உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26662 topics in this forum
-
சுற்றுலாத் தளமாக மாறியுள்ள பிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள்ள வீடு வீரகேசரி இணையம் 1/24/2010 11:18:34 AM - விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு தென்னிலங்கை சிங்களச் சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது. யுத்தம் தற்போது முடிவடைந்து சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஏ – 9 வீதியினூடாக அதிகளவிலான தென்னிலங்கை சிங்கள சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களினை பார்வையிடுகின்றனர். இவர்கள் பார்வையிடும் இடங்களில் ஒன்றாக தற்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த வல்வெட்டித்துறை வீடும் மாறியுள்ளது. உடைந்த நிலையில் உள்ள பிரபாகரனின் வீட்டிற்கு முன…
-
- 1 reply
- 520 views
-
-
புதிய ஆடியோ வெளியீடு: அமெரிக்காவுக்கு பின்லேடன் எச்சரிக்கை கெய்ரோ: கடந்த கிறிஸ்துமஸ் நாளில் டெட்ராய்ட் விமான தாக்குதல் சதி திட்டத்திற்கு பொறுப்பேற்பதாக அல்-கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் ஆடியோ டேப் மூலம் மிரட்டியுள்ளார். அல்-ஜெஸீரா தொலைக்காட்சியில் பின்லேடன் பேசிய ஆடியோ பதிவு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்து பின்லேடன் பேசியுள்ளதாவது: கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி டெட்ராய்ட் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட அமெரிக்க பயணிகள் விமானத்தை தகர்க்க திட்டமிட்டது அல்-கொய்தா தான். செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டை கோபுரத்தை தகர்த்து உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தேன். அதேபோல எங்களின் போர்வீரன் பரூக…
-
- 1 reply
- 714 views
-
-
அவுஸ்திரேலியாவிலும் இனவாதம் பேசும் வட இந்தியர் அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவில் இந்தியர் மேல் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அவர்களே ஊடகங்களுக்கும் பொலீசிலும் முறைப்பாடு செய்துவருவது அனைவரும் தெரிந்ததே. இவ்வாறு இந்தியர்கள் முறையிடும் தாக்குதல் சம்பவங்கள் அநேகமானவை தங்களுக்குள்ளேயோ அல்லது தமக்குத் தாமேயோ செய்தவைதான் என்பது பின்னர் நிரூபணமானது வேறுகதை.மனைவியின் கழுத்தை மரக்கறி வெட்டும் கத்தியால் அறுத்துவிட்டு மெல்பேனுக்கு பஸ்ஸேறிய கணவன், காப்புறுதிப் பணத்திற்காக தனது காரை தானே எரித்து விட்டு அதில் தானே மாட்டிக்கொண்டு இனவாதிகள்தான் தாக்கினார்கள் என்று முறையிட்ட இந்தியன்......இப்படிப்பல உதாரணங்களும் "இனவாதிகளின் தாக்குதல்கள்" பட்டியலில்த்தான் சேர்க்கப்பட்டு வருகின்றன. இ…
-
- 10 replies
- 1.4k views
-
-
இன்று மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விடுதலை வேட்கையுள்ள மக்களால் மரியாதையாக நேதாஜி என்று அழைக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீரரும் எமது தமிழ் தேசியத் தலைவரின் குருவுமாகிய இந்திய காங்கிரஸ் கட்சியால் காட்டிக்கொடுக்கப்பட்டு தாய்நாட்டிலும் சிறைவாசம் அனுபவித்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் 1897 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். தாயார் பிரபாவதி. இவரை வங்கம் தந்த சிங்கம் என்று கூறியிருக்கிறார்கள். இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களிற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர் நேதாஜி. இவரது குடும்பம் ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். இவரை இவரது ஆயா தான் அன்பாக கவனித்து வளர்த்திருக்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
சீனாவின் ‘சைபர்’ அட்டாக்கைத் தாக்குப் பிடிக்குமா இந்தியா? இந்தியாவின் பாதுகாப்புத் துறை வெப்சைட்களுக்குள் ஊடுருவி, அவற்றில் குளறுபடி செய்யும் விஷமச் செயல்களில் சீனா ஈடுபட்டு வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.கடந்த டிச., 15ம் தேதி, அமெரிக்காவின் பாதுகாப்பு, நிதி மற்றும் தொழில்நுட்பத் துறை வெப்சைட்டுகளுக்குள், சீனாவைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி, அவற்றில் குளறுபடி செய்ததாக புகார் எழுந்தது. கூகுல் தேடுதல் இணைய தளத்திலும் இதுபோன்ற குளறுபடிகள், சீனாவில் இருந்து செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டது. அதே நாளில், இந்திய பாதுகாப்புத் துறை வெப்சைட்களிலும், சீனா அரசு சார்பில் சில விஷமிகள் ஊடுருவி…
-
- 1 reply
- 647 views
-
-
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்த சீனா! 8.7 சதவீத அபார வளர்ச்சியுடன் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது கம்யூனிஸ்ட் சீனா. இதுவரை அந்த நிலையிலிருந்த ஜப்பான் இப்போது மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 21ம் தேதி சீனா வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, அந்நாடு 33.5 ட்ரில்லியன் யான் (யான் என்பது சீன கரன்ஸி. டாலரில் 4.9 ட்ரில்லியன்) அளவு மொத்த உற்பத்தியை எட்டியுள்ளது. இந்த மூன்றாவது காலாண்டில் மட்டும் 10.7 சதவிகிதம் அளவு சீனாவின் மொத்த உற்பத்தி GDP வளர்ச்சி கண்டுள்ளது. உலகில் இந்த காலகட்டத்தில் எந்த நாட்டுப் பொருளாதாரமுமே இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொட முடியாத நிலையில் சீனா இதைச் சாதித்திருப்பது முக்கியமானது. ஜப்பான் 6 …
-
- 1 reply
- 667 views
-
-
புதுடெல்லி: டெல்லியிலுள்ள சாகர்ப்பூர் நகரில் வசித்து வரும் வினோத் குப்தா என்பவர் நான்கு மாஷா குளிர்பானத்தை வீட்டிற்கு வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பின் குளிர்பானத்தில் பூச்சி இருப்பதை கண்டு அச்சம் அடைந்தார். பின்னர் அருகில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் பாட்டிலுடன் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த மாநில நுகர்வோர் மன்றம், நடத்திய ஆய்வில் கோக்க கோலா நிறுவனத்தின் குளிர்பானமான மாஷா வில் பூச்சி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மாஷா குளிர்பானம் தயாரிக்கும் கோக்க கோலா நிறுவனத்தின் ஒரு யூனிட்டிற்கு ரூ.1 லட்சம் அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட வாடிக்கையளரான வினோத் குப்தாவிற்கு கோக்க கோலா நிறுவ…
-
- 1 reply
- 923 views
-
-
பாகிஸ்தானுக்கு 12 ஆளில்லா விமானங்களை அமெரிக்கா வழங்கவுள்ளது பாகிஸ்தானுக்கு 12 ஆளில்லா விமானங்களை வழங்க உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சென்றுள்ள ராபர்ட் கேட்ஸ், இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதகரக பணியாளர்களுடன் கலந்துரையாடும்போது இதனை தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக அமெரிக்கா ஒரு பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆளில்லா விமானங்கள் வழங்கப்படுவதாகவும் ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார். அமெரிக்கா வழங்கவுள்ள இந்த விமானங்கள், பாகிஸ்தான் இராணுவத்தின் உளவுத் திறனை அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரி…
-
- 0 replies
- 404 views
-
-
இணைய தளங்களுக்கு தணிக்கை: அமெரிக்கா சீனா உறவை பாதிக்கும் சீனாவில் இணைய தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தணிக்கை விவகாரத்தை அமெரிக்கா விமர்சிப்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கச் செய்துவிடும் என்று சீனா கூறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இணைய தேடல் நிறுவனமான கூகுளின் சீன சேவைகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தணிக்கைகளை விதித்துள்ளது. பேஸ் புக், ட்விட்டர் மற்றும் யூ டியூப் மற்றும் பிளாக்குகள் போன்றவற்றை சீன அரசு தடை செய்துள்ளதோடு, அயல்நாட்டு இணைய தளங்களை பார்க்கவும் தடை விதித்துள்ளது. அத்துடன் கூகுள் மூலமான இ மெயில்களை 'ஹேக்' செய்யவும் சீனா முயன்றதாக குற்றச்சாற்று எழுந்தது. இதனால் தாங்கள் சீனாவிலிருந்து வெளியேற …
-
- 0 replies
- 364 views
-
-
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரத்தில் இது 4வது தாக்குதல் . ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் இந்தியர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரஸ்பேன் நகரில் இரண்டு வெவ்வறு இடங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தெற்கு பிரிஸ்பேன் மேக்கிரகர் எனும் இடத்தில் 25 வயது இளைஞர் தாக்கப்பட்டு, அவரது பர்சும் பறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சம்பவத்தில் தென்கிழக்கு பிரிஸ்பேனில் இந்திய டாக்சி டிரைவர் மீது அந்த டாக்சியில் பயணித்தவர்கள், முகத்தில் பலமுறை குத்தி மோசமாக தாக்கியதோடு காரையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகி…
-
- 29 replies
- 2k views
-
-
வடகொரியா மீது போர் தொடுப்போம் - தென்கொரியா எச்சரிக்கை தங்கள் மீது வடகொரியா அணுவாயுத போர் தொடுக்கலாம் என்ற செய்தி உளவுத்துறை மூலம் தெரிய வந்ததால் அதைத் தடுக்க தாங்கள் முன்கூட்டியே அந்நாடு மீது முதல் தாக்குதலைத் தொடுப்போம் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிம் டே யங் இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளதாக சியோலில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தகவல் அளித்துள்ளது. http://www.pathivu.com/news/5165/54//d,view.aspx
-
- 0 replies
- 422 views
-
-
நோபல் பரிசு பெற்ற, வெளிநாட்டு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் மற்றும் அமர்த்தியா சென் ஆகியோருக்கு பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் விருந்தளித்து கவுரவித்தார். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், கடந்தாண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். அமர்த்தியா சென், 1998ம் ஆண்டிற்கான பொருளாதார துறைக்கான நோபல் பரிசு பெற்றார். இவர்கள் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்றவர்களுக்கு, அந்நாட்டு பிரதமர் கார்டன் பிரவுன் மற்றும் அவரது மனைவி சாரா பிரவுன் நேற்று முன்தினம் இரவு விருந்தளித்து கவுரவித்தனர். அதிகளவு நோபல் பரிசு பெற்ற நாடுகளில், உலகளவில், அமெரிக்கா முதல் இடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பிரிட்டன்…
-
- 0 replies
- 466 views
-
-
என் தந்தையை கொன்றால் உலக அளவில் பேரழிவு ஏற்படும்: ஒமர் என் தந்தையை கொன்றால், உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பேரழிவை ஏற்படுத்துவார்கள் என்று பின்லேடனின் மகன் ஒமர் எச்சரித்து இருக்கிறார். மேலும் அவர், 2000-ம் ஆண்டு புஷ் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டபோது என் தந்தை ரொம்பவும் சந்தோஷப்பட்டார். ஏனெனில், புஷ் தான் அமெரிக்காவுக்கு அப்போது தேவைப்பட்ட தலைவர் என்று அவர் கூறினார். பிறநாடுகளின் மீது தாக்குதல் நடத்தி, அதற்காக பணத்தை செலவிட்டு நாட்டை அழித்து விடுவார் என்று என் தந்தை கணித்து இருந்தார் என்றும் ஒமர் பின்லேடன் கூறினார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=25117
-
- 0 replies
- 539 views
-
-
போர்டாபிரின்ஸ்: பூகம்பப் பேரழிவில் இருந்து இன்னும் மீளாத நிலையில் ஹைத்தி தீவு நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. எட்டு நாட்களுக்கு முன்பு உலுக்கிய பூகம்பத்தால் ஹைத்தியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது. போர்டாபிரின்ஸ் நகரில் கிட்டதட்ட எல்லா கட்டிடங்களுமே இடிந்து சுடுகாடாக மாறி மிகப்பெரிய பேரழிவு நடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய சடலங்கள் கூட முழுமையாக மீட்கப்படாத நிலையில் இன்று காலை ஹைத்தியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிர் பிழைத்திருக்கும் எஞ்சியுள்ள மக்களும் பெரும் பீதிக்கு உள்ளானார்கள். ஆங்காங்கே கட்டிடங்களில் தஞ்சமடைந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். பல இடங்களில் கட்டிடங்கள் க…
-
- 0 replies
- 845 views
-
-
ஆந்திராவில் தனித்தெலுங்கானா கோரி தொடர்கிறது தற்கொலை: உஸ்மானியா பல்கலை., மாணவர்கள் மீது போலீசார் தடியடி ஐதராபாத் : தனித்தெலுங்கானா விவகாரம் ஆந்திராவில் மீண்டும் பற்றி எரிய தொடங்கிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் தெலுங்கானாவில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் தற்கொலை செய்துள்ளனர். நேற்று காலையில் உஸ்மானியா பல்கலை., மாணவர் வேணுகோபால் தீக்குளித்தார், பின்னர் மாவட்ட நிர்வாக துறையில் பணியாற்றும் 40 வயதான சுரா நேரு நாயக் என்பவரும், இரவில் சுவர்னா என்ற கல்லூரி மாணவியும் தனித் தெலுங்கானா அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தெலுங்கானாவில் "ஸ்டூடண்ட் ஆக…
-
- 1 reply
- 559 views
-
-
மிகவும் முதன்மையான விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் வொக்கர் ஹெரிடேஜ் என்ற மரபுரிமை கிராமத்திற்கான விருது இம்முறை வின்க்ரோவிங் கிராமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு கான்டனான க்ராவுபுன்டனில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. சிறந்த நகர அபிவிருத்தித் திட்டத்தை அமுல்படுத்தும் நகரம் அல்லது கிராமத்திற்கு வருடாந்தம் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த விருதுடன், 20,000 சுவிஸ் பிராங்குகளும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகறிது. வொக்கர் ஹெரிடேஜ் விருது 1972ம் ஆண்டு முதல் கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கட்டிட அமைப்பு, நகர நிர்மானம் மற்றும் உட்கட்டுமான வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் …
-
- 0 replies
- 575 views
-
-
ஸ்ரீரங்கன் அச்சுதன் 1/19/2010 4:26:52 PM - ஒரு பக்கம் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக அமெரிக்க நிதித் துறை கூறினாலும்,வங்கிகள் மூடு விழா தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது.அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் ரியல் எஸ்டேட் துறைக்கு அடுத்து, மிக மோசமான பாதிப்புக்கு உள்ளானது வங்கித் துறைதான். 2010ம் ஆண்டின் தொடக்கத்திலேயே அமெரிக்க வங்கித் துறையில் 4 வங்கிகள் மூடப்பட்டன.ஜனவரி 15 ஆம் தேதி அன்று மட்டும் பார்ன்ஸ் பேங்கிங் கம்பெனி(Barnes Banking Company), செயின்ட் ஸ்டீபன் வங்கி(St Stephen State Bank), டவுன் கம்யூனிட்டி வங்கி(Town Community Bank & Trust) உள்ளிட்ட மூன்று வங்கிகள் மூடப் பட்டன. கடந்த வாரம் வாஷிங்டனைச் சேர்ந்த ஹாரிசன் வங்கி (Horizon Bank) திவாலானது. அமெரிக்க…
-
- 0 replies
- 534 views
-
-
தமிழகத்தின் முதலாவது கரும்புலி தோழர் முத்து குமார் அவர்களை நினைவு கூர்வோம்.. தமிழகத்தின் முதலாவது கரும்புலி மாவீரன் முத்து குமார் அவரது முதலாண்டு நினைவு நாள் வரும் ஜனவரி 29 தேதி வருகிறது.இந்தியத்தில் தமிழனின் நிலையும் .. ஈழத்தில் இந்திய மேலாதிக்கத்தையும் தமிழரை கொல்லும் அதன் சதி திட்டத்தை உணர்த்தும் வகையில்.. தம் இன்னுயிரை மாய்த்து கொண்டார்.. அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே... என்று கடித்ததை தொடக்கியதன் மூலம் அவர் உழைக்கும் வர்க்கத்தை எந்த அளவிற்கு நேசித்தார் என்பது தெரிகிறது.. அவரின் ஈகத்தை நினைவு கூறுவதோடு தமிழ் தேசியத்திற்காக தன்னால் ஆன பங்களிப்புகளை செய்ய அனைவரும் உறுதி ஏற்போம் தோழர் முத்து குமார் அவர்களின் கடிதம் இங்கே இணைக்கபட்டுள்ளது.. …
-
- 2 replies
- 858 views
-
-
Lonely Planet என்னும் அமைப்பினர் வெளியிட்ட உலகின் வாழ்வதுக்கு கடினமான ஒன்பது நகரங்களில் இந்தியாவின் சென்னை ஏழாவது இடத்தை பிடித்து தமிழர்களின் தலைநகரத்துக்கு பெருமை சேர்த்து உள்ளது... இதில் இங்கிலாந்தின் வூல்வகாம்டன், அமரிக்க லொஸ் ஏஞ்சல் என்பனவும் இடம் பிடிச்சு இருக்கிண்றது... பலதரப்பட்ட நகரங்களில் வாழும் மக்களின் கருத்துக்களையும் குறைகளையும் ஆராய்ந்து தாங்கள் நகரங்களை தெரிவு செய்ததாக அமைப்பின் இணையத்தளம் சொல்கிறது... ஜெயலலிதா அவர்களும் , கருணாநிதியும் இணைந்து சென்னைக்கு வாங்கி கொடுத்த பெருமையை பாராட்டமல் இருக்க முடியாது... இது சம்பந்தமாக இங்கிலாந்தின் telegraph பத்திரிகையில் வந்த செய்தி.. http://www.telegraph.co.uk/news/uknews/6911628/Wolverhampto…
-
- 2 replies
- 741 views
-
-
. ஐ.நா தலைமையகத்தை டுபாய்க்கு மாற்ற நடவடிக்கை 2015ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து டுபாய்க்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடம் தர தயார் என துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .ஏற்கனவே இந்த வாய்ப்பு சிங்கப்பூருக்கு இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் செயல்பட அமெரிக்காவுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அதனை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் உலக நாடுகளின் தலைமையகமான ஐக்கியநாடுகள் சபைக்கு உலக நாடுகள் அனைத்திற்கும் எளிதில் செல்வதற்கான இடமாக இருக்க வேண்டுமென்பது இதன் முக்கிய நோக்கமாகும். …
-
- 0 replies
- 595 views
-
-
இந்திய விமான நிலையங்களில் புலியின் தாக்கம் உலகின் அனைத்து நாடுகளின் மக்களும் சங்கமிக்கின்ற ஒரு இடம் விமான நிலையம். விமான நிலையங்களில் உள்ள நேர அட்டவணைப் பலகையில் அந்த விமானநிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களினது சின்னங்களுடன் பெயர்களும் அது தரையிறங்கும், புறப்படும் நேரங்களும் விமான இலக்கத்துடன் அந்த நேர அட்டவணையில் போடப்படும். ஆனால், இந்தியவிலுள்ள எந்தவொரு விமானநிலையத்திலும் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான “ரைகர் எயார் வேஸ்” (tiger air ways) எனும் விமானத்தின் பெயர் நேர அட்டவணையில் இடம்பெறுவதில்லை. உலகில் மிகக்குறைந்த விலையில் விமானச்சீட்டு வழங்கும் ஒரு விமான சேவை இது. விமானத்தின் சின்னமாக புலி இருப்பது தான் இதற்கான காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டாலும், இந்…
-
- 0 replies
- 692 views
-
-
அலங்காநல்லூர் : உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று விமரிசையாக நடந்தது. மாடு முட்டி 63 பேர் காயமடைந்தனர். 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பொங்கலை ஒட்டி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடப்பது வழக்கம். நேற்று இந்த நிகழ்ச்சி கோட்டை முனியாண்டி சுவாமி கோயில் திடலில் நடந்தது. காலை 10.30 மணிக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக, கிராம கோயில் காளை ரசிகர்களின் விசில்பறக்க களமிறங்கியது. 5 நிமிடங்களுக்கு மேல் நின்று விளையாடிய இந்த காளையை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. கூர்சீவப்பட்ட கொம்புடன் சீறிப்பாய்ந்து வீர…
-
- 0 replies
- 546 views
-
-
அமெரிக்காவாழ் இந்திய இளைஞர் அவர். யு.எஸ்.ஸுக்கு விமானமேறும் முன் அவசரமாக அவர் நம்மைப் பார்க்க விரும்பியதால், விமான நிலையத்தில் பிரசன்னமானோம். கண்ணில் ரேபான் குளிர்க்கண்ணாடி, ஆப்பிள் சிவப்பு நிறம், நெற்றியில் விழும் சுருள் முடி, சுருக்கமாகச் சொல்லப்போனால் இளவரசன் போல இருந்தார் அந்த இளைஞர். அப்படி என்ன பேசப்போகிறார்? சர்வதேச பயங்கரவாதம், பேரழிவு ஆயுதம், அணுசக்தி ஒப்பந்தம், டாலர் மதிப்பு உயர்வு பற்றி ஏதாவது பேசப்போகிறாரா என்றபடி அவரது முகத்தை நாம் ஏறிட்ட நேரம், அந்த இளைஞரின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர். ‘‘விளக்கைப் பிடிச்சுக்கிட்டு கிணற்றில் விழுந்த கதை மாதிரி ஆயிட்டுது சார் என் வாழ்க்கை. என்னால் ஒரு பாவமும் அறியாத எழுபது வயதைத் தாண்டிய என் அப்பாவும், …
-
- 18 replies
- 3.6k views
-
-
மக்கள் போராட்டங்களும்- இந்தி-தமிழக அரசியல்வியாதிகள் நிலையும்- இனி தமிழ்தேசிய தோழர்கள் கடமையும் மக்கள் போராட்டம்-(உண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்-தீக்குளிப்பு) தெரிந்தோ தெரியாமலே இந்த இந்தி தேசியத்தில் உள்வாங்க பட்ட தமிழர்களாகிய நாம் இதை செய்தால் அரசாங்கம் நம்மை கண்டுகொள்ளும் ஏதாவது செய்யும் என பழக்கபடுத்திவிட்டார்கள்.இன்று அந்த பழக்கமே மக்களிடம் மேலோங்கி உள்ளது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில் அதாவது இனம் சார்ந்த பிரச்சனைகளில் இதுவும் செல்லுபடியாகாது என ஈழ பிரச்சனையில் நாம் கண்டு கொண்டோம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் எவனும் கண்டு கொள்ளவில்லை.ஏதோ காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தார் தமிழக விவசாயிகள் கோவணத்தோடு இருப்பதை கண்டு தானும் கோவணத்…
-
- 0 replies
- 742 views
-
-
கேப்டன் டிவி- ஏப்.14ல் ஒளிபரப்பு ஆரம்பம்! சென்னை: தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 'கேப்டன் டிவி' ஏப்ரல் 14ம் தேதி, 24 மணி நேர ஒளிபரப்பு சேவையை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 'கேப்டன் டிவி'யின் நிர்வாக இயக்குனர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், 'கேப்டன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை நவரசம் ததும்பும் தொடர் நாடகங்களும், மதியம் மக்களின் மனம் கவரும் திரைப்படங்களும் ஒளிபரப்பாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களும், மாலை புத்தம் புதிய தமிழ் திரைப்படங்களும் இடம் பெறுகின்றன. பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் இதில் முக்கிய பங்கு பெற…
-
- 0 replies
- 577 views
-