Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வடகொரியாவுடன் சுமூகமான உறவைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு வடகொரியாவுடன் சுமூகமான உறவுகளைப் பேண விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. அண்டை நாடான வடகொரியாவுடன் நட்புறவை பேண விரும்புவதாகவும் சீனாவின் நிலைப்பாடு தெளிவானதும் தொடர்ச்சியானதுமாகும் எனவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang தெரிவித்துள்ளார். கொரிய பகுதியில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய சீனா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமெனவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்கா வலியுறுத்தி வரு…

    • 0 replies
    • 245 views
  2. டொனால்ட் டிரம்பிற்கு 'FIFA சமாதான விருது' வழங்கப்பட்டது செய்திகள் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு 'FIFA சமாதான விருது' வழங்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல் (draw)அமெரிக்காவின் வொஷிங்டனில் (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்ற போதே, இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவினால் இவ்வருடம் முதன்முறையாக இவ்விருது அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதற்கமைய அவ்விருதின் முதலாவது வெற்றியாளராக டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 'சமாதானத்திற்காக விசேட மற்றும் அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொண்ட' மற்றும் 'உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைத்த' ஒருவருக்கே இவ்விருது வழங…

  3. பாரிஸில் மசூதிக்கு வெளியே வாகனம் ஓட்டி தாக்குதல் நடத்த முயன்றதாக ஒருவர் கைது பாரிஸ் நகரில் மசூதிக்கு வெளியே ஒரு கூட்டத்திற்குள் வாகனம் ஓட்டியதற்காக ஒரு நபரை போலீசார் கைது செய்தனர். படத்தின் காப்புரிமைREUTERS இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6:30மணிக்கு(இந்திய, இலங்கை நேரப்படி இரவு 10 மணிக்கு) க்ரீட்டல் புறநகர் பகுதியில் நடந்தது . இதில் யாரும் காயமடையவில்லை. பள்ளிவாசலை பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள தடைகளால் அந்த நபரின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அந்த நபரின் நோக்கங்கள் தெளிவாக இல்லை. ஆனால் அவர் ஆர்மீனிய இனத்தை சேர்ந்தவர் என்றும் அவர் பாரிசில் நடந்த இஸ்லாமியவாத-தொடர்புடைய தாக்குதல்களுக்கு பழிவாங்க விரும்புவ…

  4. உக்ரேன் போர்க்களத்தில் அவுஸ்திரேலியர் பலி By RAJEEBAN 06 SEP, 2022 | 11:59 AM உக்ரேன் போர்க்களத்தில் மருத்துவபணிகளில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குயின்ஸ்லாந்தின் தென்பகுதி நகரான நனாங்கோவை சேர்ந்த ஜெட் வில்லியம் டனகே என்ற 27 வயது நபர் உக்ரேனின் இசியம் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார். ஜெட் வில்லியம் டனகே செலுத்திக்கொண்டிருந்த மருத்துவ வாகனத்தை ரஸ்ய படையினர் இலக்குவைத்தனர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜெட் தனது வாழ்நாளில் ஏனையவர்களிற்கு உதவ முயன்றார் நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடியதை விட அதிக உதவிகளை அவர் குறுகிய காலத்தில் செய்தார் என குடும்பத்…

  5. கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக புடின் அறிவிப்பு! உக்ரைனிய தானிய ஏற்றுமதிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை பாதுகாப்பான பாதையில் செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் தற்காலிகமாக விலகுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். எனினும், இந்த ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக விலகவில்லை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். உக்ரைன் தனது கடற்படையைத் தாக்க கருங்கடலில் ஒரு பாதுகாப்பு வழித்தடத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி, ஐ.நா-வின் தரகு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா சனிக்கிழமை வெளியேறியது. ஆனால், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை. உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, இந்த ஒப்பந்தம்…

  6. டைம் இதழின் 'இந்த ஆண்டுக்கான மனிதர்' பட்டத்தைப் பெற மறுத்தாரா டிரம்ப்? அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற 'டைம்' இதழ் ஆண்டுதோறும் வழங்கும் 'பெர்சன் ஆஃப் தி இயர்' (இந்த ஆண்டுக்கான மனிதர்) சிறப்பிதழுக்கு தாம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்கான நேர்காணலுக்கு தாம் மறுத்து விட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதற்கு அந்த இதழ் மறுப்பு தெரிவித்துள்ளது. டைம் இதழில் இருந்து தமக்கு அழைப்பு வந்ததாகவும், 'ஒருவேளை' இந்த ஆண்டும் அவர் இந்த ஆண்டுக்கான மனிதர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்படலாம் என்று தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், அந்தப் பட்டத்துக்கானவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள…

  7. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இஸ்ரேல் - பாலத்தீனம் 'சமரச' முயற்சியை அமெரிக்கா தடுக்கிறது: ஐ.நா படத்தின் காப்புரிமைREUTERS இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவானது இஸ்ரேலுக்கும் பாலத்தீனதிற்கும் இடையே "சமரச"…

  8. வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதியளித்த அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதி அளித்த அதிபர் படத்தின் காப்புரிமைREUTERS வெள்ளையர்களின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் உறுதி அளித்துள்ளார். இன ஒற்…

  9. தேர்தலில் ரஷ்யத் தலையீடு: ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்கிறார் டிரம்ப் 2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முந்தைய அதிபர் பராக் ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்று ஒபாமா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஒபாமா மீது டிரம்ப் குற்றச்சாட்டு கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னரே தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து நன்கு அறிந்த ஒபாமா, அது குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார். அமெ…

  10. லண்டனில் சனிக்கிழமை ஏழு பேர் கொல்லப்பட்டமை சுதந்திர உலகின் மீதான ஒரு தாக்குதல் என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்; • மத்திய கிழக்கில் ஒரு இராஜதந்திரப் போர் ஆரம்பம், கட்டார் நாட்டுடனான உறவை ஆறு நாடுகள் துண்டித்தன. • கரு முட்டையக புற்றுநோய்க்கட்டிகளை கரைக்கும் புது மருந்துக்கான ஆரம்பகட்ட பரிசோதனை முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக கூறும் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் ஆகியவை இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.

  11. வடகொரியாவிலிருந்து கோமா நிலையில் அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் மரணமடைந்திருப்பது குறித்த செய்தி; கானாவில் அதிகரிக்கும் கும்பல் கொலைகள் குறித்த நேரடித்தகவல்கள் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருப்பது குறித்த செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  12. குடியரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்றி சென்ற ரயில் விபத்து : ஒருவர் பலி!!! அமெரிக்காவில் சுற்றுலா சென்ற குடியரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்றி சென்ற ரயில் ட்ரக்குடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மேற்கு வர்ஜினியா மாநிலத்திற்கு சார்லோட்டஸ்வில்லி என்ற நகரை கடந்து சென்று கொண்டிருக்கும் போது ரயில் கடவையை கடக்க முயற்சி செய்த குப்பை லொறி ஒன்றியுடன் மோதி விபத்திற்குள்ளானதில் லொறி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் லொறியில் இருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவத்தில் உறுப்பினர்களுக்கு எது வித ப…

  13. சைபீரிய நிலக்கரிச் சுரங்க தீவிபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்வு! சைபீரிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு சைபீரியாவின் கெமரோவோ பகுதியில் உள்ள லிஸ்ட்யாஸ்னியா சுரங்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்த தீவிபத்து ஏற்பட்டது. மொத்தம் 285பேர், 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தீ வெடித்து காற்றோட்ட அமைப்பு மூலம் சுரங்கத்தை விரைவாக நிரப்பியது. இதனையடுத்து, மீட்புப் பணியாளர்கள் 239 சுரங்கத் தொழிலாளர்களை மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களில் 49 பேர் காயமடைந்தனர். வெடிக்கும்…

  14. கிரிபாட்டி தீவில் முதலாவதாக மலர்ந்தது 2026 புத்தாண்டு! உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிட்டிமாட்டி தீவு உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது. கிரிபாட்டி நாடு பல நேர வலயங்களை கொண்டிருந்தாலும், அதன் கிரிட்டிமாடி தீவு சர்வதேச திகதிக்கோட்டிற்கு மிக அருகில் உள்ளதால், உலகிலேயே முதன் முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் இடமாகத் திகழ்கிறது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3:30 அளவில் கிரிபாட்டி தீவில் நள்ளிரவு 12 மணிக்கு 2026 புத்தாண்டு பிறந்தது. ‘கிறிஸ்மஸ் தீவு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் தீவில் வசிக்கும் மக்கள், வாணவேடிக்கைகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் 2026 ஆம் ஆண்டை உற்சாகமாக வ…

  15. ரஷ்ய ஜனாதிபதிக்கு... உடல்நிலை சரியில்லை என்ற கூற்று, உண்மைக்கு புறம்பானது! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு உடல்நிலை சரியில்லை என்ற ஊகத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மறுத்துள்ளார். பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், லாவ்ரோவ், ரஷ்ய தலைவர் ஒவ்வொரு நாளும் பொதுவில் தோன்றுவார். மேலும் எந்த ஒரு நல்ல மனிதனும் நோயின் அறிகுறிகளைக் காண மாட்டார்கள் என்று கூறினார். இந்த ஆண்டு 70 வயதாகும் புடின் உடல்நலக்குறைவு, ஒருவேளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத ஊடக ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் இந்த செவ்வி வந்துள்ளது. கிழக்கு பிராந்தியத்…

  16. பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த வாரம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்தார். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டது CCTV கெமராவில் பதிவாகியிருந்தது. இந்நிலையில், சிறுமியின் உடல் நேற்றிரவு சாதார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து …

  17. அணு ஆயுத தடுப்புப் படைகளை... சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு புடின் உத்தரவு! அணு ஆயுதங்களை உள்ளடக்கிய அதன் தடுப்புப் படைகளை சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு, ரஷ்யாவின் இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் மீதான அவரது படையெடுப்புக்கு பரவலான கண்டனங்களுக்கு மத்தியில், மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பு அறிக்கைகள் இதற்குக் காரணம் என்று அவர் பாதுகாப்புத் தலைவர்களிடம் கூறினார். இந்த அறிவிப்பு ரஷ்யா ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்புகிறது என்று அர்த்தமல்ல எனவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா உடனடியாக புடினின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம், உக்ரைனில் எங்களுக்கு …

  18. ஆங் சாங் சூகிக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை இராணுவத்தால் ஆளப்படும் மியன்மார் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சாங் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரியில் இராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தப்பட்டதிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 76 வயதான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி மீது வாக்காளர் மோசடி உள்ளிட்ட குற்றவியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளதோடு, மனித உரிமைக் குழுக்கள் நீதிமன்ற விசாரணைகளை போலித்தனமானது என கண்டித்துள்ளன. வழக்கு விசாரணை தலைநகர் Nay Pyi Taw…

  19. பிரான்சில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரீஸ் நகரில் கடந்த புதன்கிழமை 'சார்லி ஹெப்டோ' பத்திரிகை அலுவலகத்தில் 2 தீவிரவாதிகள் புகுந்து நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு தாக்குதல் நடத்தி 12 பேரை கொன்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன் ஏமனில் கல்வி பயின்றதாகவும் அங்கு அல்கொய்தா பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டதாகவும் ஏமன் பாதுகாப்பு படை கூறியது. இந்நிலையில், அரேபியன் தீபகற்பத்தில் உள்ள அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள், பிரான்சில் பத்திரிகை அலுவலகம் மற்றும் ஜெவிஸ் பல்பொருள் விற்பனை அங்காடி மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல் மீண்டும் பிரான்சில் தாக்குதல் ந…

  20. ஜப்பானின் மிகப்பெரிய கப்பல் ஒன்றில் தீ விபத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பயணிகள் கப்பலில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ பல மணிநேர போராட்டத்தின் பின்னர் கப்பலில் பணிபுரிந்தவர்கள், தீயணைப்பு மற்றும் கடற்படைவீரர்கள் ஆகியோரினால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு தீ விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான அசுகா II என்ற கப்பலின் மேல் தளத்தில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் தீப்பற்ற தொடங்கியதாக உள்ளூர் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இதன்போது கப்பலில் அத…

  21. 24 SEP, 2024 | 04:28 PM செனெகலின் கரையோர பகுதியில் படகொன்றிலிருந்து 30 சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தலைநகர் டக்கரிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் படகொன்று தத்தளிப்பதாக தகவல் கிடைத்தாக தெரிவித்துள்ள செனெகல் கடற்படை இதனை தொடர்ந்து மரப்படகினை கரைக்கு கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளது. உடல்கள் மிக மோசமாக சிதைவடைந்து காணப்படுவதால் மீட்பு அடையாளம் காணும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக இடம்பெறுவதாக செனெகல் கடற்படை தெரிவித்துள்ளது. செனெகலில் இருந்து ஸ்பெயினின் கனரி தீவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணி;க்கை அதிகரித்துள்ள நிலையிலேN இந்த சம்பவம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. உடல்கள் சிதைவடைந்துள்ள நிலையை பார்க்…

  22. பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் மைக்கேல் கோவின் தேர்தல் கொள்கை வெளியீடு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டுமென்று பரப்புரை செய்த தலைவர்களில் ஒருவரான மைக்கேல் கோவ், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்தத் தலைவராகவும், பிரதமராகவும் வருவதற்கு போட்டியிடப் போகும் நிலையில், தனது தேர்தலுக்கான தனது கொள்கைத் திட்டத்தை வெளியிட்டுள்ளார். இதுவே சரியான செயல்பாடு என்பதால் போட்டியிடப் போவதாக கூறியுள்ள மைக்கேல் கோவ், இதே காரணத்திற்காக தான் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகின்ற கட்டுப்பாடற்ற குடியேற்றத்தை முடிவுக்கு கொண்டுவர அவர் உறுதியளித்துள்ளார். பெரி…

  23. லிவர்பூல் வாகனத் தரிப்பிட தீ தீவிபத்து: 1,600ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீயிற்கு இரையாகின… பிரித்தானியாவின் வடபகுதியின் லிவர்பூல் நகரில் பல மாடிகளைக் கொண்டு அமைந்துள்ள வாகனத் தரிப்பிடமொன்றில் திடீரென தீ பரவியதில், சுமார் ஆயிரத்து 600ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.இந்த நகரில் அமைந்துள்ள கிங்ஸ் டொக் வாகனத் தரிப்பிடத்திலேயே, நேற்று ஞாயிற்றுக்கிழமை (31.12.17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வாகனத் தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியில் ஒரே புகைமூட்டமாகக் காணப்பட்டதால், அக்குடியிருப்புத் தொகுதியில் வசித்துவந்த குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, காவற்த…

  24. வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கா நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அமெரிக்கா அவரை சிறைபிடித்து…

  25. தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 2 பேரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் பாரியளவில் தேடுதல் வேட்டையொன்று நடத்தப்பட்டுள்ளது. சுமார் 450 ஜெர்மனிய விசேட காவல்துறை உத்தியோகத்தர்கள் இந்த தேடுதல் வேட்டையில் பங்கேற்றிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத தாக்குதல் ஒன்றை நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதும் எந்தவொரு இடத்தை தாக்குவதற்கு திட்டமிட்டமை பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. 27 வயதான அல்ஜீரிய பிரஜை ஒருவரும், 23 வயதான நைஜீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.