Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லாலுபிரசாத்தின் கால்களை கழுவிய போலீஸ் அதிகாரி! பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மாட்டுத்தீவன வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த திங்கட்கிழமை அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவர், முதலில் கோவிலுக்கும் அதன்பின்னர் வீட்டிற்கும் செல்வதாக பயண திட்டம் வகுக்கப்பட்டது. பயணதிட்டத்தின்படி லாலு சிறையில் இருந்து வெளியில்வந்த உடன் தேவ்ரி கோவிலுக்கும் பி்னனர் ராம்கர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள சின்னாமஸ்தா கோவிலுக்கும் சென்றார். சின்னாமஸ்தாகோவிலுக்கு லாலு முயன்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி ரேங்கில் உள்ள அசோக்குமார் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் லாலுவின் கால்களை தண்…

  2. சிங்கப்பூரில் கடந்த 8-ந் தேதி அன்று நடந்த வாகன விபத்தில் தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியானார். இதைத் தொடர்ந்து அங்கு பெரிய அளவில் கலவரம் மூண்டது. சுமார் 40 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீசார் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கலவரப்பகுதியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் கொள்கை விதிகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்தது. கலவரத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 53 பேரை நாடுகடத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதில் 52 பேர் இந்தியர்கள் ஆவர். ஒருவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர். விரைவில்…

  3. தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !! இந்தியாவின் தூதரக அதிகாரி தேவயாணி மீது அமெரிக்க அரசு சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது . அவர் அமெரிக்க சட்டத்தை மீறியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து அவரை கைது செய்துள்ளது. மேலும் தேவயாணியை அமெரிக்க அதிகாரிகள் தேடுதல் என்ற பேரில் அவமானப்படுத்தியுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.இதற்கு இந்தியா தனது பங்கிற்கு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் அனைத்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் பொருந்திய அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க கேட்டுள்ளது இந்திய அரசு. அமெரிக்கா தூதரகத்தை சுற்றியுள்ள பாதுகாப்பை நீக்கியுள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்ம…

  4. ஹாலிவூட்டிலிருந்து நாம் கற்றுக் கொண்டது என்ன எனும் தொணிப்பொருளில்#HollywoodTaughtUs எனும் சொல் நேற்று டுவிட்டரில் படு பிரபலமாகியிருந்தது. நகைச்சுவையாகவும் சிந்திக்கவைக்கும் வகையிலிருந்த இந்த சொல்லுக்கு ஏன் அவ்வளவு மவுசு என அலசிப் பார்த்தால் யாரோ ஒருவர் டுவிட்டரில் பதிருந்த இந்த புகைப்படம் தான் காரணம். இதன் தமிழ் மொழியாக்கம் இது. அமெரிக்க திரைப்படங்கள் உங்களுக்கு கற்றுத்தரும் 5 விடயங்கள் : 1.குங்ஃபூவை கற்றுக் கொடுப்பததையோ, குங்ஃபூ பயிற்சி மேற்கொள்வதையே தவிர சீனர்கள் வேறென்றும் மிகச்சிறப்பாக செய்ய முடியாதவர்கள். 2.அமெரிக்காவின் 50% வீதமான பொதுமக்கள், FBI அல்லது CIA ஆக மறைமுகமாக வேலை செய்பவர்கள். 3.அமெரிக்கப் பள்ளிகளின் முக்கிய நோக்கமே பாஸ்கட் போல் மற்றும் பேஸ்…

  5. OHEA எனும் ஸ்பெயின் நிறுவனம் இந்த மின் கட்டிலை உருவாக்கியுள்ளது. நித்திரையின் பின்னர் மறுநாள் காலை இக்கட்டிலின் போர்வைகள் எப்படி கசங்கியிருந்தாலும், தானாக சரிசய்துவிடுகிறது. 50 செக்கன்களுக்குள் வேலை முடிந்துவிடுகிறது. தானாக இயங்குவதற்கும், மெனுவலாக இயங்குவதற்கும் இரண்டு பட்டன்கள் உள்ளன. Automatic ஐ அழுத்திவிட்டீர்கள் என்றால் படுக்கையை விட்டு நீங்கள் எழுந்த 3 செக்கனில் தானாக சரிசெய்ய ஆரம்பித்துவிடும். இன்னமும் இக்கட்டிலுக்கு விலை நிர்ணயிக்கபப்டவில்லை. விரைவில் சந்தைக்கு வரும் என்கிறார்கள். அங்கு கைவைத்து, இங்கு கைவைத்து, இப்போது படுக்கை வரை மின் இயந்திரங்கள் ஆக்கிரமித்துவிட்டன. நீங்கள் மகா சோம்பேறியாவதற்கு இந்த புதிய தொழில்நுட்பத்தை விட வேறென்ன தேவை? http://ww…

  6. இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் இறந்தே பிறந்த பரிதாபம். போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 28 வயது பெண் ஒருவருக்கு 10 குழந்தைகள் இறந்தே பிறந்த பரிதாபம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள கோட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு குஷ்வாஹா(28). கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ரேவா மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதித்தனர். முன்னதாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவருக்கு இறந்தே 9 குழந்தைகள் பிறந்தன. மருத்துவமனையை அடைந்ததும் அஞ்சுவின் கணவர் சஞ்சய் 9 குழந்தைகளின் சடலங்களை மருத்துவர்களிடம் காட்டியபோது அவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அஞ்சுவை பரிசோதனை …

  7. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் லஷ்கர் இ தொய்பா தளபதியாக இருப்பவன் ஜாவித் பலூசி. இவனது நடவடிக்கைகளையும், தொலைபேசி பேச்சுக்களையும் கடந்த சில மாதங்களாக மத்திய உளவுத்துறையினர் கண்காணித்து வந்தனர். டெல்லி, ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசத்தில் உள்ள சிலருடன் ஜாவித் பலூசி அடிக்கடி பேசுவதை உளவுத் துறையினர் கண்டு பிடித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட வேட்டையில் அரியானாவில் உள்ள மேலட் பகுதியில் கடந்த வாரம் முகம்மது ஷாகித் என்ற முக்கிய தீவிரவாதி பிடிபட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட போது, டெல்லியில் முக்கிய அரசியல்வாதிகளை கடத்தி செல்ல லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இந்த கடத்தல் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி ம…

  8. சீனாவின் ஜேட் ராபிட் உலாவி, நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக, அதை நிலவில் இறக்கிய கலனிலிருந்து விலகி சென்றிருக்கிறது. இந்தக் கலன் நிலவில் இறங்கிய சில மணி நேரங்களில் இது நடந்திருக்கிறது. நிலவின் மேற்பரப்பில் சீனாவின் ஆளில்லா வாகனம் ( வரையப்பட்ட சித்திரம்) சீனாவின் ஜேட் ராபிட் உலாவி, நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக, அதை நிலவில் இறக்கிய கலனிலிருந்து விலகி சென்றிருக்கிறது. இந்த ஆளில்லா வாகனம் , இறக்கும் கலனால் திறந்துவிடப்பட்ட ஒரு சரியும் தகட்டின் மூலம் இறங்கி வானவில் குடா என்று அறியப்படும் எரிமலைச் சமவெளியை நோக்கி உருண்டோடியது. அங்கு அது மூன்று மாதங்கள் வரை அறிவியல் தகவல்களைச் சேகரிப்பதுடன், கனிமங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது பற்றியும் ஆராயும். இந…

  9. டெல்லி: பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி வரும் ஜனவரி 17ம் தேதி கூடும் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில், மிசோராம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கான செமிபைனல் என்றே 5 மாநில தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் இந்நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம…

  10. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்தியர்கள் 5 பேரை அத்துமீறி ஊடுருவி வந்து சீனப் படையினர் பிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லடாக்கின் சுமர் பகுதியில் இந்தியர்கள் 5 பேர், தங்களது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்தியப் பகுதிக்குள் பல கிலோ மீட்டர் தூரம் சீனப் படையினர் ஊடுருவி வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த இந்தியர்கள் 5 பேரையும், அவர்களின் கால்நடைகளையும் தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள முகாமுக்கு பிடித்துச் சென்றனர். இதுபற்றிய தகவலின்பேரில் 5 பேரையும் விடுவிக்க இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க கொடி அமர்வுக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், இந்தப் பிரச்னை உயர்நிலை அ…

  11. டெல்லி: நரேந்திர மோடியை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே பாஜக கூட்டணி வைக்கும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் ஏன் கூட்டணி கிடையாது என்பதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவற்றுடன் கூட்டணி கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் இன்று டெல்லியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி. அவரை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே பாஜக கூட்டணி வைக்கும். திமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஒரே அணியில் இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் இருக்க முடியாது. அதனால் தான் அதிமுகவுடன் கூட்டணி இல்லை…

  12. ஷின் ஜியாங் மாகாணத்தில் அமைதிக்குலைவு ( ஆவணப்படம்) சீனாவின் அமைதி குலைந்த மேற்குப்புற மாகாணமான, ஷின்ஜியாங்கில் நடந்த வன்முறைக் கலவரங்களில், போலிசார் 14 பேரை சுட்டுக்கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முஸ்லீம் பெரும்பான்மை மாகாணத்தில் பிரிவினைவாதம் காரணமாக அவ்வப்போது வன்செயல்கள் ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் சிலரை கஷ்கார் நகருக்கருகே போலிசார் கைது செய்ய முயன்றபோது அவர்களை சிலர் வெடிபொருட்கள் மற்றும் கத்திகளைக் கொண்டு தாக்கியதாக அரச ஊடகங்கள் தெரிவித்தன. இந்த சம்பவங்களில் இரண்டு போலிசாரும் கொல்லப்பட்டனர். சீனாவின் உய்குர் இன முஸ்லீம்கள் ( ஆவணப்படம்) இந்த ஆண்டு ஷின்ஜியாங் மாகாணத்தில் நடந்த பல வன்செயல்களில் இத…

  13. லண்டன்: இந்தியத் தொழிலதிபரான லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டலின் மகள் திருமணம் இந்திய மதிப்பில் சுமார் 500கோடி ரூபாய் செலவில் ஸ்பெயினில் நடத்தப் பட்டது. இதன் மூலம் உலகளவில் நடத்தப் பட்ட ஆடம்பர திருமணங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது இத்திருமணம். எஃகு இரும்புத் தொழிலில் முன்னணி வகித்து வரும் இந்தியரான லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். உலகப் பணக்காரர்களில் முண்ணனியில் இருக்கும் இவரது மகள் திருமணம் கடந்த 2004ம் ஆண்டு 46 மில்லியன் யூரோ செலவில் நடந்தது. உலகமே வியந்து பார்த்த அத்திருமணத்தைத் தொடர்ந்து, தற்போது அவரது சகோதரர் பிரமோத் மிட்டல் தனது மகள் ஸ்ருஷ்டி மிட்டல் திருமணத்தை அதைவிட படு விமர்சையாக நடத்தி முடித்துள்ளார். http://tamil.oneind…

  14. பெய்ரூட்: சிரியாவில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் சிக்கி சிறுவர்கள் 14 பேர் உட்பட 25 பேர் பலியானதாக மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அரசியல் நடத்தி வருவதாகக் கூறி, சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி ஏராளமானோரைப் பலி வாங்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக ராணுவ வீரர்களும் பதில்த் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இடைவிடாத போரினால் உருக்குலைந்த நகரமான அலெப்போ காட்சி அளிக்கிறது. இந்நிலையில், நேற்று அலெப்போ நகரில் புரட்சியாளர்கள் …

  15. இலங்கையில் இருந்து படகு மூலம் இராமேஸ்வரம் வந்துள்ளதாக கருதப்படும் ஒரு தொகுதி அகதிகளைத் தேடி, தமிழ்நாடு காவல்துறையினர் பாரிய தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனையில் நேற்று இலங்கை அகதி ஒருவர் கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்தே இந்த தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாந்தன் என்ற இந்த அகதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு இலட்சம் ரூபா வாடகை செலுத்தி பலர் அகதிகளாக வந்திறங்கியதாக கூறியுள்ளார். எனினும் எத்தனை பேர் வந்திறங்கினர் என்ற விபரம் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவரவில்லை என்று பிரதி காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் எங்கே மறைந்துள்ளனர் என்ற விபரம் அவருக்குத் தெரியவில்லை என்றும், அவர்கள் …

  16. ஜோன் பொண்டெயின் , திகில் பட நாயகி மரணம் திகில் படங்களை இயக்கிய ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கின் பல படங்களில் கதாநாயகியாக நடித்த, புகழ் பெற்ற, ஹாலிவுட் நடிகை, ஜோன் போண்டெயின், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், தனது 96வது வயதில் காலமானார். பிரிட்டிஷ் பெற்றோர்களுக்கு மகளாகப் பிறந்த ஜோன், கலிபோர்னியாவுக்கு புலம்பெயர்ந்து, அவரது அக்கா, ஒலிவியா டி ஹாவிலாண்டுடன் ,நடிப்புத் தொழிலில் ஈடுபட்டார். ஹிட்ச்காக்கின் முதல் ஹாலிவுட் படமான "ரெபெக்கா"வில் ஜோன் பொண்டெயின் கதாநாயகியாக நடித்தார். "சஸ்பிஷன்" என்ற படத்தில் கதநாயகன் கேரி க்ராண்டுடன் இணைந்து, ஒரு பலவீனமான மனைவி கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு, ஆஸ்கார் விருது கிடைத்தது. "தெ கான்ஸ்டண்ட் நிம்ப்", "ஜேன் எய்ர்" " லெட்டர்…

  17. ரொறொன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்களில் பனிபொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிபருவகாலத்திற்கான முதல் பலத்த பனிபுயல் அடிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. 15-20 சென்ரி மீற்றர்கள் அளவிலான பனி GTA பகுதிகளில் பொழியலாமெனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. இது ஞாயிறு காலை வரை தொடரும் எனவும் இன்று மாலை கடுமையா பனி பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஹமில்ரன், ஓக்வில், பேளிங்ரன் ஆகிய இடங்களிலும் பனிபுயல் எதிர்பார்க்கப்படுகின்றது என கனடா சுற்றுச் சூழல் பிரிவினரின் கூற்றுப்படி தெரியவருகின்றது. காற்று மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசலாமெனவும் இதனால் பனி பறந்து பார்வையை மறைக்க கூடிய சாத்தியக் கூறுகளும் ஏற்படலாம் என எதிர்பார்ககப் படுகின்றது. பனிப்புயலினால…

  18. சைப்ரஸ் - கந்து வட்டிகாரனாகும் ஐரோப்பிய யூனியன் கடந்த சில வருடங்களாகவே ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் கடனில் மூழ்குவதையும் ,அவற்றை வெவ்வேறு விதமாக பெயில் அவுட் செய்து வருவதையும் பார்த்திருக்கிறோம்.பொதுவாக பெயில் அவுட் செய்யும் போது அரசிடம் இருக்கும் ஒரு சில தொழிற்துறையை தனியாரிடம் விற்று பணத்தை பெறவும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறுத்தி பணத்தை சேமிக்கவும் மற்றும் அரசின் செலவினங்களை குறைக்கவும் அறிவுறுத்த படும். பல நேரங்களில் இது விவாதத்திற்கு உரிய பொருளாக இருக்கும். அயர்லாந்து பெயில் அவுட் பற்றி பிரிதொரு பதிவில் எழுதி இருந்தேன்.தற்போது ஐரோப்பிய யூனியனின் மற்றொரு சிறிய நாடான சைப்ரஸ் நாடு தற்போது பெயில் அவுட் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளது.மற்ற நாடுகளில் நடந்தது …

  19. நெல்சன் மண்டேலாவின் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் கை குலுக்கிக் கொண்டது ஏற்கனவே திட்டமிட்டதல்ல, எதிர்பாராமல் நடந்தது என அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1961-ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் அரசியல் உறவு ஏற்படுத்திக் கொண்டதால் கியூபாவுடனான அரசியல் உறவை துண்டித்துக் கொண்டது அமெரிக்கா. இந்நிலையில், நேற்று முன்தினம் தென்ஆப்ரிக்காவில் மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். இதற்கு, சுதந்திர உலகத் தலைவர் ஒருவரும், சர்வாதிகாரி ஒருவரும் கைகுலுக்கிக் கொள்வது ஏற்கத்தக்…

  20. முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை சட்டத்திற்குப் புறம்பான வகையில் இடித்துத் தள்ளிய தமிழக அரசின் தமிழின விரோதப் போக்கை கண்டித்தும், முற்றத்தின் நிரந்தர பராமரிப்பு, பாதுகாப்புக்கென நிதி திரட்டும் வகையிலும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையில் 14.12.2013., 15.12.2013. (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் தொடர்வண்டி மூலம் பரப்புரை பயணம் செய்யப்படவுள்ளது. கீழ்கண்ட தொடர்வண்டி நிலையங்களில் பயணக்குழுவினரை வரவேற்க அந்தந்த ஊர்களில் உள்ள தமிழின உணர்வாளர்கள், ஈழ ஆதரவு அரசியல் கட்சியினர், மனித உரிமை இயக்கத்தினர் திரளாக கூடி வரவேற்று நிதியளித்து வழியனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம். தொடர்புக்கு: கா. தமிழ்வேங்கை, 94421 70011, 7871…

  21. இந்தியா - பாகிஸ்தான் இடையே, அணு ஆயுதப் போர் மூண்டால், 200 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்கள், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக நாடுகள், தங்களுக்குள் போர் செய்யும் போது, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், ஏராளமான உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதோடு, எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கும். இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக தீராத பிரச்னைகள் உள்ளன. ஏற்கனவே, மூன்று முறை, இரு நாடுகளிடையே போர் நடந்துள்ளது. எனினும், இனி வரும் காலங்களில் இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டால், அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு…

  22. http://youtu.be/hd0UyrDFJXY All looked lost when this young and lone buffalo was attacked by two lions in a South African national park. But the pair had not bargained on the buffalo's friends coming to his rescue, and moments later they were tossed several feet in the air before being chased away. The dramatic scene was captured on camera in the Mjejane Reserve on the border of the Kruger Park. Scroll down for video Flyin' lion! A lion blindsides a smaller buffalo as it emerges from bushes at the Mjejane Reserve in South Africa. Two on one: The hungry cat doesn't factor in the first buffalo's larger friend following …

  23. மத்திய கிழக்கு நாடுகளில் வரலாறு காணாத வகையில் பல வருடங்களுக்கு பிறகு பனிப்பொழிவும் கடும் குளிரும் நிலவுகிறது. உதாரணமாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் 112 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக பனிமழை பொழிந்திருக்கிறது. யேசு கிறிஸ்து பிறந்த ஊராக கருதப்படும் ஜெருசேலத்தின் வழமையாக கிரிஸ்துமஸ்து கொண்டாட்டங்களின் போது பனிப் பொழிவு ஏற்படுவதில்லை. ஆனால் இம்முறை கிரிஸ்து மஸ்து கொண்டாட்டங்கள் களைகட்டியிருப்பதற்கு இப்பனிப்பொழிவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. அதே போன்று சிரியா, இஸ்ரேல், லெபனான் போன்ற நாடுகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன், வரலாறு காணத வகையில் கடும் குளிர் நிலவுகிறது. சிரிய உள்நாட்டு யுத்தத்தினால் இதுவரை அயல்நாடுகளுக்கு இடம்பெயர்ந்த இரு மில்லியன் சிரிய அகதிகள் தற்காலிக அ…

  24. ஸ்ரீரங்கத்தில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேவே கவுடா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்தியாவின் பிரதமர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கின்றன. தென் இந்தியாவில் இருந்து நரசிம்மராவுக்குப் பிறகு நானும் (தேவே கவுடா) பிரதமர் ஆனேன். ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆவதை நான் வரவேற்கிறேன். அதற்காக ஜெயலலிதாவை நான் ஆசிர்வதிக்கிறேன். ஓரின சேர்க்கை கிரிமினல் குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்படி மத்திய அரசு அந்த சட்டத்தை மாற்ற விரும்பினால் பாரதீய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளபடி அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஆலோசித்து முடிவு எட…

  25. பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயார் ஆகிவருகின்றன. பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 வட மாநில தேர்தலில் அந்த கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பார்வை பா.ஜனதா மீது திரும்பியுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள் இந்த முறை கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் நாட்டிலும் பா.ஜனதா முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மோடி, பிரதமர் ஆவதற்குரிய ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது என்றும் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.