உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
- டாக்டர் ராமதாஸ் வீரகேசரி நாளேடு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு, தமிழக அரசையும் தமிழக மக்களையும் ஒட்டுமொத்தமாக அவமதித்து தலைகுனியச் செய்துவிட்டது என்று பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, தமிழர்கள் அனைவரும் வெட்கி தலைகுனிந்து நிற்கிறோம். இங்குள்ள தமிழர்களின் சுயமரியாதைக்கும், தன்மானத்திற்கும் மிகப்பெரிய சோதனை ஏற்பட்டு நாம் தலைகவிழ்ந்து நிற்கும் நிலையுருவாகியுள்ளது. எனக்கு கிடைத்த தகவலின் படி இலங்கையில் போரை நிறத்த வலியுறுத்துவதற்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகள் தவிர வேறு யாரும் செல்வதற்கான அறி…
-
- 0 replies
- 769 views
-
-
அதிசய முட்டை முட்டைகளை விரும்பி உண்பது நாமறிந்த உண்மை. நாகமொன்று படமெடுப்பது போல் தோற்றமுடைய முட்டையொன்றை இங்கு காண்கின்றீர்கள். ஏறாவூர் பொதுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட கோழி முட்டைகளில் ஒன்றிலேயே இந்த அதிசய வடிவம் காணப்பட்டுள்ளது. கோழி முட்டையின் முனைப் பகுதியில் மலரொன்றின் நடுவே பாம்பு படமெடுத்தவாறு சுருண்ட நிலையில் படுத்திருப்பதே இந்த வடிவமாகும். http://www.virakesari.lk/
-
- 6 replies
- 3.6k views
-
-
Wednesday, 31 Dec 2008 ஆந்திராவில் கடந்த 13-ம் தேதி ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவி ஸ்வப்னிகா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.ஆந்திர மாநிலம்,வாரங்கல் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர்கள் ஸ்வப்னிகா மற்றும் பிரானிதா. சீனிவாஸ் (25) என்பவரின் காதலை ஸ்வப்னிகா ஏற்க மறுத்துள்ளார்.இதனால்,ஆத்திரம டைந்த சீனிவாஸ்,தனது நண்பர்கள் சஞ்சய் (22),ஹரிகிருஷ்ணா (24) ஆகியோருடன் சேர்ந்து,மாணவிகள் இருவரும் மொபெட்டில் சென்ற போது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பார்வை பறிபோய்,கவலைக்கிடமாக இருந்த ஸ்வப்னிகா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த தாக்குதலை நடத்திய இளைஞர்கள் மூவரையும் போலீஸார் என்கௌன்டரில்…
-
- 1 reply
- 1.4k views
-
-
அமெரிக்க வீராங்கனையை சுண்டிப் பார்க்கும் அதிபர் புஸ் http://latimesblogs.latimes.com/washington...h-olympics.html
-
- 3 replies
- 4.4k views
-
-
காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் [31 - December - 2008] மத்திய கிழக்கில் காஸா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் கடந்த சில தினங்களாக மேற்கொண்டுவரும் குண்டு வீச்சுகள் 1967 அரபு இஸ்ரேல் போருக்குப் பின்னர் இடம்பெற்றிருக்கக்கூடிய மிகப் பெரிய தாக்குதல்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன. பெண்கள், சிறுவர்கள் உட்பட 300 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இதுவரை இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டிருப்பதுடன், ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். தரைமார்க்கமாகவும் இஸ்ரேலியப்படைகள் காஸாவை ஆக்கிரமிக்கப் போவதாகவும் பேசப்படுகிறது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக புதிய இன்ரிபாடா (மக்கள் எழுச்சி) யை ஆரம்பிக்குமாறும் தற்கொலைத் தாக்குதல்களில் இறங்கி உயிர்த…
-
- 0 replies
- 569 views
-
-
தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி. நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கோமான்களின் கட்சி துவங்கப்பட்டதே வெள்ளைக்காரர்களின் பிச்சையில்தான். அடிமைத்தனத்தோடு பொறுக்கித் தின்பதற்கு இங்கிலாந்து ராணியிடம் மனு கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இக்கட்சியின் புல்லரிக்கும் வரலாற்றுப் பெருமை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக்கட்சிக்கு தலைமை தாங்கிய திலகர்தான் இந்துத்வ விசமத்தனங்களுக்கு சுளி போட்டவர். விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் யானை முகத்தோனை பிரம்மாண்ட சைசில் பல கெட்டப்புக்களில் வடித்து கடலை நாசமாக்கும் விதத்தில் கரைத்து, இந்த எழவு மும்பையோடு நிற்காமல் எல்லா புண்ணியஸ்தலங்களுக்கும் பயணம் செய்து இப்போது தமிழகத்திலும் ஊன்றிவிட்டத…
-
- 7 replies
- 4.3k views
-
-
வீடியோ இணைப்பு - இஸ்ரேல், காசா மீது நேற்று மேற்கொண்ட தாக்குதல் இடம்பெற்ற சுமார் 24 மணித்தியாலங்களில் மீண்டும் இன்று பாரிய தாக்குதல்களை தொடுத்துள்ளது. இதனால் 255 பேர் வரை பலியாகியும் 600 பேர் வரை காயமடைந்ததாகவும் CNN செய்திகள் தெரிவிக்கின்றன. 60 வருடங்களின் பின் பலஸ்தீனியர்களுக்கு ஏற்பட்ட மிகவும் இரத்தம் தோய்ந்த நாளாக இது அமைவதாக வருணிக்கப்படுகிறது.வீடியோ இணைப்பு
-
- 2 replies
- 1.4k views
-
-
தாய்லாந்து கடற்படை அட்டூழியம்: 310 பேர் கடலில் மூழ்கி பலி திங்கள்கிழமை, டிசம்பர் 29, 2008, 12:06 [iST] போர்ட்பிளேர்: தாய்லாந்து நாட்டு கடற்படையின் முட்டாள்தனமான செயலால் 310 பேர் அந்தமான் அருகே கடலில் மூழ்கினர். அவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 102 பேரை இந்திய கடலோரக் காவல் படை பத்திரமாக மீட்டுள்ளது. வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 412 பேர், வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரத்தில் இருந்து, 6 விசைப்படகுகளில் மலேசியா நாட்டுக்கு கள்ளத்தனமாக புறப்பட்டனர். அவர்களை வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு ஏஜெண்டு 45 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்தார். இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் அவரை அவர் வசூலித்தார…
-
- 2 replies
- 2.5k views
-
-
பலஸ்தீன காசாப் பகுதியில் இஸ்ரேலிய எப் 16 போர் விமானங்கள் கண்மூடித்தனமான ஏவுகணைத்தாக்குதல் நடத்தியதில் சுமார் 155 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் (400க்கும் மேல்) காயமடைந்துள்ளனர். கமாஸ் அமைப்புடன் போர் நிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து இஸ்ரேல் கண்மூடித்தனமான விமானத்தாக்குதலை தொடர்ச்சியாக காசா பகுதியில் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மிக மோசமாக மனித உரிமைகளை மீறும் நாடு என்பது பல காலமாக அறிக்கைகளின் வழி சொல்லப்பட்டு வந்தாலும் அதனை யாரும் உலகில் கட்டுப்படுத்த முனைவதில்லை. இஸ்ரேலிய யுத்த விமானங்கள்.. சிறீலங்காவிலும் பொதுமக்கள் இலக்குகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்த சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றும் இஸ்ரேலிய தயாரிப்ப…
-
- 5 replies
- 1.9k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 09:47 பி.ப ஈழம்] [ப.தயாளினி] பாகிஸ்தானுக்கான பயணத்தை தமது நாடு இரத்துச் செய்துவிட்ட நிலையில் சிறிலங்கா அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது குறித்த கவலையை சிறிலங்காவுக்கு இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்புத் தகவல்கள் தெரிவிப்பதாவது சிறிலங்காவின் பாகிஸ்தான் பயணம்: இந்தியா கவலை முழுமையான செய்திக்கு
-
- 1 reply
- 1.1k views
-
-
டெல்லி: பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்துள்ள கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து எந்தவித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கும் வகையில், இந்திய வி்மானப்படை முழு ஆயத்த நிலையில் உள்ளது. தலைநகர் டெல்லியைக் காக்க, மிக்29 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியா தாக்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் அதிகரித்து வருவதால் பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்நாட்டு விமானப்படை விமானங்கள் முக்கிய நகரங்கள் மீது அடிக்கடி பறந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுடனான மேற்கு எல்லைப் பகுதி விமான தளங்களில் போர் விமானங்களை விமானப்படை நிறுத்தியுள்ளது. எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்களையும் அது குவிக்க ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த ந…
-
- 1 reply
- 2.3k views
-
-
இத்தாலியில் பூகம்பம் 2 தேவாலயங்கள் சேதம் அடைந்தன (தினத்தந்தி) Font size: மிலன், டிச.25- இத்தாலியில் பார்மா நகரில் பூகம்பம் ஏற்பட்டது. அதன் வீரியம் ரிக்டார் அளவில் 5.1 ஆக இருந்தது. இதனால் மிலன் நகர் முதல் பிளாரன்ஸ் நகரம் வரை உள்ள பகுதிகளில் இது உணரப்பட்டது. சில நகரங்களில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டது. 2 தேவாலயங்கள் தேசம் அடைந்தன. சில வழித்தடங்களில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெலிபோன்கள் பாதிக்கப்பட்டன. பூகம்பம் காரணமாக அந்த நாட்டு மக்களிடம் பீதி நிலவியது. மாலையில் ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து 2-வது பூகம்பம் இரவு நேரத்தில் ஏற்பட்டது. அதன் வீரியம் 4.7 ஆக இருந்தது.
-
- 0 replies
- 844 views
-
-
ஒருவர் உறக்கத்தில் காணும் கனவுகளை விழித்தெழுந்ததும் புகைப்படங்களாக கண்டுகளிப்பதற்கு வழிவகை செய்யும் மென்பொருள் ஒன்றை ஜப்பானிய கயோடோ நகரிலுள்ள நரம்பு விஞ்ஞான கணிப்பு ஆய்வு கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூளையின் சிந்தனைகளிலிருந்து பிரதி பிம்பங்களை உருவாக்கும் "மனதை வாசித்தல் தொழில்நுட்பம்' உருவாக்கப்பட்டுள்ளமை உலகில் இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன் இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மனதை ஊடுகாட்டும் சாத்தியம் குறித்த எண்ணக்கருவை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய மென்பொருளானது மூளையிலிருந்தான சமிக்ஞைகளைப் பெற்று, அவற்றைத் தனது நிகழ்ச்சித் த…
-
- 24 replies
- 7.2k views
-
-
இஸ்தான்புல்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எறியப்பட்ட ஷூவைத் தயாரித்த நிறுவனத்திற்கு பயங்கர கிராக்கி ஏற்பட்டுள்ளது. அந்த கம்பெனிக்கு திடீரென ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளனவாம். இதனால் 100 பேரை புதிதாக வேலைக்குப் போட்டு விறுவிறுவென ஷூக்களைத் தயாரித்துத் தள்ளுகிறதாம் அந்த நிறுவனம். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லைத் தலைமையிடமாகக் கொண்ட ஷூ நிறுவனம் பெய்டன் ஷூ கம்பெனி. இந்த நிறுவனத்தின் ஷூக்களைத்தான் பத்திரிக்கையாளர் முன்டாசர் அல் ஜெய்தி அணிந்திருந்தார். இதைத்தான் புஷ் மீது அவர் வீசினார். குவியும் ஆர்டர்கள் இதையடுத்து பெய்டன் ஷூக்களுக்கும் படு கிராக்கி ஆகி விட்டது. இதனால் உச்சி குளிர்ந்து போயிருப்பவர் பெய்டன் ஷூ நிறுவனத்தின் உரிமையாளரான ரமஸான் பெய்டன்தான். அவரது…
-
- 0 replies
- 970 views
-
-
லண்டன்: லண்டனிலிருந்து மும்பை வரவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தை செலுத்துவதாக இருந்த விமானி, குடிபோதையில் இருந்தது கடைசி நிமிடத்தில் தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டார். அதிர்ஷ்டவசமாக விமானமும், பயணிகளும் பேராபத்திலிருந்து தப்பினர். ஜெட் ஏர்வேஸுக்குச் சொந்தமான அந்த போயிங் 777 ரக விமானம் பயணிகளுடன், ஹீத்ரூ விமான நிலையத்தில் கிளம்பத் தயாராக இருந்தது. விமானத்தை 62 வயதாகும் மைக்கேல் ஹார் என்பவர் ஓட்டுவதாக இருந்தார். இவர் அமெரிக்க கடற்படையில் விமானியாகப் பணியாற்றியவர். விமானம் கிளம்புவதற்கு முன்பு விமான நிறுவன ஊழியர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விமானத்தின் காக்பிட்டுக்குள்ளிருந்து மது வாடை வந்ததையடுத்து உள்ளே வந்து பார்த்தபோது, விமானி ஹார் கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளிலும், சியாச்சின் பகுதியிலும் இந்தியத் துருப்புகளின் ஆயத்த நிலை குறித்து அறிவதற்காக ராணுவ தளபதி ஜெனரல் தீபக் கபூர் அங்கு விரைந்துள்ளார். இன்று காலை கபூர் சியாச்சின் புறப்பட்டுச் சென்றார். அங்கு இன்று முழுவதும் அவர் தங்கியிருப்பார். அங்குள்ள படைப் பிரிவுகளின் கமாண்டர்கள், மூத்த ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார். பின்னர் ஸ்ரீநகர் திரும்பி, ஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளின் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியா தாக்குமோ என்ற பெரும் பீதி பாகிஸ்தானில் நிலவுகிறது. இதையடுத்து பாகிஸ்தான் விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படையினர் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பகுதியில் ரேஞ்சர்களின் எண்ண…
-
- 0 replies
- 911 views
-
-
நியூயார்க்: பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்படும் பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மைக்கேல் ஜாக்சன், சில ஆண்டுகளாக மூச்சுக்குழாய் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை மேற்கொண்டும் பலன் இல்லை. இந்த நிலையி்ல தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இது பற்றி லண்டன் பத்திரிக்கை ஒன்றுக்கு மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வரும் முன்னாள் புலனாய்வு நிருபர் இயான் ஹால்ப்ரீன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில…
-
- 6 replies
- 2.1k views
-
-
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் மீது செருப்பை வீசியதாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். குடிபோதையில் அவ்வாறு அவர் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பாக்தாத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூ வீசிய சம்பவமே இன்னும் மறக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் சென்னை போலீஸாரை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் அமெரிக்க தூதரகம் உள் ளிட்ட முக்கிய இடங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமையன்று நள்ளிரவில் வா…
-
- 0 replies
- 913 views
-
-
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் சட்டமன்ற வாக்குப்பதிவில் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் வாக்களிப்பதால் பிரிவினைவாத அமைப்புகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. காஷ்மீரில் வாக்குப்பதிவில் முன்னேற்றம் காணப்படுவதால் பிரிவினைவாத அமைப்புகளுக்கு தொடர் பின்னடைவு வெட்டவெளிச்சமாகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் 24ம் தேதி இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடந்து முடிந்துள்ள வாக்குப்பதிவுகளில் அதிகளவில் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர். குறிப…
-
- 0 replies
- 823 views
-
-
கொண்டாடுவோம்! இது வீரத்தின் திருநாள். ஒரு வெடிகுண்டுத் தாக்குதலை விடவும் தற்கொலைப்படைத் தாக்குதலை விடவும் வலிமையானது இந்தத்தாக்குதல். வீரம் செறிந்தது இந்த நடவடிக்கை. மாவீரன் ஸய்தி ! முன்தாதர் அல் ஸய்தி - உண்மையிலேயே ஒரு மாவீரன்தான். அமெரிக்க வல்லரசின் இராணுவம், அதன் உளவுத்துறைகள், அதிபரின் சிறப்புப் பாதுகாப்புப் படைகள்.. இவர்களெல்லாம் மூடர்கள் என்றோ முன்யோசனை அற்றவர்கள் என்றோ நாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்க சிப்பாய்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் பொருட்டு, சமீபத்தில் இராக்கில் குழந்தைகளுக்கான பொம்மைத் துப்பாக்கிகளின் விற்பனையைக் கூடத் தடை செய்திருக்கிறது அமெரிக்க இராணுவம். நான்கு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இராக்கை சலித்து வி…
-
- 9 replies
- 4.2k views
-
-
ஈராக்கிற்கு வந்திருந்த அதிபர் ஜார்ஜ் புஷ் மீது தனது காலணிகளை வீசிய தொலைக்காட்சி செய்தியாளர் முன்டஸிர் அல் சைதிக்கு, மெர்சிடிர் காரை பரிசளிக்க உள்ளதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பஹ்ரைன் தொழிலதிபர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கல்ஃப் டெய்லி என்ற நாளிதழுக்கு தொழிலதிபர் குரேஷ் கான் புனீரி அளித்துள்ள பேட்டியில், கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட லிமோஸின் ரக மெர்சிடிர் காரை சைதிக்கு வழங்க விரும்புவதாகவும், அதை பாக்தாத் வரை தானே ஓட்டிச் சென்று அவரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். சைதியை ஆதரிப்பதற்கு கிடைத்த சிறிய வாய்ப்பாக இதனைத் கருதுவதாகவும், இதன் மூலம் நீங்கள் (சைதி) தனியாக இல்லை என்பதை அவருக்கு உணர்த்த விரும்புவதாகவும் புனீரி கூறியுள்ளார். …
-
- 1 reply
- 1.8k views
-
-
லண்டன்: உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும், நிலையில் இங்கிலாந்து ராஜ குடும்பம் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. மீதமாகும் சாப்பாட்டைக் கூட வீணடிக்காமல் சாப்பிட வேண்டும் என சமையல்காரர்களுக்கு ராணி எலிசபெத் உத்தரவிட்டுள்ளாராம். உலகப் பொருளாதாரம் தகித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத், அரண்மனையில் சிக்கண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். ஆடம்பர செலவுகளைக் குறைக்க வேண்டும் என அரச குடும்பத்தினருக்கு அவர் உத்தரவு போட்டுள்ளாராம். கிறிஸ்துமஸ் விருந்தின்போது சாப்பாடு மீதமானால் அதை தூக்கி வீசாமல் இல்லாதவர்களுக்குக் கொடுக்குமாறும், முடிந்தால் நீங்களே சாப்பிடுங்கள் என்றும் சமையல்காரர…
-
- 1 reply
- 1.6k views
-
-
பிறந்த குழந்தையின் மூளையில் கால் அமெரிக்க மருத்துவர்கள் அதிர்ச்சி! வீரகேசரி நாளேடு 12/18/2008 8:08:27 PM - பிறந்து மூன்றே நாளான ஆண் குழந்தையொன்றின் மூளையில் சிறிய கால் ஒன்று வளர்ச்சி அடைந்திருப்பதைக் கண்டு அமெரிக்க கொலோராடோ ஸ்பிரிங்ஸ் சிறுவர் மருத்துவமனை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு மூளையில் கால் ஒன்று வளர்ச்சியடைந்திருப்பது கண்டுபிடிக்கப்படுவது, உலக மருத்துவ வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். இது தொடர்பில் மேற்படி மருத்துவமனையின் மருத்துவரும் மூளை சத்திரசிகிச்சை நிபுணருமான போல் கிராப் புதன்கிழமை ஊடகவியலாளர்களுக்கு விபரிக்கையில், 3 நாள் வயதான சாம் எஸ்குயிபெல் என்ற குழந்தையின் மூளையில் வளர்ந்துள்ள காலொன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் குழந்…
-
- 1 reply
- 2.1k views
-
-
புதுச்சேரி: புதுச்சேரியில், எலி விழுந்து கிடந்த சோடாவைக் குடித்த 30 வயதுப் பெண் வாந்தி எடுத்து மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதுச்சேரி, ஒட்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. 30 வயதாகும் இவர், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, செவன் அப் பாட்டிலில் அடைக்கப்பட்ட சோடாவை கடையில் வாங்கிக் குடித்துள்ளார். அப்போது அதில் எலி ஒன்று செத்துக் கிடந்துள்ளது. இதை சாந்தி கவனிக்காமல் குடித்துள்ளார். குடித்து முடித்த பின்னர்தான் எலி கிடந்ததைப் பார்த்தார் சாந்தி. இதையடுத்து வாந்தி எடுத்தபடி மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக அவரை முதலியார்ப்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட…
-
- 0 replies
- 933 views
-
-
மும்பை 26/11 : அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! ( பாகம் - 6, இறுதிப் பகுதி ) ஏதோ சில முட்டாள் முல்லாக்கள்தான் இன்று உலகம் முழுவதும் வெடிக்கும் பயங்கரவாதங்களுக்கு காரணமென பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மற்ற மதங்களை விட உணர்ச்சிப்பூர்வமாகவும், கட்டுப்பாடாகவும், ஒரு இயக்கம் போலவும் இசுலாமிய மதம் பின்பற்றப்படுவது உண்மைதானென்றாலும், இந்தப் பலவீனத்தை முதலீட்டாக்கி அரசியல் சூதாட்டங்களுக்கும் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி இசுலாமிய நாடுகளிலிருக்கும் மக்களை மதத்தின் பெயரால் ஆளும்வர்க்கங்கள் சுரண்டிக் கொழுப்பதற்குக் காரணகர்த்தா அமெரிக்காதான். வளைகுடா நாடுகளில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து பாலைவனமான அப்பகுதி ஏகாதிபத்தி…
-
- 0 replies
- 808 views
-