Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கை சுகாதார மந்திரி, இன்று (10.12.2010) பெங்களூரு அரண்மனை மைதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில கர்நாடக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அகில கர்நாடக தமிழ் கூட்டமைப்பினர், இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது 21/2 லட்சம் அப்பாவி தமிழர்கள், ரஜபக்சே அரசால் கொல்லப்பட்டனர். பலர் இன்னும் முள் வேலியில் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சே கலந்து கொள்ள சென்றபோது, அங்கு வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தியதால் திரும்பி சென்றார். தற்போது ராஜபக்சே அரசில் சுகாதார துறை மந்திரியாக இருக்கும் சலிண்டா தசநாயகா, பெங…

    • 0 replies
    • 410 views
  2. மொறட்டுவ பல்கலைக்கழத்தில் குழு மோதல்: 16 பேர் காயம் 12/10/2010 3:31:09 PM Share மொறட்டுவ பல்கலைக்கழத்தில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  3. வெள்ளிக்கிழமை, 10, டிசம்பர் 2010 (15:34 IST) முதல்வர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவீர்களா? சீமான் பரபரப்பு பேட்டி தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தனர். இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டம் என் மீது பாய்ந்துள்ளது. இரண்டு முறையும், தமிழக அரசு தவறாக என் மீது சட்டத்தை போட்டுள்ளது என நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது. இந்த …

    • 1 reply
    • 691 views
  4. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் * Friday, December 10, 2010, 4:15 சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனித உரிமைகள் தினத்தைப் பிரகடனம் செய்ததையடுத்து கடந்த 62 ஆண்டுகளாக மேற்படி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல பாகங்களிலும் பல்வேறு விசேட நிக…

  5. இன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர். முன்னாள் அதிகாரி திரு. கார்த்திகேயன் தலைமையில் புலனாயவு குழுவினர் கண்டு பிடித்த உண்மைகள் மற்றும் அதன் எதிர்மறை நியாயங்களான ஜெயின் கமிஷன் கேள்விகள் என்று எத்தனையோ விடை தெரியாத மர்மங்கள் ஏராளமாய் உண்டு. இன்று வரைக்கும் ஏராளமான கேள்விகள் இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுருக்கிறது. அதுவே இன்று வரையிலும் பலரின் மனதிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத மனித வெடி குண்டு தாக்குதல் எத்தனை கோரங்களை உருவாக்கியதோ அதை விட பல மடங்கு ஒரு இனப் பேரழிவும் நம் முன் தான் நடந்தது. நாம்…

  6. வாக்கிங் சென்ற வக்கீலை கொத்திய சேவல் "கைது' சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது. பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார். செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். சேவல் கைது செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்த சேவலின் உரிமையாளர் கமலா என்பவர் நீதிமன்றத்திற்கு…

  7. மேற்கத்திய நாடுகள் சீனாவை தனிமைப்படுத்த முயல்வதாக, சீன ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், நோபல் பரிசுக்குபோட்டியாக கன்பூசியஸ் அமைதி பரிசு என்ற பெயரில் தைவான் முன்னாள் துணை ஜனாதிபதி ஒருவருக்கு பரிசு வழங்கி சீனா அதிரடி காட்டியுள்ளது. சீன அரசுக்கு எதிராக போராடி வரும், லியூ ஷியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிறையில் இருக்கும் லியூவை விடுதலை செய்யவும் அந்நாடு மறுத்துவிட்டது. நோபல் பரிசு வழங்கும் விழாவை, சீனா உட்பட அதன் 18 நட்பு நாடுகளும் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதில் தற்போது இலங்கையும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=142613

  8. நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சீமான், தன் மீதான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதால் நாளை 10ந்தேதி காலை 930 மணியளவில் சிறையில் இருந்து சீமான் வெளியில் வருகிறார். சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் நோக்கி வருகின்றனர். இந்நிலையில் சீமான் விடுதலையாவையொட்டி மும்பை நாம் தமிழர் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தலைவர் சேலம் செல்லத்துரை தலைமையில் , செயலாளர் சி.ராஜேந்திரன் முன்னிலையில் அ.கணேசன், சுந்தர்,டேனியல், சிவா,கென்னடி,துரை,சரவணன் உட்பட பலர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர…

    • 1 reply
    • 637 views
  9. இந்தியாவில் ஊழலின் ஊற்றுக்கண் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்தார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவை மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் சுப்ரமணியம் சுவாமி இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக மும்பையில் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த பிரசாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக சுவாமி தெரிவித்தார். http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=343492&SectionID=164&M…

    • 4 replies
    • 732 views
  10. ரானின் கடற்படையினரால் பெருந்தொகையான தற்கொலைப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கர வெடிமருந்துகள் இணைக்கப்பட்ட 9000 க்கும் அதிகமான வேகப் படகுககளை ஈரானின் கடற்படை உருவாக்கியுள்ளது. இந்தப் படகுகள் பாரசீக வளைகுடாப் பிரதேசத்தில் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்தப் பிரதேசத்தில் தான் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தற்கொலைப் படகுகள் அனைத்திலும் தீவிர தற்கொலைப் போராளிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எதிரிக் கப்பல் ஒன்றில் மூர்க்கமாகப் பாயும் ஆற்றல் கொண்ட இந்தப்படகுகள் ஒரு கப்பலில் ஏழு மீட்டர் ஆழமான குழியை ஏற்படுத்தும் அளவுக்கு வெடிமருந்துகளைக் கொண்டவை. ஈரானியப் போர்க்கப்பல்களையும். இத்தகை…

  11. மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தாள் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள நேரடி கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது. நமது நாட்டின் சட்டங்களையும், மதஉ…

    • 0 replies
    • 892 views
  12. வடஇந்தியாவின் காசி மாநகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். பால் பாத்திரத்துக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக உத்திரப் பிரதேசக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மாலையில் கங்கையில் நீராட வந்திருந்த பக்தர்கள் மத்தியில் குண்டு வெடித்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காசியில் இடம்பெற்ற மற்றொறு குண்டு வெடிப்பில் இருபது பேர் கொல்லப்பட்டனர். இந்துக்களின் புனித நகரங்களில் காசி முக்கிமானது. இந்த குண்டு வெடிப்பை தாங்கள்தான் செய்ததாக இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உரிமைகோர…

    • 2 replies
    • 496 views
  13. கிந்திய தேர்தல் நிலவரம்....ஈழ தோழர்களின் கடமைகள் ஈழ தோழர்களுக்கு கிந்திய தேர்தல் விலை பட்டியலை தரலாம் என உத்தேசித்துள்ளேன்... எல்லாம் வரும் தேர்தலில் அவரைகொடி உறவுகளை கவர் செய்ய உதவும் என்றுதான்... (தோழர் ஒருவர் கோவணகொடி உறவுகள்... என அழைத்தமைக்காக கோவித்து கொண்டார் அதனால் இந்த சொற்பதம் பாவிக்கபடுகிறது ) ஓல்டு மங்கு ரம்மு - (தமிழ்நாடு) -கிந்திய ரூபாய் 80 (பாண்டிச்சேரி - காரைக்கால்) -கிந்தியரூபாய் 50 பிரியாணி வித் லெக் பீசு - கிந்திய ரூபாய் 50 (அந்தா பாசுமதி அரிசிதான் வேண்டும்... என்று இல்லை .. ஐ.ஆர் 20.. பொன்மணி.. ஏன் புளுத்து போன 1 ரூபாய் ரேசன் அரிசி என்றாலும் கூட ஓக்கே ) ஒரு ஜோடி கண்ணாடி வளையல்(பெண்களுக்கு)…

  14. சொந்தங்களுக்காக பதவி வகிப்பவர் கருணாநிதி: விஜயகாந்த் சிதம்பரம் : சொந்தங்களுக்காக பதவி வகிக்கும் கருணாநிதி மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை என விஜயகாந்த் எம்.எல்.ஏ., கூறினார். கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் நேரு நகர், நந்திமங்கலம், குமராட்சி, கீழவன்னியூர், திருநாரையூர் ஆகிய பகுதிகளை தே.மு.தி.க., நிறுவனத் தலைவரும், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான விஜயகாந்த் நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கன மழையால் கடலூர் மாவட்டம் தான் அதிகம் பாதித்துள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளை பார்வையிடும் போது, குடிசை வீடுகள் இடிந்த…

  15. சவுதி அரேபியாவில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கின் தண்டனையை சவுதி மன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷானாவின் தண்டனை ரத்துச் செய்யப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்ததை அடுத்தே இந்த தண்டனையை தற்காலிகமாக இடை நிறுத்த சவுதி மன்னர் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலவாழ்வு அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் ரிஷானாவின் தண்டனையை ரத்துச் செய்யும் …

  16. வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் சரக்கடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் 'விக்கிலீக்ஸ்' (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் ப…

  17. லட்சக்கணக்கான ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவை பெரும் சிக்கலுக்கும் தலைகுனிவுக்கும் உள்ளாக்கியுள்ள விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அஸாங்கே கைது Wikileaks founder Julian Assange arrested in London The founder of the whistle-blowing website Wikileaks, Julian Assange, has been arrested by the Metropolitan Police. The 39-year-old Australian denies allegations he sexually assaulted two women in Sweden. Scotland Yard said Mr Assange was arrested on a European Arrest Warrant by appointment at a London police station at 0930 GMT. He is due to appear at City of Westminster Magistrates' Court later. Mr Assange is accused by the Swedish authori…

    • 7 replies
    • 1.1k views
  18. கோவையில் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள அமைச்சர், எம்பி!! – மதிமுக, பெரியார் திக ஆவசம் இன்று கோவையில் ஜவுளி வர்த்தகக் கண்காட்சியை திறந்து வைக்க வந்த இலங்கை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் எம்பி காசிம் பைசல் இன்று பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இலங்கையில் ஆயிரக்கணக்கில் தமிழைக்கொன்று குவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இவர்கள் தமிழ் மண்ணில் கால்வைக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, கண்காட்சியை திறந்து வைக்காமலேயே பின்வாசல் வழியாக இருவரும் ஓட்டம் பிடித்தனர். கோவை கொடிசியாவில் ஜவுளி கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கை…

    • 0 replies
    • 751 views
  19. தனது தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாதவையென அமெரிக்கா கருதும் உலக நாடுகளிலுள்ள பல கட்டமைப்புகள், தலங்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் தனது பாதுகாப்புக்கு முக்கியமான கட்டமைப்புகளை பட்டியல்படுத்துமாறு தனது தூதரகங்களுக்கு 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிணங்கவே மேற்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் காஸ் விநியோகக் குழாய்கள், சுரங்கங்கள், தொலைத் தொடர்பு நிலையங்கள்,போன்றவையும் இடம்பெற்றுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தமொன்றை நடத்துவதாக அமெரிக்கா கருதினால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முக்கியமான கட்டமைப்புகளின் விபரத்கொத்தாக இப்பட்டி…

    • 0 replies
    • 526 views
  20. 41 வயது மதிக்கதக்க ஒருவர் லண்டன் மாட்ரிட் தொடரூந்து நிலையத்தில் நிற்கும் போது , தவறுதலாக பின்னோக்கி நடந்து தண்டவாளத்தில் தலையின் பின் பக்கம் அடிபட விழுந்துள்ளார் , முள்ளந்தண்டிலும் தலையிலும் அடிபட்ட காரணத்தினால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை , அவர் குறுக்கே இருக்கமால் தண்டவாளத்துக்கு நடுவே நகர்த்தி கொள்கிறார் , அப்போது இன்னும் ஒரு நிமிடத்தில் தொடரூந்து வர இருப்பதாக நிலையத்தில் காண்பிக்க படுகிறது , தொடரூந்தை மக்கள் காண மக்கள் அதனை மறிக்க முற்படுகின்றனர் ..... ஆனால் ..30 வயது உடைய முந் நாள் போலீஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக குதித்து அம் மனிதரை சரியான நேரத்தில் காப்பாற்றுகிறார் இக் காட்சியை நிலைய கமராக்கள் படம் பிடித்துள்ளது .. வீடியோ வை இங்கே பாருங்கள். http…

    • 0 replies
    • 610 views
  21. சில நாட்களுக்கே முன்னதாக வட கொரியா தென் கொரியா மீது வீசிய செல் தாக்குதல்களால் இருவர் கொல்லப்பட்டது தெரிந்ததே. இன்று இது சம்பந்தமாக ஆரம்ப யுத்த குற்ற விசாரணைகளை வட கொரியாவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடங்கியது! ICC Prosecutor: alleged war crimes in the territory of the Republic of Korea under preliminary examination The Office of the Prosecutor has received communications alleging that North Korean forces committed war crimes in the territory of the Republic of Korea. The Prosecutor of the ICC, Luis Moreno-Ocampo, confirmed that the Office has opened a preliminary examination to evaluate if some incidents constitute war crimes under the jurisdicti…

    • 0 replies
    • 466 views
  22. திங்கட்கிழமை, 6, டிசம்பர் 2010 (13:12 IST) கிளிநொச்சி நகர்: திருச்சி அருகே பரபரப்பு இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மாவீரர் நாள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நவம்பர் 27ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதேபோல் கடந்த நவம்பர் 27ஆம் தேதி திருச்சி அருகே எடுமலை கிராமத்தில் உள்ள காட்டில் மாவீரர் நாள் அன்று நாம் தமிழகம் கட்சியின் மண்ணச்சநல்லூரி பகுதியின் ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இளம்பரிதி உள்பட சிலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அந்த காட்டுப் பகுதிக்கு கிளிநொச்சி நகர் என பெயர் சூட்டி பெயர் பலகையு…

  23. மூர்க்கத்தனமான கொலை வெறித் தாக்குதலில் நெற்றியை இழந்த இளைஞர்! (பட இணைப்பு) சனி, 04 டிசம்பர் 2010 16:20 Share290 ஸ்டீவன் குளோக் என்ற 26 வயது நபர் ஒருவரால் முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டதால் தனது நெற்றியின் ஒரு பகுதியை இழந்துள்ளார். இவரைத் தாக்கிய ஜெக் ஹொப்ஸ் என்ற நபர் அவரின் முகத்தில் குத்தி கீழே வீழ்த்தி பூட்ஸ் கால்களால் தலையில் ஏறி மிதித்துள்ளார். ஒரு இடத்தில் பொருள் வாங்கிக் கொண்டிருந்த போது தன்மீது மோதிவிட்டுத் தன்னை முறைத்துப் பார்த்ததாலேயே இவரைத் தாக்கியதாக ஜெக் ஹொப்ஸ் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்திய போது இவர் மதுபோதையில் இருந்துள்ளார். தாக்கப்பட்ட ஸ்டீவனின் தலையிலும் மூளையிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நெற்றியின் பெ…

  24. அமெரிக்காவுக்கு ஏன் இந்தியாவின் வளர்ச்சி தேவை? சதுக்கபூதம் India’s prosperity is good news for US - ஒபாமாவின் இந்த பேச்சை தான் இந்தியாவில் (மட்டும்) அனைத்து பத்திரிக்கைகளும் முக்கிய செய்தியாக வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக ஏற்பட்ட அமெரிக்க கம்பெனிகளின் இழப்பை ஈடுகட்ட இந்தியாவின் வளரும் பொருளாதாரம் உதவியாக இருக்கும் என்று தான் அனைவரும் நினைக்க தோன்றும். அதற்கு பின் வேறொரு முக்கிய காரணமும் உள்ளது. அது என்ன காரணம் என்று பார்ப்போம். எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளது அந்நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தியே. இளைஞர்களிடம் கடின உழைப்பு, புதுமையான சிந்தனை, எளிதில் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை ப…

  25. சனிக்கிழமை, 4, டிசம்பர் 2010 (22:44 IST) பூலோக அழகியாக இந்திய பெண் தேர்வு 2010ஆம் ஆண்டுக்கான பூலோக அழகியாக இந்தியாவின் நிக்கோல் ஃபாரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய முன்னாள் அழகியான இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். 2010ஆம் ஆண்டுக்கான பூலோக அழகி தேர்வு செய்யும் போட்டி, வியட்நாமில் நடைபெற்றது. பல்வேறு சுற்றுக்களாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியாவின் நிக்கோல் ஃபாரியா பூலோக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிவாற்றல் போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். nakkheeran

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.