கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வணக்கம் நண்பர்களே! உங்கள் வரவு நல்வரவாகட்டும். என் தமிழில் நடைபயில எனது இலக்கியப்பூங்கா. எனது முதலாவது படைப்பான இன்ரநெற் யுகமும் இருபத்தியோராம் நூற்றாண்டும் நூலில் இருந்து கவிதைகள் இங்கே மலர்கின்றன. நான் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதத் தொடங்கி இரண்டாயிரம் ஆண்டுவரை எழுதிய பல கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. சிறிய வயதில் கவிதை மீது கொண்ட தீராத காதலால் என் தாயகம் சார்ந்து எழுதிய என் உணர்வின் பதிவுகள் இவை. அவற்றில் சொற்பிழைகள் பொருட்பிழைகள் இருந்தால் என்னை மன்னித்து பொறுத்தருளுவீர்கள் என நம்புகின்றேன். என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பினை மிகவும் அழகாக வடிவமைத்து பதிப்பு செய்தளித்த மறவன்புலவு திரு.சச்சிதானந்தன் ஐயா அவர்களை நன்றியுடன் ந…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறு பருவத்தில் பார்த்து வியக்க வைத்தது - உன் நட்பு வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க வைத்தது - உன் நட்பு துன்பத்தின் போது கண்ணீர் துடைத்தது - உன் நட்பு மகிழ்ந்த போது மனம் மகிழ வைத்தது - உன் நட்பு முதிர்ந்த பின்னும் என்றும் தொடருமடி - நம் நட்பு நட்புடன் இனியவள்
-
- 20 replies
- 2.8k views
-
-
கரும்புலி மில்லர் கரும்புலிகளில் மூத்தவன். வசந்தனாய் பிறந்து மில்லராய் வாழ்பவன்! மின்னல் எனத் தோன்றி மில்லர் ஆனவன்! கரும்புலிகளைப் படைத்து பிரம்மா ஆனவன்! உன் பின்னே எத்தனை தோழர்கள் பார்! அன்று கொட்டியா வருகுதென்று சுவை சுவையாய் நகைச்சுவை சொன்னவனே நீ! இன்று இருதாசப்தங்கள் கடந்தும் எங்கள் நெஞ்சு கனக்க வைத்தவன் நீ! பிறந்தவருக்கு மட்டுமில்லை! இனி மரணித்து மலர்ந்த உன் போன்றவர்க்கு பிறந்தநாளே கொண்டாடுவோம்! கரும்புலிநாள் என்றால் பன்னீர்ப் பூக்களை மட்டுமல்ல கண்ணீர்ப் பூக்களையும் காணிக்கை செய்கின்றோம்! நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் பெருந்தலைவன் பார்வையின் கீழ் நிமிர்கின்றோம்! ஊருக்கும் பேரு…
-
- 11 replies
- 2.5k views
-
-
பூவுக்குள் பூவாய் இவள் உறங்கிக் கொள்ள கண்ணீர் கொண்டு பாசத்தோடு என் உறவுகள் சுற்றி நிற்க இவளையும் வெறுத்திடும் இதயங்கள் பெருமூச்சு விட்டு நிற்க ஏனடா இவளை சந்தித்தோம் என சிலர் திட்டி நிற்க இவள் மட்டும் பூவோடு பூவாய் வாடாது உறங்கிக் கொண்டாள்! தன் இறுதி விடுதலைப் பயணத்தில் மகிழ்ச்சியாய்...! இவளுக்காய் அழுதிடும் உறவுகள் மறந்திடுவார் மரணத்தை மீண்டும்!!!
-
- 15 replies
- 2.3k views
-
-
எம் கரும்புலிகளே! ஜீலை 5 2007 இருளகற்ற கரும்புலியாய் சென்றார்கள்! விடியலுக்கு விளக்காகி நின்றார்கள் 'சாவினை' இவர்கள் தான் வென்றார்கள்- வீர சரித்திரத்தில் பேரெழுதிச் சென்றார்கள்! சந்தனமேனிதனில் கந்தகத்தை கட்டியே களம் நாடிச் சென்றார்கள்! காடையர் கயவர்கள் கூட்டத்தை வெடி மருந்துக்கு பொடியாக்கி வென்றார்கள்! அஞ்சாத தலைவனின் பாதையிலே- நடை போடும் எங்களின் வீரர்களே! உங்களின் நெஞ்சுரம் யார்க்கு வரும்? உங்கள் தியாகமே "ஈழத்தை" வென்று தரும்! தேசத்தின் புயலாக வீசுகின்ற- கரும் புலியே! கடும்பகையைக் கொளுத்துகின்ற எரிமலையே! எம் ஈழச் சோதரரே! -ஈழ வரலாற்றின் நிலைய…
-
- 5 replies
- 1.7k views
-
-
கோயிலைத்தான் சுற்றிவருகிறார்கள் உன்னைத் தருசிக்காத பக்தர்கள் மட்டும் * உனக்காகவே நட்டு வைத்த பூச்செடியில் யார்யாரோ பறித்து செல்கிறார்கள் தங்கள் காதலியை கண்டுபிடித்தவர்கள் * என் காதல் திருமணத்தில் முடியவில்லைத்தான் ஆனாலும் மரணம்வரை வாழ்த்திருக்கிறது இல்லையென்றால் தற்கொலை செய்திருப்பேனா...? * என்னைப்போல் யாரும் உன் அமைதியை விரும்ப மாட்டார்கள் உன் கீழ் உதடாய் நீ மாறும்போதும் உன் மேல் உதடாய் நான் மாறும் வரையிலும் * இன்றுவரை காதலோடு வரும் எந்த பெண்களுடனும் நான் உரையாடியதில்லை காரணம் எனக்கே தெரியாத உனக்கு துரோகம் செ ய்யக் கூடாது என்பதால் * முடிந்தவரை உன் வீட்டுக் கண்ணாடி முன் நின்று என்னோடு உரையாடு எத்தனை தடவை …
-
- 5 replies
- 1.2k views
-
-
பல்லவி பெண்: காதல் சொல்ல காதல் சொல்ல தயக்கமும் தேவையா மோதல் செய்து மோதல் செய்து கைதுசெய்த தோழனே நெஞ்சத்திலே சினேகமாய் காதலைச் சுமக்கிறாய்-ஏன் மௌனத்தினால் என்னையே பார்வையால் வதைக்கிறாய் அழகான நண்பனே! காதல் செய்க நண்பனே! காதல் செய்க நண்பனே! காதல் செய்க நண்பனே! சரணம் 1 ஆண்: உன் விழிகள் வீசும் வலைகள் கொண்டு அள்ளிக் கொள்ள நினைக்கிறாய் கொஞ்சம் கொஞ்சமாய் காதல் பேசி என்னை வெல்லத் துடிக்கிறாய் பார்வையால் படர்கிறாய்-உன் வார்த்தையால் வளைக்கிறாய் நட்பின் ஈரம் காயும் முன்பே காதல் தோன்ற வேண்டுமா ? சரணம் 2 பெண்: காதல் நுழைந்த இதயம் தன்னை சிறை வைத்து ரசிக்கிறாய்- உன் கண்களின் ஓரம் கசியும் காதலை என்ன ச…
-
- 17 replies
- 2.3k views
-
-
-
- 32 replies
- 4.1k views
-
-
ஆணிடமிருந்து பெண்ணிற்கு விடுதலை பெண்ணிடமிருந்து ஆணிற்கும் விடுதலை காதலில் இருந்து கற்பிற்கு விடுதலை கற்பிற்குளிருந்த காதலுக்கும் விடுதலை பெற்றோரிடமிருந்து பிள்ளைக்கு விடுதலை பிள்ளையிடமிருந்து பெற்றோருக்கும் விடுதலை உறவில் இருக்கும் பாசத்திற்கு விடுதலை பாசத்திற்குளிருக்கும் உறவிற்கும் விடுதலை பணத்திலிருக்கும் சொந்ததிற்கு விடுதலை சொந்ததிற்குளிருக்கும் பணத்திற்கும் விடுதலை நட்பிலிருந்து தூய்மைக்கு விடுதலை தூய்மைக்குளிருக்கும் நட்பிற்கும் விடுதலை இறுதியில் பூமியிடமிருந்து மனிதனுக்கு விடுதலை மனிதனிடமிருந்து உயிருக்கும் விடுதலை!!
-
- 14 replies
- 2.2k views
-
-
கனவுகளின் தொலைவு எனும் வலைப்பதிவில் தாயகத்து அனுபவங்களை கதை, கவிதைகளாக படைத்துவரும் அகிலனின் வலைப்பதிவில் இணைக்கப்பட்ட ஒலிப்பதிவு கவிதையா? கதையா? அல்லது ஒலிசித்திரமா? எதுவாக இருந்தாலும் அவர் பேசும் பொருள், அவரது குரல்வளம்.... உங்களுடன் பகிரவேண்டும் போல் இருந்தது. பகிர்ந்துகொள்கிறேன். http://agiilankanavu.blogspot.com/2007/06/blog-post_28.html
-
- 3 replies
- 1.4k views
-
-
புல தமிழா!!!! உன் இருப்புக்கு ,இயங்கிகளுக்கும் உனக்கு தேவை சிங்க கொடி துடுபாட்டமும் சிவஜியின் நாயகன் ரஜனியும் சின்ன திரை மெகாசீரியலும் சிங்க கொடி பகிஷ்கரிக்க கோரின் சீ-விளையாட்டு வேறு அரசியல் வேறு என சிந்தாந்தம் பேசுகிறாய் சிவாஜி பகிஷ்கரிக்க கோரின் சினிமா வேறு அரசியல் வேறு என சீற்றம் கொள்கிறாய்....... சின்ன திரை வேண்டாம் எனின் சீரியல் இல்லை எனின் சீவியம் என்கிறாய் முடியவில்லை உன்னால் உறவுகளின் இருப்புக்கும் இயங்கிகளுக்கும் உன் பொழுதுபோக்கை இழக்க தயார் இல்லை.................
-
- 16 replies
- 2.2k views
-
-
உன் எண்ணம் உன் வாழ்க்கை! எண்ணங்கள் வானை நோக்கி! எழுத்துக்கள் உயர்வை நோக்கி! கண்ணிமைக்கும் காலம் கூட எடுத்துவை இலக்கை நோக்கி! நாளை என்று நாளைத் தள்ளி வைக்காதே உயர்வைத் தள்ளி! இன்று" ஒன்றே உண்மை தம்பி உயர்வாய் நீ உன்னை நம்பி! தடுமாற்றம் வந்து உன்னை தடம் மாறச்செய்யக் கூடும்! கொள்கையில் உறுதிகொண்டால் தடையது திரும்பி ஓடும்! கண்களில் தெளிவு கொண்டு எண்ணத்தில் வலிமை கொண்டு! உழைப்பினில் மகிழ்வு கொண்டு! வென்றிடு வாழ்க்கை நன்று! நன்றி.
-
- 10 replies
- 6.8k views
-
-
தோழனே....!!! நீ எனக்கு நண்பனாக கிடைக்க நான் ஏது தவம் செய்தேனோ? கலகலவென நகைக்கும் வயதில் சலனமில்லாமல் இவ்வளவு சோகமா? உனக்குள் இருக்கும் சோகத்தை எனக்குள் இன்றே புதைத்துவிட்டு கள்ளமின்றிச் சிரித்திட உல்லாச வானில் பறந்திடு உன் இலட்சியங்களை நிறைவேற்ற என்றும் உனக்கு துணையாவேன் இன்றே விரைந்து புறப்படு நன்றே நடக்கும் உன்வாழ்வில் பழையனவற்றை மறந்திடு புதியதை தேடி விரைந்திடு சோகத்தை தூக்கி எறிந்திடு தோழி என் தோளில் தலை சாய்த்திடு ஆயிரம் உறவுகள் தோன்றியும் அன்பில்லையே என சலிக்காதே நட்பைவிட வேறேது இன்பம் நானிருப்பேன் கலங்காதே
-
- 98 replies
- 15.6k views
-
-
பல்லவி ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை என் வாழ்வு இருக்கும் போதே எழுதி உயரத்தானே ஆசை உனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும் இணைய வேண்டும் இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய் இருக்க வேண்டும் பெண்: யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை என் வாழ்வு மலரும் போதே அதைக் கேட்கத்தானே ஆசை சரணம் 1 ஆண்: கண்ணுக்குள்ளே நீ எங்கே என்று என் கவிதைகளும் உளவு பார்த்ததோ நெஞ்சுக்குள்ளே நீ எங்கே என்று என் கனவுகளும் கேட்டு நின்றதோ பெண்: கண்ணுக்குள்ளே கலகம் செய்தாய் என் இதயத்தின் புதுத் திருடா கவலைகள் ஏனடா காதல் யுத்தம் செய்யப்போகிறேன் காத்திருந்து வாழப் போகிறேன் ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை என் வாழ்வு …
-
- 2 replies
- 1.2k views
-
-
என் நினைவுகள் நம் காதலையும் மீட்டுப் பார்க்கின்றன தினம் தினம் என் உணர்வுகளை உனக்குக் கூற நினைக்கின்றன என் வேதனைகளை உன்னிடம் இறக்கி வைக்க ஆசைப்படுகின்றன வேதனைகள் வாட்டும் நேரத்தில் உன் தொலைபேசியின் இலக்கத்தை அழைக்கின்றன குரலின் மயக்கத்தில் துன்பங்கள் பறந்து சொல்கின்றன என் துயரங்களை கேட்டு நீ அவதைப்படுவதை என் மனம் ஒத்துக் கொள்ளவில்லை உன் மேல் உள்ள பாசங்கள் அதைக் கூற மறுக்கின்றன என் சோகங்கள் என் பாதையில் தொடரட்டும் உன் பாதைகள் பூவாய் பூக்கட்டும் இனியவனே எங்கிருந்தாலும் நீ வாழ்க!!!!
-
- 7 replies
- 2.2k views
-
-
கருவாச்சியுடன் சில மணிநேரங்கள்........ பெண்மைக்கு பெயர் சேர்த்த பேரரசி பேடை என்று இகழ்ந்தவரை பேசு என்புகழ் என பெரு மார்பு தட்டி நின்றவள் துணையின்றி வாடாமல் துணிந்து நின்ற தமிழிச்சி கடந்த சில வாரங்களாக கவிப்பேரரசின் கருவாச்சியை வாசித்து இல்லை இல்லை அவளுடன் வாழ்ந்துவிட்டு வந்திருக்கின்றேன். கருவாச்சி ஒற்றைவரியில் ஓராயிரம் அர்த்தங்கள் புரிய வைத்தவள். பெண்மைக்கு பெயர் சேர்த்தவள். தமிழ்ப்பெண் என்பதை தவறேதுமின்றி தளராத துணிவோடு நிறைவேற்றிக்காட்டியவள். கட்டியவன் கையறுக்க கட்டியதால் ஓட்டிய உறவோ எட்டி உதைக்க ஒற்றையிலே நின்று பற்றையாய் படர்ந்தவள். வாழும்போது அவளடைந்த வேதனைகள் நெஞ்சை நெருடிச்சென்றன. வாழ்த்துக்கள் கவிப்பேரரசே.....
-
- 6 replies
- 1.8k views
-
-
எனக்கும் அவனுக்கும் வாழ்கையென்னும் விடுதலையில்லா சிறைச்சாலைக்குள் புரிந்துகொள்ளா முரண்பாடு விரக்தியான நாட்கள் கண்ணீர் சிந்தும் கோலங்கள் முகமூடியால் மறைத்துக் கொள்ளும் முரண்பாடு போலியான உறவிற்கள் மலர்ந்து நிற்கும் சின்ன மலர்கள் சிக்கித் தவிக்கின்றது பாசமென்னும் முரண்பாட்டுக்குள் யாரோடும் சொல்ல முடியாச் சோகங்கள் எம் முரண்பாட்டால் நாளைய முதியோர் இல்லத்திற்காய் தயார்ராகின்றது
-
- 16 replies
- 4.3k views
-
-
இதை அனுப்பி வைத்தவர் ஹரி. http://aycu19.webshots.com/image/18378/2002280218213
-
- 3 replies
- 1.4k views
-
-
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் குறித்து முதல்வர் கருணாநிதி கவிதை ஒன்றை எழுதியுள்ளார். கருணாநிதியின் பிரதீபா பாட்டீல் கவிதை .. நூறு கோடியைத் தாண்டுகிற மக்கள் வெள்ளத்தில் வீறு கொண்ட ஆடவர் எண்ணிக்கை சரி பாதியாகும்! சீறுகின்ற பாம்புகள் முன்னே சிறு தவளைக் கூட்டம் போல்- ஆறுவது சினம் படித்து அடங்கிடும் பெண் குலமோ மறு பாதியாகும் நாறுகின்ற மட நம்பிக்கைக் குட்டையில் ஊறுகின்ற மட்டையாகி; நானம், அச்சம், மடம், பயிர்ப்பு என நாலு வேத வழி நடக்கும் பெட்டையாகி; அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு என்பதுடன் நிறுத்தாமல் அவள் ஆளன் மறைந்த பின்னர் அவளுக்கு வாழ்வுதான் எதற்கு -என்று அனலிடை அவளைக் கருக்கி …
-
- 2 replies
- 1.1k views
-
-
நாளை நாளை என்றொரு நாளை எண்ணி மனம் வெம்பிப் போகாதே தம்பி - அந்த நாலுந் தெரிந்தவன் நடத்தும் நாடகத்தில் குறை சொல்லி மாளாதே தம்பி விதை விதைப்பதும் அது முளைப்பதும் உந்தன் கையிலா தம்பி? எல்லாம் இயற்கையின் கையினை நம்பி! கவலைகள் கிடக்கட்டும் காரியம் நடத்திவிடு மலைகள் எதிர்க்கட்டும் துணிவாய் இருந்துவிடு பிறந்தது இன்று வாழ்வது இன்று சாவதும் இன்றே என்று எண்ணி விடு துன்பங்கள் ஓடும் இன்பங்கள் கூடும் உல்லாசம் உன் மார்பைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்டும் கொண்டாட்டம் நாமெல்லாம் இன்று பூத்த மலர்க்கூட்டம் நமக்கு ஏது கவலை - ஊதடா உல்லாசப் பண்பாடும் குழலை நாமெல்லாம் இன்று பிறந்த மழலை நமக்…
-
- 7 replies
- 1.9k views
-
-
மழை அடிக்கடி அழைக்காமலே எனக்குள் விஸ்வரூபம் எடுக்கும் உன்னைப் போல தூறலாகிக் கனக்கின்றது! குளிர்காற்று காதுமடல் தடவி தலைகோதும் போதெல்லாம் உன் உதடும் கைகளும் நினைவில் பாதங்கள் வெள்ளம் அழைகையில் உன் கால் கொலுசின் ஒலி! மழைத்துளி மண்ணில் மோதிச் சிதறித் தெறிக்கையில் மரணத்தின் வலி! மழை எல்லோருக்கும் பொதுவாய் கடவுள் எடுக்கும் பால பாடம்! புரிந்தவர்கள் ஞானம் பெறுகிறார்கள்!
-
- 4 replies
- 1.3k views
-
-
புதிய பாதைகள் படைப்போம் அழகிய பூமி, அதைத் தொடும் எல்லையற்ற வானம் இவை நடுவே விதம் விதமாய் பல்லுயிர்க் கோலங்கள். அவை நடுவே எமை இணைக்கும் பகுத்தறிவுப் பாலங்கள் இப் பிரபஞ்சத்தின் விந்தைகள் பலகோடி வாழ்வின் சிக்கல்களும் அவற்றிட் சிலகோடி அத்தனையும் அவிழ்க்கும் அறிவு சக்தி - நம்மில் அளப்பரிய ஆற்றலாய் இருந்தும் என்ன பயன்? என்ன செய்கிறோம்? எதைக் கண்டு கொண்டோம்? ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம் ஆனால்அங்கு எம் பிணங்களையும் அறுவடை செய்கிறோம் எம்மைத் தாங்கும் மண்ணை நம் குருதியால் நிரப்புகிறோம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்வுகளாய் உதித்து விந்தைகள் புரிந்த கடவுளர் பெயரால் பல வஞ்சனைகள் புரிகிறோம் பகுத்தறிவு இருந்தும் பூமியைப் பல தேசங…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
உலகப் போருக்கு முன்னால் உள்ளம் கதிகலங்க யூதர்கள் அனுபவித்த இனக் கொடுமையும், தென்னாப்பிரிக்க மண்ணிலே தோலை மட்டும் வெண்மையாய்க் கொண்டோர் கொண்டாடிய இனவெறியும், தமிழனின் தலையெழுத்தில் சிலையில் எழுத்தாய்ப் பொறிக்கப் பட்டுவிட்டது. மொத்தமாய் அவனிடமிருந்து எல்லாம் பறிக்கப் பட்டுவிட்டது. சொந்தமாக உறவுகளை மட்டுமல்ல அத்தியாவசியப் பொருளைக் கூட வைத்துக் கொள்ள வாய்ப்பில்லாத நிலை. ஈழத்து சோகம் ஆழத்தில் நெஞ்சை அழுத்தி விடுகிறது. அதில் புதையுண்டு மனம் அழுது விடுகிறது. புலிகளைத் தீவிரவாதப் பட்டியலில் சேர்த்துத் தடை விதித்தால் மட்டும் தீர்ந்து விடாது பிரச்னை. மனித உரிமைகள் மறுக்கப் படுவதும், மாற்றான் தாய்க் கொடுமை…
-
- 2 replies
- 865 views
-
-
கடவுள் என்ற கருத்து பிறக்க ஆலயம் என்ற கட்டிடம் எழும்ப மதம் என்ற கருத்து பிறக்க போதனையாளர் என்ற கூட்டம் கிளம்ப மாற்றுகருத்து பிறக்க மாற்று போதனையாளன் என்று கூட்டம் கிளம்ப சம்பிரதாயம் என்ற கருத்து பிறக்க சமூகம் என்ற கூட்டம் அமைய சமூகங்கள் கருத்தை உருவாக்க அவ்வுலகம் ஆத்மா பற்றிய கருத்தை மதம் போதிக்க மொழி என்ற கருத்தை குடும்பம் போதிக்க கலை,கல்வி என்ற கருத்தை பாடசாலை போதிக்க தகவல்கள்,செய்திகளை ஊடகங்கள் போதிக்க எமதுக்கு பங்கிற்கு யாழ்களத்தில் நாம் தகவலை வெட்டி ஓட்ட இவ்வளவு சோதனையும் தாங்கி நிற்கும் கருத்து உலகம்
-
- 7 replies
- 1.7k views
-