உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26727 topics in this forum
-
எல்லைப் பகுதியில் போர் நிறுத்த மீறல்கள் தொடர்ந்தால் வேறு வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும் என்று இந்திய விமானப்படை தளபதி என்.ஏ.கெ. பிரவுன் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இருநாடுகளிடையே எல்லைக் கட்டுப்பாடு கோடு இருக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. கடந்த சில நாட்களால நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ள நம்மிடமும் சில கட்டமைப்புகள் இருக்கின்றன. எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இத்தகைய யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்ந்து நீடித்து வந்தால் நாம் வேறு சில வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வேண்டியதிருக்கும் . அந்த வ…
-
- 7 replies
- 738 views
-
-
அப்கானிஸ்தான் எதிர்காலம் பற்றி ஒபாமாவும் கார்சாயும் பேசினார்கள்: அமெரிக்கா 2013இல் தாக்குதல் படைகளை பின்வாங்கும் அமெரிக்க படைகள் பயிற்சி மாடும் தரும் அமெரிக்க படைகளுக்கு பாதுகாப்பு குற்றவியல் உத்தரவாதம் தரப்படும் அமெரிக்க படைகள் கைதிகளை கையளிப்பர் அப்கானிஸ்தான் தலைவர் 2014இல் பதவியில் இருந்து விலகுவார் கட்டாரில் தலிபானுடன் பேசுகிறார் அதற்கு அமேரிக்கா ஆதரவு
-
- 4 replies
- 598 views
-
-
மாவோ.,க்களின் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ளவும், மறைந்து இருக்கும் மாவோ.,க்களை வேட்டையாடவும் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை காட்டுக்குள் அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன் கட்டுப்படுத்தவும் முடியும் என அரசு தரப்பில் நம்பப்படுகிறது. மாவோ.,க்களின் தொல்லை மீண்டும் தலைதூக்கி வருவதை அடுத்து அங்கு பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு முனைந்து வருகிறது. பீகார், ஒடிசாவை விட ஜார்கண்ட்டில் முழுக்கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. கூடுதல் கண்காணிப்பு: இது குறித்து சி.ஆர்.பி,எப்., டைரக்டர் ஜெனரல் பிரணாய் சகோய் கூறியதாவது: நக்சல்கள் அட்டூழியத்தை முறியடிக்க 10 ஆயிரம் வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள…
-
- 3 replies
- 502 views
-
-
ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மாலி நாட்டில் அல் குவைடா அமைப்பின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் நாட்டின் வடபுலத்தை பெரும்பாலும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டன. இந்த நிலையில் மாலி நாட்டு அதிபர் டியோன் கவுண்டா தரோற் பிரான்சிய படைகளின் உதவியை கோரி அவசர வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து மாலி நோக்கி பிரான்சிய படைகளை அனுப்புவதற்கான உத்தரவை அதிபர் பிரான்சியோ ஒலந்த விடுத்துள்ளார். மாலியில் நிலமை மோசமடைந்து பயங்கரவாத அமைப்பொன்று வெற்றிபெறும் நிலை உருவானதைத் தொடர்ந்து ஐ.நா வின் பாதுகாப்பு சபை சென்ற மாதம் அவசரமாகக் கூடியது தெரிந்ததே. அதைத் தொடர்ந்து மாலியில் ஏற்படும் நகர்வை தடுக்க ஆகவேண்டிய அனைத்தையும் செய்யும்படி பாதுகாப்பு சபை உத்தரவு வழங்கியிருந்தது. ஆபிர…
-
- 31 replies
- 1.8k views
-
-
டொரண்டோவில் கடந்த ஏழு வருடங்களுக்குப் பின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக டொரண்டோ சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. சனிக்கிழமை டொரண்டோவின் வெப்பநிலை 12C என்ற அளவு இருந்ததாகவும், இது கடந்த ஜூன் மாதம் 2006 ஆம் ஆண்டில் இருந்த அதிகபட்ச வெப்பநிலையான 9.6 C அளவை மிஞ்சியதாக இருப்பதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனடாவின் பல இடங்களில் இரட்டை இலக்கங்களில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சில இடங்களில் 10 முதல் 15 C என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குளிர்காலத்தின் இடைநிலை காலங்களில் இவ்வாறு அதிகபட்ச வெப்பநிலை இருப்பதை கனடிய மக்கள் வரவேற்று உள்ளனர். மேலும் ஒண்டோரியோ மற்றும் வடக்கு ஒண்டோரியொ பகுதிகளில் பரவியிருந்த பனிக்கட்டிகள் உருக தொடங்கியுள்ளது. சென்ற வருடத்தில் இத…
-
- 1 reply
- 343 views
-
-
பிரிட்டனில் இரட்டையராக பிறந்த இரு பெண்கள், தங்களைப் போலவே இரட்டையராக பிறந்த இரு ஆண்களை திருமணம் செய்து, அவர்களில் ஒரு தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தையாக பிறந்த அதிசயம் ஒன்று நடந்துள்ளது. பிரிட்டனில் Darlene and Diane Nettemeier என்ற இரண்டு இளம்பெண்கள் இரட்டையர்கள். இவர்கள் 1998ல் Twinsburg, Ohio, என்ற இடத்தில் இரட்டையர்களுக்காக நடந்த ஒரு விழாவில் Mark and Craig என்ற இரட்டையர்களாக பிறந்த வாலிபர்களை சந்தித்து, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு பின்பு பிரியாமல் அருகருகே இரண்டு வீடுகள் கட்டி அதில் இணைபிரியாமல் சந்தோஷ வாழ்க்கை நடத்தினர். இவர்களில் Diane and Craig என்ற தம்பதிகளுக்க் இரட்டை குழந்தைகள் பிறந்ததால் இரட்டை சந்தோஷம் அடைந்தனர். மேலும…
-
- 0 replies
- 477 views
-
-
பிரிட்டனில் உள்ள ஒருவர், தன்னுடைய உடலில் 15 இடங்களில் உடைந்த எலும்புகளுக்காக 34 இடங்களில் அறுவை சிகிச்சை செய்ததோடு, மாரடைப்பு நோயையும் சந்தித்து, சிறுநீரக கோளாருடன் அதிசயமாக உயிர் வாழ்ந்து வருகிறார். அவரது உடலில் செயல்பாடுகளைக் கண்டு, மருத்துவர்களே அதிசயிக்கின்றனர். Terry White என்ற 67 வயது பிரிட்டன் மனிதர், தன்னுடைய இடுப்பில் ஆறு இடங்களில் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். உடலின் பல்வேறு இடங்களில் உடைந்துள்ள 15 எலும்புகளை ஒன்று சேர்ப்பதற்காக 34 முறை அறுவைசிகிச்சை செய்துள்ளார். இதுமட்டும் போதாது என்று அவருக்கு அடிக்கடி மாரடைப்பும் வருமாம். இதுவும் போதாதென்று சிறுநீரகமும் வேலை செய்யாமல் பழுதடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 561 views
-
-
ப.சிதம்பரம் குடும்பத்தினர் கட்டிய ஆக்கிரமிப்பு சுவர் மக்களால் இடிப்பு; பதற்றம்! சென்னை: சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே மீனவக் கிராமத்தை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்துக் கட்டியதாகக் கூறப்படும் சுவரை, இன்று அப்பகுதி பொதுமக்கள் இடித்துத் தள்ளினர். நீலாங்கரை அருகே உள்ள கரிக்காட்டுக் குப்பம் என்ற கிராமத்தில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு சொந்தமாக இடம் உள்ளது. அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை,அவர்கள் ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் கட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மீனவ மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில், இன்று அவர்கள் த…
-
- 2 replies
- 546 views
-
-
சென்னை: கூடங்குளம் மின் உற்பத்தி மேலும் தாமதம் ஆகும் என்று இந்திய அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரிமாதம் முதல்தான் முதலாவது அணு உலை செயல்படத் தொடங்கும் என இந்திய அணுசக்தி கழகம் அறிவித்துள்ளது. இருப்பினும் தாமதத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதுவும் தள்ளிப் போனது. அதன்பிறகு பொங்கல் அன்று சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும், குடியரசு தினத்தில் இருந்து வணிக ரீதியில் 350 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 626 views
-
-
புதுடெல்லி: போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறினால், மாற்று வழி குறித்து யோசிக்க வேண்டியது வரும் என பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை தளபதி .பிரௌனி எச்சரித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை தாண்டி வந்து அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான் படையினர், இந்திய வீரர்கள் 2 பேரை கொன்று,அவர்களில் ஒரு வீரரின் தலையை துண்டித்த சம்பவம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே எல்லைப்பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று 8 முறை தாக்குதல் நடத்தியது.இந்திய படையினரும் பதிலடி கொடுத்த நிலையில், எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறினால், மாற்று வழி ( தாக்குதல் …
-
- 3 replies
- 431 views
-
-
ஆஸ்திரேலியாவின் qantas விமானத்தில் மலை பாம்பு ஒன்று 1:45 மணி நேரம் பயணித்து விமான பயணிகளை பரபரப்புக்கு உள்ளாக்கியது. ஆஸ்திரேலியாவில் உள்ள குவாண்டாஸ் (quantas ) QF191 விமானம் ஒன்று கைரேன்ஸ் (cairns ) என்னும் இடத்தில் இருந்து போர்ட் மொரேஸ்பை (Port Moresby ) க்கு காலை 6:15 க்கு புறப்பட்டது. விமானம் பரந்த சிறிது நேரத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் ரெக்கையில் எதோ அசைவதை கண்டார். உன்னிப்பாக கவனித்ததில் அது ஒரு 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு என தெரிய வந்தது. விமானத்தில் மலைப்பாம்பு பயணிக்கும் தகவல் விமான பணி பெண்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளும் பரபரப்புக்கு உள்ளாகியது. விமானம் பல ஆயரம் அடி உயரம், அதுவும் 400Kம் வே…
-
- 0 replies
- 535 views
-
-
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கம் எல்லாம் அர சியல்வாதிகளின் வெற்றுக் கூச்சல். அந்தக் கூச்சல்கள் எல்லாம் நீதிமன்றத்தில் செல்லாது’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டது சென்னை உயர் நீதி மன்றம். கடந்த 2-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சிவக்குமாருக்கும் வழக்கறிஞர் பாரிக்கும் இடையே நடந்த வாதப் பிரதிவாதம்தான் நீதிமன்றத்தில் தமிழுக்கான இடம் என்ன என்பதை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்பு, உரிமையியல் வழக்கு ஒன்றில் வாதாட ஆஜரான வழக்கறிஞர் பாரி, தமிழில் தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது நடந்தது இதுதான்... நீதிபதி சிவக்குமார்: ''நீங்கள் ஏன் தமிழில் வாதாடுகிறீர்கள்? ஆங்கிலம்தானே நீதிமன்றத்தின் அலுவல் மொழி…
-
- 4 replies
- 709 views
-
-
எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை! 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் ஒளி பரப்பப் போவதாக கமல் அறிவித்த நாளில் இருந்தே பிரச்னைகளும் ஆரம்பமாகின. தியேட்டர் உரிமையாளர்கள் கமலை எதிர்த்து அறிக்கை விட்டது, போலீஸ் கமிஷனரைச் சந்தித்தது என அடுத்தடுத்தப் பிரச்னைகளுக்கு இடையில்... கடந்த 9-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் கமல். அந்த சந்திப்புக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், '' 'விஸ்வரூபம்’ படம் முதலில் தியேட்டரில் ர…
-
- 1 reply
- 944 views
-
-
ஸ்டாலின்தான் அடுத்தத் தலைவர், அதற்கான தேர்தல் வந்தால், நானே அவர் பெயரை முன்மொழிவேன் என்று கருணாநிதி அறிவித்தது, தி.மு.க. வட்டாரத்தை உற்சாகம் அடையவைத்து இருக்கிறது. 'பொதுக் குழுவில் தனிப்பட்ட வாய்ப்பு எனக்குக் கிடைத் தால், தி.மு.கழகத்தின் தலைவராக ஸ்டாலினைத்தான் முன் மொழிவேன்’ என்று கருணாநிதி சொன்னது தற்செயலானதா, திட்டமிட்டதா... என்பதுதான் அனைவர் மனதையும் அரித்துக் கொண்டு இருந்தது. 6-ம் தேதி காலையில் அந்தப் பேட்டியை முடித்துவிட்டு கருணாநிதி வீட்டுக்குப் போனபோது அவரது மகள் செல்வி வாசலில் நின்று வரவேற்றுக் கைகொடுத்தார். 'எல்லாப் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வெச்சுட்டீங்கப்பா’ என்பது அவருடைய கருத்து. அதன்பிறகு, தன்னைப் பார்க்க வந்தவர்கள் அனைவரிடமும் 'நான் சொன்னது சரிதானய்ய…
-
- 1 reply
- 912 views
-
-
எல்லை பகுதியில், ராணுவத்தை குவித்து வரும் பாகிஸ்தான், தங்கள் வீரர்களின் விடுமுறையையும் ரத்து செய்துள்ளது. இந்திய ராணுவமும், எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளது. இதனால், எல்லையில், பதற்றமான சூழல் நிலவுகிறது. ஜம்மு - காஷ்மீரில், இந்தியா - பாக்., எல்லை பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆனாலும், போர் நிறுத்த விதிமுறைகளை மீறி, பாக்., ராணுவம், இந்திய நிலைகள் மீது, அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.காஷ்மீர், பூஞ்ச் மாவட்டத்தில், 8ம் தேதி, இந்திய எல்லைக்குள், பாக்., ராணுவத்தினர் அத்துமீறி பிரவேசித்தனர். கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் தலைகளையும், காட்டுமிரா…
-
- 3 replies
- 645 views
-
-
சென்னை:"அ.தி.மு.க., ஆட்சியில், கறிவேப்பிலை இரு மடங்கு உயர்ந்துள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விலைவாசி எப்படி குறைந்துள்ளது தெரியுமா? முதல் ரகம் பச்சரிசி ஒரு கிலோ, 2012ல், 32 ரூபாய்; தற்போது, 40 ரூபாய். இரண்டாம் ரக பச்சரிசி, ஒரு கிலோ, 22 ரூபாய்; தற்போது, 30 ரூபாய். பொங்கல் தயாரிக்க தேவையான வெல்லம் ஒரு கிலோ, 2012ல், 35 ரூபாய்; தற்போது 42 ரூபாய்.ஆட்டுக்கறி, 2012ல் ஒரு கிலோ, 320 ரூபாய்; தற்போது, 450 ரூபாய். நாட்டுக் கோழி, 2012ல் ஒரு கிலோ, 220 ரூபாய்; தற்போது, 320 ரூபாய். இரண்டு மாதங்களில், கறிவேப்பிலையின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இது தான் அ.தி.மு.க., ஆட்சியின் விலைவாசி நிலைமை. வாங்கும்…
-
- 1 reply
- 592 views
-
-
-
கனடாவின் மிகப்பெரிய விமானநிலையமான டொரண்டோவில் உள்ள பியர்சன் விமானநிலையத்தில் கம்ப்யூட்டர் பழுது காரணமாக பல விமானங்கள் காலதாமதாக வந்து போயின. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கம்ப்யூட்டர் டெக்னீஷியன்களின் தீவிர முயற்சியால், பழுது சரிபார்க்கப்பட்டதாக விமானநிலைய செய்தித்தொடர்பாளர் Ron Singer இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். Ron Singer மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கம்ப்யூட்டர் பழுது காரணமாக விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும், காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாலை 5.30 மணியளவில் பழுதுநீக்கப்பட்டு, மீண்டும் இயல்புநிலை திரும்பியது என்றும் அந்த இரண்டு மணி நேரங்களில் ஏற்பட்ட அசெளகரிகத்திற்கு நிர்வாகம் வருத்தப்…
-
- 0 replies
- 311 views
-
-
அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடாவின் Hallandale Beach அருகேயுள்ள உள்ள ஒரு பூட்டிய வீட்டில் கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குளிர்காலத்தை Hallandale Beach தட்பவெப்பத்தை ரசிக்க வந்த கனடியன் தம்பதி, அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். அவர்கள் தினசரி பக்கத்து வீட்டு நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம். சென்ற வியாழக்கிழமை பக்கத்து வீட்டுகாரர் போன் செய்து சாப்பிட அழைத்தபோது, எவ்வித பதிலும் வராததால், சந்தேகம் அடைந்து, விட்டை திறந்து பார்த்தபோது தம்பதிகள் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே ஃபுளோரிடா காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து, முதல்கட்ட விசாரணை செய்தனர். உறவினர்கள…
-
- 0 replies
- 400 views
-
-
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் பள்ளியில் சொல்லித் தரும் யோகா வகுப்புகளில் இந்துத்துவத்தை சேர்த்து கற்பிப்பதாகக் குற்றம்சாட்டி சிலர் பெற்றோர்கள் அந்த வகுப்புகளை நீக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளுக்கு யோகா கற்றுத் தருகின்றனர். கலிபோர்னியாவில் உள்ள ஆலிவ்ஹெய்ன் பயனியர் துவக்கப்பள்ளியிலும் மாணவர்களுக்கு யோகா கற்றுத் தருகின்றனர். இதற்கு இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களில் சிலர் ஆதரவும், மேலும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். யோகா வகுப்புகளில் சூர்ய பகவானுக்கு நன்றி சொல்லுமாறு கூறுகின்றனர். இதைப் பார்த்தால் யோகா வகுப்பு போன்று இல்லை ஏதோ மத போதனை வகுப்பு போன்று உள்ளது என்று ஒரு மாணவனின் தாய் மேரி ஈடி தெரிவித…
-
- 0 replies
- 348 views
-
-
மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் பிறந்த நாளன்று மும்பை பெண்களுக்கு கத்தி வழங்க அக்கட்சி தொண்டர்கள் தீர்மானித்துள்ளனர். மறைந்த சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேயின் பிறந்த நாள் இம்மாதம் 23ஆம் தேதி வருகிறது. பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள அக்கட்சியினர், விழாவின்போது பெண்களுக்கு கத்தி வழங்க தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து சிவசேனா தலைவர்களில் ஒருவரான அஜய் சவுத்திரி கூறுகையில், பெண்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறியதால் எங்கள் கட்சியினர் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள உதவும் கத்தியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் பெண்களுக்கு வழங்கவிருக்கும் கத்தி சீனாவில் தயாரிக்கப்பட்டது. இரண்டாக மடிக்ககூடிய இந்த சிறிய வகை கத்தியை பெண்கள் சு…
-
- 0 replies
- 575 views
-
-
ரிசர்வ் போலிஸை சுட்டு அவரது வயிற்றில், ஒன்றரை கிலோ வெடிகுண்டுகளை நிரப்பி போலிஸின் உடலை அனுப்பியுள்ளனர். மருத்துவர்கள் உரிய நேரத்தில் கண்டறிந்ததால் பெரிய நாசம் தவிற்கப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் கடந்த 7 ஆம் தேதி மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸுக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், மத்திய ரிசர்வ் போலீஸ் 9 பேர் உட்பட 13 பேரை மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொன்றனர். இறந்தவர்களின் உடல்களை அதிரடிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப் பட்ட காவல் படையைச் சேர்ந்த பாபுலால் படேல் என்பவரின் வயிற்றுப் பகுதி வெட்டி தைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சந்தேகத்தில் உடலை ஸ்கேன் செய்து பார்த்ததபோது, வயிற்றுப் பகுதியில் …
-
- 0 replies
- 299 views
-
-
ஸ்ரீவில்லிபுத்தூர்: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும் என்றும், கருணாநிதிக்கு இருந்த பெருந்தன்மை ஜெயலலிதாவுக்கு இல்லை என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபட்ட விஜயகாந்த், அக்கோவில் தங்க விமான திருப்பணிக்காக 105 கிராம் தங்க நாணயங்களை கோவிலுக்கு வழங்கினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்திடம் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜயகாந்த்,"நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு இப்போது என்ன அவசரம் ?. நேரம் வரும்போது முடிவு செய்வோம்" என்றார். "எங்க அம்மா ஆண்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில் இளம் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சலம்பர் என்னும் இஸ்லாமிய கிராம பஞ்சாயத்திலேயே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,"இந்த ஊர் பெண்கள் பெற்றோர் விருப்பப்படியே நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.அதை மீறினால் ரூ.51 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். செல்போன்கள்தான் இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்து விடுகின்றன. எனவே பெண்கள் செல்போனில் பேச தடை விதிப்பதற்கு எல்லாரும் சேர்ந்து ஏகமனதாக முடிவு செய்துள்ளோம்.இதை எல…
-
- 1 reply
- 369 views
-
-
திருவாரூர்: என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான காவல்துறை டி.எஸ்.பி. வெள்ளத்துரை மற்றும் 4 பேர்களுக்கு எதிராக திருவாரூர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. ‘மாட்டு’ ரவி என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்த நான், தினமும் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்தேன். அப்போது வெள்ளைத்துரை தலைமையில் வந்த போலீஸ் குழு ஒன்று, என்னைத் தூக்கிச் சென்று என்கவுன்டரில் கொல்ல முயன்றது. இந்தத் தகவல் அறிந்த எனது வழக்கறிஞர் ஊடகங்களுக்கு தகவல் சொன்னதோடு, காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் தந்தி மூலம் தகவல் அனுப்பினார். அதனை அடுத்து என்கவுன்டர் திட்டத்தைக் கைவிட்டனர்.…
-
- 0 replies
- 615 views
-