Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்க திட்டம்! அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியாவின் தலைவர்கள், அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்குவதற்கான புதிய விபரங்களை வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள மற்ற தலைவர்களுடன் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனடிப்படையில், பிரித்தானியாவின் ரோல்ஸ் ராய்ஸ் தயாரித்த உலைகள் உட்பட, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு புதிய கடற்படையை உருவாக்க குறித்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும். Aukus ஒப்பந்தத்தின் கீழ், அவுஸ்ரேலியா முதலில் அமெரிக்காவிலிர…

  2. Published By: RAJEEBAN 27 SEP, 2023 | 12:11 PM நகர்னோ கரபாக்கில் ஆர்மேனிய இனத்தவர்கள் இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பை எதிர்கொள்கின்றனர் என துருக்கியின் 123 கல்விமான்கள் எச்சரித்துள்ளனர். சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளராக இருப்பதற்கு பதில் புதிய மனித துயரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நகர்னோ கரபாக்கை 9 மாதங்களாக தன்னுடைய முற்றுகையின் கீழ் வைத்திருந்த அஜர்பைஜான் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடர் இடம்பெறும் காலப்பகுதியில் அந்த பகுதி மீது முழுமையான தாக்குதலை மேற்கொண்டது என கல்விமான்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். முழு உலகமும்…

  3. பிரித்தானியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்கொட்லாந்திலுள்ள குருத்வாரா ஒன்றின் முன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவிலுள்ள குருத்வாரா ஒன்றில், கமிட்டி உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்றிற்காக, பிரித்தானியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகரான விக்ரம் தொரைசாமி (Vikram Doraiswami) சென்றிருந்த நிலையில், அவர் குருத்வாரா வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதன்போது, குருத்வாராவின் முன் கூடியிருந்த சீக்கியர்கள் சிலர், உயர் ஸ்தானிகர் இங்கு வரக்கூடாது, அவர் திரும்பிச் செல்லவேண்டும் என்று குரல் எழுப்பிய நிலையில், சிலர் அவரது காரைத் திறக்க முயன்றுள்ளனர். காணொளி காட்சி சிறிதுநேர குழப்பத்துக்குப் பின், கார…

  4. தனது அண்மை பதிவின் மூலமாக, கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பிரசாரத்தில் சேர்ந்திருக்கிறார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க். கொரோனா பிடியிலிருந்து உலகம் இன்னமும் முழுமையாக விடுபடவில்லை. நாள்தோறும் கணிசமான எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருகிறார்கள். இவற்றின் மத்தியில் புதிய ரக கொரோனா திரிபுகள் குறித்தும் அவ்வப்போது அச்சுறுத்தல்கள் எழுந்தடங்கி வருகின்றன. கொரோனா பிடியிலிருந்து உலகைக் காத்ததில் தடுப்பூசிக்கு பிரதான பங்குண்டு. அறிவியல்பூர்வமாக உறுதிசெய்யப்பட்ட தடுப்பூசியின் நற்பலன்கள் காரணமாக உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிர் தப்பியிருக்கிறார்கள். ஆனபோதும் இந்த தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பான பிரசாரம், அதனை எதிர்ப்பவர்கள் மத்தியில் தணிந்தபாடில்லை. அ…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து மூன்று மணிநேரம் தொடர்ந்த உரைகள் அந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் சலிப்பை ஏற்படுத்தியது. ஒருங்கிணைப்பாளர் நன்றியுரைக்கு தயாராகிக்கொண்டிருந்தார், அங்கிருந்த மக்களும் மதிய உணவுக்கான நேரம் வந்துவிட்டது என்ற நம்பிக்கையில் எழுந்து நின்றனர். அப்போது, இரு நபர்கள் அரங்கின் பின்னால் இருந்து ஓடி வந்து மேடைக்கு…

  6. Published By: RAJEEBAN 01 OCT, 2023 | 01:04 PM ஆஸ்திரியாவில் ஜேர்மனியின் சர்வாதிகாரி அடொல்வ் ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகளிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சால்ஸ்பர்கர் வோர்ஸ்டாட் 15 என்ற முகவரியுடன் காணப்படும் கல்லினால் கட்டப்பட்ட அந்த வீடு பழுப்புநிற வர்ணம் பூசப்பட்டு காணப்படுகின்றது. முதல் தளத்தின் ஜன்னல்களை மறித்தவாறு இரும்புக் கம்பிகள் காணப்படுகின்றன, ஒரு பேருந்து நிறுத்தம் அருகில் காணப்படுகின்றது. அதற்கு அருகில் கிரனைட்கல்லினால் கட்டப்பட்ட நினைவுத்தூபி காணப்படுகின்றது --அமைதி, சுதந்திரம், ஜனநாயகத்திற்காக மீண்டும் பாசிசம் வேண்டாம் உயிரிழந்த மில்லியன் கணக்கானவர்கள் அதனை நினை…

  7. 26 நிமிடங்களுக்கு முன்னர் பண்டைய உலகின் மேதைகளான அரிஸ்டாடில், எரடோஸ்தீனஸ் மற்றும் டோலமி இக்கண்டத்தைப் பற்றி விவரித்தனர். வரைபடங்களை வடிவமைத்தவர்கள் இதற்கு Terra Australis Incognita – ‘தெற்கிலிருக்கும் அறியப்படாத நிலம்’ என்ற லத்தீன் பெயராலும் அழைத்தனர். இது நாள் வரை இது ஒரு கற்பனை கண்டம் என்று நம்பப்பட்டது. பண்டைய கிரெக்க மக்கள், பூமியின் வடிவியல் காரணங்களுக்காக இது உலகின் மறுபுறத்தில் இருக்க வேண்டும் என்று நம்பினர். டச்சு ஆய்வாளர் ஏபெல் தாஸ்மன், 1642-இல் ஒரு புதிய நிலத்தைத் தேடி இப்போது நாம் நியூசிலாந்து என்று அழைக்கப்படும் தீவுக் கூட்டத்தை கண்டுபிடித்தார். ஆனால் அவர் தேடியதைவிட இது மிகவும் சிறியதாகத் தோன்றியது. அதன…

  8. 29 SEP, 2023 | 02:04 PM சுமார் 6,000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் புல்லால் நெய்யப்பட்ட செருப்புகளான ஐரோப்பாவின் பழமையான காலணிகளை தென்மேற்கு ஸ்பெயின் அண்டலூசியாவில் உள்ள வௌவால் குகையில் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 19 ஆம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட ஸ்பெயினில் உள்ள வௌவால் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலப் பொருட்களில் அவை அடங்கும். ஆராய்ச்சியாளர்கள் கூடைகள் மற்றும் கருவிகளின் தொகுப்பையும் ஆய்வு செய்தனர். கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் தெற்கு ஐரோப்பாவில் மிகவும் பழமையான மற்றும் சிறந்த பாதுகாக்கப்பட்ட தாவர இழை என ஆய்வின் இணை ஆசிரியர் மரியா ஹெர்ரெரோ ஓட்டல் கூறினார். …

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி, காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்தக் கொலையின் பின்னணியில் இந்தியாவின் ரகசிய அமைப்புகளின் ஈடுபாடு இருக்கலாம் என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இக்குற்றச்சாட்டு ஆதாரமற்றது என இந்தியா கூறியது. மேலும் இந்தக் கொலையில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறியிருக்கிறது. பார்க்கப்போனால், ஒரு நாடு வேறொரு …

  10. Published By: RAJEEBAN 28 SEP, 2023 | 10:55 AM பிரான்சில் லொறியொன்றில் மறைந்திருந்த ஆறு பெண்கள் பிபிசியின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடியேற்றவாசிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். லொறியொன்றின் பின்பகுதியில் இவர்கள் காணப்படுவதை அறிந்த பிபிசி பிரான்ஸ் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்தே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். லொறிக்குள் சிக்குண்டிருந்த அச்சத்துடன் சுவாசிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த நான்கு வியட்நாம் பெண்களும் இரண்டு ஈராக் பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர். லொறிச்சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் ஆள்கடத்தல் கும்பல் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து பிப…

  11. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் Automobile தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற Automobile தொழிலாளர்கள் போராட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி நேற்று (செப்.26) கலந்து கொண்டார். ஜனாதிபதி தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ள நேரத்தில் ஜோ பைடனின் இந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க வரலாற்றிலேயே தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் ஜோ பைடன் தட்டிச் சென்றுள்ளார். Automobile தொழிலாளர் கூட்டமைப்பு (UAW) சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்தபடி போராட்டத்தில் கலந்து கொண்ட பைடன், தொழிலாளர்களுக்கு தன்…

  12. பட மூலாதாரம்,GETTY படக்குறிப்பு, பிக்மி நீல திமிங்கலங்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது இந்த இனத்தின் பாதுகாப்புக்கு ஓர் நற்செய்தியாகும். கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷர் பதவி, பிபிசி ஃபியூச்சர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிக்மி நீல திமிங்கலங்கள், பல தலைமுறைகளாக மனிதனின் கண்களில் படாமல் தான் இருந்து வந்தன. இன்னும் சொல்லப் போனால் சமீப காலம் வரை இப்படியொரு வகை திமிங்கலம் இருப்பது கூட மனிதர்களுக்கு தெரியாது. இவற்றில் சில 24 மீட்டர் நீளமும், 90 டன் எடையும் கொண்டவை. கடந்த 2021 இல் பிக்மி நீல திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் இவை குறித்த ஆச்சர…

  13. ஈராக்கில் திருமண மண்டபத்தில் தீ -100 பேர் பலி! ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைக்க முயலும் படங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன. எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா வகையிலும் முயற்சி எடுக்கும்படி ஈராக்கியப் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட…

  14. பட மூலாதாரம்,ALAMY/CANADIAN PRESS படக்குறிப்பு, யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனடா நாடாளுமன்றத்திற்கு வந்த போது யாரோஸ்லாவ் ஹன்கா (வலது) அவையில் கௌரவிக்கப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிஃப் மற்றும் மேக்ஸ் மாட்சா பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படைக்காகப் போர் புரிந்த யுக்ரேனைச் சேர்ந்த ஒருவருக்கு கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகு அழைப்பு விடுக்கப்பட்டது "கடும் சங்கடத்தை" ஏற்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். யுக்ரேன் அதிபர் வெள்ளிக்கிழமையன்று கனடாவுக்கு வந்த போது, நாடாளுமன்ற பொது அவையில் (ஹவுஸ் ஆ…

  15. சட்டவிரோத பெற்றோல் விற்பனையின்போது நிகழ்ந்த அசம்பாவிதம் ஒன்று பெரும் தீ விபத்தாக மாறியது. இதில் 2 குழந்தைகள் உட்பட 35 பேர் பலியாகி உள்ளனர். ஆபிரிக்க நாடான பெனினில் இந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது. மேற்கு ஆபிரிக்க தேசங்களின் ஒன்று பெனின். நைஜீரியாவின் அண்டை தேசமான பெனினில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத தீ விபத்தில் 35 பேர் பலியாகி இருக்கின்றனர். தீயில் சிக்கிய பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. பெனின் நாட்டில் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு அங்கே விலையும் அதிகம். எனவே பெற்றோல்ல் மலிவாகவும், தாராளமாகவும் கிடைக்கும் எல்லை தேசமான நைஜீரியாவிலிருந்து சட்ட விரோதமாக ப…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவ கிளர்ச்சி நடந்த ஏழு நாட்களுக்குப் பிறகு தனது பெயரை கதாஃபி அறிவித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் 22 செப்டெம்பர் 2023 இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தின் தொடக்கத்தில், கர்னல் முயம்மர் கதாஃபியின் காலம் கடந்துவிட்டது. அவர் 2011 வாக்கில், யாரும் மீண்டும் பார்க்க விரும்பாத பழைய திரைப்படத்தின் கதாபாத்திரம் போல் ஆகிவிட்டார். வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மனிதன் ஏற்கெனவே நிலவில் கால் பதித்துவிட்ட சமயத்தில், ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க அதிபராக இருந்த காலகட்டத்தில் அவர் ஆட்சிக்கு வந்தார்.…

  17. சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் புர்காக்கள் அணிய தடை விதித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் நிக்காப் எனும் முகத்தை மறைக்கும் துணிகள் மற்றும் புர்காக்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் குழப்பம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையானோர் நிக்காப்புகளை அணிய அனுமதிக்க வேண்டும் எனவும் புர்காக்களை அணிய தடை விதிக்கலாம் எனவும் வாக்களித்தனர். இதையடுத்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தெற்கு டிசினோ மற்றும்…

  18. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மாணவிகளின் நிர்வாணப்படங்கள் - அதிர்ச்சியில் ஸ்பெயின் நகரம் Published By: Rajeeban 25 Sep, 2023 | 11:12 AM செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மாணவிகளின் நிர்வாணப்படங்கள் ஸ்பெயின் நகரமொன்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. ஸ்பெயினின் நகரமொன்றில் வசிக்கும் இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன என்ற செய்தி அந்த நகரமக்களிற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முன்வைத்து இந்த படங்கள் உருவாக்கப்பட…

  19. Published By: RAJEEBAN 17 SEP, 2023 | 02:25 PM அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இன்று இடம்பெற்ற பேரணிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். மெல்பேர்னில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டுள்ள சுதேசிய அவுஸ்திரேலியர்களிற்கான அமைச்சர் லின்டா பேர்னே வரலாறு உண்மையாகவே அழைக்கின்றது என தெரிவித்துள்ளார். இவ்வளவு பெருந்தொகையான மக்களை பார்த்து நான் உண்மையாகவே கண்ணீர் விடுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெருந்தொகையான மக்களை பார்த்து நான் நெகிழ்ந்துபோனேன் நீங்கள் எங்கிருக்கின்றீ…

  20. ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய சட்டமூலத்தை ஈரான் பாராளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டமூலத்தின் விதிகளின்படி, பொது இடங்களில் “தகாத முறையில்” உடை அணிந்தவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். ஈரானின் தண்டனைச் சட்டத்தின்படி 180 மில்லியன் முதல் 360 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டமூலம் சட்டமாக மாறுவதற்கு முன்பு கார்டியன் கவுன்சிலின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த சட்டமூலம் அரசியலமைப்பு மற்றும் ஷரியாவுக்கு முரணானது என கருதினால் அதை தடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இந்த ஹிஜாப் சட்டமூலம் 152-க்கு 34 என்ற பாராளுமன்ற வாக்கெடுப்பு மூல…

  21. பட மூலாதாரம்,LARRY BARHAM படக்குறிப்பு, இந்த மரக்கட்டைகள் சுமார் 4.76 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்பது பகுப்பாய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி செய்திகள் 23 செப்டெம்பர் 2023, 03:58 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜாம்பியாவில் உள்ள ஓர் ஆற்றங்கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பழங்கால மனித வாழ்க்கை பற்றிய தொல்லியல் ஆய்வாளர்களின் புரிதலையே புரட்டிப்போடும் விதத்தில் உள்ளன. சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் தமக்கான கட்டமைப்பை உருவாக்க மரத்தை…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஜூலை மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல்களாக குறைக்க சௌதி அரேபியா முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதமும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் அந்நாட்டு அரசின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 9 மில்லியன் பேரல்களாக இருக்கும் என்று சௌதியின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சௌதி பிரஸ் ஏஜென்சி (எஸ்பிஏ) தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் சந்தையை நிலைப்படுத்தும் நோக்கில் எ…

  23. Published By: RAJEEBAN 19 SEP, 2023 | 10:53 AM இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அவுஸ்திரேலியா அமெரிக்க பிரிட்டன் ஆகிய நாடுகளிடையேயான அவுகஸ் aukus உடன்படிக்கையை இராணுவகூட்டணி என வர்ணித்துள்ளதுடன் அது தேவையற்றது இதனால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். இது மூலோபாய தவறு அவர்கள் தவறிழைத்துள்ளனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்த கூட்டணி ஒரேயொரு நாட்டை மாத்திரம் இலக்காக கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கின் சர்வதேச அமைதிக்கான கார்னகி என்டோவ்மன்டின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 2021 இல் உருவாக்கப்பட்ட அவுக்…

  24. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார அளவில் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் அவலநிலையை எதிர்கொண்டு வருகிறார்கள். ரஷ்யாவில் பெற்றோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது. ரஷ்யா ஒரு நாளைக்கு 9 இலட்சம் பேரல்கள் என்ற வகையில் டீசலை ஏற்றுமதி செய்கிறது. 6…

  25. 22 SEP, 2023 | 12:59 PM உலகின்மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பொக்ஸ் நியுஸ் நியுஸ்கோர்ப் போன்றவற்றின் தலைவர் ருபேர்ட்மேர்டோக் (92) தனது குழுமங்களின் தலைமை பதவியிலிருந்து விலகியுள்ளார். ஏழு தசாப்தகாலமாக அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ருபேர்ட்மேர்டோக் தலைமை பதவியிலிருந்து விலகும் அறிவிப்பைவெளியிட்டுள்ளார். பதவிவிலகுவதற்கான வேறு பணிகளை முன்னெடுப்பதற்கான பொருத்தமான தருணமிது என அவர் குறிப்பிட்டுள்ளார். நியுஸ்கோர்ப் நிறுவனத்தின் தலைமை பதவியை அவரது மகன் லச்லான் ஏற்கவுள்ளார்-அவர் தொடர்ந்தும் பொக்ஸ் நியுசின்பிரதமர் நிறைவேற்று அதிகாரியாக செயற்படுவார்- லச்லான் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.