உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26681 topics in this forum
-
நியுஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் (கார்ட்போர்ட்) காகித அட்டைகளால் செய்யப்பட்ட தேவாலயம் ஒன்று வைபவரீதியாக திறக்கப்பட்டுள்ளது இந்த ஊரில் நின்றிருந்த 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலிக்கன் தேவாலயம் நிலநடுக்கத்தால் சேதமடைய அதற்கான தற்காலிக மாற்றாக இந்த அட்டை தேவாலயம் உருவாக்கப்பட்டது. கிறைஸ்ட்சர்ச்சில் 2011 பிப்ரவரியில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 185 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஜப்பானிய கட்டிடக் கலைஞர் ஷிகெரு பான் இந்த தேவாலயத்தை வடிவமைத்துள்ளார். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இடங்களை மீளக் கட்டியெழுப்பும் பணிக்கு பெயர் பெற்றவர் இவர். http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/08/130816_cardboardchurchpix.shtml
-
- 0 replies
- 342 views
-
-
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆயுதக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டிருந்த எண்பதுக்கும் அதிகமான பிள்ளைகளை காப்பாற்றியுள்ளதாக ஐநா சபையினால் அனுப்பப்பட்டிருந்த மீட்புக் குழு ஒன்று கூறுகிறது. எட்டு வயதுச் சிறார்களும் மீட்கப்பட்டுள்ள பிள்ளைகளில் அடங்குவர். இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டவர்களில் 13 பேர் சிறுமிகள் ஆவர்.அந்நாட்டின் தென்கிழக்கிலுள்ள கடங்கா மாகாணத்தில் செயல்பட்டுவருகின்ற மாய் மாய் என்ற ஆயுதக் குழுவினால் கடந்த ஆறு மாதங்களில் இப்பிள்ளைகள் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். கொங்கோவின் கடங்கா மாகாணத்தில் ஏழைப் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுவில் சேர்க்கப்பட்டனர். காப்பாற்றப்பட்ட பிள்ளைகளில் நாற்பது பேர் தத்தமது குடும்பத்தாரிடம் சேர்க்கப்பட்டுவிட்டார்க…
-
- 0 replies
- 407 views
-
-
எகிப்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளர்களை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை நடந்த தொழுகையின்போது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சு இவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளது. படையினருக்கும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினருக்கும் இடையிலான மோதல்களின்போது கத்திக் கூக்குரலிடும் பெண்ணொருவர் அதேவேளை, போராட்டக்காரர்களையும் அமைதி காக்குமாறும் பழிவாங்கல் நோக்கோடு செயற்பட வேண்டாம் என்றும் நவி பிள்ளை கேட்டுக் கொண்டுள்ளார்.போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது நிஜ துப்பாக்கி ரவைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை கூறியுள்ளார். அல் ஃபட்டா பள்ளிவாசலை படையினர் சூழ்ந்துள்ளனர் கெய…
-
- 0 replies
- 391 views
-
-
ஈரோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கிய காந்திய மக்கள் இயக்க மாவட்டத் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசுகிறார் காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவிமணியன். உடன் (இடமிருந்து) மாவட்டத் தலைவர் இரா.சிவராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் துரை.செல்வக்குமார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வோம் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் கூறினார். ஈரோடு மாவட்ட காந்திய மக்கள் இயக்கத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா சூரம்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அலுவலகத்தை காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசியலில் நல்ல மாற்றத்தை உரு…
-
- 1 reply
- 421 views
-
-
ஆஸ்திரேலியாவில் கடுமையான புதிய குடிவரவுக் கொள்கைகளை கண்சர்வேடிவ் கட்சித் தலைவரான டோனி அப்பாட் பிரேரித்துள்ளார். அந்நாட்டில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டோனி அப்பாட் ஆஸ்திரேலியாவில் தற்போது தஞ்சக் கோரிக்கை நிலுவையில் உள்ளவர்களுக்கு வேலை பார்க்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதமான தற்காலிக வதிவிட உரிமை மட்டுமே வழங்குவது என்றும், நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதில்லை என்றுமான மாற்றத்தை இத்தேர்தலில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏற்படுத்தும் என அப்பாட் கூறினார். தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்களுக்கு அம்முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருந்துவரும் உரிமை ரத்து செய்யப்படும் எனவ…
-
- 1 reply
- 291 views
-
-
ஸ்ரீநகர்: தேசிய நீரோட்டத்தில் இருந்து காஷ்மீர் மக்கள் மட்டும் ஏன் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி அரங்கில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த இந்த விழாவில் உமர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் என்ன பேசினார் என்பதன் விவரத்தை பார்ப்போம். மக்களுக்கு சல்யூட் மாநிலத்தில் அமைதியைக் கெடுக்க முயன்ற சக்திகளை தோற்கடித்த மக்களுக்கு தலை வணங்குகிறேன் என்றார் உமர். நம்மை மட்டும் ஏன் இப்படி? தேசிய நீரோட்டத்தில் இருந்து நீங்கள் மட்டும் தனியாக உள்ளது போல் ஏன் இந்த காஷ்மீர் மக்கள் உணர…
-
- 0 replies
- 280 views
-
-
டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 122 இடங்களை இழக்க நேரிடும் என்றும் பாஜக அல்லாத இதர கட்சிகள் கடந்த முறையை விட கூடுதலாக 126 இடங்களை பெறக் கூடும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.தற்போதைய ஆகஸ்ட் மாதமே லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தின. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 137 தொகுதிகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 155 தொகுதிகள் கிடைக்குமாம். இந்த இரு கூட்டணிகள் அல்லாத இதர கட்சிகளுக்கு கிடைக்கும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 251 ஆக இருக…
-
- 0 replies
- 276 views
-
-
பூஜ்: இந்திய -பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஒன்றான கட்ச் பிராந்தியத்தின் காவ்டாவில் எல்லைப் பாதுகாப்புப் படையினரை சுதந்திர தின நாளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். குஜராத் மாநிலத்தில் கட்ச் பிராந்தியம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியாகும். கட்ச் பகுதியில் மக்கள் வாழக் கூடிய கடைசி இடமான கவ்டாவில் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ளது. அங்கு எல்லை பாதுகாப்புப் படையினர் முகாமும் உள்ளது. அதற்கு அப்பால் சதுப்பு நிலமாக, மணற்பாங்கான நிலமாக காட்சி தரும் ராண் ஆப் கட்ச் பிரதேசம். ராண் ஆப் கட்ச்-தான் இந்தியா- பாகிஸ்தாஅன் எல்லையாகும். பல நூறு கிலோ மீட்டர் மனித நடமாட்டமே இல்லாத பகுதியில்தான் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகின்றனர். இந்நிலையில் பூஜ் நகரில் இன்று சுதந்தி…
-
- 5 replies
- 608 views
-
-
டெல்லி: இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு.. தொடர்ந்தும் பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்க தயாங்கு என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை: பொறுமைக்கும் எல்லை உண்டு அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் பழகவே இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானோ போர் நிறுத்தத்தை மீறி எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா அமைதியான போக்கையே கடைபிடித்து வருகிறது. பொறுமைக்கும் எல்லை உண்டு. எல்லையை கட்டிக்காக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தியா தயங்காது. இதை பாக…
-
- 11 replies
- 565 views
-
-
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனில் இன்று அதிகாலை 2.31 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் நாட்டின் வட பகுதியில் உள்ள ஆக்லாந்து முதல் தென் பகுதியில் உள்ள ட்யூன்டின் வரை உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின மற்றும் வீடுகள் சேதம் அடைந்தன. பல அலுவலக கட்டடிடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தால் சிலர் காயம் அடைந்துள்ளனர். உயிர் இழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோது வெல்லிங்டனில் உள்ள பல லிப்டுகள் திடீர் என்று நின்றுவிட்டன. பின்னர் அதில் இருந்தவர்…
-
- 0 replies
- 329 views
-
-
வாஷிங்டன்: டெக்சாஸைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலின் புதிய வளர்ப்பு மகன் என்று கூறி அவரது வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து, பணம் எடுக்க முயன்று கைதாகியுள்ளார். டெக்சாஸைச் சேர்ந்த ஜானி பிளெட்சர் கூடன் ஜுனியர் (29) என்பவர் பிரையனில் உள்ள சேஸ் வங்கிக்கு சென்றுள்ளார். வங்கி ஊழியரிடம் தான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலின் வளர்ப்பு மகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மிஷலின் வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை அவர் கேட்டுள்ளார். வங்கி ஊழியருக்கு ஜானி பொய் சொல்கிறார் என்று தோன்றியதால் அவரை வங்கியை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். மிஷலுக்கு இந்த வங்கியில் கணக்கு இல்லை என்று கூறியும் அவர் வெளியே செல்ல மறுக்கவே போலீசார் வரவழைக்…
-
- 0 replies
- 383 views
-
-
பூஜ்: குஜராத் முதல்வர் நரேந்திரடி சுதந்திர தின நிகழ்ச்சியை இந்திய-பாகிஸ்தான் எல்லையான கட்ச் பூஜ் நகரில் நடத்தியிருப்பதன் மூலம் தம்மை ஒரு தேசிய அளவிலான தலைவராக அடையாளம் காட்டியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்திய- பாகிஸ்தான் இடையே மோதல் என்பது பொதுவாக ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களையொட்டியதாக கருதப்படுவது உண்டு. நடைமுறையில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளுக்கு இணையாக ஆபத்தமானதும் எளிதில் பாகிஸ்தான் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய இடமாகவும் இருப்பது கட்ச் பிராந்தியம்தான். குஜராத்தின் கட்ச் மாவட்டம்தான் இந்தியாவிலே மிகப் பெரிய மாவட்டமாகும். ஆனால் இதன் மொத்த பரப்பளவில் பாதி அளவில்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். எஞ்சிய பாதி அளவு மனிதர்கள் வாழத் தகுதியற்ற சத…
-
- 1 reply
- 435 views
-
-
புதுச்சேரி: நாட்டின் அனைத்து மாநிலங்களும் கொண்டாடுவதைப் போல ஆகஸ்ட் 15ஐ சுதந்திர தினமாக கொண்டாடாமல் நவம்பர் 1-ந் தேதிதான் சுதந்திர தினமாக கொண்டாடுவோம் என்று பிரெஞ்ச் புதுவை விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இன்று தேசியக் கொடியேற்றி குடியரசு தினத்தை பிரெஞ்ச் புதுவை விடுதலை இயக்கத்தினர் கடைபிடித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிர்வாகி சிவ. இளங்கோ, 1954ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதிதான் பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரிவிடுதலை பெற்றது. அந்த நாள்தான் புதுச்சேரி மக்களுக்கான சுதந்திர தினம். அதேபோல் ஆகஸ்ட் 16-ந் தேதிதான் இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் புதுச்சேரி கொண்டுவரப்பட்டது. ஆகையால் அந்த நாளையே நாங்கள் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். இந…
-
- 1 reply
- 507 views
-
-
சிங்கம் போல இருக்கும் திபெத்திய நாய் சீனாவின் மிருககாட்சி சாலையொன்றில் ஆப்பிரிக்க சிங்கம் என்று வைக்கப்பட்டிருந்த விலங்கு, பார்வையாளர்களுக்கு முன்பு திடிரென குரைத்ததால் அது போலி என்பது வெட்ட வெளிச்சமானது. உண்மையான சிங்கத்துக்குப் பதிலாக திபெத்தில் வளரும் மஸ்டிஃப் வகை நாயை அந்த விலங்கு காட்சி சாலை வைத்திருந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உடல் முழுதும் ரோமம் வளரும் திபெத்திய மாஸ்டிஃப் நாய் தூரத்தில் இருந்து பார்கும்போது சிங்கத்தைப் போலத் தோன்றும், இனப்பெருக்கத்துக்காக வேறு ஒரு இடத்துக்கு அந்த ஆண் சிங்கம் அனுப்பப்பட்டதால், அந்த கூண்டில், ஊழியர் ஒருவர் வளர்த்த இந்த நாய் வைக்கப்பட்டதாக அந்த மிருககாட்சி சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். http://www.bbc.co.uk/tamil/gl…
-
- 10 replies
- 1.8k views
-
-
பான்கிமூன்: இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் ஐ.நா சமரசம் செய்யும் இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் சமரச நடவடிக்கைகளில் ஐ.நா. பங்கெடுக்கும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக பாகிஸ்தான் செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, 'எல்லையில் நடந்த சம்பவங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டது அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அதேவேளையில், பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைகளை நடத்த இருநாடுகளும் முயற்சிகள் மேற்கொள்வது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. இதனை பாராட்டி வரவேற்கிறேன் ' என்று கூறினார். இந்த விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் அரசியல்ரீதியாக தலையிடப் போவதில்லை. இரு நாட்டு அரசுகளின் கையில் தான் தீர்வு உள்ள…
-
- 4 replies
- 387 views
-
-
மும்பை: மும்பை பங்குச் சந்தை இன்று மிகப் பெரும் சரிவை எதிர்கொண்டது. பிற்பகல் வர்த்தகத்தின் போது 700 புள்ளிகள் வரை சரிவை எதிர்கொண்டது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 62 ஆக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சியானது பங்குச் சந்தைகளிலும் கடுமையாக எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தை காலை முதலே சரிவில் இருந்த போதும் பிற்பகலில் 700 புள்ளிகள் வரை சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் பங்குகள் 4.7%, ஹெச்.டி.எப்.சி பங்குகள் 5.8%, அளவிலும் சரிசை சந்தித்தன. மேலும் பேங்க் ஆப் பரோடா வங்கி பங்குகள் 8.2%, யெஸ் பேங்க் பங்குகள் 7.9%, ஆக்சிஸ் பே…
-
- 1 reply
- 749 views
-
-
சென்னை: ராஜ்யசபா திமுக எம்.பிக்களின் தலைவர் பதவி கனிமொழிக்கு வழங்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலர் க. அன்பழன, ராஜ்யசபா தலைவர் அன்சாரிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் . ராஜ்யசபாவில் தி.மு.க. சார்பில் கனிமொழி, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, கே.பி. ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு ஆகியோர் எம்.பி.க்களாக உள்ளனர். ராஜ்யசபா தி.மு.க. தலைவராக இருந்த திருச்சி சிவா பதவி ஜூன் மாதம் முடிவடைந்ததால் அப்பதவி காலியாக உள்ளது. இதனையடுத்து கனிமொழிக்கு ராஜ்யசபா தி.மு.க. எம்.பி.க்களுக்கான தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக கடிதத்தை தி.மு.க.பொதுச்செயலாளர் அன்பழகன், ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரிக்கு அனுப்பி வைத்துள்ளார். http://tamil.oneindia.in/news/2013/08/14/tamilnadu-kanimozhi-is-dm…
-
- 4 replies
- 471 views
-
-
பல தளங்களில் பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை சிங்கப்பூர் Thursday, August 15th, 2013 பிரதமர் லீ சியன் லூங், வரும் 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை ஆற்றவிருக் கும் இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையைப் பல தளங்களில் கேட்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த உரை உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிவழிகளில் நேரடியாக இடம்பெறும்.www.pmo.gov.sg எனும் பிரதமர் அலுவலகம் மற்றும் www.reach.gov.sg/ndrsg எனும் ‘ரீச்’ கருத்து சேகரிப்புப் பிரிவு ஆகியவற் றின் இணைய தளங்களில் பிரதமரின் உரையைப் பார்க்கலாம். http://tamilmurasu.com.sg/story/27674
-
- 0 replies
- 443 views
-
-
அதிபரை விடுவிக்கக் கோரி எகிப்தில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களில் நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 300 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். சில வாரங்களுக்கு முன் வரை எகிப்தின் அதிபராக இருந்து வந்தவர் மோர்சி. இவர் மக்களுக்கு எதிராகச் செயல் பட்டு வருகிறார் என இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து ராணுவம் அவரை ஆட்சியில் இருந்து அகற்றி, காவலில் வைத்தது. இதனால் ஆத்திரமடைந்த மோர்சியின் ஆதரவாளார்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கலவரம் காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/2013/08/15/world-nearly-300-killed-egypt-clashes-pm-defends-crackdown-181264.html
-
- 0 replies
- 342 views
-
-
டெல்லி: இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு.. தொடர்ந்தும் பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்க தயாங்கு என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை: பொறுமைக்கும் எல்லை உண்டு அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் பழகவே இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானோ போர் நிறுத்தத்தை மீறி எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா அமைதியான போக்கையே கடைபிடித்து வருகிறது. பொறுமைக்கும் எல்லை உண்டு. எல்லையை கட்டிக்காக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தியா தயங்காது. இதை பாகிஸ்தான் உணர…
-
- 0 replies
- 353 views
-
-
இம்பால்/கவுகாத்தி: நாடுமுழுவதும் 67 வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மணிப்பூர், அஸ்ஸாம் மாநிலங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடும் இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் மொய்ரான்கோம் என்ற இடத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததாக தகவல் தெரிவிக்கின்றது. சேதம் குறித்து உடனடி தகவல் வெளிவரவில்லை. இதேபோல அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியை அடுத்த ஷிராங் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நேற்று மாலை குண்டு வெடித்துள்ளது. சேதம் அதிகமில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போதும் தலைநகர் இம்பாலில் 3 இடங்களிலும், தவ்பால்…
-
- 0 replies
- 372 views
-
-
அபுஜா: நைஜீரிய தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவனான மொபாடு பாமா என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நைஜீரியாவில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கம் போக்கோ ஹரம். அதன் இரண்டாம் கட்ட தலைவன் மொமொடு பாமா. இவனது தலைக்கு 1.55 லட்சம் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்தது நைஜீரிய அரசு. இந்திய மதிப்பில் இது சுமார் 96 லட்சம் ஆகும். நைஜீரியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியை இஸ்லாமிய சட்ட திட்டப்படி ஆட்சி நடக்கும் இடங்களாக மாற்ற வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள். இதற்காக ஆயுதம் ஏந்திப் போராடும் இவர்களது போராட்டத்தில் சிக்கி, இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்நிலையில், போர்னோ மாநி…
-
- 0 replies
- 327 views
-
-
சிங்கப்பூர் நாட்டின் மிக உயரிய விருதான தெமாசெக் விருது (Order of Temasek) அந்நாட்டின் 6 வது அதிபராக இருந்த திரு S.R. நாதன் (செல்லப்பன் ராம நாதன்) அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ( This award was last given to former Chief Justice Yong Pung How in 1999).திரு நாதன் சிங்கப்பூரின் அதிபராக இருந்ததற்கு மட்டும் இவ்விருது வழங்கப்படவில்லை, மாறாக பொதுச் சேவையில் தமது வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டு நாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக திரு நாதனுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவர் 1999 மற்றும் 2005 ஆகிய இரண்டு முறையும் சிங்கப்பூரின் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்.மூன்றாவது முறையாக தான் போட்டியிட விரும்பவ…
-
- 4 replies
- 626 views
-
-
இன்று ஹிந்தியச் சுதந்திர தினமாம், அடுத்தவரின் சுதந்திரத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான உயிர்களை அணு அணுவாய் துடிதுடிக்க அழித்த கொடியவர்களின் சுதந்திர தினமாம். இதோ மறத்தமிழினத்தின் ஒரு கருஞ்சாபம்......... https://www.youtube.com/watch?feature=player_embedded&v=J3Rux6P37bY https://www.facebook.com/lingamvisva?hc_location=stream https://www.facebook.com/lingamvisva?hc_location=stream
-
- 7 replies
- 878 views
-
-
எகிப்த்தில் உஸ்னி முபாரக் பதவிகவிழ்க்கப்பட்ட பின்னர் சனநாயகத் தேர்தல் மூலம் ஆட்சியமைத்த முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் தலைவரான மொர்ஸி அண்மையில் இராணுவச் சதிப் புரட்சியொன்றின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது தெரிந்ததே. அவர் பதவிகவிழ்க்கப்பட்டது செல்லாதென்றும், மறைமுக இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மொர்ஸி அவர்களை விடுதலை செய்து மீண்டும் ஆட்சியில் அமர்த்துமாறும் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் கடுமையான மறியல்ப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை நாம் அறிந்த செய்தி. இவ்வாறான போராட்டங்களின் ஒரு படியாக கைரோவிலும் மற்றும் புறநகர்ப் பகுதியொன்றிலும் நகரப்பகுதியை ஆக்கிரமித்து முகாமிட்டு நீண்டநாட்களாக மொர்சி ஆதரவாளர்கள் போராடி வந்த நிலையில், அவர்கள…
-
- 1 reply
- 454 views
-