெள்ளியன்று ஸ்தம்பித்துப் போய் விட்டது. ஆழமான பனியில் கார்கள் புதைந்துபோய் விட்டன. அடுத்த சில நாட்களுக்கு அந்த பாலவன நகர், துருவப் பனிக்காடு போலத்தான் இருக்கும். பனியும் மழையும் இன்னமும் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், இஸ்ரேலில் ஜெரூசலத்தின் பழைய நகர், வழமைக்கு மாறாக வெண்பனியால், மூடப்பட்டிருக்கின்றது. கடுமையான பனிக்காற்று தெருக்களையும், நகரின் வெளிப்புறத்தையும் மூடிவிட்டது. இவற்றைக் காண்பிக்கும் காணொளி. http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150220_mideastsno…
-
- 0 replies
- 311 views
-
-
ஆஸ்திரேலியாவில் கடுமையான புயல் - காணொளி 20 பிப்ரவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:23 ஜிஎம்டி ஆஸ்திரேலியாவில் கடுமையான இரு புயல்கள் தாக்கியுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல வீடுகள் சேதமானதுடன், கரையோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். வெப்பமண்டல புயலான மார்சியா, குயின்ஸ்லாந்தின் கரையோரமாக யெப்பொன் மற்றும் செயிண்ட். லாரண்ஸ் ஆகிய இடங்களுக்கு இடையே வெள்ளியன்று காலையில் தாக்கியுள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை இன்றி வந்த அந்தப் புயல், 5 தர சூறைக் காற்றாக இருந்தாலும் பின்னர் அது தரம் 2 ஆக தரமிறக்கப்பட்டது. இருந்தபோதிலும், கடுமையான அலைகள் மற்றும் மழை ஆகியவை மிரட்டியிருக்கின்றன. பிறிதாக இன்னுமொரு வெப்பமண்டல புயலான ''லாம்'' வடக்கு பிராந்தியத்தின…
-
- 0 replies
- 501 views
-
-
ரஷ்யா மீதும் ரஷ்ய ஆதரவாளர்கள் மீதும் மேலும் புதிய பொருளாதாரத் தடைகளை கனடா அறிவித்துள்ளது. உக்ரெய்ன் விவகாரத்தில் ரஷ்யா நடந்துகொள்ளும் முரண்பாடுகளை காரணமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தடை அறிவிப்பில் ரஷ்ய அரசாங்கத்தின் சார்புடைய பாரிய எண்ணெய்வள நிறுவனமான Rosneft உம் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய பொருளாதாரத் தடை மற்றும் பயணத்தடை அறிவிப்பில் ரஷ்யா மற்றும் உக்ரெய் நாடுகளைச் சேர்ந்த 37 தனிப்பட்ட நபர்களின் பெயர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் ரஷ்யா மற்றும் உக்ரெய்னைத் தளமாக கொண்டு இயங்கும் 17 நிறுவனங்களும் தடை அறிவிப்பில் பட்டியிலிடப்பட்டுள்ளன. உக்ரெய்ன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் இதுவரை 5,300ற்…
-
- 0 replies
- 309 views
-
-
ஜெனிவாவுக்கான புதிய இந்தியப் பிரதிநிதியாக அஜித் குமார் நியமனம் FEB 20, 2015 | 11:52by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும், தூதுவராகவும், அஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது, அமெரிக்காவின் அட்லான்டா நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சூல் ஜெனரலாகப் பணியாற்றி வருகிறார். இவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெனிவாவுக்கான தூதுவர் பதவியை விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது. முன்னர், ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியாக இருந்த திலிப் சின்ஹா, சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப…
-
- 0 replies
- 246 views
-
-
சீனா, கொரியா, வியட்னாம் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் நேற்று புத்தாண்டை கொண்டாடின. இதனையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் சீனர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ‘அனைவருக்கும் சீன புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புதிய ஆண்டில் உங்களுக்கு மகிழ்ச்சியும், வளமும் அமைய வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார். மங்கோலியர்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில் - ‘மங்கோலிய நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். புத்தாண்டில் சந்தோஷமும், நல்ல உடல்நலனும் அமைய வாழ்த்துகிறேன்’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதேபோல கொரியா, வியட்னாம் நாட்டு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவ…
-
- 0 replies
- 271 views
-
-
சென்னை விமான நிலையத்தில் பறவைகளை விரட்ட பட்டாசு வெடித்தபோது ஓடு பாதையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 6 விமானங்கள் தாமதம் ஆனது. பட்டாசு வெடித்ததால் தீ சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் ஓடு பாதையில் செல்லும் விமானங்கள் மீது பறவைகள் மோதாமல் இருக்க அவற்றை பட்டாசு வெடித்து விரட்டுவது வழக்கம். அதன்படி நேற்று காலை 10.45 மணிக்கு கோவையில் இருந்து தனியார் விமானம் ஒன்று பயணிகளுடன் சென்னை விமான நிலையம் வந்தது. இந்த விமானம் தரை இறங்க அனுமதி வழங்கப்பட்டது. அப்போது முதல் ஓடுபாதை அருகே புல்வெளியில் பறவைகள் எதுவும் தங்காமல் இருக்க, பட்டாசு வெடிக்கப்பட்டது. அந்த பட்டாசு வெடித்து சிதறி நெருப்புடன் காய்ந்து போன புல்வெளியில் விழுந்தது. இதனால் காய்ந்த புல்வ…
-
- 0 replies
- 291 views
-
-
உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் பிரித்வி-2 ஏவுகணையை இந்திய பாதுகாப்பு துறை சார்பில் விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை 500 முதல் ஆயிரம் கிலோ எடை கொண்ட அணு ஆயுத பொருளை ஏந்தி செல்லும் திறன் கொண்டது. பாதுகாப்பு துறை கடற்படை தளமான ஒடிசா சந்திப்பூரில் இருந்து விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரித்வி- 2 போல் 5 வரை உருவாக்க மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறை முடிவு செய்துள்ளது. இன்று வெற்றி கரமாக முடிந்துள்ள பிரித்வி-2 இந்திய ராணுவத்தில் சேர்க்ப்படவுள்ளதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரித்வி-2 உலக அளவில் இந்தியாவின் பலத்தை உணர்த்தும் என இத்துறை அதிகார…
-
- 0 replies
- 272 views
-
-
இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பின்னர் அல்-காய்தாவை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக அமெரிக்க அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒசாமாவை அதிருப்திக்குள்ளாக்கியது. பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா மறைந்திருந்த பதுங்கிடத்தில் இதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்தன. அல்-காய்தாவின் ஆள்சேர்ப்புக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. ஒசாமாவின் குறிப்புகள் இதனை தெள்ளத்தெளிவாக தெரிவிப்பதாக இருந்தன. ஆள்சேர்ப்பு நடவடிக்கையை எளிமையானதாக மாற்ற, இஸ்லாமியர்களுக்கு மிகவும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பெயரைத் தேர்வு செய்ய அவர் முயற்சித்துள்ளார். அல்-காய்தா இஸ்லாமிய இயக்கமாக அறியப்படாமல், பயங்கரவாத இயக்கமாக அனைவராலும் அறியப்பட்டது ஒசாமாவின் மிகவும் யோசனைக்குள்ளாக்கியது. இது குறித்த ச…
-
- 0 replies
- 320 views
-
-
ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டுமா என்ற பொதுத் தீர்மான வாக்கெடுப்பு தோல்வியடைந்து ஐந்து மாதங்கள் கழிந்துள்ள நிலையில் இணையதளத்தில் இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றுள்ளது ஸ்காட்லாந்து. அதாவது இதுவரை .uk என்று பயன்படுத்தி வந்த டொமைன்களை தற்போது .scot என்ற டொமைன்களுக்கு மாறியுள்ளது ஸ்காட்லாந்து அரசு. இங்கிலாந்து அரசின் துறைகள் அனைத்தும் தற்போது .uk என்ற டொமைனைத்தான் பயன்படுத்தி வருகின்றன. ஸ்காட்லாந்து அரசு துறைகளும் கூட இதையே பயன்படுத்தி வந்தன. இந்த நிலையில் தற்போது இதை ஸ்காட்லாந்து அரசு மாற்றியுள்ளது. புதிதாக .scot என்ற டொமைனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து அரசின் முக்கிய இணையதளத்தின் பெயர் www.gov.scot என்று மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்காட்லாந்து முதல் துணை பிரதமர…
-
- 0 replies
- 354 views
-
-
இஸ்லாம் நெறியை தவறியவர்களுக்கு எதிராகவே அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் போரில் ஈடுபட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தின் வன்முறையை எதிர்கொள்வது தொடர்பாக அமெரிக்கா பாராளுமன்றம் வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா “நாங்கள் இஸ்லாமுடன் போர் புரியவில்லை. இஸ்லாம் நெறியை தவறியவர்களுக்கு எதிராகவே போர் புரிகிறோம்,” என்று கூறினார். ஐ.எஸ்.ஐ.எல். மற்றும் அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு சட்டரீதியான தன்மை மீது நம்பிக்கையில்லை. அவர்கள் தங்களை தாங்களே மதத்தின் தலைவர் என்றும், இஸ்லாமை பாதுகாக்கும் புனித வீரர்கள் என்றும் சித்தரிக்க முயற்சி செய்கின்றனர். அதற்காகவே ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்களாகவே இஸ்லாமிக் ஸ்டேட் என்ற நாட்டை பி…
-
- 0 replies
- 251 views
-
-
இப்படியும் ஒரு உன்னத தலைவர் இருந்திருக்கிறார்(நமக்குத் தெரியவில்லை) ரிலாக்ஸ் ப்ளீஸ் . முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். உரையாடலின் நடுவே நினைவுகூர்ந்தவரான நேரு ‘மிஸ்டர் காமராஜ்... உங்க சொந்த ஊர் இந்தப் பக்கம்தானே...?’ என்று கேட்கிறார். ‘ஆமாங்க. இங்ஙனதான். இன்னும் கொஞ்ச தூரத்தில் வரப்போகிறது’ என்று கூறுகிறார் காமராசர். ‘அப்படியானால் உங்கள் வீட்டுக்குப்போய் உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லவேண்டும் அல்லவா...’ என்று நேரு கேட்க ‘அது எதுக்குன்னேன். இப்பவே கூட்டத்துக்கு நேரமாயிட்டு...’ என்று காமராசர் மறுக்கிறார். ‘நோ நோ... இவ்வளவு …
-
- 0 replies
- 481 views
-
-
வட கொரியாவின் மறைந்த முன்னாள் தலைவர் கிம்-இல் ஜாங்குடைய பிறந்தநாள் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. அந்நாட்டில் அரசு மிக முக்கிய தினமாக அனுசரிக்கப்படும் இந்த தினத்தில் வட கொரிய மக்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. மக்களுக்கு பல நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படுகிறது. இந்த நிலையில் இந்த தினத்துக்கான ஏற்பாடுகளை தனது தனிப்பட்ட விமானமான ‘ஏர் ஃபோர்ஸ் உன்’-ல் கிம் ஜோங் உன் ஆய்வு மேற்கொண்டப் படத்தை கொரிய மத்திய செய்தி மையம் வெளியிட்டுள்ளது. ‘ஏர் ஃபோர்ஸ் உன்’-ல் அமர்ந்திருக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் கட்டுமான பணியை பார்வையிடும்போது எடுக்கப்பட்டதாக அந்த செய்தி மையம் குறிப்பிட்டுள்ளது. 1963-ல் தயாரான உலகின் மிகப் பெரிய விமானமான சோவியத் இல்யூஷனை ஒப்பிட்டு தயாரிக்கப்பட்டது…
-
- 5 replies
- 760 views
-
-
இந்தியர் மீது தாக்குதல் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் மடிசன் நகரில் என்ஜினீயராக பணியாற்றி வரும் தனது மகன் சிராக்கையும், மருமகளையும் பார்ப்பதற்காக இந்தியரான சுரேஷ்பாய் பட்டேல் அண்மையில் அமெரிக்கா சென்றார். அவர் கடந்த 6–ந் தேதி மகனின் வீட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்தார். இதைப் பார்த்த ஒருவர் சந்தேகத்துக்கு இடமான விதத்தில் ஒருவர் சுற்றித்திரிவதாக கூறி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு விரைந்த 2 அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் சுரேஷ்பாய் பட்டேலிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் அவருடைய பெயர், முகவரியை கூறும்படியும், அடையாள அட்டையை காட்டுமாறும் கேட்டு உள்ளனர். ஆனால் இந்தி மட்டுமே பேசத் தெரிந்த அவர் ‘நோ இங்கிலீஷ்’ (ஆங்கிலம் தெரியாது) என்று மட்டும் கூறினார்.…
-
- 2 replies
- 530 views
-
-
இதுவும் ஒரு கண்டுபிடிப்பு!! இதுவும் ஒரு கண்டுபிடிப்பு!! அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானியொருவர் தனது பெண்ணுறுப்பிலிருந்து எடுக்கப்பட்ட பக்ரீறியா மூலம் யோகர்ட் தயாரித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். விஸ்கொன்சின் பல்லைக்கழகத்தில் டாக்டர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சிசிலியா வெஸ்ட்புரூக் எனும் பெண்ணே இந்த விநோத ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆய்வுக்காக மேற்படி யோகர்ட்டை அவர் உட்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மனித உடலுக்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறவும் பெண்ணுறுப்பு கொண்டுள்ள வலிமையை ஆராய்வதற்கும் தான் விரும்பியதாக சிசிலியா வெஸ்ட்புரூக் தெரிவித்துள்ளார். "பெண்களின் உடல் குறித்து அசௌகரியப்படும் கலாசாரத்தில், ஒருவர் தனது சொந்த உடல் குறித…
-
- 7 replies
- 756 views
-
-
இத்தாலிய கரையோர காவல் படையினர் லிபிய கடற்கரைக்கு அப்பால் மேற்கொண்ட பிரதான தேடுதல் நடவடிக்கையின் போது, 2000 க்கு மேற்பட்ட குடியேற்றவாசிகளை மீட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் போது லிபியாவிலிருந்து அதிவேக படகுகளில் இத்தாலியை நோக்கி வந்த துப்பாக்கிகளை ஏந்திய குழுவொன்றால் கரையோர காவல் படையினர் அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் மத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கியதால் குறைந்தது 300 குடியேற்றவாசிகள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை லிபிய கடற்கரைக்கு அப்பால் சுமார் 50 மைல் தொலைவில் 600 குடியேற்றவாசிகள் மீட்கப்பட்…
-
- 0 replies
- 219 views
-