Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by kaviya,

    எல்லாமும் நீயே அன்பாலே கவர்ந்திட்ட கண்மணியும் நீயே ஆவியுடன் இரண்டாகக் கலந்தவளும் நீயே இல்வாழ்வை இனிதாக்க வந்தவளும் நீயே ஈருடலில் ஓருயிராய் இணைந்தவளும் நீயே உணர்வுக்கு உயிரூட்டம் தந்தவளும் நீயே ஊடல்கள் செய்கின்ற முழுநிலவும் நீயே என்மனதை எளிதாகச் சரித்தவளும் நீயே ஏக்கத்தைக் களைந்திட்ட பெருநிதியும் நீயே ஐயங்கள் தீர்க்கின்ற அறிவணங்கும் நீயே ஓன்றித்துப்; போய்விட்ட எனதுயிரும் நீயே ஓயாமல் துன்பத்தைத் துடைத்தவளும் நீயே ஓளசதமாய் வந்திட்ட ஆரணங்கும் நீயே நீயே இனியெனக்கு எல்லாமும் நீயே

  2. காற்றோடு காற்றாக பறந்து செல்லும் வெற்றுக் காகிதங்கள் நாங்கள் அல்ல எழுதப்பட வேண்டிய புதுக்கவிதைகள் நாம் உறவுகளை இழந்து உணர்வுகளைப் புதைத்து முற்களின் பாதையில் நடக்கின்ற சிட்டுக் குருவிகள் நாம் `அ` எழுத வேண்டிய பிஞ்சுக்கைகள் பழுத்து சிவப்பாக புத்தகம் சுமக்கும் வயதிலே... சிலுவைகள் சுமக்கின்றோம் அன்னையவள் அன்பு முத்தம் எங்கே? அணைத்திடும் தந்தை கைகள் எங்கே? கண்ணீ ர் துடைத்திடும் தங்கை எங்கே? அன்புக்கு ஏங்கும் இதயங்களாக நாம் உறங்கிட முற்றமில்லை பசித்திடின் புசிக்கவில்லை மானம்காகாக்க உடைகூட இல்லை பசி எமக்கு நண்பன் தரை எமக்கு மெத்தை மழை எமக்கு குளியல் எம் இருள் களைந்து ஒளியேற்ற உதவிக…

  3. நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ -யாழ்_அகத்தியன்

  4. கவிதையைக் கேட்க... +++ அப்பால் தமிழ் இணையத்தளத்தில் "பரதேசிகளின் பாடல்கள்" கவிதைத் தொகுப்பு பற்றி எழுதப்பட்ட கருத்துத்தான் மேற்காண்பது. +++ இக்கவிதைத் தொகுப்பினைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் "அப்பால் தமிழ்" இணையத்தளத்தோடு தொடர்பு கொள்ளலாம். kipian [at] appaal-tamil [dot] com +++ இக்கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை நித்தியா குரல்வடிவில் செய்திருக்கிறார். கேட்டுப்பாருங்கள். இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. கவிதையைக் கேட்க...

    • 4 replies
    • 1.4k views
  5. வானம் வசப்பட்ட கதையிது தொடரும் வானத்தை அண்ணாந்து பார்த்து நடுங்கிய நாட்கள் பனை நெஞ்சின் பின்னும் பதுங்குழிகளிலும் பதுங்கிக் கிடந்தோம் இன்று குனிந்த முகங்கள் நிமிர்த்தி கொஞ்சம் சிரிக்கிறோம்! தலைவன் புண்ணியத்தில் தலைநகரில் பெரும் தீயெழ உலகத்தமிழர்களின் உள்ளத்தில் பெருமகிழ்ச்சி எத்தனை ஆண்டுகள்தான் இனவெறி எச்சங்களை எங்கள் தலைகளில் கொண்டு வந்து கொட்டுவீர்கள்? எங்கள் உயிர் வலியின் உச்சங்களை உணரத் தவறியவர்களே உணர்ந்து கொள்ளுங்கள்! வான் ஏறிவந்து இனி உங்கள் தலையிலும் குண்டுகள் கொட்டுவோம்! எங்கள் புலிகளுக்கு பாய்வதற்கு மட்டுமல்ல பறக்கவும் தெரியும் பார்த்ததும் பதைத்தீர்கள்;! இனி என்ன செய்வதாய் உத்தேசம்? வ…

    • 11 replies
    • 1.8k views
  6. நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ -யாழ்_அகத்தியன்

  7. சொல்வாயா...!!! உனை நான் பார்த்தேன் எனையே உடன் மறந்தேன் காளை உனை நினைத்து காதல் கொண்டு துடித்து நீ செல்லும் வழி மீது நிலா இவள் விழி வைத்து துடிதுடிக்கும் இதயத்தோடும் படபடக்கும் விழிகளோடும் கன்னி நான் காதலோடு உனை எண்ணிக் காத்திருக்கின்றேன் திருமகனே என் மனமகனே ஒருமுறையேனும் உன் உதட்டைக் குவித்து நெத்தியில் அன்பாக முத்தம் ஒன்று இட்டு சத்தமாக சொல் கன்னி இவளே உன் காதலி என்று...! சொல்வாயானால், வெண்ணிலா சிரிக்கும் விண்மீன் ஒளிரும் வானம் பூத்தூவும் வானவில் நிறம்கூடும் மின்னல் மின்னும் முகில்கள் நாணும் இவைக்காக என்றாலும் அவைமுன் காதலை சொல் கன்னி இவளே உன் காதலி என்று...!

    • 15 replies
    • 2.7k views
  8. அகதியாய் அலைந்து ஆழ்கடல் கடந்து இன்னல்கள் சுமந்து ஈழத்தைப் பிரிந்து உறவுகளைத் தேடி ஊட்டி வரை ஓடி எல்லாம் இழந்து ஏங்கித் தவித்து ஐயோ அம்மாவென ஒரு பாத்திரம் கொண்டு ஓடும் எங்கள் நிலை கண்டால் ஒளவைப் பாட்டி மட்டும் ஃமாய் நிற்பார் !

  9. Started by Jenany,

    நான் கவிதை எழுதியது நிஜம் அவன் உள்ளம் கவர்ந்ததும் நிஜம் அவன் சிந்தனைகளுக்கு சவால் விட்டதும் நிஜம் நான் காதல் கொண்டது நிஜம் அவனால் நேசிக்கப்பட்டதும் நிஜம் காதல் அன்பு பார்த்து வந்ததும் நிஜம் என் காதல் கல்லறைக்குப் பூத்ததும் நிஜம் நான் கண்ணீர்க்கு வாக்கப்பட்டதும் நிஜம் என் காதலன் நேசமானவன் என்பதும் நிஜம் ஆனால் நேசத்தை நிரூபிக்க காதல் நிஜமில்லாமல் போனதும்... நிஜம்..!! நன்றி: நித்தியா www.suduvanam.blogspot.com

    • 7 replies
    • 1.8k views
  10. என்னருமைத் தமிழகமே ஏனிந்த தடுமாற்றம் ? என்னருமை உடன்பிறப்புக்கள் ஏதிலியாய் உங்கள் மண்ணில் ஓடோடி வருவதுவும் ஒன்றும் புதிதல்லவே .. உங்களுக்கு ! எத்தனை காலத்துக்கு எங்களின மக்களுக்கு அகதி என்ற முத்திரையும் அரிசி .. இத்தியாதிகளை கொடுப்பதாகத் திட்டம் .. என்று கொதித்துப் போனேன் .. நேற்றுவரை ஆனால் .. இன்று உங்கள் நடவடிக்கை ! இடியேறு கேட்ட நாகமானேன் ! என்காதை வந்தடைந்தால் .. எப்படி .. எழுதாமல் இருப்பேன் ? ஈழமண்ணின் விடுதலைக்கு இந்தியாவால் முடியாதென்றால் .. உதவத்தான் முடியலைன்றாலும் உபத்திரவம் தான் கொடுப்பதுமேன் ?

  11. வாசித்ததில் பிடித்தது.... I Love You! I யப்படாதே கண்ணே! L லோர்க்கும் கிடைக்காது நம்மைப் போல O ருங்கிணைந்த இதயம் இருந்தும் V தியால் பிரிந்தோம், கவலைப்படாதே! E திகாசத்தில் அம்பிகாபதி அமராவதி போல இடம்பெறும் நம்காதல் Y யாரக் கன்னியே O ருநாள் இந்த U கத்தின் சரித்திரத்தில் நம்காதல் இடம்பெறும்!

    • 23 replies
    • 3.1k views
  12. Started by கஜந்தி,

    ஆசை அதிகாலை தன்னில் பறவைகளின் இசையில் எழுந்திட ஆசை சூரியன் தீண்ட முதல் பணித்துளிதன்னை-நான் தொட்டு விளையாடி மகிழ்ந்திட ஆசை தென்றலின் வருகையால் அசைந்திடும் மொட்டுக்கள் மலர்ந்திடும் அழகால் சிந்திடும் பனித்துளியில் நான் நனைந்திட ஆசை மென்மையான பூக்களின் இதழ்களில் - என் முகம் புதைத்து கண்முடி -இந்த வாழ்கை தன்னை மறந்திட ஆசை இளங்காற்றின் அசைவில் ஆடிடும் மரங்களின் ஓசை தனை ரசித்தபடி நதிக்கரை ஒரமாய் நடத்திட ஆசை சண்டை இல்லா உலகில் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் மட்டும் வாழ்வதை பார்த்து ரசித்து விட ஆசை நிறைவு பெறுமா இவள் இறுதி ஆசைமட்டும் புரியாது …

  13. எங்கே இவர்கள் எங்கே....? இரண்டாயிரத்து நான்கில் இனிய யாழ்களத்தில் இணைந்த என்னோடு இன்புடன் பழகிய உறவுகள் பலரை சோக உணர்வோடு தேடுகின்றேன் எங்கே இவர்கள் எங்கே ஏங்குகின்றேன் பதில் கூறுங்கள் குதூகலமாக பறக்கும் குருவி எங்கே தட்டிக்கொடுக்கும் தமிழினி எங்கே கவிவடிக்கும் கவிதன் எங்கே மழலை பேசும் மழலை எங்கே இளங்கவிஞன் இளைஞன் எங்கே இளகிய மனம் கொண்ட இளங்கோ எங்கே சிரிக்க வைக்கும் சின்னப்பு எங்கே வியக்க வைக்கும் விகடகவி எங்கே மதிமுகம் கொண்ட மதிவதனன் எங்கே முகம் மலரவைக்கும் முகத்தார் எங்கே வீரமுள்ள வினீத் எங்கே விளையாட்டுபிள்ளை விஷ்ணு எங்கே பறந்து திரியும் பறவைகள் எங்கே பெருமூச்சுவிடும் பெரியப்பு எங்கே கலகத்தோடு வரும்…

  14. பரீட்சை(பிரசவம்!) தாய்மார்கள் மாத்திரமே பிரசவ வலியுடன் பிள்ளைகள் பெறுவதாய் எவர் சொன்னார்? பள்ளியில் கற்கின்ற மாணவர் நாமுந்தான் வருடத்தில் மூன்றுமுறை மகப்பேறு அடைகின்றோம்! கற்பிணிப் பெண்களிற்கு இருக்கையைவிட்டு எழுந்தால் மட்டும் வேதனை! மாணவர்களிற்கோ இருந்தாலும் வேதனை! எழுந்தாலும் வேதனை! தைமாதம் பள்ளியில் தொடங்கும் தேனிலவு சித்திரை புது வருடத்தில் பிரசவ வலியாகி எமது உயிரைக் கொல்லும்! தொடர்ந்து தேனிலவு தொழிலாளர் தினத்துடன் தொடங்கி மூன்று மாதங்களில் எமக்கு மறுபடியும் பிரசவம்! மார்கழியில் குழந்தை யேசுவின் பிறப்பு வரும்வரை தேனிலவும் பிரசவமும் பள்ளியில் எமைச் சக்கரமாய் சுற்றிவரும்! மூன்று மாதங்களில் வருந்த…

  15. காதல் காதலே உனக்கு கண்கள் இல்லை உண்மைதான் நீ பாதை மாறி முறை கெட்டு வாழ்கின்றாய் காதலே காதலுக்காய் காதலர்களை சிதைத்து சேகத்தின் கடலில் முழ்கடித்து கரையில் நின்று சிரிக்கின்றாய் காதலே உன்னால் குடும்பம் பகையாகி உறவு தூரமாகி தனிமை கொடுமையாகி வாழ்க்கை சுமையாகி வாழ வைக்கின்றாய் காதலே காதலை வாழவைக்க காதலை சாகடித்து கண்ணீரில் முழ்கடித்து எதிர்காலம் வீணாவதேன் காதலே கணவனுக்கோர் காதல் மனைவி க்கோர் காதல் குழந்தை அநாதையாய் வாழ்விழந்து நிற்பதேன் காதலே நீ யே வாழ்க்கையல்ல வாழ்க்கையே போராட்டம் போராட்டமே நீயானால் வாழ்க்கை வெறுமையாய் வெறுத்து போவதேன் காதலே உண்மையே நீயானால் வந்துவிடு பொல…

  16. இணைய உறவு இனிய உறவு இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு இருபத்தோராம் திகதி இதே சித்திரை மாதத்தில் இதோ பசுமையாக அவ்நினைவுகள் இன்றும் என் நெஞ்சில்; இனிமையான காலைப்பொழுதில் இயக்கினேன் கணனியை இணைந்தேன் அரட்டைக்குள் இயற்பெயர் வெண்ணிலாவாக இவளுக்காகவே காத்திருப்பதுபோல்; இன்முகத்துடன் அரட்டைக்குள் இளங்கவிக்குயிலாக நீயிருந்தாய் இதமாக கதைக்க நினைத்து இதழ்விரித்துக் கேட்டேன் இருக்கின்றீர்களா நலமா என்று இதயத்தை தொடுவது போல் இயம்பினாய் ஆம் நலமே என இலங்கையில் வசிக்கின்றேன் நான் இங்கிலாந்தில் வசிக்கின்றாய் நீ இவ்வாறாக தொடர்ந்த அரட்டையில் இருநாடுகளில் வாழ்ந்தாலும் இணைபிரியாது வாழ எண்ணி இருவரும் கலந்தாலோசித்…

  17. Started by kavi_ruban,

    கண்ணெதிரே வந்து நின்று களிப்பூட்டும் காதலியைக் காணவில்லை வெறிச்சோடிக் கிடக்கும் ஊரின் நிலை மாறவில்லை தேரில் வரும் சாமியைக் கும்பிட வழியில்லை ஆமி செய்யும் அட்டகாசம் ஓயவில்லை சமாதானம் சமாதானம் என்று வீண் கோஷம் போடுவதில் அர்த்தமில்லை எல்லோரும் சமமென்று நினைக்கும் வரை நிம்மதியொன்றில்லை விண்மதியின் ஒளியினில் குளிர்ச்சியில்லை தன் மதி தான் தனக்குதவி என்று உணரும் வரை வளர்ச்சியில்லை விலைவாசி குறையவில்லை மலைவாசி சிறப்புடன் வாழவில்லை எந்தவாசியும் எமக்கில்லை - சிவன் ஆசி மட்டும் இருந்தால் தொல்லையினி இல்லை மனிதனை மனிதன் புரிந்து கொண்டால் ஓர் சண்டையில்லை எல்லை கேட்டு போரிடவும் தேவையில்லை சாதிகள் ஆதியில் இருந்து வந்தவையில…

  18. Started by yaal_ahaththiyan,

    என்னவனே.. உன்னை நினைத்து நினைத்து வாழ வேண்டும் உந்தன் மடியில் உயிர் துறக்க வேண்டும் வருவாயா? காலை மாலையாவதும் மாலை காலையாவதும் உந்தன் ஆசைக்குள் மறைய வேண்டும் வருவாயா? எந்தன் கோட்டையை விட்டு நீ போனாலும் நீ போட்டு விட்டு போன கோடுகள் ஆறவில்லை அதற்காகவேனும் வருவாயா? கோழி கூவினாலும் கோயில் மணி அடித்தாலும் கோலம் போட மறந்தாலும் உந்தன் மடியில் மறக்க வேண்டும் அதற்காகவேனும் வருவாயா? கனவில் நான் குளித்து நினைவில் காய்கிறேன் என்னை உடுத்திக்கொள்ள உண்ர்வோடு வருவாயா? அங்கத்தில் இடம் பிடித்தாய் ஆசையை தூண்டி விட்டாய் அனுபவத்தை கொளுத்தி விட்டாய் அணையாமல் எரிகிறேன் அதற்காகவேனும் வர…

  19. Started by saki,

    chating ( தமிழ் ஆக்கம் தெரியாது ) முகங்கள் புதைத்து முகவரி கள் தொலைத்து வயதுகள் மறைத்து உணர்ச்சி விளையாட்டில் பறிபோனது இங்கே இதயங்கள் பண்பாடு தொலைத்து காதல் மொழி பேசி உணர்ச்சி விளையாட்டில் பிரிந்தது குடும்பங்கள் நிஜத்தை தொலைத்துவிட்டு போலி வாழ்க்கைக்காய் வழக்காடு மன்றத்தில் பிரிவுக்காய் தவிக்க குழந்தையோ வீதியில் அனாதையாக தத்தளிக்குது. நாகரிக வளர்ச்சியால் தமிழ் பண்பாடு அகதியாய் அலைகின்றது எம்மைப் போல். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  20. ஊர்கள் இழந்து உறவுகள் மறந்து உயிர்கள் சுமந்த உடல்கள் முகங்கள் அழிந்து தமிழை மறந்து கால்கள் போன தேசம் கண்கள் கலங்கி நெஞ்சம் உருகி வெடிக்குது ஈர இதயம் பந்தம் அறுந்து சொந்தம் விலகி கிளைகள் விழ்ந்த விருட்சம் இறக்கைகளின்றி பறக்க துடிக்கும் பாசம் என்னும் வேகம் உள்ளம் உருகி வெள்ளம் பெருகி ஓடட்டும் ஊற்றாய் நினைவுகள் யாவும் நிழலாய்த் தொடரும் நீங்கிடது உங்கள் உறவு

  21. நீ எப்படி.. அவன் என்றும் இவன் என்றும் அடுத்தார் வாழ்வை எடை போடும் மனிதா நீ எப்படி-உன் வாழ்வெப்படி.. அடுக்கடுக்காய் ஊர்வம்பை அளக்கின்ற போது.. ஆனந்தம் கடலாய் அலைமோதுகிறதோ.. அழ்மனத்து சகதியை வெண்திரை மூடுகின்றதோ.. உன்னைத்திருத்திக் கொள் உலகம் திருந்துமென்றார்... உண்மை அது மெய்..- நீ உன் வாயை உளறவிட்டு ஊர் வாயை அலறவிட்டாய்.. ஊரார் வம்பை ஊட்டி வளர்த்து தன் வம்பை தானே வளர்ததாய்.. வந்த நாள் நல்ல நாள் வாழும் நாள் கொஞ்ச நாள்-அதற்குள் ஆயிரம் பேர் தலையை உருட்ட நினைக்கும் அபூர்வ சிந்தாமணியே.. துன்பத்தில் வீழ்ந்தோரை வம்புக்குள் இழுத்து இன்பத்தைக் காண்பதுமேன்.. பிறர் துன்பத்தில் இன்பத்தை கண்டு களித்து வாழ்வுக் க…

  22. துணிந்து எழு!துடுப்பு எடு! என் இளைய தோழா! இரு கைகளிலும் இருப்பது உளியென விரல் கொண்ட தோழா! நீ எழுந்து வாடா! "எட்டாத பழம் புளிக்கும்" என்பதும் கிட்டாதாயின் வெட்டென மற"ப்பதும் உன் முயற்சிக்கு முட்டாள்கள் போட்ட முட்டுக்கட்டைகள்! எங்கே தவறை நீ தட்டிக்கேட்க துணிந்து விடுவாயோ என தம்மட்டம் அடித்து தற்பெருமைபேசும் வெட்டி மனிதர்கள் போட்ட சட்டங்கள் 'அடிபடு! வாழ்க்கையில் அனுபவத்தால் அடிபடு! சுடச்சுட பொன் மிளிரும் புண்படப்படத்தான் பண் பட்டு மனம் உறுதியில் திகழும்! வெட்டுப்பட்டாலும் மரம் தளிர்கிறதே முட்டிமுட்டி மோதி போட்ட வித்தும் விண்ணை எட்டி விடத்துடிக்கிறதே! என் தோழா! ஒரு தோல்வியில் நீ கலங்கலாமா? விழும் ஒவ்வொரு …

  23. வீடுபற்றி எரிந்து அவர்கள் வீதியிலே நின்றார்கள் கூடி வந்த உறவினர்கள் கூவி என்ன சொன்னார்கள் மாற்றி வாருங்கள் மற்ற உடையை .. என்று ! மாற்றவில்லை அவர்கள் .. மனமில்லை என்பதால் அல்ல மாற்றுடையே அவர்களுக் கில்லை .. மனிதர்களே .. புரிந்து கொள்ளுங்கள் !

  24. Started by இனியவள்,

    உனைச் சந்திச்சு பிரியும் ஒவ்வொரு நாளும் நான் நானாக வந்து நீயாக மாறுவதும் உன்கூட நடந்து சென்ற பாதைகள் எங்கும் தனியாய் நடந்து பழகுவதுமாய் மாறிப்போனேன் நான் இதுதான் காதலா...... இல்ல இதைத்தான் காதல் எங்கிறார்களா எதுவும் புரியாதவளாய் உன் மார்போடு தினம் தூங்கும் மரத்தடியில் நாளைய உனக்காய் இன்றைய என்னை செலவழித்தபடி காத்திருக்கும் இவள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.