உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26924 topics in this forum
-
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரதான சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தாலிபன் இயக்கத்தினர் இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்நாட்டின் எல்லா பயணிகள் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆப்கன் இராணுவ முகாமுக்கு அருகே இருந்த கட்டிமுடிக்கப்படாத- 5 மாடிக் கட்டிடமொன்றை ஆயுததாரிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துகொண்டு இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். மூன்று மணிநேரம் இந்த மோதல் நீடித்துள்ளது. குண்டுச் சத்தங்களால் அந்தப் பகுதியே அதிர்ந்துள்ளது. ஆப்கன் பாதுகாப்புப் படையினரும் தாலிபன் ஆயுததாரிகளும் இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினர் 5 தாலிபன் ஆயுததாரிகளை இதன்போது ச…
-
- 0 replies
- 380 views
-
-
அமெரிக்க வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றான, அந்நாட்டின் புலனாய்வு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் தாமாக முன்வந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார். 29- வயதான எட்வர்ட் ஸ்நோவ்டென் என்ற இந்த இளைஞன் அமெரிக்க உளவுத்துறையான சீஐஏ-இன் முன்னாள் கணினி நிபுணர்.அமெரிக்காவின் மிகவும் ரகசியமானதும் வெளியிடப்பட முடியாததுமான மிக நுணுக்கமான உலக கண்காணிப்பு செயற்திட்டத்தை அம்பலப்படுத்தியதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். கோடிக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் ஏனைய உலகளாவிய நாளாந்த தொடர்பாடல்களைக் கண்காணிக்கின்ற புலனாய்வு பொறிமுறை செயற்திட்டத்தையே அவர் அம்பலப்படுத்தியிருந்தார். அமெரிக்க உளவுத்துறையினர்…
-
- 8 replies
- 2.2k views
-
-
பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மூத்த தலைவர் அத்வானி ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் அளித்த ராஜினாமா கடித்தில் கூறியிருப்பதாவது:- தற்போது கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் தங்களது தனிப்பட்ட ஆதாயத்துக்காக மட்டும்தான் செயல்படுகிறார்கள். இவ்வகையில் தனிநபர் ஆதாயத்துக்காக செயல்படுபவர்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினமாக உள்ளது. பா.ஜ.க.வை ஆரம்பித்த தலைவர்கள் எதிர்பார்த்த பாதையில் கட்சி இப்போது செல்லவில்லை. ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய் போன்ற தலைவர்களால் எந்த நோக்கத்துடன் பா.ஜ.க. தொடங்கப்பட்டதோ அந்த சித்தாந்தத்தின்படிதான் தற்போது கட்சி செல்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என…
-
- 3 replies
- 452 views
-
-
முதுகுவலி சிகிச்சைக்குப் போன, மரதன் வீராங்கனைக்கு பிரசவம்... அமெரிக்காவில் அதிசயம். வாஷிங்டன்: அமெரிக்காவில் மராத்தான் ஓட்டப்பந்தைய வீராங்கனை ஒருவர் முதுகுவலி பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவர் நிறைமாத கர்பிணியாக இருப்பது கண்டறியப்பட்டு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதாகும் ட்ரிஸ் ஸ்டெயின் என்ற அந்த வீராங்கனை மராத்தான் விளையாட்டு போட்டிக்காக கடந்த சில மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதனால் கடுமையான முதுகுவலி ஏற்பட்டு அவதிப்பட்டார். சிகிச்சைசக்காக அவர் மருத்துவமனைக்குச் செல்லவே அங்கு எதிர்பாராத விதமாக அவர் கர்ப்பமடைந்திருப்பது கண்டறியப்பட்டது. பிரசவ வலிதான் அவருக்கு முதுகுவலியாக ஏற்பட்டுள்ளது. இதனை…
-
- 6 replies
- 678 views
-
-
கோவா: பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், தன்னை நியமித்த தலைவர்களுக்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இன்று கோவாவில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி 2014 தேர்தல் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இதையடுத்து தன்னை தேர்ந்தெடுத்த தலைவர்களுக்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், ''எனக்கு பிரச்சார குழு தலைவர் பொறுப்பு கொடுத்து ஆசி வழங்கிய அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை நிறை…
-
- 0 replies
- 423 views
-
-
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் அந்த நாட்டின் கறுப்பர் மட்டும் அல்லாது உலக கறுப்பர் இன தலைவராகவும் கருதப்படும் முக்கிய தலைவர் நெல்சன் மண்டேலா (வயது 94) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸமாவின் செய்தித் தொடர்பாளர் மேக் மஹராஜ் கூறுகையில், "அவரது உடல்நிலை சனிக்கிழமை அதிகாலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து பிரிட்டோரியா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது' என்று தெரிவித்தார். நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த மண்டேலா, கடந்த 7 மாதங்களில் 3-வது முறையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Reference : A…
-
- 2 replies
- 696 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 5 பேரை சுட்டுக் கொன்ற வாலிபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. சில மாதங்களாக அடங்கி இருந்த துப்பாக்கி கலாச்சாரம் மீண்டும் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா மோனிகா பகுதியில் நேற்று வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸ், சான்டா மோனிகா கல்லூரியில் உள்ள நூலகம் அருகில், ஒரு இளைஞர் துப்பாக்கியுடன் அனைவரையும் சுட்டப்படி வந்திருக்கிறான். இதனையடுத்து போலீஸாருக்கும், துப்பாக்கி வைத்திருந்த நபருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில்…
-
- 0 replies
- 445 views
-
-
FILE புகழ்பெற்ற கிளப்புகளில் ஆடை கட்டுப்பாடை தடுக்க கடுமையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று அரசுக்கு சட்டசபை கமிட்டி பரிந்துரை செய்து உள்ளது. கர்நாடகத்தில் புகழ்பெற்ற கிளப்புகளில் வேட்டி மற்றும் செருப்பு அணிந்து செல்பவர்களை அனுமதிப்பது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா மற்றும் பல்வேறு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து, கிளப்புகளில் வேட்டி அணிந்து செல்லும் சாதாரணமானவர்களை அனுமதிக்கிறார்களா? என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய சட்டசபை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி ஆய்வு செய்து தனது இடைக்கால அறிக்கையை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்…
-
- 0 replies
- 588 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ரெசின் எனப்படும் விஷம் தடவிய கடிதத்தை அனுப்பியதாக டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த நடிகையை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியதாக எப்.பி.ஐ. போலீசார் பலரிடம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், போலீசாரை தொடர்பு கொண்ட ஒரு பெண், அந்த கடிதத்தை எனது கணவர் அனுப்பியிருப்பார் என்று எனக்கு சந்தேகம் உள்ளது என கூறினார். தனது சந்தேகத்துக்கு ஆதாரமாக ரிசின் என்ற விஷத்தை தயாரிக்கும் மூலப்பொருளான ஆமணக்கு விதை மற்றும் விஷம் தயாரிப்பது தொடர்பாக அவரது கணவர் இண்டர்நெட்டில் தகவல்களை தேடியது போன்றவற்றை அந்த பெண் குறிப்பிட்டார். இதனையடுத்து, அவரது கணவரிடம் விசாரித்து வந்தபோது போலீசாரின் சந்தேகம் அந்த பெண்ணின் பக்கம் திரும்பியது.…
-
- 3 replies
- 543 views
-
-
பாராளுமன்றத்துக்கு 2004, 2009-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஓசையின்றி காய்களை நகர்த்தி வருகிறார். இந்த தடவை தனிப்பெரும்பான்மை பெறும் வகையில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார். தனது திட்டத்தை நிறைவேற்ற அவர் கடந்த சில தினங்களாக காங்கிரஸ் முதல்-மந்திரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் தற்போது 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி உள்ளது. 2 மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உள்ளது. இந்த மாநிலங்களில் கூடுதல் எம்.பி.க்களை பெற்றாலே போதும் தனி மெஜாரிட்டி பெற்று விடலாம் என்று…
-
- 3 replies
- 639 views
-
-
7 ஜூன், 2013 (செய்தியாளர்கள் இருவரும் அலெப்போ பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்ததாக பிரஞ்சு வானொலி கூறுகிறது) சிரியாவில் காணாமல்போயுள்ள இரண்டு ஊடகவியலாளர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். ஊடகவியலாளர்கள் அவர்களின் சொந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அல்ல, எனவே அவர்களை பிடித்துவைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று அதிபர் ஒல்லாந்த் சுட்டிக்காட்டியுள்ளார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரஞ்சு அதிபர் அங்கிருந்துகொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார். காணாமல்போயுள்ள இரண்டு ஊடகவியலாளர்களும் தமது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பிரஞ்சு வானொலியான யூரோப் வன் அறிவித்து…
-
- 1 reply
- 480 views
-
-
7 ஜூன், 2013 பிபிசியின் மீளக்கட்டியமைக்கப்பட்ட தலைமை அலுவலகத்தை எலிசபெத் மகாராணியார் இன்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வுக்காக லண்டனின் மையப்பகுதியில் இருக்கின்ற ''நியூ புரோட்காஸ்டிங் ஹவுஸ்'' என்னும் எமது தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்த மகாராணியார், இங்கு நடந்த ஒரு இசைக்கச்சேரியின் நேரடி ஒலிபரப்பை கேட்டு ரசித்ததுடன், எமது செய்தி தயாரிப்பு அறைகளுக்கும் விஜயம் செய்தார். அதன் பின்னர் பிபிசி வானொலியின் கலையகத்துக்கும் அவர் வருகை தந்தார். அங்கு நேரலையில் உரையாற்றிய மகாராணியார், இந்த நிலையம், எதிர்காலத்தில் பிபிசியின் பணிகளுக்கு மிகவும் சிறப்பாகச் சேவையாற்றும் என்று நம்புவதாகக் கூறினார். அத்துடன் அதனை அதிகாரபூர்வமாக திறந்து வைப்பதா…
-
- 0 replies
- 476 views
-
-
6 ஜூன், 2013 வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்கள் தம்மிடையே பேச்சுவார்த்தையை நடத்த உடன்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் பல மாதங்களாகத் தொடர்ந்த பதற்றத்தை அடுத்து இந்த நகர்வு வந்திருக்கிறது. இந்த சமரச பேச்சுவாத்தையை பிரேரித்துள்ள வடகொரியா, இருநாடுகளுக்கும் இடையிலான இணைந்த தொழில் வளாகத்தை மீண்டும் திறத்தல், எல்லைக்கு குறுக்கேயான சுற்றுலா நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் ஆகியவை குறித்து பேச்சு நடத்த விரும்புகிறது. வடகொரியா ஒரு செய்மதியை ஏவியமை மற்றும் ஒரு அணுச் சோதனையைச் செய்தமை ஆகியவற்றால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதற்றமடைந்தன. http://www.bbc.co.uk/tamil/global/2013/06/130606_koreatalks.shtml
-
- 0 replies
- 323 views
-
-
5th June 2013 உலக அளவில் அணுஆயுத இருப்பு பற்றிய புள்ளி விவரங்களை சிப்ரி (SIPRI) எனப்படும் ஸ்டாக்ஹாம் இண்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (Stockholm International Peace Research Institute) வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் அணு ஆயுதங்கள் குறைந்திருந்த போதும் இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் அணுஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மிரட்டும் வடகொரியா உலகம் முழுவதும் 9 நாடுகளில் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இதில் வட கொரியா தவிர மற்ற 8 நாடுகளில் அணு ஆயுதங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2013-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, ரஷ்யாவில் 8,500 அணு ஆயுதங்களும், அமெரிக்காவில் 7,700 அணு ஆயுதங்களும் பிரான்சில் 300 அணு ஆயுதங்களும…
-
- 0 replies
- 625 views
-
-
6th June 2013 ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடர்மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் ரைன், சாலே (Saale) ஆகிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ரைன் நதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சாலே (Saale) ஆற்றின் கரையில் உள்ள ஹல்லே (Halle) நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். செக். குடியரசு தலைநகர் ப்ரேக் (Prague) -இல் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள ரசாயன தொழிற்சாலையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆபத்து கால நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆஸ்திரியா, போலந்து, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பிற மத்திய ஐரோப…
-
- 14 replies
- 1.1k views
-
-
6th June 2013 அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைஸ் நியமிக்கப்படுவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தற்போதைய, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டானிலான் (Tom Donilon) அடுத்த மாதம் ஓய்வு பெற்றவுடன் சூசன் ரைஸ் அந்த பொறுப்பை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சூசன் ரைஸ், தற்போது அமெரிக்காவுக்கான ஐநா தூதராக செயல்படுகிறார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்கும் போது சூசன் ரைசை அமைச்சராக்க முயன்ற ஒபாமா, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் எதிர்ப்பால் பின்வாங்கினார். இதையடுத்து, தற்போது அமெரிக்க அரசு நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புக்கு அதிபர் ஒபாமாவால் அவர் தேர்வு செய்யப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரித்தானியாவில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 2020 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவின் சனத்தொகையில் சுமார் அரைவாசிப் பேர், புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளைப் பெறுவார்கள் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் 44 வீதமானவர்கள் புற்றுநோய்க்கான சிகிச்சைகளைப் பெற்றிருந்தனர். எனினும் முடியுமானமளவுக்கு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படடுவதாக தெரிவிக்கப்படுகிறது. Half of UK population 'will get cancer in lifetime' The number of people in the UK who will get cancer during their lifetime will increase to nearly half the population by 2020, a report has forecast. Macmillan Cancer Support …
-
- 1 reply
- 550 views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். கடந்த ஒருவார காலத்தில் பாகிஸ்தான் ராணுவம் 3வது முறையாக இன்று ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தியத் தரப்பும் பதிலடி கொடுத்தது. இதை இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்வதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/07/india-j-k-pakistani-troops-vio…
-
- 5 replies
- 420 views
-
-
இந்தியாவின், புதுச் சேரியில் 3 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் சிறுமியை, 9 ஆம் ஆண்டில் கற்கும் மாணவனொருவன் வல்லுறவுக்குட்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, புதுச் சேரியின் அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருக்கு 10 வயது மகனும், 8 வயது மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மணவெளியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். கணவர் இல்லாத தமிழ்செல்வி கூலித் தொழில் செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். நேற்று இரவு அண்ணனும், தங்கையும்அழைத்து கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது மணவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனொருவன், நாரயணனையும் சுமதியையும் நிறுத்தி கதைத்துள்ளான். …
-
- 0 replies
- 426 views
-
-
முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையும், 1940ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டின் கவர்ச்சிக்கன்னியாகவும் திகழ்ந்த Esther Williams நேற்று லண்டனில் காலமானார். அவருக்கு வயது 91 1940 ஆம் ஆண்டு நீச்சல் போட்டியின் சாம்பியனாக திகழ்ந்த Esther Williams, பின்னர் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். கறுப்பு வெள்ளை படங்கள் எடுக்கும் காலத்திலேயே திரையில் நீச்சலுடையில் தோன்றி ரசிகர்களை தனது கவர்ச்சியால் கவர்ந்து இழுத்துவர். இவருடைய கவர்ச்சியை நம்பி தயாரிப்பாளர்கள் பெரும் பணத்தை முதலீடு செய்து மிகப்பெரிய லாபத்தையும் அடைந்தனர். Gene Kelly and Frank Sinatr போன்ற புகழ்பெற்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெரும் புகழை பெற்றார். 1962 ஆம் ஆண்டு Fernando Lamas என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது. அதன…
-
- 0 replies
- 391 views
-
-
அமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த வாஷிங்டன் போஸ்ட்பத்திரிகையும் பிரிட்டிஷ் நாளிதழதான த கார்டியன்பத்திரிகையும் தெரிவித்துள்ளன. தனிநபர்களை இலக்குவைத்துமைக்ரோசாஃப்ட், யாஹு, கூகுள் மற்றும்ஃபேஸ்புக் உள்ளிட்ட 9 முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்கள் இவ்வாறு உளவுபார்க்கப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் கூறியுள்ளன. சில நபர்களின் நடமாட்டங்களைப் பின்தொடர்வதற்காக தனிப்பட்ட ஆட்களின் வீடியோ பதிவுகள், ஃபோட்டோக்கள், இ-மெயில்கள் போன்றன திரட்டப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன. PRISM (பிரிஸ்ம்) என்பதே அரசாங்கத்தின் இந்த ரகசிய உளவுத் திட்டத்தின் பெயர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளா…
-
- 0 replies
- 432 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் விண்டூ தாராசிங்கை மும்பை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். ஆனால் அவர் மீதான புகார்களுக்கு உரிய ஆதாரங்களை மும்பை போலீசாரால் திரட்ட இயலவில்லை. இதையடுத்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். நடிகர் விண்டூ தாராசிங் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. அதன்படி மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கையெழுத்து போட வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- கிரிக்கெட் சூதாட்டத்தில் நான் என்றுமே ஈடுபட்ட தில்லை. நான் அப்பாவி. நான் எந்த தவறும் செய்ய வில்லை. குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் என் மீது எந்த தவறும் இல்லை என்பது உறுதியாகியுள…
-
- 0 replies
- 374 views
-
-
காமன்வெல்த் விளையாட்டு போட்டி முன்னாள் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கல்மாடியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். காமன்வெல்த் போட்டியிகளில் சட்டவிரோத ஒப்பந்தத்தில் 71 கோடி அளவிற்கு முறைகேடு நடந்தது தொடர்பாக கல்மாடியிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுள்ளது. 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற போது, மொரீசியஸை தலைமையாக கொண்டு செயல்படும் நிறுவனதுடன் மூன்று ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தங்கள் மந்திரி சபையின் ஒப்புதல் இன்றி கையெழுத்தாகியுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15362:71-million-to-the-commonwealth-games-scandal,-the-cbi-trial&catid=37:india&Itemid=103
-
- 0 replies
- 371 views
-
-
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் நடக்கவிருக்கும் உலக அழகிப் போட்டியில் பங்குபெறும் அழகிகள் நீச்சல் உடை அணியமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுத்தோறும் நடைபெறும் உலக அழகி போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறவுள்ளது. உலக அழகி போட்டியில் உலக அழகிப் பட்டம் மட்டுமில்லாமல் பல பிரிவுகளில் பரிசு வழங்கப்படும். அவற்றில் நீச்சல் உடைப் போட்டியும் ஒன்று. இந்தோனேசியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள் ஆவர். அவர்களின் உணர்வுகளை எந்த விதத்திலும் புண்படக்கூடாது என்ற எண்ணத்துடன் நீச்சல் உடை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக இந்த அமைப்பின் தலைவராக விளங்கும் ஜூலியா மோர்லே கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கு பெறும் 137 ப…
-
- 0 replies
- 497 views
-
-
மத்திய அரசு நேற்று திடீரென தங்கத்திற்கான இறக்குமதி வரியை 2 சதவீதம் உயர்த்தியுள்ளதால் தங்கம் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. இந்தியாவில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருக்கிறது. இந்நிலையில் நேற்று மத்திய அரசு தங்கத்திற்கான இறக்கும்தி வரியை 6 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வரியை உயர்த்தியதால் சர்வதேச சந்தையில் நேற்று தங்கத்தின் விலையில் ஏற்றம் இல்லாமல் இருந்தாலும் இந்தியாவில் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்தது. கிராமுக்கு ரூ.50 திடீரென விலை உயர்ந்ததால் தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள…
-
- 0 replies
- 951 views
-