உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
ஷூ வாங்கித் தருவதாக கூறி 6 வயது சிறுமியை அழைத்துச் சென்ற அவளது தந்தை நதியில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், பத்லாப்பூர் பகுதியில் உல்லாஸ் நதி மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தில் காலை நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் நதியின் ஆகாயத்தாமரையில் ஒரு சிறுமி சிக்கி உயிருக்குப் போராடி கதறிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் நதியில் இறங்கி சிறுமியை மீட்டனர். மிகவும் சோர்வாக இருந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் …
-
- 0 replies
- 267 views
-
-
புதுடெல்லி: மக்களவையில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க இயலாது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அரசியல் சட்டத்தின்படி எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க ஒரு கட்சிக்கு நாட்டிலுள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகளில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதன்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 55 இடங்களில் வெற்றி பெற்ற கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும். ஆனால், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அந்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க.வை அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 44 இடங்களே கிடைத்தன. இருப்பின…
-
- 0 replies
- 267 views
-
-
70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான்... ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக, உக்ரைன் குற்றச்சாட்டு! ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் 70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆகையால், ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, உக்ரைன் இராணுவ உபகரணங்களை சரிசெய்வதை பல்கேரியா தொடரும் என பல்கேரிய இராணுவ அமைச்சர் ஜாகோவ் கூறியுள்ளார். ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட ஹெலிகொப்டர்களின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 2 பல்கேரிய நிறுவனங்களுக்கும், ஒரு செக் குடியரசு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரஷ்யா நிறு…
-
- 1 reply
- 267 views
-
-
‘SUZUKI மோட்டர்ஸ்’ நிறுவனத்தின் ஒசாமு சுசுகி காலமானார்! சுசுகி மோட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இந்திய கார் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொழிலதிபருமான ஒசாமு சுசுகி, தனது 94ஆவது வயதில் காலமானார். லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் 25ஆம் திகதி உயிரிழந்ததாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் கெய்ரோவில் பிறந்த ஒசாமு, உலகப் புகழ் பெற்ற சுசுகி மோட்டார்ஸ் குழுமத்தின் நிறுவனர் குடும்பத்துடன் திருமணம் செய்த பின், அந்த தொழிலில் முன்னணி நபராக செயலாற்ற தொடங்கினார். 1958ஆம் ஆண்டு சுசுகி குழும தொழிலில் சேர்ந்த அவர், 1978இல் நிறுவனத்தின் தலைவரானார். 1982ஆம் ஆண்டு அவர் இந்திய ஓட்டோமொபைல் சந்தைய…
-
- 0 replies
- 267 views
-
-
ஈராக் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 கொரோனா நோயாளர்கள் பலி ; 46 பேர் காயம் பாக்தாத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையொன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 46 பேர் காயமடைந்துள்ளனர். இது கொரோன நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை என்று அதன் அருகிலுள்ள மூன்று மருத்துவமனைகளின் மருத்துவ வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன. ஈராக் தலைநகரான பாக்தாத்தின் தியாலா பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆக்ஸிஜன் தொட்டி வெடித்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. விபத்தினையடுதது பல அம்புயூலன்ஸ்கள் வைத்தியசாலையை நோக்கி விரைந்ததுடன், காயமடைந்தவர்களை வே…
-
- 1 reply
- 267 views
-
-
மியன்மாரில் அரசாங்க படையினருக்கும் கொகாங் இன கிளர்ச்சியாளர்களுக்குமிடையே 3 நாட்களாக இடம்பெற்ற மோதலில் சுமார் 50 படை வீரர்கள் பலியாகியுள்ளனர். சீன எல்லையிலுள்ள ஷான் மாநிலத்திலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. அந்த பிராந்தியத்தில் இடம்பெற்ற 13க்கும் மேற்பட்ட வெவ்வேறு மோதல்களில் 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேற்படி மோதல்களில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தொடர்பில் விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. http://www.virakesari.lk/articles/2015/02/14/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%…
-
- 0 replies
- 267 views
-
-
அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்குவதாக தகவல்! அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி முனை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) பாகிஸ்தான் இராணுவம் ரகசியமாக உருவாக்கி வருவதாக வொஷிங்டனில் உள்ள உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பின்னர் சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை மேம்படுத்த விரும்புவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டிய அந்த அறிக்கை, பாகிஸ்தான் அத்தகைய ஏவுகணையை வாங்கத் தொடர்ந்தால், வொஷிங்டன் அந்த நாட்டை அணுசக்தி எதிரியாக அறிவிக்கும் என்றும் கூறியது. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல…
-
- 1 reply
- 267 views
-
-
நைஜரில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 70 பேர் பலி நைஜரின் தென்மேற்கு பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மேயர் உட்பட குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. மாலியின் எல்லைக்கு அருகில் உள்ள தில்லாபெரியின் மேற்குப் பகுதியில், நகரத்திலிருந்து சுமார் 50 கிமீ (30 மைல்) தொலைவில் செவ்வாயன்று இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதில் பானிபாங்கோவின் மேயர் கொல்லப்பட்டுள்ளார். வியாழன் அன்று இறந்தவர்களின் எண்ணிக்கையை அறிவித்த உள்துறை அமைச்சர் அல்காசே அல்ஹாடா அரசு தொலைக்காட்சியில் 15 பேர் உயிர் பிழைத்துள்ளதாகவும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு தென்மேற்கு நைஜரின் எல்லைப் பகுதிகளில் ப…
-
- 0 replies
- 267 views
-
-
சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக விளங்கிவரும் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஜுக்கர்பக் பூமியில் இருந்தவாறு விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தபடி ஆய்வுகளை செய்துவரும் விண்வெளி வீரர்களுடன் ‘பேஸ்புக் லைவ்’ வீடியோ கால் சேவை மூலமாக வரும் ஜுன் முதல் தேதி பேசுகிறார். பேஸ்புக் லைவ் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ளவர்களுடன் மார்க் ஜுக்கர்பக் பேசுகிறார். அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்து நிர்வகித்து வருகின்றன. இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூ…
-
- 0 replies
- 267 views
-
-
தென் சீனக் கடல் பகுதியில் தனது உரிமை கோரலுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்த பிறகு, அப்பகுதியில் விமான பாதுகாப்பு மண்டலம் ஒன்றை தான் அமைக்கவுள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.இதன் மூலம் இப்பகுதியில் நுழையும் அனைத்து வெளிநாட்டு விமானங்களும் தங்களின் வருகையை சீன அதிகாரிகளிடம் அறிவிப்பது தேவையாக அமையக்கூடும். அதே வேளையில், மேற்கூறிய கடல் பகுதியில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பவழப்பாறை திட்டுகளுக்கு இரண்டு சிவிலியன் விமானங்களை சீனா அனுப்பியுள்ளது. நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும், அப்பகுதியில் தனது உரிமையினை நிலைநாட்டுவதில் தொடர்ந்து சீனா கொண்டுள்ள உறுதியை எடுத்துக் காட்டும் விதமாக, இவ்விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று தோ…
-
- 0 replies
- 267 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 17 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் சுரங்கத்திலிருந்து லித்தியம் எடுப்பது தொடர்பாக இந்தியா மற்றும் அர்ஜெண்டினா இடையே மிக முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த திங்கள் கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள இந்த திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.200 கோடி என இந்திய அரசின் சுரங்க அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் கீழ், அரசு நிறுவனமான ‘மினரல் பிதேஷ் இந்தியா லிமிடெட் (கேபில்)’ அர்ஜெண்டினாவின் கேடமர்கா மாகாணத்தில் ஐந்து சுரங்கங்களை உருவாக்கி லித்தியம் எடுக்கும். கேபில், காடமார்காவின் அரசாங்க எரிசக்தி நிறுவனமான கேமியனுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
ரஷ்யாவை... ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து, நீக்க வேண்டும் என உக்ரைன் கோரிக்கை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் நேற்றைய தினம், காணொளி மூலம் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, உக்ரைனில் ரஷ்ய படைகளினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, பாதுகாப்புச் சபைக்கு அவர் விளக்கமளித்துள்ளார். இதன்போது, ரஷ்ய படையினால், உக்ரைனியர்கள் கொல்லப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்ற நிலையில், ரஷ்யா பொறுப்புக் கூரலுக்கு உள்ளாக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதேநேர…
-
- 2 replies
- 267 views
-
-
பிள்ளைகளை எப்படிக் கையாளுவது என்பதற்கு கால்பந்தாட்டத்திலும் விதிகள் உண்டு. ஆனால் 14 வயதேயுடைய இளம் கால்பந்தாட்ட வீரர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவுக்கு ஃபிஃபா விதிகளுக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் கொண்டுவரப்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை பிபிசி கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து பதினையாயிரம் பதின்ம வயது கால்பந்தாட்ட வீரர்கள் வெளியே கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்றும் இவர்களில் பலர் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படுகின்றனர் என்றும் அரசு சார அமைப்பொன்று மதிப்பிடுகிறது. 18 வயதுக்கு குறைவான வெளிநாட்டு வீரர் ஒருவரை அணியில் சேர்த்ததற்காக ஐரோப்பிய சாம்பியன்களான பார்செலோனாவுக்கு வீரர்களைப் பரிமாறிக்கொள்ள ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டது. உலக கால்பந்தி…
-
- 0 replies
- 267 views
-
-
மலேசியாவில் இஸ்லாமிய கல்விக்கூடத்தில் ஏற்பட்ட தீயில் இருபத்திரெண்டு மாணவர்களும் இரு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்; முஸ்லிம் சிறுபான்மையினரை மோசமாக நடத்துவது குறித்து மியான்மர் மீது அழுத்தங்கள் அதிகரிக்கும் நிலையில், ஒரு முக்கிய நகரான மண்டலே விலிருந்து ஒரு செய்தித் தொகுப்பு மற்றும் திபெத்திய பீடபூமியின் அபாவில் நடைபெறும் முத்தத் திருவிழா குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 267 views
-
-
டைட்டானிக் விபத்து வரலாறு: 110 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் நான்கு மர்மங்கள் எடிசன் வேகா பிபிசி நியூஸ், பிரேசில் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 37வது கட்டுரை இது.) சரியாக 110 ஆண்டுகளுக்கு முன்பு, டைட்டானிக் கப்பல் ஒரு இருண்ட இரவில் பனிப்பாறையின் மீது மோதியது. அப்போது பெரும்பாலான பயணிகள் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார்கள்.…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தான்: தற்கொலை குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி பகிர்க ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள, ஷியா இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த ஒரு கலாசார மற்றும் மத அமைப்பின் மையத்தில், வியாழன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். படத்தின் காப்புரிமைAFP அதே பகுதியில் இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆஃப்கன் உள்துறை அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதலில் தங்கள் ஈடுபடவில்லை என்று தா…
-
- 0 replies
- 267 views
-
-
3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெஃப் பெசோஸ் கொரோனா பெருந்தொற்று, உலக பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையின் கோரப் பிடியில் தள்ளியிருக்கிறது என ஆக்ஸ்ஃபாம் (Oxfam) அமைப்பு தன் அறிக்கையில் கூறியுள்ளது. மார்ச் 2020 முதல், உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது. பொதுவாக, டாவோஸ் நகரத்தில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் தொடக்கத்தில், ஆக்ஸ்ஃபாம் தன் உலகளாவிய சமத்துவமின்மை குறித்த அறிக்கையை வெளியிடுகிறது. …
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா: ஐக்கிய அரபு அமீரகம் ஏற்பாடு YouTube ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) சட்டவிரோதமாக தங்கி யிருப்பவர்களுக்கு 6 மாத கால தற்காலிக விசா வழங்கவுள்ளதாக உயரதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக துபாயில் உள்ள இருப்பிடம் மற்றும் வெளிநாட்டினர் விவகார பொது இயக்குநரகத்தின் (ஜிடிஆர்எப்ஏ) உயரதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் கலஃப் அல் கேத் கூறியதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் எதிர்வரும் விசா பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் தங்கள் அந்தஸ்தை ஒழுங்கு படுத்திக் கொள்ளலாம். இவர் கள் இங்கு வேலை தேடிக்கொள் வதற்கு 6 மாத கால தற்காலிக விசா வழங்…
-
- 0 replies
- 267 views
-
-
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலிருந்து சென்ற விமானத்தில் 'பாதுகாப்பு உசார்நிலை' ஏற்படக் காரணமான பயணி ஒருவரை இந்தோனேசியாவின் பாலித் தீவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். முன்னதாக, விமானம் கடத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசிய இராணுவத்தினர் தகவல் வெளியிடவும் இந்தப் பயணியே காரணமாகியுள்ளார். குறித்த பயணி மதுபோதையில் இருந்ததாகவும் விமானிகளின் காக்பிட்- கட்டுப்பாட்டு அறையின் கதவை ஓங்கித் தட்டியதாகவும் அதன்பின்னர் அந்தப் பயணி மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் வர்ஜின் விமானசேவையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இந்தத் தகவல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டமையே விமானம் கடத்தப்பட்டதாக முன்னதாக செய்திகள் வரக்காரணம் என்றும் அவர் தெரிவித்தார். விமானம் பாலியில் தரையிறங்கியபோது, விமானத்தை தமது கட்டுப…
-
- 1 reply
- 267 views
-
-
புர்க்கினா பாசோ கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வு மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்க்கினா பாசோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் மீது ஒரே இரவில் துப்பாக்கி ஏந்தியவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளது. நைஜருடனான கிழக்கு எல்லைக்கு அருகிலுள்ள யாகா மாகாணத்தில் உள்ள சோல்ஹான் கிராமத்திலேயே வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் எரித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் ஜிஹாதி தாக்குதல்கள் வெடித்ததில் இருந்து பதிவான மோசமான தாக்குதல் இதுவாகும். இந் நிலையில் இத் …
-
- 0 replies
- 267 views
-
-
கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி தாக்குதல் போன்று அமெரிக்கா பற்றிஎரியும் என்று மிரட்டல் விடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டு உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து நாசவேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்கா போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. உலகில் உள்ள அனைத்து அமெரிக்கர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று மிரட்டல் விடுத்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது என்று ட…
-
- 0 replies
- 267 views
-
-
ஐக்கிய இராச்சியத்தின் மேர்க்கெல்? ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரேசா மே, அந்நாட்டின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தட்சருக்குப் பின்னர் பதவியேற்ற முதலாவது பெண்மணி என்ற ரீதியில், அவருடனான ஒப்பீடுகள் அதிகளவில் காணப்படுகின்ற போதிலும், அவரை விட, தற்போது ஆட்சியிலிருக்கும் ஒரு தலைவருடன், தெரேசா மே, அதிக ஒப்பீடுகளைக் கொண்டிருக்கிறார். ஜேர்மனியின் சான்செலரான அங்கெலே மேர்க்கெல் தான் அவர். இருவருமே நடைமுறைவாதிகள், பாதிரியார்களின் மகள்கள், இருவருக்கும் குழந்தைகள் இல்லை, உறுதியான முடிவெடுப்பவர்கள், அவர்களோடு பணியாற்றிய ஆண் அரசியல்வாதிகளால் நீண்டகாலமாகக் கணக்கிலெடுக்கப்படாதவர்கள் என, இருவருடைய ஒற்றுமையும் நீண்டு செல்கின்றன…
-
- 0 replies
- 266 views
-
-
அடுத்த பிரிட்டிஷ் பிரதமர் பதவிக்கு இறுதிப் போட்டி இரு பெண்களிடையே பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஒரு பெண்ணாகத்தான் இருப்பார் என்பது நிச்சயமாகிவிட்டது. அடுத்த பிரிட்டிஷ் பிரதமர் - இறுதிப் போட்டி இரு பெண்களிடையே ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைப்பதவிக்கு இரண்டு பெண் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, நாடெங்கிலும் உள்ள கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த அனுப்பிவிட்டனர். உள்துறை அமைச்சர் தெரெசா மே, தற்போதைய பிரதமர் மற்றும் கட்சித் தலைவராக உள்ள டேவிட் கேமரனுக்கு அடுத்து வரவிருக்கும் வேட்பாளர்களில் முன்னணியில் இருக்கிறார். எரிசக்தித் துறை அமைச்சர் ஆண்ட்ரியா லீட்சம் இந்தத் தேர்தலில் இரண்டாவ…
-
- 1 reply
- 266 views
-
-
பிரெக்சிற்றுக்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் கவிழக்கூடும் – ஸ்கொட்லாந்து அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உடன்படிக்கை எதுவும் ஏற்படாத நிலையிலேயே பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் என தெரிவித்துள்ள ஸ்கொட்லாந்தின் அமைச்சர் பிரித்தானியா வெளியேறுவதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் கவிழக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் , பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்திற்கான அமைச்சர் மைக்கல் ரசல் இதனை தெரிவித்துள்ளார். உடன்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவிற்கு காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார் அதற்கு முன்னர் இந்த அரசாங்கம் …
-
- 0 replies
- 266 views
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் நோபெர்டோ பரெதஸ் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லத்தீன் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கடல் பகுதிக்கு அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் வந்தடைந்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையிலான அதிகரிக்கும் பதற்றத்தில் ஒரு திருப்புமுனையாகும். 1989 பனாமா மீதான படையெடுப்புக்கு பிறகு, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் பெரிய அளவிலான நடவடிக்கையை இது குறிக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை மானுவல் நோரிகா எதிர்கொண்டதைப் போல இப்போது வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். அந்த குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறு…
-
- 2 replies
- 266 views
- 1 follower
-