Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: ரெய்டு நடத்தி மிரட்டி, பல நடிகைகளை வருமான வரித்துறை உதவி ஆணையர் ரவீந்திரா வளைத்துப் போட்டுள்ளதாக சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மேல் முறையீட்டு உதவி ஆணையர் ரவீந்திரா ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் எவரான் எஜுகேஷன் நிறுவனம் என்ற ஆன்லைன் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிஷோர் குமார், உத்தம் சந்த் ஆகியோரும் சிக்கினர். ரவீந்திராவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திரா லஞ்சம் மூலம் பெருமளவில் சம்பாதித்துக் குவித்த…

  2. சென்னை, செப். 2- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்துக்கு பேசிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி விஷமிகள் யாராவது போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார்கள். நேற்று மாலை 3.12 மணியளவில் இந்த அலுவலகத்துக்கு சிறுவன் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசினார். "ஜெயலலிதா அம்மாவுக்கும், அவரது அலுவலகத்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லிவிட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்" என்று பேசி விட்டு அந்த மர்ம நபர் போனை வைத்து விட்டார். இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்ப…

  3. http://www.pearlaction.org/ Appeal for Clemency for Death-Row Inmates August 29, 2011 We are writing to you to urge you to intervene and advocate for clemency for the three death-row inmates accused of the assassination of former Prime Minister Rajiv Gandhi. His death was regrettable; please do not shed further blood because of this tragic event. Mr. Perarivalan, Mr. Murugan and Mr. Santhan are scheduled to be hanged on September 9th. Unfortunately, their appeal for clemency has been denied. The death penalty in India has not been used in 7 years. Resurrecting the use of capital punishment would tarnish India�s progress towards just and humane treat…

  4. 07.09.11 மற்றவை அகிம்சை பாதையில் செல்லும் அன்னா ஹசாரேவின் அறப் போராட்ட எழுச்சி முதல்...தமிழர்கள் மூவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தூக்குத்தண்டனை வரை, பேசத் தொடங்கினால் தமிழருவி மணியன் அனல்அருவி மணியனாகிறார். ‘‘அன்னா ஹசாரே போராட்டத்தின்மூலம் இரண்டு நல்ல விஷயங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. காந்தியம் என்பது செல்லாத காசு என்று எல்லாரும் முடிவெடுத்த நிலையில், அந்த காந்தியம் ஒன்றுதான் ஒரு அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மாற்றத்தை உருவாக்கும் வலிமை மிக்க ஆயுதம் என்பதை இந்தப் போராட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஊழல், இந்தியாவில் சகல தளங்களிலும் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. இதுவ…

  5. 08.09.11 கவர் ஸ்டோரி முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அனைவரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது எதிர்பாராத ஒன்று. யாரும் கொலை செய்யவில்லை என்றால்... தா.கிருட்டிணனே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாரா?’ தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா எழுப்பிய இந்தக் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியது. ‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என தேர்தல் வாக்குறுதியும் அளித்தார். இதன்படி, வாக்குறுதியை நிறைவேற்ற போலீஸாரும் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த 2001-ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் செல்வாக்கு சரிந்திருந்தது. ம…

  6. லிபிய மிஸ்ரடா நகரை கைப்பற்றும் நடவடிக்கையின்போது அந்நாட்டு தலைவர் கேணல் மும்மர் கடாபிக்கு விசுவாசமான படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தனது இளவயது மகள்மார் மூவரை தந்தையொருவர் கழுத்தை வெட்டி கௌரவக் கொலை செய்தமை தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் புதன்கிழமை "த டெய்லி மெயில்' ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மிஸ்ரடா நகரில் கடாபியின் ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலின் போது, தொடர்ந்து இரு வார காலமாக அந்நகர் லிபியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. இதன்போது கடாபியின் படையினர், நூற்றுக்கணக்கான மக்களை மனிதக் கவசங்களாக பயன்படுத்தியுள்ளனர். மிஸ்ரடா நகரின் புறநகரப் பகுதியிலுள்ள தொமினியா எனுமிடத்தில் குறிப்பிட…

  7. விக்கிலீக்ஸ் இணையத்தளம் சைபர் தாக்குதலால் பாதிப்பு! Published on September 1, 2011-4:52 am அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இரகசிய தகவல்கள் உட்பட நாடுகளுக்கிடையிலான ஆயிரக்கணக்கான இரகசியத் தகவல்களை வெளியிட்டு உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தீikilலீaks.org என்ற தமது இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், மாற்று இணையத்தளத்தினூடாக தகவல்களைப் பார்க்க முடியுமென்றும் இணையத்தளத்தைச் சார்ந்தவர்கள் அறிவித்துள்ளனர். விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்ட, வெளியிட்டுவரும் இராஜதந்திர ரீதியிலான தகவல்கள் யாவும் ஒபாமா நிர்வாகத்துக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்திவந்த நிலையிலேயே இந்த இணையத்தளம் …

  8. தூத்துக்குடி: இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு ஆசனவாயில் மறைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்த பெண்ணை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். இலங்கையிலிருந்து ஒரு பெண் தங்க கட்டிகளை தூத்துக்குடிக்கு கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை கொழும்பில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்த பயணிகள் கப்பலில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சந்தேகத்தின் பேரில் இரு பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஒருவர் திருச்சி ஐயப்பன் நகரை சேர்ந்த சந்திரலிங்கம் மனைவி கோடீஸ்வரி என்பதும் அவருடன் வந்தவர் கொழும்புவை சேர்ந்த செல்வநாயகம் மனைவி பார்வதம் என்பதும் தெரிய வந்தது. இருவரின் உடமைகளையும் அதிகாரிகள் …

  9. ஒபாமாவின் மாமனார் கைது. அமெரிக்காவின் மாசூஸெட்ஸ் நகரில், மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய குற்றாச்சாட்டின் பேரில் அமெரிக்க ஜனாதிபதியின் மாமனார் குடியகல்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்யங்கோ ஒபாமா ஃபிராமிங்காமில் (வயது 67) கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். பொலிஸார் கைது செய்யப்பட்ட நபரிடம் யாருக்காவது தொலைபேசியில் பேச விரும்புகிறீர்களா? எனக் கேட்டபோது, வெள்ளை மாளிகைக்கு பேசலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். எனினும் இதுகுறித்து வெள்ளை மாளிகை கருத்து எதுவும் கூறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆன்யாங்கோ ஒபாமா கென்யாவில் இருந்து அமெரிக்கா வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி.

  10. உலக காணாமல் போனோர் தினம் காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினமாக ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முரண்பாடுகள் மற்றும் அமைதியீனத்தைக் கையாள்வதற்காக சில நாடுகளில் ஆட்களை கட்டாயமாக கடத்தி அல்லது வேறு வழியில் காணாமல் போகச் செய்யும் நடைமுறை இன்னமும் மேற்கொள்ளப்படுவதை, இந்தத் தினத்தில், ஐ நா கண்டித்திருக்கிறது. அதேவேளை, காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் எப்போதாவதுதான் கவனிக்கப்படுவதாகக் கூறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அத்தகைய…

    • 0 replies
    • 366 views
  11. சென்னை: ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை அவர் சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப் படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக இன்று ஆஜரானார் ராம்ஜேத்மலானி. அப்போது அவர் வாதிடுகையில், கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை. ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில் கழித்து விட்ட நபருக்கு, கருணை மனு தாக்கல் செய்து 11…

    • 3 replies
    • 1.1k views
  12. ட்ரிபோலி: பதவியில் இருந்து நீக்கப்பட்ட லிபிய அதிபர் கடாபி தனது பெண் மெய்க்காப்பாளர்கள் 5 பேரை பாலியல் பலாத்காரம் செய்ததுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து சன்டே டைம்ஸ் ஆப் மால்டாவில் கூறப்பட்டுள்ளதாவது, பதவியிறக்கப்பட்ட லிபிய அதிபர் கடாபியின் முன்னாள் பெண் மெய்க்காப்பாளர்கள் 5 பேர் பெங்காஸியைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் செஹாம் செர்கிவாவிடம், கடாபியும், அவரது மகன்களும் தங்களை போதும் என்ற அளவுக்கு அனுபவித்துவிட்டு தூக்கி எறிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். செர்கிவா இந்த வாக்குமூலங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளார். சர்வதேச நீதிமன்றம் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி உள்ளிட்டவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவர்கள் மீதுள்ள ப…

    • 5 replies
    • 1.1k views
  13. கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அவரது தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது. இது தொடர்பாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியதாவது: மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்தனர். சில அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இதை விஜய் ஏற்றுக் கொண்டார். அ.தி.மு.க.வுடன் எங்களது சுமூகமான உறவு உள்ளது. எனவே உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு ரசிகர்களிடம் தெரிவிக்கப்பட்…

  14. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி நடத்தப்படும் போராட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டத்தின் ஆட்சியை மதிக்கின்ற இந்தியாவில் சட்டம் வழங்கிய தீர்ப்புகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கடமையாகும். தமிழ்நாட்டிலும் சட்டமும் நீதிமன்றமும் நீதிமன்ற தீர்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். தனி மனிதர்களுக்காக வளைந்துகொடுக்கக் கூடாது. இது இன்றைக்கு நடைமுறைக்கு வரவில்லை என்று சொன்னால், மீண்டும் கற்காலத்துக்கு தமிழ்நாட்டு மக்களை அழைத்துச் செல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். அப்பொழுது சுதந்த…

  15. நைஜீரியா தலைநகர் அபுஜாவில் உள்ள் ஐ.நா அலுவலகத்தில் சக்தி வாய்ந்த தற்கொலைப்படை குண்டு வெடித்தது. இதில் 18 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் காவல்துறை மீட்பு படையினர்,மற்றும் பல தனியார் பாதுகாப்பு அணிகள் திரண்டு வந்து மீட்புப்பணியை போர்க்கால அடிப்படையில் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். படுகாயம் அடைந்த பலருக்கு ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நைஜீரிய மருத்துவமனையில் போதுமான அளவு ரத்தம் கையிருப்பு இல்லை. எனவே தன்னார்வத் தொண்டர்கள் ரத்ததானம் செய்ய முன்வந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை நடைபெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெ…

  16. அமெரிக்காவை மையம் கொண்டிருக்கும் ஐரின் சூறாவளி அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களை தாக்கும் என்ற செய்தியால் குடும்பத்துடன் உல்லாச சுற்றுலா செல்ல இருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா தன் சுற்றுலாவை ரத்து செய்து விட்டார்.' சூறாவளி நேரத்தில் மக்களுடன் இருந்து மீட்புப் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை கவனிக்க வேண்டி உள்ளதால் விடுமுறைச் சுற்றுலாவை ரத்து செய்துவிட்டேன். மேலும் அமெரிக்க மக்களுக்கு ஒபாமா ஒரு எச்சரிக்கை அறிவிப்பும் விடுத்து உள்ளார். அவருடைய எச்சரிக்கை அறிக்கையில், அமெரிக்காவின் முக்கிய நகரங்களான, நியூயார்க், வாஷிங்டன் மற்றும் கிழக்கு கடற்கரைப் பிரதேசங்களை ஐரின் புயல் வலிமையாக தாக்கக்கூடிய அபாயம் இருப்பதால், அங்குள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் …

    • 0 replies
    • 519 views
  17. ஜப்பானிய பிரதமர் கான் பதவி விலகினார் வீரகேசரி இணையம் 8/26/2011 4:34:21 PM ஜப்பானிய பிரதமர் நயோடோ கான் பதவி விலகுவதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இவ்வாண்டு மார்ச் மாதம் ஜப்பானைத் தாக்கிய பூமியதிர்ச்சி, சுனாமிப் பேரலைகளுக்குப் பின்னரான நிலைமையைக் கையாள்வதில் முகாமைத்துவக் குறைபாடு உள்ளதாக பல்வேறு தரப்பினராலும் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அவர் பதவி விலகியுள்ளார். அந்நாட்டு ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த அவர் அப்பதவியிலிருந்தும் இராஜிநாமா செய்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது கட்சியின் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் அவர் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளார். இதன்பிரகாரம் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்படுபவர் ப…

  18. நாடற்ற நிலையில் 12 மில்லியன் மக்கள் தென்கிழக்காசியா, மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் 12மில்லியன் மக்கள் நாடற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிரிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரியின் கூற்றுப்படி இவர்கள் மிக மோசமான நாட்டுச் சூழலில் வாழ்வதால் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர் என்கின்றனர். குடிமகன்களாகப் பதியாததால் இம்மக்கள் சொத்துக்களைச் சொந்தமாக்குவதிலும் வங்கிக் கணக்குகளைத் திறப்பதிலும் சட்டரீதியாகத் திருமணம் செய்வதிலும் பிள்ளைகளின் பிறப்பைப் பதிவதிலும் சிக்கல்…

    • 0 replies
    • 410 views
  19. பதிந்தவர்: ADMIN வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011 லிபியத் தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அதன் ஒரு பகுதியை தம்வசப்படுத்தியுள்ளனர். 24 மணி நேரமும் ஆளில்லா அமெரிக்க வேவு விமானங்கள் லிபியா மேல் பறந்தவண்ணம் உள்ளது. அதுமட்டுமா ? நேட்டோப் படைகள் வேறு கண்காணித்து வருகிறது. போதாக்குறைக்கு நேட்டோ நாடுகளின் ஸ்பை சட்டலைட்( உளவு பார்க்கும் செயற்கைக்கோள்) வேறு கமராவில் விளக்கெண்ணையை ஊற்றி அவதானித்து வருகிறது. இது எல்லாம் இப்படி இருக்க அதிபர் கடாபி தலைநகரில் இருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்று எல்லாரும் குழப்பிப்போய் உள்ளனர். இதற்கு விடை நேற்று மாலைதான் கிடைத்தது ! அது என்ன வென்றால் பல மைல் நீளமான சுரங்கப் பாதை. லிபிய அதிபர் கேணல் கடாபியின் மாளிகைக்குள்…

  20. நீங்கள் மனது வைத்தால் முடியும். கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த கடுமையான நிலைபாட்டினால், நாங்கள் உங்களிடம் பெரிதாக எதையும் எதிர்ப்பார்க்கவில்லை என்பதே உண்மை. ஆனால், நாங்கள் நினைத்ததை பொய்யாக்கும் விதமாக, தமிழக சட்டசபையில், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நீங்கள் நிறைவேற்றிய போது, இடிந்து போயிருந்த தமிழினத்திற்கு நம்பிக்கை பிறந்தது. போர்க்குற்றங்கள் புரிந்து, அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இன வெறி அரசுக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒளி தெரிந்தது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி க்ளின்டனின் இந்திய வருகையின் போது, மாநில முதலமைச்சர்கள் வெளியுறவுக் கொள்கையை விவாதிக்கக் கூடாது என்ற மரபை மீறி தாங்கள் முள…

  21. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மத்திய அரசை ஆளும் பிரதானக் கட்சியான காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்தப் பிரச்சனையிலே அக்கறையோடு மூன்று உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். முடிவெடுக்க இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் இந்தப் பிரச்சினையிலே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, இந்த மூவரின் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்திட வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொ…

  22. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் எழுதிய நூலின் இந்தி பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கு உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்ச்சி முடிந்ததும் அற்புதம்மாள் சென்னை திரும்பினார். டெல்லி செ…

  23. தமிழக கவர்னராக ரோசய்யா நியமனம் தமிழக கவர்னராக உள்ள சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து அடுத்த கவர்னர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக கவர்னராக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கே. ரோசய்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. இதேபோல் கேரள மாநில கவர்னராக, ஜார்கண்ட் மாநில கவர்னராக இருக்கும் எம் ஓ எச் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச கவர்னராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராம் நரேஷ் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் கவர்னர் சையத் அகமது ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். வி.புருஷோத்தமன் மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்…

    • 0 replies
    • 282 views
  24. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நாடாளுமன்றத்தில் முழுக்கமிட்டார். மூவரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். உள்ளே சென்று, அட்டையை உயர்த்தி பிடித்து மூவரின் தூக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் முழக்கமிட்டார்.பின்னர் வெளிநடப்பு செய்தார். வெளியே வந்ததும் செய்தியா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.