Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வாஷிங்டன், அடுத்த வாரம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்நிலையில், ரஷ்யாவுடன் வியாபாரம் செய்வதற்கு இது சரியான நேரமல்ல என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை இது எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் செய்தித்துறை செயலாளர் மேரி ஹார்ப் கூறுகையில், 'எங்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் இருந்தாலும் பல நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. எனக்கு தெரிந்த வரையில் ஒரு நாட்டின் அதிபரின் பயணம் மற்றொரு நாட்டு அதிபரின் வருகையை எந்த விதத்திலும் பாதிக்காது. முதலில் அதிபர் புதினின் வருகையால் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வர்த்தக, பொருளாதா…

  2. புதுடெல்லி, ஜனவரி மாதம் 26 ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் மோடியும் ஒபாமா வுடன் போனில் பேசியும், நேரில் சந்தித்தபோதும் அழைப்பு விடுத்தார். இதை அதிபர் ஒபாமா ஏற்றுக் கொண்டார். அவரது இந்தியப் பயணத்தை அமெரிக்க அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின்பு நடைபெறும் குடியரசு தின விழாக்களில் அமெரிக்க நாட்டு அதிபர் ஒருவர் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து கவுரவிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒபாமா வருகையை யொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிபர் ஒபாமா தீவிர வாதி…

  3. காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட காயம். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். வரும் 9ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் 3 வது கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு இன்று பிரசாரம் செய்த பிரதமர் மோடி பேசுகையில்; பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்கள் தியாகம் போற்றுதலுக்குரியது. இவர்களது தியாகம் எப்போதும் மறக்க முடியாது. இது எதிர்கால சந்ததியினர் வரை நினைவில் கொள்ளப்படும். இந்த தாக்குதலில் ஜார்கண்ட் புதல்வன் இறந்துள்ளார். இவரது வீர தியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன். மாநிலத்தின் வளர்ச்சியே எனது நோக்கம் : நான் கடந்த லோக்சபா தேர்தலில் இங்கு வந்து ஓட்டு கேட்டேன். நீங்கள் அள்ளி வழங்கினீர்கள். பா.ஜ…

  4. முஸ்லீம்களின் தனிச் சட்டத்தின் படி பெண்கள் பருவம் அடைந்து இருந்தாலோ அல்லது 15 வயது பூர்த்தி அடைந்து இருந்தாலோ பெற்றோரின் சம்மதம் இன்றியும் திருமணம் செய்து கொள்ளலாம் என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு சூரத் பகுதி முஸ்லீம் இளைஞர் யூசுப் லோகத் மீது குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் படி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பருவம் அடைந்த அல்லது 15 வயது முஸ்லீம் பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இஸ்லாமிய தனிச் சட்டம் கூறுவதாக குறிப்பிட்டு, யூசுப் லோகத் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டார். http://seithy.com/breifNews.php?newsID=122137&category=IndianNews&language=tamil

  5. அகதிகளுக்கு தாற்காலிக நுழைவு இசைவு (விசா) வழங்கும் சர்ச்சைக்குரிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், தனது குடியேற்றச் சட்டத்தை ஆவுஸ்திரேலியா கடுமையாக்கியுள்ளது. குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதா ஆவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்ககல் செய்யப்பட்டது. மசோதா மீது இரவு முழுவதும் நடைபெற்ற விவாதத்துக்குப் பின், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அது வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தையடுத்து, தஞ்சம் தேடி ஆவுஸ்திரேலியா வரும் அதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கான தாற்காலிக நுழைவு இசைவு வழங்கப்படும். அந்த நுழைவு இசைவு வைப் பெறுவதன் மூலம், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்கும் உரிமையை அகதிகள் பெற முடியாது. நுழைவ…

  6. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி திருப்பதி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்ச டிசம்பர் 9 ஆம் திகதி திருப்பதிக்கு சென்று 10 ஆம் திகதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறாராம். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள், ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசி நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகள…

    • 1 reply
    • 436 views
  7. இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் இந்திய மீனவர்கள் பிரச்சினையை அரசியலாக்காமல் நிரந்தர தீர்வு காணுவதற்கான மாநாடு, சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள கூட்டம் நடக்கிறது. இதில் இலங்கை தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன. இலங்கையை சேர்ந்த சில வல்லுனர்களும், இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்ட அமைப்பை சேர்ந்த தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். அன்றைய தினம் மாலையில், 'இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வை நோக்கி', 'இந்திய மீனவர்கள் பிரச்சினையில்…

  8. பீஜிங், கொடிய குற்றங்கள் செய்து மரண தண்டனை விதிக்கப்படுகிற கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றிய பின்னர், அவர்களின் உடல் உறுப்புகளை அகற்றி விடுவதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது. உலகிலேயே சீனாவில் மட்டும்தான் இந்த வழக்கம் உள்ளது. இந்த உறுப்புகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்கிறவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இப்படி மரண தண்டனை கைதிகளின் உடல் உறுப்புகளை எடுத்து, பிற நோயாளிகளுக்கு வழங்குவது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.இந்த நிலையில், இந்த வழக்கத்தை அடுத்த மாதம் 1–ந் தேதி முதல் விட்டொழிக்க சீனா திடீரென முடிவு செய்துள்ளது. இதை சீன அரசின் செய்தித்தாள் தெரிவித்தது. இது தொடர்பாக சீன மனித உறுப்பு நன்கொடை கமிட்டியின் தலைவர் ஹூவாங் ஜீபு கூறுகையில், ‘‘உறுப்பு மாற்று அறுவை…

  9. பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை அடுத்து ஸ்ரீநகர் சுற்று வட்டாரத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். | படம்:ஏ.எப்.பி. ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள், 3 போலீஸார் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகள் அதிகாலை முதல் அடுத்தடுத்து தொடர் தாக்குதலை நடத்தினர். மதியம் பாராமுல்லா பகுதி போலீஸ் ஸ்டேஷன் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் மூன்றாவது முறையாக மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் 3 போலீஸார் பலியாகினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்த…

  10. வாஷிங்டன், ‘டைம்ஸ்’ பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில், உலகின் பிரபலமானவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் இடம் கிடைத்து உள்ளது. பிரபலமானவர்கள் பட்டியல் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமானவர்களை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்து பட்டியல் வெளியிடுகிறது. 2014–ம் ஆண்டில் மிகவும் பிரபலமானவர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள பெர்கூசன் நகரில் மைக்கேல் பிரவுன் என்ற கறுப்பின வாலிபர் போலீஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து அந்த நகரில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் வாக்கெடுப்பில், சில தினங்களுக்கு பிரதமர் மோடி …

  11. புதுடெல்லி, ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்துக்கு பதிலாக வேறு தலைவரின் படத்தையும் வைக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி குழு தெரிவித்துள்ளது. வருங்காலங்களில் அச்சடிக்கப்பட வேண்டிய ரூபாய் நோட்டுகளின் மாதிரியை உருவாக்க, மத்திய அரசின் அறிவுரைப்படி குழு ஒன்றை ரிசர்வ் வங்கி அமைத்தது. கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்ட இந்த குழு, ரூபாய் நோட்டில் உள்ள மகாத்மா காந்தி படம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி எழுத்து மூலம் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக வேறு எந்த ஒரு தலைவரின் படத்தையும் ரூபாய் நோட்டுகளில் வைக்கக்கூடாது என ரிச…

  12. தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முதலாவது ஆண்ட நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது இன ஒடுக்கு முறைக்காக பாடுபட்ட நெல்சன் மண்டேலாவை நினைவு கூரும் முகமாக பிரார்த்தனை நிகழ்வுகளும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியொன்றும் நடைபெற்றன. பிரெட்டோரியா நகரில் தேசிய விடுதலை வீரர்களுக்கான சுதந்திர பூங்கா கட்டடத்தில் நெல்சன் மண்டேலாவை நினைவு கூரும் முகமாக விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அங்கு உரையாற்றிய இனத்துவ தலைவர் ரொன் மார்ட்டின் மண்டேலாவாலேயே 25 வருட ஜனநாயகம் சாத்தியமாகியுள்ளது என்று கூறினார். மேலும் 5 மீற்றர் உயமான நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலைக்கு மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. மடிபா (நெல்சன் மண்…

  13. ஃபிலிப்பைன்ஸ் நாட்டை நெருங்கிவரும் ஹகுபிட் புயலை எதிர்கொள்ள அந்நாட்டு மக்கள் தயாராகிவருகின்றனர். ஞாயிற்றுக் கிழமையன்று இந்தப் புயல் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் கடலில் தற்போது நிலை கொண்டிருக்கும் ஹகுபிட், கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று ஃபிலிப்பைன்ஸை நெருங்கிவருகிறது. கடந்த ஆண்டுதான் இந்தப் பிரதேசம் ஹையான் புயலால் சூறையாடப்பட்டது. இது நான்காம் நிலை புயலாக கடந்த சனிக்கிழமை வகைப்படுத்தப்பட்டது. தற்போதும் தற்காலிக வீடுகளில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான மக்கள், உடனடியாக முகாம்களுக்குச் செல்லும்படி கூறப்பட்டுள்ளனர். ஃபிலிப்பைன்ஸில் யோலண்டா என்று அழைக்கப்பட்ட ஹையான் புயல்தான் நிலத்தைத் தாக்கிய புயல்களிலேயே மிகச் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2013ஆம் ஆண…

  14. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்ட நிலையில், பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தன. வி.ஆர். கிருஷ்ணய்யர்: கடைக்கோடி இந்தியருக்கும் நீதி | உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் 99-வது பிறந்த நாளையொட்டி, எழுத்தாளரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ச.பாலமுருகன் எழுதி, 'தி இந்து' நாளிதழில் நவம்பர் 15,2013-ல் எழுதிய கட்டுரை இது. | நாட்ட…

  15. வண்ண ஒளியில் 'புர்ஜ் அல் அராப்' நேற்று (02-12-2014) நடைபெற்ற ஐக்கிய அமீரகத்தின் 43 வது தேசிய நாளன்று துபை ஜுமெய்ரா(Jumeirah Beach) கடற்கரையின் கரையிலிருந்து 300 மீட்டர்கள் கடலுக்குள்ளே அமைந்துள்ள உலகின் முதல் 7 நட்சத்திர ஹோட்டலான 'புர்ஜ் அல் அராப்' தனது 15 வருடத்தை எப்படி கொண்டாடியுள்ளது என்பதை இக்காணொளியில் காணலாம். யூ ட்யூப் செட்டிங்கில் ஃபுல் கெச்.டி-யில்(1080p) மாற்றி காணொளியை பாருங்கள் இன்னும் ரசிக்கலாம்.. A spectacular show - must watch..! http://youtu.be/7uLT7TZ6OCk

  16. தற்காலிக பாதுகாப்பு வீசாவை (Temporary Protection Visa) மீண்டும் அறிமுகம் செய்யும் சட்டத்தை செனட்டில் வெற்றிபெறச் செய்யும் நோக்கில், ஏற்கனவே முன்வைத்த சட்டமூலத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். அத்துடன், செனட் இந்த புதிய மாற்றத்தை ஏற்றால் வேலைசெய்ய உரிமை மறுக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க தயார் எனவும் அவர் தெரிவித்தார். நேற்று பாராளுமன்றத்தில் நடந்த சூடான விவாதத்தினை அடுத்து இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் வருகின்ற நத்தார் பெருநாளுக்கு முன்பதாக இந்த பிரேரணை வெற்றி பெற்றால் தற்போது அடிமை விசாவில் உள்ள அனைவருக்க…

  17. உலகம் முழுவதும் உள்ள 68 நாடுகளில் உள்ள சிறைகளில் 6500 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தகவலை வெளியிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “68 நாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் 6483 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அதிகபட்சமாக சவுதி அரேபிய சிறைகளில் 1469 பேர் உள்ளனர். இந்த ஆண்டு நிலவரப்படி பாகிஸ்தான் சிறைகளில் 572 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 151 பேர் விடுவிக்கப்பட்டதுபோக, தற்போது 421 பேர் உள்ளனர். 322 இந்தியர்கள் தண்டனைக் காலம் முடிந்தும் சிறைகளில் அடைப்பட்டுள்ளனர். இதில், 276 பேர் பாகிஸ்தானிலும், 43 பேர் வங்கதேசத்திலும் உள்ளனர். இந…

  18. இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் விதித்த தடை விரைவில் விலக்கிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் இந்திய மாம்பழங்கள் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் பிறப்பித்த தடையால், 28 நாடுகளுக்கு இந்திய மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் குழு அதிகாரிகள் இந்தியா வந்து, மாம்பழங்கள் பாதுகாத்து வைக்கப்படும் இடம், பெட்டக முறை, விதம் போன்றவற்றை நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கிக் கொள்ளப்படும் என்று இந்திய ஆய்வுக் கவுன்சில் இயக்குநர் எஸ்.கே. சக்சேனா கூறியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=121967&category=IndianNews&am…

  19. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க 2 ஆளில்லா குட்டி விமானம் பயன்படுத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி கூறினார். திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். திருவண்ணாமலை அருணாசலேசுவரர் மகா தீபத்திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காக, வெளிமாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை நகருக்கு வரும் வாகனங்களின் வசதிக்காகவும் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் 9 நுழைவு வாயிலிலும் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மகா தீப திருவிழாவிற்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட…

  20. இந்தியா தகுந்த ஆதாரங்களை அளித்தால், கருப்பு பணம் மீட்பு விவகாரத்தில் சுவிட்சர்லாந்து அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் லினஸ் ஓன் கேஸ்டெல்மர் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் உடனடியாக மீட்கப்படும் என தேர்தலின்போது பாஜ வாக்குறுதி அளித்தது. இதுவரை கருப்பு பணத்தை கொண்டுவரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் கருப்பு பண விவகாரம்தான் பிரதானமாக உள்ளது.வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்போரின் 627 பேரின் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமீபத்தில் சமர்ப்பித்தது. இப்பிரச்னையை தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து …

  21. திருவனந்தபுரம்: கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கம் தீவிரமாகி உள்ளதால் இரண்டரை லட்சம் வாத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம், பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துகள், கோழிகள் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தன. இதையடுத்து பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வாத்து, கோழி, முட்டைகள் கொண்டு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பறவை காய்ச்சல் தாக்கிய வாத்து, கோழிகளை உடனடியாக அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை பறவை காய்ச்சல் பாதித்த 3 மாவட்டங்களிலும் 2 லட்சத்து 60 ஆயிரம் வாத்துகள் அழிக்கப்பட்டுள்ளதாக கேரள…

  22. சீனாவில் கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் செய்தி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆகியோர் கிராமப்புற வாழ்க்கையைப் பற்றி கற்றுக்கொள்ள அவர்களை கிராமங்களில் வசிக்க அனுப்பப் போவதாக சீனா அறிவித்திருக்கிறது. கலைஞர்கள் சோஷலிஸ விழுமியங்களை பரப்புவதற்குப் பதிலாக தங்களுக்கு சொந்தப் புகழைத் தேடிக்கொள்ளும் வகையில் அருவருக்கத்தக்க கலைப் படைப்புகளை உருவாக்குகிறார்கள் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் சமீபத்தில் ஆற்றிய ஒரு உரையில் விமர்சித்திருந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வருகிறது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிபர் ஷி கருத்து மாறுபடுபவர்களையும், மேலை நாட்டு கருத்துக்கள் என்று அவர் கருதும் கருத்துக்களையும் ஒடுக்க நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறார். பல கலைஞர்கள் தங்களுக்கு உள்ள மிகப் பெரிய பி…

  23. இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இரண்டு நாடுகளின் எல்லைகளைப் பிரிக்க, கோடுகள் இருப்பது எதார்த்தமான ஒன்று. இரு நாட்டினருக்கும் பிரச்சனை ஏற்படா வண்ணம், வீரர்கள் எல்லைப் பகுதியில் எப்போதும் தயார் நிலையில், தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால் சமீபத்தில், அமெரிக்க விஞ்ஞானிகள், நாசா விண்வெளிக் கழகத்திற்கு ஒரு புகைப்படும் எடுத்து அனுப்பியுள்ளனர். அதில்தான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனென்றால், புகைப் படங்களைப் பார்த்ததும் விஞ்ஞானிகளுக்கு அவற்றில் பளிச்சென்று நீளமான ஆரஞ்சு நிறக் கோடு ஒன்று தெரிந்தது. அது, கோட்டைக் குறித்து தீவிர ஆராய்ச்…

  24. ஜெர்மனியில் 2-ம் உலக போரின் 1.8 டன் வெடிகுண்டு: செயலிழக்க செய்ய 8,500 பேர் வெளியேற்றம் ஜெர்மனியில் கட்டுமானப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட 2-ஆம் உலக போர் கால வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சுமார் 8,500 பேர் வெளியேற்றப்பட்டனர். கடந்த நவம்பர் 26-ஆம் தேதி ஜெர்மனின் மைன்ஸ்(Mainz) நகரில் நடந்துவரும் கட்டுமானப் பணியிடம் ஒன்றில் 3 மீட்டர் நீளம், சுமார் 1.8 டன் எடைகொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்த நிபுணர்கள் வெடிகுண்டு புத்துயிருடன் இருப்பதாகவும், மேலும் அது எதிர்பாராத நிலையில் வெடித்தால் மிகப் பெரிய ஆபத்து உண்டாகும் என்றும் எச்சரித்தனர். இதனை அடுத்து வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணிக்காக அந்த பகு…

  25. ஈராக்கில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 9–ந் தேதி பிடித்து, அப்போது மொசூலில் யுரேனியம் கொள்ளையடிக்கபட்டது. அங்கு இருந்த அணு ஆயுத வளாகத்தையும் கைப்பற்றினர். மொசூல் பல்கலைக்கழகத் தில் 40 கிலோ யுரேனியத்தை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொள்ளையடித்தனர். தொடர்ந்து அடுத்த இரண்டு நாளில் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித்தையும் கைப்பற்றினர். இதையடுத்து தொடர்ந்து தலைநகர் பாக்தாத் நோக்கி தீவிரவாதிகள் முன்னேறினர். கடந்த 4 மாதத்துக்கு முன்பு இணைய தளத்தில் தீவிரவாதிகள் இங்கிலாந் துக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர். அதில், ‘‘லண்டனை குண்டு வைத்து தகர்ப்போம்’’ என மிரட்டல் விடுத்து இருந்த னர். இந்த நிலையில் தற்போது வெளியான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.