உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26602 topics in this forum
-
லிபிய மக்களை கைவிட மாட்டோம்: அன்டோனியோ குட்ரெஸ் லிபியாவில் உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்ற நிலையில், அந்நாட்டு மக்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் என ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். ஜோர்தானிலுள்ள பலஸ்தீனியர்களின் அகதி முகாமொன்றில் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். லிபிய தேசிய மாநாட்டை நடத்தும் முனைப்பில் ஐ.நா. ஈடுபட்டுள்ள நிலையில, அரசுக்கு எதிராக போராடிவரும் புரட்சிகர லிபிய இராணுவத்தின் தளபதி காலிஃபா ஹிப்தரின் படைகள் தலைநகரில் சண்டையிட்டு வருகின்ற நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். காலிஃபா ஹிப்தரின் இராணுவ நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருவதோடு, அதனை முறியடிக்கும் முயற…
-
- 0 replies
- 646 views
-
-
சங்காவிற்கு தூதுவர் தகைமை! August 19, 2015 தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான தகைமை கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (19) குமார் சங்கக்காரவிடம் கையளித்தார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=1879&mode=head
-
- 0 replies
- 881 views
-
-
பட மூலாதாரம்,EPA AND NISHANTH படக்குறிப்பு, கோலாலம்பூரில் நடக்கும் மீட்புப் பணியும்(இடது), 26 அடி பள்ளத்திற்குள் விழுந்த இந்திய பெண்ணும் (வலது) கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, பிபிசி நியூஸ் 31 ஆகஸ்ட் 2024, 08:54 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் நடைபாதையில் திடீரென ஏற்பட்ட குழிக்குள் (sinkhole) விழுந்து காணாமல் போன இந்திய பெண்ணைத் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எட்டாவது நாளாகத் தொடரும் தேடுதல் பணியில், இதற்கு மேல் முக்குளிக்கும் வீரர்கள்(divers) உள்ளே செல்வது "மிகவும் ஆபத்து" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவ…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
ரஷ்ய அதிபர் புதின் நண்பர் அமெரிக்க ஹோட்டலில் மர்ம மரணம்: பரபரப்பு தகவல்கள்! வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நெருங்கிய நண்பரும், பிரபல தொழிலதிபருமான மிகயீல் லெஸின், அமெரிக்காவின் நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதினின் மிக நெருங்கிய நண்பர்களில் குறிப்பிடத்தக்கவரான மிகயீல், ரஷ்ய அரசின் ஊடகத்துறையில் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் என்பதும், இவரது பதவி காலத்தில் ரஷ்யாவில் ஊடகங்களுக்கு அதிக அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 1999 முதல் 2004 ம் ஆண்டுவரை அந்நாட்டின் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி துறையின் அமைச்சராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார். ரஷ்ய அரசுக்கு சொந…
-
- 0 replies
- 549 views
-
-
ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி: 930 விமானங்களை ரத்து செய்தது லுப்தான்சா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு இயக்கும் 930 விமானங்களை லுப்தான்சா நிறுவனம் ரத்து செய்தது. லுப்தான்சா விமான பணியாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் முடிவு எட்டப்படாததைத் தொடர்ந்து 930 விமானங்களை ரத்து செய்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. பிராங்பர்ட், மூனிச், டஸல்டர்ப் ஆகிய பகுதிகளிலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்லும் நீண்ட தொலைவு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்து வைக்க தாங்கள் விரும்புவதா…
-
- 0 replies
- 1.7k views
-
-
ரஷ்ய விமானத்தை வீழ்த்திய ‘ஷ்வெப்ஸ்’ குண்டு: ஐஎஸ் புகைப்படம் வெளியீடு இஸ்லாமிக் ஸ்டேட் இதழான தபிக்கில் வெளியான ரஷ்ய விமானத்தை தகர்த்த வெடிகுண்டு புகைப்படம். | ராய்ட்டர்ஸ். ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அதிகாரபூர்வ இதழ் தபிக்கில் ரஷ்ய விமானத்தை வீழ்த்திய வெடிகுண்டின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எகிப்தின் சினாய் அருகே வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம் நொறுங்கியதில் 224 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஷ்வெப்ஸ் கோல்டு குளிர்பான குப்பி, டெடனேட்டர் மற்றும் ஒரு சுவிட்ச் ஆகியவை இருந்தன. “கலிஃபேட் முஸ்லிம்களை கோழைத்தனமாக குண்டு வீசி கொலை செய்தவர்கள் தங்கள் விமானத்தில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தனர். ஓட்டுநர்…
-
- 0 replies
- 590 views
-
-
சீனாவுக்கு யூ.எஸ். கண்டனம் . தர்மசாலா, மார்ச். 22: திபெத் பிரச்சனை தொடர்பாக சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. திபெத்தில் உள்ளவர்கள் சீனாவிடமிருந்து சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை சீனா அடக்கி வருகிறது. இந்த போராட்டத்தை தலாய்லாமா தூண்டிவிடுவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. . இந்நிலையில் தர்மசாலாவில் நேற்று அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பெலோசி தலாய்லாமாவை சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் திபெத் தொடர்பான சீனாவின் அணுகுமுறையை விமர்சனம் செய்தார். திபெத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு தலாய்லாமாவே பொறுப்பு என சீனா கூறுவதை சுதந்திரமான 3வது நாட்டின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். திபெத் பிரச்சனை உலகின…
-
- 0 replies
- 829 views
-
-
விற்பனையில் சரிவை சந்தித்து வரும் டெஸ்லா! உலகின் மிகப் பெரும் செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்களால், ஐரோப்பாவின் மூன்று முக்கிய சந்தைகளில் டெஸ்லா கார்களின் ஜனவரி மாத விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக , பிரான்சில் 63 சதவீதமும், ஜேர்மனியில் 59.50 சதவீதமும், பிரித்தானியாவில் 12 சதவீதமும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளின் அரசியல் விவகாரங்களில் எலான் மஸ்க் தலையிடுவதாலும், அந்நாட்டு அரச தலைவர்கள் மற்றும் கொள்கைகளை விமர்சனம் செய்வதாலும் அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள், டெஸ்லா கார்களை வாங்க மறுப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அண்மையில் ஜேர்மனியின் சான்சில…
-
- 0 replies
- 298 views
-
-
ஓரினச்சேர்க்கையாளர் பேரணியில் கலந்து கொள்ளும் கனேடிய பிரதமர் 2016-02-25 11:46:00 கனடாவில் இடம்பெறவுள்ள ஓரினச்சேர்க்கையாளர் பேரணியில் கனேடிய பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார். கனடாவில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் பேரணியில் கலந்து கொள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சம்மதம் தெரிவித்துள்ளார். 36ஆவது ஆண்டாக இந்தப் பேரணி இந்த வருடம் ஜூலை 3ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இந்த பேரணியில் அந்நாட்டு பிரதமர் பங்கேற்க உள்ளதால் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்…
-
- 0 replies
- 549 views
-
-
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவு மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சாட்கா தீபகற்பப் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவையும், ரஷியாவையும் பிரிக்கும் பெரிங் கடல்பகுதியை ஒட்டியுள்ள மசாட்கா தீபகற்ப தீவுகளில் உள்ள நகரங்களில் சுமார் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள கமாண்டர் தீவுகளின் தென்மேற்கே 146 மைல் தூரத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டங்கள், வீடுகள் குலுங்கின. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற…
-
- 0 replies
- 333 views
-
-
ரஷ்யாவும் ஜப்பானும் உரிமைகோரும் சில தீவுகளில் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் ஆளில்லா விமானங்களையும் நிறுத்தப்போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.குரில் தீவு எனப்படும் அந்தத் தீவுகளில் கடற்படைத் தளத்தை அமைப்பது குறித்தும் ரஷ்யா யோசித்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தீவுகளை ஜப்பான் நார்தன் டெரிட்டரீஸ் என்று அழைத்துவருகிறது. அந்தத் தீவுகளில் ராணுவதளங்களை அமைக்கப்போவதாக ரஷ்ய அரசு முன்பே கூறியிருந்தது.இரண்டாம் உலகப் போரின் முடிவில் குரில் தீவுகளை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததையடுத்து ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. http://www.seithy.com/breifNews.php?newsID=154168&category=WorldNews&language=tam…
-
- 0 replies
- 585 views
-
-
கொரோனா வைரஸ் ஹூபேயில் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளது – சீன அதிபர் கொரோனா வைரஸ் (கொவைட்-19) தோன்றிய சீனாவின் ஹூபே மாகாணத்தில், அந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் ஹூபே மாகாணத் தலைநகர் வுஹானுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) முதன் முறையாக சென்ற அவர், கொரோனா விசேட வைத்தியசாலையையும் பார்வையிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை கணிசமான அளவில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். வுஹானிலும் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரப் போக்கைக் குறைத்து, நிலைமையை மாற்றியமைப்பதில் முதல்கட்ட வெற்றியை அடைந்துள்ளோம்’ என்றார். சீன அதிபரின் வருகைக்கு…
-
- 0 replies
- 230 views
-
-
வெயிலுக்கு உருகிய தார்சாலை..! நொந்து நூடுல்ஸான மக்கள் (வீடியோ) கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், குஜராத் மாநிலம் வால்சட் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. 100 டிகிரிக்கு மேல் கொளுத்திய வெயிலால் அங்குள்ள தார் சாலைகள் உருகின. இதனால் சாலைகளை கடக்க முடியாமல் மக்கள் கடும் அல்லப்பட்டனர். வீடியோவை காண... http://www.vikatan.com/news/india/64473-road-melts-in-gujarat-makes-it-difficult-to-walk.art
-
- 0 replies
- 442 views
-
-
கரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்காத நாடுகள் எவை, என்ன காரணம்? கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ், உலக நாடுகளின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து ஆட்டிப் படைத்து வருகிறது. உலகம் முழுவதும் 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் 11.3 லட்சம் மக்களிடையே கரோனா தனது கோர முகத்தைக் காட்டியுள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2,36,000 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல, விலை மதிப்பில்லாத உயிர்கள். வல்லரசு நாடுகள், பலம் பொருந்திய பிரதேசங்கள், எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகள் என மார்தட்டிக் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கரோனாவின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னாமாகி வரு…
-
- 0 replies
- 592 views
-
-
12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்தது எரிமலை ; இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவும் சாம்பல் 25 Nov, 2025 | 11:22 AM கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பா நாட்டின் அபார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) ஹேலி குப்பி என்ற எரிமலை 12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை எரித்திரியா நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது. ஹேலி குப்பி எரிமலை கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித வெடிப்பும் இன்றி அமைதியான இருந்துள்ளது. இந்நிலையில், திடீரென வெடித்து சிதறி எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பா…
-
- 0 replies
- 142 views
-
-
அமெரிக்காவில் இன்று காலை 10 மணியளவில் நான்கு மர்ம மனிதர்கள் நியூயார்க் அருகிலுள்ள West Webster என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை துப்பாக்கி சூடு நடத்திய மர்ம மனிதர்கள் உள்பட ஆறுபேர் பலியாகினர். இரண்டு பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அமெரிக்காவின் West Webster என்ற இடத்தில் உள்ள Lake Ontario அருகிலுள்ள ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்த நான்கு மர்ம மனிதர்கள் அந்த வீட்டில் உள்ளவர்களை சரமாரியாக சுடத்தொடங்கினர். வீட்டில் உள்ள நபர்கள் ஒரு அறைக்குள் நுழைந்து கதவை பூட்டிகொண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். (துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த…
-
- 0 replies
- 531 views
-
-
பெருந்தொற்றுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும்? நம் உலகத்தில் புதிய தாராளவாதச் சூழலில் அதீதமாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வை இந்த கரோனா பெருந்தொற்று கூர்மையாக அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில். அமெரிக்க நாட்டின் இனவாதக் குணத்தையும் வெளிக்கொணர்ந்துள்ளது. புதிய தாராளவாதக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு 40 வருடங்களுக்குப் பிறகான ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால், நாட்டின் ஒட்டுமொத்த வளத்தில் 20% வளத்தை 0.1 பங்கு ஜனத்தொகையினர் சேர்த்துள்ளனர். ஜனத்தொகையில் பாதிப் பேர், மைனஸ் மதிப்பில் உள்ளனர். 70% மக்கள், அரசின் நிதி உதவியை நம்பி வாழும் நிலை உள்ளது. பெரும்பாலான மக்கள், அன்றன்று வேலைக்கு எஜமானர் அழைப்பதை எதிர்பார்த்து வாழும் அபாயகரமான சூழலில் உள்ளனர…
-
- 0 replies
- 995 views
-
-
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிய கடற்படைக் கப்பல் விசைப்படகுகள் உதவியுடன் மீட்கப்பட்டது. இருப்பினும் ரயில் பாலம் சேதமடைந்திருப்பதால் ஒரு வார காலத்துக்கு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கப்பல் படைக்குச் சொந்தமான கப்பல் பாம்பன் அருகே தரை தட்டியது. கடந்த சில நாட்களாக கடற்பரப்பில் தத்தளித்த இந்த கப்பலை இழுக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அலைகளில் கப்பல் இழுக்கப்பட்டு நேற்று பாம்பன் ரயில் பாலம் அருகே நின்றது. பாம்பன் ரயில் பாலம் அருகே தத்தளித்துக் கொண்டிருந்த இந்த கப்பல் இன்று நூற்றாண்டு பழமை வாய்ந்த பாலத்தின் 24-வது தூணின் மீது மோதியது. இதில் தூண் சற்று திரும்பியுள்ளது. இதனால் அந்த பாலம் வழியேயான ரயில்…
-
- 0 replies
- 415 views
-
-
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு திடடத்தின்கீழ் வீடுகள் வழங்க வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தின்போது, வழக்கறிஞர்கள் அனுமதி பெறாமல் பேரணி செல்ல முயன்றனர். இதனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது வழக்கறிஞர்கள் கற்களை வீசித் தாக்கினர். இதில் உதவி ஆணையாளர் காயம் அடைந்தார். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் பலர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13162:police-rajasthan&cat…
-
- 0 replies
- 400 views
-
-
சிறு பிராயத்தில் கொள்ளை: சவுதியில் 7 பேருக்கு மரண தண்டனை! சிறு வயதில் நகைக் கடை ஒன்றைக் கொள்ளை அடித்ததற்காக 7 பேருக்கு சவுதி அரேபியா மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சர்வதேந நாடுகளிடையே கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சர்ஹான் அல் மஷைக், சயீத் அல் ஜஹரானி, அலி அல்-ஷாரி, நாசர் அல் கடானி, சயீத் அல் ஷரானி, அப்துல் அஜீஜ் அல் ஆம்ரி, மற்றும் அலி அல் கடானி ஆகிய 7 பேர் தலையும் வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2006ஆம் ஆண்டு இவர்கள் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டு அபா பொதுச் சிறையில் அடைக்கப்பட்டனர். சவுதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைவாத நாடாகையால் ஷரியா சட்டத்தைக் கடைபிடித்து வருகிறது. இந்த சட்டத்தின் படி, கொலை, பாலியல் வல்ல…
-
- 0 replies
- 447 views
-
-
‘கொரோனா வைரஸ் பிறழ்வு தடுப்பூசியையும் பாதிக்கும்’ - ஆய்வில் அதிர்ச்சி தகவல் வாஷிங்டன், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும், பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், அந்த வைரசின் தற்போதைய நிலை குறித்தும் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் வைரசின் பிறழ்வு நிலை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் கொரோனா வைரசின் பொதுவான பிறழ்வு உலகம் முழுவதும் வேகமாக பரவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக ‘டி614ஜி’ என்ற கொரோனாவின் திரிபு, சீனாவின் உகானில் தோன்றிய வைரசை விட 10 மடங்கு அதிகமாக பரவுவதாகவும், சுவாசப்பாதையில் இது பெரும் இடையூறு…
-
- 0 replies
- 393 views
-
-
கடாபியின் குடும்பத்தினருக்கு ஓமான் அடைக்கலம் லிபியாவின் முன்னாள் அதிபர் முஹம்மர் கடாபியின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு ஓமான் அடைக்கலம் வழங்கியுள்ளது. ஓமான் அரசாங்கம் இதனை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச காவல்துறையான இன்டர்போலினால் தேடப்பட்டுவருவோர் பட்டியலிலுள்ள இருவரும் இதில் அடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவர்களை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை அவசியமற்றது எனவும் லிபியா கூறியுள்ளது. கடாபியின் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு தலைநகர் த்ரிப்போலியைக் கைப்பற்றிய பின்னர், அவர்கள் அல்ஜீரியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தனர். இந்த நிலையில், கடாபியின் மனைவியும் அ…
-
- 0 replies
- 531 views
-
-
வங்கதேச தொழிலாளர் நலன்களில் ஐரோப்பிய ஒன்றியம் அக்கறை 1 மே, 2013 வங்கதேசத்தில் தொழிலாளர்களின் வேலைத்தள வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. தலைநகர் டாக்காவுக்கு அருகே ஒருவாரத்துக்கு முன்னர் தொழிற்சாலைக் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஐரோப்பிய சந்தைக்கு பொருட்களை வரிகளின்றியும் கோட்டா முறை இன்றியும் ஏற்றுமதி செய்வதற்கான வணிக முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் வங்கதேசத்தில் தொழிலாளர்களின் நிலைமையைக் கண்காணிக்கும் வேலைகளை முன்னெடுக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்று கூறுகிறது. இதன்மூலம் அ…
-
- 0 replies
- 321 views
-
-
காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு டெல்லியில் இன்று கூடி ஆலோசனை நடத்தியது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா மற்றும் தெலங்கானா விவகாரத்தால் ஆந்திராவில் நிலவும் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே , குலாம் நபி ஆசாத் , உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். தனித் தெலங்கானா கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், கட்சியில் இருந்து விலகி, வேறு கட்சியில் இணையப் போவதாகவும் சிலர் மிரட்டி வருகின்றனர். ஆந்திர மாநில சட்ட…
-
- 0 replies
- 392 views
-
-
அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ; குறைந்தது 15 பேர் பலி அமெரிக்க - மெக்ஸிகோவின் எல்லை நகரமான ரெய்னோசாவில் சனிக்கிழமையன்று பல வாகனங்களில் துப்பாக்கி ஏந்தியவர்கள் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். பரவலான பீதியை ஏற்படுத்திய இந்த வன்முறையில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சட்ட அமுலக்கா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டெக்சாஸின் மெக்அலன் எல்லையில் உள்ள நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள பல சுற்றுப்புறங்களில் இந்த தாக்குதல்கள் சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. குறித்த பகுதியில் அமைந்துள்ள எல்லைப் பாலம் அருகே பொலிசார் நடத்திய தாக்குதலின் போது ஒருவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மற்றவர்கள் சீர…
-
- 0 replies
- 458 views
-