உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
சூடானில் நீடிக்கும் பஞ்சம் : மண்ணை உண்ணும் மக்கள்! சூடானில் பசி, பட்டினியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போர் தற்போது வரை நீடிப்பதுடன் இதனால், விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையில், உணவுப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதால், விவசாயிகள் பயிர்ச் செய்கைக்காக கொள்வனவு செய்த விதைகளை உண்ணுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், மக்கள் உயிர் வாழ்வதற்காக மண் மற்றும் இலைகளை உண்ணும் அவல நிலை …
-
- 0 replies
- 270 views
-
-
Published By: RAJEEBAN 02 MAY, 2024 | 12:06 PM புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை திட்டத்தின் ஒரு பகுதியாக புகலிடக்கோரிக்கையாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை பிரிட்டிஸ் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் புகலிடக்கோரிக்கையாளர்களுடன் முதலாவது விமானம் ஜூலை மாதம் முதல் வாரம் ருவாண்டா செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு உரிமையில்லாதவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் எங்களின் அர்ப்பணிப்பு மிக்க சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிலெவெர்லி இவர்களை விரைவாக கைதுசெய்தால் எங்கள் விமானங்களை ருவண்டாவிற்கு அனுப்பலாம் எனவும் …
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய தகவல்களை திருட முயன்ற இரண்டு இந்திய உளவாளிகள் 2020 இல் வெளியேற்றப்பட்டனர் - சர்வதேச ஊடகங்களின் தகவலால் அதிர்ச்சி Published By: RAJEEBAN 01 MAY, 2024 | 12:25 PM 2020 ம் ஆண்டு அவுஸ்திரேலியா இந்தியாவின் ரோ புலனாய்வுபிரிவை சேர்ந்த இருவரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றியது என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ரோவிற்கும் மேற்குலகின் உள்நாட்டு பாதுகாப்பு சேவைகளை சேர்ந்தவர்களிற்கும் இடையிலான மோதல்களில் இதுவும் ஒன்று என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை இரகசிய தகவல்களை திருடுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட இந்தியாவின் புலனாய்வு அமைப்பை சேர்…
-
-
- 8 replies
- 892 views
- 1 follower
-
-
30 APR, 2024 | 04:12 PM லண்டனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். வாள் ஏந்திய நபர் ஒருவர் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேரை தாக்கினார் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைனோல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்த மன்பிரீட் சிங் என்பவர் சம்பவத்தை இவ்வாறு விபரித்துள்ளார். காலை ஏழு மணியளவில் நான் அலுவலகத்திலிருந்து அப்போதுதான் வெளியே வந்தேன் வீதியின் மறுப்பக்கத்தில் ஏதோ குழப்பநிலை காணப்படுவதை அவதானித்தேன் கையில் வாளுடன் காணப்பட்ட நபருடன் ஐந்து ஆறுபேர் இழுபறியில் ஈடுபட்டுள…
-
-
- 15 replies
- 1.5k views
- 2 followers
-
-
படக்குறிப்பு,பிலிப்பைன்ஸ் கப்பலை சுற்றி வளைத்த சீன கப்பல்கள் கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனத்தன் ஹெட் பதவி, தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் 13 நிமிடங்களுக்கு முன்னர் பெரிய சீனக் கப்பல் ஒன்று எங்கள் கப்பலுக்கு மிக நெருக்கமாக செல்வதை எங்களால் காண முடிந்தது. எங்களது இரு கப்பல்களும் அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்தன. சீன கப்பலில் இருந்தவர்களின் முகத்தை பார்க்க முடியுமளவு அவர்களது கப்பல் எங்களுக்கு நெருக்கமாக இருந்தது. எங்களை போலவே அதிலிருந்த இருவர் எங்கள் கப்பலை நோக்கி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் கப்பலான பிஆர்பி பககேவை (BRP Bagacay) செவ்வாய்க்கிழமையன்று சீனக் கப்பல் நெருங்கிய சமயத்தில் பி…
-
- 1 reply
- 516 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 29 APR, 2024 | 12:43 PM சிட்னியில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் சிட்னி தேவாலய தாக்குதலின் பின்னர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்துவிட்டு உயிரிழக்க தயாராகயிருந்தனர் என அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஏழு பதின்மவயதினர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஆறுபேர் சிட்னி தேவலாயத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞனின் சகாக்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமிட்டமை உட்பட பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். கைத…
-
- 3 replies
- 530 views
- 1 follower
-
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான் தனது இராணுவத் தளபதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பழிவாங்க, இஸ்ரேல் மீது ஈரான் தற்போது பல ட்ரோன்களைக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. நூற்றிற்கு மேற்பட்ட ட்ரோன்களும், பலிஸ்ட்டிக் ஏவுகனைகளும் இத்தாக்குதலில் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் பதிலடித்தாக்குதலை ஆரம்பிக்கும்போது, அயல் நாடுகள் எவராவது இஸ்ரேலிய விமானங்கள் பறப்பதற்கு தமது வான்பரப்பை திறந்துவிட்டால் அந்த நாடுகளையும் தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது. ட்ரோன்கள் இன்னும் இஸ்ரேல் வந்து சேரவில்லை. இஸ்ரேல் அவற்றை அவதானிக்கின்றதாம். அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு உடவுவோம் என்று கூறியிருக்கிறது https://edition.cnn.com/middleeast/live-news/israel-h…
-
-
- 180 replies
- 13.7k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 29 APR, 2024 | 11:08 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உட்பட முக்கிய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்க தயாராவதாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாசுடனான மோதல் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிரதமர் உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்கலாம்; என ஐந்து இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாசின் தலைவர்களுக்கு எதிராகவும் பிடியாணைகளை பிறப்பிப்பது குறித்தும் சர்வதேச நீதிமன்றம் ஆராய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. நீதிமன்றம் தனது நடவடிக்கையை தொடரதீர்மானி…
-
- 3 replies
- 294 views
- 1 follower
-
-
இந்திய பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் பேரணி! பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணி நடத்தியுள்ளனர். இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்துவரும் நிலையில், பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்களான இந்திய வம்சாவளியினர் பா.ஜ., கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர். ‘ரன் பார் மோடி’ என்ற பெயரில் இந்திய வம்சாவளியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில், சுமார் 500 பேர் பங்கேற்றிருந்தனர். பேரணியில் ஈடுபட்டவர்கள், இந்திய தேசிய கொடி மற்றும் பா.ஜ., கொடிகளை ஏந்தியபடி பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவாறு இவ்வாறு பேரணியில் ஈடுபட்டனர். குற…
-
- 0 replies
- 279 views
-
-
Published By: DIGITAL DESK 3 29 APR, 2024 | 09:08 AM அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறாவளியால் ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடுமையான வானிலை காரணமாக ஒரு கிராமப்புற நகரத்தின் மையப்பகுதியில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. ஓக்லாஹோமா மாநிலம் முழுவதும் குறைந்தது 100 பேர் காயமடைந்தனர். 20,000 மேற்பட்ட வீடுகளில் மின்னிணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 5,000 மக்கள் வசிக்கும் சல்ஃபூரில் நகரே உருகுலைந்துள்ளது.அங்கு ஏராளமான வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கார்கள் மற்றும் பேருந்துகளை தூக்கி வீசப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
போரில் 5 இலட்சம் இராணுவ வீரர்களைப் பறிகொடுத்த உக்ரேன். ரஷ்யா உடனான போரில் உக்ரேன் இதுவரை 5 இலட்சம் இராணுவ வீரர்களை பறிகொடுத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் இராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கருத்துத் தெரிவிக்கையில் ”போர் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை உக்ரேன் இராணுவமானது சுமார் 5 லட்சம் இராணுவ வீரர்களை இழந்துள்ளன. அத்துடன் உக்ரேன் இராணுவத்தின் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள், 1,000 ஏவுகணைகள், சுமார் 900 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை ரஷ்யா அழித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.…
-
- 4 replies
- 668 views
-
-
28 APR, 2024 | 11:36 AM ரஷ்யாவிலிருந்து இந்தியா நோக்கி சென்ற எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இந்தத் தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும், காசா மீதான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக வும், செங்கடல் வழியாக செல் லும் வணிகக் கப்பல்களைக் குறி வைத்து ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருக…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான…
-
- 0 replies
- 473 views
-
-
சித்திரவதை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை (Deshabandu Tennakoon) சந்தித்ததற்காக கனேடிய (Canada) பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றின் செய்தியின்படி, இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பீல் பிராந்திய பொலிஸ் தலைவர் நிஷான் துரையப்பா (Nishan Duraiappah), டிசம்பர் 29, 2023இல் தலைநகர் கொழும்பில் (Colombo) உள்ள பொலிஸ் தலைமையகத்தில் இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் சீருடையுடன் இருந்ததை காட்டியுள்ளது. புகைப்படங்களில் இருந்த சட்ட அமுலாக்க அதிகாரிகளில் ஒருவரான இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு, ஒரு நபரை "இரக்கமின்றி" தாக்கியதற்காக, இலங்கை நீதிமன்றம் ஏற்கனவே …
-
-
- 16 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிட்சுகோ டோட்டோரி கட்டுரை தகவல் எழுதியவர், மரிகோ ஓய் பதவி, வணிகச் செய்தியாளர் 33 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் (JAL) புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டோட்டோரியின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமானது. ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான விமான நிறுவனத்தில் கேபின் குழு உறுப்பினராக (விமானப் பணிப்பெண்ணாக) அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது ஜப்பான் ஊடகங்கள் டோ…
-
- 1 reply
- 278 views
- 1 follower
-
-
அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது - அமெரிக்க அதிகாரிகள் தகவல் Published By: Rajeeban 25 Apr, 2024 | 10:36 AM அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஸ்ய படையினருக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச்சில் அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கிய உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியின் ஒரு பகுதியான இந்த ஏவுகணைகள் இந்த மாதமே உக்ரைனை சென்றடைந்துள்ளன. இந்த ஏவுகணைகளை ஆகக்குறைந்தது ஒரு தடவையாவது உக்ரைன் பயன்படுத்தியுள்ளது - கிரிமியாவில் நிலை கொண்டுள்ள படையினருக்குஎதிராக…
-
-
- 3 replies
- 444 views
-
-
அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில், குறித்த திமிங்கிலங்கள் நேற்று (25) காலை கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றுவதற்கு, கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கரை ஒதுங்கிய 26 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/300286
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிற…
-
-
- 12 replies
- 824 views
-
-
ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியபோது நடந்த படுகொலைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்க வீரர்களால் நடத்தப்பட்டவை 2021 ஆம் ஆண்டு ஆவணியில் அமெரிக்கப்படை அவசர அவசரமாக ஆப்கானிஸ்த்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பொழுது, அவர்களுடன் பணியாற்றிய ஆப்கானியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் அமெரிக்கப் படைகளுடன் விமானம் ஏறித் தப்பித்துக்கொள்ள காபூல் விமான நிலையத்தைச் சுற்றி முற்றுகையிட்டு நின்றனர். இந்தச் சனக்கூட்டத்தை அவதானித்த ஐஸிஸ் பயங்கரவாதிகள், மக்கள் கூட்டத்திற்கு நடுவே தற்கொலைத் தாக்குதல் ஒன்றினை நடத்த பலர் கொல்லப்பட்டார்கள். இவர்களுள் 13 அமெரிக்கத் துருப்பினரும், 170 ஆப்கானியர்களும் அடங்கும். இத்தாக்குதல் குறித்த ஆ…
-
- 1 reply
- 236 views
-
-
மாலைதீவு நாடாளுமன்றத் தேர்தலில், சீன ஆதரவாளரான மொய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைத்திருக்கின்றது. மொய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள இந்த இமாலய வெற்றி மாலைதீவுக்குள் மொய்சுவின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதுடன், பிராந்திய இயக்கவியலில் ஒரு முக்கியமான மாற்றத்தை நிகழ்த்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மாலைதீவு இந்தியாவின் ஆதிக்கத்திலிருந்து வெளியேறி சீன நிலைப்பாட்டில், பயணிப்பதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர் என்பதை வெளிக்காட்டும் வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ச) https://newuthayan.com/article/…
-
- 1 reply
- 467 views
-
-
யூத மாணவர்களும் பங்கெடுப்பு அதிரும் அமெரிக்கப் பல்கலைகள். சுதந்திரப் பலஸ்தீனம் உருவாக்கப்படவேண்டும். பலஸ்தீனர்களின் வளங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி, அமெரிக்காவில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பல்லாயிரம் யூத மாணவர்களின் பங்கெடுப்புடன் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டங்கள் உலகின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்துள்ளதுடன், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் அமெரிக்க அதிபர் பைடனின் அரசாங்கத்துக்கு கனதியான அழுத்தத்தை வலியுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகின்றது. அமரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகத்துக்கு முன்பாகவும், நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லொஸ் வெகாஸ் பல்கலைக்கழகங்களுக்கு முன்பாகவும் இடைத்தங்கல் மு…
-
- 1 reply
- 423 views
-
-
ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது Posted on April 23, 2024 by தென்னவள் 20 0 ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்தனர். இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவுக்கு உள…
-
- 0 replies
- 454 views
-
-
Published By: RAJEEBAN 13 APR, 2024 | 01:58 PM அவுஸ்திரேலியாவில் வணிகவளாகமொன்றில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திகுத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். சிட்னியின் பொன்டி ஜங்சன் எனப்படும் பகுதியில் இந்த வன்முறை சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. வணிக வளாகமொன்றிற்குள் நபர் ஒருவர் கத்தியுடன் காணப்படுவதாக பொதுமக்களை எச்சரித்துள்ள காவல்துறையினர் பாரிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். அந்த பகுதியிலிருந்து பொதுமக்கள் தப்பிவெளியேறிய வண்ணமுள்ளனர். அவசரசேவை பிரிவினரின் வாகனங்கள் அந்த பகுதிக்கு விரைகின்றன. பலர் கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்ற…
-
- 6 replies
- 650 views
- 1 follower
-
-
நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு பிரித்தானிய நாடாளுமன்றம் அங்கீகாரம்! பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவது குறித்தான, ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள், இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் விமானம் மூலம் ருவாண்டா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்கள். இதனை செயற்படுத்துவதற்காக பிரித்தானிய அரசாங்கம், வாடகை விமானங்களை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும், இவ்வாறு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை அனுப்பி வைக்க தடுப்புக்காவல் இடத்தை அதிகரித்துள்ளதுடன், வழக்கறிஞர்களையும்…
-
- 0 replies
- 309 views
-
-
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி 20 Apr, 2024 | 03:40 PM பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரியணையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இளவரசர் ஹாரி தன்னை ஒரு அமெரிக்க குடிமகன் எனக் கூறியுள்ளார். பிரித்தானிய மன்னரான சார்ல்ஸின் மகனான ஹாரி, 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்திருலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார். தற்போது, அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மனைவி மேகன் மார்க்கல், குழந்தைகள் ஆர்ச்சி, லில்லிபெட் ஆகியோருடன் வசித்து வருகிறார். 2019 இல் அமெரிக்காவில், `Travalyst' என்றொரு பயணம் சார்ந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். அந்தச் சமயத்தில், ஹாரி அந்த நிறுவனத்தின் ஆவணங்களில் தனது வ…
-
- 5 replies
- 577 views
-