Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. திபெத் மொழி பேசும் முத்துக்குமார் 43 வயது நிரம்பிய இந்தியாவில் கல்வி பயின்ற திபெத்திய கவிஞர் குத்ருப்...! சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வியாழக்கிழமை தீக்குளித்து இறந்து விட்டார் சுமார் 50 - க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள் வியாழக்கிழமை இறந்தவர் கவிஞர் என்பது தான் மிகப் பெரும் துயரம்..! ஒரு படைப்பாளி..! திபெத்திய இலக்கியங்களை கற்று அறிந்தவர், அந்தோ பரிதாபம்..! என்றாலும் இந்தப் போட்டியிலும் எவரையும் விஞ்சி நிற்கிறார்கள் தமிழர்கள்..! இந்த வளரும் திபெத்திய படைப்பாளிக்கு, கவிஞனுக்கு ஆழ்ந்த இரங்கல் இவை தவிர நாம் வேறு என்ன சொல்ல முடியும்..! சங்கிலிக்கருப்பு

  2. அந்தோ பரிதாபம் ..! யப்பான்,சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, தென் கொரியா... இந்த நாடுகள் எல்லாம் என்ன செய்யப் போகின்றனர்..? மூன்றாம் உலகப் போர்..? அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது நண்பரே..? ஆனால் ஒன்று தெரியுமா.. உங்களுக்கு..? உலக பாட்டாளிகளின் முன்னணிப் படை இலங்கை தமிழர்கள் என்று..! உலகப் பாட்டாளிகள் வசம் இழப்பதற்கு ஏதுமில்லை.. ஆனால் ஈழத் தமிழர்கள் இழப்பதற்கு உயிரை மிகப் பத்திரமாக வைத்துள்ளார்கள். பாட்டாளிகளை மிஞ்சிய ஈழத் தமிழர்கள் ஒரு கேலிப் பொருளாக மாற்றப்பட்டு விட்டார்களோ..? ஒரு மூன்று ஆண்டு காலமாக சங்கிலிக்கருப்பு

  3. உலகத்தமிழா உணர்வுகொண்டு எழுடா.. ] எத்தனை காலம் செவிகள் கேட்டு கொண்டிருப்பது கண்கள் பார்த்து கொண்டிருப்பது அறியாமை மறந்து போன சிங்கள மனிதனின் யுத்தம் தன்நிலை மறந்து போன முட்டாள்களின் வெடிகுண்டு பெருக்கம்.. புவி அறிய பிறக்கும் பிறப்புகள் கூட பிறக்கமலே கருவறைக்குள் இறக்கும் அவலம்.. தப்பி தவறி பிறந்தாலும் வான்படை குண்டுகளின் குறிக்கு குதறப்படும் பரிதாபம்.. இன அழிப்பு அருவடைஎன்று ... எம்தமிழீழ கன்னிப்பெண்களின் கன்னித்திரை கிழித்தெறியும் சிங்கள காமுகனின் வெறிசெயல்.. போதுமடா உப்பிட்டு தின்பவனே காம உறுப்புகளை அறுத்தெறிய உணர்வுகொண்டு எழுடா.. சம உரிமை கேட்டதன் சன்மானம்தான் .. என் தமிழனின் உயிர் சிதைகப்படுகின்றது .. இதயமில்லா…

    • 0 replies
    • 813 views
  4. தேநீர்க் கவிதை: அவள் இல்லாத... முத்து சுகா அவள் இல்லாமல் சபிக்கப்பட்ட என் பொழுதுகள் விடிந்துகொண்டிருக்கின்றன ஏழு மணிக்கும் எட்டு மணிக்கும். ஜீவனில்லாத வீட்டுக்கு எத்தனை கதவு..? எத்தனை பூட்டு..? எப்போதும் ஊளையிடும் ஜன்னல் காற்றுகூட உன்னைத்தான் கேட்கிறது. நீ தொட்டெடுக்கக் காத்திருக்கும் வாசற்படி செய்தித்தாளாய் நான். அருகில் இருந்தாலும் அப்பால் இருந்தாலும் …

  5. முத்துக்குமரன்களும் முத்துவேலர்களும் தானாடாவிட்டாலும் தசை ஆடும்..அது ஆகாவிட்டால் தசை எரியும் ..முத்துக்குமரன்கள்... தானாடாவிட்டாலும் தசை நெரியும் முதுகுவலியில் (சாட்டாக) ஒதுங்கும்..முத்து வேலர்கள்... தமிழ் உணர்வு துரத்த ..தன்னுயிர் தானமாக்கும் முத்துக்குமரன்கள்.. தமிழ் உணர்வு வளர்த்து ... தன் வயிறு வளர்க்கும் முத்துவேலர்கள்.. தன் உறவுகள் துயர் பட ...உயிர் துறக்கும் ..முத்துக் குமரன்கள்.. தன் உறவுகள் கொழுத்துச் சிறந்திட ...உயிர் வளர்க்கும் ..முத்து வேலர்கள்.. ஒப்பிடவே முடியாத ..துயரம் ..கனக்கும் முத்துக்குமரன்கள்... ஒப்பிடலே இல்லாது ...காறி உமுழும் ...நிலையில் முத்து வேலர்கள்.. முன்னையது ..முத்து... பின்னையது..சொத்தை.. http://il…

    • 0 replies
    • 727 views
  6. தமிழனாய் பிறந்ததனால் தவிக்கின்றோம் பாரினிலிலே தடைநீக்கித் தழிழனுக்கு தரணியிலே – ஒரு தனியரசு வேண்டும். கழிகின்ற ஒரு கணமும் அழிகின்றான் ஒரு தமிழன் இருக்கின்ற இனம் வாழ எமக்கு ஒரு அரசு வேண்டும் பிறக்கின்ற குழந்தைக்கு பெயர் சூட்டத் தந்தை இல்லை பெற்றெடுத்த தாயும் பிணமாகக் கிடக்கின்றாள் பிரசவ வலிதீர்க்க மருத்துவம் எமக்கில்லை துடிக்கின்ற குழந்தைக்கு துயர்; துடைக்கும் ஆச்சிரமம் ஆகாயத் தாக்குதலில் அழிவுற்றுக் கிடக்கிறது நலிவுற்ற எம் மக்கள் நல்வாழ்வுதனைக் காண நல்லரசு ஒன்று நமக்கு வேண்டும். பரம்பரை பரம்பரையாய் பண்டுதொட்டு வாழ்ந்த மண்ணை பாதகச் சிங்களவன் பறித்து எம்மை அகதியாக்கி புதைக்கின்றான் புத்தர் சிலை பூர்வீ…

    • 0 replies
    • 712 views
  7. இன்று மீண்டும் அகதி முகாமில் கருணாகரன் அலைக்கழிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட அந்தக் காலை நேரத்தில் கொண்டுவந்து இறக்கப்பட்டோம் இலக்கங்களாக எதுவும் தெரியாது அடுத்துவரும் கணங்கள் எப்படியென நீண்டவரிசை வழங்கப்பட்ட இலக்கங்கள் அவரவரக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் அவரவர் அவரவர்க்கருகில் நகராப் பொழுதுகளோடு பிணைக்கப்பட்ட படுக்கை படுக்கையைச் சுற்றி முள்வலைகள் முப்பத்தி ஆறாவது தடவையும் இன்னொரு ஒப்பனை புதிய இடத்தில் பழைய அகதி அகதிகளின் நிழலைக் கண்காணிக்கும் முள்ளரண்கள் பழைய அகதிக்கு புதிய இலக்கங்கள் பழைய இலக்கங்களுக்கும் புதிய இலக்கங்களுக்குமிடையில் முடிவுறாத குழப்பங்களுடன் தூங்கும் கண்களில் துடித்துக்கொண்டிருக்கு…

  8. என் இனமே! சாகாவரத்தோடு உயிர்போகும் ரணவலியையும் இலவசமாய்ப் பெற்ற இனம் எம் தமிழினம்! அதனால்தானோ என்னவோ, இன்னும் குற்றுயிராய்த் துடிக்கின்றது! கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்தகுடியாம் தமிழினம் என்பார்கள்! இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை -இன்னும் தலைகுனிந்தே நிற்கிறது அகதியாய்...வாடகை நிலத்தில் ! கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன், பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கைவன்னியன், கரிகாலனுக்கு ஒரு கருணா என தலைமுறையாய் தவறாது தொடரும் தமிழினத்தின் சாபக்கேடுகள்!!! காசுக்குக் காட்டிக்கொடுக்க ஒரு கூட்டம்! காரியத்துடன் காய்நகர்த்த இன்னொரு கூட்டம்!! கேவலமாய் இருக்கின்றது "தமிழன்" என்று சொல்ல!!! வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்ற…

  9. சிறு பொறி - தீபச்செல்வன் மதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கறியலில் ஏறியமர்ந்த தெருக்களில் உள் உறிஞ்சிய பெருமூச்சு நெஞ்சறைகளுக்குள் எழுதியெழுதி தனை அழித்த நாட்களில் நிராகரிக்கப்பட்டவனின் முனகல் தன் தாய் மண்ணில் இறங்கி விளையாட அடம்பிடிக்கும் குழந்தை போலோரு கவிஞனின் குரல் அதிகாரத்தை எதிர்த்தமையால் கொலைப்பட்டியலில் இடப்பட்டவனின் இரகசிய முகம் மூ…

  10. நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால் ஊமைகள் அல்ல. நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால் முடங்களும் அல்ல. ஆறாத புண்களோடும் மாறாத வடுக்களோடும் தான் கைகளில் எழுதுகோல்களை தூக்கியிருக்கிறோம். எழுதுகோல்களை பிடிப்பதற்காக மட்டுமே எங்களின் கைகளை மெளனித்துள்ளோம். எங்கள் கைகளும் உயர்ந்து இருந்தது “ஒருகாலம்”. நாங்கள் சொல்ல நீங்கள் கேட்டது “அந்தக்காலம்”. நீங்கள் சொல்ல நாங்கள் கேட்கவேண்டியதாய் இடக்குது “இந்தக்காலம்” காலங்கள் மாறும் அது விதி. கவலைகள் தீரும் அதுவும் விதி. “எதை” முற்றாக முடித்து விட்டதாய் எக்காளம் இடுகிறாயோ “அது” ஆரம்பித்த இடத்தில் நிற்பதை மறந்துவிடாதே..!!! “எதை” குழிதோண்டி புதைத்து விட்டதாய் கொக்கரிக்கிறாயோ “அது” முழைத…

    • 0 replies
    • 462 views
  11. முன்னாள் பெண் புலியின் கண்ணீர் கதை http://www.munainews.com/news/index.php?option=com_content&view=article&id=2676%3A2011-06-22-23-46-22&catid=59%3A2011-04-09-15-25-47&Itemid=107 இடம் பெயர்ந்த பின்னர் இடிந்து போன துயிலுமில்லமொன்றின் அருகிருந்து கைவிடப்பட்ட நிலையிலிருந்த லுமாலா சைக்கிள் ஒன்றை(க்) கண்டெடுத்தேன் துயிலுமில்லமருகே இருந்த மகிமையோ என்னவோ இன்று வரை துருப்பிடிக்காதிருந்தது சைக்கிள் வேகமும், அதற்கே ஊரிய வீரியமும் சிறிதளவு குன்றாது உந்தி மிதிக்க உருண்டோடி, இவ் உலகின் மேர்சிடேஸ் காரின் மோகத்திற்கு நிகரான சுகத்தை அது எனக்குத் தந்தது! முதன்மைச் சாலையென முன்பொரு காலத்தில் அழைக்கப்பட்ட கிளி நொச்சி…

    • 0 replies
    • 938 views
  12. நம்பிக்கை ------------------- நீண்டு நிமிர்ந்திருந்த புத்தனின் கண்கள் மூடியபடி சாரையாய் நீண்ட பக்தர்களின் கைகளில் வெள்ளைத்தாமரைகள் புத்தம் சரணம் கச்சாமி வழிபடுங்கள் நம்பிக்கையோடு கீழ்ப்படிதலோடு மீண்டும் மீண்டும் இந்த நாடு உங்களுக்கே உரித்தாகும் இதைக் கேட்ட புத்தர் பரிகசிப்போடு தனக்குள் சொல்லிக் கொண்டார் இந்த முட்டாள் மனிதர்களின் குருட்டு நம்பிக்கைகளுக்கு அளவில்லாமல் போயிற்றே.. எனது விதிப்பின் படியும் விதியின் கணக்குப் படியும் வழிபாட்டுடனும் நம்பிக்கையுடனும் என்னை அதிகம் அழைத்தவர்களுக்கே இந்த நாடு சொந்தமாகும் என்பதை அறியாதிருக்கிறார்களே (ஹலீல் ஹிப்ரானின் கவிதை ஒன்றை வாசித்த போது எனக்குள் ஏற்பட்ட தாக்கம்)

  13. Started by naaddan,

    சர்வதேசமே தமிழினம் செய்த தவறு என்ன? உங்கள் தண்டனைக் கோவைகளையெல்லாம் தட்டிப்பார்த்து தமிழினத்தை தனிமைப்படுத்துவதற்கு தடயம் தேடிக்கொண்டிருப்பதற்கு. தமிழினம் அழியுதென்று தக்க இடம் கொடுத்து தமிழ் மண்ணின் கொடுமைகளை தாராளமாய் அறிந்துகொண்டும் தயங்குவதேனோ தடைகளை உடைப்பதற்கு. வெழிநாட்டார் எவரையும் வெறுப்பாகப் பார்க்கவில்லை உலக மக்களுக்கு ஊறேதும் செய்ததில்லை அயல் நாட்டவரை அச்சுறுத்தி நடக்கவில்லை அல் கைதாபோல் அடுக்குமாடி தகர்க்கல்லை விடுதலை என்று சொல்லி வெளி நாட்டார் விமானத்தை கடத்தவில்லை. வீணே எதற்கு இந்த விழியறியா விமர்சனங்கள். உண்மை நிலை அறிந்தும் ஊமையாய் இருப்பதேனோ மனித நேயத்தின் மாண்பர்கள் நீங்கள் மயங்…

    • 0 replies
    • 510 views
  14. மாவீரன் திலீபன் பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த 30 ஆவது ஆண்டு நினைவு அனுட்டிக்கப்படுகிறது. மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே. (குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது). திலீபனின் உண்ணா விரதம் தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் …

    • 0 replies
    • 751 views
  15. அமைதித் தளபதி- அதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் தொங்கும் நகரில் சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம் முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில் சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமான முடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள் நேற்றும் நமது தலைநகரிற்கு வந்தவர்களுக்கு கைலாகு கொடுத்து விரிந்த மலர்கொத்துக்களைபோல் புன்னகையை நீட்டியவனின் உதடுகளை மூடிக் கிடந்தது ஈரமண் முள்முருக்கில் அமர்ந்திருந்த வெண்புறா எழுந்து பறந்தது கொடும் சிங்கத்தின் முகத்துடன…

  16. அப்பாவுக்கு ஒரு கவிதை. எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என… கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொட…

  17. மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி. வழி காட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி. விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி. இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி' கல்லறை முன்நின்று மனிதர்கள் கரையும் மாவீரர் தினம். சுயத்தின் அடியளித்த புனிதர்களைப் போற்றும் நினைவேந்தும் நாளிது. புதைக்கவில்லை விதைத்தோமென்கிற உட்பொருள் உணர்ந்து விளக்கேற்றும் நினைவெழுச்சி நாளிது. தமிழின வீரவரலாற்றின் சாட்சிப் பதிவுகள், கல்லறையாகிக் காட்சிதரும் துயிலுமில்லங்கள். தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த 22 ஆயிரத்திற்கு மேற்பட…

  18. "இசை" என்ற தமிழ் சொல் அற்புதமானது. இசயின் பொருள், இலக்கணம், நோக்கம், பயன் எல்லாமே அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இசைக்கு அடிப்படையான ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை. அவற்றின் ஒத்திசைவில் இசை பிறக்கிறது. இசைக்கு வேறுபட்டவை தேவை. எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தால் இசைவும் இல்லை. அதனால் பிறக்கும் இன்பமும் இல்லை. அதனால் தான் மனிதன் முதற்கொண்டு எல்லா படைப்புக்களும் வேறுபாடுகளோடு, விதம் விதமாக, வகை வகையாக படைக்கப்பட்டிருக்கின்றன. மனிதன் தான் சக படைப்புகளோடு ஒத்திசைகிற போது வாழ்க்கை இசையாகிவிடுகிறது. துன்பம் என்பது ஆபசுரம். ஒத்திசைவில் எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று பொருள். இசை ஸ்வரங்களுக்கு இடையே மட்டுமல்ல, முரண்பட்ட அனைத்துக்கும் இடைய…

    • 0 replies
    • 1.1k views
  19. தினமும் யாரோ ஒரு தோழனின் ஞாபகம் தோழியின் ஞாபகம் வந்தே போகும் அதுவே எங்கள் விடுதலையின் விலாசம். ஆயினும் கார்த்திகை மாதம் கண்ணீரால் கரைந்து கனக்கும் சோகம் சொல்லிப்புரிவிக்க இயலாத பாரம். எல்லா மாதம் போலல்லாத கார்த்திகையே எங்கள் காவியங்கள் கண்திறந்து கதை சொல்லும் காலம். எத்தனையோ ஞாபகங்கள் அத்தனையும் ஒருசேர உயிர் வேகும் மாதமிது. உயிர் போகும் வரையுமெங்கள் ஊர்காத்து உயிர் காத்த வீரர்களை உயிர் கரைய நினைவேந்தும் மாதம். சாந்தி நேசக்கரம் 11. 11. 17

    • 0 replies
    • 885 views
  20. எங்கள் அன்னை மண்ணை மீட்க ஆயுதம் ஏந்தி மரணித்த நீங்கள், கல்லறை தெய்வங்களாய் எம் தேசமெங்கும் காவல் காத்தீர்கள். மரணித்த உங்களைக்கூட மன்னிக்க தெரியாத மானங்கெட்ட சிங்கள காடையர்கள் எங்கள் காவல் தெய்வங்களின் கல்லறைகளை அழித்து உங்களையும் வென்றுவிட்டதாக எண்ணி மார்தட்டிக்கொள்கின்றார்கள். மானங்கெட்ட சிங்களவன், யார் இந்த சிங்களவன்? கல்லறைகளைக்கூட மன்னிக்க தெரியாத இவர்கள் புத்தர் வழி வந்த புண்ணியர்களா? யார் அந்த புத்தன்? இவனும் ஒரு அரக்கர்கூட்ட தலைவனா? அல்லது நல்வழி காட்டிய நல்லவனா? விடை தெரியாமல் பாவப்பட்ட தமிழர் நாம் இன்று இவர்கள் பிடியில். இவர்களுக்கு உங்கள் கல்லறைகளை மட்டும் தான் அழிக்க முடியும். எங்கள் இதய அறைகளில் இருந்து உங்கள் நினைவுகளை ஒரு துரும்ப…

  21. Started by Raja Gopalan,

    ஆதவனின் கட்டில் இமைகளின் கொட்டகை இரவின் விழி கால வழிப்போக்கன் ஞால சித்தன் நேர ஈடாளன் இருள் அவன் இருள் அரசன் இருள் அற்றவன் என் உயிர் கள்வன் என் துயர் துலக்கி என் தோழன் நின் முகத்தை கண்டவர் இலர் நான் காண்கிறேன் உன் பாதம் என் பள்ளியறை கண் அயர்ந்திட நய வஞ்சகர் பிறழ் சூழ்ச்சியர் எதிரில் கண்டிலேன் துப்பாக்கி ஓய்ந்திடும் தோட்டாக்க.ள் உறங்கிடும் புதை அறையில் உன்னில் இணைவேன் அன்புடன் அமைதியுடன் வாங்கிக் கொள் விடியும் முன் உன் இமை உறங்கும் முன் என்னை!

  22. "கில்கமெஷ் பாடல் / Love Songs In Sumerian Literature" "ஆடை நெகிழ உடல் மிளிர சாடை காட்டி நளினமாய் அமர்ந்தாள் காலை அகட்டி காமம் தெளித்து தலை அசைத்து சிலையாய் இருந்தாள்!" "பெண்மை வனப்பு சுண்டி இழுக்க ஆண்மை ஆசை அவளில் போக்க கருத்த என்கிடு மிரண்டு வந்தான் பருத்த உடலை காட்டி வந்தான்!" "அருகில் வந்து முகர்ந்து ரசித்தான் உருண்டை கண்களால் கூர்ந்து பார்த்தான் எடுத்த எடுப்பில் அவளை தழுவினான் அடுத்து தன் உடையை நழுவினான்!" "ஈடுஇல்லா அவன் ஆண்மை கண்டாள் நடுங்கும் அவன் தொடையை பற்றினாள் மலை சாரலில் மந்தை மேய மாலை மயக்க…

  23. ஏற்றி வைப்பாய் விளக்கு நாடி வந்தோம் சக்தி உன்னை நல்ல வழி காட்டு நாடு இன்றி அலையும் தமிழர் வாழ்வில் ஒளியேற்று! வாடி நிற்கும் பயிருக்கும் கருணை மேகம் நீதான் வந்து நின்றோம் உன்னடிக்கு எங்கள் துணை தாய் தான்! குங்குமத் தாயே எங்கள் குறை களைய வேண்டும் கும்பிட்டோம் உன் பதமே நிறை அருள வேண்டும் எங்கும் நிறை சக்தியம்மா நீதான் வழிகாட்டி வாழ்க்கைச் சாகரத்தில் கரை சேர்க்கும் படகோட்டி மங்களத்தின் மறுபெயரே மகாலஷ்மி நீதானே சங்கடங்கள் தகர்க்கின்ற சங்கரி நீதானே பொங்குதனம் கொண்டவளே போற்றுகின்றோம் உன்னை பகை எரித்து நாட்டிடுவாய் எம் வாழ்வில் நன்மை! கொடுமை கண்டு கொதித்தெழும் கொற்றவையே தாயே! கொடுக்கும் கரம் கொண்டவளே உமையம்மை நீயே எதிர…

  24. கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கண்ணீரும் செந்நீரும் கலந்திடும் கார்த்திகை இருபத்தியேழு சொல்லில் அடங்காச் சோகங்கள் சூழக் கண்சிமிடித் தமிழரை கைநீட்டி அழைக்கும் கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கார்த்திகை மைந்தர்கள் காவிய நாயகர் போர்க்களம் கண்டு புனிதர்கள் ஆகியே தூய்தமிழ் அன்னையின் தாய்மடித் தழுவித் தமிழர்தம் மனங்களில் தண்ணொளி வீசினர் கருத்தினில் தலைவன் கொள்கையை ஏற்றவர் கந்தக குப்பியைக் கழுத்தினில் சுமந்தவர் தரைப்படை கடற்படை தரணியில் கண்டவர் வையம் வியந்திட வான்படை அமைத்தவர் வரிப்புலி வடிவாகி வீரத்தில் திளைத்தவர் உணவு உறக்கம் உறைவிடம் மறந்தவர் காடுகள் களனிகள் கூடிடும் காப்பனர் வெடிகள் சுமந்தே வெந்தணல் ஆகினர் அன்னையும…

    • 0 replies
    • 203 views
  25. காற்றுக்காக அவர்கள் விசிறிக்கொண்டிருக்கும் மின் மட்டைகளில் கொசுக்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கின்றன? -சேயோன் யாழ்வேந்தன் (புழல் சிறையில் தற்கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கு)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.