உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
இந்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இணையதளத்தை பாகிஸ்தான் விஷமிகள் சிதைத்துள்ளனர். நேற்றிரவு சிபிஐ இணையதளத்தின் முதல் பக்கத்தில் "சிதைக்கப்பட்டுள்ளது" என்ற தகவலுடன் "பாகிஸ்தான் இணையதள ராணுவம்" என்கிற வாசகமும் அத்துமீறி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. தேசிய தகவலியல் மையத்தால் சிபிஐ உள்ளிட்ட அரசின் இணையதளங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இணையதளத்தின் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி இவ்வாறு சிபிஐ இணையதளம் சிதைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிபிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும், இணையதளம் மீண்டும் பாதுகாப்பாக இயங்க நடவடிக்கை …
-
- 0 replies
- 503 views
-
-
மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 3.25மணி வரை இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் 201 பேர் சாட்சியமளித்துள்ளனர். இன்றைய அமர்வின் போது 93 சாட்சியங்கள் காணாமல் போனோர் தொடர்பிலும் 60 சாட்சியங்கள் தடுப்பு காவலி;ல் உள்ளேர் தொடர்பிலும் 19 சாட்சியங்கள் கடத்தி செல்லப்பட்டோர் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 29 சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் மேற்கொள்ளவிருந்த சம்பூர் பகுதிக்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-…
-
- 1 reply
- 593 views
-
-
போபால் விஷவாயு சம்பவத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு அதில் உயிரிழந்தோருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலங்களவையில் போபால் சம்பவத்தை நினைவு கூர்ந்த அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, இத்துயரச் சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அதனால் ஏற்பட்ட கோரமான பாதிப்புகள் இன்றும் நம்மைத் தொடர்கின்றன. அங்கு இன்றும் குறைபாடுகளுடைய குழந்தைகள் பிறக்கின்றனர். பலர் நோயில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். மனித சமுதாயத்துக்கு நேர்ந்த இந்த மிகப்பெரிய கொடுமை உலகின் மனசாட்சியை இன்று வரை உலுக்கி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார். மக்களவையில் அஞ்சல…
-
- 5 replies
- 922 views
-
-
பிரித்தானிய சென்றுள்ள இன வெறி பிடித்த போர்க்குற்றவாளி மகிந்த இராசபக்சேவை கைது செய்யக்கோரி சென்னையில் பிரித்தானிய தூதரகம் முன்னால் தமிழ்நாடு மாணவர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடத்தி மனு ஒன்றையும் தூதரகத்தில் அளித்துள்ளனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சினர் மற்றும் ஜாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஆகியோர்கள் கலந்து கொண்டனர் . http://meenakam.com/2010/12/03/15267.html
-
- 0 replies
- 789 views
-
-
முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். அதில், கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தையும் தான் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும்- ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும்- என்னைப் பற்றி குறிப்பிடும் போது- நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும்- இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும்- என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள். என்னைப் ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பதவியும், இந்தியாவின் தகுதியும்! உலகத் தலைவர்களில் ஒருவராக இடம்பெறுவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா முட்டி மோதிக்கொண்டிருக்கையில், இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருப்பவர் யார் என்பது குறித்தே உலகின் பெரும்பாலான நாட்டவர்களுக்கு தெரியவில்லை என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆசியாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், வேகமாக வளரும் நாடாக திகழ்வதாகவும், சர்வதேச பிரச்சனைகளில் தீர்மானிக்கிற சக்தியாக உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளதாகவும் இந்தியாவுக்கு வந்துவிட்டு போகும் பல உலக நாட்டு தலைவர்கள் புகழ்ந்துவிட்டு போவது உண்டு.ஏன் நமக்கு நாமே அவ்வாறு புகழ்ந்து கொள்வதும் உண்டு. இந்நி…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஐதராபாத்: ஆந்திராவில் புதிய அமைச்சரவை பதவியேற்ற முதல் நாளே சிக்கல் ஆரம்பித்து விட்டது. இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்த இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் 8 அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆந்திர முதல்வராக இருந்த ரோசய்யா கடந்த வாரம் திடீரென ராஜினாமா செய்தார். உடல் நலம் சரியில்லாத காரணத்தால் பதவி விலகுவதாக ரோசய்யா வெளிப்படையாக தெரிவித்தாலும், ஜெகன்மோகன் ரெட்டி விவகாரத்தையும், தெலங்கானா விவகாரத்தையும் சரியாக கையாளவில்லை என மேலிடம் அதிருப்தி தெரிவித்த காரணத்தினால்தான் ராஜினாமா செய்ததாக ஐதராபாத் வட்டாரங்கள் தெரிவித்தன. இதை தொடர்ந்து இந்த இரண்டு பிரச்னைகளையும் …
-
- 0 replies
- 557 views
-
-
தற்போது உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் செய்தி அயர்லாந்து பெயில் அவுட். வெளிப்படையாக செய்தியை பார்ப்போர் எல்லாம் அனுமானிப்பது 'அயர்லாந்து அரசு பொறுப்பில்லாமல் வரவுக்கு மீறி செலவு செய்து நாட்டை படுபாதாளத்தில் தள்ளி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் மீட்கப்படுகிறது' என்பதாகும். ஆனால் உண்மையான செய்தி அதுவல்ல. தற்போது உண்மையில் பெயில் அவுட் நடப்பது அயர்லாந்துக்கு அல்ல. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்குத் தான். இதன் பயனை அனுபவிக்கப் போவது அயர்லாந்து மக்கள் அல்ல. ஐரோப்பிய தனியார் வங்கிகளும், இங்கிலாந்து மற்றும் யூரோ அரசாங்கமும் தான். ஆனால் இதனால் ஏற்படப் போகும் இழப்புகள் விழப்போவது அயர்லாந்து மக்களின் தலை மீது தான். ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான…
-
- 4 replies
- 727 views
-
-
விசயகுமார் - மகள் வனிதா இவர்கள் பிரச்சனையில் ஒரு பத்திரிக்கை குளிர்காய்கிறது. சமயம் பார்த்து காத்திருந்து சகட்டுமேனிக்கு சகதியை தூற்றி வீசுகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு இந்த மூன்றிலும் வாசகர்களின் நாட்டம் அதிகம். இந்த துறைகளில் உள்ளவர்களின் பொதுவாழ்க்கையையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களையும் தெரிந்துகொள்வதில் வாசகர்களிடம் ஆர்வம் உள்ளது என்பது உண்மை. அதே நேரத்தில் விளம்பரத்துக்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அருவறுப்பானதாகவே தெரிகிறது. அலைகற்றை ஊழலால் இந்தியாவில் உள்ள பொதுசனம் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ராசாவின் தனிப்பட வாழ்க்கையால் பொதுசனம் பாதிக்கப்பட்டது என்று சொல்வது அபத்தமே. அதே போல தான். …
-
- 1 reply
- 652 views
-
-
விக்கிலீக்ஸ்’ இந்தப் பெயர்தான் அமெரிக்காவை இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தயவு செய்து ராணுவ ரகசியங்களை வெளியிட்டு விடாதீர்கள் என்று ‘விக்கிலீக்ஸி’டம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள். அமெரிக்காவையே மிரள வைத்த இந்த ‘விக்கிலீக்ஸ்’ பற்றி பார்ப்போம். ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் ஜூலியன் அசாங்கே என்ற ஆஸ்திரேலியரால் ஆரம்பிக்கப்பட்டது. நார்வே, ஸ்வீடன், ஐஸ்லாந்து நாடுகளில்தான் இந்த இணையதளத்தின் சர்வர் இயங்கி வருகிறது. அடக்குமுறை அரசுகளின் அராஜகத்தையும்,ஊழல் மன்னர்களின் ஊழலையும் வெளிக்கொணர்வது தான் இந்த இணையதளத்தின் நோக்கம். ஒவ்வொரு நாட்டிலும் கம்ப்யூட்டர் ஹாக்கிங் நிபுணர்களும், தகவல் தரும் ஆர்வலர்களும் இணைந்து தான் இந்த இணையதளத்தை இயக்குகிறார்கள்…
-
- 2 replies
- 779 views
-
-
சேது சமுத்திரத் திட்டமாகட்டும்,விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கும் விஷயமாகட்டும்...கடைசி நேரத்தில் வந்து பிரச்னையை அப்படியே திருப்பிப் போடுவதில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு நிகர் அவர் மட்டும்தான்.இப்போது அவர் கையில் எடுத்திருப்பது ஸ்பெக்ட்ரம்.அந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் உயிருக்கு ஆபத்து என்று அவர் கிளப்பிய குற்றச்சாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான கேள்விகளுடன் அவரை சந்தித்தோம்... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? “ஸ்பெக்ட்ரம் விவகாரம் இதுவரை ஒரு ஊழல் விவகாரமாகவே பார்க்கப்பட்டது.ஆனால்,இன்று அது தேசியப் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட பிரச்னையாக உருமாற…
-
- 1 reply
- 929 views
-
-
ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அதுதொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் குண்டைப் போட்டுள்ளது. அமெரிக்காவே ஆடிப் போயிருக்கிறது, விக்கிலீக்ஸ் விவகாரத்தில். ஒவ்வொரு நாட்டுக்கும் 'விக்கிலீக்ஸ்' என்னவேண்டுமானாலும் சொல்லும்... தயவு செய்து நம்பிவிடாதீர்கள்', என்கிற ரீதியில் கோரிக்கை விடுத்துவருகிறது அந்த நாடு. ஆனால் அமெரிக்கா உலக நாடுகள் ஒவ்வொன்றுடனும் டபுள் டபுளாக கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வந்த பச்சோந்தித்தனம் தற்போது படிப்படியாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்காவை நம்பவே கூடாது என்ற க…
-
- 1 reply
- 461 views
-
-
அமெரிக்க இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளம் தொடர்பாக உலக நாடுகளுக்கிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் சீனா – வடகொரியா ஆகிய நட்பு நாடுகளுக்கிடையிலான நட்பு முறிவடையும் நிலை உருவாகியுள்ளது. வடகொரியா மோசமான குழந்தை என சீனா தெரிவித்துள்ளதாக அமெரிக்க இராஜதந்திரத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இரகசிய ஆவணமொன்றில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச்சேவையொன்று தெரிவிக்கிறது. ஆசியாவில் சீன ஆதிக்கத்தன்மை இதன்மூலம் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் மூலம் வெளியாகிய தகவல்கள் எவ்வாறு கசிந்தது என்பது குறித்து அமெரிக்க தீவிரமாக ஆராய்…
-
- 0 replies
- 431 views
-
-
நடிகர் விஜய் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் திங்கள்கிழமை திடீரென ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். தன்னுடைய ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடந்த வருடம் அரசியல் பிரவேசம் குறித்து தன் கருத்தை வெளியிட்ட நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக ராகுல் காந்தியையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், காங்கிரஸில் இணைய ராகுல் கோரிக்கை வைத்ததாகவும், அப்படி இணைந்தால் இளைஞர் காங்கிரஸில் முக்கிய பதவி தர வேண்டும் என விஜய் கேட்டதாகவும் செய…
-
- 0 replies
- 513 views
-
-
எதிராளியைவிட ஒரு மணி நேரமாவது கூடுதலாகச் சிந்தித்தால்தான் அவனை வெல்ல முடியும் என்பது போர்த் தந்திரங்களில் ஒன்று. உலகம் முழுவதும் இதனை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோ, போராளி இயக்கங்களோ பின்பற்றுகின்றனவோ.. இல்லையோ.. யூத தேசமான இஸ்ரேல் மட்டுமே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகின்றது. தான் தூங்கினால் பாலஸ்தீனம் முழித்துக் கொள்ளும் என்பதில் இன்றைக்கும் தெளிவான சிந்தினையுடன் ஆட்சி நடத்தி வருகிறார்கள் இஸ்ரேலியர்கள். மத்திய கிழக்காசியாவில் தனிப்பெரும்பான்மையுடன் அமெரிக்காவைப் போல் சர்வாதிகாரத்துடனும், சகல செல்வாக்குடனும் இருந்து வந்தாலும், ஒவ்வொரு நொடியையும் தனது பாலஸ்தீன எதிர்ப்பிலும், தனது நாட்டின் பாதுகாப்பு பற்றிய கண்காணிப்பிலும் உறுதியுடனேயே இருக்கிறது இஸ்ரேல். …
-
- 0 replies
- 1.7k views
-
-
பெரியார் திராவிடர் கழக கொளத்தூர் நகர செயலாளர் தோழர். பெ.இளஞ்செழியன் 24.11.10 மாலை 7.00 மணியளவில் வாகன விபத்தில் மரணமடைந்தார். கழக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கழகம் இதுவரை நடத்திய ஆர்ப்பட்டம், போராட்டம் அனைத்திலும் பங்கேற்று சிறைக்கும் சென்றுள்ளார். ஒவ்வொரு விழாக்காலங்களிலும் தகுந்த துண்டறிக்கை விநியோகித்து பெரியாரிலை மக்களிடையே பரப்பியவர். சிங்கள இராணுவத்தால் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் அதிகரித்த காலங்களில் தமிழக, இந்திய அரசுகளை கண்டித்து பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார். - மீனகம்
-
- 0 replies
- 581 views
-
-
இந்தியாவின் கருப்புப் பணம் எவ்வளவு என்பதை ஆய்வுகள் நடத்தி அறிந்து கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளாக மத்திய நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த 1985ஆம் ஆண்டு நாடு முழுவதும் கருப்பு பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய முதல் முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. நேஷனல் இன்ஸ்டிடிïட் ஆப் பப்ளிக் பைனான்ஸ் அண்ட் பாலிசி என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. அப்போது ரூ.31 ஆயிரத்து 584 கோடி முதல் ரூ.36 ஆயிரத்து 786 கோடி வரை கருப்பு பணம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தத் தொகை அப்போதைய இந்திய பொருளாதாரத்தில் 16.53 சதவீதம் ஆகும். அதன் பின் இந்தியப் பொருளாதாரம் 31 மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, தற்போதைய நிலையில் எவ்வளவு கருப்பு பணம் இருக்கிறது என்று அறிய ஆய்வு நடத்த மத்தி…
-
- 0 replies
- 655 views
-
-
விக்கிலீக்ஸ் விவகாரத்தில் பொறுத்திருந்து முடிவு: இந்தியா விக்கிலீக்ஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் குறித்த விவகாரத்தில் பொறுத்திருந்து செயல்படுவோம் என்று இந்தியா அறிவித்துள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை இணையமைச்சர் ப்ரிநீத் கெளர் இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஐநா சபை மற்றும் பல நாடுகளின் தலைவர்களை அமெரிக்கத் தூதரகங்கள் உளவு பார்ப்பது குறித்து விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ப்ரிநீத் கெளரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இவ்வாறு கூறினார். "விக்கிலீக்ஸ் தகவல்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை. அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு மிகச்சிறந்த உறவு உள்ளது. வி்க்கிலீக்ஸ் ஆவணங்கள் குறித்து அவர்கள் ஏற்கெனவே இந்தியாவை எச்சரித்…
-
- 2 replies
- 813 views
-
-
குற்றம் செய்த வெளிநாட்டவர்களை திருப்பு அனுப்புதல் சட்டமானது சில வகையான குற்றங்களை செய்த வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு அகற்றப்படுவார்கள். ஞாயிற்றுக்கிழமை நடந்த மக்கள் வாக்கெடுப்பின்படி ஒரு மாநிலத்தை தவிர மாநிலங்களில் 26 (கான்ரான்) இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். சர்வதேச சட்டங்களை மீறாத வகையில் இந்த வெளியேற்றங்கள் நடக்கும் என சட்ட அமைச்சர் தெரிவித்தார். கடந்த வருடங்களில் 300-400 பேர் நாட்டை விட்டு அகற்றப்பட்டனர் குற்றங்கள் செய்தமைக்கு. இந்த புதிய சட்டத்துடன் இந்த தொகை 1500 ஆகலாம் என அஞ்சப்படுகின்றது. Swiss approve automatic expulsion of foreign criminals GENEVA — Switzerland endorsed Sunday a far-right push to automatically expel foreign residents con…
-
- 0 replies
- 437 views
-
-
1. The Republic of Ireland will receive a bail-out worth about 85bn euros ($113bn; £72bn). 2. European minister agreed to the deal that will see 35bn euros supporting the Irish banking system with the remaining 50bn euros going towards the government's day-to-day spending. 3. An average interest rate of 5.8% will be payable on the loans, above the 5.2% paid by Greece for its bail-out.
-
- 0 replies
- 618 views
-
-
நேரு குடும்பத்தின் தேச துரோகங்கள் நாடகமாடிய நேரு – காங்கிரஸ் எனும் கட்சியை சுகந்திரம் வாங்கிய உடனே கலைத்துவிட வேண்டும். அதில் உழைத்த தலைவர்களெல்லாம் இந்தியாவிற்காக மீண்டும் உழைக்க வேண்டும் என்றார் காந்தி. சிலர் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் பணக்காரனாக பிறந்து, கொஞ்ச காலம் சுகந்திர தியாகி போல நடித்த நேருவோ ஒத்துக்கொள்ள வில்லை. காந்திக்கு எதிரான தலைவர்களை திரட்டி ஆட்சியில் அமர்ந்துவிட்டார். காந்தியின் பேச்சையே கேட்கவில்லை – இந்தியாவை ஒன்றினைத்த இரும்பு மனிதர் வல்லபாய் படேல் அவர்களின் பேச்சை பல தடவை கேட்கவில்லை. சீனாவின் மீது கவணமாக இருக்குமாரு அவர் சொன்னதை கேட்காமல்தான், இந்தியாவின் பெரும்பகுதியை போரின் போது தாரை வார்த்தார் நேரு. காந்தி சுட்டு கொல்லப்படுவதற…
-
- 1 reply
- 3k views
-
-
-
வட கொரியா, தென் கொரியா இடையிலான பதட்ட நிலை மேலும் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து தனது பகுதிக்குள் ஏவுகணைகளை தயார் நிலையில் வைக்கத் தொடங்கியுள்ளது வட கொரியா. தென் கொரிய தீவு மீத வட கொரியா திடீர் பீரங்கித் தாக்குதல் நடத்தி 2 ராணுவ வீரர்களைக் கொன்றது. இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த தென் கொரியாவும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் மூக்கை நுழைத்துள்ளது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அது களம் இறங்கியுள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற…
-
- 2 replies
- 471 views
-
-
விக்கி லீக்ஸ் இணைய தளம் நாடுகளுக்கு இடையேயான முக்கிய ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 1. ஈரானை தாக்க, சவுதி அரேபியா அமெரிக்காவை வலியுறுத்தியதாகவும், 2. பாக்., அணு ஆயுதங்கள் குறித்து இங்கிலாந்து, அமெரிக்காநாடுகள் அச்சம் அடைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், 3. ஒருங்கிணைந்த கொரிய மீது தாக்குதல் நடத்தகோரி தென்கொரியா கூறியதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை, விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் அபாயகரமானதும், பிரச்னைக்குரியதுமாகும் என தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் அனுப்பிய இரண்டரை லட்சம் ரகசிய தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு பரபரப்புக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=135966 …
-
- 3 replies
- 969 views
-
-
ஈழத் தமிழர்கள் பிணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது கருணாநிதி பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். ஈழத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணத்தை கருணாநிதி குடும்பத்தினர் எண்ணிக் கொண்டிருந்தனர் என்று பழ.நெடுமாறன் குற்றம் சாட்டினார். சென்னை தியாகராயா நகரில் இன்று மாவீரர் நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பழ.நெடுமாறன் சிறப்புரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசும் போது, ஈழத்தில் புலிகள் இயக்கம் நடத்திய போர் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் நடைபெற்றது. உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த சுதந்திர இயக்கங்கள், ஆதரவோடு நடைபெற்றன. ஆனால் புலிகளின் போர், எவ்வித ஆதரவும் இல்லாமல் நடைபெற்ற போராகும்.…
-
- 5 replies
- 1.1k views
-