உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26710 topics in this forum
-
ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பை ஐரோப்பிய யூனியன் நிதிமன்றம் புதன்கிழமை நீக்கியது. எனினும், ஹமாஸ் இயக்கத்தின் சொத்துக்கள் முடக்கம் தொடரும் எனவும் அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஊடகங்களிலும், இணையதளங்களிலும் வெளியான செய்திகளின் அடிப்படையில்தான் 2001-ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஹமாஸ் அமைப்பு சேர்க்கப்பட்டது. ஒரு அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதற்குரிய சட்டப்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்படவில்லை. விதிமுறைகளின் அடிப்படையில்தான் அந்தப் பட்டியலிலிருந்து ஹமாஸ் அமைப்பின் பெயர் நீக்கப்படுகிறதே தவிர, ஹமாஸ் ஒரு பயங்கரவாத…
-
- 4 replies
- 444 views
-
-
புரட்சி மூலம் சுதந்திர போராட்டம் நிகழ்த்திய சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது குறித்த சர்ச்சை இன்றளவும் தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது. அண்மையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன் உள்ளதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கறிஞர் வி. ரமேஷ் தாக்கல் செய்திருந்த் இந்த மனுவில், நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடமுள்ள 41 கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக பாரதிய சுபாஷ் சேனாவின் ஒருங்கிணைப்பாளர் ஏ. அழகுமீனா (35) சார்பில் மதுரை நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவ…
-
- 5 replies
- 4.1k views
- 1 follower
-
-
உலகளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. எண்ணெய் விலை வீழ்ச்சி பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன் விலைக் குறியீடான பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை, ஒரு பாரல் 59 டாலர்களுக்கு விழுந்துள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஏற்பட்டுள்ள மந்தமான வளர்ச்சியும், உற்பத்தி பெருகி வரும் வேளையில் தேவைகள் மிகவும் குறைந்துள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆண்டின் ஜூன் மாதம் மிகவும் உச்சமாக, பாரலுக்கு 115 டாலர்களை கச்ச எண்ணெயின் விலை எட்டியது. ஒரு பாரல் எண்ணெய் என்பது சுமார் 159 லிட்டர்களுக்கு சமமாகும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில், எ…
-
- 0 replies
- 466 views
-
-
பாகிஸ்தானுடன் இந்தியா: ட்விட்டர் உலகை நெகிழவைத்த ஆறுதல் பயங்கரவாதத்துக்கு குழந்தைகளை பலிகொடுத்த அண்டை நாடான பாகிஸ்தானின் மக்களுக்கு, ட்விட்டர் மூலம் இந்தியர்கள் தெரிவித்த ஆறுதல் நெகிழவைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தை குறிவைத்து தாலிபான் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியாகினர். தாக்குதல் தொடங்கியது முதலே ட்விட்டரில் #PeshawarAttack என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. இந்தக் கொடூரத் தாக்குதலின் தன்மை தொடர்பாக செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், ட்விட்டரில் பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியர்கள் இட்ட …
-
- 0 replies
- 518 views
-
-
புதுடெல்லி, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுவதாக பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அறிவித்தார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, ஐ.எஸ். இயக்கத்தால் இந்தியாவுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றை ஒடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசுகையில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியவுடன் அவற்றை நாங்கள் கவனத்தில் கொண்டோம். இந்த நிகழ்வுகள், எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கின்றன. அதன் நடவடிக்கைகளை ஒடுக்க விரும்புகிறோம். ஆகவே, அந்த இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது. இந்திய வாலிப…
-
- 2 replies
- 382 views
-
-
டோக்கியோ கடந்த மாதம் கலைக்கப்பட்ட ஜப்பான் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் திடீர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் சின்சோ அபேவின் விடுதலை ஜனநாயக கட்சி கொமித்தோ கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எதிர்த்தரப்பில் ஜப்பான் ஜனநாயக கட்சி கூட்டணி கடும் போட்டியை ஏற்படுத்தியது. திடீர் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. மொத்தம் 53.3 சதவீத ஓட்டுகளே பதிவானது. 2012–ம் ஆண்டு நடந்த தேர்தலில் 59.3 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 475 தொகுதிகளில் சின்சோ அபேவின் கூட்டணிக்கு 328 தொகுதிகள் (3–ல் 2 மடங்கு) கிடைத்தன. இது அந்நாட்டில் ஆட்சியை எந்த வித சிக்கலும் இன்றி நடத்துவதற்கு கிடைத்த ‘‘சிறப்பு பெரும்பான்மை’’ என்பது குறிப்பிடத்த…
-
- 0 replies
- 295 views
-
-
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளிக்குள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான கொடூரத் தாக்குதலில் 80 பள்ளி குழந்தைகள் உட்பட 104 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பள்ளி குழந்தைகள் பிணைக் கைதிகளாக தலிபான் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளிக் கூடத்துக்குள் இன்று 7 தலிபான்கள் தீவிரவாதிகள் திடீரென உள்ளே நுழைந்தனர். பாகிஸ்தான் ராணுவ சீருடையுடன் உள்ளே நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் முதலில் பள்ளி வாகனத்துக்கு தீ வைத்தனர். அப்போது பள்ளிக்கூடத்தில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் கலையரங்கம் ஒன்றில் தலிபான…
-
- 6 replies
- 786 views
-
-
இந்திய தேசத்துக்கு எதிரான அமைப்புக்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்புகளை கொண்டிருக்கிறதா? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்று இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணியின் பிரித்தானிய பிரிவு, சீக்கியர் நடவடிக்கை வலைப்பின்னல் போன்றவற்றுடன் இந்த தொடர்புகள் பேணப்படுகிறதா? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்பட வேண்டுமா? என்பது தொடர்பில் புதுடெல்லியில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தீர்ப்பாயத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் பா.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோர் ம…
-
- 0 replies
- 480 views
-
-
அமெரிக்காவில் முன்னாள் கடற்படை அதிகாரி தனது குடும்பத்தில் உள்ள 6 பேரை சுட்டு கொன்றார் I பென்சில்வேனியா அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் பென்ஸ்பர்க்கை சேர்ந்த அதிகாரி பிரட்லி வில்லியம் ஸ்டோன் ( வயது 35) இவர் தனது குடும்பத்தை சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை 4 மணியளவில் முதல் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. . முதலாவதாக ஸ்டோம் தனது முன்னாள் மனைவி நிகோலே கில்லை கொலை செய்து உள்ளார். மேலும் தனது மகள் தனது பாட்டி பாட்டியின் தாயார் மற்றும் முன்னாள் அண்ணி பேட்ட்ரிகா பிலிக் மற்றும்அவரது 14 வயது மகளையும் துப்க்கியால் சுட்டு கொலை செய்து உள்ளார். மேலும் துப்பக்கி சூட்டில் 3 பேர் படுக…
-
- 0 replies
- 477 views
-
-
நேபாளத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் மதமாற்றம் குறித்த தேவையில்லாதக் கருத்துக்களைக் கூறியதற்காக காட்மாண்டுவிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை நேபாள அரசு எச்சரித்துள்ளது. மதம் மாறுவதற்கு சுதந்திரம் வேண்டும் என்று பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்திருந்ததற்கே இந்தக் கண்டனம் வந்துள்ளது. இப்படியான கருத்துக்கள் நாட்டின் சமூகத் ஸ்திரத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் என்று நேபாள அரசு கூறுகிறது. நேபாளத்தில் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் சாசனத்தில், மதம் மாறுவதற்கான உரிமை உள்வாங்கப்பட வேண்டும் என்று நேபாளத்துக்கான பிரிட்டிஷ் தூதர் அண்மையில் ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். அதற்கு நேபாளிய அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் அக்கட்டுரையில் கோரியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெ…
-
- 2 replies
- 556 views
-
-
ரூபிளின் மதிப்பில் வீழ்ச்சி, பணவீக்கம் அதிகரிப்பு, நெருக்கடியில் பொருளாதாரம் ரஷ்ய நாணயமான ரூபிலின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இதுவரை இல்லாத மோசமான வீழ்ச்சி கண்டுள்ளது. 60 ரூபில் சேர்ந்தால்தான் 1 அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு முதல் முறையாக ரூபில் வீழ்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் டாலருக்கு எதிரான ரூபிலின் மதிப்பு 45 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. ரஷ்ய மத்திய வங்கி தனது நாணயத்தை ஸ்திரப்படுத்த முயற்சிகளை எடுத்தாலும், அது சாத்தியப்படவில்லை என்று கூறுகிறார் பிபிசியின் பொருளாதார செய்தியாளர். ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதிகளில் ஒன்றான கச்சா எண்ணெயின் விலை உலகளவில் விழுந்துள்ளதும், உக்ரைனில் ஏற்பட்ட மோதல்களால், ரஷ்யாவுக்கு எதிரான சர்வதேசத் தடைகள் காரணமாக பங்குச் ச…
-
- 0 replies
- 561 views
-
-
ஏற்று காலை 9;45 மணியிலிருந்து நடந்துவந்த சிட்னி மார்ட்டீன் பிளேஸ் பணயக் கைதி நாடகம் இன்று அதிகாலை 2 மணிக்கு முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. நேற்று மாலை முதல் பணயக் கைதிகள் ஒவ்வொருவராக தப்பி வந்துகொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் மீதமிருந்த பணயக் கைதிகளை பயங்கரவாதி கொல்ல எத்தனித்த வேளை விசேட படையணி கட்டிடத்திற்குள் நுழைந்து அவனைச் சுட்டுக் கொன்றது. அவனால் கொல்லப்பட்ட ஒருவர் உற்பட மூவர் இதில் பலியாகியுள்ளனர். ஒரு பணயக் கைதி மாரடைப்பால் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த இஸ்லாமிய அடைப்படைவாதப் பயங்கரவாதை ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய குருவென்றும் பலமுறை அவுஸ்த்திரேலிய பொலிஸாரினல் கண்கானிக்கப்பட்டு வந்தவன் என்றும், தனது மனவி கொலை உற்பட அவுஸ்த்திர…
-
- 9 replies
- 2.1k views
-
-
பிரஸ்சல்ஸ்: ஆஸி., சிட்னியில் உள்ள ஒரு ஓட்டலில் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் சிறை வைத்துள்ள சம்பவம் இன்னும் முடிவுக்கு வருவதற்கு முன்னர் பெல்ஜியத்தில் மேலும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியுடன் வந்தது பயங்கரவாதிகளா என்ற விவரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சிட்னி ஓட்டலில் சிக்கி உள்ள பிணைக்கைதிகளை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. பயங்கரவாதிகளுடன் கை தேர்ந்த அதிகாரிகள் பேசி வருவதாக ஆஸி., போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் சிட்னியில் பிணை வைத்துள்ள பயங்கரவாதிகள் சிரியாவை அல் நுஷ்ரா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. சிட்னி ஓட்டல் பயங்கரவாதிகள் பிடியில் ஒரு இந்தியாவின் இன்போசிஸ் ஊழியரும் சிக்கியுள்ளதாக இன்போசிஸ் அலுவலக வட…
-
- 5 replies
- 963 views
-
-
அவுஸ்திரேலிய பணயக்கைதிகள் விவகாரத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமைகோரியுள்ளது. இன்று காலை சிட்னி நகரிலுள்ள கபே கட்டடத்தொகுதியில் 20 பொதுமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். இந் நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் ஐவர் தப்பியோடி வந்துவிட்டதாக அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தப்பி வந்தனரா அல்லது விடுதலை செய்யப்பட்டனரா என்பது வெளிவரவில்லை. இருப்பினும் அவர்கள் தப்பி வந்திருக்கலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவுஸ்திரேலிய செய்தி நிறுவனமான 9 நியூஸ் நிறுவனத்திற்கு பெண் பணயக்கைதிகள் இருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளச்செய்து தீவிரவாதி தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி…
-
- 5 replies
- 984 views
-
-
பெங்களூரு: ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து நாளை பெங்களூருவில் தாக்குதல் நடத்துவோம் என டுவிட்டர் வாயிலாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுமார் 50க்கும் அதிகமான பொதுமக்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். ஹோட்டலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடி ஏற்றப் பட்டுள்ளது. ஏற்கனவே 5 பேர் தப்பி வந்து விட்ட சூழலில், தீவிரவாதிகள் வசம் சிக்கியுள்ள மீதமுள்ள பொதுமக்களை மீட்க போலீசார் போராடி வருகின்றனர். பிணைக்கைதிகளில் ஒருவர் இந்தியர் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உறுதி செய்துள்ளார். இதற்கிடையே கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் எம்.என்.டி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்த ம…
-
- 0 replies
- 548 views
-
-
அவுஸ்த்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல உணவு விடுதியொன்றினுள் புகுந்துகொண்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் குழுவினர், அங்கேயிருந்த மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதுடன், வெளியிலிருந்து பொலிஸார் நடத்தவிருக்கும் எந்தவிதமான தாக்குதல்களையும் தடுப்பதற்காக பணயக்கைதிகளை கண்ணாடி யன்னல்களின் முன்னால் கைகளை உயர்த்தியபடி நிற்க வைத்திருக்கிறார்கள். யன்னல் ஒன்றின் முன்னால், "அல்லாவே ஒரே கடவுள், வெறொருவரில்லை" என்கிற இஸ்லாமிய அடிப்படைவாதப் பதாதையும் தொங்கவிடப்பட்டிருக்கிறது. சிட்னியின் பிரபல சனநடமாட்டம் மிகுந்த மார்ட்டீன் பிளேஸ் எனும் பகுதியில் அமைந்திருந்த இந்த உணவகத்தினுள் காலை 10 மணிக்குச் சற்றுமுண்ணர் நுழைந்த பயங்கரவாதிகள் இந்த பணயக்கைத்திகளை…
-
- 35 replies
- 2.7k views
-
-
ஹீத்தர் சோ கொரியன் ஏர் விமான நிறுவனத்தின் தலைவரின் மகளால் அவமதிக்கப்பட்டு, முட்டியிடச் செய்யப்பட்டு, விமானத்தில் இருந்து இறங்கச் செய்யப்பட்டமை குறித்து அந்த நிறுவன விமான சிப்பந்தி ஒருவர் முதல் தடவையாக பேசியுள்ளார். விமானத்தில் கொறிப்பதற்காக மகதமியா பருப்புகளை வழங்குவது வழக்கம். பொதுவாகவே வேர்க்கடலை, முந்திரிகை, மகதமியா போன்றவற்றை விமான பயணத்தில் பரிமாறும் போது அவை கொட்டி விடக் கூடாது என்பதற்காக அவற்றை ஒரு பையில் போட்டு வழங்குவது வழக்கம். ஆனால், தட்டில் அல்லாமல் ஒரு பையில் இட்டு அவற்றை தனக்கு பரிமாறியதற்காக கொரியன் ஏர் விமான நிறுவனத்தில் முன்பு மூத்த நிறைவேற்று அதிகாரியாகவும் முன்பு இருந்த அந்த நிறுவனத்தின் தலைவரின் மகளான ஹீத்தர் சோ என்பவர் மிகுந்த ஆத்திரம் அடைந்துள…
-
- 0 replies
- 946 views
-
-
இதே அமெரிக்காவும் இங்கிலாந்தும் தான் அன்று எம்மை வயது குறைந்த சிறுவர்களை படையில் இணைத்தார்கள், இவர்கள் பயங்கரவாதிகள் என்று நாளுக்கு நூறு முறை கண்டித்து தங்கள் ஊடகங்களில் கூச்சலிட்டு விட்டு , இன்று அதே சர்வதேசம் தான் இந்த சிறுவனின் உரிமைக்கு விளம்பரம் கொடுக்கின்றன . https://www.facebook.com/video/video.php?v=10152454926092217 "Now is not the time for school." This teenage Yazidi boy says he has taken up arms to protect his family from Islamic State militants. Months after thousands of Iraqi Yezidis escaped from Mount Sinjar, BBC News talks to civilians still trapped on the mountain: http://bbc.in/16eIkrP
-
- 0 replies
- 415 views
-
-
ரியடி ஜெனிரோ: ராணுவ சர்வாதிகார ஆட்சியில், தான் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக பிரேசில் பெண் ஜனாதிபதி உருக்கமாக தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில், 1964ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை ராணுவ சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றது. அக்காலகட்டத்தில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்த மக்களை, ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைபடுத்தினர். இந்நிலையில் மக்கள் ஆதரவுடன் ராணுவ ஆட்சி தூக்கி வீசப்பட்டது. ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அதன் பின்னர் இடதுசாரிகள் தேர்தலின் மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலில் அதிபராக இடதுசாரி கொள்கையுடைய தில்மா ரூசெப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய அதிபர் தில்மா ரூசெப்…
-
- 0 replies
- 575 views
-
-
பெங்களூரு: டிவிட்டர் மூலம் ஐ எஸ் அமைப்பை நடத்தியதாக கைதான பெங்களூரு ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த வாலிபர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்த பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். உலகின் மற்ற நாடுகளிலும் தங்கள் இயக்கத்தின் செயல்பாடுகளைத் தொடங்கும் முயற்சிகளில் ஐ.எஸ். அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களது இந்த திட்டத்துக்கு டிவிட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக இணையத் தளங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்ற தகவல் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டிவிட்டர் இணையதளத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்காகப் பல கணக்குகள் …
-
- 3 replies
- 1.3k views
-
-
ஸ்வான்சிக் தேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம்-- தொழில் நுட்பப் பிரச்ச்னைகள் கணினி பிரச்சனையினால் நேற்று பிரிட்டன் வான்பரப்பில் பாதிப்படைந்த விமானப் போக்குவரத்து இன்று சனிக்கிழமை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பின. ஆனால் பிரிட்டனின் முக்கிய சர்வதேச விமான நிலையமான ஹீத்ரோவில் 40 சதவீத விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை தேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட கணினிச் சிக்கல் ஒன்றால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நாடெங்கிலும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலைமை ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒன்று என்று பிரிட்டிஷ் போக்குவரத்து அமைச்சர் பேட்ரிக் மக்லாவ்லின் கூறினார். நேற்று வெள்ளிக்கிழமை ஸ்வான்சிக்கி…
-
- 0 replies
- 598 views
-
-
தற்போது ரோம் வந்திருக்கும் திபேத்தியர்களின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை போப் பிரான்ஸிஸ் சந்திக்கப்போவதில்லை என்று வாட்டிக்கன் தெரிவித்திருக்கிறது. போப் பிரான்ஸிஸை சந்திக்க தலாய் லாமா விருப்பம் தெரிவித்து சந்திப்பொன்றைக் கோரியிருந்தார். சீனாவுடன் தற்போது நிலவும் "நுட்பமான நிலைமை" காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக வாட்டிக்கன் தெரிவித்திருக்கிறது. தலாய் லாமா மீது போப் பெருமதிப்பு வைத்திருக்கிறார் என்றாலும் இந்த முடிவு "தெளிவாகவே புரியக்கூடிய காரணங்களுக்காக" எடுக்கப்பட்டிருப்பதாக வாட்டிக்கனுக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி தெரிவித்தார். போப் பிரான்ஸிஸை சந்திக்க முடியாமல் போனது குறித்து தான் "ஏமாற்றமடைவதாக" தெரிவித்த தலாய் லாமா, ஆனால் தன்னால் ஏதும் சிக்கல்கள் ஏற்படுவதை த…
-
- 4 replies
- 441 views
-
-
லண்டன் வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இப்போது அறிவித்துள்ளனர். எனினும் ஹீத்ரோ, காட்விக் விமான நிலையங்களில் இருந்து விமான சேவைகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பாதிக்கப்படும் எனவும் இப்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரு விமான நிலையங்களிலும் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகின்றன. சில விமானங்கள் வேறு நிலையங்களுக்கு மாற்றிவிடப்படுகின்றன. முந்தையச் செய்தி கணினி கோளாறு காரணமாக லண்டன் வான்பரப்பு உள்ளூர் நேரம் இரவு 7 மணி வரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். http://www.bbc.co.uk/tamil/global/2014/12/141212_london_airspace_closed
-
- 4 replies
- 429 views
-
-
அமெரிக்க மேற்கு கடற்கரை பகுதியைச் சேர்ந்த சுமார் 1,50,000 மக்கள் பனி, கடும் மழை மற்றும் காற்றோடு வீசி வரும் வலுவான புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பைனாப்பிள் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இந்த புயல் மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் கடும் சீற்றத்துடன் வீசி வருகிறது. புதன்கிழமை மாலை மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் தொடங்கிய இந்தப் புயல் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து செல்லும் 240 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக உள்ளூர் நாளிதழ் தெரிவித்தது. கடந்த ஆறு வருடங்கள் இல்லாத அளவுக்கு ஹவாயிலிருந்து அமெரிக்க மேற்கு கடற்கரை நோக்கி பனிக்காற்றோடு வீசும் இந்தப்புயல் …
-
- 0 replies
- 448 views
-
-
லண்டன் வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இப்போது அறிவித்துள்ளனர். எனினும் ஹீத்ரோ, காட்விக் விமான நிலையங்களில் இருந்து விமான சேவைகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பாதிக்கப்படும் எனவும் இப்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரு விமான நிலையங்களிலும் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகின்றன. சில விமானங்கள் வேறு நிலையங்களுக்கு மாற்றிவிடப்படுகின்றன. முந்தையச் செய்தி கணினி கோளாறு காரணமாக லண்டன் வான்பரப்பு உள்ளூர் நேரம் இரவு 7 மணி வரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். லண்டன் வான்பரப்பு கணிணி கோளாறு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுஐரோப்பாவில் விமானப் போக்குவரத்தின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த யூரோ கண்ட்ரோல் இணையத்தளத்தில் இந்…
-
- 0 replies
- 461 views
-