Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடெல்லி, ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி சிறைபிடிப்பது வாடிக்கையாகி விட்டது. நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்றும், இன்றும் 82 தமிழக மீனவர்களை இலங்கை கற்படை கைது செய்துள்ளது. 18 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. மீண்டும் மீண்டும் இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை…

    • 1 reply
    • 437 views
  2. பாகிஸ்தான் கராய்ச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையம் மீது தீவிரவாதிகள் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு தாண்டி.. பலத்த தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதோடு சில விமானங்கள் தேசமடைந்துள்ளதாகவும்.. இன்னும் தாக்குதல் தொடர்வதோடு.. விமான நிலையம் புகைமூட்டமாக காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு சர்வதேச விமான நிலையமான இந்த விமான நிலையத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன்.. விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டுள்ளனவாம். மேலும் விமான நிலைய ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனராம். இதனிடையே தீவிரவாதிகள் விமான ஓடுபாதையிலும் தாக்குதல் நடத்தி விமானம் ஒன்றைக் கைப்பற்றி உள்ளதாகவு…

  3. இன்று Normandie தரையிறக்க 70வது ஆண்டு நாள் நினைவு கூரப்பட்டது. உலகத்தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு உலக வீரர்கள் பலரும் கலந்து தமது இனிய இளைய உயிர்களைத்தியாகம்செய்த இவ்வீர வரலாற்றை பதிந்துள்ளனர். இந்தப்போரிலே பிரான்சை ஐரோப்பாவை விடுவிக்கும் ஏன் உலகை விடுவிக்கும் இந்த போரிலே தமது இனிய இளைய உயிர்களைத்தியாகம்செய்த இவ்வீரர்களுக்கு வீர வணக்கங்கள் இந்தப்போரில் தமது உயிர்களை காவு கொடுத்த லட்சக்கணக்கான பொதுமக்களுக்கும் அஞ்சலிகள்... DEBARQUEMENT - Une journée pour l'histoire. 70 ans après le Débarquement, ce 6 juin 2014 a été l'occasion de nombreuses commémorations en Normandie. 0inShare 0 DEBARQUEMENT - Une journée pour l'histoire. 70 a…

    • 4 replies
    • 784 views
  4. தானே: மும்பை அருகே அரசு போக்குவரத்துக் கழக பேருந்தின் பெண் கண்டக்டரை பயணி ஒருவர் அடித்து உதைத்து, ஆடையை கிழித்து மானப்பங்கம் செய்ததை மற்ற பயணிகள் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை அடுத்துள்ள தானே மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்யாணிலிருந்து பன்வேல் செல்லும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இன்று காலை 8.30 மணி அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது. அந்த பேருந்தில் 34 வயது பெண் கண்டக்டர், அப்பொழுதுதான் தனது முதல் டிரிப் பணியை தொடங்கினார். இங்குள்ள பேருந்துகளில், பயணிகள் பின்பக்கமாக ஏறி, முன்பக்கமாக இறங்குவதுதான் நடைமுறையாக உள்ளது. இந்நிலையில் 30 வயதுடைய அபிஷேக் சிங் என்பவர் வழியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் வழ…

    • 4 replies
    • 1.4k views
  5. செங்கொடிமீடியா டாட் காம் புதிய இணைய தளம் கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்! செங்கொடி வெளியீட்டு நடுவத்தின், sengodimedia.com என்ற இணைய தளம் இன்று (7.6.2014) உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இன்டர்நெட் பயன்பாடு மற்றும் ஆன் லைன் வர்த்தகம் நாளுக்க நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இக் காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணையம் மூலம் ஒன்றிணைப்பதும், ஆன் லைன் வர்த்தகத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதும் இன்றியமை யாதது. இதனடிப்படையில், செங்கொடி வெளியீட்டு நடுவம் என்ற தயாரிப்பு நிறுவனம் sengodimedia.com என்ற இணைய தளத்தை உருவாக்கி உள்ளது. தமிழர் நலன் சார்ந்து உலகம் முழுவதும் இருந்து வெளிவரும் புத்தகங்கள், ஆவணப்படம்-க…

  6. கன­டாவின் மாங்டன் நகரில், இரா­ணுவ உடையில் வந்த நபர் ஒருவர், பொலிஸ் வாக­னத்தின் மீது நேற்றுமுன்­தினம் சர­மா­ரி­யாக துப்­பாக்கி சூடு நடத்­தி­விட்டு தப்­பிச் சென்றுள்ளார். இச்சம்பவத்தில் 3 பொலிஸார் பலி­யா­கியதுடன் 2 பேர் காயமடைந்­தனர். இதே­வேளை துப்­பாக்கி சூடு நடத்­திய மேற்படி நபரை தேடும் பணியில் பொலிஸார் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் ஜஸ்டின் பார்க் என்ற நபர் தனது 'பேஸ்­புக்கில்', ‘ஹூக் இன் தி மவுத்’ என்ற பிர­பல பாடல் வரி­க­ளுடன், ‘எங்­களை முட்­டா­ளாக்க முயற்­சிக்க வேண் டாம், என்ன நடக்கும் என்­பது எங்­க­ளுக்கு தெரியும். எங்­க­ளுக்கு துப்­பாக்கி வைத்துக் கொள்ள உரிமை உள்­ளது’’ என்ற தக­வலை வெளி­யிட்­டுள்ளான். மேலும் இரண்டு பேர், காட்டு பகு­தியில் துப்­பாக்…

  7. 'யுக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு உறுப்புரிமை பெற அயராது உழைப்பேன்': புதிய அதிபர் யுக்ரேனின் புதிய அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ, தமது நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக உறுதியேற்றுள்ளார். கடந்த மார்ச்சில் ரஷ்யாவுடன் இணைந்த க்ரைமியா யுக்ரேனின் அங்கமாகவே எப்போதும் கருதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தலைநகர் கியேவில் நடந்த பதவியேற்பு நிகழ்வுக்குப் பின்னர் பேசிய பொரோஷென்கோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் யுக்ரேனுக்கு முழு உறுப்புரிமை பெறுவதற்காக அயராது உழைக்கவுள்ளதாக கூறியுள்ளார். பெரும் செல்வந்தரான பெட்ரோ பொரோஷென்கோ, யுக்ரேனின் குழப்பநிலைமையை நிறுத்துவதற்கான தனது திட்டங்களையும் முன்வைத்துள்ளார். தனக்கு பழிவாங்கவோ மோதலில் ஈடுபடவோ எண்ணம் இல்லை என்றும் கூறிய…

    • 0 replies
    • 272 views
  8. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள், பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் ஜூன் 12-ம் தேதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில், உலககோப்பைக்கு எதிரான பிரேசில் மக்களின் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. தாங்கள் வறுமையில் வாடும் பொழுது, பிரேசில் அரசு கால்பந்து போட்டிகளுக்காக பலகோடிகளை வாரி இறைப்பதை கண்டித்து மக்கள் தெருவிலிறங்கி போராடி வருகிறார்கள். இந்தியாவை போன்ற ஏழைகளின் நாடான பிரேசில், உலககோப்பைக்கு என இதுவரை சுமார் $11 பில்லியன்(ரூ. 65,274 கோடி) வரை செலவிட்டுள்ளது. இதில் பழைய மைதானங்களை புதுப்பிப்பதற்கு என சுமார் 3.6 பில்லியன் வரை (ரூ.21,362 கோடி) செலவாகியுள்ளது. இது தவிர புதிதாகவும் மைதானங்கள் கட்டப்படுகின்றன. தலைநகர் பிரேசில்லாவில் கட்டப்பட்டு வரும் மே கிரின்ச்சா மைதானத்திற்கான செ…

  9. வாசிம் அக்ரம். | கோப்புப் படம் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் நாட்டுப்பற்று குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. மேலும் ஐபிஎல் அணியான கொல்கத்தாவின் பயிற்சியாளராகவும், கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணனையாளராகவும் அவர் செயல்பட்டது குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக பாகிஸ்தானில் இவரது நாட்டுப்பற்று பற்றி சிலர் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஜியோ நியூஸ் சானலில் இதைப்பற்றி வாசிம் அக்ரம் பேசுகையில், "இது போன்ற நாகரிகமற்ற கருத்துக்களை என் மீது விமர்சனமாக வைக்கும்போது எனக்கு ஆத்திரம் ஏற்படுவதுண்டு, அவர்கள் என் எதிரே இதையெல்லாம் எழுதினால் நான் இதை அவர்களைப்போலவே எதிர்கொள்வேன். பயிற்சியாளராக இருப்பது மற்றும் வர்…

  10. ஜி7 சந்திப்பில் அமெரிக்க, ஜெர்மானிய மற்றும் பிரஞ்சு தலைவர்கள் பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 அமைப்பின் உச்சமாநாடு பிரஸ்ஸல்ஸில் நடந்துவருகின்ற நிலையில், அதன் இரண்டாம் நாள் கூட்டத்துக்காக சந்திக்கும் மேற்குலகத் தலைவர்கள் யுக்ரெய்னில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றி கவனம் செலுத்தவுள்ளனர். கிழக்கு யுக்ரெய்னின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் விதமாக ரஷ்யா இனிமேலும் நடந்துகொள்ளுமானால், அதன் மீது கூடுதல் தண்டனைத் தடைகளை விதிப்பதற்கு மேற்குலக நாடுகள் தயாராக உள்ளன. இந்த சந்திப்பை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும், பிரிட்டன், பிரான்ஸ் தலைவர்களுக்கும் இடையில் பாரிஸ் நகரில் சந்திப்பொன்று நடக்கவுள்ளது. வாய்ப்பிருந்தால் ஜெர்மனியின் தலைவரும் இதில் கலந…

  11. புதுடெல்லி: தனது காலை தொட்டு வணங்கவேண்டாம் என பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 16 வது மக்களவை கூடி, புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுள்ள நிலையில், பா.ஜனதா நாடாளுமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மோடியுடன் அத்வானி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோர் எம்.பி.க்களை நோக்கி அமர்ந்திருந்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய மோடி, " உங்களுக்கு ( எம்.பி.க்கள்) வாழ்த்து தெரிவிக்கும்போதோ அல்லது மற்ற சமயங்களிலோ, எனது காலையோ அல்லது கட்சியின் மூத்த தலைவர்கள் காலையோ தொட்டு வணங்க வேண்டாம்" என அறிவுறுத்தினார். மேலும்," அவையில் பேசுவதற்கு முன்னர் பேசப்போ…

  12. நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள 4 கிராமங்களுக்குள் புகுந்து போகோஹரம் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 500 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நைஜீரியாவில் மேற்கத்திய கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போகோஹரம் இஸ்லாமிய தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள 4 கிராமங்களுக்குள் நேற்று திடீரென புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். தேவாலயங்கள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சுட்டு தள்ளியுள்ளனர். இதில் 500 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நைஜீரியாவில் கடந்…

  13. அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பொற்கோயிலில் சீக்கிய சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் வாள், கத்தி, ஈட்டியுடன் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்திய 30வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது, பொற்கோவிலை நிர்வகித்துவரும் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காலிஸ்தானுக்கு ஆதரவான சீக்கிய அடிப்படைவாத குழுவை சேர்ந்தவர்கள், சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியைச் சேர்ந்தவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுக்க முயன்றதையடுத்து இந்த மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. இர…

  14. Last updated : 15:53 (05/06/2014) புனே: ஃபேஸ்புக்கில் பால்தாக்கரேவை இழிவுபடுத்தியதாக புனேவை சேர்ந்த 24 வயது இஸ்லாமிய இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டார். கொலை செய்யப்பட்ட மொஹின் சாதிக் ஷைக் ஃபேஸ்புக்கில் மராட்டிய மன்னர் சிவாஜி புகைப்படத்தையும், சிவசேனா தலைவர் பால் தாக்கரே புகைப்படத்தையும் இழிவுபடுத்தி செய்தி வெளியிட்டாராம். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், சாதிக் தனது நண்பருடன் மசூதியில் தொழுகை நடத்தி விட்டு திரும்பும் போது ஹிந்து ராஷ்டிரா சேனா அமைப்பை சேர்ந்த 7 பேரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதனால் புனேவில் பரப்பரப்பு ஏற்பட்டது. 200க்கும் அதிகமான பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மொஹ…

  15. பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா | கோப்புப் படம் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் உறுதியானது, இரண்டு விஷயங்களை உணர்த்துகின்றன. ஒன்று, அமெரிக்க பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை பேணுவதில் மோடி கவனமாக இருக்கின்றார் என்பது. மற்றொன்று, இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய வேண்டும் என அதிபர் ஒபாமாவும் விரும்புகிறார் என்பது. செப்டம்பர் மாதம் ஐ.நா. சபை பொதுக்கூட்டம் நடைபெறுவதை ஒட்டி, அதில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் பலரும் அமெரிக்க அதிபரை சந்திக்க வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இத்தகைய சந்திப்புகளை அமெரிக்க அதிகாரிகள் பொதுவாக ஊக்குவிப்பதில்லை. அவ்வாறு அனுமதித்தால் பல்வேறு நாடுகளுக்கு அதிபருடனான சந்திப்புக…

    • 0 replies
    • 278 views
  16. தஞ்சம்கோரிகள் மீட்கப்பட்டு கொண்டுசெல்லப்படுகின்றனர் ( கோப்பு படம்) இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கொண்டுசெல்லும் வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியேறிகள் கடலில் மூழ்கி உயிரிழக்கக் காரணமான மனிதக் கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் கொண்டிருந்த தொடர்புக்காக இரண்டு இந்தோனிசியர்களுக்கு நீண்ட சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சிறிய மரப் படகு ஒன்றில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கொண்டு செல்லும் வழியில் இந்து சமுத்திரத்தில் இந்தப் படகு கவிழ்ந்தது. அந்த படகோட்டிகளுக்கே ஆஸ்திரேலியாவின் பேர்த் நகர நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 9 ஆண்டுகளும் மற்றையவருக்கு 6 ஆண்டுகளும் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந…

    • 0 replies
    • 328 views
  17. இந்தூர்: " பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்புவர்கள் டெல்லியில் போய் தங்குங்கள்" என்று முலாயம் சிங் யாதவ் கூறியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள ம.பி. உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர், "பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்கள் அதுகுறித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்துவிட்டா அக்குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்" என்று எகாத்தளமாக கேட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்தவாரம் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிட்ட சம்பவத்தின் அதிர்வலைகள் ஓய்வதற்குள் மேலும் பல பலாத்கார சம்பவங்கள் அங்கு அரங்கேறின. இதனால் உத்தரபிரதேச மாநில அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நி…

  18. கவுகாத்தி:அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து, அசாம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஊடுருவி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வங்கதேசத்தவருக்கு, அசாம் மாநில, பா.ஜ., - எம்.பி.,க்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளனர்.''15 நாட்களுக்குள் நீங்களாக அசாமிலிருந்து வெளியேறி விடுங்கள்; இல்லையேல், வீடுவீடாக சோதனை நடத்தி, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர் அனைவரையும் அப்புறப்படுத்துவோம்,'' என, ஜோர்ஹத் தொகுதி, பா.ஜ., - எம்.பி., தெரிவித்துள்ளார். அந்த குரலுக்கு வலு சேர்க்கும் வகையில், மத்திய அரசும், வங்கதேசத்தவர் ஊடுருவலை, 'தேசிய பிரச்னை' என, நேற்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அசாம…

    • 0 replies
    • 738 views
  19. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், வரும் 12-ம் தேதி முதல் ஜூலை 13-ம் தேதி வரை தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளை காண வெளிநாடுகளைச் சேர்ந்த 30 லட்சத்து 70 ஆயிரம் ரசிகர்கள் பிரேஸிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கால்பந்து விளையாட்டின் மீது தங்களின் உயிரையே வைத்திருக்கும் பிரேஸில் ரசிகர்களுக்கு, உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தங்கள் நாட்டில் நடக்கிறதென்றால், கேட்கவா வேண்டும்? மகிழ்ச்சியில் திளைத்து வரும் அந்நாட்டு ரசிகர்கள், போட்டி தொடங்கும் நாளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, அந்நாட்டில் உள்ள 10 லட்சம் பாலியல் தொழிலாளிகளும் போட்டியை வரவேற்க தயாராகி வருகின்றனர். பெலோ ஹாரிஸான்டே நகரைச் சேர்ந்த பெயர் வெளியிட விரு…

    • 0 replies
    • 437 views
  20. ஆப்கானிஸ்தானில் கடந்த 5 வருடங்களாக தலிபான் போராளிகளால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் படைவீரரான போவ் பேர்கடாஹ்லை அமெரிக்கப் படையினரிடம் கையளிக்கும் வீடியோ காட்சியை போராளிகள் வெளியிட்டுள்ளனர். கௌதமாலாபேயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 கைதிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக மேற்படி அமெரிக்க படை வீரரை போராளிகள் சனிக்கிழமை விடுதலை செய்துள்ளது. படைவீரரை விடுவிப்பதற்கு பதிலாக கௌதமாலாவிலுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கைதிகளின் விடுதலையானது அமெரிக்கர்களது வாழ்வை அபாய நிலைக்குள் தள்ளக்கூடியது என அமெரிக்கக் குடியரசு கட்சியினர் எச்சரித்துள்ளனர். http://virakesari.lk/articles/2014/06/04/%E0%…

    • 0 replies
    • 485 views
  21. மக்களவையில் கடைசி பெஞ்சில் காந்தி குடும்ப வாரிசுகள் புதன் கிழமை இன்று கூடிய 16வது மக்களவயில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சியினர் அமரும் இருக்கை வரிசையில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தார். சசி தரூர், அச்ரூர்-உல்-ஹக் ஆகியோருடன் ஒன்பதாவது வரிசையில் கடைசியில் அவர் அமர்ந்திருந்தார். எதிர்க்கட்சியினர் அமரும் வரிசையில், காங்கிரஸ் தலைவரும் மக்களவை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, வீரப்ப மொய்லி, கே.எச். முனியப்பா ஆகியோர் அமர்ந்திருந்தனர். அதேபோல, காந்தி குடும்ப வாரிசான பாஜகவைச் சேர்ந்த வருண் காந்தியும் ஆளும்கட்சி வரிசையில் கடைசி பெஞ்ச்சில் அமர்ந்திருந்தார். இந்தத் தேர்தலில் ராகுல் காந்தி…

  22. நேருவுடன் திபேத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா ( ஆவணப்படம்) சீனாவின் ஆளுகைக்குள் இருக்கும் திபெத்திய மாகாணத்தில் வசிக்கும் மக்களுக்கு மேலும் கூடுதல் சுயாட்சி அதிகாரங்களை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு உலக மக்களின் ஆதரவைத் திரட்ட புதிய பிரசார முயற்சி ஒன்றை நாடுகடந்த திபெத்திய அரசு தொடங்கியிருக்கிறது. திபெத்திய நாடுகடந்த அரசின் கொள்கையான, "மைய வழி" என்ற கொள்கையைப் பற்றி சீன அரசு நடத்தி வரும் பொய்ப்பிரசார முயற்சியை முறியடிப்பதற்காக இந்த நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டிருப்பதாகத் திபெத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களது இந்த "மைய வழிக்" கொள்கை, திபெத்துக்கு உண்மையான சுயாட்சியைக் கோருகிறது, சீனாவிடமிருந்து சுதந்திரத்தை அல்ல . சீனாவின் கட்டுப்பாட்டில் 1950களிலிருந்…

    • 0 replies
    • 206 views
  23. தென் அமெரிக்கக் கண்டத்தில் இரு தீவுகளைக் கொண்ட நாடு டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு. இத்தீவுகளில் ஆரம்பத்தில், அமெரிக்கப் பழங்குடியினர் வசித்தனர். ஐரோப்பியர்களின் ஆதிக்கத் துக்குள் இந்த நாடு வந்தபோது, இங்கு வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க, சீன, போர்த்துக்கீசிய, இந்திய நாடுகளில் இருந்து மக்கள் கொண்டுவரப்பட்டனர். 1820-களில் இந்தியர்களை ஏமாற்றி வெளிநாட்டு வேலைகளுக்கு அழைத்துச் செல்வது பெரும் தொழிலாக இருந்தது. மக்களும் பிழைப்புக்காக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற தவிப்பில் இருந்தனர். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகள், மற்றும் கங்கைச் சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றனர். இந்தியர்களை அடிமைத் தொழிலாளர்களாக விற்பனை செய்யும் தொழிலை …

  24. முன்னுரிமை திட்டங்கள்: அரசுத்துறை செயலாளர்களுடன் மோடி சந்திப்பு புதுடெல்லி, ஜூன் 4- பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று அனைத்து துறை செயலாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தனது ஆட்சியின் செயல்திட்டங்கள் மற்றும் கொள்கை முன்னுரிமைகளை செயல்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அவர்களிடம் தான் எதிர்பார்க்கும் அம்சங்களை முன்வைக்கும்படி உத்தரவிட்டார். துறை வாரியாக முன்னுரிமை திட்டங்கள் பற்றியும் இக்கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிகிறது. தொடர்புடைய அமைச்சகங்களை இணைத்து 16 குழுக்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம், உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி, பாதுகாப்புத்துறை ச…

  25. உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு ஊடகங்களே காரணம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஆண் பெண் உறவில் இருக்கும் பிரச்சனை சில சமயம் பொதுவில் வரும்போது அவை பாலியல் குற்றமாக பார்க்கப்படுகின்றன என்றும் சமாஜ்வாதி தலைவர் ராம் கோபால் யாதவ் கூறியுள்ளார். உ.பி-யில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களாலும் முன்னிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் சமாஜ்வாதி தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், டிவி சானல்களில் காண்பிக்கப்படும் வன்முறை, ஆபாசம் மற்றும் வக்கிரமான நிகழ்ச்சிகளே இத்தகைய குற்றங்களுக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் கூறியத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.