உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27011 topics in this forum
-
பாரிய தீ விபத்து - ஐவர் கொல்லப்பட்டனர் April 14, 2011, 10:38 am[views: 693] பரிசின் 10வது வட்டாரத்தில் மாபெரும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. Ménilmontant இலுள்ள Cité du Labyrinthe எனும் அடுக்குமாடிக் கட்டிடம் தீப்பற்றிக் கொண்டது. இதில் ஐவர் கொல்லப்பட்டு 57 பேர் காயமடைந்துள்ளனர். இதில் அறுவர் நிலை ஆபத்தான கட்டத்திலுள்ளது. தீக்குரிய காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இன்று அதிகாலை 2h30 அளவில் கட்டிடத்தின் நிலமட்டப் பகுதியில் (RDC) இருந்த அறையிலேயே தீப்பற்றிக் கொண்டது. இவ்வறையில் யாரும் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிப்தில் இறந்த ஐவரில் நால்வர் தீப்பற்றிக் கொண்டதையடுத்து யன்னலில் இருந்து குதித்ததனாலேயே இறந்துள்ளனர். இவர்கள் மெத்தைகளைக் கட்டிக்…
-
- 0 replies
- 999 views
-
-
ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணுக் கதிர்வீச்சின் அளவை உலகில் உச்சபட்ச அளவான “7 ” என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது செர்னோபிளில் நடந்த அணு உலை விபத்தோடு சமமான அளவாகும். இந்நிலையில் புகுஷிமா அணு உலைகளில் இருந்து தொடர்ந்து கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் புகுஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் கடந்த மார்ச் 11ம் திகதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்குப் பின் உலைகளில் தொடர்ந்து வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படத் துவங்கியது. கடந்த ஒரு மாத காலமாக அந்த உலைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ஜப்பான் அரசு போராடியும் பயன் எதுவும் கிட்டவில்லை. உலைகளில் ஏற்ப…
-
- 0 replies
- 548 views
-
-
நியூயோர்க் விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்
-
- 3 replies
- 1.4k views
-
-
பெலரோஸ் நாட்டின் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடித்தில்11 பேர் பலியாயினர்.90 பேர்படுகாயமடைந்தனர். பெலரோஸ் நாட்டின் மனி்சிக் நகரில் உள்ள ஒகாயாபிரஸ்காய மெட்ரோ ரயில்நிலையத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.அப்போது பணிமுடித்து விட்டு ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரு ரயில்கள் சேதமடைந்தனர். மேலும் பயணிகள் உபயோகப்படுத்தும் எஸ்கலேட்டர் சேதமடைந்தது. 90 பேர் படுகாயமடைந்ததாகவும், இதில் 50 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து அதிபர் அலெக்ஸாண்டர்லுகோஸ்வகி, அவரசமாக மந்திரிசபையினை கூட்டி விவாதித்தார். குண்டுவெடிப்பு சம்பவத்த…
-
- 0 replies
- 518 views
-
-
தெலுங்கு சினிமா பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிக்குவித்த படங்கள் தமிழில் "டப்" பண்ணப்பட்டு ரசிகர்களின் பார்வைக்கு வர உள்ளன. இந்த வரிசையில், தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுனா, அனுஷ்கா, ப்ரியாமணி, சார்மி மற்றும் பலர் நடித்துள்ள "வம்பு" படம், ஹீரோ மகேஷ் பாபு, அனுஷ்கா, பிரகாஸ்ராஜ், கோடா ஸ்ரீநிவாஸ் மற்றும் பலர் நடித்துள்ள "பத்ரி" படம் வெளியாகின்றன. இந்த படங்களின் ஆடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். வம்பு படத்தின் பாடல்களை கவிஞர்கள் சந்திரன், கார்கோ, தமிழமுதன், கருணாநிதி ஆகியோர் எழுதியுள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். பத்ரி படத்துக்கு கவிஞர் முத்துலிங்கம், கார்கோ, ஜெயமுரசு, பிரகலாதன் ஆகியோர் எழுதியுள்ளார்கள். இப்படத்துக்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். நாகார்ஜுனா, அனுஷ்க…
-
- 0 replies
- 706 views
-
-
தேசிய விருது பெற்ற நடிகரான சியான் விக்ரம் ஐக்கிய நாடுகள் சபையின் ஹாபிடேட் (ஐ நாவின் மனித குடியேற்ற திட்டம்)பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை அவரது மக்கள் தொடர்பாளர் தெரியப்படுத்தியுள்ளார். இந்த நல்லெண்ணத்தூதுவர் பொறுப்புக்கு உலகம் முழுவதும் இருந்து நான்கு நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆசியாவில் இருந்து தேர்வு செய்யப்படிருப்பது விக்ரம் மட்டுமே. கென்யாவின் நைரோபியில் நடைபெறும் 23 -வது நிர்வாக் குழு கூட்டத்திற்கு சியான் அழைக்கப்பட்டுள்ளார். இன்று தொடங்கி 15 -ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சியான் விக்ரம் இன்று கலந்துக்கொண்டுள்ளார். வறுமை ஒழிப்பிற்கும் , நீடித்த நகர்புற வளர்ச்சிக்கும், …
-
- 0 replies
- 553 views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
வரிக்கோஸ்ட்டில் லோரென்ற் பாக்போவின் வாசஸ்தலம் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதலைத் தொடர்ந்து பாக்போ சரணடைந்துள்ளார். ஐவரிக்கோஸ்ட்டின் ஜனாதிபதிகளாக லோரென்ற் பாக்போ மற்றும் அலஸ்ஸன்னே ஒட்டாரா ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையின் உச்சக்கட்டமாக பாக்போவுக்கு எதிராக ஐ.நா. மற்றும் பிரான்ஸ் படைகளின் ஆதரவுடன் ஒட்டாராவின் படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் பாக்போவின் வாசஸ்தலம் மீதான தொடர் தாக்குதலின் பின்னர் பாக்போ சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாக்போ சரணடைந்துள்ள நிலையில் அவருடைய செயற்பாடுகளை முடக்குமாறு ஒட்டாரா வலியுறுத்தி வருகின்றார். இந்நிலையில், பாக்போவை தடுத்து வைத்திருக்கின்றமையை வரவேற்றுள்ள ஐ.நா. செயல…
-
- 0 replies
- 678 views
-
-
சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" பெயரிலேயே பல குளறுபடி. சோனியா காந்தியின் உண்மையான பெயர் எல்ஃபிகே அண்டோனியோ மைனோ. காந்தி என்பது அவர் உண்மையான குடும்பப் பெயர் அல்ல. உண்மையான குடும்பப் பெயர் கான். சோனியா காந்தி எனப்படுபவர் உண்மையில் அண்டோனியோ கான் ஆகும். நம்பலாமா இந்தப் பெண்ணை? சோனியாவின் தந்தை சோனியாவின் தந்தை நாஜி ஹிட்லரின் நண்பர் பாஸிஸ முசோலினியின் படையில் பணியாற்றியவர். இவர் போரில் இரசியப்படைகளால் கைப்பற்றப் பட்டவர். பின்னர் இவரை இரசியா தனது உளவாளியாக்கியது என்கிறார் ரீஎஸ்வி ஹரி என்பவர். இதனால் சோனியாவின் தந்தையை ஒர் இரசியாவின் கேஜிபீ உளவாளி என்று குற்றம் சாட்டுவோரும் உண்டு. ரீஎஸ்வி ஹரி இரசிய உளவுத் துறை மூலம் பெரும் தொகைப்ப…
-
- 0 replies
- 902 views
-
-
டிரிபோலி: லிபியாவில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும், எதிர்த் தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்ற ஆப்ரிக்க யூனியனின் பரிந்துரையை அந்நாட்டுத் தலைவர் கடாபி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், கடாபி, அதிகாரத்தை விட்டு இறங்க வேண்டும் என்பதை எதிர்த் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. லிபியாவில் கடந்த ஒன்றரை மாத காலமாக, கடாபித் தரப்பு மற்றும் எதிர்த் தரப்புக்கிடையில் கடும் மோதல் நடந்து வருகிறது. மக்களைக் காப்பதற்காக இவ்விவகாரத்தில் முதலில் அமெரிக்காவும் அதைத் தொடர்ந்து நேட்டோவும் தலையிட்டன. இந்நிலையில், கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று முன்தினம், ஆப்ரிக்க யூனியன் தலைவர்கள் பங்கு பெற்ற குழு ஒன்று டிரிபோலிக்கு வந்தது. அக்குழுவின் தலைவரான தென் ஆப்ரிக்க…
-
- 0 replies
- 797 views
-
-
"இலங்கையில் நடந்த போரை நிறுத்துவதற்கோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசி வரை நாடகம் ஆடினார். தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, காங்கிரஸ் அரசின் கூட்டு சதிக்கு உறுதுணையாக செயல்பட்டார். இலங்கைத் தமிழர் பிரச்னையில், அவர் துரோகம் செய்துவிட்டார்' என, விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளமான, "பதிவு' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பொய் சொல்லி, இலங்கை - இந்தியா இடையேயான கூட்டு சதிக்கு, பலர் உறுதுணையாக செயல்பட்டனர். அவர்களில், தமிழக முதல்வர் கர…
-
- 0 replies
- 856 views
-
-
டோக்கியோ: , ஜப்பானில் திங்களன்று மதியம் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மதியம் இந்திய நேரப்படி 1.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையம் அமைந்த ஃபுகுஷிமா பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது.. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அலகாகப் பதிவானது. சுமார் ஒரு நிமிடம் நீண்ட இந்த பூகம்பம் பெரிய கட்டடங்களையும் குலுக்கின. இதைத் தொடர்ந்து, ஜப்பானின் வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இரண்டு மீட்டர் உயரதிற்கு கடல் அலைகள் சீறின மியாகி, ஃபுகுஷிமா, சீபா, இபராக்கி மாகாணங்களைத் தாக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டது. ஆயினும், சில மணி நேரங்களில் இந…
-
- 0 replies
- 670 views
-
-
திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011 22:01 .இலங்கைப் பெண்களை பொறுத்த வரை செக்ஸின் அடையாளமாக லிபிய ஜனாதிபதி கடாபி சுமார் 30 வருடங்களுக்கு முன் விளங்கி இருக்கின்றார். லிபியாவின் வெளிவிவகார துறை அமைச்சராக இருந்த மௌஸா கௌஸா லண்டனுக்கு கடந்த மாத இறுதியில் தப்பிச் சென்றார். மௌஸா கௌஸா அமெரிக்காவின் மிச்சிக்கன் மாநில பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுமாணிப் பட்டப் பின் படிப்பை 1970 களில் மேற்கொண்டு இருந்தார். அந்நாட்களில் ஆய்வுக் கட்டுரை ஒன்றுக்காக ஜனாதிபதி கடாபியை பேட்டிகள் கண்டு இருந்தார். 226 பக்கங்கள் கொண்டது இக்கட்டுரை. இக்கடுரை தற்போது ஊடகங்களுக்கு கிடைக்கப் பெற்று உள்ளது. இக்கட்டுரையில் கடாபியின் குடும்பப் பின்னணி - இளமைக் கால வாழ்க்கை, பிரித்தான…
-
- 0 replies
- 908 views
-
-
ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! என வாகை சந்திரசேகர் சைக்கிள் ஓட்டி கொண்டே செல்ல கடந்த ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ’அராஜகம்’ என ஒரு படக்காட்சியை கலைஞர் டிவியில் பிரச்சாரம் செய்கின்றன. அதில் முதலில் வருவது கலைஞர் கைது செய்த போது அவர் நடித்த டிராமா! அடுத்து அடுத்து கஞ்சிதொட்டி, எலிக்கறி, அரசு ஊழியர்கள் கைது என வரும் காட்சியில் ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட விபத்து வந்தது. ஆனால் அதே காலத்தில் நடந்த கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து மிஸ்ஸிங்! ( இரண்டு ஓட்டுப்பொறுக்கிகளுமே தனியார்மய அடிமைகள் என்பதால்) தொடர்ந்து வரும் அடுத்த காட்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது சம்பவம் வருகிறது. கொலைகாரன் சங்கராச்சாரியாரை பாப்பாத்தி ஜெயலலிதா ஏன் கைது செய்தா…
-
- 0 replies
- 813 views
-
-
பெயர் : பாட்டாளி மக்கள் கட்சி இயற்பெயர் : பாசக்கார மகன் கட்சி தலைவர் : ராமதாஸ் துணை தலைவர் : அன்பு மணி மேலும் துணைத் தலைவர்கள் : கா.வெ.குரு, கோ.க. மணி வயது : ஆட்சியைப் பிடிக்கும் வயதல்ல தொழில் : முன்பு மரம் வெட்டுவது இப்போது பேரம் பேசுவது பலம் : நெடுஞ்சாலைகள் கடக்கும் ஊர்களில் இருப்பது பலவீனம் : கூட்டணி மாறுவது நீண்ட கால சாதனைகள் : வன்னிய மக்களை ஒருங்கிணைத்தது சமீபகாலச் சாதனைகள் : சரஸ்வதியம்மாள் பெயரில் பல்கலைக்கழகம் கட்டுவது நீண்டகால எரிச்சல் : ஏ.கே.நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னிய அடிகளார் போன்ற வன்னியர்கள் சமீபத்திய…
-
- 0 replies
- 1.4k views
-
-
பயோடேட்டா - விடுதலை சிறுத்தைகள்... பெயர் : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இயற்பெயர் : வீரியம் இழந்த சிறுத்தைகள் கட்சி தலைவர் : தொல்.திருமாவளவன் துணைத்தலைவர்கள் : வன்னி அரசு, இரவிக்குமார் மேலும் துணைத்தலைவர்கள் : கட்டப் பஞ்சாயத்தில் திறமைமிக்க தளபதிகள் வயது : வீரியம் இழக்கக்கூடாத வயது தொழில் : கருணாநிதிக்கு ஜால்ரா தட்டுவது, பண்பாட்டுக்காவலர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பது, ஓய்ந்த நேரத்தில் ஈழம் பேசுவது பலம் : கட்டிவா என்றால் வெட்டி வரும் விசுவாசம் மிக்க தொண்டர்க…
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பர்தா அணியத் தடை விதிக்கும் தீர்மானம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் பர்தா அணியத் தடை விதித்த முதல் நாடு பிரான்ஸ் ஆகும்.முன்னதாக இது இஸ்லாமுக்கு விரோதமானது என்று விமர்சிக்கப்படுவதை நிராகரித்த அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, பர்தா என்பது மத அடையாளமல்ல என கடந்த ஆண்டு கூறியிருந்தார். பர்தா என்பது பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்ற அவர், பிரெஞ்சு குடியரசில் அதை வரவேற்க முடியாது என்றார்.பர்தாவுக்கு ஆதரவு தெரிவித்த கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி ஜாக்கியுஸ் மியார்ட், பர்தா பிரெஞ்சு கலாச்சாரத்துக்கு அதிர்ச்சியான ஒன்று எனத் தெரிவித்தார்.முகம் என்பது ஒரு நபருக்கு கண்ணியமான ஒன்று. அது உங்களின் பாஸ்போர்ட் என்றார…
-
- 5 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஐவரிகோஸ்டில் கடுமையான மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அங்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றதாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிபர் அலசேன் ஒட்டாரா அவர்களின் படைகள், அந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் அதிபரான லாரண்ட் பாக்பூ அவர்களுக்கு விசுவாசமான படைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. தற்போது அங்கிருந்து வரும் தகவல்களின்படி பாக்போ அவர்களுக்கு ஆதரவான படைகள் மிகவும் மோசமாகப் பின்வாங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது படையில் இருந்த பலர், ஒன்றில் ஆயுதங்களை கைவிட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர் அல்லது ஒட்டாராவின் படைகளுடன் சேர்ந்து விட்டனர் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். கடந்த நவம்பர…
-
- 19 replies
- 1.9k views
-
-
ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: 7.1 என்ற ரிக்டர் அளவில் பதிவு Top News [Monday, 2011-04-11 09:42:44] சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு நிலநடுக்கம் மற்றும் சுனாமி என இரட்டைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட ஜப்பானில் இன்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.7.1 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 3 அடி அளவில் சுனாமி ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த வாரமும் 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அப்போது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எதுவும் ஏற்படவில்லை. கடந்த மார்ச் 11-ம் தேதி 9 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜப்பானை சுனாமி தாக்கியது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் ஆயிரக்கண…
-
- 0 replies
- 744 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி செய்ததென்ன? இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக என்றைக்கும் பரிந்துபேசக் கூடியவர்கள், போராடுபவர்கள் என்பதை உணர்ந்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று சென்னையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியுள்ளார். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்று சொல்லி, ஈழத் தமிழினத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க மிகப் பெரிய போரை சிறிலங்க அரசு நடத்தியபோது, அந்தப் போரின் பின்னணியில் டெல்லி அரசு உள்ளது என்பதை நன்றாக அறிந்தும், அந்த அரசில் இறுதி வரை பங்கேற்றது மட்டுமின்றி, போரை நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் ஏற்பட்ட எழுச்சியை முன்னின்று (தனக்கே உரித்தான அரசியல் தந்திர…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
-
- 11 replies
- 2.3k views
-
-
கண்டிப்பாக இருதய பலமற்றவர்கள் இந்த இணைப்பை அழுத்த வேண்டாம். http://thamizhaathamizhaa.weebly.com/
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
நாம் தமிழர் இயக்கம் சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சீமான் பேசினார். அவர், ‘’காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை தோற்கடிக்கும் லட்சிய உணர்வில் போராடி வருகிறோம். இது எங்கள் மரபணுவில் உள்ள கோபம். ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்கு கிடைத்த ஆதரவு மூலம் இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக இருப்பதை காண முடிகிறது. இதுவரை தேர்தல் தேதியை மட்டும் அறிவித்து விட்டு செல்வதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலையாக இருந்தது. ஆனால் இந்தமுறை தேர்தல் ஆணையம் பணத்தை கொடுக்க வில்லை. இப்போதுள்ள இதே நேர்மை, உண்மை மே13-ந் தேதி வரை தொடர வேண்டும். 108 ஆம்புலன்ஸ், குப்பை லாரி, சேட்டு, மார்வாடி மூலம் பணம் கொடுக்கும் பணியை த…
-
- 0 replies
- 707 views
-
-
திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் லியோனி என்பவர் பட்டிமன்ற பேச்சாளர்; திரைப்பட காமெடி நடிகரும் கூட. இவர் கடந்த சில மாதங்களாக சம்பளம் இல்லாத விடுமுறையில் உள்ளார். சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்ட இவர் பல ஊர்களில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். தேர்தல் கமிஷனுக்கு இது குறித்து புகார் சென்றது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, திண்டுக்கல் முதன்மை கல்வி அதிகாரி அசோகன், லியோனி பணிபுரியும் பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளார். தேர்தல் கமிஷன் நடவடிக்கையையறிந்த லியோனி விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இக்கடிதத்தை ஏற்க முடியாது என கல்வித்துறை கூறியுள்ளது கல்வித்துறை அதிகாரி, ‘…
-
- 0 replies
- 802 views
-
-
ஊழலுக்கு எதிரான பெரும் போருக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும என்று அறைகூவல் விடுத்துள்ளார் காந்தியவாதி அன்னா ஹஸாரே. ஊழல் செய்யும் அரசியல்வாதகிள் உள்ளிடோரை விரைவாக தண்டிக்கும் வகையில் லோக்பால் சட்டத்தைக் கொண்டு வரக் கோரி சமீபத்தில் டெல்லியில் உண்ணாவிரதத்தில் குதித்தார் அன்னா. அவருடை இந்த காந்திய போராட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு திரண்டது. ஆங்காங்கு மக்கள் பல்வேறு வழிகளில் அமைதியான முறையில் போராட்டங்களில் குதித்ததால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்து போனது. இதையடுத்து லோக்பால் சட்டம் தொடர்பாக அன்னா கூறிய யோசனைகளை அது ஏற்க முன்வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று அன்னா தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். ஆனால் தனது போராட்டம் முடியவில்லை என்றும் …
-
- 0 replies
- 675 views
-