Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விமானம் திரும்பியிருக்கலாம் எனத் தெரிவதை அடுத்து தேடும் பரப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல்போய் 24 மணி நேரங்களுக்கு அதிகமாகியும் அதன் கதி தெரியாமல் இருந்துவருகின்ற சூழலில், அது தனது திட்டமிட்ட பயணப் பாதையில் இருந்து திரும்பி வந்திருக்கலாம் என்று மலேசிய அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே விமானத்தை தேடிவரும் மீட்புக் குழுக்கள் தாம் தேடிவருகின்ற இடத்தை விஸ்தரித்துள்ளனர். இந்த விமானம் பயணப் பாதையில் திரும்பியிருக்க வாய்ப்பு உள்ளதாக ராடார் சிக்னல்கள் காட்டுவதாக மலேசிய விமானப்படை தலைவர் ரோத்ஸலி தாவுத் கூறினார். "மலேசியன் ஏர்லைன்ஸில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததில்லை" அந்நிறுவனத்தில் விமான சிப்பந்தியாக பணியாற்றியிருந்த வனிதா சுபா…

    • 4 replies
    • 840 views
  2. தேடுவாரின்றி இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைமையகம்! [sunday, 2014-03-09 19:29:02] பாராளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சி அலுவலகங்களுமே களை கட்டி காணப்படுகின்றன. ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், ஆள் ஆரவார மின்றி எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அ.தி.மு.க. அல்லது தி.மு.க. ஆகிய கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்து வந்துள்ளது.பெரும்பாலான தேர்தல்களில் இக்கூட்டணியே வெற்றியும் பெற்று வந்துள்ளது. ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனியாக தேர்தல் களத்தில் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. …

  3. விசாகப்பட்டினத்தில் நீர்மூழ்கி தளத்தில் மற்றொரு விபத்து! – இரண்டு வாரங்களில் மூன்றாவது சம்பவம். [sunday, 2014-03-09 19:14:58] விசாகபட்டினத்தில் கடற்படை தளத்தில் நீர்மூழ்கி கப்பல் பணியின்போது குழாய் வெடித்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர். விசாகபட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் ஐஎன்ஸ் அரிகந்த் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இரண்டு அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்குள் மூன்றாவதாக மேலும் ஒரு விபத்து நேற்று ஏற்பட்டது. நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரையில் அணு ஆயுத சோதனை கூடத்திற்கு அமைக்கப்படும் குழாய்களில் நீர் அழுத்த பரிசோதனையின் போது குழாய்கள் …

  4. விடுதலை புலிகள் இயக்கம் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர் இந்திராகாந்தி: - வாழ்த்து விழாவில் ராம்ஜெத்மலானி [sunday, 2014-03-09 14:53:39] சீனா, பாகிஸ்தான் நாடுகள் இலங்கையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திவிடக்கூடாது என்பதற்காக விடுதலை புலிகள் இயக்கம் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர் இந்திராகாந்தி என இந்திய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் வாதாடி வழக்கில் வெற்றி பெற்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானிக்கு, ம.தி.மு.க.வின் மறுமலர்ச்சி வழக்கறிஞர் பேரவை சார்பில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவி…

    • 3 replies
    • 503 views
  5. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பேருடன் மாயம்! March 8, 2014, 8:50 [iST] கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் இன்று அதிகாலை மாயமாகியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு எம்.எச்.370 என்ற போயிங் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் 12 ஊழியர்கள் மற்றும் 227 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், விமானம் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது. தற்போது, மாயமான எம்.எச்.370 போயிங் விமானத்தையும் அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் மல…

  6. கனடாவில் பயிற்சி பெற்று வந்த ரஸ்யப் படையினரை 24 மணிநேரத்துக்குள் வெளியேற உத்தரவு! [saturday, 2014-03-08 21:26:17] கனடாவில் இராணுவப் பயிற்சி பெற்றுவந்த ரஸ்யப் படையினரைத் திருப்பி அனுப்ப கனடா முடிவு செய்துள்ளது. கனடியப் பிரதமர் ஹாப்பர் ரஸ்யாவுடனான இருதரப்பு இராணுவ நடவடிக்கைகள் யாவற்றையும் நிறுத்தியதையடுத்து, ரஸ்யத் துருப்புக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது. கனடாவில் 9 ரஸ்ய இராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். அவர்களே திருப்பி அனுப்பப்படவுள்ளனர். கியூபெக்கிலுள்ள 6 ரஸ்ய வீரர்களை 24 மணித்தியாலத்திற்குள் கனடாவை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் விகாரத்தில் ரஸ்யா தலையிட்டதை அடுத்து இந்த நலை ஏற்பட்டுள்…

  7. பீர் பாட்டில்களை கனடா பிரதமருக்கு அனுப்புகிறார் பெட் கட்டித் தோற்ற ஒபாமா ! பெட் வைத்துத் தோற்பதில் நீங்கள் மட்டும்தான் மோசம் என்று நினைக்காதீர்கள் . அமெரிக்க அதிபரும் இதற்கு விதி விலக்கு இல்லை போல் தெரிகிறது. ஐஸ் ஹாக்கி போட்டியில் அமெரிக்க அணி ஜெயிக்கும் என்று கனடா பிரதமருடன் பந்தயம் கட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா தோற்றுவிட்டார். பெட் வைத்துத் தோற்ற பின்னர், அதற்காக பெட் வைத்த இரண்டு கேஸ் பீர் பாட்டில்களை திங்கட்கிழமை கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கு அனுப்புகிறார் ஒபாமா. அமெரிக்க ஆண்கள் அணி மழைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் கனடா அணியால் தோற்கடிக்கப்பட்டது. அமெரிக்கப் பெண்கள் அணியும் கனடா பெண்கள் அணியிடம் இறுதிப் போட்டிகளில் தோற்றது…

  8. பீஜிங்: உலகின் மிக உயரமான இடத்தில், ரயில் பாதையை அமைத்துள்ள சீனா, அந்த ரயில் பாதையை, இந்திய எல்லை வரை நீட்டித்துள்ளது. ரயில் பாதை அமைப்பதில், உலக நாடுகளில், சீனா முன்னோடியாக உள்ளது. மற்ற நாடுகளிலும், சீனா ரயில் பாதை அமைத்து தரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, சீனா, ஷாங்காய் மற்றும் திபெத்திற்கு இடையில் அமைத்துள்ள ரயில் பாதையை, பஞ்சன் லாமாவில் இருந்து, ஷீகாஜ் வரை நீட்டித்துள்ளது. இந்தியாவின், சிக்கிம் மாநிலத்திற்கு அருகில், ஷீகாஜ் எல்லை உள்ளது. புதிய ரயில் தடத்தால், லுகாசாவில் இருந்து, 253 கி.மீ., தூரத்தில் உள்ள, ஷீகாஜ்ஜை, பயணிகள், இரண்டு மணி நேரத்தில் சென்றடைவர். அக்டோபர் முதல் வாரத்தில், செயல்படத் துவங்கும் இந்தப் பாதையின் பணிகள், 93 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக, சீ…

  9. டெல்லி: யுபி குழுமத் தலைவர் விஜய் மல்லையாவின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியுள்ளனர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள். கடந்த 18 மாதங்களாக சம்பளமே தராமல் தன் இஷ்டத்திற்கு தாறுமாறாக வாழ்க்கை நடத்தி வரும், ஐபிஎல் கிரிக்கெட்டில் பணத்தைக் கொட்டி வரும், கவர்ச்சிப் பெண்களின் படத்தை வைத்து காலண்டர் போட்டு வரும் மல்லையாவின் முகம் இந்தப் பெண்களின் பகிரங்க கடிதத்தால் மேலும் மோசமாக சிதைந்துள்ளது. நாளை மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்தப் பெண் ஊழியர்கள் மல்லையாவின் மறுபக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். பகிரங்க கடிதம்: தாங்கள் எந்த அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதை மல்லையாவுக்கே பகிரங்க கடிதம் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந…

  10. மும்பை: மும்பையில் கடற்படைக்கு கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். மும்பையில் உள்ள மாஸ்கோனில் கடற்படைக்காக கப்பல் கட்டும் தளம் இயங்கி வருகிறது. இங்கு கடற்படைக்காக கப்பல் கட்டும் பணி இன்று நடந்து வந்தது. இந்நிலையில் அந்த கப்பலில் திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கப்பலில் வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், வாயு கசிவு ஏற்பட்டதால் சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் கடந்த 26ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. http://news.vikatan.com/article.php?module=news&aid=25432

  11. சென்னை: விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அக்கட்சியின் அவசர கூட்டம் திருமாவளவன் தலைமையில் நாளை சென்னையில் நடைபெறுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார். ஆனால் விழுப்புரம் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே விடுதலை சிறுத்தை கட்சி தோல்வி அடைந்தது. இதனிடையே, தி.மு.க. கூட்டணியில் இருந்த பல கட்சிகள் வெளியேறிய நிலையில், விடுதலை சிறுத்தை மட்டுமே நிலைத்திருந்தது. ஆனால், தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.…

  12. ரஷ்யாவுக்கு பதிலடி தர மேற்கு பகுதியில் உக்ரைனும் ராணுவம் குவிப்பு! [Monday, 2014-03-03 10:36:54] ரஷ்யாவுக்கு பதிலடி தர உக்ரைனும் தனது ராணுவ படைகளை குவித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனில் சேர்க்க அந்நாட்டு அதிபராக இருந்த விக்டர் யனுகோவிச் மறுப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கலவரம் வெடித்தது. அதிபர் பதவியிலிருந்து விக்டர் யனுகோவிச் நீக்கப்பட்டு, இடைக்கால அதிபராக துர்ஷிநோவ் பதவியேற்றார். பதவி பறிக்கப்பட்ட விக்டர் யனுகோவிச் தலைமறைவானார். ரஷ்யாவின் தீவிர ஆதரவாளரான இவரை காப்பாற்றுவதற்காக, ரஷ்ய அதிபர் புடின் தனது ராணுவத்தை உக்ரைனுக்கு அனுப்பி வைத்ததா…

    • 26 replies
    • 2.1k views
  13. மீரட்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் 67 பேரை மீரட் தனியார் பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், அவர்கள் மீது பிரிவினை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், மீரட்டில் உள்ள ஒரு (தனியார்) சுவாமி விவேகனந்தா சுப்ராதி பல்கலைக்கழகத்தில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் 67 பேர் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினர். பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து காஷ்மீர் மாணவர்கள், விடுதியிலும் வளாகத்திலும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடை…

    • 2 replies
    • 573 views
  14. கிரீமியா: உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீமியா ரஷியாவுடன் ஓர் மாகாணமாக இணைய திடீர் முடிவு செய்துள்ளது. ரஷியாவுடன் இணைப்பது குறித்து வரும் 16-ந் தேதி வாக்கெடுப்பு நடத்த கிரீமியா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தார் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச். இதனால் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் ரஷியாவில் அடைக்கலமானார். இதையடுத்து உக்ரைனில் புதிய அரசு அமைந்தது. ஆனால் ரஷியாவோ உக்ரைனின் கிரீமியா என்ற சுயாட்சி பிராந்தியத்தை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச மோதலாக உருவெடுத்தது. கிரீமியா மீதான தமது மேலாதிக்கத்தை ரஷியா விட்டுக் கொடுப்பதாக இல்லை. ஆனால் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ரஷியாவ…

  15. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா நேற்று முதல் புதிய honey blonde சிகையலங்காரத்திற்கு மாறியுள்ளார். இவருடைய புதிய தோற்றத்தை அமெரிக்க ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுத்து தங்கள் பத்திரிகைகளில் வெளியிட்டு வருகின்றன. மிச்சேல் ஒபாமா நேற்று மியாமியில் உள்ள Jessie Trice Community Health Care Center என்ற தனியார் நிறுவன அழகு நிலையத்திற்கு சென்று தன்னுடைய முகத்தின் வடிவத்திற்கு ஏற்றப்டி எவ்வாறு சிகையலங்காரத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று ஆலோசித்து honey blonde ஸ்டைலை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. புதன்கிழமை மாலையில் தனது சிகையலங்காரத்தை மாற்றிய மிச்சேல் ஒபாமா மாலையில் தனது புதிய ஹேர்ஸ்டைலுடன் வெளியே வந்தார். அவருடைய புதிய ஹேர்ஸ்டைலை வித்தியாசமாக கவனித்…

  16. இங்கிலாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள Northumberland என்ற பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது சுமார் 7000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த விலங்குகளின் பாதச்சுவடு கிடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனுடன் மனிதனின் காலடியும் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. Northumberland என்ற பகுதியில் உள்ள Druridge Bay என்ற கடல்பகுதிஅருகேதான் இந்த கால்தடங்கள் கிடைத்துள்ளன. இதன் காலம் கண்டிப்பாக 7000 வருடங்களுக்கு முந்தையது என்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.கடந்த வருடம் இங்கிலாந்து நாட்டின் Low Hauxley என்ற பகுதியில் கிடைத்த காலடித்தடங்களுக்கும், தற்போது கிடைத்த காலடித்தடங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதால், இரு குழுவினர்களும் ஒரே…

    • 0 replies
    • 396 views
  17. இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மீது தேசதுரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் ஆட்டம் ஒன்றின்போது பகையாளி நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்காக இவர்கள் மீது இக்குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்ற வாரக் கடைசியில் ஆசியக் கோப்பை ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணியினர் இந்தியாவைத் தோற்கடித்ததை அடுத்து உத்தரப் பிரதேசத்தின் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வந்த அறுபதுக்கும் அதிகமான மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தனர். தேசத்துக்கு எதிரான செயலில் அம்மாணவர்கள் ஈடுபட்டனர் என்று கூறி அப்படியான ஒரு குற்றச்சாட்டு அவர்கள் மீது கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். இந்தக் குற்…

  18. திராவக வீச்சால் பாதித்தவர்களுக்காக போராடிய லட்சுமிக்கு அமெரிக்காவில் வீரப்பெண் விருது! [Thursday, 2014-03-06 12:26:56] உலக அளவில் துணிச்சலான செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு, ஆண்டுதோறும் சர்வதேச வீரப்பெண்மணி என்ற விருதை அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு, இந்த விருதுக்காக இந்தியாவில் தலைநகர் டெல்லியை சேர்ந்த லட்சுமி என்ற 25 வயதுப் பெண் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.லட்சுமிக்கு 16 வயதாக இருந்தபோது, காதலிக்க மறுத்ததால் 32 வயது வாலிபர் ஒருவர் (லட்சுமியின் தோழியின் சகோதரர்) அவர் மீது திராவகம் வீசினார். இதனால் அவருடைய முகம் உருக்குலைந்து போனாலும் மனம் தளராத அவர், இதுபோன்ற திராவகம் வீச்சு சம்பவத்துக்கு முடிவு கட்ட இயக்கம் ஒ…

  19. ஸ்னோடனை அமெரிக்காவுக்கு அழைத்துவருகிறது, தொழில்நுட்பம்! [Thursday, 2014-03-06 12:49:28] அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோடன் அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைக்க முடியாது (வைக்கலாம், கைது செய்யப்படுவார்) என்ற நிலையில், அவரை அமெரிக்காவுக்கு அழைத்துவருகிறது, தொழில்நுட்பம்! அமெரிக்காவில் பிரைவசி, மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடைய மாநாடு ஒன்றின் இந்த ஆண்டு பேச்சாளர்கள் பட்டியலில், எட்வார்ட் ஸ்னோடனின் பெயர் உள்ளது. அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் நடைபெறவுள்ள Southwest Interactive Festival-ல், இந்த பிரைவசி, மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடைய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஸ்னோடன் இங்கு உரையாற்றுவார் எனவ…

  20. மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளுமே தங்கள் கூட்டணியை ஏறத்தாழ முடிவு செய்துவிட்ட நிலையில், காங்கிரஸ் தனித்துவிடப்படுகிறது. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு கதவுகள் மூடப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு முக்கிய கட்சிகள் அனைத்துமே ஆரம்பத்தில் இருந்தே தயக்கம் காட்டி வந்தன. பாஜக கூட்டணியில் மதிமுக மட்டும் உறுதியாக இணைந்துள்ளது. தேமுதிக, பாமக கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடிக்கிறது. எனினும், தேமுதிகவோ அல்லது பாமகவோ காங்கிரஸிடம் பேசுவதற்கே வாய்ப்பிலாத நிலை இருக்கிறது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால், தங்களுக்கு உள்ள மக்கள் ஆதரவும் கிடைத்திடாமல் போய்விடும் என தமிழக கட்சிகள் முடிவு செய்ததால்தான் அக்கட்சிக்கு இந்த நி…

  21. இந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகதி வேட்பு மனுத் தாக்கல் 81 கோடி பேர் வாக்களிக்க தகுதி 9 கட்டங்களாக நடத்த முடிவு 2014ஆம் ஆண்டிற்கான இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி முதல் மே 12ஆம் திகதி வரை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித் துள்ளது. இந்த தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்படும் என்பதுடன், தமிழகத்தின் புதுவை மாவட்ட உட்பட தமிழகமெங்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மே மாதம் 16ம் திகதி நடைபெறும் என்பதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 5ஆம் திகதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும் இந்திய பிரதம தேர்தல் ஆணையாளர் வீ. எஸ். சம்பத் அ…

    • 0 replies
    • 359 views
  22. பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை மீறி மீண்டும் தலிபான் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ரத்தம் தோய்ந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாதிகளின் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும்விதமாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் அவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் போராளிகள் தாங்கள் கடத்திச் சென்ற துணை ராணுவத்தினர் 23 பேர் கொல்லப்பட்ட விபரத்தை வெளியிட்டபோது பேச்சுவார்த்தை பாதியில் முறிந்துபோனது. கடந்த வார இறுதியில் போராளிகள் இயக்கமான டெஹ்ரிக்-இ-தலிபான் ஒரு மாத போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு பிரதிநிதிகளும் நேற்று அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெஷாவரிலிருந்து 50 கி.மீ தொலைவ…

    • 0 replies
    • 278 views
  23. எவரெஸ்ட் மலைச்சிகரத்துக்கு இம்முறை வசந்த காலத்தில் செல்லும் மலையேறிகளும் அவர்களின் ஆதரவு அணியினரும் திரும்பிவரும்போது, ஆளாளுக்கு குறைந்தது 8 கிலோகிராம் குப்பைகளை அள்ளிவருவார்கள் என்று நேபாள அரசாங்கம் கூறியுள்ளது. மௌன்ட் எவரெஸ்ட் பேஸ் கேம்ப்- என்ற 5,300 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள தளத்துக்கு மேல் செல்லும் எல்லோருக்கும் இந்தப் புதிய சட்டவிதி பொருந்தும் என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். மலைச் சிகரங்களில் கழிவுப் பொருட்கள் குவிந்துவருகின்றமை தொடர்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர் உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்டின் மீதும் அதனைச் சூழவும் கழிவுப் பொருட்கள் குவிந்துவருகின்றமை தொடர்பான கவலைகளை அடுத்தே அரசு இ…

    • 2 replies
    • 433 views
  24. அமெரிக்காவில் பொதுமக்களை விட இராணுவத்தினருக்கே மனநோய் அதிகம்! - ஆய்வில் அதிர்ச்சித் தகவல். [Tuesday, 2014-03-04 18:59:44] அமெரிக்காவில் மனநலம் குறித்த மிகப்பெரிய ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளின் மூலம் பொதுமக்களைவிட அந்நாட்டின் ராணுவத்தினர் பல வகையான மன நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்கொலை முயற்சிகள் மற்றும் இறப்புகள் தொடர்பான ஆய்வு கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியான மூன்று அறிக்கைகளில் ஜமா மனநல இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கைகளில் இரு பிரிவினருக்கும் இடையே காணப்படும் நோய் விகிதங்கள் குறிப்பிடத்தக்கதாக இருப்பதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூத்த எழுத்தாளரும், ஹார்வர்ட் மருத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.